கர்த்தர் யோசுவாவை
நோக்கி: (யோசுவா 20:1)
karththar yoasuvaavai noakki: (yoasuvaa
20:1)
நீ
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக்
கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக்
கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு
ஏற்படுத்திக்கொள்ளுங்கள். (யோசுவா 20:2)
nee israveal puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: a’riyaamal kaippisagaay oruvanaik
kon’ravan
oadippoayirukkumpadi, naan moaseayaikko'ndu ungga'lukkuk ka’rpiththa adaikkalappatta'nangga'lai ungga'lukku ea’rpaduththikko'l'lungga'l. (yoasuvaa
20:2)
அவைகள்
உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத்
தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும். (யோசுவா
20:3)
avaiga'l
ungga'lukku iraththappazhi vaanggugi’ravanudaiya kaikkuth
thappippoayirukkaththakka adaikkalamaayirukkum. (yoasuvaa
20:3)
அந்தப்
பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன்,
பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு,
அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின்
செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக;
அப்பொழுது அவர்கள் அவனைத்
தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே
குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள். (யோசுவா
20:4)
anthap patta'nangga'lil on’ri’rku oadivarugi’ravan, patta'naththin olimugavaasalil nin’ruko'ndu, anthap patta'naththinudaiya moopparin seviga'l keadka,
than kaariyaththaich solvaanaaga; appozhuthu
avarga'l
avanaith thangga'lidaththil patta'naththukku'l'lea searththukko'ndu, thangga'loadea kudiyirukka
avanukku idam kodukkakkadavarga'l. (yoasuvaa
20:4)
பழிவாங்குகிறவன் அவனைத்
தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல்
கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும். (யோசுவா
20:5)
pazhivaanggugi’ravan avanaith
thodarnthuvanthaal, avan pi’ranai mu’rpagaiyin’ri a’riyaamal kon’rathinaal, avanai
ivan kaiyil oppukkodaathirukkavea'ndum. (yoasuvaa
20:5)
நியாயம் விசாரிக்கும்
சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான
ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே
குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன்
தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
(யோசுவா 20:6)
niyaayam visaarikkum sabaikku munbaaga avan ni’rkumvaraikkum,
annaadka'lilirukki’ra pirathaana
aasaariyan mara'namadaiyumvaraikkum, avan anthap patta'naththilea kudiyirukkakkadavan; pinbu kolaiseythavan thaan vittoadippoana than patta'naththi’rkum than veetti’rkum thirumbippoagavea'ndum en’ru sol
en’raar.
(yoasuvaa 20:6)
அப்படியே அவர்கள்
நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும்,
எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும்,
யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய
கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள். (யோசுவா
20:7)
appadiyea avarga'l napthaliyin malaiththeasamaana kalileayaavilu'l'la keatheasaiyum, eppiraayeemin
malaiththeasaththilu'l'la seekeamaiyum, yoothaavin
malaiththeasaththilu'l'la ebiroanaagiya keeriyaath arbaavaiyum ea’rpaduththinaarga'l. (yoasuvaa 20:7)
எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு
அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும்
சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும்,
காத் கோத்திரத்திற்கு இருக்கும்
கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும்
பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள். (யோசுவா
20:8)
erigoavilirukkum yoarthaanukku
akkaraiyaana kizhakkilea rooban koaththiraththi’rku irukkum samaboomiyin vanaantharaththilu'l'la beasearaiyum, kaath koaththiraththi’rku irukkum keeleayaaththilu'l'la raamoaththaiyum, manaasea koaththiraththi’rku irukkum
baasaanilu'l'la koalaanaiyum
ku’riththuvaiththaarga'l. (yoasuvaa 20:8)
கைப்பிசகாய் ஒருவனைக்
கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக
நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால்
சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி,
இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும்,
அவர்கள் நடுவே தங்குகிற
பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள்
இவைகளே. (யோசுவா 20:9)
kaippisagaay oruvanaik
kon’ravan
evanoa avan sabaikku munbaaga ni’rkumvaraikkum, pazhivaanggugi’ravan kaiyinaal saagaathapadikku, oadippoay
othunggumpadi, israveal
puththirar yaavarukkum, avarga'l naduvea
thanggugi’ra paratheasikkum, ku’rikkappatta patta'nangga'l ivaiga'lea. (yoasuvaa
20:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!