Friday, January 10, 2020

சகரியா

தரியு<Darius>  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்  எட்டாம்  மாதத்திலே  இத்தோவின்<Iddo>  மகனான  பெரகியாவின்<Berechiah>  குமாரனாகிய  சகரியாவுக்கு<Zechariah>  உண்டான  கர்த்தருடைய  வார்த்தை:  {Zech  1:1}

 

கர்த்தர்  உங்கள்  பிதாக்களின்மேல்  கடுங்கோபமாயிருந்தார்.  {Zech  1:2}

 

ஆகையால்  நீ  அவர்களை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  என்னிடத்தில்  திரும்புங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  அப்பொழுது  நான்  உங்களிடத்துக்குத்  திரும்புவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  1:3}

 

உங்கள்  பிதாக்களைப்போலிராதேயுங்கள்;  முந்தின  தீர்க்கதரிசிகள்  அவர்களை  நோக்கி:  உங்கள்  பொல்லாத  வழிகளையும்  உங்கள்  பொல்லாத  கிரியைகளையும்  விட்டுத்  திரும்புங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  கூப்பிட்டார்கள்;  ஆனாலும்  எனக்குச்  செவிகொடாமலும்  என்னைக்  கவனியாமலும்  போனார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  1:4}

 

உங்கள்  பிதாக்கள்  எங்கே?  தீர்க்கதரிசிகள்  என்றென்றைக்கும்  உயிரோடிருப்பார்களோ?  {Zech  1:5}

 

இராமற்போனாலும்,  தீர்க்கதரிசிகளாகிய  என்  ஊழியக்காரருக்கு  நான்  கட்டளையிட்ட  என்  வார்த்தைகளும்  என்  தீர்மானங்களும்  உங்கள்  பிதாக்களிடத்தில்  பலிக்கவில்லையோ?  எங்கள்  வழிகளின்படியேயும்,  எங்கள்  கிரியைகளின்படியேயும்  சேனைகளின்  கர்த்தர்  எங்களுக்குச்  செய்ய  நிர்ணயித்தபடியே  எங்களுக்குச்  செய்தாரென்று  அவர்கள்  திரும்பவந்து  சொன்னதில்லையோ  என்று  சொல்  என்றார்.  {Zech  1:6}

 

தரியு<Darius>  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்,  சேபாத்<Sebat>  மாதமாகிய  பதினோராம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  இத்தோவின்<Iddo>  மகனான  பெரகியாவின்<Berechiah>  குமாரன்  சகரியா<Zechariah>  என்னும்  தீர்க்கதரிசிக்கு  உண்டாயிற்று;  அவன்  சொன்னது:  {Zech  1:7}

 

இதோ,  இன்று  ராத்திரி  சிவப்புக்  குதிரையின்மேல்  ஏறியிருந்த  ஒரு  புருஷனைக்  கண்டேன்;  அவர்  பள்ளத்தாக்கில்  இருக்கிற  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்றார்;  அவருக்குப்  பின்னாலே  சிவப்பும்  மங்கின  நிறமும்  வெண்மையுமான  குதிரைகள்  இருந்தன.  {Zech  1:8}

 

அப்பொழுது  நான்:  என்  ஆண்டவரே,  இவர்கள்  யாரென்று  கேட்டேன்;  என்னோடே  பேசுகிற  தூதனானவர்:  இவர்கள்  யாரென்று  நான்  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  சொன்னார்.  {Zech  1:9}

 

அப்பொழுது  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்ற  அந்தப்  புருஷன்  பிரதியுத்தரமாக:  இவர்கள்  பூமியெங்கும்  சுற்றிப்பார்க்கக்  கர்த்தர்  அனுப்பினவர்கள்  என்றார்.  {Zech  1:10}

 

பின்பு  அவர்கள்  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்ற  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நாங்கள்  பூமியெங்கும்  சுற்றிப்பார்த்தோம்;  இதோ,  பூமி  முழுவதும்  அமைதலும்  அமரிக்கையுமாய்  இருக்கிறது  என்றார்கள்.  {Zech  1:11}

 

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  மறுமொழியாக:  சேனைகளின்  கர்த்தாவே,  இந்த  எழுபது  வருஷமாய்  நீர்  கோபங்கொண்டிருக்கிற  எருசலேமின்மேலும்<Jerusalem>  யூதா<Judah>  பட்டணங்களின்மேலும்  எந்தமட்டும்  இரங்காதிருப்பீர்  என்று  சொல்ல,  {Zech  1:12}

 

அப்பொழுது  கர்த்தர்,  என்னோடே  பேசின  தூதனுக்கு  நல்வார்த்தைகளையும்  ஆறுதலான  வார்த்தைகளையும்  பிரதியுத்தரமாகச்  சொன்னார்.  {Zech  1:13}

 

அப்பொழுது  என்னோடே  பேசின  தூதன்  என்னை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நான்  எருசலேமுக்காகவும்<Jerusalem>  சீயோனுக்காகவும்<Zion>  மகா  வைராக்கியம்  கொண்டிருக்கிறேன்.  {Zech  1:14}

 

நான்  கொஞ்சங்  கோபங்கொண்டிருந்தபோது  அவர்கள்  தங்கள்  கேட்டை  அதிகரிக்கத்  தேடினபடியினால்,  சுகமாய்  வாழுகிற  புறஜாதிகள்பேரில்  நான்  கடுங்கோபங்கொண்டேன்.  {Zech  1:15}

 

ஆகையால்  மனஉருக்கத்தோடே  எருசலேமினிடத்தில்<Jerusalem>  திரும்பினேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  என்  ஆலயம்  அதிலே  கட்டப்படும்;  எருசலேமின்மேல்<Jerusalem>  அளவுநூல்  பிடிக்கப்படும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  கூறு  என்றார்.  {Zech  1:16}

 

இன்னும்  என்  பட்டணங்கள்  நன்மையினால்  பரம்பியிருக்கும்;  இன்னும்  கர்த்தர்  சீயோனைத்<Zion>  தேற்றரவுபண்ணுவார்;  இன்னும்  எருசலேமைத்<Jerusalem>  தெரிந்துகொள்ளுவார்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  பின்னும்  கூறு  என்றார்.  {Zech  1:17}

 

நான்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  நாலு  கொம்புகளைக்  கண்டேன்.  {Zech  1:18}

 

அவைகள்  என்னவென்று  என்னோடே  பேசின  தூதனைக்  கேட்டேன்;  அதற்கு  அவர்:  இவைகள்  யூதாவையும்<Judah>  இஸ்ரவேலையும்<Israel>  எருசலேமையும்<Jerusalem>  சிதறடித்த  கொம்புகள்  என்றார்.  {Zech  1:19}

 

பின்பு  கர்த்தர்  எனக்கு  நாலு  தொழிலாளிகளைக்  காண்பித்தார்.  {Zech  1:20}

 

இவர்கள்  என்னசெய்ய  வருகிறார்களென்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  ஒருவனும்  தன்  தலையை  ஏறெடுக்கக்கூடாதபடி  அந்தக்  கொம்புகள்  யூதாவைச்<Judah>  சிதறடித்ததே,  அவைகளுக்குப்  பயமுறுத்துகிறதற்கும்,  யூதாவின்<Judah>  தேசத்தைப்  பாழாக்கத்  தங்கள்  கொம்பை  எடுத்த  ஜாதிகளுடைய  கொம்புகளை  விழத்தள்ளுகிறதற்கும்  இவர்கள்  வந்தார்கள்  என்றார்.  {Zech  1:21}

 

நான்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  தன்  கையிலே  அளவுநூல்  பிடித்திருந்த  ஒரு  புருஷனைக்  கண்டேன்.  {Zech  2:1}

 

நீர்  எவ்விடத்துக்குப்  போகிறீர்  என்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  எருசலேமின்<Jerusalem>  அகலம்  இவ்வளவு  என்றும்  அதின்  நீளம்  இவ்வளவு  என்றும்  அறியும்படி  அதை  அளக்கிறதற்குப்  போகிறேன்  என்றார்.  {Zech  2:2}

 

இதோ,  என்னோடே  பேசின  தூதன்  புறப்பட்டபோது,  வேறொரு  தூதன்  அவரைச்  சந்திக்கும்படிப்  புறப்பட்டுவந்தான்.  {Zech  2:3}

 

இவனை  அவர்  நோக்கி:  நீ  ஓடி  இந்த  வாலிபனிடத்தில்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  எருசலேம்<Jerusalem>  தன்  நடுவிலே  கூடும்  மனுஷரின்  திரளினாலும்  மிருகஜீவன்களின்  திரளினாலும்  மதிலில்லாத  பட்டணங்கள்போல்  வாசஸ்தலமாகும்.  {Zech  2:4}

 

நான்  அதற்குச்  சுற்றிலும்  அக்கினி  மதிலாயிருந்து,  அதின்  நடுவில்  மகிமையாக  இருப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  2:5}

 

ஓகோ,  நீங்கள்  எழும்பி  வடதேசத்திலிருந்து  ஓடிவாருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆகாயத்து  நான்கு  திசைகளிலும்  உங்களை  நான்  சிதறப்பண்ணினேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  2:6}

 

பாபிலோன்<Babylon>  குமாரத்தியினிடத்தில்  குடியிருக்கிற  சீயோனே<Zion>,  உன்னை  விடுவித்துக்கொள்.  {Zech  2:7}

 

பிற்பாடு  மகிமையுண்டாகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்களைக்  கொள்ளையிட்ட  ஜாதிகளிடத்துக்கு  என்னை  அனுப்பினார்;  உங்களைத்  தொடுகிறவன்  அவருடைய  கண்மணியைத்  தொடுகிறான்.  {Zech  2:8}

 

இதோ,  நான்  என்  கையை  அவர்களுக்கு  விரோதமாக  அசைப்பேன்;  அதினால்  அவர்கள்  தங்கள்  அடிமைகளுக்குக்  கொள்ளையாவார்கள்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  அனுப்பினாரென்று  அறிவீர்கள்.  {Zech  2:9}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  கெம்பீரித்துப்பாடு;  இதோ,  நான்  வந்து  உன்  நடுவில்  வாசம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  2:10}

 

அந்நாளிலே  அநேகம்  ஜாதிகள்  கர்த்தரைச்  சேர்ந்து  என்  ஜனமாவார்கள்;  நான்  உன்  நடுவில்  வாசமாயிருப்பேன்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உன்னிடத்தில்  அனுப்பினாரென்று  அறிவாய்.  {Zech  2:11}

 

கர்த்தர்  பரிசுத்த  தேசத்திலே  யூதாவாகிய<Judah>  தமது  பங்கைச்  சுதந்தரித்து,  திரும்பவும்  எருசலேமைத்<Jerusalem>  தெரிந்துகொள்வார்.  {Zech  2:12}

 

மாம்சமான  சகலமான  பேர்களே,  கர்த்தருக்கு  முன்பாக  மௌனமாயிருங்கள்;  அவர்  தமது  பரிசுத்த  வாசஸ்தலத்திலிருந்து  எழுந்தருளினார்  என்று  சொல்  என்றார்.  {Zech  2:13}

 

அவர்  பிரதான  ஆசாரியனாகிய  யோசுவாவை<Joshua>  எனக்குக்  காண்பித்தார்;  அவன்  கர்த்தருடைய  தூதனுக்கு  முன்பாக  நின்றான்;  சாத்தான்  அவனுக்கு  விரோதஞ்செய்ய  அவன்  வலதுபக்கத்திலே  நின்றான்.  {Zech  3:1}

 

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  கர்த்தர்  உன்னைக்  கடிந்துகொள்வாராக;  சாத்தானே,  எருசலேமைத்<Jerusalem>  தெரிந்துகொண்ட  கர்த்தர்  உன்னைக்  கடிந்துகொள்வாராக;  இவன்  அக்கினியினின்று  தப்புவிக்கப்பட்ட  கொள்ளி  அல்லவா  என்றார்.  {Zech  3:2}

 

யோசுவாவோவெனில்<Joshua>  அழுக்கு  வஸ்திரம்  தரித்தவனாய்த்  தூதனுக்கு  முன்பாக  நின்றிருந்தான்.  {Zech  3:3}

 

அவர்  தமக்கு  முன்பாக  நிற்கிறவர்களை  நோக்கி:  இவன்மேல்  இருக்கிற  அழுக்கு  வஸ்திரங்களைக்  களைந்துபோடுங்கள்  என்றார்;  பின்பு  அவனை  நோக்கி:  பார்,  நான்  உன்  அக்கிரமத்தை  உன்னிலிருந்து  நீங்கச்செய்து,  உனக்குச்  சிறந்த  வஸ்திரங்களைத்  தரிப்பித்தேன்  என்றார்.  {Zech  3:4}

 

அவன்  சிரசின்மேல்  சுத்தமான  பாகையை  வைப்பார்களாக  என்றார்;  அப்பொழுது  சுத்தமான  பாகையை  அவன்  சிரசின்மேல்  வைத்து,  அவனுக்கு  வஸ்திரங்களைத்  தரிப்பித்தார்கள்;  கர்த்தருடைய  தூதன்  அங்கே  நின்றார்.  {Zech  3:5}

 

கர்த்தருடைய  தூதன்  யோசுவாவுக்குச்<Joshua>  சாட்சியாக:  {Zech  3:6}

 

சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நீ  என்  வழிகளில்  நடந்து  என்  காவலைக்  காத்தால்,  நீ  என்  ஆலயத்தில்  நியாயம்  விசாரிப்பாய்;  என்  பிராகாரங்களையும்  காவல்காப்பாய்;  இங்கே  நிற்கிறவர்களுக்குள்ளே  உலாவுகிறதற்கு  இடம்  நான்  உனக்குக்  கட்டளையிடுவேன்.  {Zech  3:7}

 

இப்போதும்,  பிரதான  ஆசாரியனாகிய  யோசுவாவே<Joshua>,  நீ  கேள்;  உனக்கு  முன்பாக  உட்கார்ந்திருக்கிற  உன்  தோழரும்  கேட்கக்கடவர்கள்;  இவர்கள்  அடையாளமாயிருக்கிற  புருஷர்;  இதோ,  கிளை<BRANCH>  என்னப்பட்டவராகிய  என்  தாசனை  நான்  வரப்பண்ணுவேன்.  {Zech  3:8}

 

இதோ,  நான்  யோசுவாவுக்கு<Joshua>  முன்பாக  வைத்த  கல்;  இந்த  ஒரே  கல்லின்மேல்  ஏழு  கண்களும்  வைக்கப்பட்டிருக்கிறது;  இதோ,  நான்  அதின்  சித்திரவேலையை  நிறைவேற்றி,  இந்தத்  தேசத்தில்  அக்கிரமத்தை  ஒரேநாளிலே  நீக்கிப்போடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  3:9}

 

அந்நாளிலே  நீங்கள்  ஒருவரையொருவர்  திராட்சச்செடியின்கீழும்  அத்திமரத்தின்கீழும்  வரவழைப்பீர்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Zech  3:10}

 

என்னோடே  பேசின  தூதன்  திரும்பிவந்து  நித்திரைபண்ணுகிற  ஒருவனை  எழுப்புவதுபோல்  என்னை  எழுப்பி:  {Zech  4:1}

 

நீ  காண்கிறது  என்னவென்று  கேட்டார்;  அதற்கு  நான்:  இதோ,  முழுவதும்  பொன்னினால்  செய்யப்பட்ட  குத்துவிளக்கைக்  காண்கிறேன்;  அதின்  உச்சியில்  அதின்  கிண்ணமும்,  அதின்மேல்  அதின்  ஏழு  அகல்களும்,  அதின்  உச்சியில்  இருக்கிற  அகல்களுக்குப்போகிற  ஏழு  குழாய்களும்  இருக்கிறது.  {Zech  4:2}

 

அதின்  அருகில்  கிண்ணத்திற்கு  வலதுபுறமாக  ஒன்றும்,  அதற்கு  இடதுபுறமாக  ஒன்றும்,  ஆக  இரண்டு  ஒலிவமரங்கள்  இருக்கிறது  என்றேன்.  {Zech  4:3}

 

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  ஆண்டவனே,  இவைகள்  என்னவென்று  கேட்டேன்.  {Zech  4:4}

 

என்னோடே  பேசின  தூதன்  மறுமொழியாக:  இவைகள்  இன்னதென்று  உனக்குத்  தெரியாதா  என்றார்;  ஆண்டவனே,  எனக்குத்  தெரியாது  என்றேன்.  {Zech  4:5}

 

அப்பொழுது  அவர்:  செருபாபேலுக்குச்<Zerubbabel>  சொல்லப்படுகிற  கர்த்தருடைய  வார்த்தை  என்னவென்றால்,  பலத்தினாலும்  அல்ல,  பராக்கிரமத்தினாலும்  அல்ல,  என்னுடைய  ஆவியினாலேயே  ஆகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  4:6}

 

பெரிய  பர்வதமே,  நீ  எம்மாத்திரம்?  செருபாபேலுக்கு<Zerubbabel>  முன்பாக  நீ  சமபூமியாவாய்;  தலைக்கல்லை  அவன்  கொண்டுவருவான்;  அதற்குக்  கிருபையுண்டாவதாக,  கிருபையுண்டாவதாக  என்று  ஆர்ப்பரிப்பார்கள்  என்றார்.  {Zech  4:7}

 

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Zech  4:8}

 

செருபாபேலின்<Zerubbabel>  கைகள்  இந்த  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட்டது;  அவன்  கைகளே  இதை  முடித்துத்  தீர்க்கும்;  அதினால்  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உங்களிடத்திற்கு  அனுப்பினாரென்று  அறிவாய்.  {Zech  4:9}

 

அற்பமான  ஆரம்பத்தின்  நாளை  யார்  அசட்டைபண்ணலாம்?  பூமியெங்கும்  சுற்றிப்பார்க்கிறவைகளாகிய  கர்த்தருடைய  ஏழு  கண்களும்  செருபாபேலின்<Zerubbabel>  கையில்  இருக்கிற  தூக்குநூலைச்  சந்தோஷமாய்ப்  பார்க்கிறது  என்றார்.  {Zech  4:10}

 

பின்பு  நான்  அவரை  நோக்கி:  குத்துவிளக்குக்கு  வலதுபுறமாகவும்  அதற்கு  இடதுபுறமாகவும்  இருக்கிற  இந்த  இரண்டு  ஒலிவமரங்கள்  என்னவென்று  கேட்டேன்.  {Zech  4:11}

 

மறுபடியும்  நான்  அவரை  நோக்கி:  இரண்டு  பொற்குழாய்களின்  வழியாய்த்  தொங்கி,  பொன்னிறமான  எண்ணெயைத்  தங்களிலிருந்து  இறங்கப்பண்ணுகிறவைகளாகிய  ஒலிவமரங்களின்  இரண்டு  கிளைகள்  என்னவென்று  கேட்டேன்.  {Zech  4:12}

 

அதற்கு  அவர்:  இவைகள்  இன்னதென்று  உனக்குத்  தெரியாதா  என்றார்;  ஆண்டவனே,  எனக்குத்  தெரியாது  என்றேன்.  {Zech  4:13}

 

அப்பொழுது  அவர்:  இவைகள்  இரண்டும்  சர்வலோகத்துக்கும்  ஆண்டவராயிருக்கிறவரின்  சமுகத்தில்  நிற்கிற  அபிஷேகம்  பெற்றவர்கள்  என்றார்.  {Zech  4:14}

 

நான்  திரும்பவும்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கையில்,  இதோ,  பறக்கிற  ஒரு  புஸ்தகச்சுருளைக்  கண்டேன்.  {Zech  5:1}

 

தூதன்:  நீ  காண்கிறது  என்னவென்று  கேட்டார்;  பறக்கிற  ஒரு  புஸ்தகச்சுருளைக்  காண்கிறேன்,  அதின்  நீளம்  இருபது  முழமும்  அதின்  அகலம்  பத்து  முழமுமாயிருக்கிறது  என்றேன்.  {Zech  5:2}

 

அப்பொழுது  அவர்:  இது  பூமியின்மீதெங்கும்  புறப்பட்டுப்போகிற  சாபம்;  எந்தத்  திருடனும்  அதின்  ஒரு  புறத்திலிருக்கிறதின்படியே  அழிக்கப்பட்டுப்போவான்;  ஆணையிடுகிற  எவனும்,  அதின்  மறுபுறத்தில்  இருக்கிறதின்படியே  அழிக்கப்பட்டுப்போவான்.  {Zech  5:3}

 

அது  திருடன்  வீட்டிலும்,  என்  நாமத்தைக்கொண்டு  பொய்யாணையிடுகிறவன்  வீட்டிலும்  வந்து,  அவனவன்  வீட்டின்  நடுவிலே  தங்கி,  அதை  அதின்  மரங்களோடும்  அதின்  கல்லுகளோடுங்கூட  நிர்மூலமாக்கும்படி  அதைப்  புறப்பட்டுப்போகப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Zech  5:4}

 

பின்பு  என்னோடே  பேசின  தூதன்  வெளியே  வந்து  என்னை  நோக்கி:  நீ  உன்  கண்களை  ஏறெடுத்து,  புறப்பட்டுவருகிறதை  என்னவென்று  பார்  என்றார்.  {Zech  5:5}

 

அது  என்னவென்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  அது  புறப்பட்டுவருகிறதாகிய  ஒரு  மரக்கால்  என்றார்.  பின்னும்  அவர்:  பூமியெங்கும்  இதுதான்  அவர்களுடைய  கண்ணோக்கம்  என்றார்.  {Zech  5:6}

 

இதோ,  ஒரு  தாலந்து  நிறையான  ஈயமூடி  தூக்கிவரப்பட்டது;  மரக்காலின்  நடுவிலே  ஒரு  ஸ்திரீ  உட்கார்ந்திருந்தாள்.  {Zech  5:7}

 

அப்பொழுது  அவர்:  இவள்  அக்கிரமக்காரி  என்று  சொல்லி,  அவளை  மரக்காலுக்குள்ளே  தள்ளி  ஈயக்கட்டியை  அதின்  வாயிலே  போட்டார்.  {Zech  5:8}

 

அப்பொழுது  நான்  என்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  புறப்பட்டுவருகிற  இரண்டு  ஸ்திரீகளைக்  கண்டேன்;  அவர்களுக்கு  நாரையின்  செட்டைகளுக்கொத்த  செட்டைகள்  இருந்தது;  அவர்கள்  செட்டைகளில்  காற்றிருந்தது;  இவர்கள்  மரக்காலைப்  பூமிக்கும்  வானத்துக்கும்  நடுவாய்த்  தூக்கிக்கொண்டு  போனார்கள்.  {Zech  5:9}

 

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  இவர்கள்  மரக்காலை  எங்கே  கொண்டுபோகிறார்கள்  என்று  கேட்டேன்.  {Zech  5:10}

 

அதற்கு  அவர்:  சிநெயார்<Shinar>  தேசத்திலே  அதற்கு  ஒரு  வீட்டைக்  கட்டும்படிக்கு  அதைக்  கொண்டுபோகிறார்கள்;  அங்கே  அது  ஸ்தாபிக்கப்பட்டு,  தன்  நிலையிலே  வைக்கப்படும்  என்றார்.  {Zech  5:11}

 

நான்  திரும்பவும்  என்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  இரண்டு  பர்வதங்களின்  நடுவாகப்  புறப்பட்டுவருகிற  நாலு  இரதங்களைக்  கண்டேன்;  அந்தப்  பர்வதங்கள்  வெண்கலப்  பர்வதங்களாயிருந்தன.  {Zech  6:1}

 

முதலாம்  இரதத்தில்  சிவப்புக்  குதிரைகளும்,  இரண்டாம்  இரதத்தில்  கறுப்புக்  குதிரைகளும்,  {Zech  6:2}

 

மூன்றாம்  இரதத்தில்  வெள்ளைக்  குதிரைகளும்,  நான்காம்  இரதத்தில்  புள்ளிபுள்ளியான  சிவப்புக்  குதிரைகளும்  பூட்டியிருந்தன.  {Zech  6:3}

 

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  ஆண்டவனே,  இவைகள்  என்னவென்று  கேட்டேன்.  {Zech  6:4}

 

அந்தத்  தூதன்  எனக்குப்  பிரதியுத்தரமாக:  இவைகள்  சர்வலோகத்துக்கும்  ஆண்டவராயிருக்கிறவருடைய  சமுகத்தில்  நின்று  புறப்படுகிற  வானத்தினுடைய  நாலு  ஆவிகள்  என்றார்.  {Zech  6:5}

 

ஒன்றில்  பூட்டப்பட்டிருந்த  கறுப்புக்குதிரைகள்  வடதேசத்துக்குப்  புறப்பட்டுப்போயின;  வெண்மையான  குதிரைகள்  அவைகளின்  பின்னாலே  புறப்பட்டுப்போயின;  புள்ளிபுள்ளியான  குதிரைகள்  தென்தேசத்துக்குப்  புறப்பட்டுப்போயின.  {Zech  6:6}

 

சிவப்புக்  குதிரைகளோவென்றால்  புறப்பட்டுப்போய்,  பூமியிலே  சுற்றித்திரியும்படி  கேட்டுக்கொண்டன;  அதற்கு  அவர்:  போய்ப்  பூமியில்  சுற்றித்திரியுங்கள்  என்றார்;  அப்படியே  பூமியிலே  சுற்றித்திரிந்தன.  {Zech  6:7}

 

பின்பு  அவர்  என்னைக்  கூப்பிட்டு:  பார்,  வடதேசத்துக்குப்  புறப்பட்டுப்போனவைகள்,  வடதேசத்திலே  என்  கோபத்தைச்  சாந்திபண்ணிற்று  என்று  என்னோடே  சொன்னார்.  {Zech  6:8}

 

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Zech  6:9}

 

சிறையிருப்பின்  மனுஷராகிய  எல்தாயும்<Heldai>,  தொபியாவும்<Tobijah>,  யெதாயாவும்<Jedaiah>  பாபிலோனிலிருந்து<Babylon>  வந்திருக்கும்  அந்நாளிலே  நீ  போய்,  செப்பனியாவின்<Zephaniah>  குமாரனாகிய  யோசியாவின்<Josiah>  வீட்டுக்குள்  பிரவேசித்து,  {Zech  6:10}

 

அங்கே  அவர்கள்  கையிலே  வெள்ளியையும்  பொன்னையும்  வாங்கி,  கிரீடங்களைச்  செய்வித்து,  யோத்சதாக்கின்<Josedech>  குமாரனாகிய  யோசுவா<Joshua>  என்னும்  பிரதான  ஆசாரியனுடைய  சிரசிலே  வைத்து,  {Zech  6:11}

 

அவனோடே  சொல்லவேண்டியது:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  ஒரு  புருஷன்,  அவருடைய  நாமம்  கிளை<BRANCH>  என்னப்படும்;  அவர்  தம்முடைய  ஸ்தானத்திலிருந்து  முளைத்தெழும்பிக்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுவார்.  {Zech  6:12}

 

அவரே  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுவார்;  அவர்  மகிமைபொருந்தினவராய்,  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்து  ஆளுகை  செய்வார்;  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  ஆசாரியராயும்  இருப்பார்;  இவ்விரண்டின்  நடுவாகச்  சமாதானத்தின்  ஆலோசனை  விளங்கும்.  {Zech  6:13}

 

இந்தக்  கிரீடங்களோவென்றால்,  கர்த்தருடைய  ஆலயத்திலே,  ஏலேமுக்கும்<Helem>,  தொபியாவுக்கும்<Tobijah>,  யெதாயாவுக்கும்<Jedaiah>,  செப்பனியாவின்<Zephaniah>  குமாரனாகிய  ஏனுக்கும்<Hen>  நினைப்பூட்டுதலுக்கென்று  வைக்கப்படுவதாக.  {Zech  6:14}

 

தூரத்திலுள்ளவர்கள்  வந்து  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கூட  இருந்து  கட்டுவார்கள்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உங்களிடத்திற்கு  அனுப்பினாரென்று  அறிந்துகொள்வீர்கள்;  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  சத்தத்தைக்  கேட்டு  நடந்தீர்களானால்  இது  நிறைவேறும்  என்று  சொல்  என்றார்.  {Zech  6:15}

 

தரியு<Darius>  ராஜா  அரசாண்ட  நாலாம்  வருஷம்,  கிஸ்லே<Chisleu>  என்னும்  ஒன்பதாம்  மாதம்,  நாலாந்தேதியிலே,  சகரியாவுக்குக்<Zechariah>  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று.  {Zech  7:1}

 

கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்,  {Zech  7:2}

 

நாங்கள்  இத்தனை  வருஷம்வரையிலே  செய்ததுபோல  ஐந்தாம்  மாதத்திலே  அழுது  ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ  என்று  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலிருக்கும்  ஆசாரியரிடத்திலும்  தீர்க்கதரிசிகளிடத்திலும்  கேட்கவும்,  சரேத்சேரும்<Sherezer>  ரெகெம்மெலேகும்<Regemmelech>  அவனுடைய  மனுஷரும்  தேவனுடைய  ஆலயத்துக்கு  அனுப்பப்பட்டார்கள்.  {Zech  7:3}

 

அப்பொழுது  சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Zech  7:4}

 

நீ  தேசத்தின்  எல்லா  ஜனத்தோடும்  ஆசாரியர்களோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  நீங்கள்  இந்த  எழுபது  வருஷமாக  ஐந்தாம்  மாதத்திலும்  ஏழாம்  மாதத்திலும்  உபவாசம்பண்ணி  துக்கங்கொண்டாடினபோது  நீங்கள்  எனக்கென்றுதானா  உபவாசம்பண்ணினீர்கள்?  {Zech  7:5}

 

நீங்கள்  புசிக்கிறபோதும்  குடிக்கிறபோதும்  உங்களுக்கென்றல்லவா  புசிக்கிறீர்கள்?  உங்களுக்கென்றல்லவா  குடிக்கிறீர்கள்?  {Zech  7:6}

 

எருசலேமும்<Jerusalem>  அதைச்  சுற்றிலும்  இருந்த  பட்டணங்களும்  குடிநிறைந்து  சுகமாயிருந்த  காலத்திலும்  தெற்கு  நாடும்  சமபூமியும்  குடியேறியிருந்த  காலத்திலும்  முன்னிருந்த  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  கர்த்தர்  கூறின  வார்த்தைகள்  இவைகள்  அல்லவோ  என்று  சொல்  என்றார்.  {Zech  7:7}

 

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  சகரியாவுக்கு<Zechariah>  உண்டாகி,  அவர்:  {Zech  7:8}

 

சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நீங்கள்  உண்மையாய்  நியாயந்தீர்த்து,  அவனவன்  தன்தன்  சகோதரனுக்குத்  தயவும்  இரக்கமும்  செய்து,  {Zech  7:9}

 

விதவையையும்  திக்கற்ற  பிள்ளையையும்  பரதேசியையும்  சிறுமையானவனையும்  ஒடுக்காமலும்,  உங்களில்  ஒருவனும்  தன்  சகோதரனுக்கு  விரோதமாய்த்  தன்  இருதயத்தில்  தீங்கு  நினையாமலும்  இருங்கள்  என்றார்.  {Zech  7:10}

 

அவர்களோ  கவனிக்க  மனதில்லாமல்,  தங்கள்  தோளை  முரட்டுத்தனமாய்  விலக்கி,  கேளாதபடிக்குத்  தங்கள்  செவிகளை  அடைத்துக்கொண்டார்கள்.  {Zech  7:11}

 

வேதத்தையும்  சேனைகளின்  கர்த்தர்  தம்முடைய  ஆவியின்  மூலமாய்  முந்தின  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  சொல்லியனுப்பின  வார்த்தைகளையும்  கேளாதபடிக்குத்  தங்கள்  இருதயத்தை  வைரமாக்கினார்கள்;  ஆகையால்  மகா  கடுங்கோபம்  சேனைகளின்  கர்த்தரிடத்திலிருந்து  உண்டாயிற்று.  {Zech  7:12}

 

ஆதலால்  நான்  கூப்பிட்டபோது,  அவர்கள்  எப்படிக்  கேளாமற்போனார்களோ,  அப்படியே  அவர்கள்  கூப்பிட்டபோது  நானும்  கேளாமலிருந்தேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  7:13}

 

அவர்கள்  அறியாத  புறஜாதிகளுக்குள்ளே  அவர்களைப்  பறக்கடித்தேன்;  அதினால்  அவர்கள்  பின்வைத்துப்போன  தேசம்  போக்குவரத்தில்லாமல்  பாழாய்ப்போயிற்று;  அவர்கள்  இன்பமான  தேசத்தைப்  பாழாய்ப்போகப்  பண்ணினார்கள்  என்றார்.  {Zech  7:14}

 

சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  உண்டாகி,  அவர்:  {Zech  8:1}

 

நான்  சீயோனுக்காக<Zion>  கடும்  வைராக்கியங்கொண்டேன்;  அதற்காக  மகா  உக்கிரமான  வைராக்கியங்கொண்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:2}

 

நான்  சீயோனிடத்தில்<Zion>  திரும்பி,  எருசலேமின்<Jerusalem>  நடுவிலே  வாசம்பண்ணுவேன்;  எருசலேம்<Jerusalem>  சத்திய  நகரம்  என்றும்,  சேனைகளுடைய  கர்த்தரின்  பர்வதம்  பரிசுத்த  பர்வதம்  என்றும்  அழைக்கப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:3}

 

திரும்பவும்  எருசலேமின்<Jerusalem>  வீதிகளில்  முதிர்வயதினாலே  தங்கள்  கைகளில்  கோலைப்பிடித்து  நடக்கிற  கிழவரும்  கிழவிகளும்  குடியிருப்பார்கள்.  {Zech  8:4}

 

நகரத்தின்  தெருக்களிலே  விளையாடுகிற  ஆண்பிள்ளைகளும்  பெண்பிள்ளைகளும்  அதின்  வீதிகளில்  நிறைந்திருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:5}

 

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அது  இந்த  ஜனத்தில்  மீதியானவர்களின்  பார்வைக்கு  இந்நாட்களில்  ஆச்சரியமாயிருந்தாலும்,  என்  பார்வைக்கும்  ஆச்சரியமாயிருக்குமோ  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:6}

 

இதோ,  கிழக்குதேசத்திலும்  மேற்கு  தேசத்திலுமிருந்து  என்  ஜனங்களை  நான்  இரட்சித்து,  {Zech  8:7}

 

அவர்களை  அழைத்துக்கொண்டுவருவேன்;  அவர்கள்  எருசலேமின்<Jerusalem>  நடுவிலே  குடியிருப்பார்கள்;  அவர்கள்  எனக்கு  உண்மையும்  நீதியுமான  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்களுக்குத்  தேவனாயிருப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:8}

 

சேனைகளுடைய  கர்த்தரின்  வீடாகிய  ஆலயம்  கட்டப்படும்படிக்கு  அதின்  அஸ்திபாரங்கள்  போடப்பட்ட  நாள்முதற்  கொண்டிருக்கிற  தீர்க்கதரிசிகளின்  வாயினால்  இந்த  வார்த்தைகளை  இந்நாட்களில்  கேட்டுவருகிறவர்களே,  உங்கள்  கைகள்  திடப்படக்கடவது  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:9}

 

இந்நாட்களுக்கு  முன்னே  மனுஷனுடைய  வேலையால்  பலனுமில்லை,  மிருகஜீவனுடைய  வேலையால்  பலனுமில்லை;  போகிறவனுக்கும்  வருகிறவனுக்கும்  நெருக்கிடையினிமித்தம்  சமாதானமுமில்லை;  எல்லா  மனுஷரையும்  ஒருவரையொருவர்  விரோதிக்கச்செய்தேன்.  {Zech  8:10}

 

இப்போதோ  இந்த  ஜனத்தில்  மீதியானவர்களுக்கு  நான்  முந்தினநாட்களில்  இருந்ததுபோல  இருக்கமாட்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:11}

 

விதைப்புச்  சமாதானமுள்ளதாயிருக்கும்;  திராட்சச்செடி  தன்  கனியைத்  தரும்;  பூமி  தன்  பலனைத்  தரும்;  வானம்  தன்  பனியைத்  தரும்;  இந்த  ஜனத்தில்  மீதியானவர்கள்  இதையெல்லாம்  சுதந்தரிக்கக்  கட்டளையிடுவேன்.  {Zech  8:12}

 

சம்பவிப்பதென்னவென்றால்:  யூதா<Judah>  வம்சத்தாரே,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தாரே,  நீங்கள்  புறஜாதிகளுக்குள்ளே  சாபமாயிருந்ததுபோலவே,  ஆசீர்வாதமாயிருக்கும்படி  நான்  உங்களை  இரட்சிப்பேன்;  பயப்படாதேயுங்கள்,  உங்கள்  கைகள்  திடப்படக்கடவது.  {Zech  8:13}

 

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உங்கள்  பிதாக்கள்  எனக்குக்  கோபமூட்டினபோது  நான்  உங்களைத்  தண்டிக்க  நினைத்து,  மனம்  மாறாமல்  இருந்ததுபோல,  {Zech  8:14}

 

இந்நாட்களில்  எருசலேமுக்கும்<Jerusalem>  யூதாவுக்கும்<Judah>  நன்மைசெய்யும்படித்  திரும்ப  நினைத்தேன்;  பயப்படாதேயுங்கள்.  {Zech  8:15}

 

நீங்கள்  செய்யவேண்டிய  காரியங்கள்  என்னவென்றால்:  அவனவன்  பிறனோடே  உண்மையைப்  பேசுங்கள்;  உங்கள்  வாசல்களில்  சத்தியத்துக்கும்  சமாதானத்துக்கும்  ஏற்க  நியாயந்தீருங்கள்.  {Zech  8:16}

 

ஒருவனும்  பிறனுக்கு  விரோதமாய்த்  தன்  இருதயத்தில்  தீங்கு  நினையாமலும்,  பொய்யாணையின்மேல்  பிரியப்படாமலும்  இருங்கள்;  இவைகளெல்லாம்  நான்  வெறுக்கிற  காரியங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:17}

 

சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  {Zech  8:18}

 

நாலாம்  மாதத்தின்  உபவாசமும்,  ஐந்தாம்  மாதத்தின்  உபவாசமும்,  ஏழாம்  மாதத்தின்  உபவாசமும்,  பத்தாம்  மாதத்தின்  உபவாசமும்,  யூதா<Judah>  வம்சத்தாருக்கு  மகிழ்ச்சியாகவும்  சந்தோஷமாகவும்  நல்ல  பண்டிகைகளாகவும்  மாறிப்போகும்;  ஆகையால்  சத்தியத்தையும்  சமாதானத்தையும்  சிநேகியுங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:19}

 

இன்னும்  ஜனங்களும்  அநேகம்  பட்டணங்களின்  குடிகளும்  வருவார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  8:20}

 

ஒரு  பட்டணத்தின்  குடிகள்  மறுபட்டணத்தின்  குடிகளிடத்தில்  போய்,  நாம்  கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்  சேனைகளின்  கர்த்தரைத்  தேடவும்  தீவிரித்துப்போவோம்  வாருங்கள்;  நாங்களும்  போவோம்  என்று  சொல்லுவார்கள்.  {Zech  8:21}

 

அநேக  ஜனங்களும்  பலத்த  ஜாதிகளும்  எருசலேமிலே<Jerusalem>  சேனைகளின்  கர்த்தரைத்  தேடவும்,  கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்  வருவார்கள்.  {Zech  8:22}

 

அந்நாட்களில்  பலவித  பாஷைக்காரராகிய  புறஜாதியாரில்  பத்து  மனுஷர்  ஒரு  யூதனுடைய<Jew>  வஸ்திரத்தொங்கலைப்  பிடித்துக்கொண்டு:  தேவன்  உங்களோடே  இருக்கிறார்  என்று  கேள்விப்பட்டோம்;  ஆகையால்  உங்களோடேகூடப்  போவோம்  என்று  சொல்லி,  அவனைப்  பற்றிக்கொள்வார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  {Zech  8:23}

 

ஆதிராக்<Hadrach>  தேசத்துக்கு  விரோதமானதும்,  தமஸ்குவின்மேல்<Damascus>  வந்து  தங்குவதுமான  கர்த்தருடைய  வார்த்தையாகிய  பாரம்;  மனுஷரின்  கண்களும்  இஸ்ரவேலுடைய<Israel>  சகல  கோத்திரங்களின்  கண்களும்  கர்த்தரை  நோக்கிக்கொண்டிருக்கும்.  {Zech  9:1}

 

ஆமாத்தும்<Hamath>,  மிகவும்  ஞானமுள்ள  தீருவும்<Tyrus>  சீதோனும்<Zidon>  அதின்  எல்லைக்குள்ளாயிருக்கும்.  {Zech  9:2}

 

தீரு<Tyrus>  தனக்கு  அரணைக்கட்டி,  தூளைப்போல்  வெள்ளியையும்,  வீதிகளின்  சேற்றைப்போல்  பசும்பொன்னையும்  சேர்த்துவைத்தது.  {Zech  9:3}

 

இதோ,  ஆண்டவர்  அதைத்  தள்ளிவிட்டு,  சமுத்திரத்தில்  அதின்  பலத்தை  முறித்துப்போடுவார்;  அது  அக்கினிக்கு  இரையாகும்.  {Zech  9:4}

 

அஸ்கலோன்<Ashkelon>  அதைக்  கண்டு  பயப்படும்,  காத்சாவும்<Gaza>  அதைக்கண்டு  மிகவும்  துக்கிக்கும்,  எக்ரோனும்<Ekron>  தன்  நம்பிக்கை  அற்றுப்போனபடியால்  மிகவும்  பிரலாபிக்கும்;  காத்சாவில்<Gaza>  ராஜா  அழிந்துபோவான்;  அஸ்கலோன்<Ashkelon>  குடியற்றிருக்கும்.  {Zech  9:5}

 

அஸ்தோத்தில்<Ashdod>  வேசிப்பிள்ளைகள்  வாசம்பண்ணுவார்கள்;  நான்  பெலிஸ்தரின்<Philistines>  கர்வத்தை  அழிப்பேன்.  {Zech  9:6}

 

அவனுடைய  இரத்தத்தை  அவன்  வாயிலிருந்தும்,  அவனுடைய  அருவருப்புகளை  அவன்  பல்லுகளின்  நடுவிலிருந்தும்  நீக்கிப்போடுவேன்;  அவனோ  நம்முடைய  தேவனுக்கென்று  மீதியாக  வைக்கப்பட்டு,  யூதாவிலே<Judah>  பிரபுவைப்போல  இருப்பான்;  எக்ரோன்<Ekron>  எபூசியனைப்போல<Jebusite>  இருப்பான்.  {Zech  9:7}

 

சேனையானது  புறப்படும்போதும்,  திரும்பி  வரும்போதும்,  என்  ஆலயம்  காக்கப்படும்படி  அதைச்  சுற்றிலும்  பாளயம்போடுவேன்;  இனி  ஒடுக்குகிறவன்  அவர்களிடத்தில்  கடந்துவருவதில்லை;  அதை  என்  கண்களினாலே  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  {Zech  9:8}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  மிகவும்  களிகூரு;  எருசலேம்<Jerusalem>  குமாரத்தியே,  கெம்பீரி;  இதோ,  உன்  ராஜா  உன்னிடத்தில்  வருகிறார்;  அவர்  நீதியுள்ளவரும்  இரட்சிக்கிறவரும்  தாழ்மையுள்ளவரும்,  கழுதையின்மேலும்  கழுதைக்குட்டியாகிய  மறியின்மேலும்  ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.  {Zech  9:9}

 

எப்பிராயீமினின்று<Ephraim>  இரதங்களையும்  எருசலேமினின்று<Jerusalem>  குதிரைகளையும்  அற்றுப்போகப்பண்ணுவேன்,  யுத்தவில்லும்  இல்லாமற்போகும்;  அவர்  ஜாதிகளுக்குச்  சமாதானம்  கூறுவார்;  அவருடைய  ஆளுகை  ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறுசமுத்திரம்வரைக்கும்,  நதிதொடங்கிப்  பூமியின்  எல்லைகள்பரியந்தமும்  செல்லும்.  {Zech  9:10}

 

உனக்கு  நான்  செய்வதென்னவென்றால்,  தண்ணீரில்லாத  குழியிலே  அடைபட்டிருக்கிற  உன்னுடையவர்களை  நான்  உன்  உடன்படிக்கையின்  இரத்தத்தினாலே  விடுதலைபண்ணுவேன்.  {Zech  9:11}

 

நம்பிக்கையுடைய  சிறைகளே,  அரணுக்குத்  திரும்புங்கள்;  இரட்டிப்பான  நன்மையைத்  தருவேன்,  இன்றைக்கே  தருவேன்.  {Zech  9:12}

 

நான்  எனக்கென்று  யூதாவை<Judah>  நாணேற்றி,  எப்பிராயீமிலே<Ephraim>  வில்லை  நிரப்பி,  சீயோனே<Zion>,  உன்  புத்திரரைக்  கிரேக்குதேசப்<Greece>  புத்திரருக்கு  விரோதமாக  எழுப்பி,  உன்னைப்  பராக்கிரமசாலியின்  பட்டயத்துக்கு  ஒப்பாக்குவேன்.  {Zech  9:13}

 

அவர்கள்  பட்சத்தில்  கர்த்தர்  காணப்படுவார்;  அவருடைய  அம்பு  மின்னலைப்போலப்  புறப்படும்;  கர்த்தராகிய  ஆண்டவர்  எக்காளம்  ஊதி,  தென்திசைச்  சுழல்காற்றுகளோடே  நடந்துவருவார்.  {Zech  9:14}

 

சேனைகளின்  கர்த்தர்  அவர்களைக்  காப்பாற்றுவார்;  அவர்கள்  பட்சித்து,  கவண்கற்களால்  கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்;  அவர்கள்  குடித்துக்  களிப்பினால்  ஆரவாரிப்பார்கள்;  பானபாத்திரங்கள்போலவும்  பலிபீடத்தின்  கோடிகளைப்போலவும்  நிறைந்திருப்பார்கள்.  {Zech  9:15}

 

அந்நாளில்  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  தம்முடைய  ஜனமான  மந்தையாகிய  அவர்களை  இரட்சிப்பார்;  அவர்கள்  அவருடைய  தேசத்தில்  ஏற்றப்பட்ட  கொடிகளின்  கிரீடத்தில்  பதிந்திருப்பார்கள்.  {Zech  9:16}

 

அவருடைய  காருண்யம்  எத்தனை  பெரியது?  அவருடைய  சௌந்தரியம்  எத்தனை  பெரியது?  தானியம்  வாலிபரையும்,  புது  திராட்சரசம்  கன்னிகைகளையும்  வளர்க்கும்.  {Zech  9:17}

 

பின்மாரிகாலத்து  மழையைக்  கர்த்தரிடத்தில்  வேண்டிக்கொள்ளுங்கள்;  அப்பொழுது  கர்த்தர்  மின்னல்களை  உண்டாக்கி,  வயல்வெளியில்  அவரவருக்குப்  பயிருண்டாக  அவர்களுக்கு  மழையைக்  கட்டளையிடுவார்.  {Zech  10:1}

 

சுரூபங்கள்  அபத்தமானதைச்  சொல்லிற்று;  குறிசொல்லுகிறவர்கள்  பொய்யைத்  தரித்தார்கள்;  சொப்பனக்காரர்  வீணானதைச்  சொல்லி,  வியர்த்தமாகத்  தேற்றரவுபண்ணினார்கள்;  ஆகையால்  ஜனங்கள்  ஆடுகளைப்போலச்  சிதறி,  மேய்ப்பனில்லாததினால்  சிறுமைப்பட்டார்கள்.  {Zech  10:2}

 

மேய்ப்பருக்கு  விரோதமாக  என்  கோபம்  மூண்டது,  கடாக்களைத்  தண்டித்தேன்;  சேனைகளின்  கர்த்தர்  யூதா<Judah>  வம்சத்தாராகிய  தமது  மந்தையை  விசாரித்து,  அவர்களை  யுத்தத்திலே  தமது  சிறந்த  குதிரையாக  நிறுத்துவார்.  {Zech  10:3}

 

அவர்களிலிருந்து  கோடிக்கல்லும்,  அவர்களிலிருந்து  கூடாரமுளையும்,  அவர்களிலிருந்து  யுத்தவில்லும்  வரும்;  அவர்களிலிருந்து  ஆளுகிற  யாவரும்  ஏகமாய்ப்  புறப்படுவார்கள்.  {Zech  10:4}

 

அவர்கள்  யுத்தத்திலே  தங்கள்  சத்துருக்களை  வீதிகளின்  சேற்றில்  மிதிக்கிற  பராக்கிரமசாலிகளைப்போல  இருந்து  யுத்தம்பண்ணுவார்கள்;  கர்த்தர்  அவர்களோடேகூட  இருப்பார்;  குதிரைகளின்மேல்  ஏறிவருகிறவர்கள்  வெட்கப்படுவார்கள்.  {Zech  10:5}

 

நான்  யூதா<Judah>  வம்சத்தாரைப்  பலப்படுத்தி,  யோசேப்பு<Joseph>  வம்சத்தாரை  இரட்சித்து,  அவர்களைத்  திரும்ப  நிலைக்கப்பண்ணுவேன்;  நான்  அவர்களுக்கு  இரங்கினேன்;  அவர்கள்  என்னால்  ஒருக்காலும்  தள்ளிவிடப்படாதவர்களைப்போல்  இருப்பார்கள்;  நான்  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்,  நான்  அவர்களுக்குச்  செவிகொடுப்பேன்.  {Zech  10:6}

 

எப்பிராயீமர்<Ephraim>  பராக்கிரமரைப்போல  இருப்பார்கள்;  மதுபானத்தால்  களிப்பதுபோல,  அவர்களுடைய  இருதயம்  களிக்கும்;  அவர்களுடைய  பிள்ளைகளும்  அதைக்  கண்டு  மகிழுவார்கள்;  அவர்கள்  இருதயம்  கர்த்தருக்குள்  களிகூரும்.  {Zech  10:7}

 

நான்  அவர்களைப்  பார்த்துப்  பயில்போட்டு  அவர்களைக்  கூட்டிக்கொள்ளுவேன்;  அவர்களை  மீட்டுக்கொண்டேன்;  அவர்கள்  பெருகியிருந்ததுபோலவே  பெருகிப்போவார்கள்.  {Zech  10:8}

 

நான்  அவர்களை  ஜனங்களுக்குள்ளே  இறைத்தபின்பு,  அவர்கள்  தூரதேசங்களிலே  என்னை  நினைத்து  தங்கள்  பிள்ளைகளோடுங்கூடப்  பிழைத்துத்  திரும்புவார்கள்.  {Zech  10:9}

 

நான்  அவர்களை  எகிப்துதேசத்திலிருந்து<Egypt>  திரும்பிவரப்பண்ணி,  அவர்களை  அசீரியாவிலிருந்து<Assyria>  கூட்டிக்கொண்டு,  அவர்களைக்  கீலேயாத்<Gilead>  தேசத்துக்கும்  லீபனோனுக்கும்<Lebanon>  வரப்பண்ணுவேன்;  அவர்களுக்கு  இடம்  போதாமற்போகும்.  {Zech  10:10}

 

இடுக்கமென்கிற  சமுத்திரத்தைக்  கடக்கையில்  அவர்  சமுத்திரத்தின்  அலைகளை  அடிப்பார்;  அப்பொழுது  நதியின்  ஆழங்கள்  எல்லாம்  வறண்டுபோகும்;  அசீரியாவின்<Assyria>  கர்வம்  தாழ்த்தப்படும்,  எகிப்தின்<Egypt>  கொடுங்கோல்  விலகிப்போகும்.  {Zech  10:11}

 

நான்  அவர்களைக்  கர்த்தருக்குள்  பலப்படுத்துவேன்;  அவர்கள்  அவருடைய  நாமத்திலே  நடந்துகொள்ளுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  10:12}

 

லீபனோனே<Lebanon>,  அக்கினி  உன்  கேதுருமரங்களைப்  பட்சிக்கும்படி  உன்  வாசல்களைத்  திற.  {Zech  11:1}

 

தேவதாரு  விருட்சங்களே,  புலம்புங்கள்;  கேதுருமரங்கள்  விழுந்ததே;  பிரபலமானவைகள்  பாழாக்கப்பட்டன.  பாசானின்<Bashan>  கர்வாலிமரங்களே,  புலம்புங்கள்;  அரணுள்ள  சோலை  கீழே  தள்ளப்பட்டது.  {Zech  11:2}

 

மேய்ப்பர்களின்  மகிமை  அழிந்துபோனபடியால்,  அவர்கள்  அலறுகிற  சத்தம்  கேட்கப்படுகிறது;  யோர்தானின்<Jordan>  பெருமை  அழிந்துபோனபடியால்,  பாலசிங்கங்கள்  கர்ச்சிக்கிற  சத்தம்  கேட்கப்படுகிறது.  {Zech  11:3}

 

என்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  கொலையுண்கிற  ஆடுகளை  மேய்க்கக்கடவாய்.  {Zech  11:4}

 

அவைகளை  உடையவர்கள்,  அவைகளைக்  கொன்றுபோட்டுத்  தங்களுக்குக்  குற்றமில்லையென்று  எண்ணுகிறார்கள்.  அவைகளை  விற்கிறவர்கள்,  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்,  நாங்கள்  ஐசுவரியமுள்ளவர்களானோம்  என்கிறார்கள்;  அவைகளை  மேய்க்கிறவர்கள்,  அவைகள்மேல்  இரக்கம்வைக்கிறதில்லை.  {Zech  11:5}

 

நான்  இனித்  தேசத்துக்  குடிகளின்மேல்  இரக்கம்வையாமல்  மனுஷரில்  யாவரையும்  அவனவனுடைய  அயலான்  கையிலும்,  அவனவனுடைய  ராஜாவின்  கையிலும்  அகப்படப்பண்ணுவேன்;  அவர்கள்  தேசத்தை  அழித்தும்,  நான்  இவர்களை  அவர்கள்  கைக்குத்  தப்புவிப்பதில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  11:6}

 

கொலையுண்கிற  மந்தையாகிய  சிறுமைப்பட்ட  உங்களை  நான்  மேய்ப்பேன்;  நான்  இரண்டு  கோல்களை  எடுத்து,  ஒன்றிற்கு  அநுக்கிரகம்  என்றும்,  ஒன்றிற்கு  நிக்கிரகம்  என்றும்  பேரிட்டு  மந்தையை  மேய்த்து,  {Zech  11:7}

 

ஒரே  மாதத்திலே  மூன்று  மேய்ப்பரையும்  அதம்பண்ணினேன்;  என்  ஆத்துமா  அவர்களை  அரோசித்தது;  அவர்கள்  ஆத்துமா  என்னையும்  வெறுத்தது.  {Zech  11:8}

 

இனி  நான்  உங்களை  மேய்ப்பதில்லை;  சாகிறது  சாகட்டும்,  அதமாகிறது  அதமாகட்டும்;  மீதியானவைகளோவென்றால்,  ஒன்றின்  மாம்சத்தை  ஒன்று  தின்னக்கடவது  என்று  நான்  சொல்லி,  {Zech  11:9}

 

அநுக்கிரகம்  என்னப்பட்ட  என்  கோலை  எடுத்து,  நான்  அந்த  ஜனங்களெல்லாரோடும்  பண்ணியிருந்த  என்  உடன்படிக்கை  அற்றுப்போகும்படிக்கு  அதை  முறித்துப்போட்டேன்.  {Zech  11:10}

 

அந்நாளிலே  அது  அற்றுப்போயிற்று;  அப்படியே  மந்தையில்  எனக்குக்  காத்திருந்த  சிறுமைப்பட்டவைகள்  அது  கர்த்தருடைய  வார்த்தையென்று  அறிந்துகொண்டன.  {Zech  11:11}

 

உங்கள்  பார்வைக்கு  நன்றாய்க்  கண்டால்,  என்  கூலியைத்  தாருங்கள்;  இல்லாவிட்டால்  இருக்கட்டும்  என்று  அவர்களோடே  சொன்னேன்;  அப்பொழுது  எனக்குக்  கூலியாக  முப்பது  வெள்ளிக்காசை  நிறுத்தார்கள்.  {Zech  11:12}

 

கர்த்தர்  என்னை  நோக்கி:  அதைக்  குயவனிடத்தில்  எறிந்துவிடு  என்றார்;  இதுவே  நான்  அவர்களால்  மதிக்கப்பட்ட  மேன்மையான  மதிப்பு;  நான்  அந்த  முப்பது  வெள்ளிக்காசை  எடுத்து,  அவைகளைக்  குயவனுக்கென்று  கர்த்தருடைய  ஆலயத்திலே  எறிந்துவிட்டேன்.  {Zech  11:13}

 

நான்  யூதாவுக்கும்<Judah>  இஸ்ரவேலுக்கும்<Israel>  இருக்கிற  சகோதரக்கட்டை  அற்றுப்போகப்பண்ணும்படிக்கு,  நிக்கிரகம்  என்னப்பட்ட  என்  இரண்டாம்  கோலையும்  முறித்தேன்.  {Zech  11:14}

 

கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  மதியற்ற  ஒரு  மேய்ப்பனுடைய  ஆயுதங்களை  இன்னும்  எடுத்துக்கொள்.  {Zech  11:15}

 

இதோ,  நான்  தேசத்திலே  ஒரு  மேய்ப்பனை  எழும்பப்பண்ணுவேன்;  அவன்  அதமாகிறவைகளைப்  பராமரிக்காமலும்,  சிதறுண்டதைத்  தேடாமலும்,  நொறுங்குண்டதைக்  குணமாக்காமலும்,  இளைத்திருக்கிறதை  ஆதரிக்காமலும்,  கொழுத்ததின்  மாம்சத்தைத்  தின்று,  அவைகளுடைய  குளம்புகளை  உடைத்துப்போடுவான்.  {Zech  11:16}

 

மந்தையைக்  கைவிடுகிற  அபத்தமான  மேய்ப்பனுக்கு  ஐயோ!  பட்டயம்  அவன்  புயத்தின்மேலும்  அவன்  வலதுகண்ணின்மேலும்  வரும்;  அவன்  புயமுழுதும்  சூம்பிப்போம்;  அவன்  வலதுகண்  முற்றிலும்  இருள்  அடையும்  என்றார்.  {Zech  11:17}

 

இஸ்ரவேலைக்குறித்துக்<Israel>  கர்த்தர்  சொன்ன  வார்த்தையின்  பாரம்;  வானங்களை  விரித்து,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  மனுஷனுடைய  ஆவியை  அவனுக்குள்  உண்டாக்குகிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  {Zech  12:1}

 

இதோ,  சுற்றிலும்  இருக்கிற  எல்லா  ஜனங்களுக்கும்  நான்  எருசலேமைத்<Jerusalem>  தத்தளிப்பின்  பாத்திரமாக்குகிறேன்;  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாய்ப்  போடப்படும்  முற்றிகையிலே  யூதாவும்<Judah>  அப்படியேயாகும்.  {Zech  12:2}

 

அந்நாளிலே  நான்  எருசலேமைச்<Jerusalem>  சகல  ஜனங்களுக்கும்  பாரமான  கல்லாக்குவேன்;  அதைக்  கிளப்புகிற  யாவரும்  சிதைக்கப்படுவார்கள்;  பூமியிலுள்ள  ஜாதிகளெல்லாம்  அதற்கு  விரோதமாய்க்  கூடிக்கொள்வார்கள்.  {Zech  12:3}

 

அந்நாளிலே  நான்  குதிரைகளுக்கெல்லாம்  திகைப்பையும்,  அவைகளின்மேல்  ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம்  புத்திமயக்கத்தையும்  வரப்பண்ணி,  யூதாவம்சத்தின்மேல்<Judah>  என்  கண்களைத்  திறந்துவைத்து,  ஜனங்களுடைய  எல்லாக்  குதிரைகளுக்கும்  குருட்டாட்டத்தை  உண்டுபண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  12:4}

 

எருசலேமின்<Jerusalem>  குடிகள்,  சேனைகளின்  கர்த்தராகிய  தங்கள்  தேவனுடைய  துணையினால்  எங்களுக்குப்  பெலனானவர்கள்  என்று  அப்போது  யூதாவின்<Judah>  தலைவர்  தங்கள்  இருதயத்திலே  சொல்லுவார்கள்.  {Zech  12:5}

 

அந்நாளிலே  யூதாவின்<Judah>  தலைவரை  விறகுகளுக்குள்ளே  எரிகிற  அக்கினி  அடுப்புக்கும்,  வைக்கோல்  கட்டுகளுக்குள்ளே  எரிகிற  தீவட்டிக்கும்  ஒப்பாக்குவேன்;  அவர்கள்  வலதுபுறமும்  இடதுபுறமுமாகப்  புறப்பட்டு,  சுற்றிலும்  இருக்கிற  எல்லா  ஜனங்களையும்  பட்சிப்பார்கள்;  எருசலேம்<Jerusalem>  திரும்பவும்  தன்  ஸ்தானமாகிய  எருசலேமிலே<Jerusalem>  குடியேற்றப்பட்டிருக்கும்.  {Zech  12:6}

 

தாவீது<David>  வம்சத்தாரின்  மகிமையும்,  எருசலேமின்<Jerusalem>  குடிகளுடைய  மகிமையும்,  யூதாவின்மேல்<Judah>  தன்னை  உயர்த்தாதபடிக்கு,  கர்த்தர்  யூதாவின்<Judah>  கூடாரங்களை  முதல்முதல்  இரட்சிப்பார்.  {Zech  12:7}

 

அந்நாளிலே  கர்த்தர்  எருசலேமின்<Jerusalem>  குடிகளைக்  காப்பாற்றுவார்;  அவர்களில்  தள்ளாடினவன்  அந்நாளிலே  தாவீதைப்போல<David>  இருப்பான்;  தாவீது<David>  குடும்பத்தார்  அவர்களுக்கு  முன்பாகத்  தேவனைப்போலும்  கர்த்தருடைய  தூதனைப்போலும்  இருப்பார்கள்.  {Zech  12:8}

 

அந்நாளிலே  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாய்  வருகிற  எல்லா  ஜாதிகளையும்  அழிக்கப்  பார்ப்பேன்.  {Zech  12:9}

 

நான்  தாவீது<David>  குடும்பத்தாரின்மேலும்  எருசலேம்<Jerusalem>  குடிகளின்மேலும்  கிருபையின்  ஆவியையும்  விண்ணப்பங்களின்  ஆவியையும்  ஊற்றுவேன்;  அப்பொழுது  அவர்கள்  தாங்கள்  குத்தின  என்னை  நோக்கிப்பார்த்து,  ஒருவன்  தன்  ஒரே  பேறானவனுக்காகப்  புலம்புகிறதுபோல  எனக்காகப்  புலம்பி,  ஒருவன்  தன்  தலைச்சன்  பிள்ளைக்காகத்  துக்கிக்கிறதுபோல  எனக்காக  மனங்கசந்து  துக்கிப்பார்கள்.  {Zech  12:10}

 

அந்நாளிலே  மெகிதோன்<Megiddon>  பட்டணத்துப்  பள்ளத்தாக்கின்  ஊராகிய  ஆதாத்ரிம்மோனின்<Hadadrimmon>  புலம்பலைப்போல  எருசலேமின்<Jerusalem>  புலம்பல்  பெரிதாயிருக்கும்.  {Zech  12:11}

 

தேசம்  புலம்பிக்கொண்டிருக்கும்;  ஒவ்வொரு  வம்சமும்  தனித்தனியாகப்  புலம்பும்;  தாவீது<David>  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  நாத்தான்<Nathan>  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  {Zech  12:12}

 

லேவி<Levi>  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  சீமேயி<Shimei>  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  {Zech  12:13}

 

மற்றுமுண்டான  சகல  குடும்பங்களிலும்  ஒவ்வொரு  குடும்பத்தின்  மனுஷர்  தனித்தனியேயும்  அவர்களுடைய  ஸ்திரீகள்  தனித்தனியேயும்  புலம்புவார்கள்.  {Zech  12:14}

 

அந்நாளிலே  பாவத்தையும்  அழுக்கையும்  நீக்க,  தாவீதின்<David>  குடும்பத்தாருக்கும்  எருசலேமின்<Jerusalem>  குடிகளுக்கும்  திறக்கப்பட்ட  ஒரு  ஊற்று  உண்டாயிருக்கும்.  {Zech  13:1}

 

அந்நாளிலே  நான்  விக்கிரகங்களின்பேரும்  தேசத்தில்  இராதபடிக்கு  அழிப்பேன்;  அவைகள்  இனி  நினைக்கப்படுவதில்லை;  தரிசனம்  சொல்லுகிறவர்களையும்,  அசுத்த  ஆவியையும்  தேசத்திலிருந்து  போய்விடவும்  பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  {Zech  13:2}

 

இனி  ஒருவன்  தரிசனம்  சொன்னால்,  அவனைப்பெற்ற  அவன்  தகப்பனும்  அவன்  தாயும்  அவனை  நோக்கி:  நீ  கர்த்தருடைய  நாமத்தைக்கொண்டு  பொய்பேசுகிறபடியால்  நீ  உயிரோடிருக்கப்படாது  என்று  சொல்லி,  அவனைப்  பெற்ற  அவன்  தகப்பனும்  அவன்  தாயும்  அவன்  தரிசனம்  சொல்லும்போது  அவனைக்  குத்திப்போடுவார்கள்.  {Zech  13:3}

 

அந்நாளிலே  தரிசனம்  சொல்லுகிற  அவனவன்  தான்  சொன்ன  தரிசனத்தினால்  வெட்கப்பட்டு,  பொய்சொல்லும்படிக்கு  இனி  மயிர்ப்போர்வையைப்  போர்த்துக்கொள்ளாமல்,  {Zech  13:4}

 

நான்  தரிசனம்  சொல்லுகிறவன்  அல்ல,  நான்  நிலத்தைப்  பயிரிடுகிறவன்;  என்  சிறுவயதுமுதல்  ஒருவன்  என்னை  வேலைகொண்டான்  என்பான்.  {Zech  13:5}

 

அப்பொழுது  ஒருவன்  அவனை  நோக்கி:  உன்  கைகளில்  இருக்கிற  இந்த  வடுக்கள்  ஏதென்று  கேட்டால்,  என்  சிநேகிதரின்  வீட்டிலே  காயப்பட்டதினால்  உண்டானவைகள்  என்பான்.  {Zech  13:6}

 

பட்டயமே,  என்  மேய்ப்பன்மேலும்  என்  தோழனாகிய  புருஷன்மேலும்  எழும்பு  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  மேய்ப்பனை  வெட்டு,  அப்பொழுது  ஆடுகள்  சிதறிப்போகும்;  ஆனாலும்  என்  கரத்தைச்  சிறுவர்மேல்  திரும்ப  வைப்பேன்.  {Zech  13:7}

 

தேசமெங்கும்  சம்பவிக்கும்  காரியம்  என்னவென்றால்,  அதில்  இருக்கிற  இரண்டு  பங்கு  மனுஷர்  சங்கரிக்கப்பட்டு  மாண்டுபோவார்கள்;  மூன்றாம்  பங்கோ  அதில்  மீதியாயிருக்கும்.  {Zech  13:8}

 

அந்த  மூன்றாம்  பங்கை  நான்  அக்கினிக்குட்படப்பண்ணி,  வெள்ளியை  உருக்குகிறதுபோல  அவர்களை  உருக்கி,  பொன்னைப்  புடமிடுகிறதுபோல  அவர்களைப்  புடமிடுவேன்;  அவர்கள்  என்  நாமத்தைத்  தொழுதுகொள்வார்கள்;  நான்  அவர்கள்  விண்ணப்பத்தைக்  கேட்பேன்;  இது  என்  ஜனமென்று  நான்  சொல்லுவேன்,  கர்த்தர்  என்  தேவன்  என்று  அவர்கள்  சொல்லுவார்கள்.  {Zech  13:9}

 

இதோ,  கர்த்தருடைய  நாள்  வருகிறது,  உன்னில்  கொள்ளையானது  உன்  நடுவிலே  பங்கிடப்படும்.  {Zech  14:1}

 

எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாக  யுத்தம்பண்ணச்  சகல  ஜாதிகளையும்  கூட்டுவேன்;  நகரம்  பிடிக்கப்படும்;  வீடுகள்  கொள்ளையாகும்;  ஸ்திரீகள்  அவமானப்படுவார்கள்;  நகரத்தாரில்  பாதி  மனுஷர்  சிறைப்பட்டுப்போவார்கள்;  மீதியான  ஜனமோ  நகரத்தை  விட்டு  அறுப்புண்டுபோவதில்லை.  {Zech  14:2}

 

கர்த்தர்  புறப்பட்டு,  யுத்தநாளிலே  போராடுவதுபோல்  அந்த  ஜாதிகளோடே  போராடுவார்.  {Zech  14:3}

 

அந்நாளிலே  அவருடைய  பாதங்கள்  கிழக்கே  எருசலேமுக்கு<Jerusalem>  எதிரே  இருக்கிற  ஒலிவமலையின்மேல்<mount  of  Olives>  நிற்கும்;  அப்பொழுது  மகா  பெரிய  பள்ளத்தாக்கு  உண்டாகும்படி  ஒலிவமலை<mount  of  Olives>  தன்  நடுமையத்திலே  கிழக்கு  மேற்காய்  எதிராகப்  பிளந்துபோம்;  அதினாலே,  ஒரு  பாதி  வடபக்கத்திலும்  ஒரு  பாதி  தென்பக்கத்திலும்  சாயும்.  {Zech  14:4}

 

அப்பொழுது  என்  மலைகளின்  பள்ளத்தாக்கு  வழியாய்  ஓடிப்போவீர்கள்;  மலைகளின்  பள்ளத்தாக்கு  ஆத்சால்மட்டும்<Azal>  போகும்;  நீங்கள்  யூதாவின்<Judah>  ராஜாவாகிய  உசியாவின்<Uzziah>  நாட்களில்  பூமியதிர்ச்சிக்குத்  தப்பி  ஓடிப்போனதுபோல்  ஓடிப்போவீர்கள்;  என்  தேவனாகிய  கர்த்தர்  வருவார்;  தேவரீரோடே  எல்லாப்  பரிசுத்தவான்களும்  வருவார்கள்.  {Zech  14:5}

 

அந்நாளில்  வெளிச்சம்  இல்லாமல்,  ஒருவேளை  பிரகாசமும்  ஒருவேளை  மப்புமாயிருக்கும்.  {Zech  14:6}

 

ஒருநாள்  உண்டு,  அது  கர்த்தருக்குத்  தெரிந்தது;  அது  பகலுமல்ல  இரவுமல்ல;  ஆனாலும்  சாயங்காலத்திலே  வெளிச்சமுண்டாகும்.  {Zech  14:7}

 

அந்நாளிலே  ஜீவத்தண்ணீர்கள்  எருசலேமிலிருந்து<Jerusalem>  புறப்பட்டு,  பாதி  கிழக்குச்  சமுத்திரத்துக்கும்,  பாதி  மேற்குச்  சமுத்திரத்துக்கும்  போய்,  மாரிகாலத்துக்கும்  கோடைகாலத்துக்கும்  இருக்கும்.  {Zech  14:8}

 

அப்பொழுது  கர்த்தர்  பூமியின்மீதெங்கும்  ராஜாவாயிருப்பார்;  அந்நாளில்  ஒரே  கர்த்தர்  இருப்பார்,  அவருடைய  நாமமும்  ஒன்றாயிருக்கும்.  {Zech  14:9}

 

தேசமெல்லாம்  கேபாதொடங்கி<Geba>  எருசலேமுக்குத்<Jerusalem>  தெற்கே  இருக்கிற  ரிம்மோன்வரைக்கும்<Rimmon>  சமபூமியாகத்  திருத்தப்படும்;  எருசலேமோ<Jerusalem>  உயர்ந்ததாகி,  தன்  ஸ்தானத்திலே  பென்யமீன்<Benjamin>  வாசல்தொடங்கி  முதல்வாசலென்கிற  ஸ்தலமட்டும்  கோடிவாசல்வரைக்கும்,  அனானெயேல்<Hananeel>  கோபுரம்  துவக்கி  ராஜாவின்  திராட்ச  ஆலைகள்மட்டும்  குடியேற்றப்பட்டிருக்கும்.  {Zech  14:10}

 

அதிலே  ஜனங்கள்  வாசம்பண்ணுவார்கள்;  இனிச்  சங்கரிப்பில்லாமல்  எருசலேம்<Jerusalem>  சுகமாய்த்  தங்கியிருக்கும்.  {Zech  14:11}

 

எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாக  யுத்தம்பண்ணின  எல்லா  ஜனங்களையும்  கர்த்தர்  வாதிக்கும்  வாதையாவது:  அவர்கள்  காலூன்றி  நிற்கையிலும்  அவர்களுடைய  சதை  அழிந்துபோகும்;  அவர்கள்  கண்கள்  தங்கள்  குழிகளிலே  கெட்டுப்போகும்;  அவர்கள்  நாவு  அவர்கள்  வாயிலே  அழுகிப்போகும்.  {Zech  14:12}

 

அந்நாளிலே  கர்த்தரால்  பெரிய  கலக்கம்  அவர்களுக்குள்  உண்டாகும்;  அவனவன்  தன்  தன்  அயலானின்  கையைப்  பிடிப்பான்;  அவனவனுடைய  கை  அவனவன்  அயலானுடைய  கைக்கு  விரோதமாக  எழும்பும்.  {Zech  14:13}

 

யூதாவும்<Judah>  எருசலேமிலே<Jerusalem>  யுத்தம்பண்ணும்;  அப்பொழுது  சுற்றிலும்  இருக்கிற  சகல  ஜாதிகளுடைய  ஆஸ்தியாகிய  பொன்னும்  வெள்ளியும்  வஸ்திரங்களும்  மகா  திரளாகக்  கூட்டப்படும்.  {Zech  14:14}

 

அந்தப்  பாளையங்களில்  இருக்கும்  குதிரைகள்  கோவேறு  கழுதைகள்  ஒட்டகங்கள்  கழுதைகள்  முதலான  எல்லா  மிருகஜீவன்களுக்கும்  வரும்  வாதையும்,  அந்த  வாதையைப்  போலவே  இருக்கும்.  {Zech  14:15}

 

பின்பு,  எருசலேமுக்கு<Jerusalem>  விரோதமாக  வந்திருந்த  எல்லா  ஜாதிகளிலும்  மீதியான  யாவரும்  சேனைகளின்  கர்த்தராகிய  ராஜாவைத்  தொழுதுகொள்ளும்படிக்கும்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்கும்படிக்கும்,  வருஷாவருஷம்  வருவார்கள்.  {Zech  14:16}

 

அப்பொழுது  பூமியின்  வம்சங்களில்  சேனைகளின்  கர்த்தராகிய  ராஜாவைத்  தொழுதுகொள்ள  எருசலேமுக்கு<Jerusalem>  வராதவர்கள்  எவர்களோ  அவர்கள்மேல்  மழை  வருஷிப்பதில்லை.  {Zech  14:17}

 

மழை  வருஷிக்காத  எகிப்தின்<Egypt>  வம்சம்  வராமலும்  சேராமலும்  போனால்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்கவராத  ஜாதிகளைக்  கர்த்தர்  வாதிக்கும்  வாதையே  அவர்கள்மேலும்  வரும்.  {Zech  14:18}

 

இது  எகிப்தியருடைய<Egypt>  பாவத்துக்கும்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்க  வராத  சகல  ஜாதிகளுடைய  பாவத்துக்கும்  வரும்  ஆக்கினை.  {Zech  14:19}

 

அந்நாளிலே  குதிரைகளின்  மணிகளிலே  கர்த்தருக்குப்  பரிசுத்தம்<HOLINESS  UNTO  THE  LORD>  என்னும்  விலாசம்  எழுதியிருக்கும்;  கர்த்தருடைய  ஆலயத்திலுள்ள  பானைகள்  பலிபீடத்துக்கு  முன்பாக  இருக்கிற  பாத்திரங்களைப்  போலிருக்கும்.  {Zech  14:20}

 

அப்பொழுது  எருசலேமிலும்<Jerusalem>  யூதாவிலுமுள்ள<Judah>  எல்லாப்  பானைகளும்  சேனைகளின்  கர்த்தருக்குப்  பரிசுத்தமாயிருக்கும்;  பலியிடுகிற  யாவரும்  வந்து  அவைகளில்  எடுத்து,  அவைகளில்  சமைப்பார்கள்;  அந்நாள்முதல்  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலே  யாதொரு  கானானியனும்<Canaanite>  இருப்பதில்லை.  {Zech  14:21}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!