அப்பொழுது லேவியரின்
வம்சப் பிதாக்களின் தலைவர்;
கானான்தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய
எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய
யோசுவாவினிடத்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய
கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து
வந்து: (யோசுவா 21:1)
appozhuthu leaviyarin
vamsap
pithaakka'lin thalaivar; kaanaantheasaththilirukki’ra seeloavilea aasaariyanaagiya eleyaasaaridaththilum,
noonin kumaaranaagiya yoasuvaavinidaththilum,
israveal puththirarudaiya koaththirap
pithaakka'lilu'l'la thalaivaridaththilum
searnthu vanthu:
(yoasuvaa 21:1)
நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள்
மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக்
கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.
(யோசுவா 21:2)
naangga'l kudiyirukkum patta'nangga'laiyum, engga'l mirugajeevanukkaaga ve'linilangga'laiyum engga'lukkuk kodukkumpadi,
karththar moaseayaikko'ndu katta'laiyittaarea en’raarga'l. (yoasuvaa 21:2)
கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல்
புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே
லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின்
வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். (யோசுவா
21:3)
karththarudaiya vaakkinpadiyea, israveal
puththirar thangga'l suthantharaththilea leaviyarukkup
patta'nangga'laiyum avaiga'lin ve'linilangga'laiyum koduththaarga'l. (yoasuvaa
21:3)
கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு
விழுந்தது; அந்தச் சீட்டின்படி
லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின்
குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன்
கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த
பட்டணங்கள் பதின்மூன்று. (யோசுவா
21:4)
koagaaththiyarin vamsangga'lukkuch seettu
vizhunthathu; anthach seettinpadi leaviyaril
aasaariyanaagiya aaroanin
kumaararukku yoothaa koaththiraththilum, simiyoan koaththiraththilum, benyameen koaththiraththilum kidaiththa
patta'nangga'l pathinmoon’ru. (yoasuvaa
21:4)
கோகாத்தின் மற்றப்
புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின்
வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின்
பாதிக்கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த
பட்டணங்கள் பத்து. (யோசுவா
21:5)
koagaaththin mat’rap puththirarukku, eppiraayeem
koaththiraththin vamsangga'lukku'l'lum, thaa'n
koaththiraththilum, manaaseayin paathikkoaththiraththilum,
seettinaal kidaiththa
patta'nangga'l paththu.
(yoasuvaa 21:5)
கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார்
கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி
கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின்
பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால்
கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.
(யோசுவா 21:6)
kersoan puththirarukku, isakkaar koaththiraththin vamsangga'lukku'l'lum,
aasear
koaththiraththilum, napthali koaththiraththilum, baasaanilirukki’ra manaaseayin paathik koaththiraththilum, seettinaal kidaiththa
patta'nangga'l pathinmoon’ru. (yoasuvaa
21:6)
மெராரி புத்திரருக்கு, அவர்கள்
வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன்
கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள்
பன்னிரண்டு. (யோசுவா 21:7)
meraari puththirarukku, avarga'l vamsangga'linpadiyea, rooban koaththiraththilum, kaath koaththiraththilum,
sebuloan koaththiraththilum kidaiththa
patta'nangga'l pannira'ndu.
(yoasuvaa 21:7)
இந்தப் பட்டணங்களையும் அவைகளின்
வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர்,
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக்
கொடுத்தார்கள். (யோசுவா 21:8)
inthap patta'nangga'laiyum avaiga'lin ve'linilangga'laiyum israveal puththirar,
karththar moaseayaikko'ndu katta'laiyittapadiyea, seettuppoattu leaviyarukkuk koduththaarga'l. (yoasuvaa
21:8)
லேவியின் குமாரரில்
முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின்
வம்சங்களிலே இருக்கிற ஆரோனின்
குமாரருக்கு, (யோசுவா 21:9)
leaviyin kumaararil
muthalaam seettaippet’ra koagaaththiyarin vamsangga'lilea irukki’ra aaroanin kumaararukku,
(yoasuvaa 21:9)
யூதா புத்திரரின்
கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின்
கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச்
சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:
(யோசுவா 21:10)
yoothaa puththirarin
koaththiraththilum, simiyoan puththirarin
koaththiraththilum, avarga'l koduththavaiga'lum pearpearaagach sollappattavaiga'lumaana patta'nangga'lin naamangga'laavana: (yoasuvaa
21:10)
யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின்
தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான
எபிரோனையும் அதைச் சூழ்ந்த
வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். (யோசுவா
21:11)
yoothaavin malaiththeasaththil aanaakkin
thagappanaagiya arbaavin patta'namaana ebiroanaiyum athaich soozhntha ve'linilangga'laiyum avarga'lukkuk koduththaarga'l. (yoasuvaa
21:11)
பட்டணத்தைச் சேர்ந்த
வயல்களையும் அதின் பட்டிகளையும்
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக்
காணியாட்சியாகக் கொடுத்தார்கள். (யோசுவா
21:12)
patta'naththaich searntha vayalga'laiyum athin pattiga'laiyum eppunneayin kumaaranaagiya kaaleabukkuk kaa'niyaadchiyaagak koduththaarga'l. (yoasuvaa 21:12)
இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய
ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும்
அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:13)
ippadiyea kolaiseythavanukku adaikkalappatta'namaaga aasaariyanaagiya aaroanin
kumaararukku ebiroanaiyum athin ve'linilangga'laiyum, libnaavaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa 21:13)
யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமோவாவையும் அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:14)
yaaththeeraiyum athin ve'linilangga'laiyum, esthemoavaavaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa 21:14)
ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:15)
oaloanaiyum athin ve'linilangga'laiyum, thebeeraiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:15)
ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும்
அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள்
ஒன்பது. (யோசுவா 21:16)
aayinaiyum athin ve'linilangga'laiyum, yuththaavaiyum athin ve'linilangga'laiyum, bethshimeasaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; antha ira'ndu
koaththirangga'lilirukki’ra patta'nangga'l onbathu. (yoasuvaa
21:16)
பென்யமீன் கோத்திரத்திலே
அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:17)
benyameen koaththiraththilea avarga'lukkuk kibiyoanaiyum athin ve'linilangga'laiyum keabaavaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:17)
ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும்
அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:18)
aanathoaththaiyum athin ve'linilangga'laiyum, almoanaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap patta'nangga'l naalu. (yoasuvaa
21:18)
ஆசாரியரான ஆரோனுடைய
குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின்
வெளிநிலங்களுட்பட பதின்மூன்று. (யோசுவா
21:19)
aasaariyaraana aaroanudaiya kumaararin
patta'nangga'lellaam avaiga'lin ve'linilangga'ludpada pathinmoon’ru. (yoasuvaa
21:19)
லேவியரான கோகாத்தின்
புத்திரரில் மீதியான அவர்களுடைய
மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம்
கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக
அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
(யோசுவா 21:20)
leaviyaraana koagaaththin puththiraril
meethiyaana avarga'ludaiya mat’ra vamsangga'lukku eppiraayeem
koaththiraththilea avarga'lukkup pangguveethamaaga avarga'l koduththa
patta'nangga'laavana: (yoasuvaa
21:20)
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின்
மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும்
அதின் வெளிநிலங்களையும், கேசேரையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:21)
kolaiseythavanukku adaikkalappatta'namaana eppiraayeemin malaiththeasaththil irukki’ra seekeamaiyum athin ve'linilangga'laiyum, keasearaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:21)
கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள்
நாலு. (யோசுவா 21:22)
kibsaayeemaiyum athin ve'linilangga'laiyum, beththoroanaiyum athin ve'linilangga'laiyum avarga'lukkuk koduththaarga'l; inthap patta'nangga'l naalu. (yoasuvaa
21:22)
தாண் கோத்திரத்திலே
எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:23)
thaa'n koaththiraththilea elthekkeayaiyum athin ve'linilangga'laiyum, kibeththoanaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:23)
ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள்
நாலு. (யோசுவா 21:24)
aayaloanaiyum athin ve'linilangga'laiyum, kaathrimmoanaiyum athin ve'linilangga'laiyum avarga'lukkuk koduththaarga'l; inthap patta'nangga'l naalu. (yoasuvaa
21:24)
மனாசேயின் பாதிக்
கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக்
கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள்
இரண்டு. (யோசுவா 21:25)
manaaseayin paathik koaththiraththilea thaanaakaiyum athin ve'linilangga'laiyum, kaathrimmoanaiyum athin ve'linilangga'laiyum avarga'lukkuk koduththaarga'l; inthap patta'nangga'l ira'ndu. (yoasuvaa
21:25)
கோகாத் புத்திரரின்
மீதியான வம்சங்களுக்கு உண்டான
பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பத்து.
(யோசுவா 21:26)
koagaath puththirarin meethiyaana
vamsangga'lukku u'ndaana
patta'nangga'lellaam avaiga'lin ve'linilangga'ludpadap paththu.
(yoasuvaa 21:26)
லேவியரின் வம்சங்களிலே
கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின்
பாதிக்கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள
கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் இரண்டு. (யோசுவா
21:27)
leaviyarin vamsangga'lilea kersoan puththirarukku manaaseayin paathikkoaththiraththil kolaiseythavanukku adaikkalappatta'namaana baasaanilu'l'la koalaanaiyum
athin ve'linilangga'laiyum, beyeasthiraavaiyum
athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap patta'nangga'l ira'ndu. (yoasuvaa
21:27)
இசக்காரின் கோத்திரத்திலே
கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:28)
isakkaarin koaththiraththilea keesoanaiyum athin ve'linilangga'laiyum, thaabaraaththaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:28)
யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:29)
yarmooththaiyum athin ve'linilangga'laiyum, enkanneemaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap patta'nangga'l naalu. (yoasuvaa
21:29)
ஆசேரின் கோத்திரத்திலே
மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:30)
aasearin koaththiraththilea mishayaalaiyum athin ve'linilangga'laiyum, abthoanaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:30)
எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும்
அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:31)
elkaaththaiyum athin ve'linilangga'laiyum, reagoabaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap
patta'nangga'l naalu.
(yoasuvaa 21:31)
நப்தலி கோத்திரத்திலே
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக் கலிலேயாவிலுள்ள கேதேசையும்
அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும்
அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் மூன்று. (யோசுவா
21:32)
napthali koaththiraththilea kolaiseythavanukku adaikkalappatta'namaagak kalileayaavilu'l'la keatheasaiyum athin ve'linilangga'laiyum, ammoaththoaraiyum athin ve'linilangga'laiyum, karthaanaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap patta'nangga'l moon’ru. (yoasuvaa 21:32)
கெர்சோனியருக்கு அவர்கள்
வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின்
வெளிநிலங்களுட்படப் பதின்மூன்று. (யோசுவா
21:33)
kersoaniyarukku avarga'l vamsangga'linpadi u'ndaana
patta'nangga'lellaam avaiga'lin ve'linilangga'ludpadap pathinmoon’ru. (yoasuvaa
21:33)
மற்ற லேவியராகிய
மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன்
கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:34)
mat’ra leaviyaraagiya meraari puththirarin
vamsangga'lukkuch sebuloan koaththiraththilea yokniyaamaiyum athin ve'linilangga'laiyum, karthaavaiyum
athin ve'linilangga'laiyum, (yoasuvaa 21:34)
திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும்
அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:35)
thimnaavaiyum athin ve'linilangga'laiyum, nagalaalaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap
patta'nangga'l naalu.
(yoasuvaa 21:35)
ரூபன் கோத்திரத்திலே
பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:36)
rooban koaththiraththilea beasearaiyum athin ve'linilangga'laiyum, yaagasaavaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa
21:36)
கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:37)
kethemoaththaiyum athin ve'linilangga'laiyum, mepaagaaththaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap
patta'nangga'l naalu.
(yoasuvaa 21:37)
காத் கோத்திரத்திலே
கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும்
அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும்
அதின் வெளிநிலங்களையும், (யோசுவா
21:38)
kaath koaththiraththilea kolaiseythavanukku adaikkalappatta'namaaga, keeleayaaththilu'l'la raamoaththaiyum athin ve'linilangga'laiyum, maknaayeemaiyum athin ve'linilangga'laiyum, (yoasuvaa 21:38)
எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும்
அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்
பட்டணங்கள் நாலு. (யோசுவா
21:39)
esboanaiyum athin ve'linilangga'laiyum, yaasearaiyum athin ve'linilangga'laiyum koduththaarga'l; inthap patta'nangga'l naalu. (yoasuvaa
21:39)
இவைகளெல்லாம் லேவியரின்
மற்ற வம்சங்களாகிய மெராரி
புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த
பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம்
பன்னிரண்டு பட்டணங்கள். (யோசுவா
21:40)
ivaiga'lellaam leaviyarin mat’ra vamsangga'laagiya meraari
puththirarukku, avarga'l vamsangga'linpadi kidaiththa
patta'nangga'l; avarga'ludaiya pangguveetham pannira'ndu
patta'nangga'l. (yoasuvaa
21:40)
இஸ்ரவேல் புத்திரருடைய
காணியாட்சியின் நடுவிலே இருக்கிற
லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின்
வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு. (யோசுவா
21:41)
israveal puththirarudaiya kaa'niyaadchiyin naduvilea
irukki’ra
leaviyarin patta'nangga'lellaam, avaiga'lin ve'linilangga'ludpada naa’rpaththettu. (yoasuvaa 21:41)
இந்தப் பட்டணங்களில்
ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த
வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப்
பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
(யோசுவா 21:42)
inthap patta'nangga'lil ovvon’ri’rkum athathaich soozhntha ve'linilangga'l irunthathu;
ellaap patta'nangga'lukkum appadiyea irunthathu.
(yoasuvaa 21:42)
இந்தப்பிரகாரமாகக் கர்த்தர்
இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு
ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்;
அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே
குடியிருந்தார்கள். (யோசுவா 21:43)
inthappiragaaramaagak karththar
isravealukkuk koduppean en’ru avarga'ludaiya pithaakka'lukku aa'naiyitta theasaththaiyellaam koduththaar;
avarga'l
avaiga'laich
suthanthariththukko'ndu, avaiga'lilea kudiyirunthaarga'l. (yoasuvaa
21:43)
கர்த்தர் அவர்களுடைய
பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச்
சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய
எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும்
அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை;
அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர்
அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். (யோசுவா
21:44)
karththar avarga'ludaiya pithaakka'lukku aa'naiyittapadiyellaam avarga'laich sut’rilum yuththamillaamal i'laippaa’rappa'n'ninaar; avarga'ludaiya ellaach saththurukka'lilum oruvarum
avarga'lukku munbaaga ni’rkavillai; avarga'l saththurukka'laiyellaam karththar
avarga'l
kaiyil oppukkoduththaar. (yoasuvaa
21:44)
கர்த்தர் இஸ்ரவேல்
குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம்
நிறைவேறிற்று. (யோசுவா 21:45)
karththar israveal
kudumbaththaarukkuch solliyiruntha nalvaarththaiga'lilellaam oru vaarththaiyum thava’rippoagavillai; ellaam ni’raivea’rit’ru. (yoasuvaa 21:45)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!