Saturday, December 14, 2019

1 கொரிந்தியர்

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாகும்படி  அழைக்கப்பட்டவனாகிய  பவுலும்<Paul>,  சகோதரனாகிய  சொஸ்தெனேயும்<Sosthenes>,  {1Cor  1:1}

 

கொரிந்துவிலே<Corinth>  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும்,  பரிசுத்தவான்களாகும்படி  அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற  தேவனுடைய  சபைக்கும்,  எங்களுக்கும்  தங்களுக்கும்  ஆண்டவராயிருக்கிற  நம்முடைய  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தை  எங்கும்  தொழுதுகொள்ளுகிற  அனைவருக்கும்  எழுதுகிறதாவது:  {1Cor  1:2}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {1Cor  1:3}

 

கிறிஸ்துவைப்பற்றிய<Christ>  சாட்சி  உங்களுக்குள்ளே  ஸ்திரப்படுத்தப்பட்டபடியே,  {1Cor  1:4}

 

நீங்கள்  இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய்<Jesus  Christ>  எல்லா  உபதேசத்திலும்  எல்லா  அறிவிலும்,  மற்றெல்லாவற்றிலும்,  சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,  {1Cor  1:5}

 

அவர்  மூலமாய்  உங்களுக்கு  அளிக்கப்பட்ட  தேவகிருபைக்காக,  நான்  உங்களைக்குறித்து  எப்பொழுதும்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {1Cor  1:6}

 

அப்படியே  நீங்கள்  யாதொரு  வரத்திலும்  குறைவில்லாதவர்களாய்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  வெளிப்படுவதற்குக்  காத்திருக்கிறீர்கள்.  {1Cor  1:7}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசு  கிறிஸ்துவின்<Jesus  Christ>  நாளிலே  நீங்கள்  குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி  முடிவுபரியந்தம்  அவர்  உங்களை  ஸ்திரப்படுத்துவார்.  {1Cor  1:8}

 

தம்முடைய  குமாரனும்  நம்முடைய  கர்த்தருமாயிருக்கிற  இயேசுகிறிஸ்துவுடனே<Jesus  Christ>  ஐக்கியமாயிருப்பதற்கு  உங்களை  அழைத்த  தேவன்  உண்மையுள்ளவர்.  {1Cor  1:9}

 

சகோதரரே,  நீங்களெல்லாரும்  ஒரே  காரியத்தைப்  பேசவும்,  பிரிவினைகளில்லாமல்  ஏகமனதும்  ஏகயோசனையும்  உள்ளவர்களாய்ச்  சீர்பொருந்தியிருக்கவும்  வேண்டுமென்று,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {1Cor  1:10}

 

ஏனெனில்,  என்  சகோதரரே,  உங்களுக்குள்ளே  வாக்குவாதங்கள்  உண்டென்று  குலோவேயாளின்<Chloe>  வீட்டாரால்  உங்களைக்குறித்து  எனக்கு  அறிவிக்கப்பட்டது.  {1Cor  1:11}

 

உங்களில்  சிலர்:  நான்  பவுலைச்<Paul>  சேர்ந்தவனென்றும்,  நான்  அப்பொல்லோவைச்<Apollos>  சேர்ந்தவனென்றும்,  நான்  கேபாவைச்<Cephas>  சேர்ந்தவனென்றும்,  நான்  கிறிஸ்துவைச்<Christ>  சேர்ந்தவனென்றும்  சொல்லுகிறபடியால்,  நான்  இப்படிச்  சொல்லுகிறேன்.  {1Cor  1:12}

 

கிறிஸ்து<Christ>  பிரிந்திருக்கிறாரா?  பவுலா<Paul>  உங்களுக்காகச்  சிலுவையிலறையப்பட்டான்?  பவுலின்<Paul>  நாமத்தினாலேயா  ஞானஸ்நானம்  பெற்றீர்கள்?  {1Cor  1:13}

 

என்  நாமத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தேனென்று  ஒருவனும்  சொல்லாதபடிக்கு,  {1Cor  1:14}

 

நான்  கிறிஸ்புவுக்கும்<Crispus>  காயுவுக்குமேயன்றி<Gaius>,  உங்களில்  வேறொருவனுக்கும்  ஞானஸ்நானங்  கொடுக்கவில்லை;  இதற்காகத்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {1Cor  1:15}

 

ஸ்தேவானுடைய<Stephanas>  வீட்டாருக்கும்  நான்  ஞானஸ்நானங்  கொடுத்ததுண்டு.  இதுவுமல்லாமல்  இன்னும்  யாருக்காவது  நான்  ஞானஸ்நானங்  கொடுத்தேனோ  இல்லையோ  அறியேன்.  {1Cor  1:16}

 

ஞானஸ்நானத்தைக்  கொடுக்கும்படி  கிறிஸ்து<Christ>  என்னை  அனுப்பவில்லை;  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கவே  அனுப்பினார்;  கிறிஸ்துவின்<Christ>  சிலுவை  வீணாய்ப்போகாதபடிக்கு,  சாதுரிய  ஞானமில்லாமல்  பிரசங்கிக்கவே  அனுப்பினார்.  {1Cor  1:17}

 

சிலுவையைப்பற்றிய  உபதேசம்  கெட்டுப்போகிறவர்களுக்குப்  பைத்தியமாயிருக்கிறது,  இரட்சிக்கப்படுகிற  நமக்கோ  அது  தேவபெலனாயிருக்கிறது.  {1Cor  1:18}

 

அந்தப்படி  ஞானிகளுடைய  ஞானத்தை  நான்  அழித்து,  புத்திசாலிகளுடைய  புத்தியை  அவமாக்குவேன்  என்று  எழுதியிருக்கிறது.  {1Cor  1:19}

 

ஞானி  எங்கே?  வேதபாரகன்  எங்கே?  இப்பிரபஞ்சத்  தர்க்கசாஸ்திரி  எங்கே?  இவ்வுலகத்தின்  ஞானத்தைத்  தேவன்  பைத்தியமாக்கவில்லையா?  {1Cor  1:20}

 

எப்படியெனில்,  தேவஞானத்துக்கேற்றபடி  உலகமானது  சுயஞானத்தினாலே  தேவனை  அறியாதிருக்கையில்,  பைத்தியமாகத்  தோன்றுகிற  பிரசங்கத்தினாலே  விசுவாசிகளை  இரட்சிக்கத்  தேவனுக்குப்  பிரியமாயிற்று.  {1Cor  1:21}

 

யூதர்கள்<Jews>  அடையாளத்தைக்  கேட்கிறார்கள்,  கிரேக்கர்<Greeks>  ஞானத்தைத்  தேடுகிறார்கள்;  {1Cor  1:22}

 

நாங்களோ  சிலுவையில்  அறையப்பட்ட  கிறிஸ்துவைப்<Christ>  பிரசங்கிக்கிறோம்;  அவர்  யூதருக்கு<Jews>  இடறலாயும்  கிரேக்கருக்குப்<Greeks>  பைத்தியமாயும்  இருக்கிறார்.  {1Cor  1:23}

 

ஆகிலும்  யூதரானாலும்<Jews>  கிரேக்கரானாலும்<Greeks>  எவர்கள்  அழைக்கப்பட்டிருக்கிறார்களோ  அவர்களுக்குக்  கிறிஸ்து<Christ>  தேவபெலனும்  தேவஞானமுமாயிருக்கிறார்.  {1Cor  1:24}

 

இந்தப்படி,  தேவனுடைய  பைத்தியம்  என்னப்படுவது  மனுஷருடைய  ஞானத்திலும்  அதிக  ஞானமாயிருக்கிறது;  தேவனுடைய  பலவீனம்  என்னப்படுவது  மனுஷருடைய  பலத்திலும்  அதிக  பலமாயிருக்கிறது.  {1Cor  1:25}

 

எப்படியெனில்,  சகோதரரே,  நீங்கள்  அழைக்கப்பட்ட  அழைப்பைப்  பாருங்கள்;  மாம்சத்தின்படி  ஞானிகள்  அநேகரில்லை,  வல்லவர்கள்  அநேகரில்லை,  பிரபுக்கள்  அநேகரில்லை.  {1Cor  1:26}

 

ஞானிகளை  வெட்கப்படுத்தும்படி  தேவன்  உலகத்தில்  பைத்தியமானவைகளைத்  தெரிந்துகொண்டார்;  பலமுள்ளவைகளை  வெட்கப்படுத்தும்படி  தேவன்  உலகத்தில்  பலவீனமானவைகளைத்  தெரிந்துகொண்டார்.  {1Cor  1:27}

 

உள்ளவைகளை  அவமாக்கும்படி,  உலகத்தின்  இழிவானவைகளையும்,  அற்பமாய்  எண்ணப்பட்டவைகளையும்,  இல்லாதவைகளையும்,  தேவன்  தெரிந்துகொண்டார்.  {1Cor  1:28}

 

மாம்சமான  எவனும்  தேவனுக்கு  முன்பாகப்  பெருமைபாராட்டாதபடிக்கு  அப்படிச்  செய்தார்.  {1Cor  1:29}

 

அந்தப்படி,  நீங்கள்  அவராலே  கிறிஸ்து  இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள்<Christ  Jesus>.  எழுதியிருக்கிறபடி  மேன்மைபாராட்டுகிறவன்  கர்த்தரைக்குறித்தே  மேன்மைபாராட்டத்தக்கதாக,  {1Cor  1:30}

 

அவரே  தேவனால்  நமக்கு  ஞானமும்  நீதியும்  பரிசுத்தமும்  மீட்புமானார்.  {1Cor  1:31}

 

சகோதரரே,  நான்  உங்களிடத்தில்  வந்தபோது,  தேவனைப்பற்றிய  சாட்சியைச்  சிறந்த  வசனிப்போடாவது  ஞானத்தோடாவது  அறிவிக்கிறவனாக  வரவில்லை.  {1Cor  2:1}

 

இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>,  சிலுவையில்  அறையப்பட்ட  அவரையேயன்றி,  வேறொன்றையும்  உங்களுக்குள்ளே  அறியாதிருக்கத்  தீர்மானித்திருந்தேன்.  {1Cor  2:2}

 

அல்லாமலும்  நான்  பலவீனத்தோடும்  பயத்தோடும்  மிகுந்த  நடுக்கத்தோடும்  உங்களிடத்தில்  இருந்தேன்.  {1Cor  2:3}

 

உங்கள்  விசுவாசம்  மனுஷருடைய  ஞானத்திலல்ல,  தேவனுடைய  பெலத்தில்  நிற்கும்படிக்கு,  {1Cor  2:4}

 

என்  பேச்சும்  என்  பிரசங்கமும்  மனுஷ  ஞானத்திற்குரிய  நயவசனமுள்ளதாயிராமல்,  ஆவியினாலும்  பெலத்தினாலும்  உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.  {1Cor  2:5}

 

அப்படியிருந்தும்,  தேறினவர்களுக்குள்ளே  ஞானத்தைப்  பேசுகிறோம்;  இப்பிரபஞ்சத்தின்  ஞானத்தையல்ல,  அழிந்துபோகிறவர்களாகிய  இப்பிரபஞ்சத்தின்  பிரபுக்களுடைய  ஞானத்தையுமல்ல,  {1Cor  2:6}

 

உலகத்தோற்றத்திற்குமுன்னே  தேவன்  நம்முடைய  மகிமைக்காக  ஏற்படுத்தினதும்,  மறைக்கப்பட்டதுமாயிருந்த  இரகசியமான  தேவஞானத்தையே  பேசுகிறோம்.  {1Cor  2:7}

 

அதை  இப்பிரபஞ்சத்துப்  பிரபுக்களில்  ஒருவனும்  அறியவில்லை;  அறிந்தார்களானால்,  மகிமையின்  கர்த்தரை  அவர்கள்  சிலுவையில்  அறையமாட்டார்களே.  {1Cor  2:8}

 

எழுதியிருக்கிறபடி:  தேவன்  தம்மில்  அன்புகூருகிறவர்களுக்கு  ஆயத்தம்பண்ணினவைகளைக்  கண்  காணவுமில்லை,  காது  கேட்கவுமில்லை,  அவைகள்  மனுஷனுடைய  இருதயத்தில்  தோன்றவுமில்லை;  {1Cor  2:9}

 

நமக்கோ  தேவன்  அவைகளைத்  தமது  ஆவியினாலே  வெளிப்படுத்தினார்;  அந்த  ஆவியானவர்  எல்லாவற்றையும்,  தேவனுடைய  ஆழங்களையும்,  ஆராய்ந்திருக்கிறார்.  {1Cor  2:10}

 

மனுஷனிலுள்ள  ஆவியேயன்றி  மனுஷரில்  எவன்  மனுஷனுக்குரியவைகளை  அறிவான்?  அப்படிப்போல,  தேவனுடைய  ஆவியேயன்றி,  ஒருவனும்  தேவனுக்குரியவைகளை  அறியமாட்டான்.  {1Cor  2:11}

 

நாங்களோ  உலகத்தின்  ஆவியைப்பெறாமல்,  தேவனால்  எங்களுக்கு  அருளப்பட்டவைகளை  அறியும்படிக்குத்  தேவனிலிருந்து  புறப்படுகிற  ஆவியையே  பெற்றோம்.  {1Cor  2:12}

 

அவைகளை  நாங்கள்  மனுஷஞானம்  போதிக்கிற  வார்த்தைகளாலே  பேசாமல்,  பரிசுத்தஆவி  போதிக்கிற  வார்த்தைகளாலே  பேசி,  ஆவிக்குரியவைகளை  ஆவிக்குரியவைகளோடே  சம்பந்தப்படுத்திக்  காண்பிக்கிறோம்.  {1Cor  2:13}

 

ஜென்மசுபாவமான  மனுஷனோ  தேவனுடைய  ஆவிக்குரியவைகளை  ஏற்றுக்கொள்ளான்;  அவைகள்  அவனுக்குப்  பைத்தியமாகத்  தோன்றும்;  அவைகள்  ஆவிக்கேற்றபிரகாரமாய்  ஆராய்ந்து  நிதானிக்கப்படுகிறவைகளானதால்,  அவைகளை  அறியவுமாட்டான்.  {1Cor  2:14}

 

ஆவிக்குரியவன்  எல்லாவற்றையும்  ஆராய்ந்து  நிதானிக்கிறான்;  ஆனாலும்  அவன்  மற்றொருவனாலும்  ஆராய்ந்து  நிதானிக்கப்படான்.  {1Cor  2:15}

 

கர்த்தருக்குப்  போதிக்கத்தக்கதாக  அவருடைய  சிந்தையை  அறிந்தவன்  யார்?  எங்களுக்கோ  கிறிஸ்துவின்<Christ>  சிந்தை  உண்டாயிருக்கிறது.  {1Cor  2:16}

 

மேலும்,  சகோதரரே,  நான்  உங்களை  ஆவிக்குரியவர்களென்று  எண்ணி  உங்களுடனே  பேசக்கூடாமல்,  மாம்சத்துக்குரியவர்களென்றும்,  கிறிஸ்துவுக்குள்<Christ>  குழந்தைகளென்றும்  எண்ணிப்  பேசவேண்டியதாயிற்று.  {1Cor  3:1}

 

நீங்கள்  பெலனில்லாதவர்களானதால்,  உங்களுக்குப்  போஜனங்கொடாமல்,  பாலைக்  குடிக்கக்கொடுத்தேன்;  இன்னமும்  நீங்கள்  மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால்,  இப்பொழுதும்  உங்களுக்குப்  பெலனில்லை.  {1Cor  3:2}

 

பொறாமையும்  வாக்குவாதமும்  பேதகங்களும்  உங்களுக்குள்  இருக்கிறபடியால்,  நீங்கள்  மாம்சத்திற்குரியவர்களாயிருந்து  மனுஷமார்க்கமாய்  நடக்கிறீர்களல்லவா?  {1Cor  3:3}

 

ஒருவன்  நான்  பவுலைச்<Paul>  சேர்ந்தவனென்றும்,  வேறொருவன்  நான்  அப்பொல்லோவைச்<Apollos>  சேர்ந்தவனென்றும்  சொல்லுகிறபடியால்  நீங்கள்  மாம்சத்திற்குரியவர்களல்லவா?  {1Cor  3:4}

 

பவுல்<Paul>  யார்?  அப்பொல்லோ<Apollos>  யார்?  கர்த்தர்  அவனவனுக்கு  அருள்  அளித்தபடியே  நீங்கள்  விசுவாசிக்கிறதற்கு  ஏதுவாயிருந்த  ஊழியக்காரர்தானே.  {1Cor  3:5}

 

நான்  நட்டேன்,  அப்பொல்லோ<Apollos>  நீர்ப்பாய்ச்சினான்,  தேவனே  விளையச்செய்தார்.  {1Cor  3:6}

 

அப்படியிருக்க,  நடுகிறவனாலும்  ஒன்றுமில்லை,  நீர்ப்பாய்ச்சுகிறவனாலும்  ஒன்றுமில்லை,  விளையச்செய்கிற  தேவனாலே  எல்லாமாகும்.  {1Cor  3:7}

 

மேலும்  நடுகிறவனும்  நீர்ப்பாய்ச்சுகிறவனும்  ஒன்றாயிருக்கிறார்கள்;  அவனவன்  தன்தன்  வேலைக்குத்  தக்கதாய்க்  கூலியைப்  பெறுவான்.  {1Cor  3:8}

 

நாங்கள்  தேவனுக்கு  உடன்வேலையாட்களாயிருக்கிறோம்;  நீங்கள்  தேவனுடைய  பண்ணையும்,  தேவனுடைய  மாளிகையுமாயிருக்கிறீர்கள்.  {1Cor  3:9}

 

எனக்கு  அளிக்கப்பட்ட  தேவகிருபையின்படியே  புத்தியுள்ள  சிற்பாசாரியைப்போல  அஸ்திபாரம்போட்டேன்.  வேறொருவன்  அதின்மேல்  கட்டுகிறான்.  அவனவன்  தான்  அதின்மேல்  இன்னவிதமாய்க்  கட்டுகிறானென்று  பார்க்கக்கடவன்.  {1Cor  3:10}

 

போடப்பட்டிருக்கிற  அஸ்திபாரமாகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  அல்லாமல்  வேறே  அஸ்திபாரத்தைப்  போட  ஒருவனாலும்  கூடாது.  {1Cor  3:11}

 

ஒருவன்  அந்த  அஸ்திபாரத்தின்மேல்  பொன்,  வெள்ளி,  விலையேறப்பெற்ற  கல்,  மரம்,  புல்,  வைக்கோல்  ஆகிய  இவைகளைக்  கட்டினால்,  {1Cor  3:12}

 

அவனவனுடைய  வேலைப்பாடு  வெளியாகும்;  நாளானது  அதை  விளங்கப்பண்ணும்.  ஏனெனில்  அது  அக்கினியினாலே  வெளிப்படுத்தப்படும்;  அவனவனுடைய  வேலைப்பாடு  எத்தன்மையுள்ளதென்று  அக்கினியானது  பரிசோதிக்கும்.  {1Cor  3:13}

 

அதின்மேல்  ஒருவன்  கட்டினது  நிலைத்தால்,  அவன்  கூலியைப்  பெறுவான்.  {1Cor  3:14}

 

ஒருவன்  கட்டினது  வெந்துபோனால்,  அவன்  நஷ்டமடைவான்;  அவனோ  இரட்சிக்கப்படுவான்;  அதுவும்  அக்கினியிலகப்பட்டுத்  தப்பினதுபோலிருக்கும்.  {1Cor  3:15}

 

நீங்கள்  தேவனுடைய  ஆலயமாயிருக்கிறீர்களென்றும்,  தேவனுடைய  ஆவி  உங்களில்  வாசமாயிருக்கிறாரென்றும்  அறியாதிருக்கிறீர்களா?  {1Cor  3:16}

 

ஒருவன்  தேவனுடைய  ஆலயத்தைக்கெடுத்தால்,  அவனைத்  தேவன்  கெடுப்பார்;  தேவனுடைய  ஆலயம்  பரிசுத்தமாயிருக்கிறது;  நீங்களே  அந்த  ஆலயம்.  {1Cor  3:17}

 

ஒருவனும்  தன்னைத்தானே  வஞ்சியாதிருப்பானாக;  இவ்வுலகத்திலே  உங்களில்  ஒருவன்  தன்னை  ஞானியென்று  எண்ணினால்  அவன்  ஞானியாகும்படிக்குப்  பைத்தியக்காரனாகக்கடவன்.  {1Cor  3:18}

 

இவ்வுலகத்தின்  ஞானம்  தேவனுக்கு  முன்பாகப்  பைத்தியமாயிருக்கிறது.  அப்படியே,  ஞானிகளை  அவர்களுடைய  தந்திரத்திலே  பிடிக்கிறாரென்றும்,  {1Cor  3:19}

 

ஞானிகளுடைய  சிந்தனைகள்  வீணாயிருக்கிறதென்று  கர்த்தர்  அறிந்திருக்கிறாரென்றும்  எழுதியிருக்கிறது.  {1Cor  3:20}

 

இப்படியிருக்க,  ஒருவனும்  மனுஷரைக்குறித்து  மேன்மைபாராட்டாதிருப்பானாக;  எல்லாம்  உங்களுடையதே;  {1Cor  3:21}

 

பவுலாகிலும்<Paul>,  அப்பொல்லோவாகிலும்<Apollos>,  கேபாவாகிலும்<Cephas>,  உலகமாகிலும்,  ஜீவனாகிலும்  மரணமாகிலும்,  நிகழ்காரியங்களாகிலும்,  வருங்காரியங்களாகிலும்,  எல்லாம்  உங்களுடையது;  {1Cor  3:22}

 

நீங்கள்  கிறிஸ்துவினுடையவர்கள்<Christ>;  கிறிஸ்து<Christ>  தேவனுடையவர்.  {1Cor  3:23}

 

இப்படியாக,  எந்த  மனுஷனும்  எங்களைக்  கிறிஸ்துவின்<Christ>  ஊழியக்காரரென்றும்,  தேவனுடைய  இரகசியங்களின்  உக்கிராணக்காரரென்றும்  எண்ணிக்கொள்ளக்கடவன்.  {1Cor  4:1}

 

மேலும்,  உக்கிராணக்காரன்  உண்மையுள்ளவனென்று  காணப்படுவது  அவனுக்கு  அவசியமாம்.  {1Cor  4:2}

 

ஆயினும்  நான்  உங்களாலேயாவது  மனுஷருடைய  நியாயநாளின்  விசாரணையினாலேயாவது  தீர்ப்பைப்  பெறுவது  எனக்கு  மிகவும்  அற்ப  காரியமாயிருக்கிறது;  நானும்  என்னைக்குறித்துத்  தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.  {1Cor  4:3}

 

என்னிடத்தில்  நான்  யாதொரு  குற்றத்தையும்  அறியேன்;  ஆகிலும்  அதினாலே  நான்  நீதிமானாகிறதில்லை;  என்னை  நியாயம்  விசாரிக்கிறவர்  கர்த்தரே.  {1Cor  4:4}

 

ஆனதால்,  கர்த்தர்  வருமளவும்  நீங்கள்  காலத்துக்குமுன்னே  யாதொன்றைக்குறித்தும்  தீர்ப்புச்சொல்லாதிருங்கள்;  இருளில்  மறைந்திருக்கிறவைகளை  அவர்  வெளியரங்கமாக்கி,  இருதயங்களின்  யோசனைகளையும்  வெளிப்படுத்துவார்;  அப்பொழுது  அவனவனுக்குரிய  புகழ்ச்சி  தேவனால்  உண்டாகும்.  {1Cor  4:5}

 

சகோதரரே,  எழுதப்பட்டதற்கு  மிஞ்சி  எண்ணவேண்டாமென்று  நீங்கள்  எங்களாலே  கற்றுக்கொள்ளவும்,  ஒருவனும்  ஒருவனிமித்தம்  மற்றொருவனுக்கு  விரோதமாய்  இறுமாப்படையாதிருக்கவும்,  நான்  உங்கள்நிமித்தம்  என்னையும்  அப்பொல்லோவையும்<Apollos>  திருஷ்டாந்தமாக  வைத்து,  இவைகளை  எழுதினேன்.  {1Cor  4:6}

 

அன்றியும்  உன்னை  விசேஷித்தவனாகும்படி  செய்கிறவர்  யார்?  உனக்கு  உண்டாயிருக்கிறவைகளில்  நீ  பெற்றுக்கொள்ளாதது  யாது?  நீ  பெற்றுக்கொண்டவனானால்  பெற்றுக்கொள்ளாதவன்போல்  ஏன்  மேன்மைபாராட்டுகிறாய்?  {1Cor  4:7}

 

இப்பொழுது  திருப்தியடைந்திருக்கிறீர்களே,  இப்பொழுது  ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே,  எங்களையல்லாமல்  ஆளுகிறீர்களே;  நீங்கள்  ஆளுகிறவர்களானால்  நலமாயிருக்கும்;  அப்பொழுது  உங்களுடனேகூட  நாங்களும்  ஆளுவோமே.  {1Cor  4:8}

 

எங்களுக்குத்  தோன்றுகிறபடி  தேவன்  அப்போஸ்தலர்களாகிய  எங்களை  மரணத்துக்குக்  குறிக்கப்பட்டவர்கள்போலக்  கடைசியானவர்களாய்க்  காணப்படப்பண்ணினார்;  நாங்கள்  உலகத்துக்கும்  தூதருக்கும்  மனுஷருக்கும்  வேடிக்கையானோம்.  {1Cor  4:9}

 

நாங்கள்  கிறிஸ்துவினிமித்தம்<Christ>  பைத்தியக்காரர்,  நீங்கள்  கிறிஸ்துவில்<Christ>  புத்திசாலிகள்;  நாங்கள்  பலவீனர்,  நீங்கள்  பலவான்கள்;  நீங்கள்  கனவான்கள்,  நாங்கள்  கனவீனர்.  {1Cor  4:10}

 

இந்நேரம்வரைக்கும்  பசியுள்ளவர்களும்,  தாகமுள்ளவர்களும்,  நிர்வாணிகளும்,  குட்டுண்டவர்களும்,  தங்க  இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.  {1Cor  4:11}

 

எங்கள்  கைகளினாலே  வேலைசெய்து,  பாடுபடுகிறோம்;  வையப்பட்டு,  ஆசீர்வதிக்கிறோம்;  துன்பப்பட்டு,  சகிக்கிறோம்.  {1Cor  4:12}

 

தூஷிக்கப்பட்டு,  வேண்டிக்கொள்ளுகிறோம்;  இந்நாள்வரைக்கும்  உலகத்தின்  குப்பையைப்போலவும்,  எல்லாரும்  துடைத்துப்போடுகிற  அழுக்கைப்போலவுமானோம்.  {1Cor  4:13}

 

உங்களை  வெட்கப்படுத்தும்படிக்கு  நான்  இவைகளை  எழுதவில்லை,  நீங்கள்  எனக்குப்  பிரியமான  பிள்ளைகளென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {1Cor  4:14}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  பதினாயிரம்  உபாத்தியாயர்கள்  உங்களுக்கு  இருந்தாலும்,  தகப்பன்மார்  அநேகர்  உங்களுக்கு  இல்லையே;  கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  சுவிசேஷத்தினால்  நான்  உங்களைப்  பெற்றேன்.  {1Cor  4:15}

 

ஆகையால்,  என்னைப்  பின்பற்றுகிறவர்களாகுங்களென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {1Cor  4:16}

 

இதினிமித்தமாக,  எனக்குப்  பிரியமும்,  கர்த்தருக்குள்  உண்மையுமுள்ள  என்  குமாரனாகிய  தீமோத்தேயுவை<Timotheus>  உங்களிடத்தில்  அனுப்பினேன்;  நான்  எங்கும்  எந்தச்  சபையிலும்  போதித்துவருகிறபிரகாரம்  கிறிஸ்துவுக்குள்ளான<Christ>  என்  நடக்கைகளை  அவன்  உங்களுக்கு  ஞாபகப்படுத்துவான்.  {1Cor  4:17}

 

நான்  உங்களிடத்திற்கு  வருகிறதில்லை  என்கிறதாகச்  சிலர்  இறுமாப்படைந்திருக்கிறார்கள்.  {1Cor  4:18}

 

ஆகிலும்  கர்த்தருக்குச்  சித்தமானால்  நான்  சீக்கிரமாய்  உங்களிடத்திற்கு  வந்து,  இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய  பேச்சையல்ல,  அவர்களுடைய  பெலத்தையே  அறிந்துகொள்வேன்.  {1Cor  4:19}

 

தேவனுடைய  ராஜ்யம்  பேச்சிலே  அல்ல,  பெலத்திலே  உண்டாயிருக்கிறது.  {1Cor  4:20}

 

உங்களுக்கு  என்னவேண்டும்?  நான்  பிரம்போடு  உங்களிடத்தில்  வரவேண்டுமோ?  அல்லது  அன்போடும்  சாந்தமுள்ள  ஆவியோடும்  வரவேண்டுமோ?  {1Cor  4:21}

 

உங்களுக்குள்ளே  விபசாரம்  உண்டென்று  பிரசித்தமாய்ச்  சொல்லப்படுகிறதே;  ஒருவன்  தன்  தகப்பனுடைய  மனைவியை  வைத்துக்கொண்டிருக்கிறானே;  அது  அஞ்ஞானிகளுக்குள்ளும்  சொல்லப்படாத  விபசாரமாயிருக்கிறதே.  {1Cor  5:1}

 

இப்படிப்பட்ட  காரியஞ்செய்தவனை  நீங்கள்  உங்களைவிட்டு  நீக்காமலும்  துக்கப்படாமலும்,  இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.  {1Cor  5:2}

 

நான்  சரீரத்தினாலே  உங்களுக்குத்  தூரமாயிருந்தும்,  ஆவியினாலே  உங்களோடேகூட  இருக்கிறவனாய்,  இப்படிச்  செய்தவனைக்குறித்து  நான்  கூட  இருக்கிறதுபோல,  {1Cor  5:3}

 

நீங்களும்,  என்னுடைய  ஆவியும்,  நமது  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அதிகாரத்தோடே  கூடிவந்திருக்கையில்,  {1Cor  5:4}

 

அப்படிப்பட்டவனுடைய  ஆவி  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாளிலே  இரட்சிக்கப்படும்படி,  மாம்சத்தின்  அழிவுக்காக,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  நாமத்தினாலே  அவனைச்  சாத்தானுக்கு  ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று  தீர்ப்புச்செய்கிறேன்.  {1Cor  5:5}

 

நீங்கள்  மேன்மைபாராட்டுகிறது  நல்லதல்ல;  கொஞ்சம்  புளித்தமா  பிசைந்தமா  முழுவதையும்  புளிப்பாக்குமென்று  அறியீர்களா?  {1Cor  5:6}

 

ஆகையால்,  நீங்கள்  புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே,  புதிதாய்ப்  பிசைந்த  மாவாயிருக்கும்படிக்கு,  பழைய  புளித்தமாவைப்  புறம்பே  கழித்துப்போடுங்கள்.  ஏனெனில்  நம்முடைய  பஸ்காவாகிய  கிறிஸ்து<Christ>  நமக்காகப்  பலியிடப்பட்டிருக்கிறாரே.  {1Cor  5:7}

 

ஆதலால்  பழைய  புளித்தமாவோடே  அல்ல,  துர்க்குணம்  பொல்லாப்பு  என்னும்  புளித்தமாவோடும்  அல்ல,  துப்புரவு  உண்மை  என்னும்  புளிப்பில்லாத  அப்பத்தோடே  பண்டிகையை  ஆசரிக்கக்கடவோம்.  {1Cor  5:8}

 

விபசாரக்காரரோடே  கலந்திருக்கக்கூடாதென்று  நிருபத்தில்  உங்களுக்கு  எழுதினேன்.  {1Cor  5:9}

 

ஆனாலும்,  இவ்வுலகத்திலுள்ள  விபசாரக்காரர்,  பொருளாசைக்காரர்,  கொள்ளைக்காரர்,  விக்கிரகாராதனைக்காரர்  இவர்களோடு  எவ்வளவும்  கலந்திருக்கக்கூடாதென்று  நான்  எழுதவில்லை;  அப்படியானால்  நீங்கள்  உலகத்தைவிட்டு  நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.  {1Cor  5:10}

 

நான்  உங்களுக்கு  எழுதினதென்னவென்றால்,  சகோதரனென்னப்பட்ட  ஒருவன்  விபசாரக்காரனாயாவது,  பொருளாசைக்காரனாயாவது,  விக்கிரகாராதனைக்காரனாயாவது,  உதாசினனாயாவது,  வெறியனாயாவது,  கொள்ளைக்காரனாயாவது  இருந்தால்,  அவனோடே  கலந்திருக்கக்கூடாது;  அப்படிப்பட்டவனுடனேகூடப்  புசிக்கவுங்கூடாது.  {1Cor  5:11}

 

புறம்பே  இருக்கிறவர்களைக்  குறித்துத்  தீர்ப்புச்செய்கிறது  என்  காரியமா?  உள்ளே  இருக்கிறவர்களைக்  குறித்தல்லவோ  நீங்கள்  தீர்ப்புச்செய்கிறீர்கள்?  {1Cor  5:12}

 

புறம்பே  இருக்கிறவர்களைக்  குறித்துத்  தேவனே  தீர்ப்புச்செய்வார்.  ஆகையால்  அந்தப்  பொல்லாதவனை  உங்களைவிட்டுத்  தள்ளிப்போடுங்கள்.  {1Cor  5:13}

 

உங்களில்  ஒருவனுக்கு  வேறொருவனோடே  வழக்குண்டானால்,  வழக்காடும்படி  அவன்  பரிசுத்தவான்களிடத்தில்  போகாமல்,  அநீதக்காரரிடத்தில்  போகத்  துணிகிறதென்ன?  {1Cor  6:1}

 

பரிசுத்தவான்கள்  உலகத்தை  நியாயந்தீர்ப்பார்களென்று  அறியீர்களா?  உலகம்  உங்களால்  நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க,  அற்ப  வழக்குகளைத்  தீர்க்க  நீங்கள்  அபாத்திரரா?  {1Cor  6:2}

 

தேவ  தூதர்களையும்  நியாயந்தீர்ப்போமென்று  அறியீர்களா?  அப்படியிருக்க,  இந்த  ஜீவனுக்கேற்றவைகளை  நீங்கள்  தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது  எப்படி?  {1Cor  6:3}

 

இந்த  ஜீவனுக்கேற்ற  வழக்குகள்  உங்களுக்கு  இருந்தால்,  தீர்ப்புச்செய்கிறதற்கு,  சபையில்  அற்பமாய்  எண்ணப்பட்டவர்களை  நியமித்துக்கொள்ளுங்கள்.  {1Cor  6:4}

 

உங்களுக்கு  வெட்கம்  உண்டாகும்படி  இதைச்  சொல்லுகிறேன்.  சகோதரனுக்கும்  சகோதரனுக்கும்  உண்டான  வழக்கைத்  தீர்க்கத்தக்க  விவேகி  ஒருவனாகிலும்  உங்களுக்குள்  இல்லையா?  {1Cor  6:5}

 

சகோதரனோடே  சகோதரன்  வழக்காடுகிறான்,  அவிசுவாசிகளுக்கு  முன்பாகவும்  அப்படிச்  செய்கிறான்.  {1Cor  6:6}

 

நீங்கள்  ஒருவரோடொருவர்  வழக்காடுகிறது  எவ்விதத்திலும்  குற்றமாயிருக்கிறது.  அப்படிச்  செய்கிறதைவிட  நீங்கள்  ஏன்  அநியாயத்தைச்  சகித்துக்கொள்ளுகிறதில்லை,  ஏன்  நஷ்டத்தைப்  பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?  {1Cor  6:7}

 

நீங்களே  அநியாயஞ்செய்கிறீர்கள்,  நஷ்டப்படுத்துகிறீர்கள்;  சகோதரருக்கும்  அப்படிச்  செய்கிறீர்களே.  {1Cor  6:8}

 

அநியாயக்காரர்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லையென்று  அறியீர்களா?  வஞ்சிக்கப்படாதிருங்கள்;  வேசிமார்க்கத்தாரும்,  விக்கிரகாராதனைக்காரரும்,  விபசாரக்காரரும்,  சுயபுணர்ச்சிக்காரரும்,  ஆண்புணர்ச்சிக்காரரும்,  {1Cor  6:9}

 

திருடரும்,  பொருளாசைக்காரரும்,  வெறியரும்,  உதாசினரும்,  கொள்ளைக்காரரும்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிப்பதில்லை.  {1Cor  6:10}

 

உங்களில்  சிலர்  இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்;  ஆயினும்  கர்த்தராகிய  இயேசுவின்<Jesus>  நாமத்தினாலும்,  நமது  தேவனுடைய  ஆவியினாலும்  கழுவப்பட்டீர்கள்,  பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,  நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.  {1Cor  6:11}

 

எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  எல்லாம்  தகுதியாயிராது;  எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  நான்  ஒன்றிற்கும்  அடிமைப்படமாட்டேன்.  {1Cor  6:12}

 

வயிற்றுக்குப்  போஜனமும்  போஜனத்துக்கு  வயிறும்  ஏற்கும்;  ஆனாலும்  தேவன்  இதையும்  அதையும்  அழியப்பண்ணுவார்.  சரீரமோ  வேசித்தனத்திற்கல்ல,  கர்த்தருக்கே  உரியது;  கர்த்தரும்  சரீரத்திற்கு  உரியவர்.  {1Cor  6:13}

 

தேவன்  கர்த்தரை  எழுப்பினாரே,  நம்மையும்  தமது  வல்லமையினாலே  எழுப்புவார்.  {1Cor  6:14}

 

உங்கள்  சரீரங்கள்  கிறிஸ்துவின்<Christ>  அவயவங்களென்று  அறியீர்களா?  அப்படியிருக்க,  நான்  கிறிஸ்துவின்<Christ>  அவயவங்களை  வேசியின்  அவயவங்களாக்கலாமா?  அப்படிச்  செய்யலாகாதே.  {1Cor  6:15}

 

வேசியோடு  இசைந்திருக்கிறவன்  அவளுடனே  ஒரே  சரீரமாயிருக்கிறானென்று  அறியீர்களா?  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்  என்று  சொல்லியிருக்கிறதே.  {1Cor  6:16}

 

அப்படியே  கர்த்தரோடிசைந்திருக்கிறவனும்,  அவருடனே  ஒரே  ஆவியாயிருக்கிறான்.  {1Cor  6:17}

 

வேசித்தனத்திற்கு  விலகியோடுங்கள்.  மனுஷன்  செய்கிற  எந்தப்  பாவமும்  சரீரத்திற்குப்  புறம்பாயிருக்கும்;  வேசித்தனஞ்  செய்கிறவனோ  தன்  சுயசரீரத்திற்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்கிறான்.  {1Cor  6:18}

 

உங்கள்  சரீரமானது  நீங்கள்  தேவனாலே  பெற்றும்  உங்களில்  தங்கியும்  இருக்கிற  பரிசுத்த  ஆவியினுடைய  ஆலயமாயிருக்கிறதென்றும்,  நீங்கள்  உங்களுடையவர்களல்லவென்றும்  அறியீர்களா?  {1Cor  6:19}

 

கிரயத்துக்குக்  கொள்ளப்பட்டீர்களே;  ஆகையால்  தேவனுக்கு  உடையவைகளாகிய  உங்கள்  சரீரத்தினாலும்  உங்கள்  ஆவியினாலும்  தேவனை  மகிமைப்படுத்துங்கள்.  {1Cor  6:20}

 

நீங்கள்  எனக்கு  எழுதின  காரியங்களைக்குறித்து  நான்  எழுதுகிறதென்னவென்றால்,  ஸ்திரீயைத்  தொடாமலிருக்கிறது  மனுஷனுக்கு  நல்லது.  {1Cor  7:1}

 

ஆகிலும்  வேசித்தனம்  இராதபடிக்கு  அவனவன்  தன்  சொந்த  மனைவியையும்,  அவளவள்  தன்  சொந்தப்  புருஷனையும்  உடையவர்களாயிருக்கவேண்டும்.  {1Cor  7:2}

 

புருஷன்  தன்  மனைவிக்குச்  செய்யவேண்டிய  கடமையைச்  செய்யக்கடவன்;  அப்படியே  மனைவியும்  தன்  புருஷனுக்குச்  செய்யக்கடவள்.  {1Cor  7:3}

 

மனைவியானவள்  தன்  சுயசரீரத்திற்கு  அதிகாரியல்ல,  புருஷனே  அதற்கு  அதிகாரி;  அப்படியே  புருஷனும்  தன்  சுயசரீரத்திற்கு  அதிகாரியல்ல,  மனைவியே  அதற்கு  அதிகாரி.  {1Cor  7:4}

 

உபவாசத்திற்கும்  ஜெபத்திற்கும்  தடையிராதபடிக்கு  இருவரும்  சிலகாலம்  பிரிந்திருக்கவேண்டுமென்று  சம்மதித்தாலன்றி,  ஒருவரைவிட்டு  ஒருவர்  பிரியாதிருங்கள்;  உங்களுக்கு  விரதத்துவம்  இல்லாமையால்  சாத்தான்  உங்களைத்  தூண்டிவிடாதபடிக்கு,  மறுபடியும்  கூடி  வாழுங்கள்.  {1Cor  7:5}

 

இதை  நான்  கட்டளையாகச்  சொல்லாமல்,  யோசனையாகச்  சொல்லுகிறேன்.  {1Cor  7:6}

 

எல்லா  மனுஷரும்  என்னைப்போலவே  இருக்க  விரும்புகிறேன்.  ஆகிலும்  அவனவனுக்குத்  தேவனால்  அருளப்பட்ட  அவனவனுக்குரிய  வரமுண்டு;  அது  ஒருவனுக்கு  ஒருவிதமாயும்,  மற்றொருவனுக்கு  வேறுவிதமாயும்  இருக்கிறது.  {1Cor  7:7}

 

விவாகமில்லாதவர்களையும்,  கைம்பெண்களையும்குறித்து  நான்  சொல்லுகிறது  என்னவென்றால்,  அவர்கள்  என்னைப்போல  இருந்துவிட்டால்  அவர்களுக்கு  நலமாயிருக்கும்.  {1Cor  7:8}

 

ஆகிலும்  அவர்கள்  விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால்  விவாகம்பண்ணக்கடவர்கள்;  வேகிறதைப்பார்க்கிலும்  விவாகம்பண்ணுகிறது  நலம்.  {1Cor  7:9}

 

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு  நானல்ல,  கர்த்தரே  கட்டளையிடுகிறதாவது:  மனைவியானவள்  தன்  புருஷனை  விட்டுப்  பிரிந்துபோகக்கூடாது.  {1Cor  7:10}

 

பிரிந்துபோனால்  அவள்  விவாகமில்லாதிருக்கக்கடவள்,  அல்லது  புருஷனோடே  ஒப்புரவாகக்கடவள்;  புருஷனும்  தன்  மனைவியைத்  தள்ளிவிடக்கூடாது.  {1Cor  7:11}

 

மற்றவர்களைக்குறித்துக்  கர்த்தர்  அல்ல,  நானே  சொல்லுகிறதாவது:  சகோதரனொருவனுடைய  மனைவி  அவிசுவாசியாயிருந்தும்,  அவனுடனே  வாசமாயிருக்க  அவளுக்குச்  சம்மதமிருந்தால்,  அவன்  அவளைத்  தள்ளிவிடாதிருக்கக்கடவன்.  {1Cor  7:12}

 

அப்படியே  ஒரு  ஸ்திரீயினுடைய  புருஷன்  அவிசுவாசியாயிருந்தும்,  அவளுடனே  வாசமாயிருக்க  அவனுக்குச்  சம்மதமிருந்தால்,  அவள்  அவனைத்  தள்ளிவிடாதிருக்கக்கடவள்.  {1Cor  7:13}

 

என்னத்தினாலெனில்,  அவிசுவாசியான  புருஷன்  தன்  மனைவியால்  பரிசுத்தமாக்கப்படுகிறான்;  அவிசுவாசியான  மனைவியும்  தன்  புருஷனால்  பரிசுத்தமாக்கப்படுகிறாள்.  இல்லாவிட்டால்  உங்கள்  பிள்ளைகள்  அசுத்தமாயிருக்குமே;  இப்பொழுதோ  அவைகள்  பரிசுத்தமாயிருக்கின்றன.  {1Cor  7:14}

 

ஆகிலும்  அவிசுவாசி  பிரிந்துபோனால்  பிரிந்துபோகட்டும்,  இப்படிப்பட்ட  விஷயத்தில்,  சகோதரனாவது  சகோதரியாவது  அடிமைப்பட்டவர்களல்ல.  சமாதானமாயிருக்கும்படிக்கே  தேவன்  நம்மை  அழைத்திருக்கிறார்.  {1Cor  7:15}

 

மனைவியானவளே,  நீ  உன்  புருஷனை  இரட்சிப்பாயோ  அல்லவோ  உனக்கு  எப்படித்  தெரியும்?  புருஷனே,  நீ  உன்  மனைவியை  இரட்சிப்பாயோ  அல்லவோ  உனக்கு  எப்படித்  தெரியும்?  {1Cor  7:16}

 

தேவன்  அவனவனுக்குப்  பகிர்ந்ததெப்படியோ,  கர்த்தர்  அவனவனை  அழைத்ததெப்படியோ,  அப்படியே  அவனவன்  நடக்கக்கடவன்.  எல்லாச்  சபைகளிலேயும்  இப்படியே  திட்டம்பண்ணுகிறேன்.  {1Cor  7:17}

 

ஒருவன்  விருத்தசேதனம்  பெற்றவனாய்  அழைக்கப்பட்டிருந்தால்,  விருத்தசேதனமில்லாதவனாயிருக்க  வகைதேடானாக;  ஒருவன்  விருத்தசேதனமில்லாதவனாய்  அழைக்கப்பட்டிருந்தால்,  விருத்தசேதனம்  பெறாதிருப்பானாக.  {1Cor  7:18}

 

விருத்தசேதனமும்  ஒன்றுமில்லை,  விருத்தசேதனமில்லாமையும்  ஒன்றுமில்லை;  தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறதே  காரியம்.  {1Cor  7:19}

 

அவனவன்  தான்  அழைக்கப்பட்ட  நிலைமையிலே  நிலைத்திருக்கக்கடவன்.  {1Cor  7:20}

 

அடிமையாய்  நீ  அழைக்கப்பட்டிருந்தால்,  கவலைப்படாதே;  நீ  சுயாதீனனாகக்கூடுமானால்  அதை  நலமென்று  அநுசரித்துக்கொள்.  {1Cor  7:21}

 

கர்த்தருக்குள்  அழைக்கப்பட்ட  அடிமையானவன்  கர்த்தருடைய  சுயாதீனனாயிருக்கிறான்;  அப்படியே  அழைக்கப்பட்ட  சுயாதீனன்  கிறிஸ்துவினுடைய<Christ>  அடிமையாயிருக்கிறான்.  {1Cor  7:22}

 

நீங்கள்  கிரயத்துக்குக்  கொள்ளப்பட்டீர்கள்;  மனுஷருக்கு  அடிமைகளாகாதிருங்கள்.  {1Cor  7:23}

 

சகோதரரே,  அவனவன்  தான்  அழைக்கப்பட்ட  நிலைமையிலே  தேவனுக்கு  முன்பாக  நிலைத்திருக்கக்கடவன்.  {1Cor  7:24}

 

அன்றியும்  கன்னிகைகளைக்குறித்து,  கர்த்தரால்  எனக்குக்  கட்டளை  இல்லை.  ஆகிலும்  நான்  உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக்  கர்த்தரால்  இரக்கம்பெற்று,  என்  அபிப்பிராயத்தைத்  தெரியப்படுத்துகிறேன்.  {1Cor  7:25}

 

அதென்னவெனில்,  இப்பொழுது  உண்டாயிருக்கிற  துன்பத்தினிமித்தம்  விவாகமில்லாமலிருக்கிறது  மனுஷனுக்கு  நலமாயிருக்குமென்று  எண்ணுகிறேன்.  {1Cor  7:26}

 

நீ  மனைவியோடே  கட்டப்பட்டிருந்தால்,  அவிழ்க்கப்பட  வகைதேடாதே;  நீ  மனைவி  இல்லாதவனாயிருந்தால்,  மனைவியைத்  தேடாதே.  {1Cor  7:27}

 

நீ  விவாகம்பண்ணினாலும்  பாவமல்ல;  கன்னிகை  விவாகம்பண்ணினாலும்  பாவமல்ல.  ஆகிலும்  அப்படிப்பட்டவர்கள்  சரீரத்திலே  உபத்திரவப்படுவார்கள்;  அதற்கு  நீங்கள்  தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.  {1Cor  7:28}

 

மேலும்,  சகோதரரே,  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  இனிவரும்  காலம்  குறுகினதானபடியால்,  மனைவிகளுள்ளவர்கள்  மனைவிகளில்லாதவர்கள்போலவும்,  {1Cor  7:29}

 

அழுகிறவர்கள்  அழாதவர்கள்போலவும்,  சந்தோஷப்படுகிறவர்கள்  சந்தோஷப்படாதவர்கள்போலவும்,  கொள்ளுகிறவர்கள்  கொள்ளாதவர்கள்போலவும்,  {1Cor  7:30}

 

இவ்வுலகத்தை  அனுபவிக்கிறவர்கள்  அதைத்  தகாதவிதமாய்  அனுபவியாதவர்கள்போலவும்  இருக்கவேண்டும்;  இவ்வுலகத்தின்  வேஷம்  கடந்துபோகிறதே.  {1Cor  7:31}

 

நீங்கள்  கவலையற்றவர்களாயிருக்க  விரும்புகிறேன்.  விவாகமில்லாதவன்  கர்த்தருக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  கர்த்தருக்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறான்.  {1Cor  7:32}

 

விவாகம்பண்ணினவன்  தன்  மனைவிக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  உலகத்திற்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறான்.  {1Cor  7:33}

 

அதுபோல,  மனைவியானவளுக்கும்  கன்னிகைக்கும்  வித்தியாசமுண்டு.  விவாகமில்லாதவள்  சரீரத்திலும்  ஆத்துமாவிலும்  பரிசுத்தமாயிருக்கும்படி,  கர்த்தருக்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறாள்;  விவாகம்பண்ணினவள்  தன்  புருஷனுக்கு  எப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று,  உலகத்திற்குரியவைகளுக்காகக்  கவலைப்படுகிறாள்.  {1Cor  7:34}

 

இதை  நான்  உங்களைக்  கண்ணியில்  அகப்படுத்தவேண்டுமென்று  சொல்லாமல்,  உங்களுக்குத்  தகுதியாயிருக்குமென்றும்,  நீங்கள்  கவலையில்லாமல்  கர்த்தரைப்  பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும்,  உங்கள்  சுயபிரயோஜனத்துக்காகவே  சொல்லுகிறேன்.  {1Cor  7:35}

 

ஆகிலும்  ஒருவன்  தன்  புத்திரியின்  கன்னிகைப்பருவம்  கடந்துபோனதினாலே,  அவள்  விவாகம்பண்ணாமலிருப்பது  அவளுக்குத்  தகுதியல்லவென்றும்,  அவள்  விவாகம்பண்ணுவது  அவசியமென்றும்  நினைத்தால்,  அவன்  தன்  மனதின்படி  செய்யக்கடவன்;  அது  பாவமல்ல,  விவாகம்பண்ணட்டும்.  {1Cor  7:36}

 

ஆயினும்  அதற்கு  அவசியத்தைக்  காணாமல்,  தன்  இருதயத்திலே  உறுதியுள்ளவனாயும்,  சுயசித்தத்தின்படி  செய்ய  அதிகாரமுள்ளவனாயுமிருந்து,  தன்  புத்திரியின்  கன்னிகைப்  பருவத்தைக்  காக்கவேண்டுமென்று  தன்  இருதயத்தில்  தீர்மானிக்கிறவன்  நன்மைசெய்கிறான்.  {1Cor  7:37}

 

இப்படியிருக்க,  அவளை  விவாகம்பண்ணிக்  கொடுக்கிறவனும்  நன்மைசெய்கிறான்;  கொடாமலிருக்கிறவனும்  அதிக  நன்மைசெய்கிறான்.  {1Cor  7:38}

 

மனைவியானவள்  தன்  புருஷன்  உயிரோடிருக்குங்  காலமளவும்  பிரமாணத்தினால்  கட்டப்பட்டிருக்கிறாள்;  தன்  புருஷன்  மரித்தபின்பு  தனக்கு  இஷ்டமானவனாயும்  கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற  எவனையாகிலும்  விவாகம்பண்ணிக்கொள்ள  விடுதலையாயிருக்கிறாள்.  {1Cor  7:39}

 

ஆகிலும்  என்னுடைய  அபிப்பிராயத்தின்படி  அவள்  அப்படியே  இருந்துவிட்டால்  பாக்கியவதியாயிருப்பாள்.  என்னிடத்திலும்  தேவனுடைய  ஆவி  உண்டென்று  எண்ணுகிறேன்.  {1Cor  7:40}

 

விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைக்குறித்த  விஷயத்தில்,  நம்மெல்லாருக்கும்  அறிவு  உண்டென்று  நமக்குத்  தெரியுமே.  அறிவு  இறுமாப்பை  உண்டாக்கும்,  அன்போ  பக்திவிருத்தியை  உண்டாக்கும்.  {1Cor  8:1}

 

ஒருவன்  தான்  ஏதேனும்  ஒன்றை  அறிந்தவனென்று  எண்ணிக்கொள்வானானால்,  ஒன்றையும்  அறியவேண்டியபிரகாரமாக  அவன்  இன்னும்  அறியவில்லை.  {1Cor  8:2}

 

தேவனில்  அன்புகூருகிறவனெவனோ,  அவன்  தேவனால்  அறியப்பட்டிருக்கிறான்.  {1Cor  8:3}

 

விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைப்  புசிக்கிற  விஷயத்தைப்பற்றி,  உலகத்திலே  விக்கிரகமானது  ஒன்றுமில்லையென்றும்  ஒருவரேயன்றி  வேறொரு  தேவன்  இல்லையென்றும்  அறிந்திருக்கிறோம்.  {1Cor  8:4}

 

வானத்திலேயும்  பூமியிலேயும்  தேவர்கள்  என்னப்படுகிறவர்கள்  உண்டு;  இப்படி  அநேக  தேவர்களும்  அநேக  கர்த்தாக்களும்  உண்டாயிருந்தாலும்,  {1Cor  8:5}

 

பிதாவாகிய  ஒரே  தேவன்  நமக்குண்டு,  அவராலே  சகலமும்  உண்டாயிருக்கிறது;  அவருக்கென்று  நாமும்  உண்டாயிருக்கிறோம்.  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னும்  ஒரே  கர்த்தரும்  நமக்குண்டு;  அவர்மூலமாய்ச்  சகலமும்  உண்டாயிருக்கிறது,  அவர்  மூலமாய்  நாமும்  உண்டாயிருக்கிறோம்.  {1Cor  8:6}

 

ஆகிலும்,  இந்த  அறிவு  எல்லாரிடத்திலும்  இல்லை.  சிலர்  இன்றையவரைக்கும்  விக்கிரகத்தை  ஒரு  பொருளென்று  எண்ணி,  விக்கிரகத்துக்குப்  படைக்கப்பட்டதைப்  புசிக்கிறார்கள்;  அவர்களுடைய  மனச்சாட்சி  பலவீனமாயிருப்பதால்  அசுசிப்படுகிறது.  {1Cor  8:7}

 

போஜனமானது  நம்மைத்  தேவனுக்கு  உகந்தவர்களாக்கமாட்டாது;  என்னத்தினாலெனில்,  புசிப்பதினால்  நமக்கு  ஒரு  மேன்மையுமில்லை,  புசியாதிருப்பதினால்  நமக்கு  ஒரு  குறைவுமில்லை.  {1Cor  8:8}

 

ஆகிலும்  இதைக்குறித்து  உங்களுக்கு  உண்டாயிருக்கிற  அதிகாரம்  எவ்விதத்திலும்  பலவீனருக்குத்  தடுக்கலாகாதபடிக்குப்  பாருங்கள்.  {1Cor  8:9}

 

எப்படியெனில்,  அறிவுள்ளவனாகிய  உன்னை  விக்கிரகக்கோவிலிலே  பந்தியிருக்க  ஒருவன்  கண்டால்,  பலவீனனாயிருக்கிற  அவனுடைய  மனச்சாட்சி  விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டவைகளைப்  புசிப்பதற்குத்  துணிவுகொள்ளுமல்லவா?  {1Cor  8:10}

 

பலவீனமுள்ள  சகோதரன்  உன்  அறிவினிமித்தம்  கெட்டுப்போகலாமா?  அவனுக்காகக்  கிறிஸ்து<Christ>  மரித்தாரே.  {1Cor  8:11}

 

இப்படிச்  சகோதரருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்து,  பலவீனமுள்ள  அவர்களுடைய  மனச்சாட்சியைப்  புண்படுத்துகிறதினாலே,  நீங்கள்  கிறிஸ்துவுக்கு<Christ>  விரோதமாய்ப்  பாவஞ்செய்கிறீர்கள்.  {1Cor  8:12}

 

ஆதலால்  போஜனம்  என்  சகோதரனுக்கு  இடறலுண்டாக்கினால்,  நான்  என்  சகோதரனுக்கு  இடறலுண்டாக்காதபடிக்கு,  என்றைக்கும்  மாம்சம்  புசியாதிருப்பேன்.  {1Cor  8:13}

 

நான்  அப்போஸ்தலனல்லவா?  நான்  சுயாதீனனல்லவா?  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை<Jesus  Christ>  நான்  தரிசிக்கவில்லையா?  கர்த்தருக்குள்  நீங்கள்  என்  கிரியையாயிருக்கிறீர்களல்லவா?  {1Cor  9:1}

 

நான்  மற்றவர்களுக்கு  அப்போஸ்தலனாயிராவிட்டாலும்,  உங்களுக்கல்லவோ  அப்போஸ்தலனாயிருக்கிறேன்;  கர்த்தருக்குள்  நீங்கள்  என்  அப்போஸ்தல  ஊழியத்திற்கு  முத்திரையாயிருக்கிறீர்களே.  {1Cor  9:2}

 

என்னை  நியாயம்  விசாரிக்கிறவர்களுக்கு  நான்  சொல்லுகிற  மாறுத்தரமாவது:  {1Cor  9:3}

 

புசிக்கவும்  குடிக்கவும்  எங்களுக்கு  அதிகாரமில்லையா?  {1Cor  9:4}

 

மற்ற  அப்போஸ்தலரும்,  கர்த்தருடைய  சகோதரரும்,  கேபாவும்<Cephas>  செய்கிறதுபோல,  மனைவியாகிய  ஒரு  சகோதரியைக்  கூட்டிக்கொண்டு  திரிய  எங்களுக்கும்  அதிகாரமில்லையா?  {1Cor  9:5}

 

அல்லது,  கைத்தொழில்  செய்யாதிருக்கிறதற்கு  எனக்கும்  பர்னபாவுக்கும்மாத்திரந்தானா<Barnabas>  அதிகாரமில்லை?  {1Cor  9:6}

 

எவன்  தன்  சொந்தப்பணத்தைச்  செலவழித்து,  தண்டிலே  சேவகம்பண்ணுவான்?  எவன்  திராட்சத்தோட்டத்தை  உண்டாக்கி,  அதின்  கனியில்  புசியாதிருப்பான்?  எவன்  மந்தையை  மேய்த்து,  அதின்  பாலைச்  சாப்பிடாதிருப்பான்?  {1Cor  9:7}

 

இவைகளை  மனுஷர்  வழக்கத்தின்படி  சொல்லுகிறேனோ?  நியாயப்பிரமாணமும்  இவைகளைச்  சொல்லுகிறதில்லையா?  {1Cor  9:8}

 

போரடிக்கிற  மாட்டை  வாய்கட்டாயாக  என்று  மோசேயின்<Moses>  பிரமாணத்திலே  எழுதியிருக்கிறதே.  தேவன்  மாடுகளுக்காகவே  கவலையாயிருக்கிறாரோ?  {1Cor  9:9}

 

நமக்காகத்தான்  இதைச்  சொல்லுகிறாரோ?  உழுகிறவன்  நம்பிக்கையோடே  உழவும்,  போரடிக்கிறவன்  தான்  நம்புகிறதில்  பங்கடைவேன்  என்கிற  நம்பிக்கையோடே  போரடிக்கவும்  வேண்டியதே,  ஆகையால்,  அது  நமக்காகவே  எழுதியிருக்கிறது.  {1Cor  9:10}

 

நாங்கள்  உங்களுக்கு  ஞானநன்மைகளை  விதைத்திருக்க,  உங்கள்  சரீரநன்மைகளை  அறுத்தால்  அது  பெரிய  காரியமா?  {1Cor  9:11}

 

மற்றவர்கள்  உங்களிடத்திலே  இந்த  அதிகாரத்தைச்  செலுத்தினால்,  அவர்களிலும்  நாங்கள்  அதிகமாய்ச்  செலுத்தலாமல்லவா?  அப்படியிருந்தும்,  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்திற்கு  யாதொரு  தடையும்  உண்டாகாதபடிக்கு,  நாங்கள்  இந்த  அதிகாரத்தைச்  செலுத்தாமல்  எல்லாப்  பாடும்  படுகிறோம்.  {1Cor  9:12}

 

ஆசாரிய  ஊழியஞ்செய்கிறவர்கள்  தேவாலயத்திற்குரியவைகளில்  புசிக்கிறார்களென்றும்,  பலிபீடத்தை  அடுத்துப்  பணிவிடை  செய்கிறவர்களுக்குப்  பலிபீடத்திலுள்ளவைகளில்  பங்கு  உண்டென்றும்  அறியீர்களா?  {1Cor  9:13}

 

அந்தப்படியே  சுவிசேஷத்தை  அறிவிக்கிறவர்களுக்குச்  சுவிசேஷத்தினாலே  பிழைப்பு  உண்டாகவேண்டுமென்று  கர்த்தரும்  கட்டளையிட்டிருக்கிறார்.  {1Cor  9:14}

 

அப்படியிருந்தும்,  நான்  இவைகளில்  ஒன்றையும்  அநுபவிக்கவில்லை;  இப்படி  எனக்கு  நடக்கவேண்டுமென்று  இவைகளை  நான்  எழுதுகிறதுமில்லை.  என்  மேன்மைபாராட்டலை  ஒருவன்  அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும்  சாகிறது  எனக்கு  நலமாயிருக்கும்.  {1Cor  9:15}

 

சுவிசேஷத்தை  நான்  பிரசங்கித்துவந்தும்,  மேன்மைபாராட்ட  எனக்கு  இடமில்லை;  அது  என்மேல்  விழுந்த  கடமையாயிருக்கிறது;  சுவிசேஷத்தை  நான்  பிரசங்கியாதிருந்தால்,  எனக்கு  ஐயோ.  {1Cor  9:16}

 

நான்  உற்சாகமாய்  அப்படிச்  செய்தால்  எனக்குப்  பலன்  உண்டு;  உற்சாகமில்லாதவனாய்ச்  செய்தாலும்,  உக்கிராண  உத்தியோகம்  எனக்கு  ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.  {1Cor  9:17}

 

ஆதலால்  எனக்குப்  பலன்  என்ன?  நான்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கையில்  அதைப்பற்றி  எனக்கு  உண்டாயிருக்கிற  அதிகாரத்தை  முற்றிலும்  செலுத்தாமல்,  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைச்  செலவில்லாமல்  ஸ்தாபிப்பதே  எனக்குப்  பலன்.  {1Cor  9:18}

 

நான்  ஒருவருக்கும்  அடிமைப்படாதவனாயிருந்தும்,  நான்  அதிக  ஜனங்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு,  என்னைத்தானே  எல்லாருக்கும்  அடிமையாக்கினேன்.  {1Cor  9:19}

 

யூதரை<Jews>  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  யூதருக்கு<Jews>  யூதனைப்போலவும்<Jew>,  நியாயப்பிரமாணத்துக்குக்  கீழ்ப்பட்டவர்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  நியாயப்பிரமாணத்துக்குக்  கீழ்ப்பட்டவனைப்  போலவுமானேன்.  {1Cor  9:20}

 

நியாயப்பிரமாணமில்லாதவர்களை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு  அவர்களுக்கு  நியாயப்பிரமாணம்  இல்லாதவனைப்  போலவுமானேன்.  அப்படியிருந்தும்,  நான்  தேவனுக்குமுன்பாக  நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல்,  கிறிஸ்துவின்<Christ>  பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.  {1Cor  9:21}

 

பலவீனரை  ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப்  பலவீனருக்குப்  பலவீனனைப்போலானேன்;  எப்படியாகிலும்  சிலரை  இரட்சிக்கும்படிக்கு  நான்  எல்லாருக்கும்  எல்லாமானேன்.  {1Cor  9:22}

 

சுவிசேஷத்தில்  நான்  உடன்பங்காளியாகும்படிக்கு,  அதினிமித்தமே  இப்படிச்  செய்கிறேன்.  {1Cor  9:23}

 

பந்தயச்  சாலையில்  ஓடுகிறவர்களெல்லாரும்  ஓடுவார்கள்;  ஆகிலும்,  ஒருவனே  பந்தயத்தைப்  பெறுவானென்று  அறியீர்களா?  நீங்கள்  பெற்றுக்கொள்ளத்தக்கதாக  ஓடுங்கள்.  {1Cor  9:24}

 

பந்தயத்திற்குப்  போராடுகிற  யாவரும்  எல்லாவற்றிலேயும்  இச்சையடக்கமாயிருப்பார்கள்.  அவர்கள்  அழிவுள்ள  கிரீடத்தைப்  பெறும்படிக்கு  அப்படிச்  செய்கிறார்கள்,  நாமோ  அழிவில்லாத  கிரீடத்தைப்  பெறும்படிக்கு  அப்படிச்  செய்கிறோம்.  {1Cor  9:25}

 

ஆதலால்  நான்  நிச்சயமில்லாதவனாக  ஓடேன்;  ஆகாயத்தை  அடிக்கிறவனாகச்  சிலம்பம்பண்ணேன்.  {1Cor  9:26}

 

மற்றவர்களுக்குப்  பிரசங்கம்பண்ணுகிற  நான்தானே  ஆகாதவனாய்ப்  போகாதபடிக்கு,  என்  சரீரத்தை  ஒடுக்கிக்  கீழ்ப்படுத்துகிறேன்.  {1Cor  9:27}

 

இப்படியிருக்க,  சகோதரரே,  நீங்கள்  எவைகளை  அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்;  நம்முடைய  பிதாக்களெல்லாரும்  மேகத்துக்குக்  கீழாயிருந்தார்கள்,  எல்லாரும்  சமுத்திரத்தின்  வழியாய்  நடந்துவந்தார்கள்.  {1Cor  10:1}

 

எல்லாரும்  மோசேக்குள்ளாக<Moses>  மேகத்தினாலும்  சமுத்திரத்தினாலும்  ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.  {1Cor  10:2}

 

எல்லாரும்  ஒரே  ஞானபோஜனத்தைப்  புசித்தார்கள்.  {1Cor  10:3}

 

எல்லாரும்  ஒரே  ஞானபானத்தைக்  குடித்தார்கள்.  எப்படியெனில்,  அவர்களோடேகூடச்  சென்ற  ஞானக்கன்மலையின்  தண்ணீரைக்  குடித்தார்கள்;  அந்தக்  கன்மலை  கிறிஸ்துவே<Christ>.  {1Cor  10:4}

 

அப்படியிருந்தும்,  அவர்களில்  அதிகமானபேர்களிடத்தில்  தேவன்  பிரியமாயிருந்ததில்லை;  ஆதலால்  வனாந்தரத்திலே  அவர்கள்  அழிக்கப்பட்டார்கள்.  {1Cor  10:5}

 

அவர்கள்  இச்சித்ததுபோல  நாமும்  பொல்லாங்கானவைகளை  இச்சியாதபடிக்கு,  இவைகள்  நமக்குத்  திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.  {1Cor  10:6}

 

ஜனங்கள்  புசிக்கவும்  குடிக்கவும்  உட்கார்ந்து,  விளையாட  எழுந்தார்கள்  என்று  எழுதியிருக்கிறபடி,  அவர்களில்  சிலர்  விக்கிரகாராதனைக்காரர்  ஆனதுபோல  நீங்களும்  ஆகாதிருங்கள்.  {1Cor  10:7}

 

அவர்களில்  சிலர்  வேசித்தனம்பண்ணி,  ஒரேநாளில்  இருபத்துமூவாயிரம்பேர்  விழுந்துபோனார்கள்;  அதுபோல  நாமும்  வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.  {1Cor  10:8}

 

அவர்களில்  சிலர்  கிறிஸ்துவைப்<Christ>  பரீட்சைபார்த்து,  பாம்புகளால்  அழிக்கப்பட்டார்கள்;  அதுபோல  நாமும்  கிறிஸ்துவைப்<Christ>  பரீட்சைபாராதிருப்போமாக.  {1Cor  10:9}

 

அவர்களில்  சிலர்  முறுமுறுத்து,  சங்காரக்காரனாலே  அழிக்கப்பட்டார்கள்;  அதுபோல  நீங்களும்  முறுமுறுக்காதிருங்கள்.  {1Cor  10:10}

 

இவைகளெல்லாம்  திருஷ்டாந்தங்களாக  அவர்களுக்குச்  சம்பவித்தது;  உலகத்தின்  முடிவுகாலத்திலுள்ள  நமக்கு  எச்சரிப்புண்டாக்கும்படி  எழுதப்பட்டும்  இருக்கிறது.  {1Cor  10:11}

 

இப்படியிருக்க,  தன்னை  நிற்கிறவனென்று  எண்ணுகிறவன்  விழாதபடிக்கு  எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.  {1Cor  10:12}

 

மனுஷருக்கு  நேரிடுகிற  சோதனையேயல்லாமல்  வேறே  சோதனை  உங்களுக்கு  நேரிடவில்லை.  தேவன்  உண்மையுள்ளவராயிருக்கிறார்;  உங்கள்  திராணிக்கு  மேலாக  நீங்கள்  சோதிக்கப்படுகிறதற்கு  அவர்  இடங்கொடாமல்,  சோதனையைத்  தாங்கத்தக்கதாக,  சோதனையோடுகூட  அதற்குத்  தப்பிக்கொள்ளும்படியான  போக்கையும்  உண்டாக்குவார்.  {1Cor  10:13}

 

ஆகையால்  எனக்குப்  பிரியமானவர்களே,  விக்கிரகாராதனைக்கு  விலகி  ஓடுங்கள்.  {1Cor  10:14}

 

உங்களைப்  புத்திமான்களென்று  எண்ணிப்  பேசுகிறேன்;  நான்  சொல்லுகிறதை  நீங்களே  நிதானித்துப்பாருங்கள்.  {1Cor  10:15}

 

நாம்  ஆசீர்வதிக்கிற  ஆசீர்வாதத்தின்  பாத்திரம்  கிறிஸ்துவினுடைய<Christ>  இரத்தத்தின்  ஐக்கியமாயிருக்கிறதல்லவா?  நாம்  பிட்கிற  அப்பம்  கிறிஸ்துவினுடைய<Christ>  சரீரத்தின்  ஐக்கியமாயிருக்கிறதல்லவா?  {1Cor  10:16}

 

அந்த  ஒரே  அப்பத்தில்  நாமெல்லாரும்  பங்குபெறுகிறபடியால்,  அநேகரான  நாம்  ஒரே  அப்பமும்  ஒரே  சரீரமுமாயிருக்கிறோம்.  {1Cor  10:17}

 

மாம்சத்தின்படியான  இஸ்ரவேலரைப்<Israel>  பாருங்கள்;  பலிகளைப்  புசிக்கிறவர்கள்  பலிபீடத்தோடே  ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?  {1Cor  10:18}

 

இப்படியிருக்க,  விக்கிரகம்  ஒரு  பொருளென்றும்,  விக்கிரகத்துக்குப்  படைக்கப்பட்டது  ஒரு  பொருளென்றும்  நான்  சொல்லுகிறேனோ?  {1Cor  10:19}

 

அஞ்ஞானிகள்  பலியிடுகிறவைகளை  தேவனுக்கு  அல்ல,  பேய்களுக்கே  பலியிடுகிறார்களென்று  சொல்லுகிறேன்;  நீங்கள்  பேய்களோடே  ஐக்கியமாயிருக்க  எனக்கு  மனதில்லை.  {1Cor  10:20}

 

நீங்கள்  கர்த்தருடைய  பாத்திரத்திலும்  பேய்களுடைய  பாத்திரத்திலும்  பானம்பண்ணக்கூடாதே;  நீங்கள்  கர்த்தருடைய  போஜனபந்திக்கும்  பேய்களுடைய  போஜனபந்திக்கும்  பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.  {1Cor  10:21}

 

நாம்  கர்த்தருக்கு  எரிச்சலை  மூட்டலாமா?  அவரிலும்  நாம்  பலவான்களா?  {1Cor  10:22}

 

எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  எல்லாம்  தகுதியாயிராது;  எல்லாவற்றையும்  அநுபவிக்க  எனக்கு  அதிகாரமுண்டு,  ஆகிலும்  எல்லாம்  பக்திவிருத்தியை  உண்டாக்காது.  {1Cor  10:23}

 

ஒவ்வொருவனும்  தன்  சுயபிரயோஜனத்தைத்  தேடாமல்,  பிறனுடைய  பிரயோஜனத்தைத்  தேடக்கடவன்.  {1Cor  10:24}

 

கடையிலே  விற்கப்படுகிற  எதையும்  வாங்கிப்  புசியுங்கள்;  மனச்சாட்சியினிமித்தம்  நீங்கள்  ஒன்றையும்  விசாரிக்கவேண்டியதில்லை.  {1Cor  10:25}

 

பூமியும்  அதின்  நிறைவும்  கர்த்தருடையது.  {1Cor  10:26}

 

அன்றியும்  அவிசுவாசிகளில்  ஒருவன்  உங்களை  விருந்துக்கு  அழைக்கும்போது,  போக  உங்களுக்கு  மனதிருந்தால்,  மனச்சாட்சியினிமித்தம்  ஒன்றையும்  விசாரியாமல்,  உங்கள்  முன்  வைக்கப்படுகிற  எதையும்  புசியுங்கள்.  {1Cor  10:27}

 

ஆயினும்  இது  விக்கிரகங்களுக்குப்  படைக்கப்பட்டதென்று  ஒருவன்  உங்களுக்குச்  சொன்னால்,  அப்படி  அறிவித்தவனிமித்தமும்  மனச்சாட்சியினிமித்தமும்  புசியாதிருங்கள்;  பூமியும்  அதின்  நிறைவும்  கர்த்தருடையது.  {1Cor  10:28}

 

உன்னுடைய  மனச்சாட்சியைக்  குறித்து  நான்  இப்படிச்  சொல்லாமல்,  மற்றொருவனுடைய  மனச்சாட்சியைக்  குறித்தே  சொல்லுகிறேன்.  என்  சுயாதீனம்  மற்றொருவனுடைய  மனச்சாட்சியினாலே  குற்றமாய்  எண்ணப்படவேண்டுவதென்ன?  {1Cor  10:29}

 

மேலும்  நான்  அதை  ஸ்தோத்திரிப்புடனே  அநுபவித்தால்,  ஸ்தோத்திரித்து  அநுபவிக்கிற  பொருளைக்குறித்து  நான்  தூஷிக்கப்படுவானேன்?  {1Cor  10:30}

 

ஆகையால்  நீங்கள்  புசித்தாலும்,  குடித்தாலும்,  எதைச்  செய்தாலும்,  எல்லாவற்றையும்  தேவனுடைய  மகிமைக்கென்று  செய்யுங்கள்.  {1Cor  10:31}

 

நான்  என்  சுயபிரயோஜனத்தைத்  தேடாமல்,  அநேகருடைய  பிரயோஜனத்தைத்  தேடி,  அவர்கள்  இரட்சிக்கப்படும்படிக்கு,  எவ்விதத்திலும்  எல்லாருக்கும்  பிரியமாய்  நடக்கிறதுபோல;  {1Cor  10:32}

 

நீங்களும்  யூதருக்கும்<Jews>,  கிரேக்கருக்கும்<Greeks>,  தேவனுடைய  சபைக்கும்  இடறலற்றவர்களாயிருங்கள்.  {1Cor  10:33}

 

நான்  கிறிஸ்துவைப்<Christ>  பின்பற்றுகிறதுபோல,  நீங்கள்  என்னைப்  பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.  {1Cor  11:1}

 

சகோதரரே,  நீங்கள்  எல்லாவற்றிலும்  என்னை  நினைத்துக்கொண்டு,  நான்  உங்களுக்கு  ஒப்புவித்தபடி  நீங்கள்  கட்டளைகளைக்  கைக்கொண்டு  வருகிறதினிமித்தம்  உங்களைப்  புகழுகிறேன்.  {1Cor  11:2}

 

ஒவ்வொரு  புருஷனுக்கும்  கிறிஸ்து<Christ>  தலையாயிருக்கிறாரென்றும்,  ஸ்திரீக்குப்  புருஷன்  தலையாயிருக்கிறானென்றும்,  கிறிஸ்துவுக்குத்<Christ>  தேவன்  தலையாயிருக்கிறாரென்றும்,  நீங்கள்  அறியவேண்டுமென்று  விரும்புகிறேன்.  {1Cor  11:3}

 

ஜெபம்பண்ணுகிறபோதாவது,  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறபோதாவது,  தன்  தலையை  மூடிக்கொண்டிருக்கிற  எந்தப்  புருஷனும்  தன்  தலையைக்  கனவீனப்படுத்துகிறான்.  {1Cor  11:4}

 

ஜெபம்பண்ணுகிறபோதாவது,  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறபோதாவது,  தன்  தலையை  மூடிக்கொள்ளாதிருக்கிற  எந்த  ஸ்திரீயும்  தன்  தலையைக்  கனவீனப்படுத்துகிறாள்;  அது  அவளுக்குத்  தலை  சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.  {1Cor  11:5}

 

ஸ்திரீயானவள்  முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால்  தலைமயிரையும்  கத்தரித்துப்போடக்கடவள்;  தலைமயிர்  கத்தரிக்கப்படுகிறதும்  சிரைக்கப்படுகிறதும்  ஸ்திரீக்கு  வெட்கமானால்  முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.  {1Cor  11:6}

 

புருஷனானவன்  தேவனுடைய  சாயலும்  மகிமையுமாயிருக்கிறபடியால்,  தன்  தலையை  மூடிக்கொள்ளவேண்டுவதில்லை;  ஸ்திரீயானவள்  புருஷனுடைய  மகிமையாயிருக்கிறாள்.  {1Cor  11:7}

 

புருஷன்  ஸ்திரீயிலிருந்து  தோன்றினவனல்ல,  ஸ்திரீயே  புருஷனிலிருந்து  தோன்றினவள்.  {1Cor  11:8}

 

புருஷன்  ஸ்திரீக்காகச்  சிருஷ்டிக்கப்பட்டவனல்ல,  ஸ்திரீயே  புருஷனுக்காகச்  சிருஷ்டிக்கப்பட்டவள்.  {1Cor  11:9}

 

ஆகையால்  தூதர்களினிமித்தம்  ஸ்திரீயானவள்  தலையின்மேல்  முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.  {1Cor  11:10}

 

ஆகிலும்  கர்த்தருக்குள்  ஸ்திரீயில்லாமல்  புருஷனுமில்லை,  புருஷனில்லாமல்  ஸ்திரீயுமில்லை.  {1Cor  11:11}

 

ஸ்திரீயானவள்  புருஷனிலிருந்து  தோன்றுகிறதுபோல,  புருஷனும்  ஸ்திரீயினால்  தோன்றுகிறான்;  சகலமும்  தேவனால்  உண்டாயிருக்கிறது.  {1Cor  11:12}

 

ஸ்திரீயானவள்  தேவனை  நோக்கி  ஜெபம்பண்ணுகையில்,  தன்  தலையை  மூடிக்கொள்ளாமலிருக்கிறது  இலட்சணமாயிருக்குமோ  என்று  உங்களுக்குள்ளே  நிதானித்துக்கொள்ளுங்கள்.  {1Cor  11:13}

 

புருஷன்  மயிரை  நீளமாய்  வளர்க்கிறது  அவனுக்கு  கனவீனமாயிருக்கிறதென்றும்,  {1Cor  11:14}

 

ஸ்திரீ  தன்  மயிரை  நீளமாய்  வளர்க்கிறது  அவளுக்கு  மகிமையாயிருக்கிறதென்றும்  சுபாவமே  உங்களுக்குப்  போதிக்கிறதில்லையா?  தலைமயிர்  அவளுக்கு  முக்காடாகக்  கொடுக்கப்பட்டிருக்கிறதே.  {1Cor  11:15}

 

ஆகிலும்  ஒருவன்  வாக்குவாதஞ்செய்ய  மனதாயிருந்தால்,  எங்களுக்கும்,  தேவனுடைய  சபைகளுக்கும்,  அப்படிப்பட்ட  வழக்கமில்லையென்று  அறியக்கடவன்.  {1Cor  11:16}

 

உங்களைப்  புகழாமல்  இதைக்குறித்து  உங்களுக்குக்  கட்டளைகொடுக்கிறேன்;  நீங்கள்  கூடிவருதல்  நன்மைக்கேதுவாயிராமல்,  தீமைக்கேதுவாயிருக்கிறதே.  {1Cor  11:17}

 

முதலாவது,  நீங்கள்  சபையிலே  கூடிவந்திருக்கும்போது,  உங்களில்  பிரிவினைகள்  உண்டென்று  கேள்விப்படுகிறேன்;  அதில்  சிலவற்றை  நம்புகிறேன்.  {1Cor  11:18}

 

உங்களில்  உத்தமர்கள்  இன்னாரென்று  வெளியாகும்படிக்கு  மார்க்கபேதங்களும்  உங்களுக்குள்ளே  உண்டாயிருக்கவேண்டியதே.  {1Cor  11:19}

 

நீங்கள்  ஓரிடத்தில்  கூடிவரும்போது,  அவனவன்  தன்தன்  சொந்த  போஜனத்தை  முந்திச்  சாப்பிடுகிறான்;  ஒருவன்  பசியாயிருக்கிறான்,  ஒருவன்  வெறியாயிருக்கிறான்.  {1Cor  11:20}

 

இப்படிச்  செய்கிறது  கர்த்தருடைய  இராப்போஜனம்பண்ணுதலல்லவே.  {1Cor  11:21}

 

புசிக்கிறதற்கும்  குடிக்கிறதற்கும்  உங்களுக்கு  வீடுகள்  இல்லையா?  தேவனுடைய  சபையை  அசட்டைபண்ணி,  இல்லாதவர்களை  வெட்கப்படுத்துகிறீர்களா?  உங்களுக்கு  நான்  என்னசொல்லுவேன்?  இதைக்குறித்து  உங்களைப்  புகழ்வேனோ?  புகழேன்.  {1Cor  11:22}

 

நான்  உங்களுக்கு  ஒப்புவித்ததைக்  கர்த்தரிடத்தில்  பெற்றுக்கொண்டேன்;  என்னவெனில்,  கர்த்தராகிய  இயேசு<Jesus>  தாம்  காட்டிக்கொடுக்கப்பட்ட  அன்று  இராத்திரியிலே  அப்பத்தை  எடுத்து,  {1Cor  11:23}

 

ஸ்தோத்திரம்பண்ணி,  அதைப்  பிட்டு:  நீங்கள்  வாங்கிப்  புசியுங்கள்,  இது  உங்களுக்காகப்  பிட்கப்படுகிற  என்னுடைய  சரீரமாயிருக்கிறது;  என்னை  நினைவுகூரும்படி  இதைச்  செய்யுங்கள்  என்றார்.  {1Cor  11:24}

 

போஜனம்பண்ணினபின்பு,  அவர்  அந்தப்படியே  பாத்திரத்தையும்  எடுத்து:  இந்தப்  பாத்திரம்  என்  இரத்தத்தினாலாகிய  புதிய  உடன்படிக்கையாயிருக்கிறது;  நீங்கள்  இதைப்  பானம்பண்ணும்போதெல்லாம்  என்னை  நினைவுகூரும்படி  இதைச்  செய்யுங்கள்  என்றார்.  {1Cor  11:25}

 

ஆகையால்  நீங்கள்  இந்த  அப்பத்தைப்  புசித்து,  இந்தப்  பாத்திரத்தில்  பானம்பண்ணும்போதெல்லாம்  கர்த்தர்  வருமளவும்  அவருடைய  மரணத்தைத்  தெரிவிக்கிறீர்கள்.  {1Cor  11:26}

 

இப்படியிருக்க,  எவன்  அபாத்திரமாய்க்  கர்த்தருடைய  அப்பத்தைப்  புசித்து,  அவருடைய  பாத்திரத்தில்  பானம்பண்ணுகிறானோ,  அவன்  கர்த்தருடைய  சரீரத்தையும்  இரத்தத்தையும்  குறித்துக்  குற்றமுள்ளவனாயிருப்பான்.  {1Cor  11:27}

 

எந்த  மனுஷனும்  தன்னைத்தானே  சோதித்தறிந்து,  இந்த  அப்பத்தில்  புசித்து,  இந்தப்  பாத்திரத்தில்  பானம்பண்ணக்கடவன்.  {1Cor  11:28}

 

என்னத்தினாலெனில்,  அபாத்திரமாய்ப்  போஜனபானம்பண்ணுகிறவன்,  கர்த்தருடைய  சரீரம்  இன்னதென்று  நிதானித்து  அறியாததினால்,  தனக்கு  ஆக்கினைத்தீர்ப்பு  வரும்படி  போஜனபானம்பண்ணுகிறான்.  {1Cor  11:29}

 

இதினிமித்தம்,  உங்களில்  அநேகர்  பலவீனரும்  வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்;  அநேகர்  நித்திரையும்  அடைந்திருக்கிறார்கள்.  {1Cor  11:30}

 

நம்மை  நாமே  நிதானித்து  அறிந்தால்  நாம்  நியாயந்தீர்க்கப்படோம்.  {1Cor  11:31}

 

நாம்  நியாயந்தீர்க்கப்படும்போது  உலகத்தோடே  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படாதபடிக்கு,  கர்த்தராலே  சிட்சிக்கப்படுகிறோம்.  {1Cor  11:32}

 

ஆகையால்,  என்  சகோதரரே,  நீங்கள்  போஜனம்பண்ணக்  கூடிவரும்போது,  ஒருவருக்காக  ஒருவர்  காத்திருங்கள்.  {1Cor  11:33}

 

நீங்கள்  ஆக்கினைக்கேதுவாகக்  கூடிவராதபடிக்கு,  ஒருவனுக்குப்  பசியிருந்தால்  வீட்டிலே  சாப்பிடக்கடவன்.  மற்றக்  காரியங்களை  நான்  வரும்போது  திட்டம்பண்ணுவேன்.  {1Cor  11:34}

 

அன்றியும்,  சகோதரரே,  ஆவிக்குரிய  வரங்களைக்குறித்து  நீங்கள்  அறியாதிருக்க  எனக்கு  மனதில்லை.  {1Cor  12:1}

 

நீங்கள்  அஞ்ஞானிகளாயிருந்தபோது  ஏவப்பட்டபடியே,  ஊமையான  விக்கிரகங்களிடத்தில்  மனதைச்  செலுத்தினீர்களென்று  உங்களுக்குத்  தெரியுமே.  {1Cor  12:2}

 

ஆதலால்,  தேவனுடைய  ஆவியினாலே  பேசுகிற  எவனும்  இயேசுவைச்<Jesus>  சபிக்கப்பட்டவனென்று  சொல்லமாட்டானென்றும்,  பரிசுத்த  ஆவியினாலேயன்றி  இயேசுவைக்<Jesus>  கர்த்தரென்று  ஒருவனும்  சொல்லக்கூடாதென்றும்,  உங்களுக்குத்  தெரிவிக்கிறேன்.  {1Cor  12:3}

 

வரங்களில்  வித்தியாசங்கள்  உண்டு,  ஆவியானவர்  ஒருவரே.  {1Cor  12:4}

 

ஊழியங்களிலேயும்  வித்தியாசங்கள்  உண்டு,  கர்த்தர்  ஒருவரே.  {1Cor  12:5}

 

கிரியைகளிலேயும்  வித்தியாசங்கள்  உண்டு,  எல்லாருக்குள்ளும்  எல்லாவற்றையும்  நடப்பிக்கிற  தேவன்  ஒருவரே.  {1Cor  12:6}

 

ஆவியினுடைய  அநுக்கிரகம்  அவனவனுடைய  பிரயோஜனத்திற்கென்று  அளிக்கப்பட்டிருக்கிறது.  {1Cor  12:7}

 

எப்படியெனில்,  ஒருவனுக்கு  ஆவியினாலே  ஞானத்தைப்  போதிக்கும்  வசனமும்,  வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  அறிவை  உணர்த்தும்  வசனமும்,  {1Cor  12:8}

 

வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  விசுவாசமும்,  வேறொருவனுக்கு  அந்த  ஆவியினாலேயே  குணமாக்கும்  வரங்களும்,  {1Cor  12:9}

 

வேறொருவனுக்கு  அற்புதங்களைச்  செய்யும்  சக்தியும்,  வேறொருவனுக்குத்  தீர்க்கதரிசனம்  உரைத்தலும்,  வேறொருவனுக்கு  ஆவிகளைப்  பகுத்தறிதலும்,  வேறொருவனுக்குப்  பற்பல  பாஷைகளைப்  பேசுதலும்,  வேறொருவனுக்குப்  பாஷைகளை  வியாக்கியானம்பண்ணுதலும்  அளிக்கப்படுகிறது.  {1Cor  12:10}

 

இவைகளையெல்லாம்  அந்த  ஒரே  ஆவியானவர்  நடப்பித்து,  தமது  சித்தத்தின்படியே  அவனவனுக்குப்  பகிர்ந்துகொடுக்கிறார்.  {1Cor  12:11}

 

எப்படியெனில்,  சரீரம்  ஒன்று,  அதற்கு  அவயவங்கள்  அநேகம்;  ஒரே  சரீரத்தின்  அவயவங்களெல்லாம்  அநேகமாயிருந்தும்,  சரீரம்  ஒன்றாகவேயிருக்கிறது;  அந்தப்பிரகாரமாகக்  கிறிஸ்துவும்<Christ>  இருக்கிறார்.  {1Cor  12:12}

 

நாம்  யூதராயினும்<Jews>,  கிரேக்கராயினும்<Greeks//Gentiles>,  அடிமைகளாயினும்,  சுயாதீனராயினும்,  எல்லாரும்  ஒரே  ஆவியினாலே  ஒரே  சரீரத்திற்குள்ளாக  ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,  எல்லாரும்  ஒரே  ஆவிக்குள்ளாகவே  தாகந்தீர்க்கப்பட்டோம்.  {1Cor  12:13}

 

சரீரமும்  ஒரே  அவயவமாயிராமல்  அநேக  அவயவங்களாயிருக்கிறது.  {1Cor  12:14}

 

காலானது  நான்  கையாயிராதபடியினாலே,  நான்  சரீரத்தின்  அவயவமல்லவென்றால்,  அதினாலே  அது  சரீரத்தின்  அவயவமாயிராதோ?  {1Cor  12:15}

 

காதானது  நான்  கண்ணாயிராதபடியினாலே,  நான்  சரீரத்தின்  அவயவமல்லவென்றால்,  அதினாலே  அது  சரீரத்தின்  அவயவமாயிராதோ?  {1Cor  12:16}

 

சரீரம்  முழுவதும்  கண்ணானால்,  செவி  எங்கே?  அது  முழுவதும்  செவியானால்,  மோப்பம்  எங்கே?  {1Cor  12:17}

 

தேவன்  தமது  சித்தத்தின்படி,  அவயவங்கள்  ஒவ்வொன்றையும்  சரீரத்திலே  வைத்தார்.  {1Cor  12:18}

 

அவையெல்லாம்  ஒரே  அவயவமாயிருந்தால்,  சரீரம்  எங்கே?  {1Cor  12:19}

 

அவயவங்கள்  அநேகமாயிருந்தும்,  சரீரம்  ஒன்றே.  {1Cor  12:20}

 

கண்ணானது  கையைப்பார்த்து:  நீ  எனக்கு  வேண்டுவதில்லையென்றும்;  தலையானது  கால்களை  நோக்கி:  நீங்கள்  எனக்கு  வேண்டுவதில்லையென்றும்  சொல்லக்கூடாது.  {1Cor  12:21}

 

சரீர  அவயவங்களில்  பலவீனமுள்ளவைகளாய்க்  காணப்படுகிறவைகளே  மிகவும்  வேண்டியவைகளாயிருக்கிறது.  {1Cor  12:22}

 

மேலும்,  சரீர  அவயவங்களில்  கனவீனமாய்க்  காணப்படுகிறவைகளுக்கே  அதிக  கனத்தைக்  கொடுக்கிறோம்;  நம்மில்  இலட்சணமில்லாதவைகளே  அதிக  அலங்காரம்  பெறும்;  {1Cor  12:23}

 

நம்மில்  இலட்சணமுள்ளவைகளுக்கு  அலங்கரிப்பு  வேண்டியதில்லை.  {1Cor  12:24}

 

சரீரத்திலே  பிரிவினையுண்டாயிராமல்,  அவயவங்கள்  ஒன்றைக்குறித்து  ஒன்று  கவலையாயிருக்கும்படிக்கு,  தேவன்  கனத்தில்  குறைவுள்ளதற்கு  அதிக  கனத்தைக்  கொடுத்து,  இப்படிச்  சரீரத்தை  அமைத்திருக்கிறார்.  {1Cor  12:25}

 

ஆதலால்  ஒரு  அவயவம்  பாடுபட்டால்  எல்லா  அவயவங்களும்  கூடப்  பாடுபடும்;  ஒரு  அவயவம்  மகிமைப்பட்டால்  எல்லா  அவயவங்களும்  கூடச்  சந்தோஷப்படும்.  {1Cor  12:26}

 

நீங்களே  கிறிஸ்துவின்<Christ>  சரீரமாயும்,  தனித்தனியே  அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.  {1Cor  12:27}

 

தேவனானவர்  சபையிலே  முதலாவது  அப்போஸ்தலரையும்,  இரண்டாவது  தீர்க்கதரிசிகளையும்,  மூன்றாவது  போதகர்களையும்,  பின்பு  அற்புதங்களையும்,  பின்பு  குணமாக்கும்  வரங்களையும்,  ஊழியங்களையும்,  ஆளுகைகளையும்,  பலவித  பாஷைகளையும்  ஏற்படுத்தினார்.  {1Cor  12:28}

 

எல்லாரும்  அப்போஸ்தலர்களா?  எல்லாரும்  தீர்க்கதரிசிகளா?  எல்லாரும்  போதகர்களா?  எல்லாரும்  அற்புதங்களைச்  செய்கிறவர்களா?  {1Cor  12:29}

 

எல்லாரும்  குணமாக்கும்  வரங்களுடையவர்களா?  எல்லாரும்  அந்நியபாஷைகளைப்  பேசுகிறார்களா?  எல்லாரும்  வியாக்கியானம்  பண்ணுகிறார்களா?  {1Cor  12:30}

 

இப்படியிருக்க,  முக்கியமான  வரங்களை  நாடுங்கள்;  இன்னும்  அதிக  மேன்மையான  வழியையும்  உங்களுக்குக்  காண்பிக்கிறேன்.  {1Cor  12:31}

 

நான்  மனுஷர்  பாஷைகளையும்  தூதர்  பாஷைகளையும்  பேசினாலும்,  அன்பு  எனக்கிராவிட்டால்,  சத்தமிடுகிற  வெண்கலம்போலவும்,  ஓசையிடுகிற  கைத்தாளம்போலவும்  இருப்பேன்.  {1Cor  13:1}

 

நான்  தீர்க்கதரிசன  வரத்தை  உடையவனாயிருந்து,  சகல  இரகசியங்களையும்,  சகல  அறிவையும்  அறிந்தாலும்,  மலைகளைப்  பேர்க்கத்தக்கதாகச்  சகல  விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,  அன்பு  எனக்கிராவிட்டால்  நான்  ஒன்றுமில்லை.  {1Cor  13:2}

 

எனக்கு  உண்டான  யாவற்றையும்  நான்  அன்னதானம்பண்ணினாலும்,  என்  சரீரத்தைச்  சுட்டெரிக்கப்படுவதற்குக்  கொடுத்தாலும்,  அன்பு  எனக்கிராவிட்டால்  எனக்குப்  பிரயோஜனம்  ஒன்றுமில்லை.  {1Cor  13:3}

 

அன்பு  நீடிய  சாந்தமும்  தயவுமுள்ளது;  அன்புக்குப்  பொறாமையில்லை;  அன்பு  தன்னைப்  புகழாது,  இறுமாப்பாயிராது,  {1Cor  13:4}

 

அயோக்கியமானதைச்  செய்யாது,  தற்பொழிவை  நாடாது,  சினமடையாது,  தீங்கு  நினையாது,  {1Cor  13:5}

 

அநியாயத்தில்  சந்தோஷப்படாமல்,  சத்தியத்தில்  சந்தோஷப்படும்.  {1Cor  13:6}

 

சகலத்தையும்  தாங்கும்,  சகலத்தையும்  விசுவாசிக்கும்,  சகலத்தையும்  நம்பும்,  சகலத்தையும்  சகிக்கும்.  {1Cor  13:7}

 

அன்பு  ஒருக்காலும்  ஒழியாது.  தீர்க்கதரிசனங்களானாலும்  ஒழிந்துபோம்,  அந்நிய  பாஷைகளானாலும்  ஓய்ந்துபோம்,  அறிவானாலும்  ஒழிந்துபோம்.  {1Cor  13:8}

 

நம்முடைய  அறிவு  குறைவுள்ளது,  நாம்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுதலும்  குறைவுள்ளது.  {1Cor  13:9}

 

நிறைவானது  வரும்போது  குறைவானது  ஒழிந்துபோம்.  {1Cor  13:10}

 

நான்  குழந்தையாயிருந்தபோது  குழந்தையைப்போலப்  பேசினேன்,  குழந்தையைப்போலச்  சிந்தித்தேன்,  குழந்தையைப்போல  யோசித்தேன்;  நான்  புருஷனானபோதோ  குழந்தைக்கேற்றவைகளை  ஒழித்துவிட்டேன்.  {1Cor  13:11}

 

இப்பொழுது  கண்ணாடியிலே  நிழலாட்டமாய்ப்  பார்க்கிறோம்,  அப்பொழுது  முகமுகமாய்ப்  பார்ப்போம்;  இப்பொழுது  நான்  குறைந்த  அறிவுள்ளவன்,  அப்பொழுது  நான்  அறியப்பட்டிருக்கிறபடியே  அறிந்துகொள்ளுவேன்.  {1Cor  13:12}

 

இப்பொழுது  விசுவாசம்,  நம்பிக்கை,  அன்பு  இம்மூன்றும்  நிலைத்திருக்கிறது;  இவைகளில்  அன்பே  பெரியது.  {1Cor  13:13}

 

அன்பை  நாடுங்கள்;  ஞானவரங்களையும்  விரும்புங்கள்;  விசேஷமாய்த்  தீர்க்கதரிசன  வரத்தை  விரும்புங்கள்.  {1Cor  14:1}

 

ஏனெனில்,  அந்நியபாஷையில்  பேசுகிறவன்,  ஆவியினாலே  இரகசியங்களைப்  பேசினாலும்,  அவன்  பேசுகிறதை  ஒருவனும்  அறியாதிருக்கிறபடியினாலே,  அவன்  மனுஷரிடத்தில்  பேசாமல்,  தேவனிடத்தில்  பேசுகிறான்.  {1Cor  14:2}

 

தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறவனோ  மனுஷருக்குப்  பக்திவிருத்தியும்,  புத்தியும்,  ஆறுதலும்  உண்டாகத்தக்கதாகப்  பேசுகிறான்.  {1Cor  14:3}

 

அந்நியபாஷையில்  பேசுகிறவன்  தனக்கே  பக்திவிருத்தி  உண்டாகப்  பேசுகிறான்;  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ  சபைக்குப்  பக்திவிருத்தி  உண்டாகப்  பேசுகிறான்.  {1Cor  14:4}

 

நீங்களெல்லாரும்  அந்நியபாஷைகளைப்  பேசும்படி  விரும்புகிறேன்;  ஆகிலும்,  அந்நியபாஷைகளில்  பேசுகிறவன்  சபைக்குப்  பக்திவிருத்தி  உண்டாகும்படிக்கு  அர்த்தத்தையும்  சொல்லாவிட்டால்,  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறவன்  அவனிலும்  மேன்மையுள்ளவன்;  ஆதலால்  நீங்கள்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகிறவர்களாக  வேண்டுமென்று  அதிகமாய்  விரும்புகிறேன்.  {1Cor  14:5}

 

மேலும்,  சகோதரரே,  நான்  உங்களிடத்தில்  வந்து  உங்களுக்கு  இரகசியங்களை  வெளிப்படுத்துவதற்காவது,  அறிவுண்டாக்குவதற்காவது,  தீர்க்கதரிசனத்தை  அறிவிக்கிறதற்காவது,  போதகத்தைப்  போதிக்கிறதற்காவது  ஏதுவானதைச்  சொல்லாமல்,  அந்நியபாஷைகளில்  பேசினால்  என்னாலே  உங்களுக்குப்  பிரயோஜனம்  என்ன?  {1Cor  14:6}

 

அப்படியே  புல்லாங்குழல்,  சுரமண்டலம்  முதலாகிய  சத்தமிடுகிற  உயிரில்லாத  வாத்தியங்கள்  தொனிகளில்  வித்தியாசம்  காட்டாவிட்டால்,  குழலாலே  ஊதப்படுகிறதும்,  சுரமண்டலத்தாலே  வாசிக்கப்படுகிறதும்  இன்னதென்று  எப்படித்  தெரியும்?  {1Cor  14:7}

 

அந்தப்படி  எக்காளமும்  விளங்காத  சத்தமிட்டால்  எவன்  யுத்தத்திற்கு  ஆயத்தம்பண்ணுவான்?  {1Cor  14:8}

 

அதுபோல,  நீங்களும்  தெளிவான  பேச்சை  நாவினால்  வசனியாவிட்டால்  பேசப்பட்டது  இன்னதென்று  எப்படித்தெரியும்?  ஆகாயத்தில்  பேசுகிறவர்களாயிருப்பீர்களே.  {1Cor  14:9}

 

உலகத்திலே  எத்தனையோவிதமான  பாஷைகள்  உண்டாயிருக்கிறது,  அவைகளில்  ஒன்றும்  அர்த்தமில்லாததல்ல.  {1Cor  14:10}

 

ஆயினும்,  பாஷையின்  கருத்தை  நான்  அறியாமலிருந்தால்,  பேசுகிறவனுக்கு  அந்நியனாயிருப்பேன்,  பேசுகிறவனும்  எனக்கு  அந்நியனாயிருப்பான்.  {1Cor  14:11}

 

நீங்களும்  ஆவிக்குரிய  வரங்களை  நாடுகிறவர்களானபடியால்,  சபைக்குப்  பக்திவிருத்தி  உண்டாகத்தக்கதாக  அவைகளில்  தேறும்படி  நாடுங்கள்;  {1Cor  14:12}

 

அந்தப்படி  அந்நியபாஷையில்  பேசுகிறவன்  அதின்  அர்த்தத்தையும்  சொல்லத்தக்கதாக  விண்ணப்பம்பண்ணக்கடவன்.  {1Cor  14:13}

 

என்னத்தினாலெனில்,  நான்  அந்நியபாஷையிலே  விண்ணப்பம்பண்ணினால்,  என்  ஆவி  விண்ணப்பம்பண்ணுமேயன்றி,  என்  கருத்து  பயனற்றதாயிருக்கும்.  {1Cor  14:14}

 

இப்படியிருக்க,  செய்யவேண்டுவதென்ன?  நான்  ஆவியோடும்  விண்ணப்பம்பண்ணுவேன்,  கருத்தோடும்  விண்ணப்பம்பண்ணுவேன்;  நான்  ஆவியோடும்  பாடுவேன்,  கருத்தோடும்  பாடுவேன்.  {1Cor  14:15}

 

இல்லாவிட்டால்,  நீ  ஆவியோடு  ஸ்தோத்திரம்பண்ணும்போது,  கல்லாதவன்  உன்  ஸ்தோத்திரத்திற்கு  ஆமென்  என்று  எப்படிச்  சொல்லுவான்?  நீ  பேசுகிறது  இன்னதென்று  அவன்  அறியானே.  {1Cor  14:16}

 

நீ  நன்றாய்  ஸ்தோத்திரம்பண்ணுகிறாய்,  ஆகிலும்  மற்றவன்  பக்திவிருத்தியடையமாட்டானே.  {1Cor  14:17}

 

உங்களெல்லாரிலும்  நான்  அதிகமாய்ப்  பாஷைகளைப்  பேசுகிறேன்,  இதற்காக  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {1Cor  14:18}

 

அப்படியிருந்தும்,  நான்  சபையிலே  அந்நியபாஷையில்  பதினாயிரம்  வார்த்தைகளைப்  பேசுகிறதிலும்,  மற்றவர்களை  உணர்த்தும்படி  என்  கருத்தோடே  ஐந்து  வார்த்தைகளைப்  பேசுகிறதே  எனக்கு  அதிக  விருப்பமாயிருக்கும்.  {1Cor  14:19}

 

சகோதரரே,  நீங்கள்  புத்தியிலே  குழந்தைகளாயிராதேயுங்கள்;  துர்க்குணத்திலே  குழந்தைகளாயும்,  புத்தியிலோ  தேறினவர்களாயுமிருங்கள்.  {1Cor  14:20}

 

மறுபாஷைக்காரராலும்,  மறுஉதடுகளாலும்  இந்த  ஜனங்களிடத்தில்  பேசுவேன்;  ஆகிலும்  அவர்கள்  எனக்குச்  செவிகொடுப்பதில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  வேதத்தில்  எழுதியிருக்கிறதே.  {1Cor  14:21}

 

அப்படியிருக்க,  அந்நியபாஷைகள்  விசுவாசிகளுக்கு  அடையாளமாயிராமல்,  அவிசுவாசிகளுக்கு  அடையாளமாயிருக்கிறது;  தீர்க்கதரிசனமோ  அவிசுவாசிகளுக்கு  அடையாளமாயிராமல்,  விசுவாசிகளுக்கு  அடையாளமாயிருக்கிறது.  {1Cor  14:22}

 

ஆகையால்,  சபையாரெல்லாரும்  ஏகமாய்க்  கூடிவந்து,  எல்லாரும்  அந்நியபாஷைகளிலே  பேசிக்கொள்ளும்போது,  கல்லாதவர்களாவது,  அவிசுவாசிகளாவது  உள்ளே  பிரவேசித்தால்,  அவர்கள்  உங்களைப்  பைத்தியம்  பிடித்தவர்களென்பார்களல்லவா?  {1Cor  14:23}

 

எல்லாரும்  தீர்க்கதரிசனஞ்  சொல்லுகையில்,  அவிசுவாசியொருவன்,  அல்லது  கல்லாதவனொருவன்,  உள்ளே  பிரவேசித்தால்,  அவன்  எல்லாராலும்  உணர்த்துவிக்கப்பட்டும்,  எல்லாராலும்  நிதானிக்கப்பட்டும்  இருப்பான்.  {1Cor  14:24}

 

அவனுடைய  இருதயத்தின்  அந்தரங்கங்களும்  வெளியரங்கமாகும்;  அவன்  முகங்குப்புற  விழுந்து,  தேவனைப்பணிந்துகொண்டு,  தேவன்  மெய்யாய்  உங்களுக்குள்ளே  இருக்கிறாரென்று  அறிக்கையிடுவான்.  {1Cor  14:25}

 

நீங்கள்  கூடிவந்திருக்கிறபோது,  உங்களில்  ஒருவன்  சங்கீதம்  பாடுகிறான்,  ஒருவன்  போதகம்பண்ணுகிறான்,  ஒருவன்  அந்நியபாஷையைப்  பேசுகிறான்,  ஒருவன்  இரகசியத்தை  வெளிப்படுத்துகிறான்,  ஒருவன்  வியாக்கியானம்  பண்ணுகிறான்.  சகோதரரே,  இது  என்ன?  சகலமும்  பக்திவிருத்திக்கேதுவாகச்  செய்யப்படக்கடவது.  {1Cor  14:26}

 

யாராவது  அந்நியபாஷையிலே  பேசுகிறதுண்டானால்,  அது  இரண்டுபேர்மட்டில்,  அல்லது  மிஞ்சினால்  மூன்றுபேர்மட்டில்  அடங்கவும்,  அவர்கள்  ஒவ்வொருவராய்ப்  பேசவும்,  ஒருவன்  அர்த்தத்தைச்  சொல்லவும்  வேண்டும்.  {1Cor  14:27}

 

அர்த்தஞ்  சொல்லுகிறவனில்லாவிட்டால்,  சபையிலே  பேசாமல்,  தனக்கும்  தேவனுக்கும்  தெரியப்  பேசக்கடவன்.  {1Cor  14:28}

 

தீர்க்கதரிசிகள்  இரண்டுபேராவது  மூன்றுபேராவது  பேசலாம்,  மற்றவர்கள்  நிதானிக்கக்கடவர்கள்.  {1Cor  14:29}

 

அங்கே  உட்கார்ந்திருக்கிற  மற்றொருவனுக்கு  ஏதாகிலும்  வெளிப்படுத்தப்பட்டால்,  முந்திப்  பேசினவன்  பேசாமலிருக்கக்கடவன்.  {1Cor  14:30}

 

எல்லாரும்  கற்கிறதற்கும்  எல்லாரும்  தேறுகிறதற்கும்,  நீங்கள்  அனைவரும்  ஒவ்வொருவராகத்  தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.  {1Cor  14:31}

 

தீர்க்கதரிசிகளுடைய  ஆவிகள்  தீர்க்கதரிசிகளுக்கு  அடங்கியிருக்கிறதே.  {1Cor  14:32}

 

தேவன்  கலகத்திற்குத்  தேவனாயிராமல்,  சமாதானத்திற்குத்  தேவனாயிருக்கிறார்;  பரிசுத்தவான்களுடைய  சபைகளெல்லாவற்றிலேயும்  அப்படியே  இருக்கிறது.  {1Cor  14:33}

 

சபைகளில்  உங்கள்  ஸ்திரீகள்  பேசாமலிருக்கக்கடவர்கள்;  பேசும்படிக்கு  அவர்களுக்கு  உத்தரவில்லை;  அவர்கள்  அமர்ந்திருக்கவேண்டும்;  வேதமும்  அப்படியே  சொல்லுகிறது.  {1Cor  14:34}

 

அவர்கள்  ஒரு  காரியத்தைக்  கற்றுக்கொள்ள  விரும்பினால்,  வீட்டிலே  தங்கள்  புருஷரிடத்தில்  விசாரிக்கக்கடவர்கள்;  ஸ்திரீகள்  சபையிலே  பேசுகிறது  அயோக்கியமாயிருக்குமே.  {1Cor  14:35}

 

தேவவசனம்  உங்களிடத்திலிருந்தா  புறப்பட்டது?  அது  உங்களிடத்துக்கு  மாத்திரமா  வந்தது?  {1Cor  14:36}

 

ஒருவன்  தன்னைத்  தீர்க்கதரிசியென்றாவது,  ஆவியைப்  பெற்றவனென்றாவது  எண்ணினால்,  நான்  உங்களுக்கு  எழுதுகிறவைகள்  கர்த்தருடைய  கற்பனைகளென்று  அவன்  ஒத்துக்கொள்ளக்கடவன்.  {1Cor  14:37}

 

ஒருவன்  அறியாதவனாயிருந்தால்,  அவன்  அறியாதவனாயிருக்கட்டும்.  {1Cor  14:38}

 

இப்படியிருக்க,  சகோதரரே,  தீர்க்கதரிசனஞ்சொல்ல  நாடுங்கள்,  அந்நிய  பாஷைகளைப்  பேசுகிறதற்கும்  தடைபண்ணாதிருங்கள்.  {1Cor  14:39}

 

சகலமும்  நல்லொழுக்கமாயும்  கிரமமாயும்  செய்யப்படக்கடவது.  {1Cor  14:40}

 

அன்றியும்,  சகோதரரே,  நான்  உங்களுக்குப்  பிரசங்கித்த  சுவிசேஷத்தை  மறுபடியும்  உங்களுக்குத்  தெரியப்படுத்துகிறேன்;  நீங்களும்  அதை  ஏற்றுக்கொண்டு,  அதிலே  நிலைத்திருக்கிறீர்கள்.  {1Cor  15:1}

 

நான்  உங்களுக்குப்  பிரசங்கித்தபிரகாரமாய்,  நீங்கள்  அதைக்  கைக்கொண்டிருந்தால்,  அதினாலே  நீங்கள்  இரட்சிக்கப்படுவீர்கள்;  மற்றப்படி  உங்கள்  விசுவாசம்  விருதாவாயிருக்குமே.  {1Cor  15:2}

 

நான்  அடைந்ததும்  உங்களுக்குப்  பிரதானமாக  ஒப்புவித்ததும்  என்னவென்றால்,  கிறிஸ்துவானவர்<Christ>  வேதவாக்கியங்களின்படி  நமது  பாவங்களுக்காக  மரித்து,  {1Cor  15:3}

 

அடக்கம்பண்ணப்பட்டு,  வேதவாக்கியங்களின்படி  மூன்றாம்  நாளில்  உயிர்த்தெழுந்து,  {1Cor  15:4}

 

கேபாவுக்கும்<Cephas>,  பின்பு  பன்னிருவருக்கும்  தரிசனமானார்.  {1Cor  15:5}

 

அதன்பின்பு  அவர்  ஐந்நூறுபேருக்கு  அதிகமான  சகோதரருக்கும்  ஒரேவேளையில்  தரிசனமானார்;  அவர்களில்  அநேகர்  இந்நாள்வரைக்கும்  இருக்கிறார்கள்,  சிலர்  மாத்திரம்  நித்திரையடைந்தார்கள்.  {1Cor  15:6}

 

பின்பு  யாக்கோபுக்கும்<James>,  அதன்பின்பு  அப்போஸ்தலரெல்லாருக்கும்  தரிசனமானார்.  {1Cor  15:7}

 

எல்லாருக்கும்  பின்பு,  அகாலப்பிறவிபோன்ற  எனக்கும்  தரிசனமானார்.  {1Cor  15:8}

 

நான்  அப்போஸ்தலரெல்லாரிலும்  சிறியவனாயிருக்கிறேன்;  தேவனுடைய  சபையைத்  துன்பப்படுத்தினதினாலே,  நான்  அப்போஸ்தலனென்று  பேர்பெறுவதற்கும்  பாத்திரன்  அல்ல.  {1Cor  15:9}

 

ஆகிலும்  நான்  இருக்கிறது  தேவகிருபையினாலே  இருக்கிறேன்;  அவர்  எனக்கு  அருளிய  கிருபை  விருதாவாயிருக்கவில்லை;  அவர்களெல்லாரிலும்  நான்  அதிகமாய்ப்  பிரயாசப்பட்டேன்;  ஆகிலும்  நான்  அல்ல,  என்னுடனே  இருக்கிற  தேவகிருபையே  அப்படிச்  செய்தது.  {1Cor  15:10}

 

ஆகையால்  நானாகிலும்  அவர்களாகிலும்  இப்படியே  பிரசங்கித்துவருகிறோம்,  நீங்களும்  இப்படியே  விசுவாசித்திருக்கிறீர்கள்.  {1Cor  15:11}

 

கிறிஸ்து<Christ>  மரித்தோரிலிருந்து  எழுந்தாரென்று  பிரசங்கிக்கப்பட்டிருக்க,  மரித்தோரின்  உயிர்த்தெழுதலில்லையென்று  உங்களில்  சிலர்  எப்படிச்  சொல்லலாம்?  {1Cor  15:12}

 

மரித்தோரின்  உயிர்த்தெழுதல்  இல்லாவிட்டால்,  கிறிஸ்துவும்<Christ>  எழுந்திருக்கவில்லையே.  {1Cor  15:13}

 

கிறிஸ்து<Christ>  எழுந்திருக்கவில்லையென்றால்,  எங்கள்  பிரசங்கமும்  விருதா,  உங்கள்  விசுவாசமும்  விருதா.  {1Cor  15:14}

 

மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  தேவன்  எழுப்பாத  கிறிஸ்துவை<Christ>  அவர்  எழுப்பினாரென்று  நாங்கள்  தேவனைக்குறித்துச்  சாட்சிசொன்னதினாலே,  தேவனுக்காகப்  பொய்ச்சாட்சி  சொல்லுகிறவர்களாகவும்  காணப்படுவோமே.  {1Cor  15:15}

 

மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  கிறிஸ்துவும்<Christ>  எழுந்திருக்கவில்லை.  {1Cor  15:16}

 

கிறிஸ்து<Christ>  எழுந்திராவிட்டால்,  உங்கள்  விசுவாசம்  வீணாயிருக்கும்;  நீங்கள்  இன்னும்  உங்கள்  பாவங்களில்  இருப்பீர்கள்.  {1Cor  15:17}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  நித்திரையடைந்தவர்களும்  கெட்டிருப்பார்களே.  {1Cor  15:18}

 

இம்மைக்காகமாத்திரம்  நாம்  கிறிஸ்துவின்மேல்<Christ>  நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால்,  எல்லா  மனுஷரைப்பார்க்கிலும்  பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.  {1Cor  15:19}

 

கிறிஸ்துவோ<Christ>  மரித்தோரிலிருந்தெழுந்து,  நித்திரையடைந்தவர்களில்  முதற்பலனானார்.  {1Cor  15:20}

 

மனுஷனால்  மரணம்  உண்டானபடியால்,  மனுஷனால்  மரித்தோரின்  உயிர்த்தெழுதலும்  உண்டாயிற்று.  {1Cor  15:21}

 

ஆதாமுக்குள்<Adam>  எல்லாரும்  மரிக்கிறதுபோல,  கிறிஸ்துவுக்குள்<Christ>  எல்லாரும்  உயிர்ப்பிக்கப்படுவார்கள்.  {1Cor  15:22}

 

அவனவன்  தன்தன்  வரிசையிலே  உயிர்ப்பிக்கப்படுவான்,  முதற்பலனானவர்  கிறிஸ்து<Christ>;  பின்பு  அவர்  வருகையில்  அவருடையவர்கள்  உயிர்ப்பிக்கப்படுவார்கள்.  {1Cor  15:23}

 

அதன்பின்பு  முடிவு  உண்டாகும்;  அப்பொழுது  அவர்  சகல  துரைத்தனத்தையும்  சகல  அதிகாரத்தையும்  வல்லமையையும்  பரிகரித்து,  தேவனும்  பிதாவுமாயிருக்கிறவருக்கு  ராஜ்யத்தை  ஒப்புக்கொடுப்பார்.  {1Cor  15:24}

 

எல்லாச்  சத்துருக்களையும்  தமது  பாதத்திற்குக்  கீழாக்கிப்போடும்வரைக்கும்,  அவர்  ஆளுகைசெய்யவேண்டியது.  {1Cor  15:25}

 

பரிகரிக்கப்படுங்  கடைசிச்  சத்துரு  மரணம்.  {1Cor  15:26}

 

சகலத்தையும்  அவருடைய  பாதத்திற்குக்  கீழ்ப்படுத்தினாரே;  ஆகிலும்  சகலமும்  அவருக்குக்  கீழ்ப்படுத்தப்பட்டதென்று  சொல்லியிருக்கும்போது,  சகலத்தையும்  அவருக்குக்  கீழ்ப்படுத்தினவர்  கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது  வெளியரங்கமாயிருக்கிறது.  {1Cor  15:27}

 

சகலமும்  அவருக்குக்  கீழ்ப்பட்டிருக்கும்போது,  தேவனே  சகலத்திலும்  சகலமுமாயிருப்பதற்கு,  குமாரன்  தாமும்  தமக்குச்  சகலத்தையும்  கீழ்ப்படுத்தினவருக்குக்  கீழ்ப்பட்டிருப்பார்.  {1Cor  15:28}

 

மேலும்  மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  மரித்தவர்களுக்காக  ஞானஸ்நானம்  பெறுகிறவர்கள்  என்ன  செய்வார்கள்?  மரித்தவர்களுக்காக  ஏன்  ஞானஸ்நானம்  பெறுகிறார்கள்?  {1Cor  15:29}

 

நாங்களும்  ஏன்  எந்நேரமும்  நாசமோசத்திற்கு  ஏதுவாயிருக்கிறோம்?  {1Cor  15:30}

 

நான்  அநுதினமும்  சாகிறேன்;  அதை  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவினால்<Christ  Jesus>  உங்களைக்குறித்து,  நான்  பாராட்டுகிற  மேன்மையைக்கொண்டு  சத்தியமாய்ச்  சொல்லுகிறேன்.  {1Cor  15:31}

 

நான்  எபேசுவிலே<Ephesus>  துஷ்டமிருகங்களுடனே  போராடினேனென்று  மனுஷர்  வழக்கமாய்ச்  சொல்லுகிறேன்;  அப்படிப்  போராடினதினாலே  எனக்குப்  பிரயோஜனமென்ன?  மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  புசிப்போம்  குடிப்போம்,  நாளைக்குச்  சாவோம்  என்று  சொல்லலாமே?  {1Cor  15:32}

 

மோசம்போகாதிருங்கள்;  ஆகாத  சம்பாஷணைகள்  நல்லொழுக்கங்களைக்  கெடுக்கும்.  {1Cor  15:33}

 

நீங்கள்  பாவஞ்செய்யாமல்  நீதிக்கேற்க  விழித்துக்கொண்டு,  தெளிந்தவர்களாயிருங்கள்;  சிலர்  தேவனைப்பற்றி  அறிவில்லாதிருக்கிறார்களே;  உங்களுக்கு  வெட்கமுண்டாக  இதைச்  சொல்லுகிறேன்.  {1Cor  15:34}

 

ஆகிலும்,  மரித்தோர்  எப்படி  எழுந்திருப்பார்கள்,  எப்படிப்பட்ட  சரீரத்தோடே  வருவார்களென்று  ஒருவன்  சொல்வானாகில்,  {1Cor  15:35}

 

புத்தியீனனே,  நீ  விதைக்கிற  விதை  செத்தாலொழிய  உயிர்க்கமாட்டாதே.  {1Cor  15:36}

 

நீ  விதைக்கிறபோது,  இனி  உண்டாகும்  மேனியை  விதையாமல்,  கோதுமை,  அல்லது  மற்றொரு  தானியத்தினுடைய  வெறும்  விதையையே  விதைக்கிறாய்.  {1Cor  15:37}

 

அதற்குத்  தேவன்  தமது  சித்தத்தின்படியே  மேனியைக்  கொடுக்கிறார்;  விதை  வகைகள்  ஒவ்வொன்றிற்கும்  அததற்கேற்ற  மேனியையே  கொடுக்கிறார்.  {1Cor  15:38}

 

எல்லா  மாம்சமும்  ஒரேவிதமான  மாம்சமல்ல;  மனுஷருடைய  மாம்சம்  வேறே,  மிருகங்களுடைய  மாம்சம்  வேறே,  மச்சங்களுடைய  மாம்சம்  வேறே,  பறவைகளுடைய  மாம்சம்  வேறே.  {1Cor  15:39}

 

வானத்துக்குரிய  மேனிகளுமுண்டு,  பூமிக்குரிய  மேனிகளுமுண்டு;  வானத்துக்குரிய  மேனிகளுடைய  மகிமையும்  வேறே,  பூமிக்குரிய  மேனிகளுடைய  மகிமையும்  வேறே;  {1Cor  15:40}

 

சூரியனுடைய  மகிமையும்  வேறே,  சந்திரனுடைய  மகிமையும்  வேறே,  நட்சத்திரங்களுடைய  மகிமையும்  வேறே;  மகிமையிலே  நட்சத்திரத்துக்கு  நட்சத்திரம்  விசேஷித்திருக்கிறது.  {1Cor  15:41}

 

மரித்தோரின்  உயிர்த்தெழுதலும்  அப்படியே  இருக்கும்.  அழிவுள்ளதாய்  விதைக்கப்படும்,  அழிவில்லாததாய்  எழுந்திருக்கும்;  {1Cor  15:42}

 

கனவீனமுள்ளதாய்  விதைக்கப்படும்,  மகிமையுள்ளதாய்  எழுந்திருக்கும்;  பலவீனமுள்ளதாய்  விதைக்கப்படும்,  பலமுள்ளதாய்  எழுந்திருக்கும்.  {1Cor  15:43}

 

ஜென்மசரீரம்  விதைக்கப்படும்,  ஆவிக்குரிய  சரீரம்  எழுந்திருக்கும்;  ஜென்ம  சரீரமுமுண்டு,  ஆவிக்குரிய  சரீரமுமுண்டு.  {1Cor  15:44}

 

அந்தப்படியே  முந்தின  மனுஷனாகிய  ஆதாம்<Adam>  ஜீவாத்துமாவானான்  என்றெழுதியிருக்கிறது;  பிந்தின  ஆதாம்<Adam>  உயிர்ப்பிக்கிற  ஆவியானார்.  {1Cor  15:45}

 

ஆகிலும்  ஆவிக்குரிய  சரீரம்  முந்தினதல்ல,  ஜென்மசரீரமே  முந்தினது;  ஆவிக்குரிய  சரீரம்  பிந்தினது.  {1Cor  15:46}

 

முந்தின  மனுஷன்  பூமியிலிருந்துண்டான  மண்ணானவன்;  இரண்டாம்  மனுஷன்  வானத்திலிருந்து  வந்த  கர்த்தர்.  {1Cor  15:47}

 

மண்ணானவன்  எப்படிப்பட்டவனோ  மண்ணானவர்களும்  அப்படிப்பட்டவர்களே;  வானத்துக்குரியவர்  எப்படிப்பட்டவரோ,  வானத்துக்குரியவர்களும்  அப்படிப்பட்டவர்களே.  {1Cor  15:48}

 

மேலும்  மண்ணானவனுடைய  சாயலை  நாம்  அணிந்திருக்கிறதுபோல,  வானவருடைய  சாயலையும்  அணிந்துகொள்வோம்.  {1Cor  15:49}

 

சகோதரரே,  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  மாம்சமும்  இரத்தமும்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கமாட்டாது;  அழிவுள்ளது  அழியாமையைச்  சுதந்தரிப்பதுமில்லை.  {1Cor  15:50}

 

இதோ,  ஒரு  இரகசியத்தை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்;  நாமெல்லாரும்  நித்திரையடைவதில்லை;  ஆகிலும்  கடைசி  எக்காளம்  தொனிக்கும்போது,  ஒரு  நிமிஷத்திலே,  ஒரு  இமைப்பொழுதிலே,  நாமெல்லாரும்  மறுரூபமாக்கப்படுவோம்.  {1Cor  15:51}

 

எக்காளம்  தொனிக்கும்,  அப்பொழுது  மரித்தோர்  அழிவில்லாதவர்களாய்  எழுந்திருப்பார்கள்;  நாமும்  மறுரூபமாக்கப்படுவோம்.  {1Cor  15:52}

 

அழிவுள்ளதாகிய  இது  அழியாமையையும்,  சாவுக்கேதுவாகிய  இது  சாவாமையையும்  தரித்துக்கொள்ளவேண்டும்.  {1Cor  15:53}

 

அழிவுள்ளதாகிய  இது  அழியாமையையும்,  சாவுக்கேதுவாகிய  இது  சாவாமையையும்  தரித்துக்கொள்ளும்போது,  மரணம்  ஜெயமாக  விழுங்கப்பட்டது  என்று  எழுதியிருக்கிற  வார்த்தை  நிறைவேறும்.  {1Cor  15:54}

 

மரணமே!  உன்  கூர்  எங்கே?  பாதாளமே!  உன்  ஜெயம்  எங்கே?  {1Cor  15:55}

 

மரணத்தின்  கூர்  பாவம்,  பாவத்தின்  பெலன்  நியாயப்பிரமாணம்.  {1Cor  15:56}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலே<Jesus  Christ>  நமக்கு  ஜெயங்கொடுக்கிற  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  {1Cor  15:57}

 

ஆகையால்,  எனக்குப்  பிரியமான  சகோதரரே,  கர்த்தருக்குள்  நீங்கள்  படுகிற  பிரயாசம்  விருதாவாயிராதென்று  அறிந்து,  நீங்கள்  உறுதிப்பட்டவர்களாயும்,  அசையாதவர்களாயும்,  கர்த்தருடைய  கிரியையிலே  எப்பொழுதும்  பெருகுகிறவர்களாயும்  இருப்பீர்களாக.  {1Cor  15:58}

 

பரிசுத்தவான்களுக்காகச்  சேர்க்கப்படும்  தர்மப்பணத்தைக்குறித்து  நான்  கலாத்தியா<Galatia>  நாட்டுச்  சபைகளுக்குப்  பண்ணின  திட்டத்தின்படியே  நீங்களும்  செய்யுங்கள்.  {1Cor  16:1}

 

நான்  வந்திருக்கும்போது  பணஞ்  சேர்க்குதல்  இராதபடிக்கு,  உங்களில்  அவனவன்  வாரத்தின்  முதல்நாள்தோறும்,  தன்தன்  வரவுக்குத்  தக்கதாக  எதையாகிலும்  தன்னிடத்திலே  சேர்த்துவைக்கக்கடவன்.  {1Cor  16:2}

 

நான்  வரும்போது  உங்கள்  உபகாரத்தை  எருசலேமுக்குக்<Jerusalem>  கொண்டுபோகும்படிக்கு,  நீங்கள்  தகுதியுள்ளவர்களாகக்  குறிக்கிறவர்கள்  எவர்களோ,  அவர்களிடத்தில்  நிருபங்களைக்  கொடுத்து,  அவர்களை  அனுப்புவேன்.  {1Cor  16:3}

 

நானும்  போகத்தக்கதானால்,  அவர்கள்  என்னுடனேகூட  வரலாம்.  {1Cor  16:4}

 

நான்  மக்கெதோனியா<Macedonia>  நாட்டின்  வழியாய்ப்  போகிறபடியால்,  மக்கெதோனியா<Macedonia>  நாட்டைக்  கடந்தபின்பு  உங்களிடத்திற்கு  வருவேன்.  {1Cor  16:5}

 

நான்  எங்கே  போனாலும்  நீங்கள்  என்னை  வழிவிட்டனுப்பும்படிக்கு,  நான்  உங்களிடத்தில்  சிலகாலம்  தங்கவேண்டியதாயிருக்கும்;  ஒருவேளை  மழைகாலம்  முடியும்வரையும்  இருப்பேன்.  {1Cor  16:6}

 

இப்பொழுது  வழிப்பிரயாணத்திலே  உங்களைக்  கண்டுகொள்ளமாட்டேன்;  கர்த்தர்  உத்தரவுகொடுத்தால்  உங்களிடத்தில்  வந்து  சிலகாலம்  தங்கியிருக்கலாமென்று  நம்புகிறேன்.  {1Cor  16:7}

 

ஆகிலும்  பெந்தெகொஸ்தே  பண்டிகைவரைக்கும்  எபேசு<Ephesus>  பட்டணத்தில்  இருப்பேன்.  {1Cor  16:8}

 

ஏனெனில்  இங்கே  பெரிதும்  அநுகூலமுமான  கதவு  எனக்குத்  திறக்கப்பட்டிருக்கிறது;  விரோதஞ்செய்கிறவர்களும்  அநேகர்  இருக்கிறார்கள்.  {1Cor  16:9}

 

தீமோத்தேயு<Timotheus>  உங்களிடத்திற்கு  வந்தானேயாகில்,  அவன்  உங்களிடத்தில்  பயமில்லாமலிருக்கப்  பாருங்கள்;  என்னைப்போல  அவனும்  கர்த்தருடைய  கிரியையை  நடப்பிக்கிறானே.  {1Cor  16:10}

 

ஆனபடியினால்  ஒருவனும்  அவனை  அற்பமாய்  எண்ணாதிருப்பானாக;  சகோதரரோடேகூட  அவன்  வருகிறதற்கு  நான்  காத்திருக்கிறபடியால்,  என்னிடத்தில்  வரும்படிக்கு  அவனைச்  சமாதானத்தோடே  வழிவிட்டனுப்புங்கள்.  {1Cor  16:11}

 

சகோதரனாகிய  அப்பொல்லோவைக்<Apollos>  குறித்தோவெனில்,  சகோதரரோடேகூட  உங்களிடத்தில்  வரும்படிக்கு  அவனை  மிகவும்  வேண்டிக்கொண்டேன்;  ஆகிலும்  இப்பொழுது  வர  அவனுக்கு  மனதில்லை;  அவனுக்கு  நற்சமயம்  உண்டாயிருக்கும்போது  வருவான்.  {1Cor  16:12}

 

விழித்திருங்கள்,  விசுவாசத்திலே  நிலைத்திருங்கள்,  புருஷராயிருங்கள்,  திடன்கொள்ளுங்கள்.  {1Cor  16:13}

 

உங்கள்  காரியங்களெல்லாம்  அன்போடே  செய்யப்படக்கடவது.  {1Cor  16:14}

 

சகோதரரே,  ஸ்தேவானுடைய<Stephanas>  வீட்டார்  அகாயாநாட்டிலே<Achaia>  முதற்பலனானவர்களென்றும்,  பரிசுத்தவான்களுக்கு  ஊழியஞ்செய்யும்படிக்குத்  தங்களை  ஒப்புவித்திருக்கிறார்களென்றும்  அறிந்திருக்கிறீர்களே.  {1Cor  16:15}

 

இப்படிப்பட்டவர்களுக்கும்,  உடன்வேலையாட்களாய்ப்  பிரயாசப்படுகிற  மற்ற  யாவருக்கும்  நீங்கள்  கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {1Cor  16:16}

 

ஸ்தேவான்<Stephanas>,  பொர்த்துனாத்து<Fortunatus>,  அகாயுக்கு<Achaicus>  என்பவர்கள்  வந்ததற்காகச்  சந்தோஷமாயிருக்கிறேன்,  நீங்கள்  எனக்குச்  செய்யவேண்டியதாயிருந்ததை  அவர்கள்  செய்திருக்கிறார்கள்.  {1Cor  16:17}

 

அவர்கள்  என்  ஆவிக்கும்  உங்கள்  ஆவிக்கும்  ஆறுதல்  செய்தார்கள்;  இப்படிப்பட்டவர்களை  அங்கிகாரம்பண்ணுங்கள்.  {1Cor  16:18}

 

ஆசியா<Asia>  நாட்டிலுள்ள  சபையார்  உங்களை  வாழ்த்துகிறார்கள்.  ஆக்கில்லாவும்<Aquila>  பிரிஸ்கில்லாளும்<Priscilla>  தங்கள்  வீட்டிலே  கூடுகிற  சபையோடுங்கூடக்  கர்த்தருக்குள்  உங்களை  மிகவும்  வாழ்த்துகிறார்கள்.  {1Cor  16:19}

 

சகோதரரெல்லாரும்  உங்களை  வாழ்த்துகிறார்கள்.  ஒருவரையொருவர்  பரிசுத்த  முத்தத்தோடே  வாழ்த்துங்கள்.  {1Cor  16:20}

 

பவுலாகிய<Paul>  நான்  என்  கையெழுத்தாலே  உங்களை  வாழ்த்துகிறேன்.  {1Cor  16:21}

 

ஒருவன்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினிடத்தில்<Jesus  Christ>  அன்புகூராமற்போனால்,  அவன்  சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்,  கர்த்தர்  வருகிறார்.  {1Cor  16:22}

 

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபை  உங்களுடனேகூட  இருப்பதாக.  {1Cor  16:23}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்ளான<Christ  Jesus>  என்னுடைய  அன்பு  உங்களெல்லாரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {1Cor  16:24}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!