Sunday, December 29, 2019

யாக்கோபு

தேவனுக்கும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கும்<Jesus  Christ>  ஊழியக்காரனாகிய  யாக்கோபு<James>,  சிதறியிருக்கிற  பன்னிரண்டு  கோத்திரங்களுக்கும்  வாழ்த்துதல்  சொல்லி  எழுதுகிறதாவது:  {Jas  1:1}

 

என்  சகோதரரே,  நீங்கள்  பலவிதமான  சோதனைகளில்  அகப்படும்போது,  {Jas  1:2}

 

உங்கள்  விசுவாசத்தின்  பரீட்சையானது  பொறுமையை  உண்டாக்குமென்று  அறிந்து,  அதை  மிகுந்த  சந்தோஷமாக  எண்ணுங்கள்.  {Jas  1:3}

 

நீங்கள்  ஒன்றிலும்  குறைவுள்ளவர்களாயிராமல்,  பூரணராயும்  நிறைவுள்ளவர்களாயும்  இருக்கும்படி,  பொறுமையானது  பூரண  கிரியை  செய்யக்கடவது.  {Jas  1:4}

 

உங்களில்  ஒருவன்  ஞானத்தில்  குறைவுள்ளவனாயிருந்தால்,  யாவருக்கும்  சம்பூரணமாய்க்  கொடுக்கிறவரும்  ஒருவரையும்  கடிந்துகொள்ளாதவருமாகிய  தேவனிடத்தில்  கேட்கக்கடவன்,  அப்பொழுது  அவனுக்குக்  கொடுக்கப்படும்.  {Jas  1:5}

 

ஆனாலும்  அவன்  எவ்வளவாகிலும்  சந்தேகப்படாமல்  விசுவாசத்தோடே  கேட்கக்கடவன்;  சந்தேகப்படுகிறவன்  காற்றினால்  அடிபட்டு  அலைகிற  கடலின்  அலைக்கு  ஒப்பாயிருக்கிறான்.  {Jas  1:6}

 

அப்படிப்பட்ட  மனுஷன்  தான்  கர்த்தரிடத்தில்  எதையாகிலும்  பெறலாமென்று  நினையாதிருப்பானாக.  {Jas  1:7}

 

இருமனமுள்ளவன்  தன்  வழிகளிலெல்லாம்  நிலையற்றவனாயிருக்கிறான்.  {Jas  1:8}

 

தாழ்ந்த  சகோதரன்  தான்  உயர்த்தப்பட்டதைக்குறித்து  மேன்மைபாராட்டக்கடவன்.  {Jas  1:9}

 

ஐசுவரியவான்  தான்  தாழ்த்தப்பட்டதைக்குறித்து  மேன்மைபாராட்டக்கடவன்;  ஏனெனில்  அவன்  புல்லின்  பூவைப்போல்  ஒழிந்துபோவான்.  {Jas  1:10}

 

சூரியன்  கடும்  வெய்யிலுடன்  உதித்து,  புல்லை  உலர்த்தும்போது,  அதின்  பூ  உதிர்ந்து,  அதின்  அழகான  வடிவு  அழிந்துபோம்;  ஐசுவரியவானும்  அப்படியே  தன்  வழிகளில்  வாடிப்போவான்.  {Jas  1:11}

 

சோதனையைச்  சகிக்கிற  மனுஷன்  பாக்கியவான்;  அவன்  உத்தமனென்று  விளங்கினபின்பு  கர்த்தர்  தம்மிடத்தில்  அன்புகூருகிறவர்களுக்கு  வாக்குத்தத்தம்  பண்ணின  ஜீவகிரீடத்தைப்  பெறுவான்.  {Jas  1:12}

 

சோதிக்கப்படுகிற  எவனும்,  நான்  தேவனால்  சோதிக்கப்படுகிறேன்  என்று  சொல்லாதிருப்பானாக;  தேவன்  பொல்லாங்கினால்  சோதிக்கப்படுகிறவரல்ல,  ஒருவனையும்  அவர்  சோதிக்கிறவருமல்ல.  {Jas  1:13}

 

அவனவன்  தன்தன்  சுய  இச்சையினாலே  இழுக்கப்பட்டு,  சிக்குண்டு,  சோதிக்கப்படுகிறான்.  {Jas  1:14}

 

பின்பு  இச்சையானது  கர்ப்பந்தரித்து,  பாவத்தைப்  பிறப்பிக்கும்,  பாவம்  பூரணமாகும்போது,  மரணத்தைப்  பிறப்பிக்கும்.  {Jas  1:15}

 

என்  பிரியமான  சகோதரரே,  மோசம்போகாதிருங்கள்.  {Jas  1:16}

 

நன்மையான  எந்த  ஈவும்  பூரணமான  எந்த  வரமும்  பரத்திலிருந்துண்டாகி,  சோதிகளின்  பிதாவினிடத்திலிருந்து  இறங்கிவருகிறது;  அவரிடத்தில்  யாதொரு  மாறுதலும்  யாதொரு  வேற்றுமையின்  நிழலுமில்லை.  {Jas  1:17}

 

அவர்  சித்தங்கொண்டு  தம்முடைய  சிருஷ்டிகளில்  நாம்  முதற்பலன்களாவதற்கு  நம்மைச்  சத்திய  வசனத்தினாலே  ஜெநிப்பித்தார்.  {Jas  1:18}

 

ஆகையால்,  என்  பிரியமான  சகோதரரே,  யாவரும்  கேட்கிறதற்குத்  தீவிரமாயும்,  பேசுகிறதற்குப்  பொறுமையாயும்,  கோபிக்கிறதற்குத்  தாமதமாயும்  இருக்கக்கடவர்கள்;  {Jas  1:19}

 

மனுஷருடைய  கோபம்  தேவனுடைய  நீதியை  நடப்பிக்கமாட்டாதே.  {Jas  1:20}

 

ஆகையால்,  நீங்கள்  எல்லாவித  அழுக்கையும்  கொடிய  துர்க்குணத்தையும்  ஒழித்துவிட்டு,  உங்கள்  உள்ளத்தில்  நாட்டப்பட்டதாயும்  உங்கள்  ஆத்துமாக்களை  இரட்சிக்க  வல்லமையுள்ளதாயுமிருக்கிற  வசனத்தைச்  சாந்தமாய்  ஏற்றுக்கொள்ளுங்கள்.  {Jas  1:21}

 

அல்லாமலும்,  நீங்கள்  உங்களை  வஞ்சியாதபடிக்குத்  திருவசனத்தைக்  கேட்கிறவர்களாய்  மாத்திரமல்ல,  அதின்படி  செய்கிறவர்களாயும்  இருங்கள்.  {Jas  1:22}

 

என்னத்தினாலெனில்,  ஒருவன்  திருவசனத்தைக்  கேட்டும்  அதின்படி  செய்யாதவனானால்,  கண்ணாடியிலே  தன்  சுபாவ  முகத்தைப்  பார்க்கிற  மனுஷனுக்கு  ஒப்பாயிருப்பான்;  {Jas  1:23}

 

அவன்  தன்னைத்தானே  பார்த்து,  அவ்விடம்விட்டுப்  போனவுடனே,  தன்  சாயல்  இன்னதென்பதை  மறந்துவிடுவான்.  {Jas  1:24}

 

சுயாதீனப்பிரமாணமாகிய  பூரணப்பிரமாணத்தை  உற்றுப்பார்த்து,  அதிலே  நிலைத்திருக்கிறவனே  கேட்கிறதை  மறக்கிறவனாயிராமல்,  அதற்கேற்ற  கிரியை  செய்கிறவனாயிருந்து,  தன்  செய்கையில்  பாக்கியவானாயிருப்பான்.  {Jas  1:25}

 

உங்களில்  ஒருவன்  தன்  நாவை  அடக்காமல்,  தன்  இருதயத்தை  வஞ்சித்து,  தன்னைத்  தேவபக்தியுள்ளவனென்று  எண்ணினால்  அவனுடைய  தேவபக்தி  வீணாயிருக்கும்.  {Jas  1:26}

 

திக்கற்ற  பிள்ளைகளும்  விதவைகளும்  படுகிற  உபத்திரவத்திலே  அவர்களை  விசாரிக்கிறதும்,  உலகத்தால்  கறைபடாதபடிக்குத்  தன்னைக்  காத்துக்கொள்ளுகிறதுமே  பிதாவாகிய  தேவனுக்குமுன்பாக  மாசில்லாத  சுத்தமான  பக்தியாயிருக்கிறது.  {Jas  1:27}

 

என்  சகோதரரே,  மகிமையுள்ள  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள<Jesus  Christ>  விசுவாசத்தைப்  பட்சபாதத்தோடே  பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.  {Jas  2:1}

 

ஏனெனில்,  பொன்மோதிரமும்  மினுக்குள்ள  வஸ்திரமும்  தரித்திருக்கிற  ஒரு  மனுஷனும்,  கந்தையான  வஸ்திரம்  தரித்திருக்கிற  ஒரு  தரித்திரனும்  உங்கள்  ஆலயத்தில்  வரும்போது,  {Jas  2:2}

 

மினுக்குள்ள  வஸ்திரந்தரித்தவனைக்  கண்ணோக்கி:  நீர்  இந்த  நல்ல  இடத்தில்  உட்காரும்  என்றும்;  தரித்திரனைப்  பார்த்து:  நீ  அங்கே  நில்லு,  அல்லது  இங்கே  என்  பாதபடியண்டையிலே  உட்காரு  என்றும்  நீங்கள்  சொன்னால்,  {Jas  2:3}

 

உங்களுக்குள்ளே  பேதகம்பண்ணி,  தகாத  சிந்தனைகளோடே  நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?  {Jas  2:4}

 

என்  பிரியமான  சகோதரரே,  கேளுங்கள்;  தேவன்  இவ்வுலகத்தின்  தரித்திரரை  விசுவாசத்தில்  ஐசுவரியவான்களாகவும்,  தம்மிடத்தில்  அன்புகூருகிறவர்களுக்குத்  தாம்  வாக்குத்தத்தம்பண்ணின  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கிறவர்களாகவும்  தெரிந்துகொள்ளவில்லையா?  {Jas  2:5}

 

நீங்களோ  தரித்திரரைக்  கனவீனம்  பண்ணுகிறீர்கள்.  ஐசுவரியவான்களல்லவோ  உங்களை  ஒடுக்குகிறார்கள்?  அவர்களல்லவோ  உங்களை  நியாயாசனங்களுக்கு  முன்பாக  இழுக்கிறார்கள்?  {Jas  2:6}

 

உங்களுக்குத்  தரிக்கப்பட்ட  நல்ல  நாமத்தை  அவர்களல்லவோ  தூஷிக்கிறார்கள்?  {Jas  2:7}

 

உன்னிடத்தில்  நீ  அன்புகூருகிறதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்று  வேதவாக்கியம்  சொல்லுகிற  ராஜரிக  பிரமாணத்தை  நீங்கள்  நிறைவேற்றினால்  நன்மைசெய்வீர்கள்.  {Jas  2:8}

 

பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால்,  பாவஞ்செய்து,  மீறினவர்களென்று  நியாயப்பிரமாணத்தால்  தீர்க்கப்படுவீர்கள்.  {Jas  2:9}

 

எப்படியெனில்,  ஒருவன்  நியாயப்பிரமாணம்  முழுவதையும்  கைக்கொண்டிருந்தும்,  ஒன்றிலே  தவறினால்  எல்லாவற்றிலும்  குற்றவாளியாயிருப்பான்.  {Jas  2:10}

 

ஏனென்றால்,  விபசாரஞ்செய்யாதிருப்பாயாக  என்று  சொன்னவர்  கொலைசெய்யாதிருப்பாயாக  என்றும்  சொன்னார்;  ஆதலால்,  நீ  விபசாரஞ்செய்யாமலிருந்தும்  கொலைசெய்தாயானால்  நியாயப்பிரமாணத்தை  மீறினவனாவாய்.  {Jas  2:11}

 

சுயாதீனப்பிரமாணத்தினால்  நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய்  அதற்கேற்றபடி  பேசி,  அதற்கேற்றபடி  செய்யுங்கள்.  {Jas  2:12}

 

ஏனென்றால்,  இரக்கஞ்செய்யாதவனுக்கு  இரக்கமில்லாத  நியாயத்தீர்ப்புக்  கிடைக்கும்;  நியாயத்தீர்ப்புக்குமுன்பாக  இரக்கம்  மேன்மைபாராட்டும்.  {Jas  2:13}

 

என்  சகோதரரே,  ஒருவன்  தனக்கு  விசுவாசமுண்டென்று  சொல்லியும்,  கிரியைகளில்லாதவனானால்  அவனுக்குப்  பிரயோஜனமென்ன?  அந்த  விசுவாசம்  அவனை  இரட்சிக்குமா?  {Jas  2:14}

 

ஒரு  சகோதரனாவது  சகோதரியாவது  வஸ்திரமில்லாமலும்  அநுதின  ஆகாரமில்லாமலும்  இருக்கும்போது,  {Jas  2:15}

 

உங்களில்  ஒருவன்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  சமாதானத்தோடே  போங்கள்,  குளிர்காய்ந்து  பசியாறுங்கள்  என்று  சொல்லியும்,  சரீரத்திற்கு  வேண்டியவைகளை  அவர்களுக்குக்  கொடாவிட்டால்  பிரயோஜனமென்ன?  {Jas  2:16}

 

அப்படியே  விசுவாசமும்  கிரியைகளில்லாதிருந்தால்  தன்னிலேதானே  செத்ததாயிருக்கும்.  {Jas  2:17}

 

ஒருவன்:  உனக்கு  விசுவாசமுண்டு,  எனக்குக்  கிரியைகளுண்டு;  கிரியைகளில்லாமல்  உன்  விசுவாசத்தை  எனக்குக்  காண்பி,  நான்  என்  விசுவாசத்தை  என்  கிரியைகளினாலே  உனக்குக்  காண்பிப்பேன்  என்பானே.  {Jas  2:18}

 

தேவன்  ஒருவர்  உண்டென்று  விசுவாசிக்கிறாய்,  அப்படிச்  செய்கிறது  நல்லதுதான்;  பிசாசுகளும்  விசுவாசித்து,  நடுங்குகின்றன.  {Jas  2:19}

 

வீணான  மனுஷனே,  கிரியைகளில்லாத  விசுவாசம்  செத்ததென்று  நீ  அறியவேண்டுமோ?  {Jas  2:20}

 

நம்முடைய  பிதாவாகிய  ஆபிரகாம்<Abraham>  தன்  குமாரன்  ஈசாக்கைப்<Isaac>  பலிபீடத்தின்மேல்  செலுத்தினபோது,  கிரியைகளினாலே  அல்லவோ  நீதிமானாக்கப்பட்டான்?  {Jas  2:21}

 

விசுவாசம்  அவனுடைய  கிரியைகளோடேகூட  முயற்சிசெய்து,  கிரியைகளினாலே  விசுவாசம்  பூரணப்பட்டதென்று  காண்கிறாயே.  {Jas  2:22}

 

அப்படியே  ஆபிரகாம்<Abraham>  தேவனை  விசுவாசித்தான்,  அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது  என்கிற  வேதவாக்கியம்  நிறைவேறிற்று;  அவன்  தேவனுடைய  சிநேகிதனென்னப்பட்டான்.  {Jas  2:23}

 

ஆதலால்,  மனுஷன்  விசுவாசத்தினாலேமாத்திரமல்ல,  கிரியைகளினாலேயும்  நீதிமானாக்கப்படுகிறானென்று  நீங்கள்  காண்கிறீர்களே.  {Jas  2:24}

 

அந்தப்படி  ராகாப்<Rahab>  என்னும்  வேசியும்  தூதர்களை  ஏற்றுக்கொண்டு  வேறுவழியாய்  அனுப்பிவிட்டபோது,  கிரியைகளினாலே  அல்லவோ  நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?  {Jas  2:25}

 

அப்படியே,  ஆவியில்லாத  சரீரம்  செத்ததாயிருக்கிறதுபோல,  கிரியைகளில்லாத  விசுவாசமும்  செத்ததாயிருக்கிறது.  {Jas  2:26}

 

என்  சகோதரரே,  அதிக  ஆக்கினையை  அடைவோம்  என்று  அறிந்து,  உங்களில்  அநேகர்  போதகராகாதிருப்பீர்களாக.  {Jas  3:1}

 

நாம்  எல்லாரும்  அநேக  விஷயங்களில்  தவறுகிறோம்;  ஒருவன்  சொல்தவறாதவனானால்  அவன்  பூரணபுருஷனும்,  தன்  சரீரமுழுவதையும்  கடிவாளத்தினாலே  அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.  {Jas  3:2}

 

பாருங்கள்,  குதிரைகள்  நமக்குக்  கீழ்ப்படியும்படிக்கு  அவைகளின்  வாய்களில்  கடிவாளம்போட்டு,  அவைகளுடைய  முழுச்சரீரத்தையும்  திருப்பி  நடத்துகிறோம்.  {Jas  3:3}

 

கப்பல்களையும்  பாருங்கள்,  அவைகள்  மகா  பெரியவைகளாயிருந்தாலும்,  கடுங்காற்றுகளால்  அடிபட்டாலும்,  அவைகளை  நடத்துகிறவன்  போகும்படி  யோசிக்கும்  இடம்  எதுவோ  அவ்விடத்திற்கு  நேராக  மிகவும்  சிறிதான  சுக்கானாலே  திருப்பப்படும்.  {Jas  3:4}

 

அப்படியே,  நாவானதும்  சிறிய  அவயவமாயிருந்தும்  பெருமையானவைகளைப்  பேசும்.  பாருங்கள்,  சிறிய  நெருப்பு  எவ்வளவு  பெரிய  காட்டைக்  கொளுத்திவிடுகிறது!  {Jas  3:5}

 

நாவும்  நெருப்புத்தான்,  அது  அநீதி  நிறைந்த  உலகம்;  நம்முடைய  அவயவங்களில்  நாவானது  முழுச்சரீரத்தையும்  கறைப்படுத்தி,  ஆயுள்  சக்கரத்தைக்  கொளுத்திவிடுகிறதாயும்,  நரக  அக்கினியினால்  கொளுத்தப்படுகிறதாயும்  இருக்கிறது!  {Jas  3:6}

 

சகலவிதமான  மிருகங்கள்,  பறவைகள்,  ஊரும்பிராணிகள்,  நீர்வாழும்  ஜெந்துக்கள்  ஆகிய  இவைகளின்  சுபாவம்  மனுஷசுபாவத்தால்  அடக்கப்படும்,  அடக்கப்பட்டதுமுண்டு.  {Jas  3:7}

 

நாவை  அடக்க  ஒரு  மனுஷனாலும்  கூடாது;  அது  அடங்காத  பொல்லாங்குள்ளதும்  சாவுக்கேதுவான  விஷம்  நிறைந்ததுமாயிருக்கிறது.  {Jas  3:8}

 

அதினாலே  நாம்  பிதாவாகிய  தேவனைத்  துதிக்கிறோம்;  தேவனுடைய  சாயலின்படி  உண்டாக்கப்பட்ட  மனுஷரை  அதினாலேயே  சபிக்கிறோம்.  {Jas  3:9}

 

துதித்தலும்  சபித்தலும்  ஒரே  வாயிலிருந்து  புறப்படுகிறது.  என்  சகோதரரே,  இப்படியிருக்கலாகாது.  {Jas  3:10}

 

ஒரே  ஊற்றுக்கண்ணிலிருந்து  தித்திப்பும்  கசப்புமான  தண்ணீர்  சுரக்குமா?  {Jas  3:11}

 

என்  சகோதரரே,  அத்திமரம்  ஒலிவப்பழங்களையும்,  திராட்சச்செடி  அத்திப்பழங்களையும்  கொடுக்குமா?  அப்படியே  உவர்ப்பான  நீரூற்றுத்  தித்திப்பான  ஜலத்தைக்  கொடுக்கமாட்டாது.  {Jas  3:12}

 

உங்களில்  ஞானியும்  விவேகியுமாயிருக்கிறவன்  எவனோ,  அவன்  ஞானத்திற்குரிய  சாந்தத்தோடே  தன்  கிரியைகளை  நல்ல  நடக்கையினாலே  காண்பிக்கக்கடவன்.  {Jas  3:13}

 

உங்கள்  இருதயத்திலே  கசப்பான  வைராக்கியத்தையும்  விரோதத்தையும்  வைத்தீர்களானால்,  நீங்கள்  பெருமைபாராட்டாதிருங்கள்;  சத்தியத்திற்கு  விரோதமாய்ப்  பொய்சொல்லாமலுமிருங்கள்.  {Jas  3:14}

 

இப்படிப்பட்ட  ஞானம்  பரத்திலிருந்து  இறங்கிவருகிற  ஞானமாயிராமல்,  லௌகிக  சம்பந்தமானதும்,  ஜென்மசுபாவத்துக்குரியதும்,  பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.  {Jas  3:15}

 

வைராக்கியமும்  விரோதமும்  எங்கே  உண்டோ,  அங்கே  கலகமும்  சகல  துர்ச்செய்கைகளுமுண்டு.  {Jas  3:16}

 

பரத்திலிருந்து  வருகிற  ஞானமோ  முதலாவது  சுத்தமுள்ளதாயும்,  பின்பு  சமாதானமும்  சாந்தமும்  இணக்கமுமுள்ளதாயும்,  இரக்கத்தாலும்  நற்கனிகளாலும்  நிறைந்ததாயும்,  பட்சபாதமில்லாததாயும்,  மாயமற்றதாயுமிருக்கிறது.  {Jas  3:17}

 

நீதியாகிய  கனியானது  சமாதானத்தை  நடப்பிக்கிறவர்களாலே  சமாதானத்திலே  விதைக்கப்படுகிறது.  {Jas  3:18}

 

உங்களுக்குள்ளே  யுத்தங்களும்  சண்டைகளும்  எதினாலே  வருகிறது;  உங்கள்  அவயவங்களில்  போர்செய்கிற  இச்சைகளினாலல்லவா?  {Jas  4:1}

 

நீங்கள்  இச்சித்தும்  உங்களுக்குக்  கிடைக்கவில்லை;  நீங்கள்  கொலைசெய்தும்,  பொறாமையுள்ளவர்களாயிருந்தும்,  அடையக்கூடாமற்போகிறீர்கள்;  நீங்கள்  சண்டையும்  யுத்தமும்பண்ணியும்,  நீங்கள்  விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே,  உங்களுக்குச்  சித்திக்கிறதில்லை.  {Jas  4:2}

 

நீங்கள்  விண்ணப்பம்பண்ணியும்,  உங்கள்  இச்சைகளை  நிறைவேற்றும்படி  செலவழிக்கவேண்டுமென்று  தகாதவிதமாய்  விண்ணப்பம்பண்ணுகிறபடியினால்,  பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.  {Jas  4:3}

 

விபசாரரே,  விபசாரிகளே,  உலக  சிநேகம்  தேவனுக்கு  விரோதமான  பகையென்று  அறியீர்களா?  ஆகையால்  உலகத்துக்குச்  சிநேகிதனாயிருக்க  விரும்புகிறவன்  தேவனுக்குப்  பகைஞனாகிறான்.  {Jas  4:4}

 

நம்மில்  வாசமாயிருக்கிற  ஆவியானவர்  நம்மிடத்தில்  வைராக்கிய  வாஞ்சையாயிருக்கிறாரென்று  வேதவாக்கியம்  வீணாய்ச்  சொல்லுகிறதென்று  நினைக்கிறீர்களா?  {Jas  4:5}

 

அவர்  அதிகமான  கிருபையை  அளிக்கிறாரே.  ஆதலால்  தேவன்  பெருமையுள்ளவர்களுக்கு  எதிர்த்து  நிற்கிறார்,  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபை  அளிக்கிறாரென்று  சொல்லியிருக்கிறது.  {Jas  4:6}

 

ஆகையால்,  தேவனுக்குக்  கீழ்ப்படிந்திருங்கள்;  பிசாசுக்கு  எதிர்த்து  நில்லுங்கள்,  அப்பொழுது  அவன்  உங்களைவிட்டு  ஓடிப்போவான்.  {Jas  4:7}

 

தேவனிடத்தில்  சேருங்கள்,  அப்பொழுது  அவர்  உங்களிடத்தில்  சேருவார்.  பாவிகளே,  உங்கள்  கைகளைச்  சுத்திகரியுங்கள்;  இருமனமுள்ளவர்களே,  உங்கள்  இருதயங்களைப்  பரிசுத்தமாக்குங்கள்.  {Jas  4:8}

 

நீங்கள்  துயரப்பட்டுத்  துக்கித்து  அழுங்கள்;  உங்கள்  நகைப்பு  துக்கிப்பாகவும்,  உங்கள்  சந்தோஷம்  சஞ்சலமாகவும்  மாறக்கடவது.  {Jas  4:9}

 

கர்த்தருக்கு  முன்பாகத்  தாழ்மைப்படுங்கள்,  அப்பொழுது  அவர்  உங்களை  உயர்த்துவார்.  {Jas  4:10}

 

சகோதரரே,  ஒருவருக்கொருவர்  விரோதமாய்ப்  பேசாதிருங்கள்;  சகோதரனுக்கு  விரோதமாய்ப்  பேசி,  தன்  சகோதரனைக்  குற்றப்படுத்துகிறவன்  நியாயப்பிரமாணத்திற்கு  விரோதமாய்ப்பேசி  நியாயப்பிரமாணத்தைக்  குற்றப்படுத்துகிறான்;  நியாயப்பிரமாணத்தைக்  குற்றப்படுத்துவாயானால்,  நீ  நியாயப்பிரமாணத்தின்படி  செய்கிறவனாயிராமல்,  அதற்கு  நியாயாதிபதியாயிருப்பாய்.  {Jas  4:11}

 

நியாயப்பிரமாணத்தைக்  கட்டளையிடுகிறவர்  ஒருவரே,  அவரே  இரட்சிக்கவும்  அழிக்கவும்  வல்லவர்;  மற்றவனைக்  குற்றப்படுத்துகிறதற்கு  நீ  யார்?  {Jas  4:12}

 

மேலும்,  நாங்கள்  இன்றைக்கு  அல்லது  நாளைக்கு  இன்ன  பட்டணத்திற்குப்  போய்,  அங்கே  ஒருவருஷம்  தங்கி,  வியாபாரஞ்செய்து,  சம்பாத்தியம்  பண்ணுவோமென்கிறவர்களே,  கேளுங்கள்.  {Jas  4:13}

 

நாளைக்கு  நடப்பது  உங்களுக்குத்  தெரியாதே.  உங்கள்  ஜீவன்  எப்படிப்பட்டது?  கொஞ்சக்காலந்தோன்றிப்  பின்பு  தோன்றாமற்போகிற  புகையைப்போலிருக்கிறதே.  {Jas  4:14}

 

ஆதலால்:  ஆண்டவருக்குச்  சித்தமானால்,  நாங்களும்  உயிரோடிருந்தால்,  இன்னின்னதைச்  செய்வோம்  என்று  சொல்லவேண்டும்.  {Jas  4:15}

 

இப்பொழுது  உங்கள்  வீம்புகளில்  மேன்மைபாராட்டுகிறீர்கள்;  இப்படிப்பட்ட  மேன்மைபாராட்டல்  யாவும்  பொல்லாங்காயிருக்கிறது.  {Jas  4:16}

 

ஆதலால்,  ஒருவன்  நன்மைசெய்ய  அறிந்தவனாயிருந்தும்,  அதைச்  செய்யாமற்போனால்,  அது  அவனுக்குப்  பாவமாயிருக்கும்.  {Jas  4:17}

 

ஐசுவரியவான்களே,  கேளுங்கள்,  உங்கள்மேல்  வரும்  நிர்ப்பந்தங்களினிமித்தம்  அலறி  அழுங்கள்.  {Jas  5:1}

 

உங்கள்  ஐசுவரியம்  அழிந்து,  உங்கள்  வஸ்திரங்கள்  பொட்டரித்துப்போயின.  {Jas  5:2}

 

உங்கள்  பொன்னும்  வெள்ளியும்  துருப்பிடித்தது;  அவைகளிலுள்ள  துரு  உங்களுக்கு  விரோதமாகச்  சாட்சியாயிருந்து,  அக்கினியைப்போல  உங்கள்  மாம்சத்தைத்  தின்னும்.  கடைசிநாட்களிலே  பொக்கிஷத்தைச்  சேர்த்தீர்கள்.  {Jas  5:3}

 

இதோ,  உங்கள்  வயல்களை  அறுத்த  வேலைக்காரருடைய  கூலி  உங்களால்  அநியாயமாய்ப்  பிடிக்கப்பட்டுக்  கூக்குரலிடுகிறது;  அறுத்தவர்களுடைய  கூக்குரல்  சேனைகளுடைய  கர்த்தரின்  செவிகளில்  பட்டது.  {Jas  5:4}

 

பூமியிலே  நீங்கள்  சம்பிரமமாய்  வாழ்ந்து,  சுகபோகத்தில்  உழன்றீர்கள்;  கொழுத்தவைகளை  அடிக்கும்  நாளில்  நடக்கிறதுபோல  உங்கள்  இருதயங்களைப்  போஷித்தீர்கள்.  {Jas  5:5}

 

நீதிமானை  நீங்கள்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்துக்  கொலைசெய்தீர்கள்;  அவன்  உங்களோடே  எதிர்த்துநிற்கவில்லை.  {Jas  5:6}

 

இப்படியிருக்க,  சகோதரரே,  கர்த்தர்  வருமளவும்  நீடிய  பொறுமையாயிருங்கள்.  இதோ,  பயிரிடுகிறவன்  பூமியின்  நற்பலனை  அடையவேண்டுமென்று,  முன்மாரியும்  பின்மாரியும்  வருமளவும்,  நீடிய  பொறுமையோடே  காத்திருக்கிறான்.  {Jas  5:7}

 

நீங்களும்  நீடிய  பொறுமையோடிருந்து,  உங்கள்  இருதயங்களை  ஸ்திரப்படுத்துங்கள்;  கர்த்தரின்  வருகை  சமீபமாயிருக்கிறதே.  {Jas  5:8}

 

சகோதரரே,  நீங்கள்  நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு  ஒருவருக்கொருவர்  விரோதமாய்  முறையிடாதிருங்கள்;  இதோ,  நியாயாதிபதி  வாசற்படியில்  நிற்கிறார்.  {Jas  5:9}

 

என்  சகோதரரே,  கர்த்தருடைய  நாமத்தினாலே  பேசின  தீர்க்கதரிசிகளைத்  துன்பப்படுதலுக்கும்  நீடிய  பொறுமைக்கும்  திருஷ்டாந்தமாக  வைத்துக்கொள்ளுங்கள்.  {Jas  5:10}

 

இதோ,  பொறுமையாயிருக்கிறவர்களைப்  பாக்கியவான்களென்கிறோமே!  யோபின்<Job>  பொறுமையைக்குறித்துக்  கேள்விப்பட்டிருக்கிறீர்கள்;  கர்த்தருடைய  செயலின்  முடிவையும்  கண்டிருக்கிறீர்கள்;  கர்த்தர்  மிகுந்த  உருக்கமும்  இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.  {Jas  5:11}

 

விசேஷமாய்,  என்  சகோதரரே,  வானத்தின்பேரிலாவது,  பூமியின்பேரிலாவது,  வேறெந்த  ஆணையினாலாவது  சத்தியம்பண்ணாதிருங்கள்;  நீங்கள்  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதபடிக்கு  உள்ளதை  உள்ளதென்றும்,  இல்லதை  இல்லதென்றும்  சொல்லக்கடவீர்கள்.  {Jas  5:12}

 

உங்களில்  ஒருவன்  துன்பப்பட்டால்  ஜெபம்பண்ணக்கடவன்;  ஒருவன்  மகிழ்ச்சியாயிருந்தால்  சங்கீதம்  பாடக்கடவன்.  {Jas  5:13}

 

உங்களில்  ஒருவன்  வியாதிப்பட்டால்,  அவன்  சபையின்  மூப்பர்களை  வரவழைப்பானாக;  அவர்கள்  கர்த்தருடைய  நாமத்தினாலே  அவனுக்கு  எண்ணெய்பூசி,  அவனுக்காக  ஜெபம்பண்ணக்கடவர்கள்.  {Jas  5:14}

 

அப்பொழுது  விசுவாசமுள்ள  ஜெபம்  பிணியாளியை  இரட்சிக்கும்;  கர்த்தர்  அவனை  எழுப்புவார்;  அவன்  பாவஞ்செய்தவனானால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  {Jas  5:15}

 

நீங்கள்  சொஸ்தமடையும்படிக்கு,  உங்கள்  குற்றங்களை  ஒருவருக்கொருவர்  அறிக்கையிட்டு,  ஒருவருக்காக  ஒருவர்  ஜெபம்பண்ணுங்கள்.  நீதிமான்  செய்யும்  ஊக்கமான  வேண்டுதல்  மிகவும்  பெலனுள்ளதாயிருக்கிறது.  {Jas  5:16}

 

எலியா<Elias>  என்பவன்  நம்மைப்போலப்பாடுள்ள  மனுஷனாயிருந்தும்,  மழைபெய்யாதபடிக்குக்  கருத்தாய்  ஜெபம்பண்ணினான்,  அப்பொழுது  மூன்றுவருஷமும்  ஆறுமாதமும்  பூமியின்மேல்  மழை  பெய்யவில்லை.  {Jas  5:17}

 

மறுபடியும்  ஜெபம்பண்ணினான்,  அப்பொழுது  வானம்  மழையைப்  பொழிந்தது,  பூமி  தன்  பலனைத்  தந்தது.  {Jas  5:18}

 

சகோதரரே,  உங்களில்  ஒருவன்  சத்தியத்தைவிட்டு  விலகி  மோசம்போகும்போது,  மற்றொருவன்  அவனைத்  திருப்பினால்,  {Jas  5:19}

 

தப்பிப்போன  மார்க்கத்தினின்று  பாவியைத்  திருப்புகிறவன்  ஒரு  ஆத்துமாவை  மரணத்தினின்று  இரட்சித்து,  திரளான  பாவங்களை  மூடுவானென்று  அறியக்கடவன்.  {Jas  5:20}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!