மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின்
மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான
மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும்
பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
(யோசுவா 17:1)
manaasea koaththiraththi’rkum panggu kidaiththathu; avan yoaseappukku mutha’rpea’raanavan; manaaseayin mooththakumaaranum kileyaaththin
thagappanumaana maakeer yuththamanushanaanapadiyinaal, keeleayaaththum baasaanum avanukkuk
kidaiththathu. (yoasuvaa 17:1)
அபியேசரின் புத்திரரும்,
ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின்
புத்திரரும், செகேமின் புத்திரரும்,
எப்பேரின் புத்திரரும், செமீதாவின்
புத்திரருமான மனாசேயினுடைய மற்றக்
குமாரரின் புத்திரராகிய அபியேசரின்
வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள்
வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய
குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள். (யோசுவா
17:2)
abiyeasarin puththirarum,
ealeakkin puththirarum, asriyealin
puththirarum, sekeamin puththirarum, eppearin
puththirarum, semeethaavin puththirarumaana manaaseayinudaiya mat’rak kumaararin
puththiraraagiya abiyeasarin vamsangga'lukkuththakka suthantharam kodukkappattathu. thangga'l vamsangga'lukku'l'lea avarga'lea yoaseappudaiya kumaaranaagiya manaaseayin aa'npi'l'laiga'laayirunthaarga'l. (yoasuvaa
17:2)
மனாசேயின் குமாரனாகிய
மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின்
குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள்
தவிர குமாரர் இல்லை;
அவன் குமாரத்திகளின் நாமங்கள்,
மக்லாள், நோவாள், ஒக்லாள்,
மில்காள், திர்சாள் என்பவைகள்.
(யோசுவா 17:3)
manaaseayin kumaaranaagiya maakeerukkup pi’rantha kileyaaththin
kumaaranaagiya eppearin
magan seloppiyaaththukkuk kumaaraththiga'l thavira
kumaarar illai; avan kumaaraththiga'lin naamangga'l, maklaa'l, noavaa'l,
oklaa'l, milkaa'l,
thirsaa'l
enbavaiga'l. (yoasuvaa
17:3)
அவர்கள் ஆசாரியனாகிய
எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய
யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச்
சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர்
நடுவே எங்களுக்குச் சுதந்தரம்
கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக்
கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால்
அவர்கள் தகப்பனுடைய சகோதரரின்
நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி,
அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
(யோசுவா 17:4)
avarga'l aasaariyanaagiya eleyaasaarukkum noonin
kumaaranaagiya yoasuvaavukkum pirabukka'lukkum munbaagach searnthuvanthu: engga'l sagoatharar naduvea
engga'lukkuch
suthantharam kodukkumpadi
karththar moaseakkuk katta'laiyittaar en’raarga'l; aagaiyaal avarga'l thagappanudaiya sagoathararin naduvea,
karththarudaiya vaakkinpadi, avarga'lukkuch suthantharam koduththaan.
(yoasuvaa 17:4)
யோர்தானுக்கு அப்புறத்திலே
இருக்கிற கீலேயாத், பாசான்
என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச்
சீட்டிலே விழுந்தது பத்துப்
பங்குகளாம். (யோசுவா 17:5)
yoarthaanukku appu’raththilea irukki’ra keeleayaath,
baasaan
ennum theasangga'laiyallaamal, manaaseakkuch seettilea vizhunthathu
paththup pangguga'laam. (yoasuvaa 17:5)
மனாசேயின் குமாரத்திகள்
அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம்
பெற்றார்கள்; மனாசேயின் மற்றப்
புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது. (யோசுவா
17:6)
manaaseayin kumaaraththiga'l avan kumaararukku'l'lea suthantharam pet’raarga'l; manaaseayin mat’rap puththirarukkuk keeleayaath
theasam
kidaiththathu. (yoasuvaa 17:6)
மனாசேயின் எல்லை,
ஆசேர் தொடங்கிச் சீகேமின்
முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து
வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
(யோசுவா 17:7)
manaaseayin ellai, aasear thodanggich seekeamin munnirukki’ra mikmeaththaavukkum, anggeayirunthu valathupu’ramaay enthappuvaavin kudiga'lidaththi’rkum poagi’rathu. (yoasuvaa 17:7)
தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது;
மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ,
எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.
(யோசுவா 17:8)
thappuvaavin nilam manaaseakkuk kidaiththathu; manaaseayin ellaiyoadirukki’ra thappuvaavoa,
eppiraayeem puththirarin vasamaayit’ru. (yoasuvaa 17:8)
அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப்
போய், ஆற்றுக்குத் தெற்காக
இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின்
நடுவே இருக்கிற அவ்விடத்துப்
பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின்
எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும். (யோசுவா
17:9)
appu’ram antha ellai kaanaa ennum aat’rukkup poay, aat’rukkuth the’rkaaga i’ranggugi’rathu; manaaseayinudaiya patta'nangga'lin naduvea irukki’ra avvidaththup
patta'nangga'l eppiraayeemudaiyavaiga'l; manaaseayin ellai aat’rukku vadakkeayirunthu
samuththiraththi’rkup poay mudiyum.
(yoasuvaa 17:9)
தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு
மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும்,
கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
(யோசுவா 17:10)
thennaadu eppiraayeemudaiyathu; vadanaadu
manaaseayinudaiyathu; samuththiram athin ellai; athu vadakkea aasearaiyum, kizhakkea
isakkaaraiyum thodugi’rathu. (yoasuvaa
17:10)
இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று
நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும்
அதின் ஊர்களும், தோரின்
குடிகளும் அதின் ஊர்களும்,
எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின்
குடிகளும் அதின் ஊர்களும்,
மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள். (யோசுவா
17:11)
isakkaarilum aasearilumirukki’ra moon’ru naaduga'laagiya bethseyaanum athin oorga'lum, ibleyaamum athin oorga'lum, thoarin
kudiga'lum athin oorga'lum, enthoarin kudiga'lum athin oorga'lum, thaanaakin kudiga'lum athin oorga'lum, megithoavin kudiga'lum athin oorga'lum manaaseayinudaiyavaiga'l. (yoasuvaa 17:11)
மனாசேயின் புத்திரர்
அந்தப் பட்டணங்களின் குடிகளைத்
துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச்
சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
(யோசுவா 17:12)
manaaseayin puththirar anthap
patta'nangga'lin kudiga'laith thuraththividakkoodaama’rpoayit’ru; kaanaaniyar
anthach seemaiyileathaanea kudiyirukkavea'ndumen’ru irunthaarga'l. (yoasuvaa
17:12)
இஸ்ரவேல் புத்திரர்
பலத்தபோதும், கானானியரை முற்றிலும்
துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள். (யோசுவா
17:13)
israveal puththirar
balaththapoathum, kaanaaniyarai
mut’rilum
thuraththividaamal, avarga'laip paguthikattugi’ravarga'laakkikko'ndaarga'l. (yoasuvaa
17:13)
யோசேப்பின் புத்திரர்
யோசுவாவை நோக்கி: கர்த்தர்
எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள்
ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச்
சுதந்தரமாக ஒரே வீதத்தையும்
ஒரே பங்கையும் கொடுத்தது
என்ன என்று கேட்டார்கள்.
(யோசுவா 17:14)
yoaseappin puththirar yoasuvaavai noakki:
karththar engga'lai ithuvaraikkum aaseervathiththuvanthathinaal, naangga'l janamperuththavarga'laayirukki’roam; neer engga'lukkuch suthantharamaaga orea veethaththaiyum orea panggaiyum koduththathu enna en’ru keattaarga'l. (yoasuvaa
17:14)
அதற்கு யோசுவா:
நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம்
மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர்
ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத்
தேசத்துக்குப் போய் உங்களுக்கு
இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.
(யோசுவா 17:15)
atha’rku yoasuvaa: neengga'l janam peruththavarga'laayum, eppiraayeem
malaiga'l
ungga'lukku nerukkamaayumirunthaal, perisiyar reppaayeemiyar kudiyirukki’ra kaattuth theasaththukkup poay ungga'lukku idam u'ndaakkikko'l'lungga'l en’raan. (yoasuvaa
17:15)
அதற்கு யோசேப்பின்
புத்திரர்: மலைகள் எங்களுக்குப்
போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல்
பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக்
கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள். (யோசுவா
17:16)
atha’rku yoaseappin puththirar: malaiga'l engga'lukkup poathaathu;
pa'l'laththaakku naattilirukki’ra bethseyaanilum, athin oorga'lilum, yesrayeal
pa'l'laththaakkilum kudiyirukki’ra ellaak kaanaaniyaridaththilum iruppurathangga'l u'ndu en’raarga'l. (yoasuvaa
17:16)
யோசுவா யோசேப்பு
வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும்
நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு
மகா பராக்கிரமமும் உண்டு,
ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும். (யோசுவா
17:17)
yoasuvaa yoaseappu vamsaththaaraagiya eppiraayeemiyaraiyum manaaseayaraiyum noakki:
neengga'l
janamperuththavarga'l, ungga'lukku mahaa baraakkiramamum u'ndu,
oru panggumaaththiram alla, malaiththeasamum ungga'ludaiyathaagum. (yoasuvaa
17:17)
அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது
அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு
இருப்புரதங்கள் இருந்தாலும், அவர்கள்
பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத்
துரத்திவிடுவீர்கள் என்றான். (யோசுவா
17:18)
athu kaadaanapadiyinaalea, athai vettith thiruththungga'l, appozhuthu athin kadaiyaantharamattum ungga'ludaiyathaayirukkum; kaanaaniyarukku iruppurathangga'l irunthaalum,
avarga'l
balaththavarga'laayirunthaalum, neengga'l avarga'laith thuraththividuveerga'l en’raan. (yoasuvaa
17:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!