Thursday, January 23, 2020

2 சாமுவேல்

சவுல்<Saul>  மரித்தபின்பு,  தாவீது<David>  அமலேக்கியரை<Amalekites>  முறிய  அடித்து,  சிக்லாகுக்குத்<Ziklag>  திரும்பிவந்து,  இரண்டுநாள்  அங்கே  இருந்தபிற்பாடு,  {2Sam  1:1}

 

மூன்றாம்  நாளிலே  ஒரு  மனுஷன்  சவுலின்<Saul>  பாளயத்திலிருந்து  புறப்பட்டு,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  தன்  தலையின்மேல்  புழுதியைப்  போட்டுக்  கொண்டு,  தாவீதினிடத்தில்<David>  வந்து,  தரையிலே  விழுந்து  வணங்கினான்.  {2Sam  1:2}

 

தாவீது<David>  அவனைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  கேட்டதற்கு,  அவன்:  இஸ்ரவேலின்<Israel>  பாளயத்திலிருந்து  தப்பிவந்தேன்  என்றான்.  {2Sam  1:3}

 

தாவீது<David>  அவனைப்  பார்த்து:  நடந்த  செய்தி  என்ன?  சொல்  என்று  கேட்டதற்கு,  அவன்:  ஜனங்கள்  யுத்தத்தைவிட்டு  முறிந்தோடிப்போனார்கள்;  ஜனங்களில்  அநேகம்பேர்  விழுந்து  மடிந்துபோனார்கள்;  சவுலும்<Saul>  அவர்  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>  மடிந்தார்கள்  என்றான்.  {2Sam  1:4}

 

சவுலும்<Saul>  அவர்  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>  மடிந்துபோனது  உனக்கு  எப்படித்  தெரியும்  என்று  தாவீது<David>  தனக்கு  அதை  அறிவிக்கிற  வாலிபனிடத்தில்  கேட்டதற்கு,  {2Sam  1:5}

 

அந்த  வாலிபன்:  நான்  தற்செயலாய்க்  கில்போவா<Gilboa>  மலைக்குப்  போனேன்;  அப்பொழுது  இதோ,  சவுல்<Saul>  தம்முடைய  ஈட்டியின்மேல்  சாய்ந்துகொண்டிருந்தார்;  இரதங்களும்  குதிரைவீரரும்  அவரைத்  தொடர்ந்து  நெருங்கினார்கள்.  {2Sam  1:6}

 

அவர்  திரும்பிப்  பார்த்து:  என்னைக்  கண்டு  கூப்பிட்டார்;  அதற்கு  நான்:  இதோ,  இருக்கிறேன்  என்றேன்.  {2Sam  1:7}

 

அப்பொழுது  அவர்:  நீ  யார்  என்று  என்னைக்  கேட்டார்;  நான்  அமலேக்கியன்<Amalekite>  என்று  சொன்னேன்.  {2Sam  1:8}

 

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்னண்டையில்  கிட்டவந்து  நின்று,  என்னைக்  கொன்றுபோடு;  என்  பிராணன்  முழுதும்  இன்னும்  போகாததினால்  எனக்கு  வேதனையாயிருக்கிறது  என்றார்.  {2Sam  1:9}

 

அப்பொழுது  நான்,  அவர்  விழுந்தபின்பு  பிழைக்கமாட்டார்  என்று  நிச்சயித்து,  அவரண்டையில்  போய்  நின்று,  அவரைக்  கொன்றுபோட்டேன்;  பிற்பாடு  அவர்  தலையின்மேல்  இருந்த  முடியையும்  அவர்  புயத்தில்  இருந்த  அஸ்தகடகத்தையும்  எடுத்துக்கொண்டு,  அவைகளை  இங்கே  என்  ஆண்டவனிடத்திற்குக்  கொண்டுவந்தேன்  என்றான்.  {2Sam  1:10}

 

அப்பொழுது  தாவீதும்<David>  அவனோடிருந்த  சகல  மனுஷரும்  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  {2Sam  1:11}

 

சவுலும்<Saul>,  அவன்  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>,  கர்த்தருடைய  ஜனங்களும்,  இஸ்ரவேல்<Israel>  குடும்பத்தாரும்,  பட்டயத்தாலே  விழுந்தபடியினால்  புலம்பி  அழுது  சாயங்காலமட்டும்  உபவாசமாயிருந்தார்கள்.  {2Sam  1:12}

 

தாவீது<David>  அதைத்  தனக்கு  அறிவித்த  வாலிபனைப்  பார்த்து:  நீ  எவ்விடத்தான்  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்  அந்நிய  ஜாதியானுடைய  மகன்,  நான்  அமலேக்கியன்<Amalekite>  என்றான்.  {2Sam  1:13}

 

தாவீது<David>  அவனை  நோக்கி:  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரைக்  கொன்றுபோடும்படி  நீ  உன்  கையை  நீட்டப்  பயப்படாமற்போனது  என்ன  என்று  சொல்லி,  {2Sam  1:14}

 

வாலிபரில்  ஒருவனைக்  கூப்பிட்டு,  நீ  கிட்டப்போய்  அவன்மேல்  விழுந்து,  அவனை  வெட்டு  என்றான்;  அவன்  அவனை  வெட்டினான்;  அவன்  செத்தான்.  {2Sam  1:15}

 

தாவீது<David>  அவனைப்  பார்த்து:  உன்  இரத்தப்பழி  உன்  தலையின்மேல்  இருப்பதாக;  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரை  நான்  கொன்றுபோட்டேன்  என்று  உன்  வாயே  உனக்கு  விரோதமான  சாட்சி  சொல்லிற்று  என்றான்.  {2Sam  1:16}

 

தாவீது<David>  சவுலின்பேரிலும்<Saul>,  அவன்  குமாரனாகிய  யோனத்தானின்பேரிலும்<Jonathan>,  புலம்பல்  பாடினான்.  {2Sam  1:17}

 

(வில்வித்தையை  யூதா<Judah>  புத்திரருக்குக்  கற்றுக்கொடுக்கும்படி  கட்டளையிட்டான்;  அது  யாசேரின்<Jasher>  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.)  அவன்  பாடின  புலம்பலாவது:  {2Sam  1:18}

 

இஸ்ரவேலின்<Israel>  அலங்காரம்  உயர்ந்த  ஸ்தானங்களில்  அதமாயிற்று;  பராக்கிரமசாலிகள்  விழுந்துபோனார்கள்.  {2Sam  1:19}

 

பெலிஸ்தரின்<Philistines>  குமாரத்திகள்  சந்தோஷப்படாதபடிக்கும்,  விருத்தசேதனம்  இல்லாதவர்களின்  குமாரத்திகள்  களிகூராதபடிக்கும்,  அதைக்  காத்பட்டணத்தில்<Gath>  அறிவியாமலும்  அஸ்கலோனின்<Askelon>  வீதிகளில்  பிரஸ்தாபப்படுத்தாமலும்  இருங்கள்.  {2Sam  1:20}

 

கில்போவா<Gilboa>  மலைகளே,  உங்கள்மேல்  பனியும்  மழையும்  பெய்யாமலும்,  காணிக்கைக்கு  ஏற்ற  பலன்தரும்  வயல்கள்  இராமலும்  போவதாக;  அங்கே  பராக்கிரமசாலிகளுடைய  கேடகம்  அவமதிக்கப்பட்டது;  சவுல்<Saul>  தைலத்தால்  அபிஷேகம்பண்ணப்படாதவர்போல  அவர்  கேடகமும்  அவமதிக்கப்பட்டதே.  {2Sam  1:21}

 

கொலையுண்டவர்களின்  இரத்தத்தைக்  குடியாமலும்,  பராக்கிரமசாலிகளின்  நிணத்தை  உண்ணாமலும்,  யோனத்தானுடைய<Jonathan>  வில்  பின்வாங்கினதில்லை;  சவுலின்<Saul>  பட்டயம்  வெறுமையாய்த்  திரும்பினதில்லை.  {2Sam  1:22}

 

உயிரோடே  இருக்கையில்  சவுலும்<Saul>  யோனத்தானும்<Jonathan>  பிரியமும்  இன்பமுமாயிருந்தார்கள்;  மரணத்திலும்  பிரிந்துபோனதில்லை;  கழுகுகளைப்பார்க்கிலும்  வேகமும்,  சிங்கங்களைப்பார்க்கிலும்  பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.  {2Sam  1:23}

 

இஸ்ரவேலின்<Israel>  குமாரத்திகளே,  உங்களுக்கு  இரத்தாம்பரத்தைச்  சிறப்பாய்  உடுப்பித்து,  உங்கள்  உடையின்மேல்  பொன்  ஆபரணங்களைத்  தரிப்பித்த  சவுலுக்காக<Saul>  அழுது  புலம்புங்கள்.  {2Sam  1:24}

 

போர்முகத்தில்  பராக்கிரமசாலிகள்  விழுந்தார்களே,  யோனத்தானே<Jonathan>,  உயரமான  ஸ்தலங்களிலே  வெட்டுண்டு  போனாயே.  {2Sam  1:25}

 

என்  சகோதரனாகிய  யோனத்தானே<Jonathan>,  உனக்காக  நான்  வியாகுலப்படுகிறேன்;  நீ  எனக்கு  வெகு  இன்பமாயிருந்தாய்;  உன்  சிநேகம்  ஆச்சரியமாயிருந்தது;  ஸ்திரீகளின்  சிநேகத்தைப்பார்க்கிலும்  அதிகமாயிருந்தது.  {2Sam  1:26}

 

பராக்கிரமசாலிகள்  விழுந்துபோனார்களே;  யுத்த  ஆயுதங்கள்  எல்லாம்  அழிந்துபோயிற்றே,  என்று  பாடினான்.  {2Sam  1:27}

 

பின்பு  தாவீது<David>  கர்த்தரை  நோக்கி:  நான்  யூதாவின்<Judah>  பட்டணங்கள்  ஒன்றிலே  போய்  இருக்கலாமா  என்று  விசாரித்தான்.  அதற்குக்  கர்த்தர்:  போ  என்றார்;  எவ்விடத்திற்குப்  போகலாம்  என்று  தாவீது<David>  கேட்டதற்கு,  அவர்:  எப்ரோனுக்குப்<Hebron>  போ  என்றார்.  {2Sam  2:1}

 

அப்படியே  தாவீது<David>  தன்  இரண்டு  மனைவிகளாகிய  யெஸ்ரயேல்<Jezreelitess>  ஊராளான  அகினோவாமோடும்<Ahinoam>,  நாபாலின்<Nabal>  மனைவியாயிருந்த  கர்மேல்<Carmelite>  ஊராளான  அபிகாயிலோடும்கூட<Abigail>  அவ்விடத்திற்குப்  போனான்.  {2Sam  2:2}

 

அன்றியும்  தன்னோடிருந்த  மனுஷரையும்,  அவர்கள்  குடும்பங்களையும்  கூட்டிக்கொண்டுபோனான்;  அவர்கள்  எப்ரோனின்<Hebron>  சுற்றூர்களிலே  குடியேறினார்கள்.  {2Sam  2:3}

 

அப்பொழுது  யூதாவின்<Judah>  மனுஷர்  வந்து,  அங்கே  தாவீதை<David>  யூதா<Judah>  வம்சத்தாரின்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்.  கீலேயாத்தேசத்து<Gilead>  யாபேசின்<Jabesh>  மனுஷர்  சவுலை<Saul>  அடக்கம்பண்ணினவர்கள்  என்று  அவர்கள்  தாவீதுக்கு<David>  அறிவித்தபோது,  {2Sam  2:4}

 

தாவீது<David>  கீலேயாத்தேசத்து<Gilead>  யாபேசின்<Jabesh>  மனுஷரிடத்தில்  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  நீங்கள்  உங்கள்  ஆண்டவனாகிய  சவுலுக்கு<Saul>  இந்தத்  தயவைச்  செய்து,  அவரை  அடக்கம்பண்ணினபடியினாலே,  கர்த்தர்  உங்களை  ஆசீர்வதிப்பாராக.  {2Sam  2:5}

 

கர்த்தர்  உங்களைக்  கிருபையும்  உண்மையுமாய்  நடத்துவாராக;  நீங்கள்  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியினால்,  நானும்  இந்த  நன்மைக்குத்தக்கதாக  உங்களை  நடத்துவேன்.  {2Sam  2:6}

 

இப்போதும்  நீங்கள்  உங்கள்  கைகளைத்  திடப்படுத்திக்கொண்டு  நல்ல  சேவகராயிருங்கள்;  உங்கள்  ஆண்டவனாகிய  சவுல்<Saul>  மரித்தபின்பு,  யூதா<Judah>  வம்சத்தார்  என்னைத்  தங்கள்மேல்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்  என்று  அவர்களுக்குச்  சொல்லச்சொன்னான்.  {2Sam  2:7}

 

சவுலின்<Saul>  படைத்தலைவனான  நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேர்<Abner>  சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்தை<Ishbosheth>  மகனாயீமுக்கு<Mahanaim>  அழைத்துக்கொண்டுபோய்,  {2Sam  2:8}

 

அவனைக்  கீலேயாத்தின்மேலும்<Gilead>,  அஷூரியர்மேலும்<Ashurites>,  யெஸ்ரயேலின்மேலும்<Jezreel>,  எப்பிராயீமின்மேலும்<Ephraim>,  பென்யமீனின்மேலும்<Benjamin>,  இஸ்ரவேலனைத்தின்மேலும்<Israel>  ராஜாவாக்கினான்.  {2Sam  2:9}

 

சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்<Ishbosheth>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகிறபோது,  நாற்பது  வயதாயிருந்தான்;  அவன்  இரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்;  யூதா<Judah>  கோத்திரத்தார்மாத்திரம்  தாவீதைப்<David>  பின்பற்றினார்கள்.  {2Sam  2:10}

 

தாவீது<David>  எப்ரோனிலே<Hebron>  யூதா<Judah>  கோத்திரத்தின்மேல்  ராஜாவாயிருந்த  நாட்களின்  இலக்கம்  ஏழு  வருஷமும்  ஆறு  மாதமுமாம்.  {2Sam  2:11}

 

நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேர்<Abner>  சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்தின்<Ishbosheth>  சேவகரைக்  கூட்டிக்கொண்டு,  மகனாயீமிலிருந்து<Mahanaim>  கிபியோனுக்குப்<Gibeon>  புறப்பட்டுப்போனான்.  {2Sam  2:12}

 

அப்பொழுது  செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  யோவாபும்<Joab>  தாவீதின்<David>  சேவகரும்  புறப்பட்டுப்போய்,  கிபியோனின்<Gibeon>  குளத்தண்டையில்  ஒருவருக்கொருவர்  எதிர்ப்பட்டு,  குளத்திற்கு  அந்தப்பக்கத்தில்  அவர்களும்,  குளத்திற்கு  இந்தப்பக்கத்தில்  இவர்களும்  இறங்கினார்கள்.  {2Sam  2:13}

 

அப்னேர்<Abner>  யோவாபை<Joab>  நோக்கி:  வாலிபர்  எழுந்து,  நமக்கு  முன்பாகச்  சிலம்பம்  பண்ணட்டும்  என்றான்.  அதற்கு  யோவாப்<Joab>:  அவர்கள்  எழுந்து,  அப்படிச்  செய்யட்டும்  என்றான்.  {2Sam  2:14}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்தின்<Ishbosheth>  பக்கத்திற்குப்  பென்யமீன்<Benjamin>  மனுஷரில்  பன்னிரண்டுபேரும்,  தாவீதுடைய<David>  சேவகரிலே  பன்னிரண்டுபேரும்  எழுந்து  ஒரு  பக்கமாய்ப்  போய்,  {2Sam  2:15}

 

ஒருவர்  தலையை  ஒருவர்  பிடித்து,  ஒருவருடைய  விலாவிலே  ஒருவர்  பட்டயத்தினாலே  குத்தி,  ஒருமிக்க  விழுந்தார்கள்;  அதினாலே  கிபியோனிலிருக்கிற<Gibeon>  அந்த  ஸ்தலம்  எல்காத்  அசூரிம்<Helkathhazzurim>  என்னப்பட்டது.  {2Sam  2:16}

 

அன்றையதினம்  மிகவும்  கடினமான  யுத்தமாகி,  அப்னேரும்<Abner>  இஸ்ரவேல்<Israel>  மனுஷரும்  தாவீதின்<David>  சேவகரால்  முறிய  அடிக்கப்பட்டார்கள்.  {2Sam  2:17}

 

அங்கே  செருயாவின்<Zeruiah>  மூன்று  குமாரராகிய  யோவாபும்<Joab>  அபிசாயும்<Abishai>  ஆசகேலும்<Asahel>  இருந்தார்கள்;  ஆசகேல்<Asahel>  வெளியிலிருக்கிற  கலைமான்களில்  ஒன்றைப்போல  வேகமாய்  ஓடுகிறவனாயிருந்தான்.  {2Sam  2:18}

 

அவன்  அப்னேரைப்<Abner>  பின்தொடர்ந்து,  வலதுபுறத்திலாகிலும்  இடதுபுறத்திலாகிலும்,  அவனைவிட்டு  விலகாமல்  துரத்திக்கொண்டுபோனான்.  {2Sam  2:19}

 

அப்னேர்<Abner>  திரும்பிப்  பார்த்து:  நீ  ஆசகேல்<Asahel>  அல்லவா  என்றான்.  அவன்:  நான்தான்  என்றான்.  {2Sam  2:20}

 

அப்பொழுது  அப்னேர்<Abner>  அவனை  நோக்கி:  நீ  வலதுபக்கத்திற்காகிலும்  இடதுபக்கத்திற்காகிலும்  விலகி,  வாலிபரில்  ஒருவனைப்  பிடித்து,  அவனை  உரிந்துகொள்  என்றான்;  ஆசகேலோ<Asahel>  விடமாட்டேன்  என்று  தொடர்ந்துபோனான்.  {2Sam  2:21}

 

பின்னும்  அப்னேர்<Abner>  ஆசகேலை<Asahel>  நோக்கி:  நீ  என்னை  விட்டுப்போ;  நான்  உன்னைத்  தரையோடே  ஏன்  வெட்டவேண்டும்?  பிற்பாடு  உன்  சகோதரனாகிய  யோவாபின்<Joab>  முகத்திலே  எப்படி  விழிப்பேன்  என்றான்.  {2Sam  2:22}

 

ஆனாலும்  அவன்  விலகிப்போகமாட்டேன்  என்றபடியினால்,  அப்னேர்<Abner>  அவனை  ஈட்டியின்  பின்புற  அலகினால்  அவன்  வயிற்றிலே  குத்தினான்;  ஈட்டி  முதுகிலே  புறப்பட்டது;  அவன்  அங்கேதானே  விழுந்து  செத்தான்;  ஆசகேல்<Asahel>  விழுந்துகிடக்கிற  இடத்திலே  வந்தவர்களெல்லாரும்  தரித்து  நின்றார்கள்.  {2Sam  2:23}

 

யோவாபும்<Joab>  அபிசாயும்<Abishai>  சூரியன்  அஸ்தமிக்குமட்டும்  அப்னேரைப்<Abner>  பின்தொடர்ந்தார்கள்;  கிபியோன்<Gibeon>  வனாந்தரவழிக்கு  அருகான  கீயாவுக்கு<Giah>  எதிரே  இருக்கிற  அம்மா<Ammah>  மேடுமட்டும்  வந்தார்கள்.  {2Sam  2:24}

 

அப்பொழுது  அப்னேரைப்<Abner>  பின்சென்ற  பென்யமீன்<Benjamin>  புத்திரர்  ஒரே  படையாகக்  கூடி,  ஒரு  மலையின்  உச்சியிலே  நின்றார்கள்.  {2Sam  2:25}

 

அப்பொழுது  அப்னேர்<Abner>  யோவாபைப்<Joab>  பார்த்துக்  கூப்பிட்டு,  பட்டயம்  எப்போதும்  சங்காரம்  பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ,  முடிவிலே  கசப்புண்டாகும்  என்று  அறியீரோ,  தங்கள்  சகோதரரை  விட்டுப்  பின்வாங்கும்படிக்கு  எந்தமட்டும்  ஜனங்களுக்குச்  சொல்லாதிருப்பீர்  என்றான்.  {2Sam  2:26}

 

அதற்கு  யோவாப்<Joab>:  இன்று  காலமே  நீர்  பேசாதிருந்தீரானால்  ஜனங்கள்  அவரவர்  தங்கள்  சகோதரரைப்  பின்தொடராமல்,  அப்போதே  திரும்பிவிடுவார்கள்  என்று  தேவனுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {2Sam  2:27}

 

யோவாப்<Joab>  எக்காளம்  ஊதினான்;  அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  இஸ்ரவேலைத்<Israel>  தொடராமலும்,  யுத்தம்பண்ணாமலும்  நின்றுவிட்டார்கள்.  {2Sam  2:28}

 

அன்று  ராமுழுதும்  அப்னேரும்<Abner>  அவன்  மனுஷரும்  அந்தரவெளி  வழியாய்ப்  போய்,  யோர்தானைக்<Jordan>  கடந்து,  பித்ரோனை<Bithron>  உருவ  நடந்து  தாண்டி,  மகனாயீமுக்குப்<Mahanaim>  போனார்கள்.  {2Sam  2:29}

 

யோவாப்<Joab>  அப்னேரைத்<Abner>  தொடராமல்  ஜனங்களையெல்லாம்  கூடிவரச்செய்தான்;  தாவீதின்<David>  சேவகரில்  பத்தொன்பதுபேரும்  ஆசகேலும்<Asahel>  குறைந்திருந்தார்கள்.  {2Sam  2:30}

 

தாவீதின்<David>  சேவகரோ  பென்யமீனரிலும்<Benjamin>,  அப்னேரின்<Abner>  மனுஷரிலும்,  முந்நூற்றறுபதுபேரை  மடங்கடித்தார்கள்.  {2Sam  2:31}

 

அவர்கள்  ஆசகேலை<Asahel>  எடுத்து,  பெத்லெகேமிலுள்ள<Bethlehem>  அவனுடைய  தகப்பன்  கல்லறையிலே  அவனை  அடக்கம்பண்ணினார்கள்;  யோவாபும்<Joab>  அவன்  மனுஷரும்  இராமுழுவதும்  நடந்து,  பொழுது  விடியும்போது  எப்ரோனிலே<Hebron>  சேர்ந்தார்கள்.  {2Sam  2:32}

 

சவுலின்<Saul>  குடும்பத்துக்கும்  தாவீதின்<David>  குடும்பத்துக்கும்  நெடுநாள்  யுத்தம்  நடந்தது;  தாவீது<David>  வரவரப்  பலத்தான்;  சவுலின்<Saul>  குடும்பத்தாரோ  வரவரப்  பலவீனப்பட்டுப்  போனார்கள்.  {2Sam  3:1}

 

எப்ரோனிலே<Hebron>  தாவீதுக்குப்<David>  பிறந்த  குமாரர்:  யெஸ்ரயேல்<Jezreelitess>  ஊராளான  அகினோவாமிடத்திலே<Ahinoam>  பிறந்த  அம்னோன்<Amnon>  அவனுக்கு  முதல்  பிறந்தவன்.  {2Sam  3:2}

 

நாபாலின்<Nabal>  மனைவியாயிருந்த  கர்மேல்<Carmelite>  ஊராளான  அபிகாயிலிடத்திலே<Abigail>  பிறந்த  கீலேயாப்<Chileab>  அவனுடைய  இரண்டாம்  குமாரன்;  மூன்றாம்  குமாரன்  கேசூரின்<Geshur>  ராஜாவான  தல்மாய்<Talmai>  குமாரத்தியாகிய  மாக்காள்<Maacah>  பெற்ற  அப்சலோம்<Absalom>  என்பவன்.  {2Sam  3:3}

 

நாலாம்  குமாரன்  ஆகீத்<Haggith>  பெற்ற  அதொனியா<Adonijah>  என்பவன்;  ஐந்தாம்  குமாரன்  அபித்தாள்<Abital>  பெற்ற  செப்பத்தியா<Shephatiah>  என்பவன்.  {2Sam  3:4}

 

ஆறாம்  குமாரன்  தாவீதின்<David>  மனைவியாகிய  எக்லாளிடத்தில்<Eglah>  பிறந்த  இத்ரேயாம்<Ithream>  என்பவன்;  இவர்கள்  எப்ரோனிலே<Hebron>  தாவீதுக்குப்<David>  பிறந்தவர்கள்.  {2Sam  3:5}

 

சவுலின்<Saul>  குடும்பத்துக்கும்  தாவீதின்<David>  குடும்பத்துக்கும்  யுத்தம்  நடந்துவருகிறபோது,  அப்னேர்<Abner>  சவுலின்<Saul>  குடும்பத்திலே  பலத்தவனானான்.  {2Sam  3:6}

 

சவுலுக்கு<Saul>  ஆயாவின்<Aiah>  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்<Rizpah>  என்னும்  பேருள்ள  ஒரு  மறுமனையாட்டி  இருந்தாள்;  இஸ்போசேத்<Ishbosheth>  அப்னேரை<Abner>  நோக்கி:  நீ  என்  தகப்பனாருடைய  மறுமனையாட்டியினிடத்தில்  பிரவேசித்தது  என்ன  என்றான்.  {2Sam  3:7}

 

அப்னேர்<Abner>  இஸ்போசேத்தின்<Ishbosheth>  வார்த்தைகளுக்காக  மிகவும்  கோபங்கொண்டு:  உம்மைத்  தாவீதின்<David>  கையில்  ஒப்புக்கொடாமல்,  இந்நாள்மட்டும்  உம்முடைய  தகப்பனாகிய  சவுலின்<Saul>  குடும்பத்துக்கும்,  அவருடைய  சகோதரருக்கும்,  சிநேகிதருக்கும்,  தயவுசெய்கிறவனாகிய  என்னை  நீர்  இன்று  ஒரு  ஸ்திரீயினிமித்தம்  குற்றம்பிடிக்கிறதற்கு,  நான்  யூதாவுக்கு<Judah>  உட்கையான  ஒரு  நாய்த்தலையா?  {2Sam  3:8}

 

நான்  ராஜ்யபாரத்தைச்  சவுலின்<Saul>  குடும்பத்தை  விட்டுத்  தாண்டப்பண்ணி,  தாவீதின்<David>  சிங்காசனத்தைத்  தாண்<Dan>  துவக்கிப்  பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba>  இஸ்ரவேலின்மேலும்<Israel>  யூதாவின்மேலும்<Judah>  நிலைநிறுத்தும்படிக்கு,  {2Sam  3:9}

 

கர்த்தர்  தாவீதுக்கு<David>  ஆணையிட்டபடியே,  நான்  அவனுக்குச்  செய்யாமற்போனால்,  தேவன்  அப்னேருக்கு<Abner>  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்றான்.  {2Sam  3:10}

 

அப்பொழுது  அவன்  அப்னேருக்குப்<Abner>  பயப்பட்டதினால்,  அப்புறம்  ஒரு  மறுமொழியும்  அவனுக்குச்  சொல்லாதிருந்தான்.  {2Sam  3:11}

 

அப்னேர்<Abner>  தன்  நாமத்தினாலே  தாவீதினிடத்திற்கு<David>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  தேசம்  யாருடையது?  என்னோடு  உடன்படிக்கைபண்ணும்;  இதோ,  இஸ்ரவேலையெல்லாம்<Israel>  உம்மிடத்தில்  திருப்ப,  என்  கை  உம்மோடிருக்கும்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  3:12}

 

அதற்குத்  தாவீது<David>:  நல்லது,  உன்னோடே  நான்  உடன்படிக்கைபண்ணுவேன்;  ஆனாலும்  ஒரே  காரியம்  உன்னிடத்தில்  கேட்டுக்கொள்ளுகிறேன்;  அது  என்னவெனில்,  நீ  என்  முகத்தைப்  பார்க்க  வரும்போது,  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாளை<Michal>  நீ  அழைத்துவரவேண்டும்;  அதற்குமுன்  நீ  என்  முகத்தைப்  பார்ப்பதில்லை  என்று  சொல்லச்சொல்லி,  {2Sam  3:13}

 

அவன்  சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்தினிடத்திற்கும்<Ishbosheth>  ஸ்தானாபதிகளை  அனுப்பி:  நான்  பெலிஸ்தருடைய<Philistines>  நூறு  நுனித்தோல்களைப்  பரிசமாகக்  கொடுத்து,  விவாகம்பண்ணின  என்  மனைவியாகிய  மீகாளை<Michal>  அனுப்பிவிடும்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  3:14}

 

அப்பொழுது,  இஸ்போசேத்<Ishbosheth>  அவளை  லாயீசின்<Laish>  குமாரனாகிய  பல்த்தியேல்<Phaltiel>  என்னும்  புருஷனிடத்திலிருந்து  அழைத்துவர  ஆட்களை  அனுப்பினான்.  {2Sam  3:15}

 

அவள்  புருஷன்  பகூரீம்மட்டும்<Bahurim>  அவள்  பிறகாலே  அழுதுகொண்டுவந்தான்.  அப்னேர்  அவனை  நோக்கி:  நீ  திரும்பிப்போ  என்றான்;  அவன்  திரும்பிப்போய்விட்டான்.  {2Sam  3:16}

 

அப்னேர்<Abner>  இஸ்ரவேலின்<Israel>  மூப்பரோடே  பேசி:  தாவீதை<David>  உங்கள்மேல்  ராஜாவாக  வைக்கும்படிக்கு  நீங்கள்  அநேகநாளாய்த்  தேடினீர்களே.  {2Sam  3:17}

 

இப்போதும்  அப்படிச்  செய்யுங்கள்;  என்  தாசனாகிய  தாவீதின்<David>  கையினால்,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலைப்<Israel>  பெலிஸ்தரின்<Philistines>  கைக்கும்,  அவர்களுடைய  எல்லாச்  சத்துருக்களின்  கைக்கும்  நீங்கலாக்கி  ரட்சிப்பேன்  என்று  கர்த்தர்  தாவீதைக்குறித்துச்<David>  சொல்லியிருக்கிறாரே  என்றான்.  {2Sam  3:18}

 

இந்தப்பிரகாரமாக  அப்னேர்<Abner>  பென்யமீன்<Benjamin>  மனுஷர்  காதுகள்  கேட்கப்  பேசினான்;  பின்பு  அப்னேர்<Abner>  இஸ்ரவேலர்<Israel>  பார்வைக்கும்,  பென்யமீனுடைய<Benjamin>  எல்லாக்  குடும்பத்தாரின்  பார்வைக்கும்,  சம்மதியானதையெல்லாம்  எப்ரோனிலே<Hebron>  தாவீதின்<David>  காதுகள்  கேட்கப்  பேசுகிறதற்குப்  போனான்.  {2Sam  3:19}

 

அப்னேரும்<Abner>,  அவனோடேகூட  இருபதுபேரும்  எப்ரோனிலிருக்கிற<Hebron>  தாவீதினிடத்தில்<David>  வந்தபோது,  தாவீது<David>  அப்னேருக்கும்<Abner>,  அவனோடே  வந்த  மனுஷருக்கும்  விருந்துசெய்தான்.  {2Sam  3:20}

 

பின்பு  அப்னேர்<Abner>  தாவீதை<David>  நோக்கி:  நான்  எழுந்துபோய்,  இஸ்ரவேலரை<Israel>  எல்லாம்  உம்மோடே  உடன்படிக்கைபண்ணும்படிக்கு,  ராஜாவாகிய  என்  ஆண்டவனிடத்தில்  சேர்த்துக்கொண்டு  வருகிறேன்;  அதினாலே  உம்முடைய  ஆத்துமா  அரசாள  விரும்புகிற  இடமெல்லாம்  அரசாளுவீர்  என்றான்;  அப்படியே  தாவீது<David>  அப்னேரை<Abner>  அனுப்பிவிட்டான்;  அவன்  சமாதானத்தோடே  போனான்.  {2Sam  3:21}

 

தாவீதின்<David>  சேவகரும்  யோவாபும்<Joab>  அநேகம்  பொருட்களைக்  கொள்ளையிட்டு,  தண்டிலிருந்து  கொண்டுவந்தார்கள்;  அப்பொழுது  அப்னேர்<Abner>  எப்ரோனில்<Hebron>  தாவீதினிடத்தில்<David>  இல்லை;  அவனை  அனுப்பிவிட்டான்;  அவன்  சமாதானத்தோடே  போய்விட்டான்.  {2Sam  3:22}

 

யோவாபும்<Joab>  அவனோடிருந்த  எல்லாச்  சேனையும்  வந்தபோது,  நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேர்<Abner>  ராஜாவினிடத்தில்  வந்தான்  என்றும்,  அவர்  அவனைச்  சமாதானமாய்ப்போக  அனுப்பிவிட்டார்  என்றும்,  யோவாபுக்கு<Joab>  அறிவித்தார்கள்.  {2Sam  3:23}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  ராஜாவண்டையில்  பிரவேசித்து:  என்ன  செய்தீர்?  இதோ,  அப்னேர்<Abner>  உம்மிடத்தில்  வந்தானே,  நீர்  அவனைப்  போகவிட்டது  என்ன?  {2Sam  3:24}

 

நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேரை<Abner>  அறிவீரே;  அவன்  உம்மை  மோசம்போக்கவும்,  உம்முடைய  போக்குவரத்தை  அறியவும்,  நீர்  செய்கிறதையெல்லாம்  ஆராயவும்  வந்தான்  என்று  சொன்னான்.  {2Sam  3:25}

 

யோவாப்<Joab>  தாவீதை<David>  விட்டுப்  புறப்பட்டவுடனே,  அவன்  அப்னேரைத்<Abner>  தாவீதுக்குத்<David>  தெரியாமல்  கூட்டிக்கொண்டு  வரும்படி  ஆட்களை  அனுப்பினான்;  அவர்கள்  சீரா<Sirah>  என்னும்  துரவுமட்டும்போய்  அவனை  அழைத்துக்கொண்டு  வந்தார்கள்.  {2Sam  3:26}

 

அப்னேர்<Abner>  எப்ரோனுக்குத்<Hebron>  திரும்பி  வருகிறபோது,  யோவாப்<Joab>  அவனோடே  இரகசியமாய்ப்  பேசப்போகிறவன்போல,  அவனை  ஒலிமுகவாசலின்  நடுவே  ஒரு  பக்கமாய்  அழைத்துப்போய்,  தன்  தம்பி  ஆசகேலுடைய<Asahel>  இரத்தப்பழியை  வாங்க,  அங்கே  அவனை  வயிற்றிலே  குத்திக்கொன்றுபோட்டான்.  {2Sam  3:27}

 

தாவீது<David>  அதைக்  கேட்டபோது:  நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேரின்<Abner>  இரத்தத்திற்காக,  என்மேலும்  என்  ராஜ்யத்தின்மேலும்  கர்த்தருக்கு  முன்பாக  என்றைக்கும்  பழியில்லை.  {2Sam  3:28}

 

அது  யோவாபுடைய<Joab>  தலையின்மேலும்,  அவன்  தகப்பன்  குடும்பத்தின்மேலும்  சுமந்திருப்பதாக;  யோவாபின்<Joab>  வீட்டாரிலே  பிரமியக்காரனும்,  குஷ்டரோகியும்,  கோல்  ஊன்றி  நடக்கிறவனும்,  பட்டயத்தால்  விழுகிறவனும்,  அப்பம்  குறைச்சலுள்ளவனும்,  ஒருக்காலும்  ஒழிந்துபோவதில்லை  என்றான்.  {2Sam  3:29}

 

அப்னேர்<Abner>  கிபியோனில்<Gibeon>  நடந்த  யுத்தத்திலே  தங்கள்  தம்பியாகிய  ஆசகேலைக்<Asahel>  கொன்றதினிமித்தம்  யோவாபும்<Joab>  அவன்  சகோதரனாகிய  அபிசாயும்<Abishai>  அவனைச்  சங்காரம்பண்ணினார்கள்.  {2Sam  3:30}

 

தாவீது<David>  யோவாபையும்<Joab>,  அவனோடிருந்த  சகல  ஜனங்களையும்  பார்த்து:  நீங்கள்  உங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  இரட்டுடுத்தி,  அப்னேருக்கு<Abner>  முன்னாக  நடந்து  துக்கங்கொண்டாடுங்கள்  என்று  சொல்லி,  தாவீதுராஜா<David>  தானும்  பாடைக்குப்  பின்சென்றான்.  {2Sam  3:31}

 

அவர்கள்  அப்னேரை<Abner>  எப்ரோனிலே<Hebron>  அடக்கம்பண்ணுகையில்,  ராஜா  அப்னேரின்<Abner>  கல்லறையண்டையிலே  சத்தமிட்டு  அழுதான்;  சகல  ஜனங்களும்  அழுதார்கள்.  {2Sam  3:32}

 

ராஜா  அப்னேருக்காகப்<Abner>  புலம்பி:  மதிகெட்டவன்  சாகிறதுபோல,  அப்னேர்<Abner>  செத்துப்போனானோ?  {2Sam  3:33}

 

உன்  கைகள்  கட்டப்படவும்  இல்லை;  உன்  கால்களில்  விலங்கு  போடப்படவும்  இல்லை;  துஷ்டர்  கையில்  மடிகிறதுபோல  மடிந்தாயே  என்றான்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  பின்னும்  அதிகமாய்  அவனுக்காக  அழுதார்கள்.  {2Sam  3:34}

 

பொழுது  இன்னும்  இருக்கையில்,  ஜனங்கள்  எல்லாரும்  வந்து:  அப்பம்  புசியும்  என்று  தாவீதுக்குச்<David>  சொன்னபோது,  தாவீது<David>:  சூரியன்  அஸ்தமிக்கிறதற்கு  முன்னே  நான்  அப்பத்தையாகிலும்  வேறெதையாகிலும்  ருசிபார்த்தால்,  தேவன்  எனக்கு  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  செய்யக்கடவர்  என்று  ஆணையிட்டுச்  சொன்னான்.  {2Sam  3:35}

 

ஜனங்கள்  எல்லாரும்  அதைக்  கவனித்தார்கள்,  அது  அவர்கள்  பார்வைக்கு  நன்றாயிருந்தது;  அப்படியே  ராஜா  செய்ததெல்லாம்  சகல  ஜனங்களுக்கும்  நலமாய்த்  தோன்றினது.  {2Sam  3:36}

 

நேரின்<Ner>  குமாரனாகிய  அப்னேரைக்<Abner>  கொன்றுபோட்டது  ராஜாவினால்  உண்டானதல்லவென்று  அந்நாளிலே  சகல  ஜனங்களும்,  இஸ்ரவேலர்<Israel>  அனைவரும்  அறிந்துகொண்டார்கள்.  {2Sam  3:37}

 

ராஜா  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இன்றையதினம்  இஸ்ரவேலில்<Israel>  பிரபுவும்  பெரிய  மனுஷனுமாகிய  ஒருவன்  விழுந்தான்  என்று  அறியீர்களா?  {2Sam  3:38}

 

நான்  ராஜாவாக  அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும்,  நான்  இன்னும்  பலவீனன்;  செருயாவின்<Zeruiah>  குமாரராகிய  இந்த  மனுஷர்  என்  பலத்துக்கு  மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள்,  அந்தப்  பொல்லாப்பைச்  செய்தவனுக்குக்  கர்த்தர்  அவன்  பொல்லாப்புக்குத்தக்கதாய்ச்  சரிக்கட்டுவாராக  என்றான்.  {2Sam  3:39}

 

அப்னேர்<Abner>  எப்ரோனிலே<Hebron>  செத்துப்போனதைச்  சவுலின்<Saul>  குமாரன்  கேட்டபோது,  அவன்  கைகள்  திடனற்றுப்போயிற்று;  இஸ்ரவேலரெல்லாரும்<Israelites>  கலங்கினார்கள்.  {2Sam  4:1}

 

சவுலின்<Saul>  குமாரனுக்குப்  படைத்தலைவரான  இரண்டுபேர்  இருந்தார்கள்;  ஒருவனுக்குப்  பேர்  பானா<Baanah>,  மற்றவனுக்குப்  பேர்  ரேகாப்<Rechab>;  அவர்கள்  பென்யமீன்<Benjamin>  புத்திரரில்  பேரோத்தியனாகிய<Beerothite>  ரிம்மோனின்<Rimmon>  குமாரர்கள்.  பேரோத்தும்<Beeroth>  பென்யமீனுக்கு<Benjamin>  அடுத்ததாய்  எண்ணப்பட்டது.  {2Sam  4:2}

 

பேரோத்தியர்<Beerothites>  கித்தாயீமுக்கு<Gittaim>  ஓடிப்போய்,  இந்நாள்வரைக்கும்  அங்கே  சஞ்சரிக்கிறார்கள்.  {2Sam  4:3}

 

சவுலின்<Saul>  குமாரன்  யோனத்தானுக்கு<Jonathan>  இரண்டு  காலும்  முடமான  ஒரு  குமாரன்  இருந்தான்;  சவுலும்<Saul>  யோனத்தானும்<Jonathan>  மடிந்த  செய்தி  யெஸ்ரயேலிலிருந்து<Jezreel>  வருகிறபோது,  அவன்  ஐந்து  வயதுள்ளவனாயிருந்தான்;  அப்பொழுது  அவனுடைய  தாதி  அவனை  எடுத்துக்கொண்டு  ஓடிப்போனாள்;  அவள்  ஓடிப்போகிற  அவசரத்தில்  அவன்  விழுந்து  முடவனானான்;  அவனுக்கு  மேவிபோசேத்<Mephibosheth>  என்று  பேர்.  {2Sam  4:4}

 

பேரோத்தியனான<Beerothite>  அந்த  ரிம்மோனின்<Rimmon>  குமாரராகிய  ரேகாபும்<Rechab>  பானாவும்<Baanah>  போய்,  இஸ்போசேத்<Ishbosheth>  மத்தியானத்திலே  வெயில்  நேரத்தில்  படுக்கையின்மேல்  சயனித்திருக்கும்போது  அவன்  வீட்டிற்குள்  பிரவேசித்து,  {2Sam  4:5}

 

கோதுமை  வாங்க  வருகிறவர்கள்போல,  நடுவீடுமட்டும்  வந்து,  அவனை  வயிற்றிலே  குத்திப்போட்டார்கள்;  பின்பு  ரேகாபும்<Rechab>  அவன்  சகோதரன்  பானாவும்<Baanah>  தப்பி  ஓடிப்போனார்கள்.  {2Sam  4:6}

 

அவன்  தன்  பள்ளி  அறையிலே  தன்  கட்டிலின்மேல்  படுத்திருக்கும்போது  இவர்கள்  உள்ளே  போய்,  அவனைக்  குத்திக்கொன்றுபோட்டு,  அவன்  தலையை  வெட்டிப்போட்டார்கள்;  பின்பு  அவன்  தலையை  எடுத்துக்கொண்டு,  இராமுழுதும்  அந்தரவெளி  வழியாய்  நடந்து,  {2Sam  4:7}

 

எப்ரோனிலிருக்கிற<Hebron>  தாவீதினிடத்தில்<David>  இஸ்போசேத்தின்<Ishbosheth>  தலையைக்  கொண்டுவந்து,  ராஜாவை  நோக்கி:  இதோ,  உம்முடைய  பிராணனை  வாங்கத்தேடின  உம்முடைய  சத்துருவாயிருந்த  சவுலின்<Saul>  குமாரனாகிய  இஸ்போசேத்தின்<Ishbosheth>  தலை;  இன்றையதினம்  கர்த்தர்  ராஜாவாகிய  எங்கள்  ஆண்டவனுக்காகச்  சவுலின்<Saul>  கையிலும்  அவன்  குடும்பத்தாரின்  கையிலும்  பழி  வாங்கினார்  என்றார்கள்.  {2Sam  4:8}

 

ஆனாலும்  தாவீது<David>  பேரோத்தியனான<Beerothite>  ரிம்மோனின்<Rimmon>  குமாரராகிய  ரேகாபுக்கும்<Rechab>,  அவன்  சகோதரன்  பானாவுக்கும்<Baanah>  பிரதியுத்தரமாக:  என்  ஆத்துமாவை  எல்லா  இக்கட்டுக்கும்  நீங்கலாக்கி  மீட்ட  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  நான்  சொல்லுகிறதைக்  கேளுங்கள்.  {2Sam  4:9}

 

இதோ,  ஒருவன்  எனக்கு  நற்செய்தி  கொண்டுவருகிறவன்  என்று  எண்ணி,  சவுல்<Saul>  செத்துப்போனான்  என்று  எனக்கு  அறிவித்து,  தனக்கு  வெகுமானம்  கிடைக்கும்  என்று  நினைத்தபோது,  அவனை  நான்  பிடித்து  சிக்லாகிலே<Ziklag>  கொன்றுபோட்டேனே.  {2Sam  4:10}

 

தமது  வீட்டிற்குள்  தமது  படுக்கையின்மேல்  படுத்திருந்த  நீதிமானைக்  கொலைசெய்த  பொல்லாத  மனுஷருக்கு  எவ்வளவு  அதிகமாய்  ஆக்கினை  செய்யவேண்டும்?  இப்போதும்  நான்  அவருடைய  இரத்தப்பழியை  உங்கள்  கைகளில்  வாங்கி,  உங்களை  பூமியிலிருந்து  அழித்துப்போடாதிருப்பேனோ  என்று  சொல்லி,  {2Sam  4:11}

 

அவர்களைக்  கொன்றுபோடவும்,  அவர்கள்  கைகளையும்  கால்களையும்  தறித்து,  எப்ரோனிலிருக்கிற<Hebron>  குளத்தண்டையிலே  தூக்கிப்போடவும்  தன்  சேவகருக்குக்  கட்டளையிட்டான்.  இஸ்போசேத்தின்<Ishbosheth>  தலையை  எடுத்து,  எப்ரோனிலிருக்கிற<Hebron>  அப்னேரின்<Abner>  கல்லறையிலே  அடக்கம்பண்ணினார்கள்.  {2Sam  4:12}

 

அக்காலத்திலே  இஸ்ரவேலின்<Israel>  கோத்திரங்களெல்லாம்  எப்ரோனிலிருக்கிற<Hebron>  தாவீதினிடத்தில்<David>  வந்து:  இதோ,  நாங்கள்  உம்முடைய  எலும்பும்  உம்முடைய  மாம்சமுமானவர்கள்.  {2Sam  5:1}

 

சவுல்<Saul>  எங்கள்மேல்  ராஜாவாயிருக்கும்போதே  இஸ்ரவேலை<Israel>  நடத்திக்கொண்டு  போனவரும்  நடத்திக்கொண்டு  வந்தவரும்  நீரே;  கர்த்தர்:  என்  ஜனமாகிய  இஸ்ரவேலை<Israel>  நீ  மேய்த்து,  நீ  இஸ்ரவேலின்மேல்<Israel>  தலைவனாயிருப்பாய்  என்று  உம்மிடத்தில்  சொன்னாரே  என்றார்கள்.  {2Sam  5:2}

 

இஸ்ரவேலின்<Israel>  மூப்பர்  எல்லாரும்  எப்ரோனிலே<Hebron>  ராஜாவினிடத்தில்  வந்தார்கள்;  தாவீதுராஜா<David>  எப்ரோனிலே<Hebron>  கர்த்தருக்கு  முன்பாக  அவர்களோடே  உடன்படிக்கைபண்ணினபின்பு,  அவர்கள்  தாவீதை<David>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்.  {2Sam  5:3}

 

தாவீது<David>  ராஜாவாகும்போது,  முப்பது  வயதாயிருந்தான்;  அவன்  நாற்பது  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணினான்.  {2Sam  5:4}

 

அவன்  எப்ரோனிலே<Hebron>  யூதாவின்மேல்<Judah>  ஏழு  வருஷமும்  ஆறு  மாதமும்,  எருசலேமிலே<Jerusalem>  சமஸ்த  இஸ்ரவேலின்மேலும்<Israel>  யூதாவின்மேலும்<Judah>  முப்பத்துமூன்று  வருஷமும்  ராஜ்யபாரம்பண்ணினான்.  {2Sam  5:5}

 

தேசத்திலே  குடியிருக்கிற  எபூசியர்மேல்<Jebusites>  யுத்தம்பண்ண  ராஜாவானவன்  தன்  மனுஷரோடேகூட  எருசலேமுக்குப்<Jerusalem>  போனான்.  அவர்கள்:  இதிலே  பிரவேசிக்க  தாவீதினால்<David>  கூடாது  என்று  எண்ணி,  தாவீதை<David>  நோக்கி:  நீ  இதற்குள்  பிரவேசிப்பதில்லை;  குருடரும்  சப்பாணிகளும்  உன்னைத்  தடுப்பார்கள்  என்று  சொன்னார்கள்.  {2Sam  5:6}

 

ஆனாலும்  தாவீது<David>  சீயோன்<Zion>  கோட்டையைப்  பிடித்தான்;  அது  தாவீதின்<David>  நகரமாயிற்று.  {2Sam  5:7}

 

எவன்  சாலகத்தின்  வழியாய்  ஏறி,  எபூசியரையும்<Jebusites>  தாவீதின்<David>  ஆத்துமா  பகைக்கிற  சப்பாணிகளையும்,  குருடரையும்  முறிய  அடிக்கிறானோ,  அவன்  தலைவனாயிருப்பான்  என்று  தாவீது<David>  அன்றையதினம்  சொல்லியிருந்தான்;  அதனால்  குருடனும்  சப்பாணியும்  வீட்டிலே  வரலாகாது  என்று  சொல்லுகிறதுண்டு.  {2Sam  5:8}

 

அந்தக்  கோட்டையிலே  தாவீது<David>  வாசம்பண்ணி,  அதற்குத்  தாவீதின்<David>  நகரம்  என்று  பேரிட்டு,  மில்லோ<Millo>  என்னும்  ஸ்தலந்துவக்கி,  உட்புறமட்டும்  சுற்றிலும்  இருக்கிற  மதிலைக்  கட்டினான்.  {2Sam  5:9}

 

தாவீது<David>  நாளுக்குநாள்  விருத்தியடைந்தான்;  சேனைகளின்  தேவனாகிய  கர்த்தர்  அவனோடேகூட  இருந்தார்.  {2Sam  5:10}

 

தீருவின்<Tyre>  ராஜாவாகிய  ஈராம்<Hiram>  தாவீதினிடத்தில்<David>  ஸ்தானாபதிகளையும்,  கேதுருமரங்களையும்,  தச்சரையும்,  கல்தச்சரையும்  அனுப்பினான்;  அவர்கள்  தாவீதுக்கு<David>  ஒரு  வீட்டைக்  கட்டினார்கள்.  {2Sam  5:11}

 

கர்த்தர்  தன்னை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாகத்  திடப்படுத்தி,  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலினிமித்தம்<Israel>  தன்னுடைய  ராஜ்யத்தை  உயர்த்தினார்  என்று  தாவீது<David>  கண்டறிந்தபோது,  {2Sam  5:12}

 

அவன்  எப்ரோனிலிருந்து<Hebron>  வந்தபின்பு,  எருசலேமில்<Jerusalem>  இன்னும்  அதிகமான  மறுமனையாட்டிகளையும்  ஸ்திரீகளையும்  கொண்டான்;  இன்னும்  அதிக  குமாரரும்  குமாரத்திகளும்  தாவீதுக்குப்<David>  பிறந்தார்கள்.  {2Sam  5:13}

 

எருசலேமில்<Jerusalem>  அவனுக்குச்  சம்முவா<Shammua>,  சோபாப்<Shobab>,  நாத்தான்<Nathan>,  சாலொமோன்<Solomon>,  {2Sam  5:14}

 

இப்பார்<Ibhar>,  எலிசூவா<Elishua>,  நெப்பேக்<Nepheg>,  யப்பியா<Japhia>,  {2Sam  5:15}

 

எலிஷாமா<Elishama>,  எலியாதா<Eliada>,  எலிப்பேலேத்<Eliphalet>  என்னும்  பேர்களையுடைய  குமாரர்  பிறந்தார்கள்.  {2Sam  5:16}

 

தாவீதை<David>  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணினார்கள்  என்று  பெலிஸ்தர்<Philistines>  கேள்விப்பட்டபோது,  அவர்கள்  எல்லாரும்  தாவீதைத்<David>  தேடும்படி  வந்தார்கள்;  அதைத்  தாவீது<David>  கேட்டபோது,  ஒரு  அரணிப்பான  இடத்துக்குப்  போனான்.  {2Sam  5:17}

 

பெலிஸ்தரோ<Philistines>  வந்து,  ரெப்பாயீம்<Rephaim>  பள்ளத்தாக்கிலே  பரவியிருந்தார்கள்.  {2Sam  5:18}

 

பெலிஸ்தருக்கு<Philistines>  விரோதமாய்ப்  போகலாமா,  அவர்களை  என்  கையில்  ஒப்புக்கொடுப்பீரா  என்று  தாவீது<David>  கர்த்தரிடத்தில்  விசாரித்தபோது,  கர்த்தர்:  போ,  பெலிஸ்தரை<Philistines>  உன்  கையில்  நிச்சயமாய்  ஒப்புக்கொடுப்பேன்  என்று  தாவீதுக்குச்<David>  சொன்னார்.  {2Sam  5:19}

 

தாவீது<David>  பாகால்  பிராசீமுக்கு<Baalperazim>  வந்து,  அங்கே  அவர்களை  முறிய  அடித்து:  தண்ணீர்கள்  உடைத்தோடுகிறதுபோல,  கர்த்தர்  என்  சத்துருக்களை  எனக்கு  முன்பாக  உடைத்து  ஓடப்பண்ணினார்  என்று  சொல்லி,  அதினிமித்தம்  அந்த  ஸ்தலத்திற்குப்  பாகால்பிராசீம்<Baalperazim>  என்று  பேரிட்டான்.  {2Sam  5:20}

 

அங்கே  பெலிஸ்தர்<Philistines>  தங்கள்  விக்கிரகங்களைவிட்டு  ஓடிப்போனார்கள்;  அவைகளைத்  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  சுட்டெரித்தார்கள்.  {2Sam  5:21}

 

பெலிஸ்தர்<Philistines>  திரும்பவும்  வந்து,  ரெப்பாயீம்<Rephaim>  பள்ளத்தாக்கிலே  இறங்கினார்கள்.  {2Sam  5:22}

 

தாவீது<David>  கர்த்தரிடத்தில்  விசாரித்ததற்கு,  அவர்:  நீ  நேராய்ப்  போகாமல்,  அவர்களுக்குப்  பின்னாலே  சுற்றி,  முசுக்கட்டைச்  செடிகளுக்கு  எதிரேயிருந்து,  அவர்கள்மேல்  பாய்ந்து,  {2Sam  5:23}

 

முசுக்கட்டைச்  செடிகளின்  நுனிகளிலே  செல்லுகிற  இரைச்சலை  நீ  கேட்கும்போது,  சீக்கிரமாய்  எழும்பிப்போ;  அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்தை  முறிய  அடிக்க,  கர்த்தர்  உனக்கு  முன்பாகப்  புறப்பட்டிருப்பார்  என்றார்.  {2Sam  5:24}

 

கர்த்தர்  தாவீதுக்குக்<David>  கட்டளையிட்டபிரகாரம்  அவன்  செய்து,  பெலிஸ்தரைக்<Philistines>  கேபா<Geba>  துவக்கிக்  கேசேர்<Gazer>  எல்லைமட்டும்  முறிய  அடித்தான்.  {2Sam  5:25}

 

பின்பு  தாவீது<David>  இஸ்ரவேலர்<Israel>  எல்லாருக்குள்ளும்  தெரிந்துகொள்ளப்பட்ட  முப்பதினாயிரம்பேரைக்  கூட்டி,  {2Sam  6:1}

 

கேருபீன்களின்<cherubims>  நடுவே  வாசமாயிருக்கிற  சேனைகளுடைய  கர்த்தரின்  நாமம்  தொழுதுகொள்ளப்படுகிற  தேவனுடைய  பெட்டியைப்  பாலையூதாவிலிருந்து<Baale  of  Judah>  கொண்டுவரும்படி,  அவனும்  அவனோடிருந்த  அந்த  ஸ்தலத்தாரும்  எழுந்துபோய்,  {2Sam  6:2}

 

தேவனுடைய  பெட்டியை  ஒரு  புது  இரதத்தின்மேல்  ஏற்றி,  அதைக்  கிபியாவிலிருக்கிற<Gibeah>  அபினதாபின்<Abinadab>  வீட்டிலிருந்து  கொண்டுவந்தார்கள்;  அபினதாபின்<Abinadab>  குமாரராகிய  ஊசாவும்<Uzzah>  அகியோவும்<Ahio>  அந்தப்  புது  இரதத்தை  நடத்தினார்கள்.  {2Sam  6:3}

 

அவர்கள்  தேவனுடைய  பெட்டியை  ஏற்றி,  அதைக்  கிபியாவிலிருக்கிற<Gibeah>  அபினதாபின்<Abinadab>  வீட்டிலிருந்து  நடத்திக்கொண்டு  வருகிறபோது,  அகியோ<Ahio>  பெட்டிக்கு  முன்னாலே  நடந்தான்.  {2Sam  6:4}

 

தாவீதும்<David>  இஸ்ரவேல்<Israel>  சந்ததியார்  அனைவரும்  தேவதாரு  மரத்தால்  பண்ணப்பட்ட  சகலவித  கீதவாத்தியங்களோடும்,  சுரமண்டலம்  தம்புரு  மேளம்  வீணை  கைத்தாளம்  ஆகிய  இவைகளோடும்,  கர்த்தருக்கு  முன்பாக  ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள்.  {2Sam  6:5}

 

அவர்கள்  நாகோனின்<Nachon>  களம்  இருக்கிற  இடத்துக்கு  வந்தபோது,  மாடுகள்  மிரண்டு  பெட்டியை  அசைத்தபடியினால்,  ஊசா<Uzzah>  தேவனுடைய  பெட்டியினிடமாய்த்  தன்  கையை  நீட்டி,  அதைப்  பிடித்தான்.  {2Sam  6:6}

 

அப்பொழுது  கர்த்தருக்கு  ஊசாவின்மேல்<Uzzah>  கோபம்  மூண்டது;  அவனுடைய  துணிவினிமித்தம்  தேவன்  அங்கே  அவனை  அடித்தார்;  அவன்  அங்கே  தேவனுடைய  பெட்டியண்டையில்  செத்தான்.  {2Sam  6:7}

 

அப்பொழுது  கர்த்தர்  ஊசாவை<Uzzah>  அடித்ததினிமித்தம்  தாவீது<David>  விசனப்பட்டு,  அந்த  ஸ்தலத்திற்கு  இந்நாள்மட்டும்  வழங்கிவருகிற  பேரேஸ்ஊசா<Perezuzzah>  என்னும்  பேரிட்டான்.  {2Sam  6:8}

 

தாவீது<David>  அன்றையதினம்  கர்த்தருக்குப்  பயந்து,  கர்த்தருடைய  பெட்டி  என்னிடத்தில்  வருவது  எப்படியென்று  சொல்லி,  {2Sam  6:9}

 

அதைத்  தன்னிடத்தில்  தாவீதின்<David>  நகரத்தில்  கொண்டுவர  மனதில்லாமல்,  கித்தியனாகிய<Gittite>  ஓபேத்ஏதோமின்<Obededom>  வீட்டிலே  கொண்டுபோய்  வைத்தான்.  {2Sam  6:10}

 

கர்த்தருடைய  பெட்டி  கித்தியனாகிய<Gittite>  ஓபேத்ஏதோமின்<Obededom>  வீட்டிலே  மூன்றுமாதம்  இருக்கையில்  கர்த்தர்  ஓபேத்ஏதோமையும்<Obededom>  அவன்  வீட்டார்  அனைவரையும்  ஆசீர்வதித்தார்.  {2Sam  6:11}

 

தேவனுடைய  பெட்டியினிமித்தம்  கர்த்தர்  ஓபேத்ஏதோமின்<Obededom>  வீட்டையும்,  அவனுக்கு  உண்டான  எல்லாவற்றையும்  ஆசீர்வதித்தார்  என்று  தாவீதுராஜாவுக்கு<David>  அறிவிக்கப்பட்டது;  அப்பொழுது  தாவீது<David>  தேவனுடைய  பெட்டியை  ஓபேத்ஏதோமின்<Obededom>  வீட்டிலிருந்து  தாவீதின்<David>  நகரத்துக்கு  மகிழ்ச்சியுடனே  கொண்டுவந்தான்.  {2Sam  6:12}

 

கர்த்தருடைய  பெட்டியைச்  சுமந்துபோகிறவர்கள்  ஆறு  தப்படி  நடந்தபோது,  மாடுகளையும்  கொழுத்த  ஆட்டுக்கடாக்களையும்  பலியிட்டான்.  {2Sam  6:13}

 

தாவீது<David>  சணல்நூல்  ஏபோத்தைத்<ephod>  தரித்துக்கொண்டு,  தன்  முழுப்  பலத்தோடும்  கர்த்தருக்கு  முன்பாக  நடனம்பண்ணினான்.  {2Sam  6:14}

 

அப்படியே  தாவீதும்<David>,  இஸ்ரவேல்<Israel>  சந்ததியார்  அனைவரும்  கர்த்தருடைய  பெட்டியைக்  கெம்பீர  சத்தத்தோடும்  எக்காள  தொனியோடும்  கொண்டுவந்தார்கள்.  {2Sam  6:15}

 

கர்த்தருடைய  பெட்டி  தாவீதின்<David>  நகரத்திற்குள்  பிரவேசிக்கிறபோது,  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாள்<Michal>  பலகணிவழியாய்ப்  பார்த்து,  தாவீதுராஜா<David>  கர்த்தருக்கு  முன்பாகக்  குதித்து,  நடனம்பண்ணுகிறதைக்  கண்டு,  தன்  இருதயத்திலே  அவனை  அவமதித்தாள்.  {2Sam  6:16}

 

அவர்கள்  கர்த்தருடைய  பெட்டியை  உள்ளே  கொண்டுவந்து,  அதற்குத்  தாவீது<David>  போட்ட  கூடாரத்திற்குள்  இருக்கிற  அதின்  ஸ்தானத்திலே  அதை  வைத்தபோது,  தாவீது<David>  கர்த்தருடைய  சந்நிதியிலே  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டான்.  {2Sam  6:17}

 

தாவீது<David>  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  இட்டபின்பு,  சேனைகளின்  கர்த்தருடைய  நாமத்தினாலே  ஜனங்களை  ஆசீர்வதித்து,  {2Sam  6:18}

 

இஸ்ரவேலின்<Israel>  திரள்கூட்டமான  ஸ்திரீ  புருஷராகிய  சகல  ஜனங்களுக்கும்,  அவரவருக்கு  ஒவ்வொரு  அப்பத்தையும்,  ஒவ்வொரு  இறைச்சித்துண்டையும்,  ஒவ்வொரு  படி  திராட்சரசத்தையும்  பங்கிட்டான்;  பிற்பாடு  ஜனங்கள்  எல்லாரும்  அவரவர்  தங்கள்  வீட்டிற்குப்  போய்விட்டார்கள்.  {2Sam  6:19}

 

தாவீது<David>  தன்  வீட்டாரை  ஆசீர்வதிக்கிறதற்குத்  திரும்பும்போது,  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாள்<Michal>  தாவீதுக்கு<David>  எதிர்கொண்டுவந்து,  அற்பமனுஷரில்  ஒருவன்  தன்  வஸ்திரங்களைக்  கழற்றிப்போடுகிறதுபோல,  இன்று  தம்முடைய  ஊழியக்காரருடைய  பெண்களின்  கண்களுக்கு  முன்பாகத்  தம்முடைய  வஸ்திரங்களை  உரிந்துபோட்டிருந்த  இஸ்ரவேலின்<Israel>  ராஜா  இன்று  எத்தனை  மகிமைப்பட்டிருந்தார்  என்றாள்.  {2Sam  6:20}

 

அதற்குத்  தாவீது<David>  மீகாளைப்<Michal>  பார்த்து:  உன்  தகப்பனைப்பார்க்கிலும்,  அவருடைய  எல்லா  வீட்டாரைப்பார்க்கிலும்,  என்னை  இஸ்ரவேலாகிய<Israel>  கர்த்தருடைய  ஜனத்தின்மேல்  தலைவனாகக்  கட்டளையிடும்படிக்குத்  தெரிந்துகொண்ட  கர்த்தருடைய  சமுகத்திற்கு  முன்பாக  ஆடிப்பாடினேன்.  {2Sam  6:21}

 

இதைப்பார்க்கிலும்  இன்னும்  நான்  நீசனும்  என்  பார்வைக்கு  அற்பனுமாவேன்:  அப்படியே  நீ  சொன்ன  பெண்களுக்குங்கூட  மகிமையாய்  விளங்குவேன்  என்றான்.  {2Sam  6:22}

 

அதினால்  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாளுக்கு<Michal>  மரணமடையும்  நாள்மட்டும்  பிள்ளை  இல்லாதிருந்தது.  {2Sam  6:23}

 

கர்த்தர்  ராஜாவைச்  சுற்றிலும்  இருந்த  அவனுடைய  எல்லாச்  சத்துருக்களுக்கும்  அவனை  நீங்கலாக்கி,  இளைப்பாறப்பண்ணினபோது,  அவன்  தன்  வீட்டிலே  வாசமாயிருக்கையில்,  {2Sam  7:1}

 

ராஜா  தீர்க்கதரிசியாகிய  நாத்தானை<Nathan>  நோக்கி:  பாரும்,  கேதுருமரங்களால்  செய்யப்பட்ட  வீட்டிலே  நான்  வாசம்பண்ணும்போது,  தேவனுடைய  பெட்டி  திரைகளின்  நடுவே  வாசமாயிருக்கிறதே  என்றான்.  {2Sam  7:2}

 

அப்பொழுது  நாத்தான்<Nathan>  ராஜாவை  நோக்கி:  நீர்  போய்  உம்முடைய  இருதயத்தில்  உள்ளபடியெல்லாம்  செய்யும்;  கர்த்தர்  உம்மோடு  இருக்கிறாரே  என்றான்.  {2Sam  7:3}

 

அன்று  ராத்திரியிலே  கர்த்தருடைய  வார்த்தை  நாத்தானுக்கு<Nathan>  உண்டாகி,  அவர்:  {2Sam  7:4}

 

நீ  போய்  என்  தாசனாகிய  தாவீதை<David>  நோக்கி:  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  வாசமாயிருக்கத்தக்க  ஆலயத்தை  நீ  எனக்குக்  கட்டுவாயோ?  {2Sam  7:5}

 

நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரரை  எகிப்திலிருந்து<Egypt>  புறப்படப்பண்ணின  நாள்முதற்கொண்டு  இந்நாள்வரைக்கும்,  நான்  ஒரு  ஆலயத்திலே  வாசம்பண்ணாமல்,  கூடாரத்திலும்  வாசஸ்தலத்திலும்  உலாவினேன்.  {2Sam  7:6}

 

நான்  இஸ்ரவேலாகிய<Israel>  என்  ஜனத்தை  மேய்க்கும்படி  கட்டளையிட்ட  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களில்  ஒரு  கோத்திரத்தையாவது  நோக்கி:  நீங்கள்  எனக்குக்  கேதுருமரத்தால்  செய்யப்பட்ட  ஆலயத்தைக்  கட்டாதிருக்கிறது  என்ன  என்று  நான்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்குள்  உலாவிவந்த  எவ்விடத்திலாவது  யாதொரு  வார்த்தையைச்  சொன்னதுண்டோ?  {2Sam  7:7}

 

இப்போதும்  நீ  என்  தாசனாகிய  தாவீதை<David>  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நீ  இஸ்ரவேல்<Israel>  என்கிற  என்  ஜனங்களுக்கு  அதிபதியாயிருக்கும்படி,  ஆடுகளின்  பின்னே  நடந்த  உன்னை  நான்  ஆட்டுமந்தையை  விட்டு  எடுத்து,  {2Sam  7:8}

 

நீ  போன  எவ்விடத்திலும்  உன்னோடே  இருந்து,  உன்  சத்துருக்களையெல்லாம்  உனக்கு  முன்பாக  நிர்மூலமாக்கி,  பூமியிலிருக்கிற  பெரியோர்களின்  நாமத்திற்கு  ஒத்த  பெரிய  நாமத்தை  உனக்கு  உண்டாக்கினேன்.  {2Sam  7:9}

 

நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  ஒரு  இடத்தை  ஏற்படுத்தி,  அவர்கள்  தங்கள்  ஸ்தானத்திலே  குடியிருக்கவும்,  இனி  அவர்கள்  அலையாமலும்,  முன்போலும்,  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்மேல்<Israel>  நியாயாதிபதிகளைக்  கட்டளையிட்ட  நாள்வரையில்  நடந்ததுபோலும்,  நியாயக்கேட்டின்  மக்களால்  இனிச்  சிறுமைப்படாமலும்  இருக்கும்படி  அவர்களை  நாட்டினேன்.  {2Sam  7:10}

 

உன்னுடைய  எல்லாச்  சத்துருக்களுக்கும்  உன்னை  நீங்கலாக்கி,  இளைப்பாறவும்  பண்ணினேன்;  இப்போதும்  கர்த்தர்  உனக்கு  வீட்டை  உண்டுபண்ணுவார்  என்பதைக்  கர்த்தர்  உனக்கு  அறிவிக்கிறார்.  {2Sam  7:11}

 

உன்  நாட்கள்  நிறைவேறி,  நீ  உன்  பிதாக்களோடே  நித்திரைபண்ணும்போது,  நான்  உனக்குப்பின்பு  உன்  கர்ப்பப்பிறப்பாகிய  உன்  சந்ததியை  எழும்பப்பண்ணி,  அவன்  ராஜ்யத்தை  நிலைப்படுத்துவேன்.  {2Sam  7:12}

 

அவன்  என்  நாமத்திற்கென்று  ஒரு  ஆலயத்தைக்  கட்டுவான்;  அவன்  ராஜ்யபாரத்தின்  சிங்காசனத்தை  என்றைக்கும்  நிலைக்கப்பண்ணுவேன்.  {2Sam  7:13}

 

நான்  அவனுக்குப்  பிதாவாயிருப்பேன்,  அவன்  எனக்குக்  குமாரனாயிருப்பான்;  அவன்  அக்கிரமம்  செய்தால்,  நான்  அவனை  மனுஷருடைய  மிலாற்றினாலும்  மனுபுத்திரருடைய  அடிகளினாலும்  தண்டிப்பேன்.  {2Sam  7:14}

 

உனக்கு  முன்பாக  நான்  தள்ளிவிட்ட  சவுலிடத்திலிருந்து<Saul>  என்  கிருபையை  விலக்கினதுபோல  அவனைவிட்டு  விலக்கமாட்டேன்.  {2Sam  7:15}

 

உன்  வீடும்,  உன்  ராஜ்யமும்,  என்றென்றைக்கும்  உனக்கு  முன்பாக  ஸ்திரப்பட்டிருக்கும்;  உன்  ராஜாசனம்  என்றென்றைக்கும்  நிலைபெற்றிருக்கும்  என்கிறார்  என்று  சொல்லச்சொன்னார்.  {2Sam  7:16}

 

நாத்தான்<Nathan>  இந்த  எல்லா  வார்த்தைகளின்படியும்,  இந்த  எல்லாத்  தரிசனத்தின்படியும்,  தாவீதுக்குச்<David>  சொன்னான்.  {2Sam  7:17}

 

அப்பொழுது  தாவீதுராஜா<David>  உட்பிரவேசித்து,  கர்த்தருடைய  சமுகத்திலிருந்து:  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  என்னை  இதுவரைக்கும்  கொண்டுவந்ததற்கு,  நான்  எம்மாத்திரம்?  என்  வீடும்  எம்மாத்திரம்?  {2Sam  7:18}

 

கர்த்தராகிய  ஆண்டவரே,  இது  இன்னும்  உம்முடைய  பார்வைக்குக்  கொஞ்ச  காரியமாயிருக்கிறது  என்று  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  தேவரீர்  உம்முடைய  அடியானுடைய  வீட்டைக்குறித்து,  வெகுதூரமாயிருக்கும்  காலத்துச்செய்தியை  மனுஷர்  முறைமையாய்ச்  சொன்னீரே.  {2Sam  7:19}

 

இனி  தாவீது<David>  உம்மிடத்தில்  சொல்லவேண்டியது  என்ன?  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நீர்  உமது  அடியானை  அறிவீர்.  {2Sam  7:20}

 

உம்முடைய  வாக்குத்தத்தத்தினிமித்தமும்,  உம்முடைய  சித்தத்தின்படியேயும்,  இந்தப்  பெரிய  காரியங்களையெல்லாம்  உமது  அடியானுக்கு  அறிவிக்கும்படிக்குத்  தயவு  செய்தீர்.  {2Sam  7:21}

 

ஆகையால்  தேவனாகிய  கர்த்தரே,  நீர்  பெரியவர்  என்று  விளங்குகிறது;  நாங்கள்  எங்கள்  காதுகளாலே  கேட்ட  சகல  காரியங்களின்படியும்,  தேவரீருக்கு  நிகரானவர்  இல்லை;  உம்மைத்தவிர  வேறே  தேவனும்  இல்லை.  {2Sam  7:22}

 

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு<Israel>  நிகரான  ஜனமும்  உண்டோ?  பூலோகத்து  ஜாதிகளில்  இந்த  ஒரே  ஜாதியைத்  தேவன்  தமக்கு  ஜனமாக  மீட்கிறதற்கும்,  தமக்குக்  கீர்த்தி  விளங்கப்பண்ணுகிறதற்கும்  ஏற்பட்டாரே;  தேவரீர்  எகிப்திலிருந்து<Egypt>  மீட்டுக்கொண்டுவந்த  உம்முடைய  ஜனத்திற்குமுன்பாகப்  பயங்கரமான  பெரிய  காரியங்களை  நடத்தி,  உம்முடைய  தேசத்திற்கும்,  அதிலிருந்த  ஜாதிகளுக்கும்,  அவர்கள்  தேவர்களுக்கும்,  உமது  மகிமையை  விளங்கச்செய்து,  {2Sam  7:23}

 

உம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலர்<Israel>  என்றைக்கும்  உம்முடைய  ஜனமாயிருப்பதற்கு,  அவர்களைத்  திடப்படுத்தி,  கர்த்தராகிய  நீர்தாமே  அவர்களுக்குத்  தேவனானீர்.  {2Sam  7:24}

 

இப்போதும்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  உமது  அடியானையும்  அவன்  வீட்டையும்  குறித்துச்  சொன்ன  வார்த்தையை  என்றென்றைக்கும்  நிலைவரப்படுத்த,  தேவரீர்  சொன்னபடியே  செய்தருளும்.  {2Sam  7:25}

 

அப்படியே  சேனைகளின்  கர்த்தர்  இஸ்ரவேலின்மேல்<Israel>  தேவனானவர்  என்று  சொல்லி,  உம்முடைய  நாமம்  என்றென்றைக்கும்  மகிமைப்படுவதாக;  உமது  அடியானாகிய  தாவீதின்<David>  வீடு  உமக்கு  முன்பாக  நிலைநிற்பதாக.  {2Sam  7:26}

 

உனக்கு  வீடுகட்டுவேன்  என்று  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தராயிருக்கிற  நீர்  உமது  அடியானின்  செவிக்கு  வெளிப்படுத்தினீர்:  ஆகையால்  உம்மை  நோக்கி  இந்த  விண்ணப்பத்தைச்  செய்ய  உமது  அடியானுக்கு  மனத்தைரியம்  கிடைத்தது.  {2Sam  7:27}

 

இப்போதும்  கர்த்தராகிய  ஆண்டவரே,  நீரே  தேவன்;  உம்முடைய  வார்த்தைகள்  சத்தியம்;  தேவரீர்  உமது  அடியானுக்கு  இந்த  நல்விசேஷங்களை  வாக்குத்தத்தம்பண்ணினீர்.  {2Sam  7:28}

 

இப்போதும்  உமது  அடியானின்  வீடு  என்றைக்கும்  உமக்கு  முன்பாக  இருக்கும்படி  அதை  ஆசீர்வதித்தருளும்;  கர்த்தரான  ஆண்டவராகிய  தேவரீர்  அதைச்  சொன்னீர்,  உம்முடைய  ஆசீர்வாதத்தினாலே  உமது  அடியானின்  வீடு  என்றைக்கும்  ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக  என்றான்.  {2Sam  7:29}

 

இதற்குப்பின்பு  தாவீது<David>  பெலிஸ்தரை<Philistines>  முறிய  அடித்து,  அவர்களைக்  கீழ்ப்படுத்தி,  மேத்தேக்  அம்மாவைப்<Methegammah>  பிடித்துக்கொண்டான்.  {2Sam  8:1}

 

அவன்  மோவாபியரையும்<Moab>  முறிய  அடித்து,  அவர்களைத்  தரைமட்டும்  பணியப்பண்ணி,  அவர்கள்மேல்  நூல்போட்டு,  இரண்டுபங்கு  மனுஷரைக்  கொன்றுபோட்டு,  ஒரு  பங்கை  உயிரோடே  வைத்தான்;  இவ்விதமாய்  மோவாபியர்<Moabites>  தாவீதைச்<David>  சேவித்து,  அவனுக்குக்  கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.  {2Sam  8:2}

 

ரேகோபின்<Rehob>  குமாரனாகிய  ஆதாதேசர்<Hadadezer>  என்னும்  சோபாவின்<Zobah>  ராஜா  ஐபிராத்து<Euphrates>  நதியண்டையில்  இருக்கிற  சீமையைத்  திரும்பத்  தன்  வசமாக்கிக்கொள்ளப்போகையில்,  தாவீது<David>  அவனையும்  முறிய  அடித்து,  {2Sam  8:3}

 

அவனுக்கு  இருந்த  இராணுவத்தில்  ஆயிரத்து  எழுநூறு  குதிரைவீரரையும்,  இருபதினாயிரம்  காலாட்களையும்  பிடித்து,  இரதங்களில்  நூறு  இரதங்களை  வைத்துக்கொண்டு,  மற்றவைகளையெல்லாம்  துண்டாடிப்போட்டான்.  {2Sam  8:4}

 

சோபாவின்<Zobah>  ராஜாவாகிய  ஆதாதேசருக்கு<Hadadezer>  உதவிசெய்ய  தமஸ்குப்<Damascus>  பட்டணத்தாராகிய  சீரியர்<Syrians>  வந்தார்கள்;  தாவீது<David>  சீரியரில்<Syrians>  இருபத்தீராயிரம்பேரை  வெட்டிப்போட்டு,  {2Sam  8:5}

 

தமஸ்குக்கடுத்த<Damascus>  சீரியாவிலே<Syria>  தாணையங்களை  வைத்தான்;  சீரியர்<Syrians>  தாவீதைச்<David>  சேவித்து,  அவனுக்குக்  கப்பங்கட்டினார்கள்;  தாவீது<David>  போன  இடத்திலெல்லாம்,  கர்த்தர்  அவனைக்  காப்பாற்றினார்.  {2Sam  8:6}

 

ஆதாதேசரின்<Hadadezer>  சேவகருடைய  பொற்பரிசைகளைத்  தாவீது<David>  எடுத்து,  அவைகளை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுவந்தான்.  {2Sam  8:7}

 

ஆதாதேசரின்<Hadadezer>  பட்டணங்களாகிய  பேத்தாகிலும்<Betah>  பேரொத்தாயிலுமிருந்து<Berothai>  தாவீது<David>  ராஜா  மகா  திரளான  வெண்கலத்தையும்  எடுத்துக்கொண்டுவந்தான்.  {2Sam  8:8}

 

தாவீது<David>  ஆதாதேசருடைய<Hadadezer>  எல்லா  இராணுவத்தையும்  முறிய  அடித்த  செய்தியை  ஆமாத்தின்<Hamath>  ராஜாவாகிய  தோயீ<Toi>  கேட்டபோது,  {2Sam  8:9}

 

ஆதாதேசர்<Hadadezer>  தோயீயின்மேல்<Toi>  எப்போதும்  யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால்,  ராஜாவாகிய  தாவீதின்<David>  சுகசெய்தியை  விசாரிக்கவும்,  அவன்  ஆதாதேசரோடே<Hadadezer>  யுத்தம்பண்ணி,  அவனை  முறிய  அடித்ததற்காக  அவனுக்கு  வாழ்த்துதல்  சொல்லவும்,  தோயீ<Toi>  தன்  குமாரனாகிய  யோராமை<Joram>  ராஜாவினிடத்தில்  அனுப்பினான்.  மேலும்  யோராம்<Joram>  தன்  கையிலே  வெள்ளியும்  பொன்னும்  வெண்கலமுமான  தட்டுமுட்டுகளைக்  கொண்டுவந்தான்.  {2Sam  8:10}

 

அவன்  கொண்டுவந்தவைகளைத்  தாவீதுராஜா<David>  கீழ்ப்படுத்தின  சீரியர்<Syria>,  மோவாபியர்<Moab>,  அம்மோன்<Ammon>  புத்திரர்,  பெலிஸ்தர்<Philistines>,  அமலேக்கியர்<Amalek>  என்னும்  சகல  ஜாதியார்களிடத்திலும்,  {2Sam  8:11}

 

ரேகோபின்<Rehob>  குமாரனாகிய  ஆதாதேசர்<Hadadezer>  என்னும்  சோபாவின்<Zobah>  ராஜாவினிடத்திலும்  கொள்ளையிட்டதிலும்  எடுத்து,  கர்த்தருக்கு  நியமித்த  வெள்ளியோடும்  பொன்னோடுங்கூடக்  கர்த்தருக்குப்  பிரதிஷ்டைபண்ணினான்.  {2Sam  8:12}

 

தாவீது<David>  உப்புப்பள்ளத்தாக்கிலே<valley  of  salt>  பதினெண்ணாயிரம்  சீரியரை<Syrians>  முறிய  அடித்துத்  திரும்பினதினால்  கீர்த்திபெற்றான்.  {2Sam  8:13}

 

ஏதோமில்<Edom>  தாணையங்களை  வைத்தான்;  ஏதோம்<Edom>  எங்கும்  அவன்  தாணையங்களை  வைத்ததினாலே,  ஏதோமியர்<Edom>  எல்லாரும்  தாவீதைச்<David>  சேவிக்கிறவர்களானார்கள்;  தாவீது<David>  போன  எல்லா  இடத்திலும்  கர்த்தர்  அவனைக்  காப்பாற்றினார்.  {2Sam  8:14}

 

இப்படியே  தாவீது<David>  இஸ்ரவேல்<Israel>  அனைத்தின்மேலும்  ராஜாவாயிருந்தான்;  அவன்  தன்னுடைய  எல்லா  ஜனத்திற்கும்  நியாயமும்  நீதியும்  செய்துவந்தான்.  {2Sam  8:15}

 

செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  யோவாப்<Joab>  இராணுவத்தலைவனாயிருந்தான்;  அகிலூதின்<Ahilud>  குமாரனாகிய  யோசபாத்<Jehoshaphat>  மந்திரியாயிருந்தான்.  {2Sam  8:16}

 

அகிதூபின்<Ahitub>  குமாரன்  சாதோக்கும்<Zadok>,  அபியத்தாரின்<Abiathar>  குமாரன்  அகிமெலேக்கும்<Ahimelech>  ஆசாரியராயிருந்தார்கள்;  செராயா<Seraiah>  சம்பிரதியாயிருந்தான்.  {2Sam  8:17}

 

யோய்தாவின்<Jehoiada>  குமாரன்  பெனாயா<Benaiah>  கிரேத்தியருக்கும்<Cherethites>  பிலேத்தியருக்கும்<Pelethites>  தலைவனாயிருந்தான்;  தாவீதின்<David>  குமாரரோ  பிரதானிகளாயிருந்தார்கள்.  {2Sam  8:18}

 

யோனத்தான்நிமித்தம்<Jonathan>  என்னால்  தயவுபெறத்தக்கவன்  எவனாவது  சவுலின்<Saul>  வீட்டாரில்  இன்னும்  மீதியாயிருக்கிறவன்  உண்டா  என்று  தாவீது<David>  கேட்டான்.  {2Sam  9:1}

 

அப்பொழுது  சவுலின்<Saul>  வீட்டு  வேலைக்காரனாகிய  சீபா<Ziba>  என்னும்  பேருள்ளவனைத்  தாவீதினிடத்தில்<David>  அழைத்துவந்தார்கள்;  ராஜா  அவனைப்  பார்த்து:  நீதானா  சீபா<Ziba>  என்று  கேட்டான்;  அவன்  அடியேன்தான்  என்றான்.  {2Sam  9:2}

 

அப்பொழுது  ராஜா:  தேவன்நிமித்தம்  நான்  சவுலின்<Saul>  குடும்பத்தாருக்குத்  தயைசெய்யும்படி  அவன்  வீட்டாரில்  யாதொருவன்  இன்னும்  மீதியாய்  இருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  சீபா<Ziba>  ராஜாவைப்  பார்த்து:  இன்னும்  யோனத்தானுக்கு<Jonathan>  இரண்டு  கால்களும்  முடமான  ஒரு  குமாரன்  இருக்கிறான்  என்றான்.  {2Sam  9:3}

 

அவன்  எங்கே  என்று  ராஜா  கேட்டதற்கு,  சீபா<Ziba>  ராஜாவைப்  பார்த்து:  இதோ,  அவன்  லோதேபாரிலே<Lodebar>  அம்மியேலின்<Ammiel>  குமாரனாகிய  மாகீரின்<Machir>  வீட்டில்  இருக்கிறான்  என்றான்.  {2Sam  9:4}

 

அப்பொழுது  தாவீதுராஜா<David>  அவனை  லோதேபாரிலிருக்கிற<Lodebar>  அம்மியேலின்<Ammiel>  குமாரனாகிய  மாகீரின்<Machir>  வீட்டிலிருந்து  அழைப்பித்தான்.  {2Sam  9:5}

 

சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தானின்<Jonathan>  மகன்  மேவிபோசேத்<Mephibosheth>  தாவீதினிடத்தில்<David>  வந்தபோது,  முகங்குப்புற  விழுந்து  வணங்கினான்;  அப்பொழுது  தாவீது<David>:  மேவிபோசேத்தே<Mephibosheth>  என்றான்;  அவன்:  இதோ,  அடியேன்  என்றான்.  {2Sam  9:6}

 

தாவீது<David>  அவனைப்  பார்த்து:  நீ  பயப்படாதே;  உன்  தகப்பனாகிய  யோனத்தான்நிமித்தம்<Jonathan>  நான்  நிச்சயமாய்  உனக்குத்  தயைசெய்து,  உன்  தகப்பனாகிய  சவுலின்<Saul>  நிலங்களையெல்லாம்  உனக்குத்  திரும்பக்  கொடுப்பேன்;  நீ  என்  பந்தியில்  நித்தம்  அப்பம்  புசிப்பாய்  என்றான்.  {2Sam  9:7}

 

அப்பொழுது  அவன்  வணங்கி:  செத்த  நாயைப்போலிருக்கிற  என்னை  நீர்  நோக்கிப்பார்க்கிறதற்கு,  உமது  அடியான்  எம்மாத்திரம்  என்றான்.  {2Sam  9:8}

 

ராஜா  சவுலின்<Saul>  வேலைக்காரனாகிய  சீபாவை<Ziba>  அழைப்பித்து,  அவனை  நோக்கி:  சவுலுக்கும்<Saul>  அவர்  வீட்டார்  எல்லாருக்கும்  இருந்த  யாவையும்  உன்  எஜமானுடைய  குமாரனுக்குக்  கொடுத்தேன்.  {2Sam  9:9}

 

ஆகையால்  நீ  உன்  குமாரரையும்  உன்  வேலைக்காரரையும்  கூட்டிக்கொண்டு,  உன்  எஜமானுடைய  குமாரன்  புசிக்க  அப்பம்  உண்டாயிருக்கும்படி,  அந்த  நிலத்தைப்  பயிரிட்டு,  அதின்  பலனைச்  சேர்ப்பாயாக;  உன்  எஜமானுடைய  குமாரன்  மேவிபோசேத்<Mephibosheth>  நித்தம்  என்  பந்தியிலே  அப்பம்  புசிப்பான்  என்றான்;  சீபாவுக்குப்<Ziba>  பதினைந்து  குமாரரும்  இருபது  வேலைக்காரரும்  இருந்தார்கள்.  {2Sam  9:10}

 

சீபா<Ziba>,  ராஜாவை  நோக்கி:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தமது  அடியானுக்குக்  கட்டளையிட்டபடியெல்லாம்  உமது  அடியானாகிய  நான்  செய்வேன்  என்றான்.  ராஜகுமாரரில்  ஒருவனைப்போல,  மேவிபோசேத்<Mephibosheth>  என்  பந்தியிலே  அசனம்  பண்ணுவான்  என்று  ராஜா  சொன்னான்.  {2Sam  9:11}

 

மேவிபோசேத்திற்கு<Mephibosheth>  மீகா<Micha>  என்னும்  பேருள்ள  சிறுவனாகிய  ஒரு  குமாரன்  இருந்தான்,  சீபாவின்<Ziba>  வீட்டிலே  குடியிருந்த  யாவரும்  மேவிபோசேத்திற்கு<Mephibosheth>  வேலைக்காரராயிருந்தார்கள்.  {2Sam  9:12}

 

மேவிபோசேத்<Mephibosheth>  ராஜாவின்  பந்தியில்  நித்தம்  அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால்,  எருசலேமிலே<Jerusalem>  குடியிருந்தான்;  அவனுக்கு  இரண்டு  காலும்  முடமாயிருந்தது.  {2Sam  9:13}

 

அதன்பின்பு  அம்மோன்<Ammon>  புத்திரரின்  ராஜா  மரித்துப்போனான்;  அவன்  குமாரனாகிய  ஆனூன்<Hanun>  அவன்  பட்டத்திற்கு  ராஜாவானான்.  {2Sam  10:1}

 

அப்பொழுது  தாவீது<David>:  ஆனூனின்<Hanun>  தகப்பனாகிய  நாகாஸ்<Nahash>  எனக்குத்  தயைசெய்ததுபோல,  அவன்  குமாரனாகிய  இவனுக்கு  நான்  தயைசெய்வேன்  என்று  சொல்லி,  அவன்  தகப்பனுக்காக  அவனுக்கு  ஆறுதல்  சொல்ல,  தன்  ஊழியக்காரரை  அனுப்பினான்;  தாவீதின்<David>  ஊழியக்காரர்  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேசத்திலே  வந்தபோது,  {2Sam  10:2}

 

அம்மோன்<Ammon>  புத்திரரின்  பிரபுக்கள்  தங்கள்  ஆண்டவனாகிய  ஆனூனைப்<Hanun>  பார்த்து:  தாவீது<David>  ஆறுதல்  சொல்லுகிறவர்களை  உம்மிடத்தில்  அனுப்பினது,  உம்முடைய  தகப்பனைக்  கனம்பண்ணுகிறதாய்  உமக்குத்  தோன்றுகிறதோ?  இந்தப்  பட்டணத்தை  ஆராய்ந்து,  உளவுபார்த்து,  அதைக்  கவிழ்த்துப்போட  அல்லவோ  தாவீது<David>  தன்  ஊழியக்காரரை  உம்மிடத்திற்கு  அனுப்பினான்  என்றார்கள்.  {2Sam  10:3}

 

அப்பொழுது  ஆனூன்<Hanun>:  தாவீதின்<David>  ஊழியக்காரரைப்  பிடித்து,  அவர்களுடைய  ஒருபக்கத்துத்  தாடியைச்  சிரைத்து,  அவர்களுடைய  வஸ்திரங்களை  இருப்பிடமட்டும்  வைத்துவிட்டு,  மற்றப்பாதியைக்  கத்தரித்துப்போட்டு,  அவர்களை  அனுப்பிவிட்டான்.  {2Sam  10:4}

 

அது  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டபோது,  ராஜா,  அந்த  மனுஷர்  மிகவும்  வெட்கப்  பட்டபடியினால்,  அவர்களுக்கு  எதிராக  ஆட்களை  அனுப்பி,  உங்கள்  தாடி  வளருமட்டும்  நீங்கள்  எரிகோவிலிருந்து<Jericho>,  பிற்பாடு  வாருங்கள்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  10:5}

 

அம்மோன்<Ammon>  புத்திரர்  தாங்கள்  தாவீதுக்கு<David>  அருவருப்பானதைக்  கண்டபோது,  ஸ்தானாபதிகளை  அனுப்பி,  பெத்ரேகோப்<Bethrehob>  தேசத்துச்  சீரியரிலும்<Syrians>,  சோபாவிலிருக்கிற<Zoba>  சீரியரிலும்<Syrians>  இருபதினாயிரம்  காலாட்களையும்,  மாக்காதேசத்து<Maacah>  ராஜாவினிடத்தில்  ஆயிரம்பேரையும்,  இஷ்தோபிலிருக்கிற<Ishtob>  பன்னீராயிரம்பேரையும்,  கூலிப்படையாக  அழைப்பித்தார்கள்.  {2Sam  10:6}

 

அதைத்  தாவீது<David>  கேள்விப்பட்டபோது,  யோவாபையும்<Joab>  பராக்கிரமசாலிகளாகிய  சமஸ்த  இராணுவத்தையும்  அனுப்பினான்.  {2Sam  10:7}

 

அம்மோன்<Ammon>  புத்திரர்  புறப்பட்டு,  ஒலிமுகவாசலண்டையிலே  போர்செய்ய  அணிவகுத்து  நின்றார்கள்;  ஆனாலும்  சோபாவிலும்<Zoba>  ரேகோபிலுமிருந்துவந்த<Rehob>  சீரியரும்<Syrians>,  இஷ்தோபிலும்<Ishtob>  மாக்காவிலுமிருந்து<Maacah>  வந்த  மனுஷரும்,  வெளியிலே  பிரத்தியேகமாயிருந்தார்கள்.  {2Sam  10:8}

 

யோவாபோ<Joab>  இராணுவங்களின்  படைமுகம்  தனக்கு  முன்னும்  பின்னும்  இருக்கிறதைக்  காண்கையில்,  அவன்  இஸ்ரவேலிலே<Israel>  தெரிந்துகொள்ளப்பட்ட  எல்லா  இராணுவங்களிலும்  ஒரு  பங்கைப்  பிரித்தெடுத்து,  அதைச்  சீரியருக்கு<Syrians>  எதிராக  அணிவகுத்து  நிறுத்தி,  {2Sam  10:9}

 

மற்ற  ஜனத்தை  அம்மோன்<Ammon>  புத்திரருக்கு  எதிராக  அணிவகுத்து  நிறுத்தும்படி  தன்  சகோதரனாகிய  அபிசாயினிடத்தில்<Abishai>  ஒப்புவித்து:  {2Sam  10:10}

 

சீரியர்<Syrians>  கைமிஞ்சுகிறதாயிருந்தால்  நீ  எனக்கு  உதவிசெய்யவேண்டும்;  அம்மோன்<Ammon>  புத்திரர்  கை  மிஞ்சுகிறதாயிருந்தால்  நான்  உனக்கு  உதவிசெய்ய  வருவேன்.  {2Sam  10:11}

 

தைரியமாயிரு;  நம்முடைய  ஜனத்திற்காகவும்,  நம்முடைய  தேவனுடைய  பட்டணங்களுக்காகவும்  சவுரியத்தைக்  காட்டுவோம்;  கர்த்தர்  தமது  பார்வைக்கு  நலமானதைச்  செய்வாராக  என்றான்.  {2Sam  10:12}

 

யோவாபும்<Joab>  அவனோடிருந்த  ஜனமும்  சீரியர்மேல்<Syrians>  யுத்தம்பண்ணக்  கிட்டினார்கள்;  அவர்கள்  அவனுக்கு  முன்பாக  முறிந்தோடினார்கள்.  {2Sam  10:13}

 

சீரியர்<Syrians>  முறிந்தோடுகிறதை  அம்மோன்<Ammon>  புத்திரர்  கண்டபோது,  அவர்களும்  அபிசாயிக்கு<Abishai>  முன்பாக  முறிந்தோடிப்  பட்டணத்திற்குள்  புகுந்தார்கள்;  அப்பொழுது  யோவாப்<Joab>  அம்மோன்<Ammon>  புத்திரரை  விட்டுத்  திரும்பி  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தான்.  {2Sam  10:14}

 

தாங்கள்  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டதைச்  சீரியர்<Syrians>  கண்டபோது,  ஒருமிக்கக்  கூடினார்கள்.  {2Sam  10:15}

 

ஆதாரேசர்<Hadarezer>  நதிக்கு  அப்பாலிருந்த  சீரியரையும்<Syrians>  அழைத்தனுப்பினான்;  அவர்கள்  ஏலாமுக்கு<Helam>  வந்தார்கள்;  ஆதாரேசருடைய<Hadarezer>  படைத்தலைவனாகிய  சோபாக்<Shobach>  அவர்களுக்கு  முன்னாலே  சென்றான்.  {2Sam  10:16}

 

அது  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டபோது,  அவன்  இஸ்ரவேலையெல்லாம்<Israel>  கூட்டிக்கொண்டு,  யோர்தானைக்<Jordan>  கடந்து,  ஏலாமுக்குப்<Helam>  போனான்;  சீரியர்<Syrians>  தாவீதுக்கு<David>  எதிராக  இராணுவங்களை  அணிவகுத்து  நின்றார்கள்;  அவனோடு  யுத்தம்பண்ணுகிறபோது,  {2Sam  10:17}

 

சீரியர்<Syrians>  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாக  முறிந்தோடினார்கள்;  தாவீது<David>  சீரியரில்<Syrians>  எழுநூறு  இரதவீரரையும்  நாற்பதினாயிரம்  குதிரைவீரரையும்  கொன்று,  அவர்களுடைய  படைத்தலைவனாகிய  சோபாகையும்<Shobach>  சாகும்படி  வெட்டிப்போட்டான்.  {2Sam  10:18}

 

அப்பொழுது  ஆதாரேசரைச்<Hadarezer>  சேவிக்கிற  சகல  ராஜாக்களும்  தாங்கள்  இஸ்ரவேலுக்கு<Israel>  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டதைக்  கண்டு,  இஸ்ரவேலரோடே<Israel>  சமாதானம்பண்ணி,  அவர்களைச்  சேவித்தார்கள்.  அப்புறம்  அம்மோன்<Ammon>  புத்திரருக்கு  உதவிசெய்யச்  சீரியர்<Syrians>  பயப்பட்டார்கள்.  {2Sam  10:19}

 

மறுவருஷம்  ராஜாக்கள்  யுத்தத்திற்குப்  புறப்படுங்காலம்  வந்தபோது,  தாவீது<David>  யோவாபையும்<Joab>,  அவனோடேகூடத்  தன்  சேவகரையும்,  இஸ்ரவேல்<Israel>  அனைத்தையும்,  அம்மோன்<Ammon>  புத்திரரை  அழிக்கவும்,  ரப்பாவை<Rabbah>  முற்றிக்கைபோடவும்  அனுப்பினான்.  தாவீதோ<David>  எருசலேமில்<Jerusalem>  இருந்துவிட்டான்.  {2Sam  11:1}

 

ஒருநாள்  சாயங்காலத்தில்  தாவீது<David>  தன்  படுக்கையிலிருந்து  எழுந்து,  அரமனை  உப்பரிகையின்மேல்  உலாத்திக்கொண்டிருக்கும்போது,  ஸ்நானம்பண்ணுகிற  ஒரு  ஸ்திரீயை  உப்பரிகையின்மேலிருந்து  கண்டான்;  அந்த  ஸ்திரீ  வெகு  சௌந்தரவதியாயிருந்தாள்.  {2Sam  11:2}

 

அப்பொழுது  தாவீது<David>,  அந்த  ஸ்திரீ  யார்  என்று  விசாரிக்க  ஆள்  அனுப்பினான்;  அவள்  எலியாமின்<Eliam>  குமாரத்தியும்,  ஏத்தியனான<Hittite>  உரியாவின்<Uriah>  மனைவியுமாகிய  பத்சேபாள்<Bathsheba>  என்றார்கள்.  {2Sam  11:3}

 

அப்பொழுது  தாவீது<David>  ஆள்  அனுப்பி  அவளை  அழைத்துவரச்சொன்னான்;  அவள்  அவனிடத்தில்  வந்தபோது,  அவளோடே  சயனித்தான்;  பிற்பாடு  அவள்  தன்  தீட்டு  நீங்கும்படி  சுத்திகரித்துக்கொண்டு  தன்  வீட்டுக்குப்  போனாள்.  {2Sam  11:4}

 

அந்த  ஸ்திரீ  கர்ப்பம்  தரித்து,  தான்  கர்ப்பவதியென்று  தாவீதுக்கு<David>  அறிவிக்கும்படி  ஆள்  அனுப்பினாள்.  {2Sam  11:5}

 

அப்பொழுது  தாவீது<David>:  ஏத்தியனாகிய<Hittite>  உரியாவை<Uriah>  என்னிடத்தில்  அனுப்பு  என்று  யோவாபினண்டைக்கு<Joab>  ஆள்  அனுப்பினான்;  அப்படியே  யோவாப்<Joab>  உரியாவைத்<Uriah>  தாவீதினிடத்திற்கு<David>  அனுப்பினான்.  {2Sam  11:6}

 

உரியா<Uriah>  அவனிடத்தில்  வந்தபோது,  தாவீது<David>  அவனைப்  பார்த்து:  யோவாப்<Joab>  சுகமாயிருக்கிறானா,  ஜனங்கள்  சுகமாயிருக்கிறார்களா,  யுத்தத்தின்  செய்தி  நற்செய்தியா  என்று  விசாரித்தான்.  {2Sam  11:7}

 

பின்பு  தாவீது<David>  உரியாவை<Uriah>  நோக்கி:  நீ  உன்  வீட்டிற்குப்  போய்,  பாதசுத்தி  செய்  என்றான்;  உரியா<Uriah>  ராஜ  அரமனையிலிருந்து  புறப்பட்டபோது,  ராஜாவினிடத்திலிருந்து  உச்சிதமான  பதார்த்தங்கள்  அவன்  பின்னாலே  அனுப்பப்பட்டது.  {2Sam  11:8}

 

ஆனாலும்  உரியா<Uriah>  தன்  வீட்டிற்க்குப்போகாமல்,  ராஜ  அரமனையின்  வாசலிலே  தன்  ஆண்டவனுடைய  எல்லாச்  சேவகரோடுங்கூடப்  படுத்துக்கொண்டிருந்தான்.  {2Sam  11:9}

 

உரியா<Uriah>  தன்  வீட்டிற்குப்  போகவில்லையென்று  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டபோது,  தாவீது<David>  உரியாவை<Uriah>  நோக்கி:  நீ  பயணத்திலிருந்து  வந்தவன்  அல்லவா,  நீ  உன்  வீட்டிற்குப்  போகாதிருக்கிறது  என்ன  என்று  கேட்டான்.  {2Sam  11:10}

 

உரியா<Uriah>  தாவீதை<David>  நோக்கி:  பெட்டியும்  இஸ்ரவேலும்<Israel>  யூதாவும்<Judah>  கூடாரங்களிலே  தங்கி,  என்  ஆண்டவனாகிய  யோவாபும்<Joab>  என்  ஆண்டவனின்  சேவகரும்  வெளியிலே  பாளயமிறங்கியிருக்கையில்,  நான்  புசிக்கிறதற்கும்,  குடிக்கிறதற்கும்,  என்  மனைவியோடே  சயனிக்கிறதற்கும்,  என்  வீட்டுக்குள்  பிரவேசிப்பேனா?  நான்  அப்படிச்  செய்கிறதில்லை  என்று  உம்முடையபேரிலும்  உம்முடைய  ஆத்துமாவின்பேரிலும்  ஆணையிட்டுச்  சொல்லுகிறேன்  என்றான்.  {2Sam  11:11}

 

அப்பொழுது  தாவீது<David>  உரியாவை<Uriah>  நோக்கி:  இன்றைக்கும்  நீ  இங்கேயிரு;  நாளைக்கு  உன்னை  அனுப்பிவிடுவேன்  என்றான்;  அப்படியே  உரியா<Uriah>  அன்றும்  மறுநாளும்  எருசலேமில்<Jerusalem>  இருந்தான்.  {2Sam  11:12}

 

தாவீது<David>  அவனைத்  தனக்கு  முன்பாகப்  புசித்துக்  குடிக்கிறதற்கு  அழைத்து,  அவனை  வெறிக்கப்பண்ணினான்;  ஆனாலும்  அவன்  தன்  வீட்டுக்குப்  போகாமல்,  சாயங்காலத்திலே  தன்  ஆண்டவனின்  சேவகரோடே  தன்  படுக்கையிலே  படுத்துக்கொண்டான்.  {2Sam  11:13}

 

காலமே  தாவீது<David>  யோவாபுக்கு<Joab>  ஒரு  நிருபத்தை  எழுதி,  உரியாவின்<Uriah>  கையில்  கொடுத்து  அனுப்பினான்.  {2Sam  11:14}

 

அந்த  நிருபத்திலே:  மும்முரமாய்  நடக்கிற  போர்முகத்திலே  நீங்கள்  உரியாவை<Uriah>  நிறுத்தி,  அவன்  வெட்டுண்டு  சாகும்படிக்கு,  அவனை  விட்டுப்  பின்வாங்குங்கள்  என்று  எழுதியிருந்தான்.  {2Sam  11:15}

 

அப்படியே  யோவாப்<Joab>  அந்தப்  பட்டணத்தைச்  சூழக்  காவல்போட்டிருக்கையில்  பராக்கிரமசாலிகள்  இருக்கிறார்கள்  என்று  தான்  அறிந்த  இடத்தில்  உரியாவை<Uriah>  நிறுத்தினான்.  {2Sam  11:16}

 

பட்டணத்து  மனுஷர்  புறப்பட்டுவந்து  யோவாபோடே<Joab>  யுத்தம்பண்ணுகையில்,  தாவீதின்<David>  சேவகராகிய  ஜனத்தில்  சிலர்  பட்டார்கள்;  ஏத்தியனாகிய<Hittite>  உரியாவும்<Uriah>  செத்தான்.  {2Sam  11:17}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  அந்த  யுத்தத்தின்  செய்திகளையெல்லாம்  தாவீதுக்கு<David>  அறிவிக்க  ஆள்  அனுப்பி,  {2Sam  11:18}

 

தான்  அனுப்புகிற  ஆளை  நோக்கி:  நீ  யுத்தத்தின்  செய்திகளையெல்லாம்  ராஜாவுக்குச்  சொல்லித்  தீர்ந்தபோது,  {2Sam  11:19}

 

ராஜாவுக்குக்  கோபம்  எழும்பி,  அவர்:  நீங்கள்  பட்டணத்திற்கு  இத்தனை  கிட்டப்போய்  யுத்தம்பண்ணவேண்டியது  என்ன?  அலங்கத்தில்  நின்று  எய்வார்கள்  என்று  உங்களுக்குத்  தெரியாதா?  {2Sam  11:20}

 

எருப்பேசேத்தின்<Jerubbesheth>  குமாரன்  அபிமெலேக்கைக்<Abimelech>  கொன்றது  யார்?  தேபேசிலே<Thebez>  ஒரு  பெண்பிள்ளை  அலங்கத்திலிருந்து  ஒரு  ஏந்திரக்கல்லின்  துண்டை  அவன்மேல்  போட்டதினால்  அல்லவோ  அவன்  செத்தான்;  நீங்கள்  அலங்கத்திற்கு  இத்தனை  கிட்டப்போனது  என்ன  என்று  உன்னோடே  சொன்னால்,  அப்பொழுது  நீ,  உம்முடைய  சேவகனாகிய  உரியா<Uriah>  என்னும்  ஏத்தியனும்<Hittite>  செத்தான்  என்று  சொல்  என்றான்.  {2Sam  11:21}

 

அந்த  ஆள்  போய்,  உட்பிரவேசித்து,  யோவாப்<Joab>  தன்னிடத்தில்  சொல்லியனுப்பின  செய்திகளையெல்லாம்  தாவீதுக்கு<David>  அறிவித்து,  {2Sam  11:22}

 

தாவீதைப்<David>  பார்த்து:  அந்த  மனுஷர்  கைமிஞ்சி,  அவர்கள்  வெளியே  எங்களுக்கு  எதிராகப்  புறப்பட்டு  வந்தபோது,  நாங்கள்  பட்டணவாசல்மட்டும்  அவர்களைத்  துரத்தினோம்.  {2Sam  11:23}

 

அப்பொழுது  வில்வீரர்  அலங்கத்திலிருந்து  உம்முடைய  சேவகரின்மேல்  எய்ததினால்,  ராஜாவின்  சேவகரில்  சிலர்  செத்தார்கள்;  உம்முடைய  சேவகனாகிய  உரியா<Uriah>  என்னும்  ஏத்தியனும்<Hittite>  செத்தான்  என்றான்.  {2Sam  11:24}

 

அப்பொழுது  தாவீது<David>  அந்த  ஆளை  நோக்கி:  நீ  யோவாபினிடத்தில்<Joab>  போய்,  இந்தக்  காரியத்தைப்பற்றி  விசாரப்படவேண்டாம்;  பட்டயம்  ஒருவேளை  ஒருவனையும்,  ஒருவேளை  வேறொருவனையும்  பட்சிக்கும்;  நீ  யுத்தத்தைப்  பலக்கப்பண்ணி,  பட்டணத்தை  இடித்துப்போடு  என்று  அவனுக்குத்  திடஞ்சொல்  என்றான்.  {2Sam  11:25}

 

தன்  புருஷனாகிய  உரியா<Uriah>  செத்தான்  என்று  அவன்  மனைவி  கேள்விப்பட்டபோது,  அவள்  தன்  நாயகனுக்காக  இழவு  கொண்டாடினாள்.  {2Sam  11:26}

 

துக்கநாள்  சென்றபின்பு,  தாவீது<David>  அவளை  அழைத்தனுப்பி,  தன்  வீட்டிலே  சேர்த்துக்கொண்டான்;  அவள்  அவனுக்கு  மனைவியாகி,  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  தாவீது<David>  செய்த  இந்தக்  காரியம்  கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாததாயிருந்தது.  {2Sam  11:27}

 

கர்த்தர்  நாத்தானைத்<Nathan>  தாவீதினிடத்தில்<David>  அனுப்பினார்;  இவன்  அவனிடத்தில்  வந்து,  அவனை  நோக்கி:  ஒரு  பட்டணத்தில்  இரண்டு  மனுஷர்  இருந்தார்கள்,  ஒருவன்  ஐசுவரியவான்,  மற்றவன்  தரித்திரன்.  {2Sam  12:1}

 

ஐசுவரியவானுக்கு  ஆடுமாடுகள்  வெகு  திரளாயிருந்தது.  {2Sam  12:2}

 

தரித்திரனுக்கோ  தான்  கொண்டு  வளர்த்த  ஒரே  ஒரு  சின்ன  ஆட்டுக்குட்டியைத்தவிர  வேறொன்றும்  இல்லாதிருந்தது;  அது  அவனோடும்  அவன்  பிள்ளைகளோடுங்கூட  இருந்து  வளர்ந்து,  அவன்  வாயின்  அப்பத்தைத்  தின்று,  அவன்  பாத்திரத்திலே  குடித்து,  அவன்  மடியிலே  படுத்துக்கொண்டு,  அவனுக்கு  ஒரு  மகளைப்போல  இருந்தது.  {2Sam  12:3}

 

அந்த  ஐசுவரியவானிடத்தில்  வழிப்போக்கன்  ஒருவன்  வந்தான்;  அவன்  தன்னிடத்தில்  வந்த  வழிப்போக்கனுக்குச்  சமையல்  பண்ணுவிக்க,  தன்னுடைய  ஆடுமாடுகளில்  ஒன்றைப்  பிடிக்க  மனதில்லாமல்,  அந்தத்  தரித்திரனுடைய  ஆட்டுக்குட்டியைப்  பிடித்து,  அதைத்  தன்னிடத்தில்  வந்த  மனுஷனுக்குச்  சமையல்  பண்ணுவித்தான்  என்றான்.  {2Sam  12:4}

 

அப்பொழுது  தாவீது<David>:  அந்த  மனுஷன்மேல்  மிகவும்  கோபமூண்டவனாகி,  நாத்தானைப்<Nathan>  பார்த்து:  இந்தக்  காரியத்தைச்  செய்த  மனுஷன்  மரணத்திற்குப்  பாத்திரன்  என்று  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {2Sam  12:5}

 

அவன்  இரக்கமற்றவனாயிருந்து,  இந்தக்  காரியத்தைச்  செய்தபடியினால்,  அந்த  ஆட்டுக்குட்டிக்காக  நாலத்தனை  திரும்பச்  செலுத்தவேண்டும்  என்றான்.  {2Sam  12:6}

 

அப்பொழுது  நாத்தான்<Nathan>  தாவீதை<David>  நோக்கி:  நீயே  அந்த  மனுஷன்;  இஸ்ரவேலின்<Israel>  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  நான்  உன்னை  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவாக  அபிஷேகம்பண்ணி,  உன்னைச்  சவுலின்<Saul>  கைக்குத்  தப்புவித்து,  {2Sam  12:7}

 

உன்  ஆண்டவனுடைய  வீட்டை  உனக்குக்  கொடுத்து,  உன்  ஆண்டவனுடைய  ஸ்திரீகளையும்  உன்  மடியிலே  தந்து,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தையும்,  யூதா<Judah>  வம்சத்தையும்  உனக்குக்  கையளித்தேன்;  இது  போதாதிருந்தால்,  இன்னும்  உனக்கு  வேண்டியதைத்  தருவேன்.  {2Sam  12:8}

 

கர்த்தருடைய  பார்வைக்குப்  பொல்லாப்பான  இந்தக்  காரியத்தைச்  செய்து,  அவருடைய  வார்த்தையை  நீ  அசட்டைபண்ணினது  என்ன?  ஏத்தியனாகிய<Hittite>  உரியாவை<Uriah>  நீ  பட்டயத்தால்  மடிவித்து,  அவன்  மனைவியை  உனக்கு  மனைவியாக  எடுத்துக்கொண்டு,  அவனை  அம்மோன்<Ammon>  புத்திரரின்  பட்டயத்தாலே  கொன்றுபோட்டாய்.  {2Sam  12:9}

 

இப்போதும்  நீ  என்னை  அசட்டைபண்ணி,  ஏத்தியனாகிய<Hittite>  உரியாவின்<Uriah>  மனைவியை  உனக்கு  மனைவியாக  எடுத்துக்கொண்டபடியினால்,  பட்டயம்  என்றைக்கும்  உன்  வீட்டைவிட்டு  விலகாதிருக்கும்.  {2Sam  12:10}

 

கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  உன்  வீட்டிலே  பொல்லாப்பை  உன்மேல்  எழும்பப்பண்ணி,  உன்  கண்கள்  பார்க்க,  உன்  ஸ்திரீகளை  எடுத்து,  உனக்கு  அடுத்தவனுக்குக்  கொடுப்பேன்;  அவன்  இந்தச்  சூரியனுடைய  வெளிச்சத்திலே  உன்  ஸ்திரீகளோடே  சயனிப்பான்.  {2Sam  12:11}

 

நீ  ஒளிப்பிடத்தில்  அதைச்  செய்தாய்;  நானோ  இந்தக்  காரியத்தை  இஸ்ரவேலர்<Israel>  எல்லாருக்கு  முன்பாகவும்,  சூரியனுக்கு  முன்பாகவும்  செய்விப்பேன்  என்றார்  என்று  சொன்னான்.  {2Sam  12:12}

 

அப்பொழுது  தாவீது<David>  நாத்தானிடத்தில்<Nathan>:  நான்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தேன்  என்றான்.  நாத்தான்<Nathan>  தாவீதை<David>  நோக்கி:  நீ  சாகாதபடிக்கு,  கர்த்தர்  உன்  பாவம்  நீங்கச்செய்தார்.  {2Sam  12:13}

 

ஆனாலும்  இந்தக்  காரியத்தினாலே  கர்த்தருடைய  சத்துருக்கள்  தூஷிக்க  நீ  காரணமாயிருந்தபடியினால்,  உனக்குப்  பிறந்த  பிள்ளை  நிச்சயமாய்ச்  சாகும்  என்று  சொல்லி,  நாத்தான்<Nathan>  தன்  வீட்டுக்குப்  போய்விட்டான்.  {2Sam  12:14}

 

அப்பொழுது  கர்த்தர்  உரியாவின்<Uriah>  மனைவி  தாவீதுக்குப்<David>  பெற்ற  ஆண்பிள்ளையை  அடித்தார்;  அது  வியாதிப்பட்டுக்  கேவலமாயிருந்தது.  {2Sam  12:15}

 

அப்பொழுது  தாவீது<David>  அந்தப்  பிள்ளைக்காகத்  தேவனிடத்தில்  பிரார்த்தனைபண்ணி,  உபவாசித்து,  உள்ளே  போய்,  இராமுழுதும்  தரையிலே  கிடந்தான்.  {2Sam  12:16}

 

அவனைத்  தரையிலிருந்து  எழுந்திருக்கப்பண்ண,  அவன்  வீட்டிலுள்ள  மூப்பரானவர்கள்  எழுந்து,  அவனண்டையில்  வந்தாலும்,  அவன்  மாட்டேன்  என்று  சொல்லி,  அவர்களோடே  அப்பம்  சாப்பிடாமல்  இருந்தான்.  {2Sam  12:17}

 

ஏழாம்நாளில்,  பிள்ளை  செத்துப்போயிற்று.  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  தாவீதின்<David>  ஊழியக்காரர்  அவனுக்கு  அறிவிக்க  ஐயப்பட்டார்கள்:  பிள்ளை  உயிரோடிருக்கையில்,  நாம்  அவரோடே  பேசுகிறபோது,  அவர்  நம்முடைய  சொற்கேட்கவில்லை;  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  அவரோடே  எப்படிச்  சொல்லுவோம்?  அதிகமாக  வியாகுலப்படுவாரே  என்று  பேசிக்கொண்டார்கள்.  {2Sam  12:18}

 

தாவீது<David>  தன்  ஊழியக்காரர்  இரகசியமாய்ப்  பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு,  பிள்ளை  செத்துப்போயிற்று  என்று  அறிந்து,  தன்  ஊழியக்காரரை  நோக்கி:  பிள்ளை  செத்துப்போயிற்றோ  என்று  கேட்டான்;  செத்துப்போயிற்று  என்றார்கள்.  {2Sam  12:19}

 

அப்பொழுது  தாவீது<David>  தரையைவிட்டு  எழுந்து,  ஸ்நானம்பண்ணி,  எண்ணெய்  பூசிக்கொண்டு,  தன்  வஸ்திரங்களை  மாற்றி,  கர்த்தருடைய  ஆலயத்தில்  பிரவேசித்து,  பணிந்துகொண்டு,  தன்  வீட்டுக்குவந்து,  போஜனம்  கேட்டான்;  அவன்  முன்னே  அதை  வைத்தபோது  புசித்தான்.  {2Sam  12:20}

 

அப்பொழுது  அவன்  ஊழியக்காரர்  அவனை  நோக்கி:  நீர்  செய்கிற  இந்தக்  காரியம்  என்ன?  பிள்ளை  உயிரோடிருக்கையில்  உபவாசித்து  அழுதீர்;  பிள்ளை  மரித்த  பின்பு,  எழுந்திருந்து  அசனம்பண்ணுகிறீரே  என்றார்கள்.  {2Sam  12:21}

 

அதற்கு  அவன்:  பிள்ளை  இன்னும்  உயிரோடிருக்கையில்,  பிள்ளை  பிழைக்கும்படிக்குக்  கர்த்தர்  எனக்கு  இரங்குவாரோ,  எப்படியோ,  யாருக்குத்  தெரியும்  என்று  உபவாசித்து  அழுதேன்.  {2Sam  12:22}

 

அது  மரித்திருக்கிற  இப்போது  நான்  உபவாசிக்கவேண்டியது  என்ன?  இனி  நான்  அதைத்  திரும்பிவரப்பண்ணக்கூடுமோ?  நான்  அதினிடத்துக்குப்  போவேனே  அல்லாமல்,  அது  என்னிடத்துக்குத்  திரும்பி  வரப்போகிறது  இல்லை  என்றான்.  {2Sam  12:23}

 

பின்பு  தாவீது<David>  தன்  மனைவியாகிய  பத்சேபாளுக்கு<Bathsheba>  ஆறுதல்  சொல்லி,  அவளிடத்தில்  போய்,  அவளோடே  சயனித்தான்;  அவள்  ஒரு  குமாரனைப்  பெற்றாள்;  அவனுக்குச்  சாலொமோன்<Solomon>  என்று  பேரிட்டான்;  அவனிடத்தில்  கர்த்தர்  அன்பாயிருந்தார்.  {2Sam  12:24}

 

அவர்  தீர்க்கதரிசியாகிய  நாத்தானை<Nathan>  அனுப்ப,  அவன்  கர்த்தரின்  நிமித்தம்  அவனுக்கு  யெதிதியா<Jedidiah>  என்று  பேரிட்டான்.  {2Sam  12:25}

 

அதற்குள்ளே  யோவாப்<Joab>  அம்மோன்<Ammon>  புத்திரருடைய  ரப்பாபட்டணத்தின்மேல்<Rabbah>  யுத்தம்பண்ணி,  ராஜதானியைப்  பிடித்து,  {2Sam  12:26}

 

தாவீதினிடத்தில்<David>  ஆள்  அனுப்பி,  நான்  ரப்பாவின்மேல்<Rabbah>  யுத்தம்பண்ணி,  தண்ணீர்  ஓரமான  பட்டணத்தைப்  பிடித்துக்கொண்டேன்.  {2Sam  12:27}

 

நான்  பட்டணத்தைப்  பிடிக்கிறதினால்,  என்  பேர்  வழங்காதபடிக்கு,  நீர்  மற்ற  ஜனங்களைக்  கூட்டிக்கொண்டுவந்து,  பட்டணத்தை  முற்றிக்கைபோட்டு,  பிடிக்கவேண்டும்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  12:28}

 

அப்படியே  தாவீது<David>  ஜனங்களையெல்லாம்  கூட்டிக்கொண்டு,  ரப்பாவுக்குப்போய்<Rabbah>,  அதின்மேல்  யுத்தம்பண்ணி,  அதைப்  பிடித்தான்.  {2Sam  12:29}

 

அவர்களுடைய  ராஜாவின்  தலைமேலிருந்த  கிரீடத்தை  எடுத்துக்கொண்டான்;  அது  ஒரு  தாலந்து  நிறைபொன்னும்,  இரத்தினங்கள்  பதித்ததுமாயிருந்தது;  அது  தாவீதினுடைய<David>  தலையில்  வைக்கப்பட்டது;  பட்டணத்திலிருந்து  ஏராளமான  கொள்ளையைக்  கொண்டுபோனான்.  {2Sam  12:30}

 

பின்பு  அதிலிருந்த  ஜனங்களை  அவன்  வெளியே  கொண்டுபோய்,  அவர்களை  வாள்களுக்கும்,  இருப்புப்  பாரைகளுக்கும்,  இருப்புக்  கோடரிகளுக்கும்  உட்படுத்தி,  அவர்களைச்  செங்கற்சூளையையும்  கடக்கப்பண்ணினான்;  இப்படி  அம்மோன்<Ammon>  புத்திரரின்  பட்டணங்களுக்கெல்லாம்  செய்து,  தாவீது<David>  எல்லா  ஜனத்தோடுங்கூட  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பினான்.  {2Sam  12:31}

 

இதற்குப்பின்பு  தாவீதின்<David>  குமாரனாகிய  அப்சலோமுக்குத்<Absalom>  தாமார்<Tamar>  என்னும்  பேருள்ள  சவுந்தரியமுள்ள  ஒரு  சகோதரி  இருந்தாள்;  அவள்மேல்  தாவீதின்<David>  குமாரன்  அம்னோன்<Amnon>  மோகங்கொண்டான்.  {2Sam  13:1}

 

தன்  சகோதரியாகிய  தாமாரினிமித்தம்<Tamar>  ஏக்கங்கொண்டு  வியாதிப்பட்டான்;  அவள்  கன்னியாஸ்திரீயாயிருந்தாள்;  அவளுக்குப்  பொல்லாப்புச்  செய்ய,  அம்னோனுக்கு<Amnon>  வருத்தமாய்க்  கண்டது.  {2Sam  13:2}

 

அம்னோனுக்குத்<Amnon>  தாவீதுடைய<David>  தமையன்  சிமியாவின்<Shimeah>  குமாரனாகிய  யோனதாப்<Jonadab>  என்னும்  பேருள்ள  ஒரு  சிநேகிதன்  இருந்தான்;  அந்த  யோனதாப்<Jonadab>  மகா  தந்திரவாதி.  {2Sam  13:3}

 

அவன்  இவனைப்  பார்த்து:  ராஜகுமாரனாகிய  நீ,  நாளுக்குநாள்  எதினாலே  இப்படி  மெலிந்துபோகிறாய்,  எனக்குச்  சொல்லமாட்டாயா  என்றான்.  அதற்கு  அம்னோன்<Amnon>:  என்  சகோதரன்  அப்சலோமின்<Absalom>  சகோதரியாகிய  தாமாரின்மேல்<Tamar>  நான்  ஆசைவைத்திருக்கிறேன்  என்றான்.  {2Sam  13:4}

 

அப்பொழுது  யோனதாப்<Jonadab>  அவனைப்பார்த்து:  நீ  வியாதிக்காரனைப்போல  உன்  படுக்கையின்மேல்  படுத்துக்கொள்;  உன்னைப்  பார்க்கிறதற்கு  உன்  தகப்பனார்  வரும்போது,  நீ,  என்  சகோதரியாகிய  தாமார்<Tamar>  வந்து,  எனக்குப்  போஜனம்கொடுத்து,  அவள்  கையினாலே  சாப்பிடும்படிக்கு  நான்  பார்க்க,  என்  கண்களுக்கு  முன்பாகச்  சமைக்கும்படி  தயவுசெய்யவேண்டும்  என்று  சொல்  என்றான்.  {2Sam  13:5}

 

அப்படியே  அம்னோன்<Amnon>  வியாதிக்காரன்போல்  படுத்துக்கொண்டு,  ராஜா  தன்னைப்  பார்க்கவந்தபோது,  ராஜாவை  நோக்கி:  என்  சகோதரியாகிய  தாமார்<Tamar>  வந்து  நான்  அவள்  கையினாலே  சாப்பிடும்படிக்கு,  என்  கண்களுக்கு  முன்பாக  இரண்டு  நல்ல  பணியாரங்களைப்  பண்ணும்படி  உத்தரவு  கொடுக்கவேண்டும்  என்றான்.  {2Sam  13:6}

 

அப்பொழுது  தாவீது<David>:  வீட்டுக்குத்  தாமாரிடத்தில்<Tamar>  ஆள்  அனுப்பி,  நீ  உன்  சகோதரனாகிய  அம்னோன்<Amnon>  வீட்டுக்குப்  போய்,  அவனுக்குச்  சமையல்  பண்ணிக்கொடு  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  13:7}

 

தாமார்<Tamar>  தன்  சகோதரனாகிய  அம்னோன்<Amnon>  படுத்துக்கொண்டிருக்கிற  வீட்டுக்குப்  போய்,  மாவெடுத்துப்  பிசைந்து,  அவன்  கண்களுக்கு  முன்பாகத்  தட்டி,  பணியாரங்களைச்  சுட்டு,  {2Sam  13:8}

 

சட்டியை  எடுத்து,  அவனுக்கு  முன்பாக  அவைகளை  வைத்தாள்;  ஆனாலும்  அவன்  சாப்பிடமாட்டேன்  என்றான்;  பின்பு  அம்னோன்<Amnon>:  எல்லாரும்  என்னைவிட்டு  வெளியே  போகட்டும்  என்றான்;  எல்லாரும்  அவனை  விட்டு  வெளியே  போனார்கள்.  {2Sam  13:9}

 

அப்பொழுது  அம்னோன்<Amnon>  தாமாரைப்<Tamar>  பார்த்து:  நான்  உன்  கையினாலே  சாப்பிடும்படிக்கு,  அந்தப்  பலகாரத்தை  அறைவீட்டிலே  கொண்டுவா  என்றான்;  அப்படியே  தாமார்<Tamar>  தான்  செய்த  பணியாரங்களை  அறைவீட்டில்  இருக்கிற  தன்  சகோதரனாகிய  அம்னோனிடத்தில்<Amnon>  கொண்டு  போனாள்.  {2Sam  13:10}

 

அவன்  சாப்பிடும்படிக்கு  அவள்  அவைகளைக்  கிட்ட  கொண்டுவருகையில்,  அவன்  அவளைப்  பிடித்து,  அவளைப்  பார்த்து:  என்  சகோதரியே,  நீ  வந்து  என்னோடே  சயனி  என்றான்.  {2Sam  13:11}

 

அதற்கு  அவள்:  வேண்டாம்,  என்  சகோதரனே,  என்னை  அவமானப்படுத்தாதே,  இஸ்ரவேலிலே<Israel>  இப்படிச்  செய்யத்தகாது;  இப்படிப்பட்ட  மதிகேடான  காரியத்தைச்  செய்யவேண்டாம்.  {2Sam  13:12}

 

நான்  என்  வெட்கத்தோடே  எங்கே  போவேன்?  நீயும்  இஸ்ரவேலிலே<Israel>  மதிகெட்டவர்களில்  ஒருவனைப்போல  ஆவாய்;  இப்போதும்  நீ  ராஜாவோடே  பேசு,  அவர்  என்னை  உனக்குத்  தராமல்  மறுக்கமாட்டார்  என்றாள்.  {2Sam  13:13}

 

அவன்  அவள்  சொல்லைக்  கேட்கமாட்டேன்  என்று  அவளைப்  பலவந்தமாய்ப்  பிடித்து,  அவளோடே  சயனித்து,  அவளைக்  கற்பழித்தான்.  {2Sam  13:14}

 

பிற்பாடு  அம்னோன்<Amnon>  அவளை  மிகவும்  வெறுத்தான்;  அவன்  அவளை  விரும்பின  விருப்பத்தைப்  பார்க்கிலும்,  அவளை  வெறுத்த  வெறுப்பு  அதிகமாயிருந்தது.  ஆகையால்:  நீ  எழுந்து  போய்விடு  என்று  அம்னோன்<Amnon>  அவளோடே  சொன்னான்.  {2Sam  13:15}

 

அப்பொழுது  அவள்:  நீ  எனக்கு  முந்தி  செய்த  அநியாயத்தைப்பார்க்கிலும்,  இப்பொழுது  என்னைத்  துரத்திவிடுகிற  அந்த  அநியாயம்  கொடுமையாயிருக்கிறது  என்றாள்;  ஆனாலும்  அவன்  அவள்  சொல்லைக்  கேட்க  மனதில்லாமல்,  {2Sam  13:16}

 

தன்னிடத்தில்  சேவிக்கிற  தன்  வேலைக்காரனைக்  கூப்பிட்டு:  நீ  இவளை  என்னை  விட்டு  வெளியே  தள்ளி,  கதவைப்  பூட்டு  என்றான்.  {2Sam  13:17}

 

அப்படியே  அவனிடத்தில்  சேவிக்கிறவன்  அவளை  வெளியே  தள்ளி,  கதவைப்  பூட்டினான்;  அவள்  பலவருணமான  வஸ்திரத்தை  உடுத்திக்கொண்டிருந்தாள்;  ராஜகுமாரத்திகளாகிய  கன்னிகைகள்  இப்படிக்கொத்த  சால்வைகளைத்  தரித்துக்கொள்வார்கள்.  {2Sam  13:18}

 

அப்பொழுது  தாமார்<Tamar>:  தன்  தலையின்மேல்  சாம்பலை  வாரிப்  போட்டுக்கொண்டு,  தான்  தரித்திருந்த  பலவருணமான  வஸ்திரத்தைக்  கிழித்து,  தன்  கையைத்  தன்  தலையின்மேல்  வைத்து,  சத்தமிட்டு  அழுதுகொண்டுபோனாள்.  {2Sam  13:19}

 

அப்பொழுது  அவள்  சகோதரனாகிய  அப்சலோம்<Absalom>  அவளைப்  பார்த்து:  உன்  சகோதரனாகிய  அம்னோன்<Amnon>  உன்னோடிருந்தானோ?  இப்போதும்  என்  சகோதரியே,  நீ  மவுனமாயிரு;  அவன்  உன்னுடைய  சகோதரன்;  இந்தக்  காரியத்தை  உன்  மனதிலே  வைக்காதே  என்றான்;  அப்படியே  தாமார்<Tamar>  தன்  சகோதரனாகிய  அப்சலோமின்<Absalom>  வீட்டில்  தனித்துக்  கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.  {2Sam  13:20}

 

தாவீதுராஜா<David>  இந்தச்  செய்திகளையெல்லாம்  கேள்விப்பட்டபோது,  வெகுகோபமாயெரிந்தான்.  {2Sam  13:21}

 

அப்சலோம்<Absalom>  அம்னோனோடே<Amnon>  நன்மையாகிலும்  தீமையாகிலும்  பேசவில்லை;  தன்  சகோதரியாகிய  தாமாரை<Tamar>  அம்னோன்<Amnon>  கற்பழித்த  காரியத்தினிமித்தம்  அப்சலோம்<Absalom>  அவனைப்  பகைத்தான்.  {2Sam  13:22}

 

இரண்டு  வருஷம்  சென்றபின்பு,  அப்சலோம்<Absalom>  எப்பிராயீமுக்குச்<Ephraim>  சமீபமான  பாலாத்சோரிலே<Baalhazor>  ஆட்களை  வைத்து,  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிற  வேலையில்  இருந்தான்;  அங்கே  ராஜகுமாரர்  எல்லாரையும்  விருந்துக்கு  அழைத்தான்.  {2Sam  13:23}

 

அவன்  ராஜாவினிடத்தில்  போய்,  ஆட்களை  வைத்து  ஆடுகளை  மயிர்கத்தரிக்கிறேன்;  ராஜாவும்  அவருடைய  ஊழியக்காரரும்  உமது  அடியானோடே  வரும்படி  வேண்டிக்கொள்ளுகிறேன்  என்றான்.  {2Sam  13:24}

 

ராஜா  அப்சலோமைப்<Absalom>  பார்த்து:  அப்படி  வேண்டாம்,  என்  மகனே;  நாங்கள்  எல்லாரும்  வருவோமாகில்  உனக்கு  வெகு  செலவுண்டாகும்  என்றான்;  அவனை  வருந்திக்கேட்டாலும்,  அவன்  போக  மனதில்லாமல்,  அவனை  ஆசீர்வதித்தான்.  {2Sam  13:25}

 

அப்பொழுது  அப்சலோம்<Absalom>:  அது  கூடாதிருந்தால்,  என்  சகோதரனாகிய  அம்னோனாவது<Amnon>  எங்களோடே  வரும்படி  அவனுக்கு  உத்தரவு  செய்யும்  என்றான்.  அதற்கு  ராஜா:  அவன்  உன்னோடே  வரவேண்டியது  என்ன  என்றான்.  {2Sam  13:26}

 

அப்சலோம்<Absalom>  பின்னையும்  அவனை  வருந்திக்  கேட்டுக்கொண்டபடியினால்,  அவன்  அம்னோனையும்<Amnon>,  ராஜாவின்  குமாரர்  அனைவரையும்  அவனோடே  போகவிட்டான்.  {2Sam  13:27}

 

அப்சலோம்<Absalom>  தன்  வேலைக்காரரை  நோக்கி:  அம்னோன்<Amnon>  திராட்சரசம்  குடித்துக்  களித்திருக்கும்  சமயத்தை  நன்றாய்ப்  பார்த்திருங்கள்;  அப்பொழுது  நான்:  அம்னோனை<Amnon>  அடியுங்கள்  என்று  சொல்லுவேன்;  உடனே  நீங்கள்  பயப்படாமல்  அவனைக்  கொன்றுபோடுங்கள்;  நான்  அல்லவோ  அதை  உங்களுக்குக்  கட்டளையிடுகிறேன்;  திடன்கொண்டு  தைரியமாயிருங்கள்  என்று  சொல்லியிருந்தான்.  {2Sam  13:28}

 

அப்சலோம்<Absalom>  கற்பித்தபடியே  அப்சலோமின்<Absalom>  வேலைக்காரர்  அம்னோனுக்குச்<Amnon>  செய்தார்கள்;  அப்பொழுது  ராஜகுமாரர்  எல்லாரும்  எழுந்திருந்து,  அவரவர்  தம்தம்  கோவேறு  கழுதையின்மேல்  ஏறி  ஓடிப்போனார்கள்.  {2Sam  13:29}

 

அவர்கள்  வழியில்  இருக்கிறபோதே,  அப்சலோம்<Absalom>  ராஜகுமாரரையெல்லாம்  அடித்துக்  கொன்றுபோட்டான்,  அவர்களில்  ஒருவரும்  மீந்திருக்க  விடவில்லை  என்கிறதாய்,  தாவீதுக்குச்<David>  செய்தி  வந்தது.  {2Sam  13:30}

 

அப்பொழுது  ராஜா  எழுந்திருந்து,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  தரையிலே  விழுந்துகிடந்தான்;  அவன்  ஊழியக்காரர்  எல்லாரும்  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு  நின்றார்கள்.  {2Sam  13:31}

 

அப்பொழுது  தாவீதின்<David>  தமையனாகிய  சிமியாவின்<Shimeah>  குமாரன்  யோனதாப்<Jonadab>  வந்து:  ராஜகுமாரரான  வாலிபரையெல்லாம்  கொன்றுபோட்டார்கள்  என்று  என்  ஆண்டவன்  நினைக்கவேண்டாம்;  அம்னோன்மாத்திரம்<Amnon>  செத்துப்போனான்;  அவன்  தன்  சகோதரியாகிய  தாமாரைக்<Tamar>  கற்பழித்த  நாள்முதற்கொண்டு,  அது  அப்சலோமின்<Absalom>  நெஞ்சில்  இருந்தது.  {2Sam  13:32}

 

இப்போதும்  ராஜகுமாரர்கள்  எல்லாரும்  செத்தார்கள்  என்கிற  பேச்சை  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தம்முடைய  மனதிலே  வைக்கவேண்டாம்;  அம்னோன்<Amnon>  ஒருவனே  செத்தான்  என்றான்;  அப்சலோம்<Absalom>  ஓடிப்போனான்.  {2Sam  13:33}

 

ஜாமக்காரச்  சேவகன்  தன்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  அநேகம்  ஜனங்கள்  தனக்குப்  பின்னாலே  மலை  ஓரமாய்  வருகிறதைக்  கண்டான்.  {2Sam  13:34}

 

அப்பொழுது  யோனதாப்<Jonadab>  ராஜாவைப்  பார்த்து:  இதோ,  ராஜகுமாரர்  வருகிறார்கள்;  உமது  அடியேன்  சொன்னபடியே  ஆயிற்று  என்றான்.  {2Sam  13:35}

 

அவன்  பேசி  முடிந்தபோது,  ராஜகுமாரர்  வந்து,  சத்தமிட்டு  அழுதார்கள்;  ராஜாவும்  அவனுடைய  எல்லா  ஊழியக்காரரும்  மிகவும்  புலம்பி  அழுதார்கள்.  {2Sam  13:36}

 

அப்சலோமோ<Absalom>  அம்மியூதின்<Ammihud>  குமாரனாகிய  தல்மாய்<Talmai>  என்னும்  கேசூரின்<Geshur>  ராஜாவினிடத்திற்கு  ஓடிப்போனான்.  தாவீது<David>  தினந்தோறும்  தன்  குமாரனுக்காகத்  துக்கித்துக்கொண்டிருந்தான்.  {2Sam  13:37}

 

அப்சலோம்<Absalom>  கேசூருக்கு<Geshur>  ஓடிப்போய்,  அங்கே  மூன்று  வருஷம்  இருந்தான்.  {2Sam  13:38}

 

தாவீதுராஜா<David>  அம்னோன்<Amnon>  செத்தபடியினால்,  அவனுக்காகத்  துக்கித்து  ஆறுதல்  அடைந்தபோது  அப்சலோமைப்<Absalom>  பின்தொடரும்  நினைவை  விட்டுவிட்டான்.  {2Sam  13:39}

 

ராஜாவின்  இருதயம்  அப்சலோமின்மேல்<Absalom>  இன்னும்  தாங்கலாயிருக்கிறதைச்  செரூயாவின்<Zeruiah>  குமாரன்  யோவாப்<Joab>  கண்டு,  {2Sam  14:1}

 

அவன்  தெக்கோவாவிலிருக்கிற<Tekoah>  புத்தியுள்ள  ஒரு  ஸ்திரீயை  அழைத்து:  நீ  இழவு  கொண்டாடுகிறவளைப்போல,  துக்கவஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  எண்ணெய்  பூசிக்கொள்ளாமல்,  இறந்துபோனவனுக்காக  நெடுநாள்  துக்கிக்கிற  ஸ்திரீயைப்போலக்  காண்பித்து,  {2Sam  14:2}

 

ராஜாவினிடத்தில்  போய்,  அவரை  நோக்கி:  இன்ன  இன்ன  பிரகாரமாகச்  சொல்  என்று  அவள்  சொல்லவேண்டிய  வார்த்தைகளை  யோவாப்<Joab>  அவள்  வாயிலே  போட்டான்.  {2Sam  14:3}

 

அப்படியே  தெக்கோவா<Tekoah>  ஊராளான  அந்த  ஸ்திரீ  ராஜாவோடே  பேசப்போய்,  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கி:  ராஜாவே,  இரட்சியும்  என்றாள்.  {2Sam  14:4}

 

ராஜா  அவளைப்  பார்த்து:  உனக்கு  என்ன  வேண்டும்  என்றதற்கு,  அவள்:  நான்  விதவையானவள்,  என்  புருஷன்  சென்றுபோனான்.  {2Sam  14:5}

 

உமது  அடியாளுக்கு  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்;  அவர்கள்  இருவரும்  வெளியிலே  சண்டைபண்ணி,  அவர்களை  விலக்க  ஒருவரும்  இல்லாதபடியினால்,  ஒருவன்  மற்றவனை  அடித்துக்  கொன்றுபோட்டான்.  {2Sam  14:6}

 

வம்சத்தார்  எல்லாரும்  உம்முடைய  அடியாளுக்கு  விரோதமாய்  எழும்பி,  தன்  சகோதரனைக்  கொன்றுபோட்டவனை  ஒப்பி;  அவன்  கொன்ற  அவன்  சகோதரனுடைய  பிராணனுக்காக  நாங்கள்  அவனைக்  கொன்றுபோடுவோம்;  சுதந்தரவாளனாயினும்  அவனையும்  அழித்துப்போடுவோம்  என்கிறார்கள்.  இப்படி  என்  புருஷனுக்குப்  பேரும்  நீதியும்  பூமியின்மேல்  வைக்கப்படாதபடிக்கு,  எனக்கு  இன்னும்  மீதியாயிருக்கிற  பொறியையும்  அவித்துப்போட  மனதாயிருக்கிறார்கள்  என்றாள்.  {2Sam  14:7}

 

ராஜா  அந்த  ஸ்திரீயைப்  பார்த்து:  நீ  உன்  வீட்டுக்குப்  போ,  உன்  காரியத்தைக்குறித்து  உத்தரவு  கொடுப்பேன்  என்றான்.  {2Sam  14:8}

 

பின்னும்  அந்தத்  தெக்கோவாவூர்<Tekoah>  ஸ்திரீ  ராஜாவைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  ராஜாவின்மேலும்  அவர்  சிங்காசனத்தின்மேலும்  குற்றமில்லாதபடிக்கு,  அந்தப்  பழி  என்மேலும்  என்  தகப்பன்  வீட்டின்மேலும்  சுமரக்கடவது  என்றாள்.  {2Sam  14:9}

 

அதற்கு  ராஜா:  உனக்கு  விரோதமாகப்  பேசுகிறவனை  என்னிடத்தில்  கொண்டுவா;  அப்பொழுது  அவன்  இனி  உன்னைத்  தொடாதிருப்பான்  என்றான்.  {2Sam  14:10}

 

பின்னும்  அவள்:  இரத்தப்பழி  வாங்குகிறவர்கள்  அழிம்புசெய்து,  என்  குமாரனை  அதம்பண்ணப்  பெருகிப்போகாதபடிக்கு,  ராஜாவானவர்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  நினைப்பாராக  என்றாள்.  அதற்கு  ராஜா:  உன்  குமாரனுடைய  மயிரில்  ஒன்றாவது  தரையில்  விழுவதில்லை  என்று  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {2Sam  14:11}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  உமது  அடியாள்  ஒரு  வார்த்தைசொல்ல  உத்தரவாக  வேண்டும்  என்றாள்.  அவன்:  சொல்லு  என்றான்.  {2Sam  14:12}

 

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  பின்னை  ஏன்  தேவனுடைய  ஜனத்திற்கு  விரோதமாய்  இப்படிப்பட்ட  நினைவை  நீர்  கொண்டிருக்கிறீர்,  துரத்துண்ட  தம்முடையவனை  ராஜா  திரும்ப  அழைக்காததினாலே,  ராஜா  இப்பொழுது  சொன்ன  வார்த்தையினால்  குற்றமுள்ளவரைப்போல்  இருக்கிறார்.  {2Sam  14:13}

 

நாம்  மரிப்பது  நிச்சயம்,  திரும்பச்  சேர்க்கக்கூடாதபடிக்கு,  தரையிலே  சுவறுகிற  தண்ணீரைப்போல்  இருக்கிறோம்;  தேவன்  ஜீவனை  எடுத்துக்கொள்ளாமல்,  துரத்துண்டவன்  முற்றிலும்  தம்மைவிட்டு  விலக்கப்படாதிருக்கும்  நினைவுகளை  நினைக்கிறார்.  {2Sam  14:14}

 

இப்போதும்  நான்  என்  ஆண்டவனாகிய  ராஜாவோடே  இந்த  வார்த்தையைப்  பேசவந்த  முகாந்தரம்  என்னவென்றால்:  ஜனங்கள்  எனக்குப்  பயமுண்டாக்கினதினால்,  நான்  ராஜாவோடே  பேசவந்தேன்;  ஒருவேளை  ராஜா  தமது  அடியாளுடைய  வார்த்தையின்படி  செய்வார்  என்று  உமது  அடியாளாகிய  நான்  நினைத்ததினாலும்  வந்தேனே  ஒழிய  வேறில்லை.  {2Sam  14:15}

 

என்னையும்  என்  குமாரனையும்  ஏகமாய்த்  தேவனுடைய  சுதந்தரத்திற்குப்  புறம்பாக்கி,  அழிக்க  நினைக்கிற  மனுஷனுடைய  கைக்குத்  தமது  அடியாளை  நீங்கலாக்கிவிடும்படிக்கு  ராஜா  கேட்பார்.  {2Sam  14:16}

 

ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  வார்த்தை  எனக்கு  ஆறுதலாயிருக்கும்  என்று  உமது  அடியாளாகிய  நான்  எண்ணினேன்;  நன்மையையும்  தீமையையும்  கேட்கும்படி,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தேவனுடைய  தூதனைப்போல  இருக்கிறார்;  இதற்காக  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உம்மோடேகூட  இருக்கிறார்  என்றாள்.  {2Sam  14:17}

 

அப்பொழுது  ராஜா  அந்த  ஸ்திரீக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  உன்னிடத்தில்  கேட்கும்  காரியத்தை  நீ  எனக்கு  மறைக்கவேண்டாம்  என்றான்.  அதற்கு  அந்த  ஸ்திரீ,  ராஜாவாகிய  என்  ஆண்டவர்  சொல்வாராக  என்றாள்.  {2Sam  14:18}

 

அப்பொழுது  ராஜா:  இதிலெல்லாம்  யோவாப்<Joab>  உனக்கு  உட்கையாய்  இருக்கவில்லையா  என்று  கேட்டான்.  அதற்கு  ஸ்திரீ  பிரதியுத்தரமாக,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சொன்னதற்கெல்லாம்  வலதுபக்கத்திலாவது  இடதுபக்கத்திலாவது  விலகுவதற்கு  ஒருவராலும்  கூடாது  என்று  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  உமது  அடியானாகிய  யோவாப்தான்<Joab>  இதை  எனக்குக்  கற்பித்து,  அவனே  இந்த  எல்லா  வார்த்தைகளையும்  உமது  அடியாளின்  வாயிலே  போட்டான்.  {2Sam  14:19}

 

நான்  இந்தக்  காரியத்தை  உபமானமாய்ப்  பேசுகிறதற்கு  உமது  அடியானாகிய  யோவாப்<Joab>  அதற்குக்  காரணமாயிருந்தான்;  ஆனாலும்  தேசத்தில்  நடக்கிறதையெல்லாம்  அறிய,  என்  ஆண்டவனுடைய  ஞானம்  தேவதூதனுடைய  ஞானத்தைப்போல்  இருக்கிறது  என்றாள்.  {2Sam  14:20}

 

அப்பொழுது  ராஜா  யோவாபைப்பார்த்து<Joab>:  இதோ,  இந்தக்  காரியத்தைச்  செய்கிறேன்,  நீ  போய்  அப்சலோம்<Absalom>  என்னும்  பிள்ளையாண்டானைத்  திரும்ப  அழைத்துக்கொண்டுவா  என்றான்.  {2Sam  14:21}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கி,  ராஜாவை  வாழ்த்தி:  ராஜா  தமது  அடியானுடைய  வார்த்தையின்படி  செய்ததினால்,  என்  ஆண்டவனாகிய  ராஜாவின்  கண்களில்  எனக்குத்  தயைகிடைத்தது  என்று  இன்று  உமது  அடியானுக்குத்  தெரியவந்தது  என்றான்.  {2Sam  14:22}

 

பின்பு  யோவாப்<Joab>  எழுந்து,  கேசூருக்குப்<Geshur>  போய்,  அப்சலோமை<Absalom>  எருசலேமுக்கு<Jerusalem>  அழைத்துக்கொண்டுவந்தான்.  {2Sam  14:23}

 

ராஜா:  அவன்  என்  முகத்தைப்  பார்க்கவேண்டியதில்லை;  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகட்டும்  என்றான்;  அப்படியே  அப்சலோம்<Absalom>  ராஜாவின்  முகத்தைப்  பார்க்காமல்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனான்.  {2Sam  14:24}

 

இஸ்ரவேலர்<Israel>  அனைவருக்குள்ளும்  அப்சலோமைப்போல்<Absalom>  சவுந்தரியமுள்ளவனும்  மெச்சிக்கொள்ளப்பட்டவனும்  இல்லை;  உள்ளங்கால்  தொடங்கி  உச்சந்தலைமட்டும்  அவனில்  ஒரு  பழுதும்  இல்லாதிருந்தது.  {2Sam  14:25}

 

அவன்  தன்  தலைமயிர்  தனக்குப்  பாரமாயிருப்பதினால்  வருஷாந்தரம்  சிரைத்துக்கொள்ளுவான்;  சிரைக்கும்போது,  அவன்  தலைமயிர்  ராஜாவுடைய  நிறையின்படி  இருநூறு  சேக்கல்  நிறையாயிருக்கும்.  {2Sam  14:26}

 

அப்சலோமுக்கு<Absalom>  மூன்று  குமாரரும்,  தாமார்<Tamar>  என்னும்  பேர்கொண்ட  ஒரு  குமாரத்தியும்  பிறந்திருந்தார்கள்;  இவள்  ரூபவதியான  பெண்ணாயிருந்தாள்.  {2Sam  14:27}

 

அப்சலோம்<Absalom>,  ராஜாவின்  முகத்தைக்காணாமலே,  இரண்டு  வருஷம்  எருசலேமிலே<Jerusalem>  குடியிருந்தான்.  {2Sam  14:28}

 

ஆகையால்  அப்சலோம்<Absalom>  யோவாபை<Joab>  ராஜாவினிடத்தில்  அனுப்பும்படி  அழைப்பித்தான்;  அவனோ  அவனிடத்திற்கு  வரமாட்டேன்  என்றான்;  இரண்டாம்விசையும்  அவன்  அழைத்தனுப்பினான்;  அவன்  வரமாட்டேன்  என்றான்.  {2Sam  14:29}

 

அப்பொழுது  அவன்  தன்  வேலைக்காரரைப்  பார்த்து:  இதோ  என்  நிலத்திற்கு  அருகே  யோவாபின்<Joab>  நிலம்  இருக்கிறது;  அதிலே  அவனுக்கு  வாற்கோதுமை  விளைந்திருக்கிறது;  நீங்கள்  போய்  அதைத்  தீக்கொளுத்திப்போடுங்கள்  என்றான்;  அப்படியே  அப்சலோமின்<Absalom>  வேலைக்காரர்  அந்த  நிலத்தை  தீக்கொளுத்திப்போட்டார்கள்.  {2Sam  14:30}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  எழுந்திருந்து,  அப்சலோமிடத்தில்<Absalom>  வீட்டிற்குள்  போய்,  என்னுடைய  நிலத்தை  உம்முடைய  வேலைக்காரர்  தீக்கொளுத்திப்போட்டது  என்ன  என்று  அவனைக்  கேட்டான்.  {2Sam  14:31}

 

அப்சலோம்<Absalom>  யோவாபைப்<Joab>  பார்த்து:  இதோ,  நான்  ஏன்  கேசூரிலிருந்து<Geshur>  வந்தேன்;  நான்  அங்கே  இருந்துவிட்டால்  நலம்  என்று  ராஜாவுக்குச்  சொல்லும்படி  உம்மை  ராஜாவினிடத்தில்  அனுப்புவதற்காக  உம்மை  இங்கே  வரும்படி  அழைப்பித்தேன்;  இப்போதும்  நான்  ராஜாவின்  முகத்தைப்  பார்க்கட்டும்;  என்மேல்  குற்றமிருந்தால்  அவர்  என்னைக்  கொன்றுபோடட்டும்  என்றான்.  {2Sam  14:32}

 

யோவாப்<Joab>  ராஜாவினிடத்தில்  போய்,  அதை  அவனுக்கு  அறிவித்தபோது,  அப்சலோமை<Absalom>  அழைப்பித்தான்;  அவன்  ராஜாவினிடத்தில்  வந்து,  ராஜாவுக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கினான்,  அப்பொழுது  ராஜா  அப்சலோமை<Absalom>  முத்தமிட்டான்.  {2Sam  14:33}

 

இதற்குப்பின்பு,  அப்சலோம்<Absalom>  இரதங்களையும்  குதிரைகளையும்,  தனக்கு  முன்  ஓட  ஐம்பது  சேவகரையும்  சம்பாதித்தான்.  {2Sam  15:1}

 

மேலும்  அப்சலோம்<Absalom>  காலைதோறும்  எழுந்திருந்து,  பட்டணத்து  வாசலுக்குப்  போகிற  வழி  ஓரத்திலே  நின்றுகொண்டு,  எவனாகிலும்  தனக்கு  இருக்கிற  வழக்கு  முகாந்தரமாய்  ராஜாவினிடத்தில்  நியாயத்திற்காகப்  போகும்போது,  அவனை  அழைத்து,  நீ  எந்த  ஊரான்  என்று  கேட்பான்;  அவன்  உமது  அடியான்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களில்  ஒன்றுக்கடுத்த  இன்ன  ஊரான்  என்றால்,  {2Sam  15:2}

 

அப்பொழுது  அப்சலோம்<Absalom>  அவனை  நோக்கி:  இதோ,  உன்  காரியம்  நேர்மையும்  நியாயமுமாயிருக்கிறது;  ஆனாலும்  ராஜாவினிடத்திலே  உன்  காரியத்தை  விசாரிப்பார்  ஒருவரும்  இல்லை  என்பான்.  {2Sam  15:3}

 

பின்னும்  அப்சலோம்<Absalom>:  வழக்கு  வியாஜ்யமுள்ளவர்கள்  எல்லாரும்  என்னிடத்தில்  வந்து,  நான்  அவர்களுக்கு  நியாயஞ்செய்யும்படிக்கு,  என்னை  தேசத்திலே  நியாயாதிபதியாக  வைத்தால்  நலமாயிருக்கும்  என்பான்.  {2Sam  15:4}

 

எவனாகிலும்  ஒருவன்  அவனை  வணங்கவரும்போது,  அவன்  தன்  கையை  நீட்டி  அவனைத்  தழுவி,  முத்தஞ்செய்வான்.  {2Sam  15:5}

 

இந்தப்பிரகாரமாக  அப்சலோம்<Absalom>  ராஜாவினிடத்தில்  நியாயத்திற்காக  வரும்  இஸ்ரவேலருக்கெல்லாம்<Israel>  செய்து,  இஸ்ரவேல்<Israel>  மனுஷருடைய  இருதயத்தைக்  கவர்ந்துகொண்டான்.  {2Sam  15:6}

 

நாற்பது  வருஷம்  சென்றபின்பு,  அப்சலோம்<Absalom>  ராஜாவை  நோக்கி:  நான்  கர்த்தருக்குப்  பண்ணின  என்  பொருத்தனையை  எப்ரோனில்<Hebron>  செலுத்தும்படிக்கு  நான்  போக  உத்தரவுகொடும்.  {2Sam  15:7}

 

கர்த்தர்  என்னை  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பி  வரப்பண்ணினால்,  கர்த்தருக்கு  ஆராதனை  செய்வேன்  என்று  உமது  அடியானாகிய  நான்  சீரியாதேசத்தில்<Syria>  கேசூரிலே<Geshur>  குடியிருக்கும்போது,  பொருத்தனைபண்ணினேன்  என்றான்.  {2Sam  15:8}

 

அதற்கு  ராஜா,  சமாதானத்தோடே  போ  என்றான்;  அப்பொழுது  அவன்  எழுந்து  எப்ரோனுக்குப்<Hebron>  போனான்.  {2Sam  15:9}

 

அப்சலோம்<Absalom>  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களுக்கெல்லாம்  வேவுகாரரை  அனுப்பி,  நீங்கள்  எக்காளத்தொனியைக்  கேட்கும்போது,  அப்சலோம்<Absalom>  எப்ரோனிலே<Hebron>  ராஜாவானான்  என்று  சொல்லுங்கள்  என்று  சொல்லச்சொல்லி  வைத்திருந்தான்.  {2Sam  15:10}

 

எருசலேமிலிருந்து<Jerusalem>  வரவழைக்கப்பட்ட  இருநூறுபேர்  அப்சலோமோடே<Absalom>  கூடப்போனார்கள்;  அவர்கள்  வஞ்சகமின்றி  அறியாமையினால்  போனார்கள்.  {2Sam  15:11}

 

அப்சலோம்<Absalom>  பலிகளைச்  செலுத்தும்போது,  தாவீதின்<David>  ஆலோசனைக்காரனாகிய  அகித்தோப்பேல்<Ahithophel>  என்னும்  கீலோனியனையும்<Gilonite>  அவன்  ஊராகிய  கீலோவிலிருந்து<Giloh>  வரவழைப்பித்தான்;  அப்படியே  கட்டுப்பாடு  பலத்து,  ஜனங்கள்  அப்சலோமினிடத்தில்<Absalom>  திரளாய்  வந்து  கூடினார்கள்.  {2Sam  15:12}

 

அதை  அறிவிக்கிற  ஒருவன்  தாவீதினிடத்தில்<David>  வந்து,  இஸ்ரவேலில்<Israel>  ஒவ்வொருவருடைய  இருதயமும்  அப்சலோமைப்பற்றிப்போகிறது<Absalom>  என்றான்.  {2Sam  15:13}

 

அப்பொழுது  தாவீது<David>  எருசலேமிலே<Jerusalem>  தன்னிடத்திலுள்ள  தன்னுடைய  எல்லா  ஊழியக்காரரையும்  நோக்கி:  எழுந்து  ஓடிப்போவோம்,  இல்லாவிட்டால்  நாம்  அப்சலோமுக்குத்<Absalom>  தப்ப  இடமில்லை;  அவன்  தீவிரித்து  நம்மிடத்தில்  வந்து,  நம்மைப்  பிடித்து,  நம்மேல்  பொல்லாப்பு  வரப்பண்ணி,  நகரத்தைப்  பட்டயக்கருக்கினால்  சங்காரம்பண்ணாதபடிக்குத்  தீவிரமாய்ப்  புறப்படுங்கள்  என்றான்.  {2Sam  15:14}

 

ராஜாவின்  ஊழியக்காரர்  ராஜாவைப்  பார்த்து:  இதோ,  ராஜாவாகிய  எங்கள்  ஆண்டவன்  கட்டளையிடும்  காரியத்தையெல்லாம்  செய்ய  உமது  அடியாராகிய  நாங்கள்  ஆயத்தமாயிருக்கிறோம்  என்றார்கள்.  {2Sam  15:15}

 

அப்படியே  ராஜாவும்  அவனுடைய  வீட்டார்  எல்லாரும்  கால்நடையாய்ப்  புறப்பட்டார்கள்;  வீட்டைக்காக்க  ராஜா  மறுமனையாட்டிகளாகிய  பத்து  ஸ்திரீகளைப்  பின்வைத்தான்.  {2Sam  15:16}

 

ராஜாவும்  சமஸ்த  ஜனங்களும்  கால்நடையாய்ப்  புறப்பட்டு,  சற்றுத்தூரம்  போய்,  ஒரு  இடத்திலே  தரித்து  நின்றார்கள்.  {2Sam  15:17}

 

அவனுடைய  ஊழியக்காரர்  எல்லாரும்,  கிரேத்தியர்<Cherethites>  யாவரும்  பிலேத்தியர்<Pelethites>  யாவரும்  அவன்  பக்கத்திலே  நடந்துபோனார்கள்;  காத்தூரிலிருந்து<Gath>  கால்நடையாய்  வந்திருந்த  அறுநூறுபேராகிய  கித்தியர்<Gittites>  எல்லாரும்  ராஜாவுக்குமுன்பாக  நடந்தார்கள்.  {2Sam  15:18}

 

அப்பொழுது  ராஜா  கித்தியனாகிய<Gittite>  ஈத்தாயைப்<Ittai>  பார்த்து:  நீ  எங்களுடனேகூட  வருவானேன்?  நீ  திரும்பிப்போய்,  ராஜாவுடனேகூட  இரு;  நீ  அந்நியதேசத்தான்;  நீ  உன்  இடத்திற்குத்  திரும்பிப்  போகலாம்.  {2Sam  15:19}

 

நீ  நேற்றுதானே  வந்தாய்;  இன்று  நான்  உன்னை  எங்களோடே  நடந்துவரும்படிக்கு  அழைத்துக்கொண்டு  போகலாமா?  நான்  போகக்கூடிய  இடத்திற்குப்  போகிறேன்;  நீ  உன்  சகோதரரையும்  அழைத்துக்கொண்டு  திரும்பிப்போ;  கிருபையும்  உண்மையும்  உன்னோடே  இருப்பதாக  என்றான்.  {2Sam  15:20}

 

ஆனாலும்  ஈத்தாய்<Ittai>  ராஜாவுக்குப்  பிரதியுத்தரமாக:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  எங்கேயிருப்பாரோ,  அங்கே  உமது  அடியானும்,  செத்தாலும்  பிழைத்தாலும்,  இருப்பான்  என்று  கர்த்தருடைய  ஜீவனையும்  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  ஜீவனையும்  கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  {2Sam  15:21}

 

அப்பொழுது  தாவீது<David>  ஈத்தாயை<Ittai>  நோக்கி:  நடந்துவா  என்றான்;  அப்படியே  கித்தியனாகிய<Gittite>  ஈத்தாயும்<Ittai>  அவனுடைய  எல்லா  மனுஷரும்  அவனோடிருக்கிற  எல்லாப்  பிள்ளைகளும்  நடந்துபோனார்கள்.  {2Sam  15:22}

 

சகல  ஜனங்களும்  நடந்துபோகிறபோது,  தேசத்தார்  எல்லாரும்  மகா  சத்தமாய்  அழுதார்கள்;  ராஜா  கீதரோன்<Kidron>  ஆற்றைக்  கடந்தான்;  ஜனங்கள்  எல்லாரும்  வனாந்தரத்திற்குப்  போகிற  வழியே  நடந்துபோனார்கள்.  {2Sam  15:23}

 

சாதோக்கும்<Zadok>  தேவனுடைய  உடன்படிக்கைப்  பெட்டியை  அவனோடேகூட  இருந்து  சுமக்கிற  சகல  லேவியரும்<Levites>  வந்து,  தேவனுடைய  பெட்டியை  அங்கே  வைத்தார்கள்;  ஜனங்கள்  எல்லாரும்  நகரத்திலிருந்து  கடந்துதீருமட்டும்,  அபியத்தார்<Abiathar>  திரும்பிப்போயிருந்தான்.  {2Sam  15:24}

 

ராஜா  சாதோக்கை<Zadok>  நோக்கி:  தேவனுடைய  பெட்டியை  நகரத்திற்குத்  திரும்பக்  கொண்டுபோ;  கர்த்தருடைய  கண்களில்  எனக்குக்  கிருபை  கிடைத்ததானால்,  நான்  அதையும்  அவர்  வாசஸ்தலத்தையும்  பார்க்கிறதற்கு,  என்னைத்  திரும்ப  வரப்பண்ணுவார்.  {2Sam  15:25}

 

அவர்:  உன்மேல்  எனக்குப்  பிரியமில்லை  என்பாராகில்,  இதோ,  இங்கே  இருக்கிறேன்;  அவர்  தம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  எனக்குச்  செய்வாராக  என்றான்.  {2Sam  15:26}

 

பின்னும்  ராஜா  ஆசாரியனாகிய  சாதோக்கை<Zadok>  நோக்கி:  நீ  ஞானதிருஷ்டிக்காரன்  அல்லவோ?  நீ  சமாதானத்தோடே  நகரத்திற்குத்  திரும்பு;  உன்  மகன்  அகிமாசும்<Ahimaaz>  அபியத்தாரின்<Abiathar>  மகன்  யோனத்தானுமாகிய<Jonathan>  உங்கள்  குமாரர்  இரண்டுபேரும்  உங்களோடேகூடத்  திரும்பிப்  போகட்டும்.  {2Sam  15:27}

 

எனக்கு  அறிவிக்கிறதற்கு  உங்களிடத்திலிருந்து  செய்திவருமட்டும்,  நான்  வனாந்தரத்தின்  வெளிகளிலே  தரித்திருப்பேன்  என்றான்.  {2Sam  15:28}

 

அப்படியே  சாதோக்கும்<Zadok>  அபியத்தாரும்<Abiathar>  தேவனுடைய  பெட்டியை  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பக்  கொண்டுபோய்,  அங்கே  இருந்தார்கள்.  {2Sam  15:29}

 

தாவீது<David>  தன்  முகத்தை  மூடி,  வெறுங்காலால்  நடந்து  அழுதுகொண்டு,  ஒலிவமலையின்மேல்<Olivet>  ஏறிப்போனான்;  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்  முகத்தை  மூடி  அழுதுகொண்டு  ஏறினார்கள்.  {2Sam  15:30}

 

அப்சலோமோடே<Absalom>  கட்டுப்பாடுபண்ணினவர்களுடன்  அகித்தோப்பேலும்<Ahithophel>  சேர்ந்திருக்கிறான்  என்று  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டபோது,  தாவீது<David>:  கர்த்தாவே,  அகித்தோப்பேலின்<Ahithophel>  ஆலோசனையைப்  பயித்தியமாக்கிவிடுவீராக  என்றான்.  {2Sam  15:31}

 

தாவீது<David>  மலையின்  உச்சிமட்டும்வந்து,  அங்கே  தேவனைப்  பணிந்துகொண்டபோது,  இதோ,  அற்கியனாகிய<Archite>  ஊசாய்<Hushai>  தன்  வஸ்திரத்தைக்  கிழித்துக்கொண்டு,  தலையின்மேல்  புழுதியைப்  போட்டுக்கொண்டவனாய்  அவனுக்கு  எதிர்ப்பட்டான்.  {2Sam  15:32}

 

தாவீது<David>  அவனைப்  பார்த்து:  நீ  என்னோடேகூட  நடந்துவந்தால்  எனக்குப்  பாரமாயிருப்பாய்.  {2Sam  15:33}

 

நீ  நகரத்திற்குத்  திரும்பிப்போய்,  அப்சலோமை<Absalom>  நோக்கி:  ராஜாவே,  உம்முடைய  ஊழியக்காரனாயிருப்பேன்;  முன்  நான்  உம்முடைய  தகப்பனுக்கு  ஊழியக்காரனாயிருந்தேன்;  இப்போது  நான்  உமக்கு  ஊழியக்காரன்  என்றாயேயாகில்,  எனக்காக  அகித்தோப்பேலின்<Ahithophel>  ஆலோசனையை  அபத்தமாக்குவாய்.  {2Sam  15:34}

 

உன்னோடே  அங்கே  சாதோக்<Zadok>  அபியத்தார்<Abiathar>  என்னும்  ஆசாரியர்கள்  இருக்கிறார்கள்  அல்லவா?  ராஜாவின்  வீட்டிலே  பிறக்கிற  ஏதேது  செய்தி  உண்டோ,  என்னென்ன  கேள்விப்படுகிறாயோ,  அதையெல்லாம்  சாதோக்<Zadok>  அபியத்தார்<Abiathar>  என்னும்  ஆசாரியர்களுக்கு  அறிவிப்பாய்.  {2Sam  15:35}

 

அங்கே  அவர்களோடே  சாதோக்கின்<Zadok>  மகன்  அகிமாசும்<Ahimaaz>  அபியத்தாரின்<Abiathar>  மகன்  யோனத்தானும்<Jonathan>,  அவர்கள்  இரண்டு  குமாரரும்  இருக்கிறார்கள்;  நீங்கள்  கேள்விப்படுகிற  செய்தியையெல்லாம்  அவர்கள்வசமாய்  எனக்கு  அனுப்புவீர்களாக  என்றான்.  {2Sam  15:36}

 

அப்படியே  தாவீதின்<David>  சிநேகிதனாகிய  ஊசாய்<Hushai>  நகரத்திற்கு  வந்தான்;  அப்சலோமும்<Absalom>  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தான்.  {2Sam  15:37}

 

தாவீது<David>  மலையுச்சியிலிருந்து  சற்றப்புறம்  நடந்துபோனபோது,  இதோ,  மேவிபோசேத்தின்<Mephibosheth>  காரியக்காரனாகிய  சீபா<Ziba>,  பொதிகளைச்  சுமக்கிற  இரண்டு  கழுதைகளை  ஓட்டிக்கொண்டுவந்து,  அவனைச்  சந்தித்தான்;  அவைகளில்  இருநூறு  அப்பங்களும்,  வற்றலான  நூறு  திராட்சப்பழக்குலைகளும்,  வசந்தகாலத்துப்  பலனான  நூறு  குலைகளும்,  ஒரு  துருத்தி  திராட்சரசமும்  இருந்தது.  {2Sam  16:1}

 

ராஜா  சீபாவைப்பார்த்து<Ziba>:  இவைகள்  என்னத்திற்கு  என்று  கேட்டதற்கு,  சீபா<Ziba>:  கழுதைகள்  ராஜாவின்  வீட்டார்  ஏறுகிறதற்கும்,  அப்பங்களும்  பழங்களும்  வாலிபர்  புசிக்கிறதற்கும்,  திராட்சரசம்  வனாந்தரத்தில்  விடாய்த்துப்போனவர்கள்  குடிக்கிறதற்குமே  என்றான்.  {2Sam  16:2}

 

அப்பொழுது  ராஜா:  உன்  ஆண்டவனுடைய  குமாரன்  எங்கே  என்று  கேட்டதற்கு,  சீபா<Ziba>  ராஜாவை  நோக்கி:  எருசலேமில்<Jerusalem>  இருக்கிறான்;  இன்று  இஸ்ரவேல்<Israel>  வீட்டார்  என்  தகப்பனுடைய  ராஜ்யத்தை  என்  வசமாய்த்  திரும்பப்பண்ணுவார்கள்  என்றான்  என்று  சொன்னான்.  {2Sam  16:3}

 

அப்பொழுது  ராஜா  சீபாவை<Ziba>  நோக்கி:  மேவிபோசேத்திற்கு<Mephibosheth>  உண்டானதெல்லாம்  உன்னுடையதாயிற்று  என்றான்.  அதற்குச்  சீபா<Ziba>:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  உம்முடைய  கண்களில்  எனக்குத்  தயைகிடைக்கவேண்டும்  என்று  நான்  பணிந்து  கேட்டுக்கொள்ளுகிறேன்  என்றான்.  {2Sam  16:4}

 

தாவீதுராஜா<David>  பகூரிம்மட்டும்<Bahurim>  வந்தபோது,  இதோ,  சவுல்<Saul>  வீட்டு  வம்சத்தானாயிருக்கிற  கேராவின்<Gera>  குமாரனாகிய  சீமேயி<Shimei>  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷன்  அங்கேயிருந்து  புறப்பட்டு,  தூஷித்துக்கொண்டே  நடந்துவந்து,  {2Sam  16:5}

 

சகல  ஜனங்களும்,  சகல  பலசாலிகளும்,  தாவீதின்<David>  வலதுபுறமாகவும்  இடதுபுறமாகவும்  நடக்கையில்,  தாவீதின்மேலும்<David>,  தாவீதுராஜாவுடைய<David>  சகல  ஊழியக்காரர்மேலும்  கற்களை  எறிந்தான்.  {2Sam  16:6}

 

சீமேயி<Shimei>  அவனைத்  தூஷித்து:  இரத்தப்பிரியனே,  பேலியாளின்<Belial>  மனுஷனே,  தொலைந்துபோ,  தொலைந்துபோ.  {2Sam  16:7}

 

சவுலின்<Saul>  ஸ்தலத்தில்  ராஜாவான  உன்மேல்  கர்த்தர்  சவுல்<Saul>  வீட்டாரின்  இரத்தப்பழியைத்  திரும்பப்பண்ணினார்;  கர்த்தர்  ராஜ்யபாரத்தை  உன்  குமாரனாகிய  அப்சலோமின்<Absalom>  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  இப்போதும்  இதோ,  உன்  அக்கிரமத்தில்  அகப்பட்டாய்;  நீ  இரத்தப்பிரியனான  மனுஷன்  என்றான்.  {2Sam  16:8}

 

அப்பொழுது  செருயாவின்<Zeruiah>  குமாரன்  அபிசாய்<Abishai>  ராஜாவை  நோக்கி:  அந்தச்  செத்தநாய்  ராஜாவாகிய  என்  ஆண்டவனை  தூஷிப்பானேன்?  நான்  போய்  அவன்  தலையை  வாங்கிப்போடட்டுமே  என்றான்.  {2Sam  16:9}

 

அதற்கு  ராஜா:  செருயாவின்<Zeruiah>  குமாரரே,  எனக்கும்  உங்களுக்கும்  என்ன?  அவன்  என்னைத்  தூஷிக்கட்டும்;  தாவீதைத்<David>  தூஷிக்கவேண்டும்  என்று  கர்த்தர்  அவனுக்குச்  சொன்னார்;  ஆகையால்  ஏன்  இப்படிச்  செய்கிறாய்  என்று  கேட்கத்தக்கவன்  யார்  என்றான்.  {2Sam  16:10}

 

பின்னும்  தாவீது<David>  அபிசாயையும்<Abishai>  தன்  ஊழியக்காரர்  எல்லாரையும்  பார்த்து:  இதோ,  என்  கர்ப்பப்பிறப்பான  என்  குமாரனே  என்  பிராணனை  வாங்கத்தேடும்போது,  இந்தப்  பென்யமீனன்<Benjamite>  எத்தனை  அதிகமாய்ச்  செய்வான்,  அவன்  தூஷிக்கட்டும்;  அப்படிச்  செய்யக்  கர்த்தர்  அவனுக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்.  {2Sam  16:11}

 

ஒருவேளை  கர்த்தர்  என்  சிறுமையைப்  பார்த்து,  இந்த  நாளில்  அவன்  நிந்தித்த  நிந்தனைக்குப்  பதிலாக  எனக்கு  நன்மையைச்  சரிக்கட்டுவார்  என்றான்.  {2Sam  16:12}

 

அப்படியே  தாவீதும்<David>  அவன்  மனுஷரும்  வழியே  நடந்துபோனார்கள்;  சீமேயியும்<Shimei>  மலையின்  பக்கத்திலே  அவனுக்கு  எதிராக  நடந்து  தூஷித்து,  அவனுக்கு  எதிராகக்  கற்களை  எறிந்து,  மண்ணைத்  தூற்றிக்கொண்டே  வந்தான்.  {2Sam  16:13}

 

ராஜாவும்  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்  விடாய்த்தவர்களாய்,  தங்குமிடத்திலே  சேர்ந்து,  இளைப்பாறினார்கள்.  {2Sam  16:14}

 

அப்சலோமும்<Absalom>  இஸ்ரவேல்<Israel>  மனுஷராகிய  சகல  ஜனங்களும்  அவனோடேகூட  அகித்தோப்பேலும்<Ahithophel>  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தார்கள்.  {2Sam  16:15}

 

அற்கியனாகிய<Archite>  ஊசாய்<Hushai>  என்னும்  தாவீதின்<David>  சிநேகிதன்  அப்சலோமிடத்தில்<Absalom>  வந்தபோது,  ஊசாய்<Hushai>  அப்சலோமை<Absalom>  நோக்கி:  ராஜாவே  வாழ்க,  ராஜாவே  வாழ்க  என்றான்.  {2Sam  16:16}

 

அப்பொழுது  அப்சலோம்<Absalom>  ஊசாயைப்<Hushai>  பார்த்து:  உன்  சிநேகிதன்மேல்  உனக்கு  இருக்கிற  தயை  இதுதானோ?  உன்  சிநேகிதனோடே  நீ  போகாதேபோனது  என்ன  என்று  கேட்டான்.  {2Sam  16:17}

 

அதற்கு  ஊசாய்<Hushai>  அப்சலோமை<Absalom>  நோக்கி:  அப்படி  அல்ல,  கர்த்தரும்  இந்த  ஜனங்களும்  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  அனைவரும்  தெரிந்துகொள்ளுகிறவரையே  நான்  சேர்ந்து  அவரோடே  இருப்பேன்.  {2Sam  16:18}

 

இதுவும்  அல்லாமல்,  நான்  யாரிடத்தில்  சேவிப்பேன்?  அவருடைய  குமாரனிடத்தில்  அல்லவா?  உம்முடைய  தகப்பனிடத்தில்  எப்படிச்  சேவித்தேனோ,  அப்படியே  உம்மிடத்திலும்  சேவிப்பேன்  என்றான்.  {2Sam  16:19}

 

அப்சலோம்<Absalom>  அகித்தோப்பேலைப்<Ahithophel>  பார்த்து,  நாங்கள்  செய்யவேண்டியது  இன்னதென்று  ஆலோசனை  சொல்லும்  என்றான்.  {2Sam  16:20}

 

அப்பொழுது  அகித்தோப்பேல்<Ahithophel>  அப்சலோமை<Absalom>  நோக்கி:  வீட்டைக்காக்க  உம்முடைய  தகப்பன்  பின்வைத்த  அவருடைய  மறுமனையாட்டிகளிடத்தில்  பிரவேசியும்,  அப்பொழுது  உம்முடைய  தகப்பனுக்கு  நாற்றமாய்ப்போனீர்  என்பதை  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  கேள்விப்பட்டு,  உம்மோடிருக்கிற  எல்லாருடைய  கைகளும்  பலக்கும்  என்றான்.  {2Sam  16:21}

 

அப்படியே  அப்சலோமுக்கு<Absalom>  உப்பரிகையின்மேல்  ஒரு  கூடாரத்தைப்  போட்டார்கள்;  அங்கே  அப்சலோம்<Absalom>  சகல  இஸ்ரவேலரின்<Israel>  கண்களுக்கு  முன்பாக,  தன்  தகப்பனுடைய  மறுமனையாட்டிகளிடத்தில்  பிரவேசித்தான்.  {2Sam  16:22}

 

அந்நாட்களில்  அகித்தோப்பேல்<Ahithophel>  சொல்லும்  ஆலோசனை  தேவனுடைய  வாக்கைப்போல  இருந்தது,  அப்படி  அகித்தோப்பேலின்<Ahithophel>  ஆலோசனையெல்லாம்  தாவீதுக்கும்<David>  இருந்தது,  அப்சலோமுக்கும்<Absalom>  அப்படியே  இருந்தது.  {2Sam  16:23}

 

பின்பு  அகித்தோப்பேல்<Ahithophel>  அப்சலோமை<Absalom>  நோக்கி:  நான்  பன்னீராயிரம்பேரைத்  தெரிந்துகொண்டு  எழுந்து,  இன்று  இராத்திரி  தாவீதைப்<David>  பின்தொடர்ந்து  போகட்டும்.  {2Sam  17:1}

 

அவன்  விடாய்த்தவனும்  கைதளர்ந்தவனுமாயிருக்கையில்,  நான்  அவனிடத்தில்  போய்,  அவனைத்  திடுக்கிடப்பண்ணுவேன்;  அப்பொழுது  அவனோடிருக்கும்  ஜனங்களெல்லாரும்  ஓடிப்போவதினால்,  நான்  ராஜா  ஒருவனைமாத்திரம்  வெட்டி,  {2Sam  17:2}

 

ஜனங்களையெல்லாம்  உம்முடைய  வசமாய்த்  திரும்பப்பண்ணுவேன்,  இப்படிச்செய்ய  நீர்  வகைதேடினால்,  எல்லாரும்  திரும்பினபின்  ஜனங்கள்  சமாதானத்தோடு  இருப்பார்கள்  என்றான்.  {2Sam  17:3}

 

இந்த  வார்த்தை  அப்சலோமின்<Absalom>  பார்வைக்கும்,  இஸ்ரவேலுடைய<Israel>  சகல  மூப்பரின்  பார்வைக்கும்  நலமாய்த்  தோன்றினது.  {2Sam  17:4}

 

ஆகிலும்  அப்சலோம்<Absalom>:  அற்கியனாகிய<Archite>  ஊசாயைக்<Hushai>  கூப்பிட்டு,  அவன்  வாய்மொழியையும்  கேட்போம்  என்றான்.  {2Sam  17:5}

 

ஊசாய்<Hushai>  அப்சலோமிடத்தில்<Absalom>  வந்தபோது,  அப்சலோம்<Absalom>  அவனைப்  பார்த்து:  இந்தப்பிரகாரமாக  அகித்தோப்பேல்<Ahithophel>  சொன்னான்;  அவன்  வார்த்தையின்படி  செய்வோமா?  அல்லவென்றால்,  நீ  சொல்  என்றான்.  {2Sam  17:6}

 

அப்பொழுது  ஊசாய்<Hushai>  அப்சலோமை<Absalom>  நோக்கி:  அகித்தோப்பேல்<Ahithophel>  இந்தவிசை  சொன்ன  ஆலோசனை  நல்லதல்ல  என்றான்.  {2Sam  17:7}

 

மேலும்  ஊசாய்<Hushai>:  உம்முடைய  தகப்பனும்  அவன்  மனுஷரும்  பலசாலிகள்  என்றும்,  வெளியிலே  குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடியைப்போல  மனமெரிகிறவர்கள்  என்றும்  நீர்  அறிவீர்;  உம்முடைய  தகப்பன்  யுத்தவீரனுமாயிருக்கிறார்;  அவர்  இராக்காலத்தில்  ஜனங்களோடே  தங்கமாட்டார்.  {2Sam  17:8}

 

இதோ,  அவர்  இப்பொழுது  ஒரு  கெபியிலாவது,  வேறே  யாதோரிடத்திலாவது  ஒளித்திருப்பார்;  துவக்கத்திலேதானே  நம்முடையவர்களில்  சிலர்  பட்டார்களேயானால்,  அதைக்  கேட்கிற  யாவரும்  அப்சலோமைப்<Absalom>  பின்செல்லுகிற  ஜனங்களில்  சங்காரம்  உண்டாயிற்று  என்பார்கள்.  {2Sam  17:9}

 

அப்பொழுது  சிங்கத்தின்  இருதயத்திற்கொத்த  இருதயமுள்ள  பலவானாயிருக்கிறவனுங்கூட  கலங்கிப்போவான்;  உம்முடைய  தகப்பன்  சவுரியவான்  என்றும்,  அவரோடிருக்கிறவர்கள்  பலசாலிகள்  என்றும்,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அறிவார்கள்.  {2Sam  17:10}

 

ஆதலால்  நான்  சொல்லுகிற  யோசனையாவது,  தாண்முதல்<Dan>  பெயெர்செபாமட்டும்<Beersheba>  இருக்கிற  கடற்கரை  மணலத்தனை  திரட்சியான  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  உம்மண்டையில்  கூட்டப்பட்டு,  நீர்தானேகூட  யுத்தத்திற்குப்  போகவேண்டும்.  {2Sam  17:11}

 

அப்பொழுது  அவரைக்  கண்டுபிடிக்கிற  எவ்விடத்திலாகிலும்  நாம்  அவரிடத்தில்  போய்,  பனி  பூமியின்மேல்  இறங்குவதுபோல  அவர்மேல்  இறங்குவோம்;  அப்படியே  அவரோடிருக்கிற  எல்லா  மனுஷரிலும்  ஒருவனும்  அவருக்கு  மீந்திருப்பதில்லை.  {2Sam  17:12}

 

ஒரு  பட்டணத்திற்குள்  புகுந்தாரேயானால்,  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அந்தப்  பட்டணத்தின்மேல்  கயிறுகளைப்  போட்டு,  அங்கே  ஒரு  பொடிக்கல்லும்  காணப்படாதே  போகுமட்டும்,  அதை  இழுத்து  ஆற்றிலே  போடுவார்கள்  என்றான்.  {2Sam  17:13}

 

அப்பொழுது  அப்சலோமும்<Absalom>  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  அனைவரும்:  அகித்தோப்பேலின்<Ahithophel>  ஆலோசனையைப்பார்க்கிலும்  அற்கியனாகிய<Archite>  ஊசாயின்<Hushai>  ஆலோசனை  நல்லது  என்றார்கள்;  இப்படி  கர்த்தர்  அப்சலோமின்மேல்<Absalom>  பொல்லாப்பை  வரப்பண்ணும்  பொருட்டு,  அகித்தோப்பேலின்<Ahithophel>  நல்ல  ஆலோசனையை  அபத்தமாக்குகிறதற்குக்  கர்த்தர்  கட்டளையிட்டார்.  {2Sam  17:14}

 

பின்பு  ஊசாய்<Hushai>,  சாதோக்<Zadok>  அபியத்தார்<Abiathar>  என்னும்  ஆசாரியர்களைப்  பார்த்து:  இன்ன  இன்னபடி  அகித்தோப்பேல்<Ahithophel>  அப்சலோமுக்கும்<Absalom>  இஸ்ரவேலின்<Israel>  மூப்பருக்கும்  ஆலோசனை  சொன்னான்;  நானோ  இன்ன  இன்னபடி  ஆலோசனை  சொன்னேன்.  {2Sam  17:15}

 

இப்பொழுதும்  நீங்கள்  சீக்கிரமாய்த்  தாவீதுக்கு<David>  அறிவிக்கும்படிக்குச்  செய்தி  அனுப்பி:  நீர்  இன்று  இராத்திரி  வனாந்தரத்தின்  வெளிகளிலே  தங்கவேண்டாம்;  ராஜாவும்  அவரோடிருக்கிற  சகல  ஜனங்களும்  விழுங்கப்படாதபடிக்குத்  தாமதம்  இல்லாமல்  அக்கரைப்படவேண்டும்  என்று  சொல்லச்சொல்லுங்கள்  என்றான்.  {2Sam  17:16}

 

யோனத்தானும்<Jonathan>  அகிமாசும்<Ahimaaz>,  தாங்கள்  நகரத்தில்  பிரவேசிக்கிறதினால்  காணப்படாதபடிக்கு,  என்ரோகேல்<Enrogel>  அண்டை  நின்றுகொண்டிருந்தார்கள்;  ஒரு  வேலைக்காரி  போய்,  அதை  அவர்களுக்குச்  சொன்னாள்;  அவர்கள்  தாவீது<David>  ராஜாவுக்கு  அதை  அறிவிக்கப்போனார்கள்.  {2Sam  17:17}

 

ஒரு  பிள்ளையாண்டான்  அவர்களைக்  கண்டு,  அப்சலோமுக்கு<Absalom>  அறிவித்தான்;  ஆகையால்  அவர்கள்  இருவரும்  சீக்கிரமாய்ப்  போய்,  பகூரிமிலிருக்கிற<Bahurim>  ஒரு  மனுஷன்  வீட்டிற்குள்  பிரவேசித்தார்கள்;  அவன்  முற்றத்தில்  ஒரு  கிணறு  இருந்தது;  அதில்  இறங்கினார்கள்.  {2Sam  17:18}

 

வீட்டுக்காரி  ஒரு  பாயை  எடுத்து,  கிணற்றுவாயின்மேல்  விரித்து,  காரியம்  வெளிப்படாதபடிக்கு,  அதின்மேல்  நொய்யைப்  பரப்பிவைத்தாள்.  {2Sam  17:19}

 

அப்சலோமின்<Absalom>  சேவகர்  அந்த  ஸ்திரீயினிடத்தில்  வீட்டிற்குள்  வந்து:  அகிமாசும்<Ahimaaz>  யோனத்தானும்<Jonathan>  எங்கே  என்று  கேட்டார்கள்;  அவர்களுக்கு  அந்த  ஸ்திரீ:  வாய்க்காலுக்கு  அப்பாலே  போய்விட்டார்கள்  என்றாள்;  இவர்கள்  தேடிக்காணாதேபோய்,  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பினார்கள்.  {2Sam  17:20}

 

இவர்கள்  போனபிற்பாடு,  அவர்கள்  கிணற்றிலிருந்து  ஏறிவந்து,  தாவீதுராஜாவுக்கு<David>  அறிவித்து,  தாவீதை<David>  நோக்கி:  சீக்கிரமாய்  எழுந்து  ஆற்றைக்  கடந்துபோங்கள்;  இன்னபடி  அகித்தோப்பேல்<Ahithophel>  உங்களுக்கு  விரோதமாய்  ஆலோசனை  சொன்னான்  என்றார்கள்.  {2Sam  17:21}

 

அப்பொழுது  தாவீதும்<David>  அவனோடிருந்த  சகல  ஜனங்களும்  எழுந்து  யோர்தானைக்<Jordan>  கடந்துபோனார்கள்;  பொழுது  விடிகிறதற்குள்ளாக  யோர்தானைக்<Jordan>  கடவாதவன்  ஒருவனும்  இல்லை.  {2Sam  17:22}

 

அகித்தோப்பேல்<Ahithophel>  தன்  யோசனையின்படி  நடக்கவில்லை  என்று  கண்டபோது,  தன்  கழுதையின்மேல்  சேணம்வைத்து  ஏறி,  தன்  ஊரிலிருக்கிற  தன்  வீட்டுக்குப்  போய்,  தன்  வீட்டுக்காரியங்களை  ஒழுங்குபடுத்தி,  நான்றுகொண்டு  செத்தான்;  அவன்  தகப்பன்  கல்லறையில்  அவனை  அடக்கம்பண்ணினார்கள்.  {2Sam  17:23}

 

தாவீது<David>  மக்னாயீமுக்கு<Mahanaim>  வந்தான்;  அப்சலோமும்<Absalom>  சகல  இஸ்ரவேலரோடுங்கூட<Israel>  யோர்தானைக்<Jordan>  கடந்தான்.  {2Sam  17:24}

 

அப்சலோம்<Absalom>,  யோவாபுக்குப்<Joab>  பதிலாக  அமாசாவை<Amasa>  இராணுவத்தலைவனாக்கினான்;  இந்த  அமாசா<Amasa>,  நாகாசின்<Nahash>  குமாரத்தியும்  செருயாவின்<Zeruiah>  சகோதரியும்  யோவாபின்<Joab>  அத்தையுமாகிய  அபிகாயிலைப்<Abigail>  படைத்த  இஸ்ரவேலனாகிய<Israelite>  எத்திரா<Ithra>  என்னும்  பேருள்ள  ஒரு  மனுஷனுடைய  குமாரனாயிருந்தான்.  {2Sam  17:25}

 

இஸ்ரவேல்<Israel>  ஜனங்களும்  அப்சலோமும்<Absalom>  கீலேயாத்<Gilead>  தேசத்திலே  பாளயமிறங்கினார்கள்.  {2Sam  17:26}

 

தாவீது<David>  மக்னாயீமில்<Mahanaim>  சேர்ந்தபோது,  அம்மோன்<Ammon>  புத்திரரின்  தேசத்து  ரப்பா<Rabbah>  பட்டணத்தானாகிய  சோபி<Shobi>  என்னும்  நாகாசின்<Nahash>  குமாரனும்,  லோதேபார்<Lodebar>  ஊரானான  அம்மியேலின்<Ammiel>  குமாரன்  மாகீரும்<Machir>,  ரோகிலிம்<Rogelim>  ஊரானும்  கீலேயாத்தியனுமாகிய<Gileadite>  பர்சிலாவும்<Barzillai>,  {2Sam  17:27}

 

மெத்தைகளையும்,  கலங்களையும்,  மண்பாண்டங்களையும்,  கோதுமையையும்,  வாற்கோதுமையையும்,  மாவையும்,  வறுத்த  பயற்றையும்,  பெரும்  பயற்றையும்,  சிறு  பயற்றையும்,  வறுத்த  சிறு  பயற்றையும்,  {2Sam  17:28}

 

தேனையும்,  வெண்ணெயையும்,  ஆடுகளையும்,  பால்கட்டிகளையும்,  தாவீதுக்கும்<David>  அவனோடிருந்த  ஜனங்களுக்கும்  சாப்பிடுகிறதற்குக்  கொண்டுவந்தார்கள்;  அந்த  ஜனங்கள்  வனாந்தரத்திலே  பசியும்  இளைப்பும்  தவனமுமாயிருப்பார்கள்  என்று  இப்படிச்  செய்தார்கள்.  {2Sam  17:29}

 

தாவீது<David>  தன்னோடிருந்த  ஜனங்களை  இலக்கம்  பார்த்து,  அவர்கள்மேல்  ஆயிரத்துக்கு  அதிபதிகளையும்,  நூற்றுக்கு  அதிபதிகளையும்  வைத்து,  {2Sam  18:1}

 

பின்பு  தாவீது<David>  ஜனங்களில்  மூன்றில்  ஒரு  பங்கை  யோவாபின்<Joab>  வசமாகவும்,  மூன்றில்  ஒரு  பங்கைச்  செருயாவின்<Zeruiah>  குமாரனும்  யோவாபின்<Joab>  சகோதரனுமான  அபிசாயின்<Abishai>  வசமாகவும்,  மூன்றில்  ஒரு  பங்கைக்  கித்தியனாகிய<Gittite>  ஈத்தாயின்<Ittai>  வசமாகவும்  அனுப்பி:  நானும்  உங்களோடேகூடப்  புறப்பட்டு  வருவேன்  என்று  ராஜா  ஜனங்களிடத்தில்  சொன்னான்.  {2Sam  18:2}

 

ஜனங்களோ:  நீர்  புறப்படவேண்டாம்;  நாங்கள்  முறிந்தோடிப்போனாலும்,  அவர்கள்  எங்கள்  காரியத்தை  ஒரு  பொருட்டாக  எண்ணமாட்டார்கள்;  எங்களில்  பாதிப்பேர்  செத்துப்போனாலும்,  எங்கள்  காரியத்தைப்பற்றிக்  கவலைப்படமாட்டார்கள்;  நீரோ,  எங்களில்  பதினாயிரம்பேருக்குச்  சரி;  நீர்  பட்டணத்தில்  இருந்துகொண்டு,  எங்களுக்கு  உதவிசெய்கிறது  எங்களுக்கு  நலமாயிருக்கும்  என்றார்கள்.  {2Sam  18:3}

 

அப்பொழுது  ராஜா  அவர்களைப்  பார்த்து:  உங்களுக்கு  நலமாய்த்  தோன்றுகிறதைச்  செய்வேன்  என்று  சொல்லி,  ராஜா  ஒலிமுகவாசல்  ஓரத்திலே  நின்றான்;  ஜனங்கள்  எல்லாரும்  நூறுநூறாகவும்,  ஆயிரம்  ஆயிரமாகவும்  புறப்பட்டார்கள்.  {2Sam  18:4}

 

ராஜா  யோவாபையும்<Joab>,  அபிசாயையும்<Abishai>,  ஈத்தாயையும்<Ittai>  நோக்கி:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோமை<Absalom>  என்னிமித்தம்  மெதுவாய்  நடப்பியுங்கள்  என்று  கட்டளையிட்டான்;  இப்படி  ராஜா  அப்சலோமைக்குறித்து<Absalom>  அதிபதிகளுக்கெல்லாம்  கட்டளையிட்டதை  ஜனங்கள்  எல்லாரும்  கேட்டிருந்தார்கள்.  {2Sam  18:5}

 

ஜனங்கள்  வெளியே  இஸ்ரவேலருக்கு<Israel>  எதிராகப்  புறப்பட்டபிற்பாடு,  எப்பிராயீம்<Ephraim>  காட்டிலே  யுத்தம்  நடந்தது.  {2Sam  18:6}

 

அங்கே  இஸ்ரவேல்<Israel>  ஜனங்கள்  தாவீதின்<David>  சேவகருக்கு  முன்பாக  முறிய  அடிக்கப்பட்டார்கள்;  அங்கே  அன்றையதினம்  இருபதினாயிரம்பேர்  மடியத்தக்கதாக  பெரிய  சங்காரம்  உண்டாயிற்று.  {2Sam  18:7}

 

யுத்தம்  அந்த  தேசம்  எங்கும்  பரந்தது;  அன்றையதினம்  பட்டயம்  பட்சித்த  ஜனங்களைப்பார்க்கிலும்,  காடு  பட்சித்த  ஜனம்  அதிகம்.  {2Sam  18:8}

 

அப்சலோம்<Absalom>  தாவீதின்<David>  சேவகருக்கு  எதிர்ப்பட்டான்;  அப்சலோம்<Absalom>  கோவேறு  கழுதையின்மேல்  ஏறிவரும்போது,  அந்தக்  கோவேறுகழுதை  சன்னல்பின்னலான  ஒரு  பெரிய  கர்வாலி  மரத்தின்கீழ்  வந்ததினால்,  அவனுடைய  தலை  கர்வாலிமரத்தில்  மாட்டிக்கொண்டு,  அவன்  வானத்துக்கும்  பூமிக்கும்  நடுவே  தொங்கினான்;  அவன்  ஏறியிருந்த  கோவேறுகழுதை  அப்பாலே  போயிற்று.  {2Sam  18:9}

 

அதை  ஒருவன்  கண்டு,  யோவாபுக்கு<Joab>  அறிவித்து:  இதோ,  அப்சலோமை<Absalom>  ஒரு  கர்வாலிமரத்திலே  தொங்கக்கண்டேன்  என்றான்.  {2Sam  18:10}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  தனக்கு  அதை  அறிவித்தவனை  நோக்கி:  நீ  அதைக்  கண்டாயே;  பின்னை  ஏன்  அவனை  அங்கே  வெட்டி,  தரையிலே  தள்ளிப்போடவில்லை?  நான்  உனக்குப்  பத்து  வெள்ளிக்காசையும்  ஒரு  கச்சையையும்  கொடுக்கக்  கடமையுள்ளவனாயிருப்பேனே  என்றான்.  {2Sam  18:11}

 

அந்த  மனுஷன்  யோவாபை<Joab>  நோக்கி:  என்  கைகளில்  ஆயிரம்  வெள்ளிக்காசு  நிறுத்துக்  கொடுக்கப்பட்டாலும்,  நான்  ராஜாவுடைய  குமாரன்மேல்  என்  கையை  நீட்டமாட்டேன்;  பிள்ளையாண்டானாகிய  அப்சலோமை<Absalom>  நீங்கள்  அவரவர்  காப்பாற்றுங்கள்  என்று  ராஜா  உமக்கும்  அபிசாய்க்கும்<Abishai>  ஈத்தாய்க்கும்<Ittai>  எங்கள்  காதுகள்  கேட்கக்  கட்டளையிட்டாரே.  {2Sam  18:12}

 

ராஜாவுக்கு  ஒரு  காரியமும்  மறைவாயிருக்கமாட்டாது;  ஆதலால்,  நான்  அதைச்  செய்வேனாகில்,  என்  பிராணனுக்கே  விரோதமாகச்  செய்பவனாவேன்,  நீரும்  எனக்கு  விரோதமாயிருப்பீர்  என்றான்.  {2Sam  18:13}

 

ஆதலால்  யோவாப்<Joab>:  நான்  இப்படி  உன்னோடே  பேசி,  தாமதிக்கமாட்டேன்  என்று  சொல்லி,  தன்  கையிலே  மூன்று  வல்லயங்களை  எடுத்துக்கொண்டு,  அப்சலோம்<Absalom>  இன்னும்  கர்வாலிமரத்தின்  நடுவிலே  உயிரோடே  தொங்குகையில்,  அவைகளை  அவன்  நெஞ்சிலே  குத்தினான்.  {2Sam  18:14}

 

அப்பொழுது  யோவாபின்<Joab>  ஆயுததாரிகளாகிய  பத்து  சேவகர்  அப்சலோமைச்<Absalom>  சூழ்ந்து  அவனை  அடித்துக்  கொன்றுபோட்டார்கள்.  {2Sam  18:15}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  எக்காளம்  ஊதி  ஜனங்களை  நிறுத்திப்போட்டபடியினால்,  ஜனங்கள்  இஸ்ரவேலைப்<Israel>  பின்தொடருகிறதை  விட்டுத்  திரும்பினார்கள்.  {2Sam  18:16}

 

அவர்கள்  அப்சலோமை<Absalom>  எடுத்து,  அவனைக்  காட்டிலுள்ள  ஒரு  பெரிய  குழியிலே  போட்டு,  அவன்மேல்  மகா  பெரிய  கற்குவியலைக்  குவித்தார்கள்;  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  {2Sam  18:17}

 

அப்சலோம்<Absalom>  உயிரோடே  இருக்கையில்:  என்  பேரை  நினைக்கப்பண்ணும்படியாக  எனக்குக்  குமாரன்  இல்லை  என்று  சொல்லி,  ராஜாவின்  பள்ளத்தாக்கிலே  தனக்கென்று  ஒரு  தூணை  நிறுத்தி,  அந்தத்  தூணுக்குத்  தன்  பேரைத்  தரித்திருந்தான்;  அது  இந்நாள்வரைக்கும்  அப்சலோமின்<Absalom>  அடையாளம்  என்று  சொல்லப்படும்.  {2Sam  18:18}

 

சாதோக்கின்<Zadok>  குமாரனாகிய  அகிமாஸ்<Ahimaaz>:  கர்த்தர்  ராஜாவை  அவர்  சத்துருக்களின்  கைக்கு  நீங்கலாக்கி  நியாயஞ்செய்தார்  என்னும்  செய்தியை  அவருக்குக்  கொண்டுபோக,  நான்  ஓடட்டுமே  என்றான்.  {2Sam  18:19}

 

யோவாப்<Joab>  அவனை  நோக்கி:  இன்றையதினம்  நீ  செய்தியைக்  கொண்டுபோகக்கூடாது;  இன்னொருநாளிலே  நீ  செய்தியைக்  கொண்டுபோகலாம்;  ராஜாவின்  குமாரன்  செத்தபடியினால்,  இன்றைக்கு  நீ  செய்தியைக்  கொண்டுபோகவேண்டாம்  என்று  சொல்லி,  {2Sam  18:20}

 

யோவாப்<Joab>  கூஷியை<Cushi>  நோக்கி:  நீ  போய்  கண்டதை  ராஜாவுக்கு  அறிவி  என்றான்;  கூஷி<Cushi>  யோவாபை<Joab>  வணங்கி  ஓடினான்.  {2Sam  18:21}

 

சாதோக்கின்<Zadok>  குமாரனாகிய  அகிமாஸ்<Ahimaaz>  இன்னும்  யோவாபை<Joab>  நோக்கி:  எப்படியானாலும்  கூஷியின்<Cushi>  பிறகாலே  நானும்  ஓடட்டுமே  என்று  திரும்பக்  கேட்டதற்கு,  யோவாப்<Joab>:  என்  மகனே,  சொல்லும்படி  உனக்கு  நல்ல  செய்தி  இல்லாதிருக்கையில்,  நீ  ஓடவேண்டியது  என்ன  என்றான்.  {2Sam  18:22}

 

அதற்கு  அவன்:  எப்படியானாலும்  நான்  ஓடுவேன்  என்றான்;  அப்பொழுது  யோவாப்<Joab>:  ஓடு  என்றான்;  அப்படியே  அகிமாஸ்<Ahimaaz>  சமனான  பூமிவழியாயோடிக்  கூஷிக்கு<Cushi>  முந்திக்கொண்டான்.  {2Sam  18:23}

 

தாவீது<David>  இரண்டு  ஒலிமுகக்  கெவுனி  வாசலுக்கு  நடுவாக  உட்கார்ந்திருந்தான்;  ஜாமங்காக்கிறவன்  அலங்கத்திலிருக்கிற  கெவுனியின்மேல்  நடந்து,  தன்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  ஒரு  மனுஷன்  தனியே  ஓடிவருகிறதைக்  கண்டு,  {2Sam  18:24}

 

கூப்பிட்டு  ராஜாவுக்கு  அறிவித்தான்.  அப்பொழுது  ராஜா:  அவன்  ஒருவனாய்  வந்தால்,  அவன்  வாயிலே  நல்லசெய்தி  இருக்கும்  என்றான்;  அவன்  ஓடி  கிட்டவரும்போது,  {2Sam  18:25}

 

ஜாமங்காக்கிறவன்,  வேறொருவன்  ஓடிவருகிறதைக்  கண்டு:  அதோ  பின்னொருவன்  தனியே  ஓடிவருகிறான்  என்று  வாசல்  காக்கிறவனோடே  கூப்பிட்டுச்  சொன்னான்;  அப்பொழுது  ராஜா:  அவனும்  நல்ல  செய்தி  கொண்டுவருகிறவன்  என்றான்.  {2Sam  18:26}

 

மேலும்  ஜாமங்காக்கிறவன்:  முந்தினவனுடைய  ஓட்டம்  சாதோக்கின்<Zadok>  குமாரன்  அகிமாசுடைய<Ahimaaz>  ஓட்டம்போலிருக்கிறது  என்று  எனக்குத்  தோன்றுகிறது  என்றான்;  அப்பொழுது  ராஜா:  அவன்  நல்ல  மனுஷன்;  அவன்  நல்ல  செய்தி  சொல்ல  வருகிறான்  என்றான்.  {2Sam  18:27}

 

அகிமாஸ்<Ahimaaz>  வந்து  ராஜாவை  நோக்கி:  சமாதானம்  என்று  சொல்லி,  முகங்குப்புற  விழுந்து,  ராஜாவை  வணங்கி,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  விரோதமாய்த்  தங்கள்  கைகளை  எடுத்த  மனுஷரை  ஒப்புக்கொடுத்திருக்கிற  உம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்  உண்டாவதாக  என்றான்.  {2Sam  18:28}

 

அப்பொழுது  ராஜா:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோம்<Absalom>  சுகமாயிருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  அகிமாஸ்<Ahimaaz>  யோவாப்<Joab>  ராஜாவின்  வேலைக்காரனையும்  உம்முடைய  அடியானையும்  அனுப்புகிறபோது,  ஒரு  பெரிய  சந்தடியிருந்தது;  ஆனாலும்  அது  இன்னதென்று  தெரியாது  என்றான்.  {2Sam  18:29}

 

அப்பொழுது  ராஜா:  நீ  அங்கே  போய்  நில்  என்றான்;  அவன்  ஒரு  பக்கத்தில்  போய்  நின்றான்.  {2Sam  18:30}

 

இதோ,  கூஷி<Cushi>  வந்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  நற்செய்தி,  இன்று  கர்த்தர்  உமக்கு  விரோதமாயெழும்பின  எல்லாரின்  கைக்கும்  உம்மை  நீங்கலாக்கி  நியாயஞ்செய்தார்  என்றான்.  {2Sam  18:31}

 

அப்பொழுது  ராஜா  கூஷியைப்<Cushi>  பார்த்து:  பிள்ளையாண்டானாகிய  அப்சலோம்<Absalom>  சுகமாயிருக்கிறானா  என்று  கேட்டதற்கு,  கூஷி<Cushi>  என்பவன்:  அந்தப்  பிள்ளையாண்டானுக்கு  நடந்ததுபோல,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  சத்துருக்களுக்கும்,  பொல்லாப்புச்  செய்ய  உமக்கு  விரோதமாய்  எழும்புகிற  யாவருக்கும்  நடக்கக்கடவது  என்றான்.  {2Sam  18:32}

 

அப்பொழுது  ராஜா  மிகவும்  கலங்கி,  கெவுனிவாசலின்  மேல்வீட்டிற்குள்  ஏறிப்போய்  அழுதான்;  அவன்  ஏறிப்போகையில்:  என்  மகனாகிய  அப்சலோமே<Absalom>,  என்  மகனே,  என்  மகனாகிய  அப்சலோமே<Absalom>,  நான்  உனக்குப்  பதிலாகச்  செத்தேனானால்  நலமாயிருக்கும்;  அப்சலோமே<Absalom>,  என்  மகனே,  என்  மகனே,  என்று  சொல்லி  அழுதான்.  {2Sam  18:33}

 

இதோ,  ராஜா  அப்சலோமுக்காக<Absalom>  அழுது  புலம்புகிறார்  என்று  யோவாபுக்கு<Joab>  அறிவிக்கப்பட்டது.  {2Sam  19:1}

 

ராஜா  தம்முடைய  குமாரனுக்காக  மனம்நொந்திருக்கிறார்  என்று  அன்றையதினம்  ஜனங்கள்  கேள்விப்பட்டார்கள்;  அதினிமித்தம்  அன்றையதினம்  அந்த  ஜெயம்  ஜனத்திற்கெல்லாம்  துக்கமாய்  மாறிற்று.  {2Sam  19:2}

 

யுத்தத்தில்  முறிந்தோடுகிறதினால்  வெட்கப்பட்டுத்  திருட்டளவாய்  வருகிறவர்கள்போல,  ஜனங்கள்  அன்றையதினம்  திருட்டளவாய்ப்  பட்டணத்திற்குள்  வந்தார்கள்.  {2Sam  19:3}

 

ராஜா  தன்  முகத்தை  மூடிக்கொண்டு,  மகா  சத்தமாய்:  என்  மகனாகிய  அப்சலோமே<Absalom>,  அப்சலோமாகிய<Absalom>  என்  மகனே,  என்  மகனே  என்று  அலறிக்கொண்டிருந்தான்.  {2Sam  19:4}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  வீட்டிற்குள்ளே  ராஜாவினிடத்தில்  போய்:  இன்று  உம்முடைய  ஜீவனையும்,  உம்முடைய  குமாரர்  குமாரத்திகளின்  ஜீவனையும்,  உம்முடைய  மனைவிகளின்  ஜீவனையும்,  உம்முடைய  மறுமனையாட்டிகளின்  ஜீவனையும்  தப்புவித்த  உம்முடைய  ஊழியக்காரர்  எல்லாரின்  முகத்தையும்  வெட்கப்படுத்தினீர்;  இன்று  நீர்  உம்மைப்  பகைக்கிறவர்களைச்  சிநேகித்து,  உம்மைச்  சிநேகிக்கிறவர்களைப்  பகைக்கிறீர்  என்று  விளங்குகிறது.  {2Sam  19:5}

 

அதிபதிகளும்  சேவகரும்  உமக்கு  அற்பமானவர்கள்  என்று  இன்று  விளங்கப்பண்ணுகிறீர்;  அப்சலோம்<Absalom>  உயிரோடிருந்து,  நாங்கள்  அனைவரும்  இன்று  செத்துப்போனால்,  அப்பொழுது  உம்முடைய  பார்வைக்கு  நலமாயிருக்கும்  என்று  இன்று  அறிந்துகொண்டேன்.  {2Sam  19:6}

 

இப்போதும்  எழுந்திருந்து  வெளியே  வந்து,  உம்முடைய  ஊழியக்காரரோடே  அன்பாய்ப்  பேசும்;  நீர்  வெளியே  வராதிருந்தால்,  இன்று  இரவு  ஒருவரும்  உம்மோடே  தங்கியிருப்பதில்லை  என்று  கர்த்தர்மேல்  ஆணையிடுகிறேன்;  அப்பொழுது  உம்முடைய  சிறுவயதுமுதல்  இதுவரைக்கும்  உமக்கு  நேரிட்ட  எல்லாத்  தீமையைப்பார்க்கிலும்,  அது  உமக்கு  அதிக  தீமையாயிருக்கும்  என்றான்.  {2Sam  19:7}

 

அப்பொழுது  ராஜா  எழுந்துபோய்,  ஒலிமுகவாசலில்  உட்கார்ந்தான்;  இதோ,  ராஜா  ஒலிமுகவாசலில்  உட்கார்ந்திருக்கிறார்  என்று  சகல  ஜனங்களுக்கும்  அறிவிக்கப்பட்டபோது,  ஜனங்கள்  எல்லாரும்  ராஜாவுக்கு  முன்பாக  வந்தார்கள்;  இஸ்ரவேலரோவெனில்<Israel>  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்கு  ஓடிப்போனார்கள்.  {2Sam  19:8}

 

இஸ்ரவேலுடைய<Israel>  சகல  கோத்திரங்களிலுமுள்ள  சகல  ஜனங்களுக்குள்ளும்  வாக்குவாதம்  உண்டாகி,  அவர்கள்:  ராஜா  நம்முடைய  சத்துருக்களின்  கைக்கு  நம்மை  நீங்கலாக்கிவிட்டார்,  அவர்தானே  பெலிஸ்தரின்<Philistines>  கைக்கு  நம்மைத்  தப்புவித்தார்;  இப்போதோ  அப்சலோமுக்குத்<Absalom>  தப்ப,  தேசத்தைவிட்டு  ஓடிப்போனார்.  {2Sam  19:9}

 

நமக்கு  ராஜாவாக  அபிஷேகம்பண்ணிவைத்த  அப்சலோம்<Absalom>  யுத்தத்திலே  செத்தான்;  இப்போதும்  ராஜாவைத்  திரும்ப  அழைத்து  வராமல்  நீங்கள்  சும்மாயிருப்பானேன்  என்று  சொல்லிக்கொண்டார்கள்.  {2Sam  19:10}

 

இப்படி  இஸ்ரவேலர்<Israel>  எல்லாரும்  பேசிக்கொண்டிருக்கிறது,  ராஜா  இருக்கிற  வீட்டிலே  அவனுக்குக்  கேள்வியானபடியினால்,  தாவீதுராஜா<David>  சாதோக்<Zadok>  அபியத்தார்<Abiathar>  என்னும்  ஆசாரியர்களிடத்துக்கு  ஆள்  அனுப்பி,  நீங்கள்  யூதாவின்<Judah>  மூப்பரோடே  பேசி:  ராஜாவைத்  தம்முடைய  வீட்டுக்குத்  திரும்ப  அழைத்துவர  நீங்கள்  மற்றவர்களுக்குப்  பிந்திப்போவானேன்?  {2Sam  19:11}

 

நீங்கள்  என்  சகோதரர்,  நீங்கள்  என்  எலும்பும்  என்  மாம்சமுமானவர்கள்;  ராஜாவைத்  திரும்ப  அழைத்துவர  நீங்கள்  பிந்தினவர்களாயிருப்பானேன்  என்று  சொல்லுங்கள்.  {2Sam  19:12}

 

நீங்கள்  அமாசாவையும்<Amasa>  நோக்கி:  நீ  என்  எலும்பும்  என்  மாம்சமும்  அல்லவோ?  நீ  யோவாபுக்குப்<Joab>  பதிலாக  எந்நாளும்  எனக்கு  முன்பாகப்  படைத்தலைவனாயிராவிட்டால்,  தேவன்  அதற்குச்  சரியாகவும்  அதற்கு  அதிகமாகவும்  எனக்குச்  செய்யக்கடவர்  என்று  சொல்லச்சொன்னான்.  {2Sam  19:13}

 

இப்படியே  யூதாவின்<Judah>  சகல  மனுஷருடைய  இருதயத்தையும்  ஒரு  மனுஷனுடைய  இருதயத்தைப்போல்  இணங்கப்பண்ணினதினால்,  அவர்கள்  ராஜாவுக்கு:  நீர்  உம்முடைய  எல்லா  ஊழியக்காரரோடும்  திரும்பிவாரும்  என்று  சொல்லி  அனுப்பினார்கள்.  {2Sam  19:14}

 

ராஜா  திரும்ப  வருகிறதற்கு  யோர்தான்மட்டும்<Jordan>  வந்தபோது,  யூதா<Judah>  கோத்திரத்தார்  ராஜாவுக்கு  எதிர்கொண்டுபோய்,  ராஜாவை  யோர்தானைக்<Jordan>  கடக்கப்பண்ண  கில்கால்மட்டும்<Gilgal>  வந்தார்கள்.  {2Sam  19:15}

 

பகூரிம்<Bahurim>  ஊரானான  பென்யமீனனாகிய<Benjamite>  கேராவின்<Gera>  மகன்  சீமேயியும்<Shimei>  தீவிரித்து<David>,  யூதா<Judah>  மனுஷரோடுங்கூடத்  தாவீது<David>  ராஜாவுக்கு  எதிர்கொண்டுபோனான்.  {2Sam  19:16}

 

அவனோடே  பென்யமீன்<Benjamin>  மனுஷர்  ஆயிரம்பேரும்,  சவுலின்<Saul>  வீட்டு  வேலைக்காரனாகிய  சீபாவும்<Ziba>,  அவனோடேகூட  அவனுடைய  பதினைந்து  குமாரரும்,  அவனுடைய  இருபது  வேலைக்காரரும்  இருந்தார்கள்;  அவர்கள்  ராஜாவுக்கு  முன்பாக  யோர்தானை<Jordan>  வேகமாய்க்  கடந்துபோனார்கள்.  {2Sam  19:17}

 

அவர்கள்  ராஜாவின்  வீட்டாரை  இக்கரைப்படுத்தவும்,  அவன்  விரும்பும்  காரியத்துக்கு  உதவவும்,  ஒரு  படகு  இக்கரையிலே  வந்தது;  அப்பொழுது  கேராவின்<Gera>  குமாரனாகிய  சீமேயி<Shimei>  யோர்தானைக்<Jordan>  கடக்கப்போகிற  ராஜாவுக்கு  முன்பாகத்  தாழவிழுந்து,  {2Sam  19:18}

 

ராஜாவை  நோக்கி:  என்  ஆண்டவன்  என்  அக்கிரமத்தை  என்மேல்  சுமத்தாமலும்,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  எருசலேமிலிருந்து<Jerusalem>  புறப்பட்டு  வருகிற  நாளிலே,  உமது  அடியான்  செய்த  துரோகத்தை  ராஜா  நினைக்காமலும்,  தமது  மனதில்  வைக்காமலும்  இருப்பாராக.  {2Sam  19:19}

 

உமது  அடியானாகிய  நான்  பாவஞ்செய்தேன்  என்று  அறிந்திருக்கிறேன்;  இப்போதும்,  இதோ,  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  எதிர்கொண்டுவர,  யோசேப்பு<Joseph>  வீட்டார்  அனைவருக்கும்  நான்  இன்று  முந்திக்கொண்டேன்  என்றான்.  {2Sam  19:20}

 

அப்பொழுது  செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  அபிசாய்<Abishai>  பிரதியுத்தரமாக:  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரைச்  சீமேயி<Shimei>  தூஷித்தபடியினால்,  அவனை  அதற்காகக்  கொல்லவேண்டாமா  என்றான்.  {2Sam  19:21}

 

அதற்குத்  தாவீது<David>:  செருயாவின்<Zeruiah>  குமாரரே,  இன்று  நீங்கள்  எனக்குச்  சத்துருக்களாகிறதற்கு,  எனக்கும்  உங்களுக்கும்  என்ன?  இன்று  இஸ்ரவேலில்<Israel>  ஒருவன்  கொல்லப்படலாமா?  இன்று  நான்  இஸ்ரவேலின்மேல்<Israel>  ராஜாவானேன்  என்று  எனக்குத்  தெரியாதா  என்று  சொல்லி,  {2Sam  19:22}

 

ராஜா  சீமேயியைப்<Shimei>  பார்த்து:  நீ  சாவதில்லை  என்று  அவனுக்கு  ஆணையிட்டான்.  {2Sam  19:23}

 

சவுலின்<Saul>  குமாரனாகிய  மேவிபோசேத்தும்<Mephibosheth>  ராஜாவுக்கு  எதிர்கொண்டுவந்தான்;  ராஜா  போனநாள்முதல்,  அவன்  சமாதானத்தோடே  திரும்பிவருகிற  நாள்மட்டும்,  அவன்  தன்  கால்களைச்  சுத்தம்பண்ணவுமில்லை,  தன்  தாடியைச்  சவரம்பண்ணவுமில்லை;  தன்  வஸ்திரங்களை  வெளுக்கவுமில்லை.  {2Sam  19:24}

 

அவன்  எருசலேமிலிருந்து<Jerusalem>  ராஜாவுக்கு  எதிர்கொண்டு  வருகிறபோது,  ராஜா  அவனைப்  பார்த்து:  மேவிபோசேத்தே<Mephibosheth>,  நீ  என்னோடுகூட  வராமல்போனது  என்ன  என்று  கேட்டான்.  {2Sam  19:25}

 

அதற்கு  அவன்:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  என்  வேலைக்காரன்  என்னை  மோசம்போக்கினான்;  உமது  அடியானாகிய  நான்  முடவனானபடியினால்,  ஒரு  கழுதையின்மேல்  சேணம்வைத்து  அதின்மேல்  ஏறி,  ராஜாவோடேகூடப்  போகிறேன்  என்று  அடியேன்  சொன்னேன்.  {2Sam  19:26}

 

அவன்  ராஜாவாகிய  என்  ஆண்டவனிடத்தில்  உமது  அடியான்மேல்  வீண்பழி  சொன்னான்;  ராஜாவாகிய  என்  ஆண்டவனோ  தேவனுடைய  தூதனைப்போல  இருக்கிறார்;  உமது  பார்வைக்கு  நலமாய்த்  தோன்றுகிறபடி  செய்யும்.  {2Sam  19:27}

 

ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  முன்பாக  என்  தகப்பன்  வீட்டார்  எல்லாரும்  சாவுக்கு  ஏதுவாயிருந்தார்களே  ஒழிய,  மற்றப்படி  அல்ல;  ஆனாலும்  உமது  பந்தியிலே  சாப்பிடுகிறவர்களோடே  உமது  அடியேனை  வைத்தீர்;  இன்னும்  நான்  ராஜாவிடத்தில்  முறையிட,  இனி  எனக்கு  என்ன  நியாயம்  இருக்கிறது  என்றான்.  {2Sam  19:28}

 

அப்பொழுது  ராஜா  அவனைப்  பார்த்து:  உன்  காரியத்தைக்குறித்து  அதிகமாய்ப்  பேசுவானேன்?  நீயும்  சீபாவும்<Ziba>  நிலத்தைப்  பங்கிட்டுக்கொள்ளுங்கள்  என்று  நான்  சொல்லுகிறேன்  என்றான்.  {2Sam  19:29}

 

அதற்கு  மேவிபோசேத்<Mephibosheth>  ராஜாவை  நோக்கி:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சமாதானத்தோடே  தம்முடைய  வீட்டிற்கு  வந்திருக்கும்போது,  அவனே  எல்லாவற்றையும்  எடுத்துக்கொள்ளட்டும்  என்றான்.  {2Sam  19:30}

 

கீலேயாத்தியனாகிய<Gileadite>  பர்சிலாவும்<Barzillai>  ரோகிலிமிலிருந்து<Rogelim>  வந்து,  யோர்தான்மட்டும்<Jordan>  ராஜாவை  வழிவிட்டனுப்ப,  அவனோடேகூட  யோர்தானின்<Jordan>  துறைமட்டும்  கடந்துவந்தான்.  {2Sam  19:31}

 

பர்சிலா<Barzillai>  எண்பது  வயதுசென்ற  கிழவனாயிருந்தான்;  ராஜா  மக்னாயீமிலே<Mahanaim>  தங்கியிருக்குமட்டும்  அவனைப்  பராமரித்து  வந்தான்;  அவன்  மகா  பெரிய  மனுஷனாயிருந்தான்.  {2Sam  19:32}

 

ராஜா  பர்சிலாவை<Barzillai>  நோக்கி:  நீ  என்னோடேகூடக்  கடந்துவா,  எருசலேமிலே<Jerusalem>  உன்னை  என்னிடத்தில்  வைத்துப்  பராமரிப்பேன்  என்றான்.  {2Sam  19:33}

 

பர்சிலா<Barzillai>  ராஜாவைப்  பார்த்து:  நான்  ராஜாவோடேகூட  எருசலேமுக்கு<Jerusalem>  வர,  நான்  இன்னும்  உயிரோடிருக்கும்  ஆயுசின்  நாட்கள்  எம்மாத்திரம்?  {2Sam  19:34}

 

இப்பொழுது  நான்  எண்பது  வயதுள்ளவன்;  இனி  நலமானது  இன்னதென்றும்  தீதானது  இன்னதென்றும்  எனக்குத்  தெரியுமோ?  புசிக்கிறதும்  குடிக்கிறதும்  உமது  அடியேனுக்கு  ருசிகரமாயிருக்குமோ?  சங்கீதக்காரர்  சங்கீதக்காரிகளுடைய  சத்தத்தை  இனிக்  கேட்கக்கூடுமோ?  உமது  அடியேனாகிய  நான்  இனி  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்குப்  பாரமாயிருக்கவேண்டியது  என்ன?  {2Sam  19:35}

 

அடியேன்  கொஞ்சதூரம்  யோர்தான்மட்டும்<Jordan>  ராஜாவோடேகூட  வருவேன்;  அதற்கு  ராஜா  இவ்வளவு  பெரிய  உபகாரத்தை  எனக்குச்  செய்யவேண்டியது  என்ன?  {2Sam  19:36}

 

நான்  என்  ஊரிலே  மரித்து,  என்  தாய்  தகப்பன்மார்  கல்லறையிலே  அடக்கம்பண்ணப்படும்படிக்கு,  உமது  அடியான்  திரும்பிப்போகட்டும்;  ஆனாலும்,  இதோ,  உமது  அடியானாகிய  கிம்காம்<Chimham>  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடேகூட  வருவான்;  உம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  அவனுக்குச்  செய்யும்  என்றான்.  {2Sam  19:37}

 

அப்பொழுது  ராஜா:  கிம்காம்<Chimham>  என்னோடேகூட  வரட்டும்;  உன்  பார்வைக்கு  நலமானபடியே  நான்  அவனுக்கு  நடப்பித்து,  நீ  என்னிடத்தில்  வேண்டிக்கொள்வதையெல்லாம்  நான்  உனக்குச்  செய்வேன்  என்றான்.  {2Sam  19:38}

 

ஜனங்கள்  எல்லாரும்  யோர்தானைக்<Jordan>  கடந்தபோது,  ராஜா  பர்சிலாவை<Barzillai>  முத்தமிட்டு  அவனை  ஆசீர்வதித்து,  தானும்  கடந்துபோனான்;  அவனோ  தன்னிடத்திற்குத்  திரும்பிப்போய்விட்டான்.  {2Sam  19:39}

 

ராஜா  கடந்து,  கில்கால்மட்டும்<Gilgal>  போனான்;  கிம்காம்<Chimham>  அவனோடேகூடக்  கடந்துவந்தான்;  யூதா<Judah>  ஜனம்  அனைத்தும்,  இஸ்ரவேலில்<Israel>  பாதிஜனமும்,  ராஜாவை  இக்கரைப்படுத்தி  வந்தபின்பு,  {2Sam  19:40}

 

இதோ,  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  எல்லாரும்  ராஜாவினிடத்தில்  வந்து,  ராஜாவை  நோக்கி:  எங்கள்  சகோதரராகிய  யூதா<Judah>  மனுஷர்  திருட்டளவாய்  உம்மை  அழைத்துவந்து,  ராஜாவையும்,  அவர்  வீட்டாரையும்,  அவரோடேகூட  இருக்கிற  தாவீதின்<David>  மனுஷர்  அனைவரையும்,  யோர்தானைக்<Jordan>  கடக்கப்பண்ணினது  என்ன  என்றார்கள்.  {2Sam  19:41}

 

அப்பொழுது  யூதா<Judah>  மனுஷர்  எல்லாரும்  இஸ்ரவேல்<Israel>  மனுஷருக்குப்  பிரதியுத்தரமாக:  ராஜா  எங்களைச்  சேர்ந்தவரானபடியினால்  இதைச்  செய்தோம்;  இதற்காக  நீங்கள்  கோபிப்பானேன்?  நாங்கள்  ராஜாவின்  கையிலே  ஏதாகிலும்  வாங்கித்  தின்றோமோ?  எங்களுக்கு  வெகுமானம்  கொடுக்கப்பட்டதோ?  என்றார்கள்.  {2Sam  19:42}

 

இஸ்ரவேல்<Israel>  மனுஷரோ  யூதா<Judah>  மனுஷருக்குப்  பிரதியுத்தரமாக:  ராஜாவினிடத்தில்  எங்களுக்குப்  பத்துப்பங்கு  இருக்கிறது;  உங்களைப்பார்க்கிலும்  எங்களுக்குத்  தாவீதினிடத்தில்<David>  அதிக  உரிமை  உண்டு;  பின்னை  ஏன்  எங்களை  அற்பமாய்  எண்ணினீர்கள்;  எங்கள்  ராஜாவைத்  திரும்ப  அழைத்துவரவேண்டும்  என்று  முந்திச்  சொன்னவர்கள்  நாங்கள்  அல்லவா  என்றார்கள்;  ஆனாலும்  இஸ்ரவேல்<Israel>  மனுஷரின்  பேச்சைப்பார்க்கிலும்  யூதா<Judah>  மனுஷரின்  பேச்சு  பலத்தது.  {2Sam  19:43}

 

அப்பொழுது  பென்யமீன்<Benjamite>  மனுஷனான  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபா<Sheba>  என்னும்  பேருள்ள  பேலியாளின்<Belial>  மனுஷன்  ஒருவன்  தற்செயலாய்  அங்கே  இருந்தான்;  அவன்  எக்காளம்  ஊதி:  எங்களுக்குத்  தாவீதினிடத்தில்<David>  பங்கும்  இல்லை,  ஈசாயின்<Jesse>  குமாரனிடத்தில்  எங்களுக்குச்  சுதந்தரமும்  இல்லை;  இஸ்ரவேலே<Israel>,  நீங்கள்  அவரவர்  தங்கள்  கூடாரங்களுக்குப்  போய்விடுங்கள்  என்றான்.  {2Sam  20:1}

 

அப்பொழுது  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  எல்லாரும்  தாவீதை<David>  விட்டுப்  பின்வாங்கி,  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபாவைப்<Sheba>  பின்பற்றிப்  போனார்கள்;  யோர்தான்<Jordan>  தொடங்கி  எருசலேம்மட்டுமுள்ள<Jerusalem>  யூதாமனுஷர்<Judah>  தங்கள்  ராஜாவைச்  சார்ந்திருந்தார்கள்.  {2Sam  20:2}

 

தாவீது<David>  எருசலேமிலுள்ள<Jerusalem>  தன்  வீட்டுக்கு  வந்தபோது,  வீட்டைக்  காக்க  ராஜா  பின்வைத்துப்போன  பத்து  மறுமனையாட்டிகளையும்  வருவித்து,  அவர்களை  ஒரு  காவல்  வீட்டிலே  வைத்துப்  பராமரித்தான்;  அப்புறம்  அவர்களிடத்தில்  அவன்  பிரவேசிக்கவில்லை;  அப்படியே  அவர்கள்  சாகிற  நாள்மட்டும்  அடைக்கப்பட்டு,  உயிரோடிருக்கிற  நாளெல்லாம்  விதவைகள்போல்  இருந்தார்கள்.  {2Sam  20:3}

 

பின்பு  ராஜா  அமாசாவைப்<Amasa>  பார்த்து:  நீ  யூதா<Judah>  மனுஷரை  மூன்றுநாளைக்குள்ளே  என்னிடத்தில்  வரவழைத்து,  நீயும்  கூடவந்து  இருக்கவேண்டும்  என்றான்.  {2Sam  20:4}

 

அப்பொழுது  அமாசா<Amasa>:  யூதாவை<Judah>  அழைப்பிக்கப்  போய்,  தனக்குக்  குறித்த  காலத்திலே  வராமல்  தாமதித்திருந்தான்.  {2Sam  20:5}

 

அப்பொழுது  தாவீது<David>  அபிசாயைப்<Abishai>  பார்த்து:  அப்சலோமைப்பார்க்கிலும்<Absalom>  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபா<Sheba>,  இப்பொழுது  நமக்குப்  பொல்லாப்புச்  செய்வான்;  அவன்  அரணான  பட்டணங்களில்  வந்தடைந்து,  நம்முடைய  கண்களுக்குத்  தப்பிப்போகாதபடிக்கு,  நீ  உன்  எஜமானுடைய  சேவகரைக்  கூட்டிக்கொண்டு,  அவனைப்  பின்தொடர்ந்துபோ  என்றான்.  {2Sam  20:6}

 

அப்படியே  யோவாபின்<Joab>  மனுஷரும்,  கிரேத்தியரும்<Cherethites>  பிலேத்தியரும்<Pelethites>,  சகல  பலசாலிகளும்  அவன்  பிறகாலே  புறப்பட்டு,  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபாவைப்<Sheba>  பின்தொடர  எருசலேமிலிருந்து<Jerusalem>  போனார்கள்.  {2Sam  20:7}

 

அவர்கள்  கிபியோன்<Gibeon>  கிட்ட  இருக்கிற  பெரிய  கல்லண்டையிலே  வந்தபோது,  அமாசா<Amasa>  அவர்களுக்கு  எதிர்ப்பட்டுவந்தான்;  யோவாபோ<Joab>,  தான்  உடுத்திக்கொண்டிருக்கிற  தன்  சட்டையின்மேல்  ஒரு  கச்சையைக்  கட்டிக்கொண்டிருந்தான்;  அதில்  உறையோடே  ஒரு  பட்டயம்  அவன்  இடுப்பண்டையிலே  தொங்கிற்று;  அவன்  புறப்படுகையில்  அது  விழுந்தது.  {2Sam  20:8}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  அமாசாவைப்<Amasa>  பார்த்து:  என்  சகோதரனே,  சுகமாயிருக்கிறாயா  என்று  சொல்லி,  அமாசாவை<Amasa>  முத்தஞ்செய்யும்படி,  தன்  வலதுகையினால்  அவன்  தாடியைப்  பிடித்து,  {2Sam  20:9}

 

தன்  கையிலிருக்கிற  பட்டயத்திற்கு  அமாசா<Amasa>  எச்சரிக்கையாயிராதபோது,  யோவாப்<Joab>  அவனை  அவன்  குடல்கள்  தரையிலே  சரிந்துபோகத்தக்கதாய்,  அதினால்  வயிற்றிலே  ஒரே  குத்தாகக்  குத்தினான்;  அவன்  செத்துப்போனான்;  அப்பொழுது  யோவாபும்<Joab>  அவன்  சகோதரனாகிய  அபிசாயும்<Abishai>  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபாவைப்<Sheba>  பின்தொடர்ந்தார்கள்.  {2Sam  20:10}

 

யோவாபுடைய<Joab>  வாலிபரில்  ஒருவன்  செத்தவனண்டையிலே  நின்று,  யோவாபின்மேல்<Joab>  பிரியப்படுகிறவன்  எவனோ,  தாவீதின்<David>  பட்சத்தில்  இருக்கிறவன்  எவனோ,  அவன்  யோவாபைப்<Joab>  பின்பற்றிப்போவானாக  என்றான்.  {2Sam  20:11}

 

அமாசா<Amasa>  நடுவழியிலே  இரத்தத்திலே  புரண்டு  கிடந்தபடியினால்,  ஜனங்கள்  எல்லாரும்  தரித்துநிற்பதை  அவன்  கண்டு,  அமாசாவை<Amasa>  வழியிலிருந்து  வயலிலே  இழுத்துப்போட்டான்;  அவனண்டையில்  வருகிறவர்கள்  எல்லாரும்  தரித்துநிற்பதைக்  கண்டு,  ஒரு  வஸ்திரத்தை  அவன்மேல்  போட்டான்.  {2Sam  20:12}

 

அவன்  வழியிலிருந்து  எடுத்துப்போடப்பட்ட  பிற்பாடு,  எல்லாரும்  கடந்து,  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபாவைத்<Sheba>  தொடர,  யோவாபுக்குப்<Joab>  பின்சென்றார்கள்.  {2Sam  20:13}

 

அவன்  இஸ்ரவேல்<Israel>  கோத்திரங்களையெல்லாம்  சுற்றி,  பெத்மாக்காவாகிய<Bethmaachah>  ஆபேல்மட்டாகவும்<Abel>,  பேரீமின்<Berites>  கடைசிமட்டாகவும்  வந்திருந்தான்;  அவ்விடத்தாரும்  கூடி,  தாங்களும்  அவனுக்குப்  பின்சென்றார்கள்.  {2Sam  20:14}

 

அவர்கள்  போய்  பெத்மாக்காவாகிய<Bethmaachah>  ஆபேலிலே<Abel>  அவனை  முற்றிக்கைபோட்டு,  பட்டணத்திற்கு  எதிராகத்  தெற்றுவரைக்கும்  கொத்தளம்  போட்டார்கள்;  யோவாபோடே<Joab>  இருக்கிற  ஜனங்கள்  எல்லாரும்  அலங்கத்தை  விழப்பண்ணும்படி  அழிக்க  எத்தனம்பண்ணினார்கள்.  {2Sam  20:15}

 

அப்பொழுது  புத்தியுள்ள  ஒரு  ஸ்திரீ  பட்டணத்திலிருந்து  சத்தமிட்டு:  கேளுங்கள்,  கேளுங்கள்;  நான்  யோவாபோடே<Joab>  பேசவேண்டும்;  அவரை  இங்கே  கிட்டவரச்  சொல்லுங்கள்  என்றாள்.  {2Sam  20:16}

 

அவன்  அவளுக்குச்  சமீபத்தில்  வந்தபோது,  அந்த  ஸ்திரீ:  நீர்தானா  யோவாப்<Joab>  என்று  கேட்டாள்;  அவன்  நான்தான்  என்றான்;  அப்பொழுது,  அவள்  அவனைப்  பார்த்து:  உமது  அடியாளின்  வார்த்தைகளைக்  கேளும்  என்றாள்;  அவன்:  கேட்கிறேன்  என்றான்.  {2Sam  20:17}

 

அப்பொழுது  அவள்:  பூர்வகாலத்து  ஜனங்கள்  ஆபேலிலே<Abel>  விசாரித்தால்  வழக்குத்  தீரும்  என்பார்கள்.  {2Sam  20:18}

 

இஸ்ரவேலிலே<Israel>  நான்  சமாதானமும்  உண்மையுமுள்ளவளாயிருக்கையில்,  நீர்  இஸ்ரவேலிலே<Israel>  தாய்  பட்டணமாயிருக்கிறதை  நிர்மூலமாக்கப்  பார்க்கிறீரோ?  நீர்  கர்த்தருடைய  சுதந்தரத்தை  விழுங்கவேண்டியது  என்ன  என்றாள்.  {2Sam  20:19}

 

யோவாப்<Joab>  பிரதியுத்தரமாக:  விழுங்கவேண்டும்  அழிக்கவேண்டும்  என்கிற  ஆசை  எனக்கு  வெகுதூரமாயிருப்பதாக.  {2Sam  20:20}

 

காரியம்  அப்படியல்ல,  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபா<Sheba>  என்னும்  பேருள்ள  எப்பிராயீம்<Ephraim>  பர்வதத்தானாயிருக்கிற  ஒரு  மனுஷன்,  ராஜாவாகிய  தாவீதுக்கு<David>  விரோதமாய்த்  தன்  கையை  ஓங்கினான்;  அவனைமாத்திரம்  ஒப்புக்கொடுங்கள்;  அப்பொழுது  பட்டணத்தை  விட்டுப்போவேன்  என்றான்.  அப்பொழுது  அந்த  ஸ்திரீ  யோவாபைப்<Joab>  பார்த்து:  இதோ,  அவன்  தலை  மதிலின்மேலிருந்து  உம்மிடத்திலே  போடப்படும்  என்று  சொல்லி,  {2Sam  20:21}

 

அவள்  ஜனங்களிடத்தில்  போய்ப்  புத்தியாய்ப்  பேசினதினால்,  அவர்கள்  பிக்கிரியின்<Bichri>  குமாரனாகிய  சேபாவின்<Sheba>  தலையை  வெட்டி,  யோவாபிடத்திலே<Joab>  போட்டார்கள்;  அப்பொழுது  அவன்  எக்காளம்  ஊதினான்;  அவரவர்  பட்டணத்தை  விட்டுக்  கலைந்து,  தங்கள்  கூடாரங்களுக்குப்  புறப்பட்டுப்போனார்கள்;  யோவாபும்<Joab>  ராஜாவிடத்துக்குப்  போகும்படி  எருசலேமுக்குத்<Jerusalem>  திரும்பினான்.  {2Sam  20:22}

 

யோவாப்<Joab>  இஸ்ரவேலுடைய<Israel>  எல்லா  இராணுவத்தின்மேலும்,  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயா<Benaiah>  கிரேத்தியர்மேலும்<Cherethites>  பிலேத்தியர்மேலும்<Pelethites>  தலைவராயிருந்தார்கள்.  {2Sam  20:23}

 

அதோராம்<Adoram>  பகுதிகளை  வாங்குகிறவனும்,  அகிலூதின்<Ahilud>  குமாரனாகிய  யோசபாத்<Jehoshaphat>  மந்திரியும்,  {2Sam  20:24}

 

சேவா<Sheva>  சம்பிரதியும்,  சாதோக்கும்<Zadok>  அபியத்தாரும்<Abiathar>  ஆசாரியருமாயிருந்தார்கள்.  {2Sam  20:25}

 

யயீரியனாகிய<Jairite>  ஈராவும்<Ira>  தாவீதுக்குப்<David>  பிரதானியாயிருந்தான்.  {2Sam  20:26}

 

தாவீதின்<David>  நாட்களில்  மூன்று  வருஷம்  ஓயாத  பஞ்சம்  உண்டாயிருந்தது;  அப்பொழுது  தாவீது<David>  கர்த்தருடைய  சமுகத்தில்  விசாரித்தான்.  கர்த்தர்:  கிபியோனியரைக்<Gibeonites>  கொன்றுபோட்ட  சவுலுக்காகவும்<Saul>,  இரத்தப்பிரியரான  அவன்  வீட்டாருக்காகவும்  இது  உண்டாயிற்று  என்றார்.  {2Sam  21:1}

 

அப்பொழுது  ராஜா:  கிபியோனியரை<Gibeonites>  அழைப்பித்தான்;  கிபியோனியரோ<Gibeonites>,  இஸ்ரவேல்<Israel>  புத்திரராயிராமல்  எமோரியரில்<Amorites>  மீதியாயிருந்தவர்கள்;  அவர்களுக்கு  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  ஆணையிட்டிருந்தும்,  சவுல்<Saul>  இஸ்ரவேல்<Israel>  புத்திரருக்காகவும்  யூதாவுக்காகவும்<Judah>  காண்பித்த  வைராக்கியத்தினால்  அவர்களை  வெட்ட  வகைதேடினான்.  {2Sam  21:2}

 

ஆகையால்  தாவீது<David>  கிபியோனியரைப்<Gibeonites>  பார்த்து:  நான்  உங்களுக்குச்  செய்யவேண்டியது  என்ன?  நீங்கள்  கர்த்தருடைய  சுதந்தரத்தை  ஆசீர்வதிக்கும்படிக்கு,  நான்  செய்யவேண்டிய  பிராயச்சித்தம்  என்ன  என்று  கேட்டான்.  {2Sam  21:3}

 

அப்பொழுது  கிபியோனியர்<Gibeonites>  அவனைப்  பார்த்து:  சவுலோடும்<Saul>  அவன்  வீட்டாரோடும்  எங்களுக்கு  இருக்கிற  காரியத்திற்காக  எங்களுக்கு  வெள்ளியும்  பொன்னும்  தேவையில்லை;  இஸ்ரவேலில்<Israel>  ஒருவனைக்  கொன்றுபோடவேண்டும்  என்பதும்  எங்கள்  விருப்பம்  அல்ல  என்றார்கள்.  அப்பொழுது  அவன்:  அப்படியானால்,  நான்  உங்களுக்கு  என்ன  செய்யவேண்டும்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டான்.  {2Sam  21:4}

 

அவர்கள்  ராஜாவை  நோக்கி:  நாங்கள்  இஸ்ரவேலின்<Israel>  எல்லையிலெங்கும்  நிலைக்காதபடிக்கு,  அழிந்துபோக  எவன்  எங்களை  நிர்மூலமாக்கி  எங்களுக்குப்  பொல்லாப்புச்  செய்ய  நினைத்தானோ,  {2Sam  21:5}

 

அவன்  குமாரரில்  ஏழுபேர்  கர்த்தர்  தெரிந்துகொண்ட  சவுலின்<Saul>  ஊராகிய  கிபியாவிலே<Gibeah>  நாங்கள்  அவர்களைக்  கர்த்தருக்கென்று  தூக்கிப்போட,  எங்களுக்கு  ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்  என்றார்கள்.  நான்  அவர்களை  ஒப்புக்கொடுப்பேன்  என்று  ராஜா  சொன்னான்.  {2Sam  21:6}

 

ஆனாலும்  தாவீதும்<David>  சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தானும்<Jonathan>  கர்த்தரைக்கொண்டு  இட்ட  ஆணையினிமித்தம்,  ராஜா  சவுலின்<Saul>  குமாரனாகிய  யோனத்தானின்<Jonathan>  மகன்  மேவிபோசேத்தைத்<Mephibosheth>  தப்பவிட்டு,  {2Sam  21:7}

 

ஆயாவின்<Aiah>  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்<Rizpah>  சவுலுக்குப்<Saul>  பெற்ற  அவளுடைய  இரண்டு  குமாரராகிய  அர்மோனியையும்<Armoni>  மேவிபோசேத்தையும்<Mephibosheth>,  சவுலின்<Saul>  குமாரத்தியாகிய  மீகாள்<Michal>  மேகோலாத்தியனான<Meholathite>  பர்சிலாவின்<Barzillai>  குமாரனாகிய  ஆதரியேலுக்குப்<Adriel>  பெற்ற  அவளுடைய  ஐந்து  குமாரரையும்  பிடித்து,  {2Sam  21:8}

 

அவர்களைக்  கிபியோனியர்<Gibeonites>  கையில்  ஒப்புக்கொடுத்தான்;  அவர்களைக்  கர்த்தருடைய  சமுகத்தில்  மலையின்மேல்  தூக்கிப்போட்டார்கள்;  அப்படியே  அவர்கள்  ஏழுபேரும்  ஒருமிக்க  விழுந்தார்கள்;  வாற்கோதுமை  அறுப்பு  துவக்குகிற  அறுப்புக்காலத்தின்  முந்தினநாட்களிலே  அவர்கள்  கொன்றுபோடப்பட்டார்கள்.  {2Sam  21:9}

 

அப்பொழுது  ஆயாவின்<Aiah>  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்<Rizpah>  இரட்டுப்புடவையை  எடுத்துக்கொண்டுபோய்,  அதைப்  பாறையின்மேல்  விரித்து,  அறுப்புநாளின்  துவக்கம்  முதற்கொண்டு  வானத்திலிருந்து  அவர்கள்மேல்  மழை  பெய்யுமட்டும்  பகலில்  ஆகாயத்துப்  பறவைகளாகிலும்  இரவில்  காட்டுமிருகங்களாகிலும்  அவர்கள்மேல்  விழவொட்டாதிருந்தாள்.  {2Sam  21:10}

 

ஆயாவின்<Aiah>  குமாரத்தியாகிய  ரிஸ்பாள்<Rizpah>  என்னும்  சவுலின்<Saul>  மறுமனையாட்டி  செய்தது  தாவீதுக்கு<David>  அறிவிக்கப்பட்டபோது,  {2Sam  21:11}

 

தாவீது<David>  போய்,  பெலிஸ்தர்<Philistines>  கில்போவாவிலே<Gilboa>  சவுலை<Saul>  வெட்டினபோது,  பெத்சானின்<Bethshan>  வீதியிலே  தூக்கிப்போடப்பட்டதும்,  கீலேயாத்திலுள்ள<Gilead>  யாபேஸ்<Jabesh>  பட்டணத்தார்  அங்கே  போய்த்  திருட்டளவாய்க்  கொண்டுவந்ததுமான  சவுலின்<Saul>  எலும்புகளையும்,  அவன்  குமாரனான  யோனத்தானின்<Jonathan>  எலும்புகளையும்,  அவர்களிடத்திலிருந்து  எடுத்து,  {2Sam  21:12}

 

அங்கே  இருந்து  அவர்களைக்  கொண்டுவந்து,  தூக்கிப்போடப்பட்டவர்களின்  எலும்புகளையும்  அவைகளோடே  சேர்த்து,  {2Sam  21:13}

 

சவுலின்<Saul>  எலும்புகளையும்  அவன்  குமாரனாகிய  யோனத்தானின்<Jonathan>  எலும்புகளையும்,  பென்யமீன்<Benjamin>  தேசத்துச்  சேலா<Zelah>  ஊரிலிருக்கிற  அவன்  தகப்பனாகிய  கீசின்<Kish>  கல்லறையில்  அடக்கம்பண்ணுவித்தான்;  ராஜா  கட்டளையிட்டபடியெல்லாம்  செய்தார்கள்;  அதற்குப்பின்பு  தேவன்  தேசத்திற்காகச்  செய்யப்பட்ட  வேண்டுதலைக்  கேட்டருளினார்.  {2Sam  21:14}

 

பின்பு  பெலிஸ்தர்<Philistines>  இஸ்ரவேலின்மேல்<Israel>  யுத்தம்செய்தார்கள்;  அப்பொழுது  தாவீதும்<David>  அவனோடேகூட  அவன்  சேவகரும்போய்,  பெலிஸ்தரோடு<Philistines>  யுத்தம்பண்ணினார்கள்;  தாவீது<David>  விடாய்த்துப்போனான்.  {2Sam  21:15}

 

அப்பொழுது  முந்நூறு  சேக்கல்நிறை  வெண்கலமான  ஈட்டியைப்  பிடிக்கிறவனும்,  புதுப்பட்டயத்தை  அரையிலே  கட்டிக்கொண்டவனுமான  இஸ்பிபெனோப்<Ishbibenob>  என்னும்  இராட்சத  புத்திரரில்  ஒருவன்  தாவீதை<David>  வெட்டவேண்டும்  என்று  இருந்தான்.  {2Sam  21:16}

 

செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  அபிசாய்<Abishai>  ராஜாவுக்கு  உதவியாக  வந்து,  பெலிஸ்தனை<Philistine>  வெட்டிக்  கொன்றுபோட்டான்.  அப்பொழுது  தாவீதின்<David>  மனுஷர்:  இஸ்ரவேலின்<Israel>  விளக்கு  அணைந்துபோகாதபடிக்கு,  நீர்  இனி  எங்களோடே  யுத்தத்திற்குப்  புறப்படவேண்டாம்  என்று  அவனுக்கு  ஆணையிட்டுச்  சொன்னார்கள்.  {2Sam  21:17}

 

அதற்குப்  பின்பு  பெலிஸ்தரோடே<Philistines>  திரும்பவும்  கோபிலே<Gob>  யுத்தம்  நடந்தது;  ஊசாத்தியனாகிய<Hushathite>  சீபேக்காய்<Sibbechai>  இராட்சத  சந்ததியான  சாப்பை<Saph>  வெட்டிப்போட்டான்.  {2Sam  21:18}

 

பெலிஸ்தரோடு<Philistines>  இன்னும்  வேறொரு  யுத்தம்  கோபிலே<Gob>  உண்டானபோது,  யாரெயொர்கிமின்<Jaareoregim>  குமாரனாகிய  எல்க்கானான்<Elhanan>  என்னும்  பெத்லெகேமியன்<Bethlehemite>  காத்<Gath//Gittite>  ஊரானாகிய  கோலியாத்தின்<Goliath>  சகோதரனை  வெட்டினான்;  அவன்  ஈட்டித்  தாங்கானது  நெய்கிறவர்களின்  படைமரம்  அவ்வளவு  பெரிதாயிருந்தது.  {2Sam  21:19}

 

இன்னும்  ஒரு  யுத்தம்  காத்<Gath>  ஊரிலே  நடந்தபோது,  அங்கே  நெட்டையனான  ஒரு  மனுஷன்  இருந்தான்;  அவன்  கைகளில்  அவ்வாறு  விரல்களும்  அவன்  கால்களில்  அவ்வாறு  விரல்களும்,  ஆக  இருபத்து  நான்கு  விரல்களுள்ளவன்;  இவனும்  இராட்சத  பிறவியாயிருந்து,  {2Sam  21:20}

 

இஸ்ரவேலை<Israel>  நிந்தித்தான்;  தாவீதின்<David>  சகோதரனான  சீமேயாவின்<Shimea>  குமாரனாகிய  யோனத்தான்<Jonathan>  அவனை  வெட்டினான்.  {2Sam  21:21}

 

இந்த  நாலுபேரும்  காத்தூரிலே<Gath>  இராட்சதனுக்குப்  பிறந்தவர்கள்;  இவர்கள்  தாவீதின்<David>  கையினாலும்  அவன்  சேவகரின்  கையினாலும்  மடிந்தார்கள்.  {2Sam  21:22}

 

கர்த்தர்  தாவீதை<David>  அவனுடைய  எல்லாச்  சத்துருக்களின்  கைக்கும்,  சவுலின்<Saul>  கைக்கும்,  நீங்கலாக்கி  விடுவித்தபோது,  அவன்  கர்த்தருக்கு  முன்பாகப்  பாடின  பாட்டு:  {2Sam  22:1}

 

கர்த்தர்  என்  கன்மலையும்,  என்  கோட்டையும்,  என்  ரட்சகருமானவர்.  {2Sam  22:2}

 

தேவன்  நான்  நம்பியிருக்கிற  துருக்கமும்,  என்  கேடகமும்,  என்  ரட்சணியக்  கொம்பும்,  என்  உயர்ந்த  அடைக்கலமும்,  என்  புகலிடமும்,  என்  ரட்சகருமானவர்;  என்னை  வல்லடிக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கிறவர்  அவரே.  {2Sam  22:3}

 

ஸ்துதிக்குப்  பாத்திரராகிய  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிடுவேன்;  அதனால்  என்  சத்துருக்களுக்கு  நீங்கலாக்கி  ரட்சிக்கப்படுவேன்.  {2Sam  22:4}

 

மரண  அலைகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டு,  துர்ச்சனப்பிரவாகம்  என்னைப்  பயப்படுத்தினது.  {2Sam  22:5}

 

பாதாளக்  கட்டுகள்  என்னைச்  சூழ்ந்துகொண்டது;  மரணக்கண்ணிகள்  என்மேல்  விழுந்தது.  {2Sam  22:6}

 

எனக்கு  உண்டான  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டு,  என்  தேவனை  நோக்கி  அபயமிட்டேன்;  தமது  ஆலயத்திலிருந்து  என்  சத்தத்தைக்  கேட்டார்;  என்  கூப்பிடுதல்  அவர்  செவிகளில்  ஏறிற்று.  {2Sam  22:7}

 

அப்பொழுது  பூமி  அசைந்து  அதிர்ந்தது;  அவர்  கோபங்கொண்டபடியால்  வானத்தின்  அஸ்திபாரங்கள்  குலுங்கி  அசைந்தது.  {2Sam  22:8}

 

அவர்  நாசியிலிருந்து  பட்சிக்கிற  புகை  எழும்பிற்று,  அவர்  வாயிலிருந்து  அக்கினி  புறப்பட்டது,  அதனால்  தழல்  மூண்டது.  {2Sam  22:9}

 

வானங்களைத்  தாழ்த்தி  இறங்கினார்;  அவர்  பாதங்களின்கீழ்  காரிருள்  இருந்தது.  {2Sam  22:10}

 

கேருபீனின்மேல்<cherub>  ஏறி  வேகமாய்ச்  சென்றார்.  காற்றின்  செட்டைகளின்மீதில்  தரிசனமானார்.  {2Sam  22:11}

 

ஆகாயத்து  மேகங்களிலே  கூடிய  தண்ணீர்களின்  இருளைத்  தம்மைச்  சுற்றிலும்  இருக்கும்  கூடாரமாக்கினார்.  {2Sam  22:12}

 

அவருடைய  சந்நிதிப்  பிரகாசத்தினால்  நெருப்புத்தழலும்  எரிந்தது.  {2Sam  22:13}

 

கர்த்தர்  வானத்திலிருந்து  குமுறி,  உன்னதமானவர்  தமது  சத்தத்தைத்  தொனிக்கப்பண்ணினார்.  {2Sam  22:14}

 

அவர்  அம்புகளை  எய்து,  அவர்களைச்  சிதற  அடித்து,  மின்னல்களைப்  பிரயோகித்து,  அவர்களைக்  கலங்கப்பண்ணினார்.  {2Sam  22:15}

 

கர்த்தருடைய  கண்டிதத்தினாலும்,  அவருடைய  நாசியின்  சுவாசக்  காற்றினாலும்  சமுத்திரத்தின்  மதகுகள்  திறவுண்டு,  பூதலத்தின்  அஸ்திபாரங்கள்  காணப்பட்டது.  {2Sam  22:16}

 

உயரத்திலிருந்து  அவர்  கை  நீட்டி,  என்னைப்  பிடித்து,  ஜலப்பிரவாகத்திலிருக்கிற  என்னைத்  தூக்கிவிட்டார்.  {2Sam  22:17}

 

என்னிலும்  பலவான்களாயிருந்த  என்  பலத்த  சத்துருவுக்கும்  என்  பகைஞருக்கும்  என்னை  விடுவித்தார்.  {2Sam  22:18}

 

என்  ஆபத்துநாளிலே  எனக்கு  எதிரிட்டு  வந்தார்கள்;  கர்த்தரோ  எனக்கு  ஆதரவாயிருந்தார்.  {2Sam  22:19}

 

என்மேல்  அவர்  பிரியமாயிருந்தபடியால்,  விசாலமான  இடத்திலே  என்னைக்  கொண்டுவந்து,  என்னைத்  தப்புவித்தார்.  {2Sam  22:20}

 

கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாக  எனக்குப்  பதில்  அளித்தார்;  என்  கைகளின்  சுத்தத்திற்குத்தக்கதாக  எனக்குச்  சரிக்கட்டினார்.  {2Sam  22:21}

 

கர்த்தருடைய  வழிகளைக்  காத்துக்கொண்டுவந்தேன்;  நான்  என்  தேவனுக்குத்  துரோகம்பண்ணினதில்லை.  {2Sam  22:22}

 

அவருடைய  நியாயங்களையெல்லாம்  எனக்கு  முன்பாக  நிறுத்தினேன்;  நான்  அவருடைய  பிரமாணங்களை  விட்டு  விலகாமல்,  {2Sam  22:23}

 

அவர்  முன்பாக  மனஉண்மையாயிருந்து,  என்  துர்க்குணத்திற்கு  என்னை  விலக்கிக்  காத்துக்கொண்டேன்.  {2Sam  22:24}

 

ஆகையால்  கர்த்தர்  என்  நீதிக்குத்தக்கதாகவும்,  தம்முடைய  கண்களுக்குமுன்  இருக்கிற  என்  சுத்தத்திற்குத்தக்கதாகவும்  எனக்குப்  பலனளித்தார்.  {2Sam  22:25}

 

தயவுள்ளவனுக்கு  நீர்  தயவுள்ளவராகவும்,  உத்தமனுக்கு  நீர்  உத்தமராகவும்,  {2Sam  22:26}

 

புனிதனுக்கு  நீர்  புனிதராகவும்,  மாறுபாடானவனுக்கு  நீர்  மாறுபடுகிறவராகவும்  தோன்றுவீர்.  {2Sam  22:27}

 

சிறுமைப்பட்ட  ஜனத்தை  ரட்சிப்பீர்;  மேட்டிமையானவர்களைத்  தாழ்த்த,  உம்முடைய  கண்கள்  அவர்களுக்கு  விரோதமாய்த்  திருப்பப்பட்டிருக்கிறது.  {2Sam  22:28}

 

கர்த்தராகிய  தேவரீர்  என்  விளக்காயிருக்கிறீர்;  கர்த்தர்  என்  இருளை  வெளிச்சமாக்குகிறவர்.  {2Sam  22:29}

 

உம்மாலே  நான்  ஒரு  சேனைக்குள்  பாய்ந்துபோவேன்;  என்  தேவனாலே  ஒரு  மதிலைத்  தாண்டுவேன்.  {2Sam  22:30}

 

தேவனுடைய  வழி  உத்தமமானது;  கர்த்தருடைய  வசனம்  புடமிடப்பட்டது;  தம்மை  நம்புகிற  அனைவருக்கும்  அவர்  கேடகமாயிருக்கிறார்.  {2Sam  22:31}

 

கர்த்தரை  அல்லாமல்  தேவன்  யார்?  நம்முடைய  தேவனையன்றி  கன்மலையும்  யார்?  {2Sam  22:32}

 

தேவன்  எனக்குப்  பலத்த  அரணானவர்;  அவர்  என்  வழியைச்  செவ்வைப்படுத்துகிறவர்.  {2Sam  22:33}

 

அவர்  என்  கால்களை  மான்களுடைய  கால்களைப்போலாக்கி,  என்  உயர்தலங்களில்  என்னை  நிறுத்துகிறார்.  {2Sam  22:34}

 

வெண்கல  வில்லும்  என்  புயங்களால்  வளையும்படி,  என்  கைகளை  யுத்தத்திற்குப்  பழக்குவிக்கிறார்.  {2Sam  22:35}

 

உம்முடைய  ரட்சிப்பின்  கேடகத்தையும்  எனக்குத்  தந்தீர்;  உம்முடைய  காருணியம்  என்னைப்  பெரியவனாக்கும்.  {2Sam  22:36}

 

என்  கால்கள்  வழுவாதபடிக்கு  நான்  நடக்கிற  வழியை  அகலமாக்கினீர்.  {2Sam  22:37}

 

என்  சத்துருக்களைப்  பின்தொடர்ந்து  அவர்களை  அழிப்பேன்;  அவர்களை  நிர்மூலமாக்கும்வரைக்கும்  திரும்பேன்.  {2Sam  22:38}

 

அவர்கள்  எழுந்திருக்கமாட்டாதபடிக்கு  என்  பாதங்களின்  கீழ்  விழுந்தார்கள்;  அவர்களை  முறிய  அடித்து  வெட்டினேன்.  {2Sam  22:39}

 

யுத்தத்திற்கு  நீர்  என்னைப்  பலத்தால்  இடைகட்டி,  என்மேல்  எழும்பினவர்களை  என்கீழ்  மடங்கப்பண்ணினீர்.  {2Sam  22:40}

 

நான்  என்  பகைஞரைச்  சங்கரிக்கும்படியாக,  என்  சத்துருக்களின்  பிடரியை  எனக்கு  ஒப்புக்கொடுத்தீர்.  {2Sam  22:41}

 

அவர்கள்  நோக்கிப்  பார்க்கிறார்கள்,  அவர்களை  ரட்சிப்பார்  ஒருவருமில்லை;  கர்த்தரை  நோக்கிப்பார்க்கிறார்கள்,  அவர்களுக்கு  அவர்  உத்தரவு  கொடுக்கிறதில்லை.  {2Sam  22:42}

 

அவர்களை  பூமியின்  தூளாக  இடித்து,  தெருக்களின்  சேற்றைப்போல  அவர்களை  மிதித்து  சிதறப்பண்ணுகிறேன்.  {2Sam  22:43}

 

என்  ஜனத்தின்  சண்டைகளுக்கு  நீர்  என்னை  விலக்கிவிட்டு,  ஜாதிகளுக்கு  என்னைத்  தலைவனாக  வைக்கிறீர்;  நான்  அறியாத  ஜனங்கள்  என்னைச்  சேவிக்கிறார்கள்.  {2Sam  22:44}

 

அந்நியர்  இச்சகம்  பேசி  எனக்கு  அடங்கி,  என்  சத்தத்தைக்  கேட்டவுடனே  எனக்குக்  கீழ்ப்படிகிறார்கள்.  {2Sam  22:45}

 

அந்நியர்  முனைவிழுந்துபோய்,  தங்கள்  அரண்களிலிருந்து  தத்தளிப்பாய்ப்  புறப்படுகிறார்கள்.  {2Sam  22:46}

 

கர்த்தர்  ஜீவனுள்ளவர்;  என்  கன்மலையானவர்  ஸ்தோத்திரிக்கப்படுவாராக;  என்  ரட்சிப்பின்  கன்மலையாகிய  தேவன்  உயர்ந்திருப்பாராக.  {2Sam  22:47}

 

அவர்  எனக்காகப்  பழிக்குப்  பழிவாங்கி,  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிற  தேவனானவர்.  {2Sam  22:48}

 

அவரே  என்  சத்துருக்களுக்கு  என்னை  விலக்கி  விடுவிக்கிறவர்;  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறவர்கள்மேல்  என்னை  உயர்த்திக்  கொடுமையான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவிக்கிறீர்.  {2Sam  22:49}

 

இதினிமித்தம்  கர்த்தாவே,  ஜாதிகளுக்குள்  உம்மைத்  துதித்து,  உம்முடைய  நாமத்திற்குச்  சங்கீதம்  பாடுவேன்.  {2Sam  22:50}

 

தாம்  ஏற்படுத்தின  ராஜாவுக்கு  மகத்தான  ரட்சிப்பை  அளித்து,  தாம்  அபிஷேகம்பண்ணின  தாவீதுக்கும்<David>  அவன்  சந்ததிக்கும்  சதாகாலமும்  கிருபை  செய்கிறார்.  {2Sam  22:51}

 

தாவீதுடைய<David>  கடைசி  வார்த்தைகள்:  மேன்மையாய்  உயர்த்தப்பட்டு,  யாக்கோபுடைய<Jacob>  தேவனால்  அபிஷேகம்  பெற்று,  இஸ்ரவேலின்<Israel>  சங்கீதங்களை  இன்பமாய்ப்  பாடின  ஈசாயின்<Jesse>  குமாரனாகிய  தாவீது<David>  என்னும்  புருஷன்  சொல்லுகிறது  என்னவென்றால்;  {2Sam  23:1}

 

கர்த்தருடைய  ஆவியானவர்  என்னைக்கொண்டு  பேசினார்;  அவருடைய  வசனம்  என்னுடைய  நாவில்  இருந்தது.  {2Sam  23:2}

 

இஸ்ரவேலின்<Israel>  தேவனும்  இஸ்ரவேலின்<Israel>  கன்மலையுமானவர்  எனக்குச்  சொல்லி  உரைத்ததாவது:  நீதிபரராய்  மனுஷரை  ஆண்டு,  தெய்வபயமாய்த்  துரைத்தனம்பண்ணுகிறவர்  இருப்பார்.  {2Sam  23:3}

 

அவர்  காலையில்  மந்தாரமில்லாமல்  உதித்து,  மழைக்குப்பிற்பாடு  தன்  காந்தியினால்  புல்லைப்  பூமியிலிருந்து  முளைக்கப்பண்ணுகிற  சூரியனுடைய  விடியற்கால  வெளிச்சத்தைப்போல  இருப்பார்  என்றார்.  {2Sam  23:4}

 

என்னுடைய  வீடு  தேவனிடத்தில்  இப்படியிராதோ?  சகலமும்  திட்டம்பண்ணப்பட்டிருக்கிற  நிச்சயமான  நித்திய  உடன்படிக்கையை  என்னுடன்  அவர்  செய்திருக்கிறார்;  ஆதலால்  என்னுடைய  எல்லா  ரட்சிப்பும்  எல்லா  வாஞ்சையும்  வளர்ந்தோங்கச்  செய்யாரோ?  {2Sam  23:5}

 

பேலியாளின்<Belial>  மக்கள்  அனைவருமோ,  கையினால்  பிடிக்கப்படக்கூடாததாய்  எறிந்துபோடப்படவேண்டிய  முள்ளுக்குச்  சமானமானவர்கள்.  {2Sam  23:6}

 

அவைகளை  ஒருவன்  தொடப்போனால்,  இருப்பாயுதத்தையும்  ஈட்டித்தாங்கையும்  கெட்டியாய்ப்  பிடித்துக்கொள்ளவேண்டும்;  அவைகள்  இருக்கிற  இடத்தில்தானே  அக்கினியினால்  முற்றும்  சுட்டெரிக்கப்படும்  என்றான்.  {2Sam  23:7}

 

தாவீதுக்கு<David>  இருந்த  பராக்கிரமசாலிகளின்  நாமங்களாவன:  தக்கெமோனியின்<Tachmonite>  குமாரனாகிய  யோசேப்பாசெபெத்<Josheb-Basshebeth>  என்பவன்  சேர்வைக்காரரின்  தலைவன்;  இவன்  எண்ணூறுபேர்களின்மேல்  விழுந்து,  அவர்களை  ஒருமிக்க  வெட்டிப்போட்ட  அதீனோஏஸ்னி<Adino  the  Eznite>  ஊரானானவன்.  {2Sam  23:8}

 

இவனுக்கு  இரண்டாவது,  அகோயின்<Ahohite>  குமாரனாகிய  தோதோவின்<Dodo>  மகன்  எலெயாசார்<Eleazar>  என்பவன்;  இவன்  பெலிஸ்தர்<Philistines>  யுத்தத்திற்குக்  கூடின  ஸ்தலத்திலே  இஸ்ரவேல்<Israel>  மனுஷர்  போகையில்,  தாவீதோடே<David>  இருந்து,  பெலிஸ்தரை<Philistines>  நிந்தித்த  மூன்று  பராக்கிரமசாலிகளில்  ஒருவனாயிருந்தான்.  {2Sam  23:9}

 

இவன்  எழும்பித்  தன்  கைசலித்து,  தன்  கை  பட்டயத்தோடு  ஒட்டிக்கொள்ளுமட்டும்  பெலிஸ்தரை<Philistines>  வெட்டினான்;  அன்றையதினம்  கர்த்தர்  பெரிய  ரட்சிப்பை  நடப்பித்தார்;  ஜனங்கள்  கொள்ளையிடமாத்திரம்  அவனைப்  பின்சென்றார்கள்.  {2Sam  23:10}

 

இவனுக்கு  மூன்றாவது,  ஆகேயின்<Agee>  குமாரனாகிய  சம்மா<Shammah>  என்னும்  ஆராரியன்<Hararite>;  சிறுபயறு  நிறைந்த  வயலிருந்த  இடத்திலே  பெலிஸ்தர்<Philistines>  ஏராளமாய்க்  கூடி,  ஜனங்கள்  பெலிஸ்தரைக்<Philistines>  கண்டு  ஓடுகிறபோது,  {2Sam  23:11}

 

இவன்  அந்த  நிலத்தின்  நடுவிலே  நின்று  அதைக்  காப்பாற்றி,  பெலிஸ்தரை<Philistines>  மடங்கடித்துப்போட்டான்;  அதனால்  கர்த்தர்  பெரிய  ரட்சிப்பை  நடப்பித்தார்.  {2Sam  23:12}

 

முப்பது  தலைவருக்குள்ளே  இந்த  மூன்றுபேரும்  அறுப்புநாளிலே  அதுல்லாம்<Adullam>  கெபியிலே  தாவீதிடத்தில்<David>  போயிருந்தார்கள்;  பெலிஸ்தரின்<Philistines>  தண்டு  ரெப்பாயீம்<Rephaim>  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கினபோது,  {2Sam  23:13}

 

தாவீது<David>  அரணான  ஒரு  இடத்தில்  இருந்தான்;  அப்பொழுது  பெலிஸ்தரின்<Philistines>  தாணையம்  பெத்லெகேமிலே<Bethlehem>  இருந்தது.  {2Sam  23:14}

 

தாவீது<David>  பெத்லெகேமின்<Bethlehem>  ஒலிமுகவாசலில்  இருக்கிற  கிணற்றின்  தண்ணீரின்மேல்  ஆவல்கொண்டு:  என்  தாகத்திற்குக்  கொஞ்சந்  தண்ணீர்  கொண்டுவருகிறவன்  யார்  என்றான்.  {2Sam  23:15}

 

அப்பொழுது  இந்த  மூன்று  பராக்கிரமசாலிகளும்  பெலிஸ்தரின்<Philistines>  பாளயத்திலே  துணிந்து  புகுந்துபோய்,  பெத்லெகேமின்<Bethlehem>  ஒலிமுகவாசலில்  இருக்கிற  கிணற்றிலே  தண்ணீர்  மொண்டு,  தாவீதினிடத்தில்<David>  கொண்டுவந்தார்கள்;  ஆனாலும்  அவன்  அதைக்  குடிக்க  மனதில்லாமல்  அதைக்  கர்த்தருக்கென்று  ஊற்றிப்போட்டு:  {2Sam  23:16}

 

கர்த்தாவே,  தங்கள்  பிராணனை  எண்ணாமல்  போய்வந்த  அந்த  மனுஷரின்  இரத்தத்தைக்  குடிக்கும்  இந்தச்செயல்  எனக்குத்  தூரமாயிருப்பதாக  என்று  சொல்லி,  அதைக்  குடிக்க  மனதில்லாதிருந்தான்;  இப்படி  இந்த  மூன்று  பராக்கிரமசாலிகளும்  செய்தார்கள்.  {2Sam  23:17}

 

யோவாபின்<Joab>  சகோதரனும்  செருயாவின்<Zeruiah>  குமாரனுமான  அபிசாய்<Abishai>  என்பவன்,  அந்த  மூன்றுபேரில்  பிரதானமானவன்;  அவன்  தன்  ஈட்டியை  ஓங்கி  முந்நூறுபேரை  மடங்கடித்ததினால்,  இந்த  மூன்றுபேர்களில்  பேர்பெற்றவனானான்.  {2Sam  23:18}

 

இந்த  மூன்றுபேர்களில்  அவன்  மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ,  அவர்களில்  தலைவனானான்;  ஆனாலும்  அந்த  முந்தின  மூன்று  பேருக்கு  அவன்  சமமானவன்  அல்ல.  {2Sam  23:19}

 

பராக்கிரமசாலியாகிய  யோய்தாவின்<Jehoiada>  குமாரனும்  கப்செயேல்<Kabzeel>  ஊரானுமாகிய  பெனாயாவும்<Benaiah>  செய்கைகளில்  வல்லவனாயிருந்தான்;  அவன்  மோவாப்<Moab>  தேசத்தின்  இரண்டு  வலுமையான  சிங்கங்களைக்  கொன்றதுமல்லாமல்,  உறைந்த  மழைகாலத்தில்  அவன்  இறங்கிப்போய்,  ஒரு  கெபிக்குள்  இருந்த  ஒரு  சிங்கத்தையும்  கொன்றுபோட்டான்.  {2Sam  23:20}

 

அவன்  பயங்கர  ரூபமான  ஒரு  எகிப்தியனையும்<Egyptian>  கொன்றுபோட்டான்;  அந்த  எகிப்தியன்<Egyptian>  கையில்  ஒரு  ஈட்டியிருக்கையில்,  இவன்  ஒரு  தடியைப்  பிடித்து,  அவனிடத்தில்  போய்,  அந்த  எகிப்தியன்<Egyptian>  கையிலிருந்த  ஈட்டியைப்  பறித்து,  அவன்  ஈட்டியினாலே  அவனைக்  கொன்றுபோட்டான்.  {2Sam  23:21}

 

இவைகளை  யோய்தாவின்<Jehoiada>  குமாரனாகிய  பெனாயா<Benaiah>  செய்தபடியினால்,  மூன்று  பராக்கிரமசாலிகளுக்குள்ளே  பேர்பெற்றவனாயிருந்தான்.  {2Sam  23:22}

 

முப்பதுபேரிலும்  இவன்  மேன்மையுள்ளவன்;  ஆனாலும்  அந்த  முந்தின  மூன்று  பேருக்கும்  இவன்  சமானமானவன்  அல்ல;  இவனைத்  தாவீது<David>  தன்  மெய்க்காவலருக்குத்  தலைவனாக  வைத்தான்.  {2Sam  23:23}

 

யோவாபின்<Joab>  தம்பி  ஆசகேல்<Asahel>  மற்ற  முப்பதுபேரில்  ஒருவன்;  அவர்கள்  யாரெனில்,  பெத்லெகேம்<Bethlehem>  ஊரானாகிய  தோதோவின்<Dodo>  குமாரன்  எல்க்கானான்<Elhanan>,  {2Sam  23:24}

 

ஆரோதியனாகிய<Harodite>  சம்மா<Shammah>,  ஆரோதியனாகிய<Harodite>  எலிக்கா<Elika>,  {2Sam  23:25}

 

பல்தியனாகிய<Paltite>  ஏலெஸ்<Helez>,  இக்கேசின்<Ikkesh>  குமாரனாகிய  ஈரா<Ira>  என்னும்  தெக்கோவியன்<Tekoite>.  {2Sam  23:26}

 

ஆனதோத்தியனாகிய<Anethothite>  அபியேசர்<Abiezer>,  ஊசாத்தியனாகிய<Hushathite>  மெபுன்னாயி<Mebunnai>,  {2Sam  23:27}

 

அகோகியனாகிய<Ahohite>  சல்மோன்<Zalmon>,  நெத்தோபாத்தியனாகிய<Netophathite>  மகராயி<Maharai>,  {2Sam  23:28}

 

பானாவின்<Baanah>  குமாரனாகிய  ஏலேப்<Heleb>  என்னும்  நெத்தோபாத்தியன்<Netophathite>,  பென்யமீன்<Benjamin>  புத்திரரின்  கிபியா<Gibeah>  ஊரானாகிய  ரிபாயின்<Ribai>  குமாரன்  இத்தாயி<Ittai>,  {2Sam  23:29}

 

பிரத்தோனியனாகிய<Pirathonite>  பெனாயா<Benaiah>,  காகாஸ்<Gaash>  நீரோடைகளின்  தேசத்தானாகிய  ஈத்தாயி<Hiddai>,  {2Sam  23:30}

 

அர்பாத்தியனாகிய<Arbathite>  அபிஅல்பொன்<Abialbon>,  பருமியனாகிய<Barhumite>  அஸ்மாவேத்<Azmaveth>,  {2Sam  23:31}

 

சால்போனியனாகிய<Shaalbonite>  எலியூபா<Eliahba>,  யாசேனின்<Jashen>  குமாரரில்  யோனத்தான்<Jonathan>  என்பவன்.  {2Sam  23:32}

 

ஆராரியனாகிய<Hararite>  சம்மா<Shammah>,  சாராரின்<Sharar>  குமாரனாகிய  அகியாம்<Ahiam>  என்னும்  ஆராரியன்<Hararite>,  {2Sam  23:33}

 

மாகாத்தியனின்<Maachathite>  குமாரனாகிய  அகஸ்பாயிம்<Ahasbai>  மகன்  எலிப்பெலேத்<Eliphelet>,  கீலோனியனாகிய<Gilonite>  அகித்தோப்பேலின்<Ahithophel>  குமாரன்  எலியாம்<Eliam>  என்பவன்.  {2Sam  23:34}

 

கர்மேலியனாகிய<Carmelite>  எஸ்ராயி<Hezrai>,  அர்பியனாகிய<Arbite>  பாராயி<Paarai>,  {2Sam  23:35}

 

சோபா<Zobah>  ஊரானாகிய  நாத்தானின்<Nathan>  குமாரன்  ஈகால்<Igal>,  காதியனாகிய<Gadite>  பானி<Bani>,  {2Sam  23:36}

 

அம்மோனியனாகிய<Ammonite>  சேலேக்<Zelek>,  செருயாவின்<Zeruiah>  குமாரனாகிய  யோவாபின்<Joab>  ஆயுததாரியான  பெரோத்தியனாகிய<Beerothite>  நகராய்<Naharai>,  {2Sam  23:37}

 

இத்ரியனாகிய<Ithrite>  ஈரா<Ira>,  இத்ரியனாகிய<Ithrite>  காரேப்<Gareb>,  {2Sam  23:38}

 

ஏத்தியனாகிய<Hittite>  உரியா<Uriah>  என்பவர்களே;  ஆக  முப்பத்தேழுபேர்.  {2Sam  23:39}

 

கர்த்தருடைய  கோபம்  திரும்ப  இஸ்ரவேலின்மேல்<Israel>  மூண்டது.  இஸ்ரவேல்<Israel>  யூதா<Judah>  என்பவர்களை  இலக்கம்  பார்  என்று  அவர்களுக்கு  விரோதமாய்ச்  சொல்லுகிறதற்கு  தாவீது<David>  ஏவப்பட்டான்.  {2Sam  24:1}

 

அப்படியே  ராஜா  தன்னோடிருக்கிற  சேனாபதியாகிய  யோவாபைப்<Joab>  பார்த்து:  ஜனங்களின்  இலக்கத்தை  நான்  அறியும்படிக்கு  நீ  தாண்முதல்<Dan>  பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba>  இஸ்ரவேலரின்<Israel>  கோத்திரமெங்கும்  சுற்றித்திரிந்து  ஜனங்களைத்  தொகையிடுங்கள்  என்றான்.  {2Sam  24:2}

 

அப்பொழுது  யோவாப்<Joab>  ராஜாவைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  கண்கள்  காணும்படி  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  ஜனங்களை  இப்பொழுது  இருக்கிறதைப்பார்க்கிலும்,  நூறுமடங்கு  அதிகமாய்  வர்த்திக்கப்பண்ணுவாராக;  ஆனாலும்  என்  ஆண்டவனாகிய  ராஜா  இந்தக்  காரியத்தை  விரும்புகிறது  என்ன  என்றான்.  {2Sam  24:3}

 

ஆகிலும்  யோவாபும்<Joab>  இராணுவத்தலைவரும்  சொன்ன  வார்த்தை  செல்லாதபடிக்கு,  ராஜாவின்  வார்த்தை  பலத்தது;  அப்படியே  இஸ்ரவேல்<Israel>  ஜனங்களைத்  தொகையிட,  யோவாபும்<Joab>  இராணுவத்தலைவரும்  ராஜாவைவிட்டுப்  புறப்பட்டுப்போய்,  {2Sam  24:4}

 

யோர்தானைக்<Jordan>  கடந்து,  காத்<Gad>  என்னும்  ஆறுகளின்  நடுவே  இருக்கிற  பட்டணத்திற்கு  வலதுபுறமான  ஆரோவேரிலும்<Aroer>  யாசேரிடத்திலும்<Jazer>  பாளயமிறங்கி,  {2Sam  24:5}

 

அங்கேயிருந்து  கீலேயாத்திற்கும்<Gilead>  தாதீம்ஒத்சிக்கும்<Tahtimhodshi>  போய்,  அங்கேயிருந்து  தாண்யானுக்கும்<Danjaan>,  சீதோனின்<Zidon>  சுற்றுப்புறங்களுக்கும்  போய்,  {2Sam  24:6}

 

பிற்பாடு  தீரு<Tyre>  என்னும்  கோட்டைக்கும்  ஏவியர்<Hivites>  கானானியருடைய<Canaanites>  சகல  பட்டணங்களுக்கும்  போய்,  அங்கேயிருந்து  யூதாவின்<Judah>  தென்புறமான  பெயெர்செபாவுக்குப்<Beersheba>  போய்,  {2Sam  24:7}

 

இப்படித்  தேசமெங்கும்  சுற்றித்திரிந்து,  ஒன்பது  மாதமும்  இருபது  நாளும்  ஆனபிற்பாடு  எருசலேமுக்கு<Jerusalem>  வந்தார்கள்.  {2Sam  24:8}

 

யோவாப்<Joab>  ஜனத்தை  இலக்கம்பார்த்த  தொகையை  ராஜாவுக்குக்  கொடுத்தான்;  இஸ்ரவேலிலே<Israel>  பட்டயம்  உருவத்தக்க  யுத்த  சேவகர்  எட்டுலட்சம்பேர்  இருந்தார்கள்;  யூதா<Judah>  மனுஷர்  ஐந்து  லட்சம்  பேர்  இருந்தார்கள்.  {2Sam  24:9}

 

இவ்விதமாய்  ஜனங்களை  எண்ணின  பின்பு,  ராஜாவின்  இருதயம்  அவனை  வாதித்தது;  அப்பொழுது  தாவீது<David>  கர்த்தரை  நோக்கி:  நான்  இப்படிச்  செய்ததினாலே  பெரிய  பாவஞ்செய்தேன்;  இப்போதும்  ஆண்டவரே,  உமது  அடியானின்  அக்கிரமத்தை  நீக்கிவிடும்;  நான்  மகா  புத்தியீனமாய்ச்  செய்தேன்  என்றான்.  {2Sam  24:10}

 

தாவீது<David>  காலமே  எழுந்திருந்தபோது,  தாவீதின்<David>  ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத்<Gad>  என்னும்  தீர்க்கதரிசிக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகிச்  சொன்னது:  {2Sam  24:11}

 

நீ  தாவீதினிடத்தில்<David>  போய்,  மூன்று  காரியங்களை  உனக்கு  முன்பாக  வைக்கிறேன்;  அவைகளில்  ஒரு  காரியத்தைத்  தெரிந்துகொள்,  அதை  நான்  உனக்குச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  {2Sam  24:12}

 

அப்படியே  காத்<Gad>  தாவீதினிடத்தில்<David>  வந்து,  அவனை  நோக்கி:  உம்முடைய  தேசத்திலே  ஏழு  வருஷம்  பஞ்சம்  வரவேண்டுமோ?  அல்லது  மூன்றுமாதம்  உம்முடைய  சத்துருக்கள்  உம்மைப்  பின்தொடர,  நீர்  அவர்களுக்கு  முன்பாக  ஓடிப்போகவேண்டுமோ?  அல்லது  உம்முடைய  தேசத்திலே  மூன்றுநாள்  கொள்ளைநோய்  உண்டாகவேண்டுமோ?  இப்போதும்  என்னை  அனுப்பினவருக்கு  நான்  என்ன  மறுஉத்தரவு  கொண்டுபோகவேண்டும்  என்பதை  நீர்  யோசித்துப்பாரும்  என்று  சொன்னான்.  {2Sam  24:13}

 

அப்பொழுது  தாவீது<David>  காத்தை<Gad>  நோக்கி:  கொடிய  இடுக்கணில்  அகப்பட்டிருக்கிறேன்;  இப்போது  நாம்  கர்த்தருடைய  கையிலே  விழுவோமாக;  அவருடைய  இரக்கங்கள்  மகா  பெரியது;  மனுஷர்  கையிலே  விழாதிருப்பேனாக  என்றான்.  {2Sam  24:14}

 

அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலிலே<Israel>  அன்று  காலமே  தொடங்கிக்  குறித்தகாலம்வரைக்கும்  கொள்ளைநோயை  வரப்பண்ணினார்;  அதினால்  தாண்முதல்<Dan>  பெயெர்செபாமட்டுமுள்ள<Beersheba>  ஜனங்களில்  எழுபதினாயிரம்பேர்  செத்துப்போனார்கள்.  {2Sam  24:15}

 

தேவதூதன்  எருசலேமை<Jerusalem>  அழிக்கத்  தன்  கையை  அதின்மேல்  நீட்டினபோது,  கர்த்தர்  அந்தத்  தீங்குக்கு  மனஸ்தாபப்பட்டு,  ஜனங்களைச்  சங்கரிக்கிற  தூதனை  நோக்கி:  போதும்,  இப்போது  உன்  கையை  நிறுத்து  என்றார்;  அந்த  வேளையில்  கர்த்தருடைய  தூதன்  எபூசியனாகிய<Jebusite>  அர்வனாவின்<Araunah>  போரடிக்கிற  களத்திற்கு  நேரே  இருந்தான்.  {2Sam  24:16}

 

ஜனத்தை  உபாதிக்கிற  தூதனை  தாவீது<David>  கண்டபோது,  அவன்  கர்த்தரை  நோக்கி:  இதோ,  நான்தான்  பாவஞ்செய்தேன்;  நான்தான்  அக்கிரமம்பண்ணினேன்;  இந்த  ஆடுகள்  என்ன  செய்தது?  உம்முடைய  கை  எனக்கும்  என்  தகப்பன்  வீட்டுக்கும்  விரோதமாயிருப்பதாக  என்று  விண்ணப்பம்பண்ணினான்.  {2Sam  24:17}

 

அன்றையதினம்  காத்<Gad>  என்பவன்  தாவீதினிடத்தில்<David>  வந்து,  அவனை  நோக்கி:  நீர்  போய்,  எபூசியனாகிய<Jebusite>  அர்வனாவின்<Araunah>  களத்திலே  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தை  உண்டாக்கும்  என்றான்.  {2Sam  24:18}

 

காத்துடைய<Gad>  வார்த்தையின்படியே  தாவீது<David>  கர்த்தர்  கற்பித்த  பிரகாரமாகப்  போனான்.  {2Sam  24:19}

 

அர்வனா<Araunah>  ஏறிட்டுப்பார்த்து:  ராஜாவும்  அவனுடைய  ஊழியக்காரரும்  தன்னிடத்தில்  வருகிறதைக்கண்டு,  அர்வனா<Araunah>  எதிர்கொண்டுபோய்த்  தரைமட்டும்  குனிந்து  ராஜாவை  வணங்கி,  {2Sam  24:20}

 

ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தமது  அடியானிடத்தில்  வருகிற  காரியம்  என்ன  என்று  கேட்டதற்கு,  தாவீது<David>:  வாதை  ஜனத்தைவிட்டு  நிறுத்தப்படக்  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டும்படிக்கு  இந்தக்  களத்தை  உன்  கையிலே  கொள்ள  வந்தேன்  என்றான்.  {2Sam  24:21}

 

அர்வனா<Araunah>  தாவீதைப்<David>  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  இதை  வாங்கிக்கொண்டு,  தம்முடைய  பார்வைக்கு  நலமானபடி  பலியிடுவாராக;  இதோ,  தகனபலிக்கு  மாடுகளும்  விறகுக்குப்  போரடிக்கிற  உருளைகளும்  மாடுகளின்  நுகத்தடிகளும்  இங்கே  இருக்கிறது  என்று  சொல்லி,  {2Sam  24:22}

 

அர்வனா<Araunah>  ராஜயோக்கியமாய்  அவை  எல்லாவற்றையும்  ராஜாவுக்குக்  கொடுத்தபின்பு,  அர்வனா<Araunah>  ராஜாவை  நோக்கி:  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உம்மிடத்தில்  கிருபையாயிருப்பாராக  என்றான்.  {2Sam  24:23}

 

ராஜா  அர்வனாவைப்<Araunah>  பார்த்து:  அப்படியல்ல;  நான்  இலவசமாய்  வாங்கி,  என்  தேவனாகிய  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தாமல்,  அதை  உன்  கையிலே  விலைக்கிரயமாய்  வாங்குவேன்  என்று  சொல்லி,  தாவீது<David>  அந்தக்  களத்தையும்  மாடுகளையும்  ஐம்பது  சேக்கல்  நிறை  வெள்ளிக்குக்  கொண்டான்.  {2Sam  24:24}

 

அங்கே  தாவீது<David>  கர்த்தருக்கு  ஒரு  பலிபீடத்தைக்  கட்டி,  சர்வாங்க  தகனபலிகளையும்  சமாதானபலிகளையும்  செலுத்தினான்;  அப்பொழுது  கர்த்தர்  தேசத்துக்காகச்  செய்யப்பட்ட  வேண்டுதலைக்  கேட்டருளினார்;  இஸ்ரவேலின்மேலிருந்த<Israel>  அந்த  வாதை  நிறுத்தப்பட்டது.  {2Sam  24:25}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!