Saturday, December 14, 2019

ரோமர்

இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  ஊழியக்காரனும்,  அப்போஸ்தலனாகும்படி  அழைக்கப்பட்டவனும்,  தேவனுடைய  சுவிசேஷத்திற்காகப்  பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய  பவுல்<Paul>,  {Rom  1:1}

 

ரோமாபுரியிலுள்ள<Rome>  தேவப்பிரியரும்  பரிசுத்தவான்களாகும்படி  அழைக்கப்பட்டவர்களுமாகிய  அனைவருக்கும்  எழுதுகிறதாவது;  {Rom  1:2}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {Rom  1:3}

 

இயேசுகிறிஸ்துவைக்குறித்துத்<Jesus Christ>  தேவன்  தம்முடைய  தீர்க்கதரிசிகள்  மூலமாய்ப்  பரிசுத்த  வேதாகமங்களில்  முன்னே  தம்முடைய  சுவிசேஷத்தைப்பற்றி  வாக்குத்தத்தம்பண்ணினபடி  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவானவர்<Jesus  Christ>,  {Rom  1:4}

 

மாம்சத்தின்படி  தாவீதின்<David>  சந்ததியில்  பிறந்தவரும்,  பரிசுத்தமுள்ள  ஆவியின்படி  தேவனுடைய  சுதனென்று  மரித்தோரிலிருந்து  உயிர்த்தெழுந்ததினாலே  பலமாய்  ரூபிக்கப்பட்ட  தேவகுமாரனுமாயிருக்கிறார்.  {Rom  1:5}

 

அவர்  சகல  ஜாதிகளையும்,  அவர்களுக்குள்  இயேசுகிறிஸ்துவினால்<Jesus  Christ>  அழைக்கப்பட்டவர்களாகிய  உங்களையும்,  {Rom  1:6}

 

தமது  நாமத்தினிமித்தம்  விசுவாசத்துக்குக்  கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு,  எங்களுக்குக்  கிருபையையும்  அப்போஸ்தல  ஊழியத்தையும்  அருளிச்செய்திருக்கிறார்.  {Rom  1:7}

 

உங்கள்  விசுவாசம்  உலகமெங்கும்  பிரசித்தமாகிறபடியினாலே,  முதலாவது  நான்  உங்களெல்லாருக்காகவும்  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  மூலமாய்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  {Rom  1:8}

 

நான்  ஜெபம்பண்ணும்போதெல்லாம்  இடைவிடாமல்  உங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத்  தமது  குமாரனுடைய  சுவிசேஷத்தினாலே  என்  ஆவியோடு  நான்  சேவிக்கிற  தேவன்  எனக்குச்  சாட்சியாயிருக்கிறார்.  {Rom  1:9}

 

நீங்கள்  ஸ்திரப்படுவதற்காக  ஆவிக்குரிய  சில  வரங்களை  உங்களுக்குக்  கொடுக்கும்படிக்கும்,  {Rom  1:10}

 

உங்களிலும்  என்னிலுமுள்ள  விசுவாசத்தினால்  உங்களோடேகூட  நானும்  ஆறுதலடையும்படிக்கும்,  உங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,  {Rom  1:11}

 

எவ்விதத்திலாவது  நான்  உங்களிடத்தில்  வருகிறதற்குத்  தேவனுடைய  சித்தத்தினாலே  எனக்கு  நல்ல  பிரயாணம்  சீக்கிரத்தில்  கிடைக்கவேண்டுமென்று  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Rom  1:12}

 

சகோதரரே,  புறஜாதிகளான  மற்றவர்களுக்குள்ளே  நான்  பலனை  அடைந்தது  போல  உங்களுக்குள்ளும்  சில  பலனை  அடையும்படிக்கு,  உங்களிடத்தில்  வர  பலமுறை  யோசனையாயிருந்தேன்,  ஆயினும்  இதுவரைக்கும்  எனக்குத்  தடையுண்டாயிற்று  என்று  நீங்கள்  அறியாதிருக்க  எனக்கு  மனதில்லை.  {Rom  1:13}

 

கிரேக்கருக்கும்<Greeks>,  மற்ற  அந்நியர்களுக்கும்,  ஞானிகளுக்கும்,  மூடருக்கும்  நான்  கடனாளியாயிருக்கிறேன்.  {Rom  1:14}

 

ஆகையால்  ரோமாபுரியிலிருக்கிற<Rome>  உங்களுக்கும்  என்னால்  இயன்றமட்டும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்க  விரும்புகிறேன்.  {Rom  1:15}

 

கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைக்  குறித்து  நான்  வெட்கப்படேன்;  முன்பு  யூதரிலும்<Jew>  பின்பு  கிரேக்கரிலும்<Greek>  விசுவாசிக்கிறவனெவனோ  அவனுக்கு  இரட்சிப்பு  உண்டாவதற்கு  அது  தேவபெலனாயிருக்கிறது.  {Rom  1:16}

 

விசுவாசத்தினாலே  நீதிமான்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறபடி,  விசுவாசத்தினால்  உண்டாகும்  தேவநீதி  விசுவாசத்திற்கென்று  அந்தச்  சுவிசேஷத்தினால்  வெளிப்படுத்தப்படுகிறது.  {Rom  1:17}

 

சத்தியத்தை  அநியாயத்தினாலே  அடக்கிவைக்கிற  மனுஷருடைய  எல்லாவித  அவபக்திக்கும்  அநியாயத்துக்கும்  விரோதமாய்,  தேவகோபம்  வானத்திலிருந்து  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  {Rom  1:18}

 

தேவனைக்குறித்து  அறியப்படுவது  அவர்களுக்குள்ளே  வெளிப்பட்டிருக்கிறது;  தேவனே  அதை  அவர்களுக்கு  வெளிப்படுத்தியிருக்கிறார்.  {Rom  1:19}

 

எப்படியென்றால்,  காணப்படாதவைகளாகிய  அவருடைய  நித்திய  வல்லமை  தேவத்துவம்  என்பவைகள்,  உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே,  உலகமுண்டானதுமுதற்கொண்டு,  தெளிவாய்க்  காணப்படும்;  ஆதலால்  அவர்கள்  போக்குச்சொல்ல  இடமில்லை.  {Rom  1:20}

 

அவர்கள்  தேவனை  அறிந்தும்,  அவரைத்  தேவனென்று  மகிமைப்படுத்தாமலும்,  ஸ்தோத்திரியாமலுமிருந்து,  தங்கள்  சிந்தனைகளினாலே  வீணரானார்கள்;  உணர்வில்லாத  அவர்களுடைய  இருதயம்  இருளடைந்தது.  {Rom  1:21}

 

அவர்கள்  தங்களை  ஞானிகளென்று  சொல்லியும்  பயித்தியக்காரராகி,  {Rom  1:22}

 

அழிவில்லாத  தேவனுடைய  மகிமையை  அழிவுள்ள  மனுஷர்கள்  பறவைகள்  மிருகங்கள்  ஊரும்  பிராணிகள்  ஆகிய  இவைகளுடைய  ரூபங்களுக்கு  ஒப்பாக  மாற்றினார்கள்.  {Rom  1:23}

 

இதினிமித்தம்  அவர்கள்  தங்கள்  இருதயத்திலுள்ள  இச்சைகளினாலே  ஒருவரோடொருவர்  தங்கள்  சரீரங்களை  அவமானப்படுத்தத்தக்கதாக,  தேவன்  அவர்களை  அசுத்தத்திற்கு  ஒப்புக்கொடுத்தார்.  {Rom  1:24}

 

தேவனுடைய  சத்தியத்தை  அவர்கள்  பொய்யாக  மாற்றி,  சிருஷ்டிகரைத்  தொழுது  சேவியாமல்  சிருஷ்டியைத்  தொழுது  சேவித்தார்கள்,  அவரே  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.  ஆமென்.  {Rom  1:25}

 

இதினிமித்தம்  தேவன்  அவர்களை  இழிவான  இச்சைரோகங்களுக்கு  ஒப்புக்கொடுத்தார்;  அந்தப்படியே  அவர்களுடைய  பெண்கள்  சுபாவ  அநுபோகத்தைச்  சுபாவத்துக்கு  விரோதமான  அநுபோகமாக  மாற்றினார்கள்.  {Rom  1:26}

 

அப்படியே  ஆண்களும்  பெண்களைச்  சுபாவப்படி  அநுபவியாமல்,  ஒருவர்மேலொருவர்  விரகதாபத்தினாலே  பொங்கி,  ஆணோடே  ஆண்  அவலட்சணமானதை  நடப்பித்து,  தங்கள்  தப்பிதத்திற்குத்  தகுதியான  பலனைத்  தங்களுக்குள்  அடைந்தார்கள்.  {Rom  1:27}

 

தேவனை  அறியும்  அறிவைப்  பற்றிக்கொண்டிருக்க  அவர்களுக்கு  மனதில்லாதிருந்தபடியால்,  தகாதவைகளைச்  செய்யும்படி,  தேவன்  அவர்களைக்  கேடான  சிந்தைக்கு  ஒப்புக்கொடுத்தார்.  {Rom  1:28}

 

அவர்கள்  சகலவித  அநியாயத்தினாலும்,  வேசித்தனத்தினாலும்,  துரோகத்தினாலும்,  பொருளாசையினாலும்,  குரோதத்தினாலும்  நிறையப்பட்டு;  பொறாமையினாலும்,  கொலையினாலும்,  வாக்குவாதத்தினாலும்,  வஞ்சகத்தினாலும்,  வன்மத்தினாலும்  நிறைந்தவர்களுமாய்,  {Rom  1:29}

 

புறங்கூறுகிறவர்களுமாய்,  அவதூறுபண்ணுகிறவர்களுமாய்,  தேவபகைஞருமாய்,  துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய்,  அகந்தையுள்ளவர்களுமாய்,  வீம்புக்காரருமாய்,  பொல்லாதவைகளை  யோசித்துப்  பிணைக்கிறவர்களுமாய்,  பெற்றாருக்குக்  கீழ்ப்படியாதவர்களுமாய்,  {Rom  1:30}

 

உணர்வில்லாதவர்களுமாய்,  உடன்படிக்கைகளை  மீறுகிறவர்களுமாய்,  சுபாவ  அன்பில்லாதவர்களுமாய்,  இணங்காதவர்களுமாய்,  இரக்கமில்லாதவர்களுமாய்  இருக்கிறார்கள்.  {Rom  1:31}

 

இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்கள்  மரணத்திற்குப்  பாத்திரராயிருக்கிறார்களென்று  தேவன்  தீர்மானித்த  நீதியான  தீர்ப்பை  அவர்கள்  அறிந்திருந்தும்,  அவைகளைத்  தாங்களே  செய்கிறதுமல்லாமல்,  அவைகளைச்  செய்கிற  மற்றவர்களிடத்தில்  பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.  {Rom  1:32}

 

ஆகையால்,  மற்றவர்களைக்  குற்றவாளியாகத்  தீர்க்கிறவனே,  நீ  யாரானாலும்  சரி,  போக்குச்சொல்ல  உனக்கு  இடமில்லை;  நீ  குற்றமாகத்  தீர்க்கிறவைகள்  எவைகளோ,  அவைகளை  நீயே  செய்கிறபடியால்,  நீ  மற்றவர்களைக்குறித்துச்  சொல்லுகிற  தீர்ப்பினாலே  உன்னைத்தானே  குற்றவாளியாகத்  தீர்க்கிறாய்.  {Rom  2:1}

 

இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்களுக்குத்  தேவனுடைய  நியாயத்தீர்ப்பு  சத்தியத்தின்படியே  இருக்கிறதென்று  அறிந்திருக்கிறோம்.  {Rom  2:2}

 

இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்களைக்  குற்றவாளிகளென்று  தீர்த்தும்,  அவைகளையே  செய்கிறவனே,  நீ  தேவனுடைய  நியாயத்தீர்ப்புக்குத்  தப்பிக்கொள்ளலாமென்று  நினைக்கிறாயோ?  {Rom  2:3}

 

அல்லது  தேவதயவு  நீ  குணப்படும்படி  உன்னை  ஏவுகிறதென்று  அறியாமல்,  அவருடைய  தயவு  பொறுமை  நீடியசாந்தம்  இவைகளின்  ஐசுவரியத்தை  அசட்டைபண்ணுகிறாயோ?  {Rom  2:4}

 

உன்  மனக்கடினத்திற்கும்  குணப்படாத  இருதயத்திற்கும்  ஏற்றபடி,  தேவனுடைய  நீதியுள்ள  தீர்ப்பு  வெளிப்படும்  கோபாக்கினைநாளிலே  உனக்காகக்  கோபாக்கினையைக்  குவித்துக்கொள்ளுகிறாயே.  {Rom  2:5}

 

தேவன்  அவனவனுடைய  கிரியைகளுக்குத்தக்கதாய்  அவனவனுக்குப்  பலனளிப்பார்.  {Rom  2:6}

 

சோர்ந்துபோகாமல்  நற்கிரியைகளைச்  செய்து,  மகிமையையும்  கனத்தையும்  அழியாமையையும்  தேடுகிறவர்களுக்கு  நித்தியஜீவனை  அளிப்பார்.  {Rom  2:7}

 

சண்டைக்காரராயிருந்து,  சத்தியத்திற்குக்  கீழ்ப்படியாமல்,  அநியாயத்திற்குக்  கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ  உக்கிரகோபாக்கினை  வரும்.  {Rom  2:8}

 

முன்பு  யூதரிலும்<Jew>  பின்பு  கிரேக்கரிலும்<Greek//Gentile>  பொல்லாங்குசெய்கிற  எந்த  மனுஷ  ஆத்துமாவுக்கும்  உபத்திரவமும்  வியாகுலமும்  உண்டாகும்.  {Rom  2:9}

 

முன்பு  யூதரிலும்<Jew>  பின்பு  கிரேக்கரிலும்<Greek//Gentile>  எவன்  நன்மைசெய்கிறானோ  அவனுக்கு  மகிமையும்  கனமும்  சமாதானமும்  உண்டாகும்.  {Rom  2:10}

 

தேவனிடத்தில்  பட்சபாதமில்லை.  {Rom  2:11}

 

எவர்கள்  நியாயப்பிரமாணமில்லாமல்  பாவஞ்செய்கிறார்களோ,  அவர்கள்  நியாயப்பிரமாணமில்லாமல்  கெட்டுப்போவார்கள்;  எவர்கள்  நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப்  பாவஞ்செய்கிறார்களோ,  அவர்கள்  நியாயப்பிரமாணத்தினாலே  ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.  {Rom  2:12}

 

நியாயப்பிரமாணத்தைக்  கேட்கிறவர்கள்  தேவனுக்கு  முன்பாக  நீதிமான்களல்ல,  நியாயப்பிரமாணத்தின்படி  செய்கிறவர்களே  நீதிமான்களாக்கப்படுவார்கள்.  {Rom  2:13}

 

அன்றியும்  நியாயப்பிரமாணமில்லாத  புறஜாதிகள்  சுபாவமாய்  நியாயப்பிரமாணத்தின்படி  செய்கிறபோது,  நியாயப்பிரமாணமில்லாத  அவர்கள்  தங்களுக்குத்  தாங்களே  நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.  {Rom  2:14}

 

அவர்களுடைய  மனச்சாட்சியும்  கூடச்  சாட்சியிடுகிறதினாலும்,  குற்றமுண்டு  குற்றமில்லையென்று  அவர்களுடைய  சிந்தனைகள்  ஒன்றையொன்று  தீர்க்கிறதினாலும்,  நியாயப்பிரமாணத்திற்கேற்ற  கிரியை  தங்கள்  இருதயங்களில்  எழுதியிருக்கிறதென்று  காண்பிக்கிறார்கள்.  {Rom  2:15}

 

என்  சுவிசேஷத்தின்படியே,  தேவன்  இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  மனுஷருடைய  அந்தரங்கங்களைக்குறித்து  நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்  நாளிலே  இது  விளங்கும்.  {Rom  2:16}

 

நீ  யூதனென்று<Jew>  பெயர்பெற்று,  நியாயப்பிரமாணத்தின்மேல்  பற்றுதலாயிருந்து,  தேவனைக்குறித்து  மேன்மைபாராட்டி,  {Rom  2:17}

 

நியாயப்பிரமாணத்தினால்  உபதேசிக்கப்பட்டவனாய்,  அவருடைய  சித்தத்தை  அறிந்து,  நன்மை  தீமை  இன்னதென்று  வகையறுக்கிறாயே.  {Rom  2:18}

 

நீ  உன்னைக்  குருடருக்கு  வழிகாட்டியாகவும்,  அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு  வெளிச்சமாகவும்,  {Rom  2:19}

 

பேதைகளுக்குப்  போதகனாகவும்,  குழந்தைகளுக்கு  உபாத்தியாயனாகவும்,  நியாயப்பிரமாணத்தின்  அறிவையும்  சத்தியத்தையும்  காட்டிய  சட்டமுடையவனாகவும்  எண்ணுகிறாயே.  {Rom  2:20}

 

இப்படியிருக்க,  மற்றவனுக்குப்  போதிக்கிற  நீ  உனக்குத்தானே  போதியாமலிருக்கலாமா?  களவுசெய்யக்கூடாதென்று  பிரசங்கிக்கிற  நீ  களவுசெய்யலாமா?  {Rom  2:21}

 

விபசாரம்  செய்யக்கூடாதென்று  சொல்லுகிற  நீ  விபசாரம்  செய்யலாமா?  விக்கிரகங்களை  அருவருக்கிற  நீ  கோவில்களைக்  கொள்ளையிடலாமா?  {Rom  2:22}

 

நியாயப்பிரமாணத்தைக்குறித்து  மேன்மைபாராட்டுகிற  நீ  நியாயப்பிரமாணத்தை  மீறிநடந்து,  தேவனைக்  கனவீனம்பண்ணலாமா?  {Rom  2:23}

 

எழுதியிருக்கிறபடி,  தேவனுடைய  நாமம்  புறஜாதிகளுக்குள்ளே  உங்கள்  மூலமாய்த்  தூஷிக்கப்படுகிறதே.  {Rom  2:24}

 

நீ  நியாயப்பிரமாணத்தைக்  கைக்கொண்டு  நடந்தால்  விருத்தசேதனம்  பிரயோஜனமுள்ளதுதான்;  நீ  நியாயப்பிரமாணத்தை  மீறி  நடந்தால்  உன்  விருத்தசேதனம்  விருத்தசேதனமில்லாமையாயிற்றே.  {Rom  2:25}

 

மேலும்  விருத்தசேதனமில்லாதவன்  நியாயப்பிரமாணத்துக்கேற்ற  நீதிகளைக்  கைக்கொண்டால்,  அவனுடைய  விருத்தசேதனமில்லாமை  விருத்தசேதனம்  என்றெண்ணப்படுமல்லவா?  {Rom  2:26}

 

சுபாவத்தின்படி  விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும்  நியாயப்பிரமாணத்தை  நிறைவேற்றுகிறவனாயிருந்தால்,  அவன்  வேத  எழுத்தும்  விருத்தசேதனமும்  உள்ளவனாயிருந்தும்,  நியாயப்பிரமாணத்தை  மீறுகிற  உன்னைக்  குற்றப்படுத்துவானல்லவா?  {Rom  2:27}

 

ஆதலால்  புறம்பாக  யூதனானவன்<Jew>  யூதனல்ல<Jew>,  புறம்பாக  மாம்சத்தில்  செய்யப்படும்  விருத்தசேதனமும்  விருத்தசேதனமல்ல.  {Rom  2:28}

 

உள்ளத்திலே  யூதனானவனே<Jew>  யூதன்<Jew>;  எழுத்தின்படி  உண்டாகாமல்,  ஆவியின்படி  இருதயத்தில்  உண்டாகும்  விருத்தசேதனமே  விருத்தசேதனம்;  இப்படிப்பட்டவனுக்குரிய  புகழ்ச்சி  மனுஷராலே  அல்ல,  தேவனாலே  உண்டாயிருக்கிறது.  {Rom  2:29}

 

இப்படியானால்,  யூதனுடைய<Jew>  மேன்மை  என்ன?  விருத்தசேதனத்தினாலே  பிரயோஜனம்  என்ன?  {Rom  3:1}

 

அது  எவ்விதத்திலும்  மிகுதியாயிருக்கிறது;  தேவனுடைய  வாக்கியங்கள்  அவர்களிடத்தில்  ஒப்புவிக்கப்பட்டது  விசேஷித்த  மேன்மையாமே.  {Rom  3:2}

 

சிலர்  விசுவாசியாமற்போனாலுமென்ன?  அவர்களுடைய  அவிசுவாசம்  தேவனுடைய  உண்மையை  அவமாக்குமோ?  {Rom  3:3}

 

அப்படியாக்கமாட்டாது:  நீர்  உம்முடைய  வசனங்களில்  நீதிபரராய்  விளங்கவும்,  உம்முடைய  நியாயம்  விசாரிக்கப்படும்போது  வெற்றியடையவும்  இப்படியாயிற்று  என்று  எழுதியிருக்கிறபடி,  தேவனே  சத்தியபரர்  என்றும்,  எந்த  மனுஷனும்  பொய்யன்  என்றும்  சொல்வோமாக.  {Rom  3:4}

 

நான்  மனுஷர்  பேசுகிற  பிரகாரமாய்ப்  பேசுகிறேன்;  நம்முடைய  அநீதி  தேவனுடைய  நீதியை  விளங்கப்பண்ணினால்  என்ன  சொல்லுவோம்?  கோபாக்கினையைச்  செலுத்துகிற  தேவன்  அநீதராயிருக்கிறார்  என்று  சொல்லலாமா?  {Rom  3:5}

 

அப்படிச்  சொல்லக்கூடாது;  சொல்லக்கூடுமானால்,  தேவன்  உலகத்தை  நியாயந்தீர்ப்பதெப்படி?  {Rom  3:6}

 

அன்றியும்,  என்  பொய்யினாலே  தேவனுடைய  சத்தியம்  அவருக்கு  மகிமையுண்டாக  விளங்கினதுண்டானால்,  இனி  நான்  பாவியென்று  தீர்க்கப்படுவானேன்?  {Rom  3:7}

 

நன்மை  வரும்படிக்குத்  தீமைசெய்வோமாக  என்றும்  சொல்லலாமல்லவா?  நாங்கள்  அப்படிப்  போதிக்கிறவர்களென்றும்  சிலர்  எங்களைத்  தூஷித்துச்  சொல்லுகிறார்களே;  அப்படிப்  போதிக்கிறவர்கள்மேல்  வரும்  ஆக்கினை  நீதியாயிருக்கும்.  {Rom  3:8}

 

ஆனாலும்  என்ன?  அவர்களைப்பார்க்கிலும்  நாங்கள்  விசேஷித்தவர்களா?  எவ்வளவேனும்  விசேஷித்தவர்களல்ல.  யூதர்<Jews>  கிரேக்கர்<Greeks//Gentiles>  யாவரும்  பாவத்திற்குட்பட்டவர்களென்பதை  முன்பு  திருஷ்டாந்தப்படுத்தினோமே.  {Rom  3:9}

 

அந்தப்படியே:  நீதிமான்  ஒருவனாகிலும்  இல்லை;  {Rom  3:10}

 

உணர்வுள்ளவன்  இல்லை;  தேவனைத்  தேடுகிறவன்  இல்லை;  {Rom  3:11}

 

எல்லாரும்  வழிதப்பி,  ஏகமாய்க்  கெட்டுப்போனார்கள்;  நன்மைசெய்கிறவன்  இல்லை,  ஒருவனாகிலும்  இல்லை.  {Rom  3:12}

 

அவர்கள்  தொண்டை  திறக்கப்பட்ட  பிரேதக்குழி,  தங்கள்  நாவுகளால்  வஞ்சனைசெய்கிறார்கள்;  அவர்களுடைய  உதடுகளின்  கீழே  பாம்பின்  விஷம்  இருக்கிறது;  {Rom  3:13}

 

அவர்கள்  வாய்  சபிப்பினாலும்  கசப்பினாலும்  நிறைந்திருக்கிறது;  {Rom  3:14}

 

அவர்கள்  கால்கள்  இரத்தஞ்சிந்துகிறதற்குத்  தீவிரிக்கிறது;  {Rom  3:15}

 

நாசமும்  நிர்ப்பந்தமும்  அவர்கள்  வழிகளிலிருக்கிறது;  {Rom  3:16}

 

சமாதான  வழியை  அவர்கள்  அறியாதிருக்கிறார்கள்;  {Rom  3:17}

 

அவர்கள்  கண்களுக்கு  முன்பாகத்  தெய்வபயமில்லை,  என்று  எழுதியிருக்கிறதே.  {Rom  3:18}

 

மேலும்,  வாய்கள்  யாவும்  அடைக்கப்படும்படிக்கும்,  உலகத்தார்  யாவரும்  தேவனுடைய  ஆக்கினைத்தீர்ப்புக்கு  ஏதுவானவர்களாகும்படிக்கும்,  நியாயப்பிரமாணம்  சொல்லுகிறதெல்லாம்  நியாயப்பிரமாணத்துக்கு  உட்பட்டிருக்கிறவர்களுக்கே  சொல்லுகிறதென்று  அறிந்திருக்கிறோம்.  {Rom  3:19}

 

இப்படியிருக்க,  பாவத்தை  அறிகிற  அறிவு  நியாயப்பிரமாணத்தினால்  வருகிறபடியால்,  எந்த  மனுஷனும்  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே  தேவனுக்கு  முன்பாக  நீதிமானாக்கப்படுவதில்லை.  {Rom  3:20}

 

இப்படியிருக்க,  நியாயப்பிரமாணமில்லாமல்  தேவநீதி  வெளியாக்கப்பட்டிருக்கிறது;  அதைக்குறித்து  நியாயப்பிரமாணமும்  தீர்க்கதரிசனங்களும்  சாட்சியிடுகிறது.  {Rom  3:21}

 

அது  இயேசுகிறிஸ்துவைப்பற்றும்<Jesus  Christ>  விசுவாசத்தினாலே  பலிக்கும்  தேவநீதியே;  விசுவாசிக்கிற  எவர்களுக்குள்ளும்  எவர்கள்மேலும்  அது  பலிக்கும்,  வித்தியாசமே  இல்லை.  {Rom  3:22}

 

எல்லாரும்  பாவஞ்செய்து,  தேவமகிமையற்றவர்களாகி,  {Rom  3:23}

 

இலவசமாய்  அவருடைய  கிருபையினாலே  கிறிஸ்து  இயேசுவிலுள்ள<Christ  Jesus>  மீட்பைக்கொண்டு  நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;  {Rom  3:24}

 

தேவன்  பொறுமையாயிருந்த  முற்காலத்தில்  நடந்த  பாவங்களைத்  தாம்  பொறுத்துக்கொண்டதைக்குறித்துத்  தம்முடைய  நீதியைக்  காண்பிக்கும்பொருட்டாகவும்,  தாம்  நீதியுள்ளவரும்,  இயேசுவினிடத்தில்<Jesus>  விசுவாசமாயிருக்கிறவனை  நீதிமானாக்குகிறவருமாய்  விளங்கும்படி,  இக்காலத்திலே  தமது  நீதியைக்  காண்பிக்கும்  பொருட்டாகவும்,  {Rom  3:25}

 

கிறிஸ்து  இயேசுவினுடைய<Christ Jesus>  இரத்தத்தைப்பற்றும்  விசுவாசத்தினாலே  பலிக்கும்  கிருபாதார  பலியாக  அவரையே  ஏற்படுத்தினார்.  {Rom  3:26}

 

இப்படியிருக்க,  மேன்மைபாராட்டல்  எங்கே?  அது  நீக்கப்பட்டதே.  எந்தப்  பிரமாணத்தினாலே?  கிரியாப்பிரமாணத்தினாலேயா?  அல்ல;  விசுவாசப்பிரமாணத்தினாலேயே.  {Rom  3:27}

 

ஆதலால்,  மனுஷன்  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளில்லாமல்  விசுவாசத்தினாலேயே  நீதிமானாக்கப்படுகிறான்  என்று  தீர்க்கிறோம்.  {Rom  3:28}

 

தேவன்  யூதருக்குமாத்திரமா<Jews>  தேவன்?  புறஜாதிகளுக்கும்  தேவனல்லவா?  ஆம்  புறஜாதிகளுக்கும்  அவர்  தேவன்தான்.  {Rom  3:29}

 

விருத்தசேதனமுள்ளவர்களை  விசுவாசத்தினாலும்,  விருத்தசேதனமில்லாதவர்களை  விசுவாசத்தின்  மூலமாயும்  நீதிமான்களாக்குகிற  தேவன்  ஒருவரே.  {Rom  3:30}

 

அப்படியானால்,  விசுவாசத்தினாலே  நியாயப்பிரமாணத்தை  அவமாக்குகிறோமா?  அப்படியல்ல;  நியாயப்பிரமாணத்தை  நிலைநிறுத்துகிறோமே.  {Rom  3:31}

 

அப்படியானால்,  நம்முடைய  தகப்பனாகிய  ஆபிரகாம்<Abraham>  மாம்சத்தின்படி  என்னத்தைக்  கண்டடைந்தான்  என்று  சொல்லுவோம்?  {Rom  4:1}

 

ஆபிரகாம்<Abraham>  கிரியைகளினாலே  நீதிமானாக்கப்பட்டானாகில்  மேன்மைபாராட்ட  அவனுக்கு  ஏதுவுண்டு;  ஆகிலும்  தேவனுக்குமுன்பாக  மேன்மைபாராட்ட  ஏதுவில்லை.  {Rom  4:2}

 

வேதவாக்கியம்  என்ன  சொல்லுகிறது?  ஆபிரகாம்<Abraham>  தேவனை  விசுவாசித்தான்,  அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது  என்று  சொல்லுகிறது.  {Rom  4:3}

 

கிரியை  செய்கிறவனுக்கு  வருகிற  கூலி  கிருபையென்றெண்ணப்படாமல்,  கடனென்றெண்ணப்படும்.  {Rom  4:4}

 

ஒருவன்  கிரியை  செய்யாமல்  பாவியை  நீதிமானாக்குகிறவரிடத்தில்  விசுவாசம்  வைக்கிறவனாயிருந்தால்,  அவனுடைய  விசுவாசமே  அவனுக்கு  நீதியாக  எண்ணப்படும்.  {Rom  4:5}

 

அந்தப்படி,  கிரியைகளில்லாமல்  தேவனாலே  நீதிமானென்றெண்ணப்படுகிற  மனுஷனுடைய  பாக்கியத்தைக்  காண்பிக்கும்  பொருட்டு:  {Rom  4:6}

 

எவர்களுடைய  அக்கிரமங்கள்  மன்னிக்கப்பட்டதோ,  எவர்களுடைய  பாவங்கள்  மூடப்பட்டதோ,  அவர்கள்  பாக்கியவான்கள்.  {Rom  4:7}

 

எவனுடைய  பாவத்தைக்  கர்த்தர்  எண்ணாதிருக்கிறாரோ,  அவன்  பாக்கியவான்  என்று  தாவீது<David>  சொல்லியிருக்கிறான்.  {Rom  4:8}

 

இந்தப்  பாக்கியம்  விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம்  வருமோ,  விருத்தசேதனமில்லாதவனுக்கும்  வருமோ?  ஆபிரகாமுக்கு<Abraham>  விசுவாசம்  நீதியாக  எண்ணப்பட்டது  என்று  சொல்லுகிறோமே.  {Rom  4:9}

 

அது  எப்பொழுது  அவனுக்கு  அப்படி  எண்ணப்பட்டது?  அவன்  விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ,  விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ?  விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல,  விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே.  {Rom  4:10}

 

மேலும்,  விருத்தசேதனமில்லாத  காலத்தில்  அவன்  விசுவாசத்தினாலே  அடைந்த  நீதிக்கு  முத்திரையாக  விருத்தசேதனமாகிய  அடையாளத்தைப்  பெற்றான்.  விருத்தசேதனமில்லாதவர்களாய்  விசுவாசிக்கிற  யாவருக்கும்  நீதி  எண்ணப்படும்பொருட்டாக  அவர்களுக்கு  அவன்  தகப்பனாயிருக்கும்படிக்கும்,  {Rom  4:11}

 

விருத்தசேதனத்தைப்  பெற்றவர்களாய்மாத்திரமல்ல,  நம்முடைய  தகப்பனாகிய  ஆபிரகாம்<Abraham>  விருத்தசேதனமில்லாத  காலத்தில்  அடைந்த  விசுவாசமாகிய  அடிச்சுவடுகளில்  நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத்  தகப்பனாயிருக்கும்படிக்கும்,  அந்த  அடையாளத்தைப்  பெற்றான்.  {Rom  4:12}

 

அன்றியும்,  உலகத்தைச்  சுதந்தரிப்பான்  என்கிற  வாக்குத்தத்தம்  ஆபிரகாமுக்காவது<Abraham>  அவன்  சந்ததிக்காவது  நியாயப்பிரமாணத்தினால்  கிடையாமல்  விசுவாசத்தினால்  வருகிற  நீதியினால்  கிடைத்தது.  {Rom  4:13}

 

நியாயப்பிரமாணத்தைச்  சார்ந்தவர்கள்  சுதந்தரவாளிகளானால்  விசுவாசம்  வீணாய்ப்போம்,  வாக்குத்தத்தமும்  அவமாகும்.  {Rom  4:14}

 

மேலும்  நியாயப்பிரமாணம்  கோபாக்கினையை  உண்டாக்குகிறது,  நியாயப்பிரமாணமில்லாவிட்டால்  மீறுதலுமில்லை.  {Rom  4:15}

 

ஆதலால்,  சுதந்தரமானது  கிருபையினால்  உண்டாகிறதாயிருக்கும்படிக்கு  அது  விசுவாசத்தினாலே  வருகிறது;  நியாயப்பிரமாணத்தைச்  சார்ந்தவர்களாகிய  சந்ததியாருக்குமாத்திரமல்ல,  நம்மெல்லாருக்கும்  தகப்பனாகிய  ஆபிரகாமுடைய<Abraham>  விசுவாசத்தைச்  சார்ந்தவர்களான  எல்லாச்  சந்ததியாருக்கும்  அந்த  வாக்குத்தத்தம்  நிச்சயமாயிருக்கும்படிக்கு  அப்படி  வருகிறது.  {Rom  4:16}

 

அநேக  ஜாதிகளுக்கு  உன்னைத்  தகப்பனாக  ஏற்படுத்தினேன்  என்று  எழுதியிருக்கிறபடி,  அவன்  தான்  விசுவாசித்தவருமாய்,  மரித்தோரை  உயிர்ப்பித்து,  இல்லாதவைகளை  இருக்கிறவைகளைப்போல்  அழைக்கிறவருமாயிருக்கிற  தேவனுக்கு  முன்பாக  நம்மெல்லாருக்கும்  தகப்பனானான்.  {Rom  4:17}

 

உன்  சந்ததி  இவ்வளவாயிருக்கும்  என்று  சொல்லப்பட்டபடியே,  தான்  அநேக  ஜாதிகளுக்குத்  தகப்பனாவதை  நம்புகிறதற்கு  ஏதுவில்லாதிருந்தும்,  அதை  நம்பிக்கையோடே  விசுவாசித்தான்.  {Rom  4:18}

 

அவன்  விசுவாசத்திலே  பலவீனமாயிருக்கவில்லை;  அவன்  ஏறக்குறைய  நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது,  தன்  சரீரம்  செத்துப்போனதையும்,  சாராளுடைய<Sarah>  கர்ப்பம்  செத்துப்போனதையும்  எண்ணாதிருந்தான்.  {Rom  4:19}

 

தேவனுடைய  வாக்குத்தத்தத்தைக்குறித்து  அவன்  அவிசுவாசமாய்ச்  சந்தேகப்படாமல்,  {Rom  4:20}

 

தேவன்  வாக்குத்தத்தம்பண்ணினதை  நிறைவேற்ற  வல்லவராயிருக்கிறாரென்று  முழு  நிச்சயமாய்  நம்பி,  தேவனை  மகிமைப்படுத்தி,  விசுவாசத்தில்  வல்லவனானான்.  {Rom  4:21}

 

ஆகையால்  அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது.  {Rom  4:22}

 

அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டதென்பது,  அவனுக்காக  மாத்திரமல்ல,  நமக்காகவும்  எழுதப்பட்டிருக்கிறது.  {Rom  4:23}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுவை<Jesus>  மரித்தோரிலிருந்து  எழுப்பினவரை  விசுவாசிக்கிற  நமக்கும்  அப்படியே  எண்ணப்படும்.  {Rom  4:24}

 

அவர்  நம்முடைய  பாவங்களுக்காக  ஒப்புக்கொடுக்கப்பட்டும்,  நாம்  நீதிமான்களாக்கப்படுவதற்காக  எழுப்பப்பட்டும்  இருக்கிறார்.  {Rom  4:25}

 

இவ்விதமாக,  நாம்  விசுவாசத்தினாலே  நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்<Jesus  Christ>  தேவனிடத்தில்  சமாதானம்  பெற்றிருக்கிறோம்.  {Rom  5:1}

 

அவர்மூலமாய்  நாம்  இந்தக்  கிருபையில்  பிரவேசிக்கும்  சிலாக்கியத்தை  விசுவாசத்தினால்  பெற்று  நிலைகொண்டிருந்து,  தேவமகிமையை  அடைவோமென்கிற  நம்பிக்கையினாலே  மேன்மைபாராட்டுகிறோம்.  {Rom  5:2}

 

அதுமாத்திரமல்ல,  உபத்திரவம்  பொறுமையையும்,  பொறுமை  பரீட்சையையும்,  பரீட்சை  நம்பிக்கையையும்  உண்டாக்குகிறதென்று  நாங்கள்  அறிந்து,  {Rom  5:3}

 

உபத்திரவங்களிலேயும்  மேன்மைபாராட்டுகிறோம்.  {Rom  5:4}

 

மேலும்  நமக்கு  அருளப்பட்ட  பரிசுத்தஆவியினாலே  தேவ  அன்பு  நம்முடைய  இருதயங்களில்  ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,  அந்த  நம்பிக்கை  நம்மை  வெட்கப்படுத்தாது.  {Rom  5:5}

 

அன்றியும்  நாம்  பெலனற்றவர்களாயிருக்கும்போதே,  குறித்த  காலத்தில்  கிறிஸ்து<Christ>  அக்கிரமக்காரருக்காக  மரித்தார்.  {Rom  5:6}

 

நீதிமானுக்காக  ஒருவன்  மரிக்கிறது  அரிது;  நல்லவனுக்காக  ஒருவேளை  ஒருவன்  மரிக்கத்  துணிவான்.  {Rom  5:7}

 

நாம்  பாவிகளாயிருக்கையில்  கிறிஸ்து<Christ>  நமக்காக  மரித்ததினாலே,  தேவன்  நம்மேல்  வைத்த  தமது  அன்பை  விளங்கப்பண்ணுகிறார்.  {Rom  5:8}

 

இப்படி  நாம்  அவருடைய  இரத்தத்தினாலே  நீதிமான்களாக்கப்பட்டிருக்க,  கோபாக்கினைக்கு  நீங்கலாக  அவராலே  நாம்  இரட்சிக்கப்படுவது  அதிக  நிச்சயமாமே.  {Rom  5:9}

 

நாம்  தேவனுக்குச்  சத்துருக்களாயிருக்கையில்,  அவருடைய  குமாரனின்  மரணத்தினாலே  அவருடனே  ஒப்புரவாக்கப்பட்டோமானால்,  ஒப்புரவாக்கப்பட்டபின்  நாம்  அவருடைய  ஜீவனாலே  இரட்சிக்கப்படுவது  அதிக  நிச்சயமாமே.  {Rom  5:10}

 

அதுவுமல்லாமல்,  இப்பொழுது  ஒப்புரவாகுதலை  நமக்குக்  கிடைக்கப்பண்ணின  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்<Jesus  Christ>  நாம்  தேவனைப்பற்றியும்  மேன்மைபாராட்டுகிறோம்.  {Rom  5:11}

 

இப்படியாக,  ஒரே  மனுஷனாலே  பாவமும்  பாவத்தினாலே  மரணமும்  உலகத்திலே  பிரவேசித்ததுபோலவும்,  எல்லா  மனுஷரும்  பாவஞ்செய்தபடியால்,  மரணம்  எல்லாருக்கும்  வந்ததுபோலவும்  இதுவுமாயிற்று.  {Rom  5:12}

 

நியாயப்பிரமாணம்  கொடுக்கப்படுவதற்கு  முன்னும்  பாவம்  உலகத்திலிருந்தது;  நியாயப்பிரமாணம்  இல்லாதிருந்தால்  பாவம்  எண்ணப்படமாட்டாது.  {Rom  5:13}

 

அப்படியிருந்தும்,  மரணமானது  ஆதாம்முதல்<Adam>  மோசேவரைக்கும்<Moses>,  ஆதாமின்<Adam>  மீறுதலுக்கொப்பாய்ப்  பாவஞ்செய்யாதவர்களையும்  ஆண்டுகொண்டது;  அந்த  ஆதாம்<Adam>  பின்பு  வந்தவருக்கு  முன்னடையாளமானவன்.  {Rom  5:14}

 

ஆனாலும்  மீறுதலின்  பலன்  கிருபை  வரத்தின்  பலனுக்கு  ஒப்பானதல்ல.  எப்படியெனில்,  ஒருவனுடைய  மீறுதலினாலே  அநேகர்  மரித்திருக்க,  தேவனுடைய  கிருபையும்  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னும்  ஒரே  மனுஷனுடைய  கிருபையினாலே  வரும்  ஈவும்  அநேகர்மேல்  அதிகமாய்ப்  பெருகியிருக்கிறது.  {Rom  5:15}

 

மேலும்  ஒருவன்  பாவஞ்செய்ததினால்  உண்டான  தீர்ப்பு  தேவன்  அருளும்  ஈவுக்கு  ஒப்பானதல்ல;  அந்தத்  தீர்ப்பு  ஒரே  குற்றத்தினிமித்தம்  ஆக்கினைக்கு  ஏதுவாயிருந்தது;  கிருபைவரமோ  அநேக  குற்றங்களை  நீக்கி  நீதிவிளங்கும்  தீர்ப்புக்கு  ஏதுவாயிருக்கிறது.  {Rom  5:16}

 

அல்லாமலும்,  ஒருவனுடைய  மீறுதலினாலே,  அந்த  ஒருவன்மூலமாய்,  மரணம்  ஆண்டுகொண்டிருக்க,  கிருபையின்  பரிபூரணத்தையும்  நீதியாகிய  ஈவின்  பரிபூரணத்தையும்  பெறுகிறவர்கள்  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  என்னும்  ஒருவராலே  ஜீவனை  அடைந்து  ஆளுவார்களென்பது  அதிக  நிச்சயமாமே.  {Rom  5:17}

 

ஆகையால்  ஒரே  மீறுதலினாலே  எல்லா  மனுஷருக்கும்  ஆக்கினைக்கு  ஏதுவான  தீர்ப்பு  உண்டானதுபோல,  ஒரே  நீதியினாலே  எல்லா  மனுஷருக்கும்  ஜீவனை  அளிக்கும்  நீதிக்கு  ஏதுவான  தீர்ப்பு  உண்டாயிற்று.  {Rom  5:18}

 

அன்றியும்  ஒரே  மனுஷனுடைய  கீழ்ப்படியாமையினாலே  அநேகர்  பாவிகளாக்கப்பட்டதுபோல,  ஒருவருடைய  கீழ்ப்படிதலினாலே  அநேகர்  நீதிமான்களாக்கப்படுவார்கள்.  {Rom  5:19}

 

மேலும்,  மீறுதல்  பெருகும்படிக்கு  நியாயப்பிரமாணம்  வந்தது;  அப்படியிருந்தும்,  பாவம்  பெருகின  இடத்தில்  கிருபை  அதிகமாய்ப்  பெருகிற்று.  {Rom  5:20}

 

ஆதலால்  பாவம்  மரணத்துக்கு  ஏதுவாக  ஆண்டுகொண்டதுபோல,  கிருபையானது  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  மூலமாய்  நீதியினாலே  நித்தியஜீவனுக்கு  ஏதுவாக  ஆண்டுகொண்டது.  {Rom  5:21}

 

ஆகையால்  என்னசொல்லுவோம்?  கிருபை  பெருகும்படிக்குப்  பாவத்திலே  நிலைநிற்கலாம்  என்று  சொல்லுவோமா?  கூடாதே.  {Rom  6:1}

 

பாவத்துக்கு  மரித்த  நாம்  இனி  அதிலே  எப்படிப்  பிழைப்போம்?  {Rom  6:2}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்ளாக<Jesus  Christ>  ஞானஸ்நானம்  பெற்ற  நாமனைவரும்  அவருடைய  மரணத்துக்குள்ளாக  ஞானஸ்நானம்  பெற்றதை  அறியாமலிருக்கிறீர்களா?  {Rom  6:3}

 

மேலும்  பிதாவின்  மகிமையினாலே  கிறிஸ்து<Christ>  மரித்தோரிலிருந்து  எழுப்பப்பட்டதுபோல,  நாமும்  புதிதான  ஜீவனுள்ளவர்களாய்  நடந்துகொள்ளும்படிக்கு,  அவருடைய  மரணத்திற்குள்ளாக்கும்  ஞானஸ்நானத்தினாலே  கிறிஸ்துவுடனேகூட<Christ>  அடக்கம்பண்ணப்பட்டோம்.  {Rom  6:4}

 

ஆதலால்  அவருடைய  மரணத்தின்  சாயலில்  நாம்  இணைக்கப்பட்டவர்களானால்,  அவர்  உயிர்த்தெழுதலின்  சாயலிலும்  இணைக்கப்பட்டிருப்போம்.  {Rom  6:5}

 

நாம்  இனிப்  பாவத்துக்கு  ஊழியஞ்  செய்யாதபடிக்கு,  பாவசரீரம்  ஒழிந்துபோகும்பொருட்டாக,  நம்முடைய  பழைய  மனுஷன்  அவரோடேகூடச்  சிலுவையில்  அறையப்பட்டதென்று  அறிந்திருக்கிறோம்.  {Rom  6:6}

 

மரித்தவன்  பாவத்துக்கு  நீங்கி  விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.  {Rom  6:7}

 

ஆகையால்  கிறிஸ்துவுடனேகூட<Christ>  நாம்  மரித்தோமானால்,  அவருடனேகூடப்  பிழைத்தும்  இருப்போம்  என்று  நம்புகிறோம்.  {Rom  6:8}

 

மரித்தோரிலிருந்து  எழுந்த  கிறிஸ்து<Christ>  இனி  மரிப்பதில்லையென்று  அறிந்திருக்கிறோம்;  மரணம்  இனி  அவரை  ஆண்டுகொள்வதில்லை.  {Rom  6:9}

 

அவர்  மரித்தது,  பாவத்திற்கென்று  ஒரேதரம்  மரித்தார்;  அவர்  பிழைத்திருக்கிறது,  தேவனுக்கென்று  பிழைத்திருக்கிறார்.  {Rom  6:10}

 

அப்படியே  நீங்களும்,  உங்களைப்  பாவத்திற்கு  மரித்தவர்களாகவும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்<Jesus  Christ>  தேவனுக்கென்று  பிழைத்திருக்கிறவர்களாகவும்  எண்ணிக்கொள்ளுங்கள்.  {Rom  6:11}

 

ஆகையால்,  நீங்கள்  சரீர  இச்சைகளின்படி  பாவத்திற்குக்  கீழ்ப்படியத்தக்கதாக,  சாவுக்கேதுவான  உங்கள்  சரீரத்தில்  பாவம்  ஆளாதிருப்பதாக.  {Rom  6:12}

 

நீங்கள்  உங்கள்  அவயவங்களை  அநீதியின்  ஆயுதங்களாகப்  பாவத்திற்கு  ஒப்புக்கொடாமல்,  உங்களை  மரித்தோரிலிருந்து  பிழைத்திருக்கிறவர்களாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்து,  உங்கள்  அவயவங்களை  நீதிக்குரிய  ஆயுதங்களாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுங்கள்.  {Rom  6:13}

 

நீங்கள்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டிராமல்  கிருபைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறபடியால்,  பாவம்  உங்களை  மேற்கொள்ளமாட்டாது.  {Rom  6:14}

 

இதினால்  என்ன?  நாம்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டிராமல்  கிருபைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறபடியால்,  பாவஞ்செய்யலாமா?  கூடாதே.  {Rom  6:15}

 

மரணத்துக்கேதுவான  பாவத்துக்கானாலும்,  நீதிக்கேதுவான  கீழ்ப்படிதலுக்கானாலும்,  எதற்குக்  கீழ்ப்படியும்படி  உங்களை  அடிமைகளாக  ஒப்புக்கொடுக்கிறீர்களோ,  அதற்கே  கீழ்ப்படிகிற  அடிமைகளாயிருக்கிறீர்களென்று  அறியீர்களா?  {Rom  6:16}

 

முன்னே  நீங்கள்  பாவத்திற்கு  அடிமைகளாயிருந்தும்,  இப்பொழுது  உங்களுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  உபதேச  சட்டத்திற்கு  நீங்கள்  மனப்பூர்வமாய்க்  கீழ்ப்படிந்ததினாலே  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  {Rom  6:17}

 

பாவத்தினின்று  நீங்கள்  விடுதலையாக்கப்பட்டு,  நீதிக்கு  அடிமைகளானீர்கள்.  {Rom  6:18}

 

உங்கள்  மாம்ச  பலவீனத்தினிமித்தம்  மனுஷர்  பேசுகிறபிரகாரமாய்ப்  பேசுகிறேன்.  அக்கிரமத்தை  நடப்பிக்கும்படி  முன்னே  நீங்கள்  உங்கள்  அவயவங்களை  அசுத்தத்திற்கும்  அக்கிரமத்திற்கும்  அடிமைகளாக  ஒப்புக்கொடுத்ததுபோல,  இப்பொழுது  பரிசுத்தமானதை  நடப்பிக்கும்படி  உங்கள்  அவயவங்களை  நீதிக்கு  அடிமைகளாக  ஒப்புக்கொடுங்கள்.  {Rom  6:19}

 

பாவத்திற்கு  நீங்கள்  அடிமைகளாயிருந்த  காலத்தில்  நீதிக்கு  நீங்கினவர்களாயிருந்தீர்கள்.  {Rom  6:20}

 

இப்பொழுது  உங்களுக்கு  வெட்கமாகத்  தோன்றுகிற  காரியங்களினாலே  அக்காலத்தில்  உங்களுக்கு  என்ன  பலன்  கிடைத்தது?  அவைகளின்  முடிவு  மரணமே.  {Rom  6:21}

 

இப்பொழுது  நீங்கள்  பாவத்தினின்று  விடுதலையாக்கப்பட்டு,  தேவனுக்கு  அடிமைகளானதினால்,  பரிசுத்தமாகுதல்  உங்களுக்குக்  கிடைக்கும்  பலன்,  முடிவோ  நித்தியஜீவன்.  {Rom  6:22}

 

பாவத்தின்  சம்பளம்  மரணம்;  தேவனுடைய  கிருபைவரமோ  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினால்<Jesus  Christ>  உண்டான  நித்தியஜீவன்.  {Rom  6:23}

 

நியாயப்பிரமாணத்தை  அறிந்திருக்கிறவர்களுடனே  பேசுகிறேன்.  சகோதரரே,  ஒரு  மனுஷன்  உயிரோடிருக்குமளவும்  நியாயப்பிரமாணம்  அவனை  ஆளுகிறதென்று  அறியாமலிருக்கிறீர்களா?  {Rom  7:1}

 

அதெப்படியென்றால்,  புருஷனையுடைய  ஸ்திரீ  தன்  புருஷன்  உயிரோடிருக்குமளவும்  நியாயப்பிரமாணத்தின்படியே  அவனுடைய  நிபந்தனைக்கு  உட்பட்டிருக்கிறாள்;  புருஷன்  மரித்த  பின்பு  புருஷனைப்பற்றிய  பிரமாணத்தினின்று  விடுதலையாயிருக்கிறாள்.  {Rom  7:2}

 

ஆகையால்,  புருஷன்  உயிரோடிருக்கையில்  அவள்  வேறொரு  புருஷனை  விவாகம்பண்ணினால்  விபசாரியென்னப்படுவாள்;  புருஷன்  மரித்தபின்பு  அவள்  அந்தப்  பிரமாணத்தினின்று  விடுதலையானபடியால்,  வேறொரு  புருஷனை  விவாகம்பண்ணினாலும்  விபசாரியல்ல.  {Rom  7:3}

 

அப்படிப்போல,  என்  சகோதரரே,  நீங்கள்  மரித்தோரிலிருந்து  எழுந்த  கிறிஸ்து<Christ>  என்னும்  வேறொருவருடையவர்களாகி,  தேவனுக்கென்று  கனிகொடுக்கும்படி  கிறிஸ்துவின்<Christ>  சரீரத்தினாலே  நியாயப்பிரமாணத்துக்கு  மரித்தவர்களானீர்கள்.  {Rom  7:4}

 

நாம்  மாம்சத்திற்கு  உட்பட்டிருந்த  காலத்தில்  நியாயப்பிரமாணத்தினாலே  தோன்றிய  பாவ  இச்சைகள்  மரணத்திற்கு  ஏதுவான  கனிகளைக்  கொடுக்கத்தக்கதாக  நம்முடைய  அவயவங்களிலே  பெலன்செய்தது.  {Rom  7:5}

 

இப்பொழுதோ  நாம்  பழமையான  எழுத்தின்படியல்ல,  புதுமையான  ஆவியின்படி  ஊழியஞ்செய்யத்தக்கதாக,  நம்மைக்  கட்டியிருந்த  நியாயப்பிரமாணத்துக்கு  நாம்  மரித்தவர்களாகி,  அதினின்று  விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.  {Rom  7:6}

 

ஆகையால்  என்ன  சொல்லுவோம்?  நியாயப்பிரமாணம்  பாவமோ?  அல்லவே.  பாவம்  இன்னதென்று  நியாயப்பிரமாணத்தினால்  நான்  அறிந்தேனேயன்றி  மற்றப்படி  அறியவில்லை;  இச்சியாதிருப்பாயாக  என்று  நியாயப்பிரமாணம்  சொல்லாதிருந்தால்,  இச்சை  பாவம்  என்று  நான்  அறியாமலிருப்பேனே.  {Rom  7:7}

 

பாவமானது  கற்பனையினாலே  சமயம்  பெற்றுச்  சகலவித  இச்சைகளையும்  என்னில்  நடப்பித்தது.  நியாயப்பிரமாணம்  இல்லாவிட்டால்  பாவம்  செத்ததாயிருக்குமே.  {Rom  7:8}

 

முன்னே  நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது  நான்  ஜீவனுள்ளவனாயிருந்தேன்;  கற்பனை  வந்தபோது  பாவம்  உயிர்கொண்டது,  நான்  மரித்தவனானேன்.  {Rom  7:9}

 

இப்படியிருக்க,  ஜீவனுக்கேதுவான  கற்பனையே  எனக்கு  மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.  {Rom  7:10}

 

பாவமானது  கற்பனையினாலே  சமயம்பெற்று,  என்னை  வஞ்சித்து,  அதினாலே  என்னைக்  கொன்றது.  {Rom  7:11}

 

ஆகையால்  நியாயப்பிரமாணம்  பரிசுத்தமுள்ளதுதான்,  கற்பனையும்  பரிசுத்தமாயும்  நீதியாயும்  நன்மையாயும்  இருக்கிறது.  {Rom  7:12}

 

இப்படியிருக்க,  நன்மையானது  எனக்கு  மரணமாயிற்றோ?  அப்படியல்ல;  பாவமே  எனக்கு  மரணமாயிற்று;  பாவம்  கற்பனையினாலே  மிகுந்த  பாவமுள்ளதாகும்படிக்கும்,  அது  நன்மையானதைக்  கொண்டு  எனக்கு  மரணத்தை  உண்டாக்கினதினாலே,  பாவமாகவே  விளங்கும்படிக்கும்  அப்படியாயிற்று.  {Rom  7:13}

 

மேலும்,  நமக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நியாயப்பிரமாணம்  ஆவிக்குரியதாயிருக்கிறது,  நானோ  பாவத்துக்குக்  கீழாக  விற்கப்பட்டு,  மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.  {Rom  7:14}

 

எப்படியெனில்,  நான்  செய்கிறது  எனக்கே  சம்மதியில்லை;  நான்  விரும்புகிறதைச்  செய்யாமல்,  நான்  வெறுக்கிறதையே  செய்கிறேன்.  {Rom  7:15}

 

இப்படி  நான்  விரும்பாததைச்  செய்கிறவனாயிருக்க,  நியாயப்பிரமாணம்  நல்லதென்று  ஒத்துக்கொள்ளுகிறேனே.  {Rom  7:16}

 

ஆதலால்  நான்  அல்ல,  எனக்குள்  வாசமாயிருக்கிற  பாவமே  அப்படிச்  செய்கிறது.  {Rom  7:17}

 

அதெப்படியெனில்,  என்னிடத்தில்,  அதாவது,  என்  மாம்சத்தில்,  நன்மை  வாசமாயிருக்கிறதில்லையென்று  நான்  அறிந்திருக்கிறேன்;  நன்மைசெய்ய  வேண்டுமென்கிற  விருப்பம்  என்னிடத்திலிருக்கிறது,  நன்மைசெய்வதோ  என்னிடத்திலில்லை.  {Rom  7:18}

 

ஆதலால்  நான்  விரும்புகிற  நன்மையைச்  செய்யாமல்,  விரும்பாத  தீமையையே  செய்கிறேன்.  {Rom  7:19}

 

அந்தப்படி  நான்  விரும்பாததை  நான்  செய்தால்,  நான்  அல்ல,  எனக்குள்ளே  வாசமாயிருக்கிற  பாவமே  அப்படிச்  செய்கிறது.  {Rom  7:20}

 

ஆனபடியால்  நன்மைசெய்ய  விரும்புகிற  என்னிடத்தில்  தீமையுண்டென்கிற  ஒரு  பிரமாணத்தைக்  காண்கிறேன்.  {Rom  7:21}

 

உள்ளான  மனுஷனுக்கேற்றபடி  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தின்மேல்  பிரியமாயிருக்கிறேன்.  {Rom  7:22}

 

ஆகிலும்  என்  மனதின்  பிரமாணத்துக்கு  விரோதமாய்ப்  போராடுகிற  வேறொரு  பிரமாணத்தை  என்  அவயவங்களில்  இருக்கக்  காண்கிறேன்;  அது  என்  அவயவங்களில்  உண்டாயிருக்கிற  பாவப்பிரமாணத்துக்கு  என்னைச்  சிறையாக்கிக்  கொள்ளுகிறது.  {Rom  7:23}

 

நிர்ப்பந்தமான  மனுஷன்  நான்!  இந்த  மரணசரீரத்தினின்று  யார்  என்னை  விடுதலையாக்குவார்?  {Rom  7:24}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்த்<Jesus  Christ>  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  ஆதலால்  நானே  என்  மனதினாலே  தேவனுடைய  நியாயப்பிரமாணத்துக்கும்,  மாம்சத்தினாலேயோ  பாவப்பிரமாணத்துக்கும்  ஊழியஞ்செய்கிறேன்.  {Rom  7:25}

 

ஆனபடியால்,  கிறிஸ்து  இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து<Christ  Jesus>,  மாம்சத்தின்படி  நடவாமல்  ஆவியின்படியே  நடக்கிறவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பில்லை.  {Rom  8:1}

 

கிறிஸ்து  இயேசுவினாலே<Christ  Jesus>  ஜீவனுடைய  ஆவியின்  பிரமாணம்  என்னைப்  பாவம்  மரணம்  என்பவைகளின்  பிரமாணத்தினின்று  விடுதலையாக்கிற்றே.  {Rom  8:2}

 

அதெப்படியெனில்,  மாம்சத்தினாலே  பலவீனமாயிருந்த  நியாயப்பிரமாணம்  செய்யக்கூடாததைத்  தேவனே  செய்யும்படிக்கு,  தம்முடைய  குமாரனைப்  பாவமாம்சத்தின்  சாயலாகவும்,  பாவத்தைப்  போக்கும்  பலியாகவும்  அனுப்பி,  மாம்சத்திலே  பாவத்தை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்த்தார்.  {Rom  8:3}

 

மாம்சத்தின்படி  நடவாமல்  ஆவியின்படி  நடக்கிற  நம்மிடத்தில்  நியாயப்பிரமாணத்தின்  நீதி  நிறைவேறும்படிக்கே  அப்படிச்  செய்தார்.  {Rom  8:4}

 

அன்றியும்  மாம்சத்தின்படி  நடக்கிறவர்கள்  மாம்சத்துக்குரியவைகளைச்  சிந்திக்கிறார்கள்;  ஆவியின்படி  நடக்கிறவர்கள்  ஆவிக்குரியவைகளைச்  சிந்திக்கிறார்கள்.  {Rom  8:5}

 

மாம்சசிந்தை  மரணம்;  ஆவியின்  சிந்தையோ  ஜீவனும்  சமாதானமுமாம்.  {Rom  8:6}

 

எப்படியென்றால்,  மாம்சசிந்தை  தேவனுக்கு  விரோதமான  பகை;  அது  தேவனுடைய  நியாயப்பிரமாணத்துக்குக்  கீழ்ப்படியாமலும்,  கீழ்ப்படியக்கூடாமலும்  இருக்கிறது.  {Rom  8:7}

 

மாம்சத்துக்குட்பட்டவர்கள்  தேவனுக்குப்  பிரியமாயிருக்கமாட்டார்கள்.  {Rom  8:8}

 

தேவனுடைய  ஆவி  உங்களில்  வாசமாயிருந்தால்,  நீங்கள்  மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல்  ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்.  கிறிஸ்துவின்<Christ>  ஆவியில்லாதவன்  அவருடையவனல்ல.  {Rom  8:9}

 

மேலும்  கிறிஸ்து<Christ>  உங்களிலிருந்தால்  சரீரமானது  பாவத்தினிமித்தம்  மரித்ததாயும்,  ஆவியானது  நீதியினிமித்தம்  ஜீவனுள்ளதாயும்  இருக்கும்.  {Rom  8:10}

 

அன்றியும்  இயேசுவை<Jesus>  மரித்தோரிலிருந்து  எழுப்பினவருடைய  ஆவி  உங்களில்  வாசமாயிருந்தால்,  கிறிஸ்துவை<Christ>  மரித்தோரிலிருந்து  எழுப்பினவர்  உங்களில்  வாசமாயிருக்கிற  தம்முடைய  ஆவியினாலே  சாவுக்கேதுவான  உங்கள்  சரீரங்களையும்  உயிர்ப்பிப்பார்.  {Rom  8:11}

 

ஆகையால்  சகோதரரே,  மாம்சத்தின்படி  பிழைப்பதற்கு  நாம்  மாம்சத்துக்குக்  கடனாளிகளல்ல.  {Rom  8:12}

 

மாம்சத்தின்படி  பிழைத்தால்  சாவீர்கள்;  ஆவியினாலே  சரீரத்தின்  செய்கைகளை  அழித்தால்  பிழைப்பீர்கள்.  {Rom  8:13}

 

மேலும்  எவர்கள்  தேவனுடைய  ஆவியினாலே  நடத்தப்படுகிறார்களோ,  அவர்கள்  தேவனுடைய  புத்திரராயிருக்கிறார்கள்.  {Rom  8:14}

 

அந்தப்படி,  திரும்பவும்  பயப்படுகிறதற்கு  நீங்கள்  அடிமைத்தனத்தின்  ஆவியைப்  பெறாமல்,  அப்பா  பிதாவே,  என்று  கூப்பிடப்பண்ணுகிற  புத்திரசுவிகாரத்தின்  ஆவியைப்  பெற்றீர்கள்.  {Rom  8:15}

 

நாம்  தேவனுடைய  பிள்ளைகளாயிருக்கிறோமென்று  ஆவியானவர்தாமே  நம்முடைய  ஆவியுடனேகூடச்  சாட்சிகொடுக்கிறார்.  {Rom  8:16}

 

நாம்  பிள்ளைகளானால்  சுதந்தரருமாமே;  தேவனுடைய  சுதந்தரரும்,  கிறிஸ்துவுக்கு<Christ>  உடன்  சுதந்தரருமாமே;  கிறிஸ்துவுடனேகூட<Christ>  நாம்  மகிமைப்படும்படிக்கு  அவருடனேகூடப்  பாடுபட்டால்  அப்படியாகும்.  {Rom  8:17}

 

ஆதலால்  இக்காலத்துப்  பாடுகள்  இனி  நம்மிடத்தில்  வெளிப்படும்  மகிமைக்கு  ஒப்பிடத்தக்கவைகள்  அல்லவென்று  எண்ணுகிறேன்.  {Rom  8:18}

 

மேலும்  தேவனுடைய  புத்திரர்  வெளிப்படுவதற்குச்  சிருஷ்டியானது  மிகுந்த  ஆவலோடே  காத்துக்கொண்டிருக்கிறது.  {Rom  8:19}

 

அதேனென்றால்  சிருஷ்டியானது  அழிவுக்குரிய  அடிமைத்தனத்தினின்று  விடுதலையாக்கப்பட்டு,  தேவனுடைய  பிள்ளைகளுக்குரிய  மகிமையான  சுயாதீனத்தைப்  பெற்றுக்கொள்ளும்  என்கிற  நம்பிக்கையோடே,  {Rom  8:20}

 

அந்தச்  சிருஷ்டியானது  சுய  இஷ்டத்தினாலே  அல்ல,  கீழ்ப்படுத்தினவராலேயே  மாயைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறது.  {Rom  8:21}

 

ஆகையால்  நமக்குத்  தெரிந்திருக்கிறபடி,  இதுவரைக்கும்  சர்வ  சிருஷ்டியும்  ஏகமாய்த்  தவித்துப்  பிரசவவேதனைப்படுகிறது.  {Rom  8:22}

 

அதுவுமல்லாமல்,  ஆவியின்  முதற்பலன்களைப்  பெற்ற  நாமுங்கூட  நம்முடைய  சரீர  மீட்பாகிய  புத்திரசுவிகாரம்  வருகிறதற்குக்  காத்திருந்து,  நமக்குள்ளே  தவிக்கிறோம்.  {Rom  8:23}

 

அந்த  நம்பிக்கையினாலே  நாம்  இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.  காணப்படுகிறதை  நம்புகிறது  நம்பிக்கையல்ல;  ஒருவன்  தான்  காண்கிறதை  நம்பவேண்டுவதென்ன?  {Rom  8:24}

 

நாம்  காணாததை  நம்பினோமாகில்,  அது  வருகிறதற்குப்  பொறுமையோடே  காத்திருப்போம்.  {Rom  8:25}

 

அந்தப்படியே  ஆவியானவரும்  நமது  பலவீனங்களில்  நமக்கு  உதவிசெய்கிறார்.  நாம்  ஏற்றபடி  வேண்டிக்கொள்ள  வேண்டியதின்னதென்று  அறியாமலிருக்கிறபடியால்,  ஆவியானவர்தாமே  வாக்குக்கடங்காத  பெருமூச்சுகளோடு  நமக்காக  வேண்டுதல்செய்கிறார்.  {Rom  8:26}

 

ஆவியானவர்  தேவனுடைய  சித்தத்தின்படியே  பரிசுத்தவான்களுக்காக  வேண்டுதல்  செய்கிறபடியால்,  இருதயங்களை  ஆராய்ந்துபார்க்கிறவர்  ஆவியின்  சிந்தை  இன்னதென்று  அறிவார்.  {Rom  8:27}

 

அன்றியும்,  அவருடைய  தீர்மானத்தின்படி  அழைக்கப்பட்டவர்களாய்  தேவனிடத்தில்  அன்புகூருகிறவர்களுக்குச்  சகலமும்  நன்மைக்கு  ஏதுவாக  நடக்கிறதென்று  அறிந்திருக்கிறோம்.  {Rom  8:28}

 

தம்முடைய  குமாரன்  அநேக  சகோதரருக்குள்ளே  முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு,  தேவன்  எவர்களை  முன்னறிந்தாரோ  அவர்களைத்  தமது  குமாரனுடைய  சாயலுக்கு  ஒப்பாயிருப்பதற்கு  முன்குறித்திருக்கிறார்;  {Rom  8:29}

 

எவர்களை  முன்குறித்தாரோ  அவர்களை  அழைத்துமிருக்கிறார்;  எவர்களை  அழைத்தாரோ  அவர்களை  நீதிமான்களாக்கியுமிருக்கிறார்;  எவர்களை  நீதிமான்களாக்கினாரோ  அவர்களை  மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.  {Rom  8:30}

 

இவைகளைக்குறித்து  நாம்  என்ன  சொல்லுவோம்?  தேவன்  நம்முடைய  பட்சத்திலிருந்தால்  நமக்கு  விரோதமாயிருப்பவன்  யார்?  {Rom  8:31}

 

தம்முடைய  சொந்தக்குமாரனென்றும்  பாராமல்  நம்மெல்லாருக்காகவும்  அவரை  ஒப்புக்கொடுத்தவர்,  அவரோடேகூட  மற்ற  எல்லாவற்றையும்  நமக்கு  அருளாதிருப்பதெப்படி?  {Rom  8:32}

 

தேவன்  தெரிந்துகொண்டவர்கள்மேல்  குற்றஞ்சாட்டுகிறவன்  யார்?  தேவனே  அவர்களை  நீதிமான்களாக்குகிறவர்.  {Rom  8:33}

 

ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறவன்  யார்?  கிறிஸ்துவே<Christ>  மரித்தவர்;  அவரே  எழுந்துமிருக்கிறவர்;  அவரே  தேவனுடைய  வலதுபாரிசத்திலும்  இருக்கிறவர்;  நமக்காக  வேண்டுதல்செய்கிறவரும்  அவரே.  {Rom  8:34}

 

உமதுநிமித்தம்  எந்நேரமும்  கொல்லப்படுகிறோம்,  அடிக்கப்படும்  ஆடுகளைப்போல  எண்ணப்படுகிறோம்  என்று  எழுதியிருக்கிறபடி  நேரிட்டாலும்,  {Rom  8:35}

 

கிறிஸ்துவின்<Christ>  அன்பைவிட்டு  நம்மைப்  பிரிப்பவன்  யார்?  உபத்திரவமோ,  வியாகுலமோ,  துன்பமோ,  பசியோ,  நிர்வாணமோ,  நாசமோசமோ,  பட்டயமோ?  {Rom  8:36}

 

இவையெல்லாவற்றிலேயும்  நாம்  நம்மில்  அன்புகூருகிறவராலே  முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.  {Rom  8:37}

 

மரணமானாலும்,  ஜீவனானாலும்,  தேவதூதர்களானாலும்,  அதிகாரங்களானாலும்,  வல்லமைகளானாலும்,  நிகழ்காரியங்களானாலும்,  வருங்காரியங்களானாலும்,  {Rom  8:38}

 

உயர்வானாலும்,  தாழ்வானாலும்,  வேறெந்தச்  சிருஷ்டியானாலும்  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவிலுள்ள<Christ  Jesus>  தேவனுடைய  அன்பைவிட்டு  நம்மைப்  பிரிக்கமாட்டாதென்று  நிச்சயித்திருக்கிறேன்.  {Rom  8:39}

 

எனக்கு  மிகுந்த  துக்கமும்  இடைவிடாத  மனவேதனையும்  உண்டாயிருக்கிறது;  {Rom  9:1}

 

நான்  சொல்லுகிறது  பொய்யல்ல,  கிறிஸ்துவுக்குள்<Christ>  உண்மையைச்  சொல்லுகிறேன்  என்று  பரிசுத்தஆவிக்குள்  என்  மனச்சாட்சியும்  எனக்குச்  சாட்சியாயிருக்கிறது.  {Rom  9:2}

 

மாம்சத்தின்படி  என்  இனத்தாராகிய  என்  சகோதரருக்குப்  பதிலாக  நானே  கிறிஸ்துவைவிட்டுச்<Christ>  சபிக்கப்பட்டவனாக  வேண்டுமென்று  விரும்புவேனே.  {Rom  9:3}

 

அவர்கள்  இஸ்ரவேலரே<Israelites>;  புத்திரசுவிகாரமும்,  மகிமையும்,  உடன்படிக்கைகளும்,  நியாயப்பிரமாணமும்,  தேவாராதனையும்,  வாக்குத்தத்தங்களும்  அவர்களுடையவைகளே;  {Rom  9:4}

 

பிதாக்கள்  அவர்களுடையவர்களே;  மாம்சத்தின்படி  கிறிஸ்துவும்<Christ>  அவர்களில்  பிறந்தாரே,  இவர்  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்பட்ட  சர்வத்திற்கும்  மேலான  தேவன்.  ஆமென்.  {Rom  9:5}

 

தேவவசனம்  அவமாய்ப்  போயிற்றென்று  சொல்லக்கூடாது;  ஏனென்றால்,  இஸ்ரவேல்<Israel>  வம்சத்தார்  எல்லாரும்  இஸ்ரவேலரல்லவே<Israel>.  {Rom  9:6}

 

அவர்கள்  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியாரானாலும்  எல்லாரும்  பிள்ளைகளல்லவே;  ஈசாக்கினிடத்தில்<Isaac>  உன்  சந்ததி  விளங்கும்  என்று  சொல்லியிருக்கிறதே.  {Rom  9:7}

 

அதெப்படியென்றால்,  மாம்சத்தின்படி  பிள்ளைகளானவர்கள்  தேவனுடைய  பிள்ளைகளல்ல,  வாக்குத்தத்தத்தின்படி  பிள்ளைகளானவர்களே  அந்தச்  சந்ததி  என்றெண்ணப்படுகிறார்கள்.  {Rom  9:8}

 

அந்த  வாக்குத்தத்தமான  வார்த்தையாவது:  குறித்த  காலத்திலே  வருவேன்,  அப்பொழுது  சாராள்<Sarah>  ஒரு  குமாரனைப்  பெறுவாள்  என்பதே.  {Rom  9:9}

 

இதுவுமல்லாமல்,  நம்முடைய  பிதாவாகிய  ஈசாக்கு<Isaac>  என்னும்  ஒருவனாலே  ரெபெக்காள்<Rebecca>  கர்ப்பவதியானபோது,  {Rom  9:10}

 

பிள்ளைகள்  இன்னும்  பிறவாமலும்,  நல்வினை  தீவினை  ஒன்றும்  செய்யாமலுமிருக்கையில்,  தேவனுடைய  தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற  அவருடைய  தீர்மானம்  கிரியைகளினாலே  நிலைநிற்காமல்  அழைக்கிறவராலே  நிலைநிற்கும்படிக்கு,  {Rom  9:11}

 

மூத்தவன்  இளையவனுக்கு  ஊழியஞ்செய்வான்  என்று  அவளுடனே  சொல்லப்பட்டது.  {Rom  9:12}

 

அப்படியே,  யாக்கோபைச்<Jacob>  சிநேகித்து,  ஏசாவை<Esau>  வெறுத்தேன்  என்றும்  எழுதியிருக்கிறது.  {Rom  9:13}

 

ஆகையால்  நாம்  என்ன  சொல்லுவோம்?  தேவனிடத்திலே  அநீதி  உண்டென்று  சொல்லலாமா?  சொல்லக்கூடாதே.  {Rom  9:14}

 

அவர்  மோசேயை<Moses>  நோக்கி:  எவன்மேல்  இரக்கமாயிருக்கச்  சித்தமாயிருப்பேனோ  அவன்மேல்  இரக்கமாயிருப்பேன்,  எவன்மேல்  உருக்கமாயிருக்கச்  சித்தமாயிருப்பேனோ  அவன்மேல்  உருக்கமாயிருப்பேன்  என்றார்.  {Rom  9:15}

 

ஆகையால்  விரும்புகிறவனாலும்  அல்ல,  ஓடுகிறவனாலும்  அல்ல,  இரங்குகிற  தேவனாலேயாம்.  {Rom  9:16}

 

மேலும்  என்னுடைய  வல்லமையை  உன்னிடத்தில்  காண்பிக்கும்படியாகவும்,  என்னுடைய  நாமம்  பூமியில்  எங்கும்  பிரஸ்தாபமாகும்படியாகவும்,  உன்னை  நிலைநிறுத்தினேன்  என்று  பார்வோனுடனே<Pharaoh>  சொன்னதாக  வேதத்தில்  சொல்லியிருக்கிறது.  {Rom  9:17}

 

ஆதலால்  எவன்மேல்  இரக்கமாயிருக்கச்  சித்தமாயிருக்கிறாரோ  அவன்மேல்  இரக்கமாயிருக்கிறார்,  எவனைக்  கடினப்படுத்தச்  சித்தமாயிருக்கிறாரோ  அவனைக்  கடினப்படுத்துகிறார்.  {Rom  9:18}

 

இப்படியானால்,  அவர்  இன்னும்  ஏன்  குற்றம்பிடிக்கிறார்?  அவர்  சித்தத்திற்கு  எதிர்த்துநிற்பவன்  யார்?  என்று  என்னுடனே  சொல்லுவாய்.  {Rom  9:19}

 

அப்படியானால்,  மனுஷனே,  தேவனோடு  எதிர்த்துத்  தர்க்கிக்கிற  நீ  யார்?  உருவாக்கப்பட்ட  வஸ்து  உருவாக்கினவனை  நோக்கி:  நீ  என்னை  ஏன்  இப்படி  உண்டாக்கினாயென்று  சொல்லலாமா?  {Rom  9:20}

 

மிதியிட்ட  ஒரே  களிமண்ணினாலே  குயவன்  ஒரு  பாத்திரத்தைக்  கனமான  காரியத்துக்கும்,  ஒரு  பாத்திரத்தைக்  கனவீனமான  காரியத்துக்கும்  பண்ணுகிறதற்கு  மண்ணின்மேல்  அவனுக்கு  அதிகாரம்  இல்லையோ?  {Rom  9:21}

 

தேவன்  தமது  கோபத்தைக்  காண்பிக்கவும்,  தமது  வல்லமையைத்  தெரிவிக்கவும்,  {Rom  9:22}

 

தாம்  மகிமைக்காக  எத்தனமாக்கின  கிருபாபாத்திரங்கள்மேல்  தம்முடைய  மகிமையின்  ஐசுவரியத்தைத்  தெரியப்படுத்தவும்  சித்தமாய்,  அழிவுக்கு  எத்தனமாக்கப்பட்ட  கோபாக்கினைப்  பாத்திரங்கள்மேல்  மிகவும்  நீடிய  சாந்தத்தோடே  பொறுமையாயிருந்தாரானால்  உனக்கென்ன?  {Rom  9:23}

 

அவர்  யூதரிலிருந்துமாத்திரமல்ல<Jews>,  புறஜாதிகளிலுமிருந்து  நம்மை  அழைத்திருக்கிறாரே.  {Rom  9:24}

 

அந்தப்படி:  எனக்கு  ஜனங்களல்லாதவர்களை  என்னுடைய  ஜனங்கள்  என்றும்,  சிநேகிக்கப்படாதிருந்தவளைச்  சிநேகிக்கப்பட்டவள்  என்றும்  சொல்லி  அழைப்பேன்.  {Rom  9:25}

 

நீங்கள்  என்னுடைய  ஜனங்களல்லவென்று  அவர்களுக்குச்  சொல்லப்பட்ட  இடத்திலே  அவர்கள்  ஜீவனுள்ள  தேவனுடைய  பிள்ளைகள்  என்னப்படுவார்கள்  என்று  ஓசியாவின்<Osee>  தீர்க்கதரிசனத்தில்  சொல்லியிருக்கிறது.  {Rom  9:26}

 

அல்லாமலும்  இஸ்ரவேல்<Israel>  புத்திரருடைய  இலக்கம்  சமுத்திரத்தின்  மணலத்தனையாயிருந்தாலும்,  மீதியாயிருப்பவர்கள்  மாத்திரம்  இரட்சிக்கப்படுவார்கள்  என்றும்;  {Rom  9:27}

 

அவர்  நீதியோடே  சீக்கிரமாய்த்  தம்முடைய  காரியத்தை  நிறைவேற்றுவார்;  கர்த்தர்  பூமியிலே  சீக்கிரமாகவே  காரியத்தை  நிறைவேற்றி  முடிப்பார்  என்றும்  ஏசாயா<Esaias>  இஸ்ரவேலரைக்குறித்துச்<Israel>  சொல்லுகிறான்.  {Rom  9:28}

 

அல்லாமலும்  ஏசாயா<Esaias>  முன்னே  சொன்னபடி:  சேனைகளின்  கர்த்தர்  நமக்குள்ளே  ஒரு  சந்ததியை  மீதியாக  வைக்காதிருந்தாரானால்  நாம்  சோதோமைப்போலாகி<Sodoma>  கொமோராவுக்கு<Gomorrha>  ஒத்திருப்போம்.  {Rom  9:29}

 

இப்படியிருக்க  நாம்  என்னசொல்லுவோம்?  நீதியைத்  தேடாத  புறஜாதியார்  நீதியை  அடைந்தார்கள்;  அது  விசுவாசத்தினாலாகும்  நீதியே.  {Rom  9:30}

 

நீதிப்பிரமாணத்தைத்  தேடின  இஸ்ரவேலரோ<Israel>  நீதிப்பிரமாணத்தை  அடையவில்லை.  {Rom  9:31}

 

என்னத்தினாலென்றால்,  அவர்கள்  விசுவாசத்தினாலே  அதைத்  தேடாமல்,  நியாயப்பிரமாணத்தின்  கிரியைகளினாலே  தேடினபடியால்  அதை  அடையவில்லை;  இடறுதற்கான  கல்லில்  இடறினார்கள்.  {Rom  9:32}

 

இதோ,  இடறுதற்கான  கல்லையும்,  தவறுதற்கான  கன்மலையையும்,  சீயோனில்<Sion>  வைக்கிறேன்;  அவரிடத்தில்  விசுவாசமாயிருப்பவன்  எவனோ  அவன்  வெட்கப்படுவதில்லை  என்று  எழுதியிருக்கிறபடியாயிற்று.  {Rom  9:33}

 

சகோதரரே,  இஸ்ரவேலர்<Israel>  இரட்சிக்கப்படவேண்டும்  என்பதே  என்  இருதயத்தின்  விருப்பமும்  நான்  தேவனை  நோக்கிச்  செய்யும்  விண்ணப்பமுமாயிருக்கிறது.  {Rom  10:1}

 

தேவனைப்பற்றி  அவர்களுக்கு  வைராக்கியமுண்டென்று  அவர்களைக்குறித்துச்  சாட்சிசொல்லுகிறேன்;  ஆகிலும்  அது  அறிவுக்கேற்ற  வைராக்கியமல்ல.  {Rom  10:2}

 

எப்படியென்றால்,  அவர்கள்  தேவநீதியை  அறியாமல்,  தங்கள்  சுயநீதியை  நிலைநிறுத்தத்  தேடுகிறபடியால்  தேவநீதிக்குக்  கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.  {Rom  10:3}

 

விசுவாசிக்கிற  எவனுக்கும்  நீதி  உண்டாகும்படியாகக்  கிறிஸ்து<Christ>  நியாயப்பிரமாணத்தின்  முடிவாயிருக்கிறார்.  {Rom  10:4}

 

மோசே<Moses>  நியாயப்பிரமாணத்தினாலாகும்  நீதியைக்குறித்து:  இவைகளைச்  செய்கிற  மனுஷன்  இவைகளால்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறான்.  {Rom  10:5}

 

விசுவாசத்தினாலாகும்  நீதியானது:  கிறிஸ்துவை<Christ>  இறங்கிவரப்பண்ணும்படி  பரலோகத்துக்கு  ஏறுகிறவன்  யார்?  {Rom  10:6}

 

அல்லது  கிறிஸ்துவை<Christ>  மரித்தோரிலிருந்து  ஏறிவரப்பண்ணும்படி  பாதாளத்துக்கு  இறங்குகிறவன்  யார்?  என்று  உன்  உள்ளத்திலே  சொல்லாதிருப்பாயாக  என்று  சொல்லுகிறதுமன்றி;  {Rom  10:7}

 

இந்த  வார்த்தை  உனக்குச்  சமீபமாய்  உன்  வாயிலும்  உன்  இருதயத்திலும்  இருக்கிறது  என்றும்  சொல்லுகிறது;  இந்த  வார்த்தை  நாங்கள்  பிரசங்கிக்கிற  விசுவாசத்தின்  வார்த்தையே.  {Rom  10:8}

 

என்னவென்றால்,  கர்த்தராகிய  இயேசுவை<Jesus>  நீ  உன்  வாயினாலே  அறிக்கையிட்டு,  தேவன்  அவரை  மரித்தோரிலிருந்து  எழுப்பினாரென்று  உன்  இருதயத்திலே  விசுவாசித்தால்  இரட்சிக்கப்படுவாய்.  {Rom  10:9}

 

நீதியுண்டாக  இருதயத்திலே  விசுவாசிக்கப்படும்,  இரட்சிப்புண்டாக  வாயினாலே  அறிக்கைபண்ணப்படும்.  {Rom  10:10}

 

அவரை  விசுவாசிக்கிறவன்  எவனோ  அவன்  வெட்கப்படுவதில்லையென்று  வேதம்  சொல்லுகிறது.  {Rom  10:11}

 

யூதனென்றும்<Jew>  கிரேக்கனென்றும்<Greek>  வித்தியாசமே  இல்லை;  எல்லாருக்குங்  கர்த்தரானவர்  தம்மைத்  தொழுதுகொள்ளுகிற  யாவருக்கும்  ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.  {Rom  10:12}

 

ஆதலால்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுகிற  எவனும்  இரட்சிக்கப்படுவான்.  {Rom  10:13}

 

அவரை  விசுவாசியாதவர்கள்  எப்படி  அவரைத்  தொழுதுகொள்ளுவார்கள்?  அவரைக்குறித்துக்  கேள்விப்படாதவர்கள்  எப்படி  விசுவாசிப்பார்கள்?  பிரசங்கிக்கிறவன்  இல்லாவிட்டால்  எப்படிக்  கேள்விப்படுவார்கள்?  {Rom  10:14}

 

அனுப்பப்படாவிட்டால்  எப்படிப்  பிரசங்கிப்பார்கள்?  சமாதானத்தைக்கூறி,  நற்காரியங்களைச்  சுவிசேஷமாய்  அறிவிக்கிறவர்களுடைய  பாதங்கள்  எவ்வளவு  அழகானவைகள்  என்று  எழுதியிருக்கிறதே.  {Rom  10:15}

 

ஆனாலும்  சுவிசேஷத்துக்கு  எல்லாரும்  கீழ்ப்படியவில்லை.  அதைக்குறித்து  ஏசாயா<Esaias>:  கர்த்தாவே,  எங்கள்  மூலமாய்க்  கேள்விப்பட்டதை  விசுவாசித்தவன்  யார்  என்று  சொல்லுகிறான்.  {Rom  10:16}

 

ஆதலால்  விசுவாசம்  கேள்வியினாலே  வரும்,  கேள்வி  தேவனுடைய  வசனத்தினாலே  வரும்.  {Rom  10:17}

 

இப்படியிருக்க,  அவர்கள்  கேள்விப்படவில்லையா  என்று  கேட்கிறேன்;  கேள்விப்பட்டார்கள்;  அவைகளின்  சத்தம்  பூமியெங்கும்  அவைகளின்  வசனங்கள்  பூச்சக்கரத்துக்  கடைசிவரைக்கும்  செல்லுகிறதே.  {Rom  10:18}

 

இஸ்ரவேலர்<Israel>  அதை  அறியவில்லையா  என்று  கேட்கிறேன்,  அறிந்தார்கள்.  முதலாவது,  மோசே<Moses>:  எனக்கு  ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு  நான்  உங்களுக்கு  எரிச்சல்  உண்டாக்குவேன்;  புத்தியீனமுள்ள  ஜனங்களாலே  உங்களுக்குக்  கோபமூட்டுவேன்  என்றான்.  {Rom  10:19}

 

அல்லாமலும்  ஏசாயா<Esaias>:  என்னைத்  தேடாதவர்களாலே  கண்டறியப்பட்டேன்,  என்னை  விசாரித்துக்  கேளாதவர்களுக்கு  வெளியரங்கமானேன்  என்று  தைரியங்கொண்டு  சொல்லுகிறான்.  {Rom  10:20}

 

இஸ்ரவேலரைக்குறித்தோ<Israel>:  கீழ்ப்படியாதவர்களும்  எதிர்த்துப்  பேசுகிறவர்களுமாயிருக்கிற  ஜனங்களிடத்திற்கு  நாள்முழுதும்  என்  கைகளை  நீட்டினேன்  என்று  அவன்  சொல்லியிருக்கிறான்.  {Rom  10:21}

 

இப்படியிருக்க,  தேவன்  தம்முடைய  ஜனங்களைத்  தள்ளிவிட்டாரோ  என்று  கேட்கிறேன்,  தள்ளிவிடவில்லையே;  நானும்  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியிலும்  பென்யமீன்<Benjamin>  கோத்திரத்திலும்  பிறந்த  இஸ்ரவேலன்<Israelite>.  {Rom  11:1}

 

தேவன்  தாம்  முன்னறிந்துகொண்ட  தம்முடைய  ஜனங்களைத்  தள்ளிவிடவில்லை.  எலியாவைக்குறித்துச்<Elias>  சொல்லிய  இடத்தில்,  வேதம்  சொல்லுகிறதை  அறியீர்களா?  அவன்  தேவனை  நோக்கி:  {Rom  11:2}

 

கர்த்தாவே,  உம்முடைய  தீர்க்கதரிசிகளை  அவர்கள்  கொலைசெய்து,  உம்முடைய  பலிபீடங்களை  இடித்துப்போட்டார்கள்;  நான்  ஒருவன்மாத்திரம்  மீதியாயிருக்கிறேன்,  என்  பிராணனையும்  வாங்கத்தேடுகிறார்களே  என்று  இஸ்ரவேலருக்கு<Israel>  விரோதமாய்  விண்ணப்பம்பண்ணினபோது,  {Rom  11:3}

 

அவனுக்கு  உண்டான  தேவஉத்தரவு  என்ன?  பாகாலுக்குமுன்பாக<Baal>  முழங்காற்படியிடாத  ஏழாயிரம்பேரை  எனக்காக  மீதியாக  வைத்தேன்  என்பதே.  {Rom  11:4}

 

அப்படிப்போல  இக்காலத்திலேயும்  கிருபையினாலே  உண்டாகும்  தெரிந்துகொள்ளுதலின்படி  ஒரு  பங்கு  மீதியாயிருக்கிறது.  {Rom  11:5}

 

அது  கிருபையினாலே  உண்டாயிருந்தால்  கிரியைகளினாலே  உண்டாயிராது;  அப்படியல்லவென்றால்,  கிருபையானது  கிருபையல்லவே.  அன்றியும்  அது  கிரியைகளினாலே  உண்டாயிருந்தால்  அது  கிருபையாயிராது;  அப்படியல்லவென்றால்,  கிரியையானது  கிரியையல்லவே.  {Rom  11:6}

 

அப்படியானால்  என்ன?  இஸ்ரவேலர்<Israel>  தேடுகிறதை  அடையாமலிருக்கிறார்கள்;  தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ  அதை  அடைந்திருக்கிறார்கள்;  மற்றவர்கள்  இன்றையத்தினம்வரைக்கும்  கடினப்பட்டிருக்கிறார்கள்.  {Rom  11:7}

 

கனநித்திரையின்  ஆவியையும்,  காணாதிருக்கிற  கண்களையும்,  கேளாதிருக்கிற  காதுகளையும்,  தேவன்  அவர்களுக்குக்  கொடுத்தார்  என்று  எழுதியிருக்கிறபடியாயிற்று.  {Rom  11:8}

 

அன்றியும்,  அவர்களுடைய  பந்தி  அவர்களுக்குச்  சுருக்கும்  கண்ணியும்  இடறுதற்கான  கல்லும்  பதிலுக்குப்  பதிலளித்தலுமாகக்கடவது;  {Rom  11:9}

 

காணாதபடிக்கு  அவர்களுடைய  கண்கள்  அந்தகாரப்படக்கடவது;  அவர்களுடைய  முதுகை  எப்போதும்  குனியப்பண்ணும்  என்று  தாவீதும்<David>  சொல்லியிருக்கிறான்.  {Rom  11:10}

 

இப்படியிருக்க,  விழுந்துபோகும்படிக்கா  இடறினார்கள்  என்று  கேட்கிறேன்,  அப்படியல்லவே;  அவர்களுக்குள்ளே  வைராக்கியத்தை  எழுப்பத்தக்கதாக  அவர்களுடைய  தவறுதலினாலே  புறஜாதிகளுக்கு  இரட்சிப்பு  கிடைத்தது.  {Rom  11:11}

 

அவர்களுடைய  தவறு  உலகத்திற்கு  ஐசுவரியமும்,  அவர்களுடைய  குறைவு  புறஜாதிகளுக்கு  ஐசுவரியமுமாயிருக்க,  அவர்களுடைய  நிறைவு  எவ்வளவு  அதிகமாய்  அப்படியிருக்கும்.  {Rom  11:12}

 

புறஜாதியாராகிய  உங்களுடனே  பேசுகிறேன்;  புறஜாதிகளுக்கு  நான்  அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே  என்  இனத்தாருக்குள்ளே  நான்  வைராக்கியத்தை  எழுப்பி,  அவர்களில்  சிலரை  இரட்சிக்க  வேண்டுமென்று,  {Rom  11:13}

 

என்  ஊழியத்தை  மேன்மைப்படுத்துகிறேன்.  {Rom  11:14}

 

அவர்களைத்  தள்ளிவிடுதல்  உலகத்தை  ஒப்புரவாக்குதலாயிருக்க,  அவர்களை  அங்கிகரித்துக்கொள்ளுதல்  என்னமாயிராது;  மரித்தோரிலிருந்து  ஜீவன்  உண்டானதுபோலிருக்குமல்லவோ?  {Rom  11:15}

 

மேலும்  முதற்பலனாகிய  மாவானது  பரிசுத்தமாயிருந்தால்,  பிசைந்தமா  முழுவதும்  பரிசுத்தமாயிருக்கும்;  வேரானது  பரிசுத்தமாயிருந்தால்,  கிளைகளும்  பரிசுத்தமாயிருக்கும்.  {Rom  11:16}

 

சில  கிளைகள்  முறித்துப்போடப்பட்டிருக்க,  காட்டொலிவமரமாகிய  நீ  அவைகள்  இருந்த  இடத்தில்  ஒட்டவைக்கப்பட்டு,  ஒலிவமரத்தின்  வேருக்கும்  சாரத்துக்கும்  உடன்பங்காளியாயிருந்தாயானால்,  {Rom  11:17}

 

நீ  அந்தக்  கிளைகளுக்கு  விரோதமாய்ப்  பெருமைபாராட்டாதே;  பெருமைபாராட்டுவாயானால்,  நீ  வேரைச்  சுமக்காமல்,  வேர்  உன்னைச்  சுமக்கிறதென்று  நினைத்துக்கொள்.  {Rom  11:18}

 

நான்  ஒட்டவைக்கப்படுவதற்கு  அந்தக்  கிளைகள்  முறித்துப்போடப்பட்டதென்று  சொல்லுகிறாயே.  {Rom  11:19}

 

நல்லது,  அவிசுவாசத்தினாலே  அவைகள்  முறித்துப்போடப்பட்டன,  நீ  விசுவாசத்தினாலே  நிற்கிறாய்;  மேட்டிமைச்  சிந்தையாயிராமல்  பயந்திரு.  {Rom  11:20}

 

சுபாவக்கிளைகளைத்  தேவன்  தப்பவிடாதிருக்க,  உன்னையும்  தப்பவிடமாட்டார்  என்று  எச்சரிக்கையாயிரு.  {Rom  11:21}

 

ஆகையால்,  தேவனுடைய  தயவையும்  கண்டிப்பையும்  பார்;  விழுந்தவர்களிடத்திலே  கண்டிப்பையும்,  உன்னிடத்திலே  தயவையும்  காண்பித்தார்;  அந்தத்  தயவிலே  நிலைத்திருப்பாயானால்  உனக்குத்  தயவுகிடைக்கும்;  நிலைத்திராவிட்டால்  நீயும்  வெட்டுண்டுபோவாய்.  {Rom  11:22}

 

அன்றியும்,  அவர்கள்  அவிசுவாசத்திலே  நிலைத்திராதிருந்தால்  அவர்களும்  ஒட்டவைக்கப்படுவார்கள்;  அவர்களை  மறுபடியும்  ஒட்டவைக்கிறதற்குத்  தேவன்  வல்லவராயிருக்கிறாரே.  {Rom  11:23}

 

சுபாவத்தின்படி  காட்டொலிவமரத்திலிருந்து  நீ  வெட்டப்பட்டு,  சுபாவத்திற்கு  விரோதமாய்  நல்ல  ஒலிவமரத்திலே  ஒட்டவைக்கப்பட்டிருந்தால்,  சுபாவக்கிளைகளாகிய  அவர்கள்  தங்கள்  சுய  ஒலிவமரத்திலே  ஒட்டவைக்கப்படுவது  அதிக  நிச்சயமல்லவா?  {Rom  11:24}

 

மேலும்,  சகோதரரே,  நீங்கள்  உங்களையே  புத்திமான்களென்று  எண்ணாதபடிக்கு  ஒரு  இரகசியத்தை  நீங்கள்  அறியவேண்டுமென்றிருக்கிறேன்;  அதென்னவெனில்,  புறஜாதியாருடைய  நிறைவு  உண்டாகும்வரைக்கும்  இஸ்ரவேலரில்<Israel>  ஒரு  பங்குக்குக்  கடினமான  மனதுண்டாயிருக்கும்.  {Rom  11:25}

 

இந்தப்பிரகாரம்  இஸ்ரவேலரெல்லாரும்<Israel>  இரட்சிக்கப்படுவார்கள்.  மீட்கிறவர்  சீயோனிலிருந்து<Sion>  வந்து,  அவபக்தியை  யாக்கோபை<Jacob>  விட்டு  விலக்குவார்  என்றும்;  {Rom  11:26}

 

நான்  அவர்களுடைய  பாவங்களை  நீக்கும்போது,  இதுவே  நான்  அவர்களுடனே  செய்யும்  உடன்படிக்கை  என்றும்  எழுதியிருக்கிறது.  {Rom  11:27}

 

சுவிசேஷத்தைக்குறித்து  அவர்கள்  உங்கள்நிமித்தம்  பகைஞராயிருக்கிறார்கள்;  தெரிந்துகொள்ளுதலைக்குறித்து  அவர்கள்  பிதாக்களினிமித்தம்  அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.  {Rom  11:28}

 

தேவனுடைய  கிருபைவரங்களும்,  அவர்களை  அழைத்த  அழைப்பும்  மாறாதவைகளே.  {Rom  11:29}

 

ஆதலால்,  நீங்கள்  முற்காலத்திலே  தேவனுக்குக்  கீழ்ப்படியாதிருந்து,  இப்பொழுது  அவர்களுடைய  கீழ்ப்படியாமையினாலே  இரக்கம்பெற்றிருக்கிறதுபோல,  {Rom  11:30}

 

அவர்களும்  இப்பொழுது  கீழ்ப்படியாமலிருந்தும்,  பின்பு  உங்களுக்குக்  கிடைத்த  இரக்கத்தினாலே  இரக்கம்  பெறுவார்கள்.  {Rom  11:31}

 

எல்லார்மேலும்  இரக்கமாயிருக்கத்தக்கதாக,  தேவன்  எல்லாரையும்  கீழ்ப்படியாமைக்குள்ளே  அடைத்துப்போட்டார்.  {Rom  11:32}

 

!  தேவனுடைய  ஐசுவரியம்,  ஞானம்,  அறிவு  என்பவைகளின்  ஆழம்  எவ்வளவாயிருக்கிறது!  அவருடைய  நியாயத்தீர்ப்புகள்  அளவிடப்படாதவைகள்,  அவருடைய  வழிகள்  ஆராயப்படாதவைகள்!  {Rom  11:33}

 

கர்த்தருடைய  சிந்தையை  அறிந்தவன்  யார்?  அவருக்கு  ஆலோசனைக்காரனாயிருந்தவன்  யார்?  {Rom  11:34}

 

தனக்குப்  பதில்கிடைக்கும்படிக்கு  முந்தி  அவருக்கு  ஒன்றைக்  கொடுத்தவன்  யார்?  {Rom  11:35}

 

சகலமும்  அவராலும்  அவர்  மூலமாயும்  அவருக்காகவும்  இருக்கிறது;  அவருக்கே  என்றென்றைக்கும்  மகிமையுண்டாவதாக.  ஆமென்.  {Rom  11:36}

 

அப்படியிருக்க,  சகோதரரே,  நீங்கள்  உங்கள்  சரீரங்களைப்  பரிசுத்தமும்  தேவனுக்குப்  பிரியமுமான  ஜீவபலியாக  ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று,  தேவனுடைய  இரக்கங்களை  முன்னிட்டு  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்;  இதுவே  நீங்கள்  செய்யத்தக்க  புத்தியுள்ள  ஆராதனை.  {Rom  12:1}

 

நீங்கள்  இந்தப்  பிரபஞ்சத்திற்கு  ஒத்த  வேஷந்தரியாமல்,  தேவனுடைய  நன்மையும்  பிரியமும்  பரிபூரணமுமான  சித்தம்  இன்னதென்று  பகுத்தறியத்தக்கதாக,  உங்கள்  மனம்  புதிதாகிறதினாலே  மறுரூபமாகுங்கள்.  {Rom  12:2}

 

அல்லாமலும்,  எனக்கு  அருளப்பட்ட  கிருபையினாலே  நான்  சொல்லுகிறதாவது;  உங்களில்  எவனானாலும்  தன்னைக்குறித்து  எண்ணவேண்டியதற்கு  மிஞ்சி  எண்ணாமல்,  அவனவனுக்குத்  தேவன்  பகிர்ந்த  விசுவாச  அளவின்படியே,  தெளிந்த  எண்ணமுள்ளவனாய்  எண்ணவேண்டும்.  {Rom  12:3}

 

ஏனெனில்,  நமக்கு  ஒரே  சரீரத்திலே  அநேக  அவயவங்களிருந்தும்,  எல்லா  அவயவங்களுக்கும்  ஒரே  தொழில்  இராததுபோல,  {Rom  12:4}

 

அநேகராகிய  நாமும்  கிறிஸ்துவுக்குள்<Christ>  ஒரே  சரீரமாயிருக்க,  ஒருவருக்கொருவர்  அவயவங்களாயிருக்கிறோம்.  {Rom  12:5}

 

நமக்கு  அருளப்பட்ட  கிருபையின்படியே  நாம்  வெவ்வேறான  வரங்களுள்ளவர்களானபடியினாலே,  நம்மில்  தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற  வரத்தையுடையவன்  விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச்  சொல்லக்கடவன்.  {Rom  12:6}

 

ஊழியஞ்செய்கிறவன்  ஊழியத்திலும்,  போதிக்கிறவன்  போதிக்கிறதிலும்,  {Rom  12:7}

 

புத்திசொல்லுகிறவன்  புத்திசொல்லுகிறதிலும்  தரித்திருக்கக்கடவன்;  பகிர்ந்துகொடுக்கிறவன்  வஞ்சனையில்லாமல்  கொடுக்கக்கடவன்;  முதலாளியானவன்  ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்;  இரக்கஞ்செய்கிறவன்  உற்சாகத்துடனே  செய்யக்கடவன்.  {Rom  12:8}

 

உங்கள்  அன்பு  மாயமற்றதாயிருப்பதாக;  தீமையை  வெறுத்து,  நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.  {Rom  12:9}

 

சகோதர  சிநேகத்திலே  ஒருவர்மேலொருவர்  பட்சமாயிருங்கள்;  கனம்பண்ணுகிறதிலே  ஒருவருக்கொருவர்  முந்திக்கொள்ளுங்கள்.  {Rom  12:10}

 

அசதியாயிராமல்  ஜாக்கிரதையாயிருங்கள்;  ஆவியிலே  அனலாயிருங்கள்;  கர்த்தருக்கு  ஊழியஞ்செய்யுங்கள்.  {Rom  12:11}

 

நம்பிக்கையிலே  சந்தோஷமாயிருங்கள்;  உபத்திரவத்திலே  பொறுமையாயிருங்கள்;  ஜெபத்திலே  உறுதியாய்த்  தரித்திருங்கள்.  {Rom  12:12}

 

பரிசுத்தவான்களுடைய  குறைவில்  அவர்களுக்கு  உதவிசெய்யுங்கள்;  அந்நியரை  உபசரிக்க  நாடுங்கள்.  {Rom  12:13}

 

உங்களைத்  துன்பப்படுத்துகிறவர்களை  ஆசீர்வதியுங்கள்;  ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச்  சபியாதிருங்கள்.  {Rom  12:14}

 

சந்தோஷப்படுகிறவர்களுடனே  சந்தோஷப்படுங்கள்;  அழுகிறவர்களுடனே  அழுங்கள்.  {Rom  12:15}

 

ஒருவரோடொருவர்  ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்;  மேட்டிமையானவைகளைச்  சிந்தியாமல்,  தாழ்மையானவர்களுக்கு  இணங்குங்கள்;  உங்களையே  புத்திமான்களென்று  எண்ணாதிருங்கள்.  {Rom  12:16}

 

ஒருவனுக்கும்  தீமைக்குத்  தீமைசெய்யாதிருங்கள்;  எல்லா  மனுஷருக்கு  முன்பாகவும்  யோக்கியமானவைகளைச்  செய்ய  நாடுங்கள்.  {Rom  12:17}

 

கூடுமானால்  உங்களாலானமட்டும்  எல்லா  மனுஷரோடும்  சமாதானமாயிருங்கள்.  {Rom  12:18}

 

பிரியமானவர்களே,  பழிவாங்குதல்  எனக்குரியது,  நானே  பதிற்செய்வேன்,  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  எழுதியிருக்கிறபடியால்,  நீங்கள்  பழிவாங்காமல்,  கோபாக்கினைக்கு  இடங்கொடுங்கள்.  {Rom  12:19}

 

அன்றியும்,  உன்  சத்துரு  பசியாயிருந்தால்,  அவனுக்குப்  போஜனங்கொடு;  அவன்  தாகமாயிருந்தால்,  அவனுக்குப்  பானங்கொடு;  நீ  இப்படிச்  செய்வதினால்  அக்கினித்தழலை  அவன்  தலையின்மேல்  குவிப்பாய்.  {Rom  12:20}

 

நீ  தீமையினாலே  வெல்லப்படாமல்,  தீமையை  நன்மையினாலே  வெல்லு.  {Rom  12:21}

 

எந்த  மனுஷனும்  மேலான  அதிகாரமுள்ளவர்களுக்குக்  கீழ்ப்படியக்கடவன்;  ஏனென்றால்,  தேவனாலேயன்றி  ஒரு  அதிகாரமுமில்லை;  உண்டாயிருக்கிற  அதிகாரங்கள்  தேவனாலே  நியமிக்கப்பட்டிருக்கிறது.  {Rom  13:1}

 

ஆதலால்  அதிகாரத்திற்கு  எதிர்த்து  நிற்கிறவன்  தேவனுடைய  நியமத்திற்கு  எதிர்த்து  நிற்கிறான்;  அப்படி  எதிர்த்து  நிற்கிறவர்கள்  தங்களுக்குத்  தாங்களே  ஆக்கினையை  வருவித்துக்கொள்ளுகிறார்கள்.  {Rom  13:2}

 

மேலும்  அதிகாரிகள்  நற்கிரியைகளுக்கல்ல,  துர்க்கிரியைகளுக்கே  பயங்கரமாயிருக்கிறார்கள்;  ஆகையால்  நீ  அதிகாரத்திற்குப்  பயப்படாதிருக்கவேண்டுமானால்,  நன்மைசெய்,  அதினால்  உனக்குப்  புகழ்ச்சி  உண்டாகும்.  {Rom  13:3}

 

உனக்கு  நன்மை  உண்டாகும்  பொருட்டு,  அவன்  தேவஊழியக்காரனாயிருக்கிறான்.  நீ  தீமைசெய்தால்  பயந்திரு;  பட்டயத்தை  அவன்  விருதாவாய்ப்  பிடித்திருக்கவில்லை;  தீமைசெய்கிறவன்மேல்  கோபாக்கினை  வரப்பண்ணும்படி,  அவன்  நீதியைச்  செலுத்துகிற  தேவஊழியக்காரனாயிருக்கிறானே.  {Rom  13:4}

 

ஆகையால்,  நீங்கள்  கோபாக்கினையினிமித்தம்  மாத்திரமல்ல,  மனச்சாட்சியினிமித்தமும்  கீழ்ப்படியவேண்டும்.  {Rom  13:5}

 

இதற்காகவே  நீங்கள்  வரியையும்  கொடுக்கிறீர்கள்.  அவர்கள்  இந்த  வேலையைப்  பார்த்துவருகிற  தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.  {Rom  13:6}

 

ஆகையால்  யாவருக்கும்  செலுத்தவேண்டிய  கடமைகளைச்  செலுத்துங்கள்;  எவனுக்கு  வரியைச்  செலுத்தவேண்டியதோ  அவனுக்கு  வரியையும்,  எவனுக்குத்  தீர்வையைச்  செலுத்தவேண்டியதோ  அவனுக்குத்  தீர்வையையும்  செலுத்துங்கள்;  எவனுக்குப்  பயப்படவேண்டியதோ  அவனுக்குப்  பயப்படுங்கள்;  எவனைக்  கனம்பண்ணவேண்டியதோ  அவனைக்  கனம்பண்ணுங்கள்.  {Rom  13:7}

 

ஒருவரிடத்திலொருவர்  அன்புகூருகிற  கடனேயல்லாமல்,  மற்றொன்றிலும்  ஒருவனுக்கும்  கடன்படாதிருங்கள்;  பிறனிடத்தில்  அன்புகூருகிறவன்  நியாயப்பிரமாணத்தை  நிறைவேற்றுகிறான்.  {Rom  13:8}

 

எப்படியென்றால்,  விபசாரம்  செய்யாதிருப்பாயாக,  கொலை  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக,  இச்சியாதிருப்பாயாக  என்கிற  இந்தக்  கற்பனைகளும்,  வேறே  எந்தக்  கற்பனையும்,  உன்னிடத்தில்  நீ  அன்புகூருகிறதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்கிற  ஒரே  வார்த்தையிலே  தொகையாய்  அடங்கியிருக்கிறது.  {Rom  13:9}

 

அன்பானது  பிறனுக்குப்  பொல்லாங்குசெய்யாது;  ஆதலால்  அன்பு  நியாயப்பிரமாணத்தின்  நிறைவேறுதலாயிருக்கிறது.  {Rom  13:10}

 

நித்திரையைவிட்டு  எழுந்திருக்கத்தக்க  வேளையாயிற்றென்று,  நாம்  காலத்தை  அறிந்தவர்களாய்,  இப்படி  நடக்கவேண்டும்;  நாம்  விசுவாசிகளானபோது  இரட்சிப்பு  சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும்  இப்பொழுது  அது  நமக்கு  அதிக  சமீபமாயிருக்கிறது.  {Rom  13:11}

 

இரவு  சென்றுபோயிற்று,  பகல்  சமீபமாயிற்று;  ஆகையால்  அந்தகாரத்தின்  கிரியைகளை  நாம்  தள்ளிவிட்டு,  ஒளியின்  ஆயுதங்களைத்  தரித்துக்கொள்ளக்கடவோம்.  {Rom  13:12}

 

களியாட்டும்  வெறியும்,  வேசித்தனமும்  காமவிகாரமும்,  வாக்குவாதமும்  பொறாமையும்  உள்ளவர்களாய்  நடவாமல்,  பகலிலே  நடக்கிறவர்கள்போலச்  சீராய்  நடக்கக்கடவோம்.  {Rom  13:13}

 

துர்இச்சைகளுக்கு  இடமாக  உடலைப்  பேணாமலிருந்து,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவைத்<Jesus  Christ>  தரித்துக்கொள்ளுங்கள்.  {Rom  13:14}

 

விசுவாசத்தில்  பலவீனமுள்ளவனைச்  சேர்த்துக்கொள்ளுங்கள்;  ஆனாலும்  அவனுடைய  மன  ஐயங்களைக்  குற்றமாய்  நிர்ணயிக்காமலிருங்கள்.  {Rom  14:1}

 

ஒருவன்  எந்தப்  பதார்த்தத்தையும்  புசிக்கலாமென்று  நம்புகிறான்;  பலவீனனோ  மரக்கறிகளைமாத்திரம்  புசிக்கிறான்.  {Rom  14:2}

 

புசிக்கிறவன்  புசியாதிருக்கிறவனை  அற்பமாயெண்ணாதிருப்பானாக;  புசியாதிருக்கிறவனும்  புசிக்கிறவனைக்  குற்றவாளியாகத்  தீர்க்காதிருப்பானாக;  தேவன்  அவனை  ஏற்றுக்கொண்டாரே.  {Rom  14:3}

 

மற்றொருவனுடைய  வேலைக்காரனைக்  குற்றவாளியாகத்  தீர்க்கிறதற்கு  நீ  யார்?  அவன்  நின்றாலும்  விழுந்தாலும்  அவனுடைய  எஜமானுக்கே  அவன்  உத்தரவாதி;  அவன்  நிலைநிறுத்தப்படுவான்;  தேவன்  அவனை  நிலைநிறுத்த  வல்லவராயிருக்கிறாரே.  {Rom  14:4}

 

அன்றியும்,  ஒருவன்  ஒருநாளை  மற்றொரு  நாளிலும்  விசேஷமாக  எண்ணுகிறான்;  வேறொருவன்  எல்லா  நாட்களையும்  சரியாக  எண்ணுகிறான்;  அவனவன்  தன்தன்  மனதிலே  முழு  நிச்சயத்தை  உடையவனாயிருக்கக்கடவன்.  {Rom  14:5}

 

நாட்களை  விசேஷித்துக்கொள்ளுகிறவன்  கர்த்தருக்கென்று  விசேஷித்துக்  கொள்ளுகிறான்;  நாட்களை  விசேஷித்துக்  கொள்ளாதவனும்  கர்த்தருக்கென்று  விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.  புசிக்கிறவன்  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால்,  கர்த்தருக்கென்று  புசிக்கிறான்;  புசியாதிருக்கிறவனும்  கர்த்தருக்கென்று  புசியாதிருந்து,  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்  செலுத்துகிறான்.  {Rom  14:6}

 

நம்மில்  ஒருவனும்  தனக்கென்று  பிழைக்கிறதுமில்லை,  ஒருவனும்  தனக்கென்று  மரிக்கிறதுமில்லை.  {Rom  14:7}

 

நாம்  பிழைத்தாலும்  கர்த்தருக்கென்று  பிழைக்கிறோம்,  நாம்  மரித்தாலும்  கர்த்தருக்கென்று  மரிக்கிறோம்;  ஆகையால்  பிழைத்தாலும்  மரித்தாலும்  நாம்  கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.  {Rom  14:8}

 

கிறிஸ்துவும்<Christ>  மரித்தோர்மேலும்  ஜீவனுள்ளோர்மேலும்  ஆண்டவராயிருக்கும்பொருட்டு,  மரித்தும்  எழுந்தும்  பிழைத்துமிருக்கிறார்.  {Rom  14:9}

 

இப்படியிருக்க,  நீ  உன்  சகோதரனைக்  குற்றவாளியென்று  தீர்க்கிறதென்ன?  நீ  உன்  சகோதரனை  அற்பமாய்  எண்ணுகிறதென்ன?  நாமெல்லாரும்  கிறிஸ்துவினுடைய<Christ>  நியாயாசனத்திற்கு  முன்பாக  நிற்போமே.  {Rom  14:10}

 

அந்தப்படி:  முழங்கால்  யாவும்  எனக்கு  முன்பாக  முடங்கும்,  நாவு  யாவும்  தேவனை  அறிக்கைபண்ணும்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  உரைக்கிறேன்  என்பதாய்க்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  எழுதியிருக்கிறது.  {Rom  14:11}

 

ஆதலால்  நம்மில்  ஒவ்வொருவனும்  தன்னைக்குறித்துத்  தேவனுக்குக்  கணக்கொப்புவிப்பான்.  {Rom  14:12}

 

இப்படியிருக்க,  நாம்  இனிமேல்  ஒருவரையொருவர்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருப்போமாக.  ஒருவனும்  தன்  சகோதரனுக்கு  முன்பாகத்  தடுக்கலையும்  இடறலையும்  போடலாகாதென்றே  தீர்மானித்துக்கொள்ளுங்கள்.  {Rom  14:13}

 

ஒரு  பொருளும்  தன்னிலே  தீட்டுள்ளதல்லவென்று  கர்த்தராகிய  இயேசுவுக்குள்<Jesus>  அறிந்து  நிச்சயித்திருக்கிறேன்;  ஒருபொருளைத்  தீட்டுள்ளதென்று  எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ  அவனுக்கு  அது  தீட்டுள்ளதாயிருக்கும்.  {Rom  14:14}

 

போஜனத்தினாலே  உன்  சகோதரனுக்கு  விசனமுண்டாக்கினால்,  நீ  அன்பாய்  நடக்கிறவனல்ல;  அவனை  உன்  போஜனத்தினாலே  கெடுக்காதே,  கிறிஸ்து<Christ>  அவனுக்காக  மரித்தாரே.  {Rom  14:15}

 

உங்கள்  நன்மை  தூஷிக்கப்பட  இடங்கொடாதிருங்கள்.  {Rom  14:16}

 

தேவனுடைய  ராஜ்யம்  புசிப்பும்  குடிப்புமல்ல,  அது  நீதியும்  சமாதானமும்  பரிசுத்த  ஆவியினாலுண்டாகும்  சந்தோஷமுமாயிருக்கிறது.  {Rom  14:17}

 

இவைகளிலே  கிறிஸ்துவுக்கு<Christ>  ஊழியஞ்செய்கிறவன்  தேவனுக்குப்  பிரியனும்  மனுஷரால்  அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.  {Rom  14:18}

 

ஆனபடியால்  சமாதானத்துக்கடுத்தவைகளையும்,  அந்நியோந்நிய  பக்திவிருத்தி  உண்டாக்கத்தக்கவைகளையும்  நாடக்கடவோம்.  {Rom  14:19}

 

போஜனத்தினிமித்தம்  தேவனுடைய  கிரியையை  அழித்துப்போடாதே.  எந்தப்  பதார்த்தமும்  சுத்தமுள்ளதுதான்;  ஆனாலும்  இடறலுண்டாகப்  புசிக்கிறவனுக்கு  அது  தீமையாயிருக்கும்.  {Rom  14:20}

 

மாம்சம்  புசிக்கிறதும்,  மதுபானம்  பண்ணுகிறதும்,  மற்றெதையாகிலும்  செய்கிறதும்,  உன்  சகோதரன்  இடறுகிறதற்காவது,  தவறுகிறதற்காவது  பலவீனப்படுகிறதற்காவது  ஏதுவாயிருந்தால்,  அவைகளில்  ஒன்றையும்  செய்யாமலிருப்பதே  நன்மையாயிருக்கும்.  {Rom  14:21}

 

உனக்கு  விசுவாசமிருந்தால்  அது  தேவனுக்குமுன்பாக  உன்மட்டும்  இருக்கட்டும்.  நல்லதென்று  நிச்சயித்த  காரியத்தில்  தன்னைக்  குற்றவாளியாக்காதவன்  பாக்கியவான்.  {Rom  14:22}

 

ஒருவன்  சமுசயப்படுகிறவனாய்ப்  புசித்தால்,  அவன்  விசுவாசமில்லாமல்  புசிக்கிறபடியினால்,  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுகிறான்.  விசுவாசத்தினாலே  வராத  யாவும்  பாவமே.  {Rom  14:23}

 

அன்றியும்,  பலமுள்ளவர்களாகிய  நாம்  நமக்கே  பிரியமாய்  நடவாமல்,  பலவீனருடைய  பலவீனங்களைத்  தாங்கவேண்டும்.  {Rom  15:1}

 

நம்மில்  ஒவ்வொருவனும்  பிறனுடைய  பக்திவிருத்திக்கேதுவான  நன்மையுண்டாகும்படி  அவனுக்குப்  பிரியமாய்  நடக்கக்கடவன்.  {Rom  15:2}

 

கிறிஸ்துவும்<Christ>  தமக்கே  பிரியமாய்  நடவாமல்:  உம்மை  நிந்திக்கிறவர்களுடைய  நிந்தைகள்  என்மேல்  விழுந்தது  என்று  எழுதியிருக்கிறபடியே  நடந்தார்.  {Rom  15:3}

 

தேவவசனத்தினால்  உண்டாகும்  பொறுமையினாலும்  ஆறுதலினாலும்  நாம்  நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு,  முன்பு  எழுதியிருக்கிறவைகளெல்லாம்  நமக்குப்  போதனையாக  எழுதியிருக்கிறது.  {Rom  15:4}

 

நீங்கள்  ஒருமனப்பட்டு  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus Christ>  பிதாவாகிய  தேவனை  ஒரே  வாயினால்  மகிமைப்படுத்தும்படிக்கு,  {Rom  15:5}

Now  the  God  of  patience  and  consolation  grant  you  to  be  likeminded  one  toward  another  according  to  :  {Rom  15:5}

 

பொறுமையையும்  ஆறுதலையும்  அளிக்கும்  தேவன்,  கிறிஸ்து  இயேசுவினுடைய<Christ  Jesus>  மாதிரியின்படியே,  நீங்கள்  ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி  உங்களுக்கு  அநுக்கிரகஞ்செய்வாராக.  {Rom  15:6}

 

ஆதலால்  தேவனுக்கு  மகிமையுண்டாக,  கிறிஸ்து<Christ>  நம்மை  ஏற்றுக்கொண்டதுபோல,  நீங்களும்  ஒருவரையொருவர்  ஏற்றுக்கொள்ளுங்கள்.  {Rom  15:7}

 

மேலும்,  பிதாக்களுக்குப்  பண்ணப்பட்ட  வாக்குத்தத்தங்களை  உறுதியாக்கும்படிக்கு,  தேவனுடைய  சத்தியத்தினிமித்தம்  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  விருத்தசேதனமுள்ளவர்களுக்கு  ஊழியக்காரரானாரென்றும்;  {Rom  15:8}

 

புறஜாதியாரும்  இரக்கம்  பெற்றதினிமித்தம்  தேவனை  மகிமைப்படுத்துகிறார்களென்றும்  சொல்லுகிறேன்.  அந்தப்படி:  இதினிமித்தம்  நான்  புறஜாதிகளுக்குள்ளே  உம்மை  அறிக்கைபண்ணி,  உம்முடைய  நாமத்தைச்  சொல்லி,  சங்கீதம்  பாடுவேன்  என்று  எழுதியிருக்கிறது.  {Rom  15:9}

 

மேலும்,  புறஜாதிகளே,  அவருடைய  ஜனங்களோடேகூடக்  களிகூருங்கள்  என்கிறார்.  {Rom  15:10}

 

மேலும்,  புறஜாதிகளே,  எல்லாரும்  கர்த்தரைத்  துதியுங்கள்;  ஜனங்களே,  எல்லாரும்  அவரைப்  புகழுங்கள்  என்றும்  சொல்லுகிறார்.  {Rom  15:11}

 

மேலும்,  ஈசாயின்<Jesse>  வேரும்  புறஜாதியாரை  ஆளும்படிக்கு  எழும்புகிறவருமாகிய  ஒருவர்  தோன்றுவார்;  அவரிடத்தில்  புறஜாதியார்  நம்பிக்கைவைப்பார்கள்  என்று  ஏசாயா<Esaias>  சொல்லுகிறான்.  {Rom  15:12}

 

பரிசுத்தஆவியின்  பலத்தினாலே  உங்களுக்கு  நம்பிக்கை  பெருகும்படிக்கு,  நம்பிக்கையின்  தேவன்  விசுவாசத்தினால்  உண்டாகும்  எல்லாவித  சந்தோஷத்தினாலும்  சமாதானத்தினாலும்  உங்களை  நிரப்புவாராக.  {Rom  15:13}

 

என்  சகோதரரே,  நீங்கள்  நற்குணத்தினால்  நிறைந்தவர்களும்,  சகல  அறிவினாலும்  நிரப்பப்பட்டவர்களும்,  ஒருவருக்கொருவர்  புத்திசொல்ல  வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று  நானும்  உங்களைக்  குறித்து  நிச்சயித்திருக்கிறேன்.  {Rom  15:14}

 

அப்படியிருந்தும்,  சகோதரரே,  புறஜாதியாராகிய  பலி  பரிசுத்தஆவியினாலே  பரிசுத்தமாக்கப்பட்டு,  தேவனுக்குப்  பிரியமான  பலியாகும்படிக்கு,  நான்  தேவனுடைய  சுவிசேஷ  ஊழியத்தை  நடத்தும்  ஆசாரியனாயிருந்து  புறஜாதிகளுக்கு  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  ஊழியக்காரனாகும்பொருட்டு,  {Rom  15:15}

 

தேவன்  எனக்கு  அளித்த  கிருபையினாலே  உங்களுக்கு  ஞாபகப்படுத்தும்படிக்கு  இவைகளை  நான்  அதிக  தைரியமாய்  எழுதினேன்.  {Rom  15:16}

 

ஆதலால்  நான்  தேவனுக்குரியவைகளைக்குறித்து  இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  மேன்மைபாராட்ட  எனக்கு  இடமுண்டு.  {Rom  15:17}

 

புறஜாதியாரை  வார்த்தையினாலும்  செய்கையினாலும்  கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு,  அற்புத  அடையாளங்களின்  பலத்தினாலும்,  தேவ  ஆவியின்  பலத்தினாலும்,  கிறிஸ்துவானவர்<Christ>  என்னைக்கொண்டு  நடப்பித்தவைகளைச்  சொல்வதல்லாமல்  வேறொன்றையும்  சொல்ல  நான்  துணிவதில்லை.  {Rom  15:18}

 

இப்படி  எருசலேம்<Jerusalem>  துவக்கிச்  சுற்றிலும்,  இல்லிரிக்கம்<Illyricum>  தேசம்வரைக்கும்,  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைப்  பூரணமாய்ப்  பிரசங்கித்திருக்கிறேன்.  {Rom  15:19}

 

மேலும்  அவருடைய  செய்தியை  அறியாதிருந்தவர்கள்  காண்பார்களென்றும்,  கேள்விப்படாதிருந்தவர்கள்  உணர்ந்துகொள்வார்களென்றும்  எழுதியிருக்கிறபடியே,  {Rom  15:20}

 

நான்  மற்றொருவனுடைய  அஸ்திபாரத்தின்மேல்  கட்டாதபடிக்கு  கிறிஸ்துவினுடைய<Christ>  நாமம்  சொல்லப்பட்டிராத  இடங்களில்  சுவிசேஷத்தை  அறிவிக்கும்படி  நாடுகிறேன்.  {Rom  15:21}

 

உங்களிடத்தில்  வருகிறதற்கு  இதினாலே  அநேகந்தரம்  தடைபட்டேன்.  {Rom  15:22}

 

இப்பொழுது  இந்தத்  திசைகளிலே  எனக்கு  இடமில்லாதபடியினாலும்,  உங்களிடத்தில்  வரும்படி  அநேக  வருஷமாய்  எனக்கு  மிகுந்த  விருப்பம்  உண்டாயிருக்கிறபடியினாலும்,  {Rom  15:23}

 

நான்  ஸ்பானியா<Spain>  தேசத்திற்குப்  பிரயாணம்பண்ணுகையில்  உங்களிடத்தில்  வந்து,  உங்களைக்  கண்டுகொள்ளவும்,  உங்களிடத்தில்  சற்றுத்  திருப்தியடைந்தபின்பு,  அவ்விடத்திற்கு  உங்களால்  வழிவிட்டனுப்பப்படவும்,  எனக்குச்  சமயங்  கிடைக்குமென்று  நம்பியிருக்கிறேன்.  {Rom  15:24}

 

இப்பொழுதோ  பரிசுத்தவான்களுக்கு  உதவிசெய்யுங்காரியமாக  நான்  எருசலேமுக்குப்<Jerusalem>  பிரயாணம்பண்ண  எத்தனமாயிருக்கிறேன்.  {Rom  15:25}

 

மக்கெதோனியாவிலும்<Macedonia>  அகாயாவிலுமுள்ளவர்கள்<Achaia>  எருசலேமிலுள்ள<Jerusalem>  பரிசுத்தவான்களுக்குள்ளே  இருக்கிற  தரித்திரருக்காகச்  சில  பொருள்சகாயம்  செய்ய  விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;  {Rom  15:26}

 

இப்படிச்செய்வது  நல்லதென்று  எண்ணினார்கள்;  இப்படிச்  செய்கிறதற்கு  அவர்கள்  கடனாளிகளாயும்  இருக்கிறார்கள்.  எப்படியென்றால்  புறஜாதியார்  அவர்களுடைய  ஞானநன்மைகளில்  பங்குபெற்றிருக்க,  சரீரநன்மைகளால்  அவர்களுக்கு  உதவிசெய்ய  இவர்கள்  கடனாளிகளாயிருக்கிறார்களே.  {Rom  15:27}

 

இந்தக்  காரியத்தை  நான்  நிறைவேற்றி,  இந்தப்  பலனை  அவர்கள்  கையிலே  பத்திரமாய்  ஒப்புவித்தபின்பு,  உங்கள்  ஊர்  வழியாய்  ஸ்பானியாவுக்குப்<Spain>  போவேன்.  {Rom  15:28}

 

நான்  உங்களிடத்தில்  வரும்போது  கிறிஸ்துவினுடைய<Christ>  சுவிசேஷத்தின்  சம்பூரணமான  ஆசீர்வாதத்தோடே  வருவேனென்று  அறிந்திருக்கிறேன்.  {Rom  15:29}

 

மேலும்  சகோதரரே,  தேவசித்தத்தினாலே  நான்  சந்தோஷத்துடனே  உங்களிடத்தில்  வந்து  உங்களோடு  இளைப்பாறும்படியாக,  {Rom  15:30}

 

யூதேயாவிலிருக்கிற<Judaea>  அவிசுவாசிகளுக்கு  நான்  தப்புவிக்கப்படும்படிக்கும்,  நான்  எருசலேமிலுள்ள<Jerusalem>  பரிசுத்தவான்களுக்குச்  செய்யப்போகிற  தர்மசகாயம்  அவர்களால்  அங்கிகரிக்கப்படும்படிக்கும்,  {Rom  15:31}

 

நீங்கள்  தேவனை  நோக்கிச்  செய்யும்  ஜெபங்களில்,  நான்  போராடுவதுபோல  நீங்களும்  என்னோடுகூடப்  போராடவேண்டுமென்று  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினிமித்தமும்<Jesus  Christ>,  ஆவியானவருடைய  அன்பினிமித்தமும்,  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {Rom  15:32}

 

சமாதானத்தின்  தேவன்  உங்களனைவரோடுங்கூட  இருப்பாராக.  ஆமென்.  {Rom  15:33}

 

கெங்கிரேயா<Cenchrea>  ஊர்  சபைக்கு  ஊழியக்காரியாகிய  நம்முடைய  சகோதரி  பெபேயாளை<Phebe>  நீங்கள்  கர்த்தருக்குள்  பரிசுத்தவான்களுக்கேற்றபடி  ஏற்றுக்கொண்டு,  {Rom  16:1}

 

எந்தக்  காரியத்தில்  உங்கள்  உதவி  அவளுக்குத்  தேவையாயிருக்கிறதோ  அதிலே  நீங்கள்  அவளுக்கு  உதவிசெய்யவேண்டுமென்று  அவளை  உங்களிடத்தில்  ஒப்புவிக்கிறேன்;  அவள்  அநேகருக்கும்  எனக்குங்கூட  ஆதரவாயிருந்தவள்.  {Rom  16:2}

 

கிறிஸ்து  இயேசுவுக்குள்<Christ  Jesus>  என்  உடன்வேலையாட்களாகிய  பிரிஸ்கில்லாளையும்<Priscilla>  ஆக்கில்லாவையும்<Aquila>  வாழ்த்துங்கள்.  {Rom  16:3}

 

அவர்கள்  என்  பிராணனுக்காகத்  தங்கள்  கழுத்தைக்  கொடுத்தவர்கள்;  அவர்களைப்பற்றி  நான்மாத்திரமல்ல,  புறஜாதியாரில்  உண்டான  சபையாரெல்லாரும்  நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.  {Rom  16:4}

 

அவர்களுடைய  வீட்டிலே  கூடிவருகிற  சபையையும்  வாழ்த்துங்கள்.  அகாயாவிலே<Achaia>  கிறிஸ்துவுக்கு<Christ>  முதற்பலனாகிய  என்  பிரியமான  எப்பனெத்தை<Epaenetus>  வாழ்த்துங்கள்.  {Rom  16:5}

 

எங்களுக்காக  மிகவும்  பிரயாசப்பட்ட  மரியாளை<Mary>  வாழ்த்துங்கள்.  {Rom  16:6}

 

அப்போஸ்தலருக்குள்  பெயர்பெற்றவர்களும்  எனக்கு  முந்திக்  கிறிஸ்துவுக்குள்ளானவர்களும்<Christ>  என்  இனத்தாரும்  என்னுடனேகூடக்  காவலில்  கட்டுண்டவர்களுமாயிருக்கிற  அன்றோனீக்கையும்<Andronicus>  யூனியாவையும்<Junia>  வாழ்த்துங்கள்.  {Rom  16:7}

 

கர்த்தருக்குள்  எனக்குப்  பிரியமான  அம்பிலியாவை<Amplias>  வாழ்த்துங்கள்.  {Rom  16:8}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  நம்மோடே  உடன்வேலையாளாகிய  உர்பானையும்<Urbane>,  என்  பிரியமான  ஸ்தாக்கியையும்<Stachys>  வாழ்த்துங்கள்.  {Rom  16:9}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  உத்தமனாகிய  அப்பெல்லேயை<Apelles>  வாழ்த்துங்கள்.  அரிஸ்தொபூலுவின்<Aristobulus>  வீட்டாரை  வாழ்த்துங்கள்.  {Rom  16:10}

 

என்  இனத்தானாகிய  ஏரோதியோனை<Herodion>  வாழ்த்துங்கள்.  நர்கீசுவின்<Narcissus>  வீட்டாரில்  கர்த்தருக்குட்பட்டவர்களை  வாழ்த்துங்கள்.  {Rom  16:11}

 

கர்த்தருக்குள்  பிரயாசப்படுகிற  திரிபேனாளையும்<Tryphena>  திரிபோசாளையும்<Tryphosa>  வாழ்த்துங்கள்.  கர்த்தருக்குள்  மிகவும்  பிரயாசப்பட்ட  பிரியமான  பெர்சியாளை<Persis>  வாழ்த்துங்கள்.  {Rom  16:12}

 

கர்த்தருக்குள்  தெரிந்துகொள்ளப்பட்ட  ரூபையும்<Rufus>,  எனக்கும்  தாயாகிய  அவனுடைய  தாயையும்  வாழ்த்துங்கள்.  {Rom  16:13}

 

அசிங்கிரீத்துவையும்<Asyncritus>,  பிலெகோனையும்<Phlegon>,  எர்மாவையும்<Hermas>,  பத்திரொபாவையும்<Patrobas>,  எர்மேயையும்<Hermes>,  அவர்களோடிருக்கிற  சகோதரரையும்  வாழ்த்துங்கள்.  {Rom  16:14}

 

பிலொலோகையும்<Philologus>,  யூலியாளையும்<Julia>,  நேரேயையும்<Nereus>,  அவனுடைய  சகோதரியையும்,  ஒலிம்பாவையும்<Olympas>,  அவர்களோடிருக்கிற  பரிசுத்தவான்களெல்லாரையும்  வாழ்த்துங்கள்.  {Rom  16:15}

 

ஒருவரையொருவர்  பரிசுத்த  முத்தத்தோடு  வாழ்த்துங்கள்.  கிறிஸ்துவின்<Christ>  சபையார்  உங்களை  வாழ்த்துகிறார்கள்.  {Rom  16:16}

 

அன்றியும்  சகோதரரே,  நீங்கள்  கற்றுக்கொண்ட  உபதேசத்திற்கு  விரோதமாய்ப்  பிரிவினைகளையும்  இடறல்களையும்  உண்டாக்குகிறவர்களைக்குறித்து  எச்சரிக்கையாயிருந்து,  அவர்களை  விட்டு  விலகவேண்டுமென்று  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {Rom  16:17}

 

அப்படிப்பட்டவர்கள்  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்கு<Jesus  Christ>  ஊழியஞ்செய்யாமல்  தங்கள்  வயிற்றுக்கே  ஊழியஞ்செய்து,  நயவசனிப்பினாலும்  இச்சகப்பேச்சினாலும்,  கபடில்லாதவர்களுடைய  இருதயங்களை  வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.  {Rom  16:18}

 

உங்கள்  கீழ்ப்படிதல்  யாவருக்கும்  தெரியவந்திருக்கிறது.  ஆகையால்  உங்களைக்குறித்துச்  சந்தோஷப்படுகிறேன்;  ஆனாலும்  நீங்கள்  நன்மைக்கு  ஞானிகளும்  தீமைக்குப்  பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று  விரும்புகிறேன்.  {Rom  16:19}

 

சமாதானத்தின்  தேவன்  சீக்கிரமாய்ச்  சாத்தானை  உங்கள்  கால்களின்கீழே  நசுக்கிப்போடுவார்.  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபை  உங்களுடனேகூட  இருப்பதாக.  ஆமென்.  {Rom  16:20}

 

என்  உடன்வேலையாளாகிய  தீமோத்தேயும்<Timotheus>,  என்  இனத்தாராகிய  லூகியும்<Lucius>,  யாசோனும்<Jason>,  சொசிபத்தரும்<Sosipater>  உங்களை  வாழ்த்துகிறார்கள்.  {Rom  16:21}

 

இந்த  நிருபத்தை  எழுதின  தெர்தியுவாகிய<Tertius>  நான்  கர்த்தருக்குள்  உங்களை  வாழ்த்துகிறேன்.  {Rom  16:22}

 

என்னையும்  சபையனைத்தையும்  உபசரித்துவருகிற  காயு<Gaius>  உங்களை  வாழ்த்துகிறான்.  பட்டணத்து  உக்கிராணக்காரனாகிய  ஏரஸ்தும்<Erastus>,  சகோதரனாகிய  குவர்த்தும்<Quartus>  உங்களை  வாழ்த்துகிறார்கள்.  {Rom  16:23}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபை  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {Rom  16:24}

 

ஆதிகாலமுதல்  அடக்கமாயிருந்து,  இப்பொழுது  தீர்க்கதரிசன  ஆகமங்களினாலே  அநாதி  தேவனுடைய  கட்டளையின்படி  வெளியரங்கமாக்கப்பட்டதும்,  சகல  ஜாதிகளும்  விசுவாசத்திற்குக்  கீழ்ப்படியும்படிக்கு  அவர்களுக்கு  அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற  இரகசியத்தை  வெளிப்படுத்துகிறதான,  {Rom  16:25}

 

இயேசுகிறிஸ்துவைப்பற்றிய<Jesus  Christ>  பிரசங்கமாகிய  என்  சுவிசேஷத்தின்படியே  உங்களை  ஸ்திரப்படுத்த  வல்லவரும்,  {Rom  16:26}

 

தாம்  ஒருவரே  ஞானமுள்ளவருமாயிருக்கிற  தேவனுக்கு  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  மூலமாய்  என்றென்றைக்கும்  மகிமை  உண்டாவதாக.  ஆமென்.  {Rom  16:27}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!