இஸ்ரவேல் புத்திரரின்
சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக்
கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
(யோசுவா 18:1)
israveal puththirarin sabaiyellaam seeloavilea koodi,
anggea
aasarippuk koodaaraththai ni’ruththinaarga'l. theasam avarga'l vasamaayit’ru. (yoasuvaa
18:1)
இஸ்ரவேல் புத்திரரில்
தங்கள் சுதந்தரத்தை இன்னும்
பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள்
இருந்தது. (யோசுவா 18:2)
israveal puththiraril
thangga'l suthantharaththai innum panggittukko'l'laatha
eazhu koaththirangga'l irunthathu. (yoasuvaa
18:2)
ஆகையால் யோசுவா
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி:
உங்கள் பிதாக்களின் தேவனாகிய
கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த
தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள்
எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள். (யோசுவா
18:3)
aagaiyaal yoasuvaa israveal puththirarai
noakki: ungga'l pithaakka'lin theavanaagiya karththar
ungga'lukkuk koduththa
theasaththaich
suthanthariththukko'l'lappoagi’ratha’rku, neengga'l enthamattum asathiyaayiruppeerga'l. (yoasuvaa 18:3)
கோத்திரத்திற்கு மும்மூன்று
மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள்
எழுந்து புறப்பட்டு, தேசத்திலே
சுற்றித்திரிந்து அதைத் தங்கள்
சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி,
என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை
அனுப்புவேன். (யோசுவா 18:4)
koaththiraththi’rku mummoon’ru manusharaith therinthuko'l'lungga'l; avarga'l ezhunthu
pu’rappattu, theasaththilea
sut’riththirinthu athaith
thangga'l suthantharaththi’rkuththakkathaaga vivaramaay
ezhuthi, ennidaththil ko'nduvarumpadi avarga'lai anuppuvean.
(yoasuvaa 18:4)
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள்
எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார்
வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும்
நிலைத்திருக்கட்டும். (யோசுவா 18:5)
athai eazhu panggaagap pagirakkadavarga'l; yoothaa
vamsaththaar the’rkeayirukki’ra thangga'l ellaiyilum, yoaseappu vamsaththaar vadakkeayirukki’ra thangga'l ellaiyilum
nilaiththirukkattum. (yoasuvaa
18:5)
நீங்கள் தேசத்தை
ஏழு பங்காக விவரித்து
எழுதி, இங்கே என்னிடத்தில்
கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே
நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய
சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். (யோசுவா
18:6)
neengga'l theasaththai eazhu panggaaga vivariththu
ezhuthi, inggea ennidaththil ko'nduvaarungga'l; appozhuthu
ivvidaththilea nammudaiya theavanaagiya karththarudaiya sannithiyil ungga'lukkaagach seettuppoaduvean. (yoasuvaa
18:6)
லேவியருக்கு உங்கள்
நடுவே பங்கில்லை; கர்த்தருடைய
ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்;
காத்தும் ரூபனும் மனாசேயின்
பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு
அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின்
தாசனாகிய மோசே தங்களுக்குக்
கொடுத்த தங்கள் சுதந்தரத்தை
அடைந்து தீர்ந்தது என்றான்.
(யோசுவா 18:7)
leaviyarukku ungga'l naduvea
panggillai; karththarudaiya aasaariyapattamea avarga'l suthantharam; kaaththum
roobanum
manaaseayin paathik
koaththiramum yoarthaanukku appu’raththilea kizhakkea
karththarin thaasanaagiya moasea thangga'lukkuk koduththa
thangga'l suthantharaththai adainthu
theernthathu en’raan. (yoasuvaa 18:7)
அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து
புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம்
எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி:
நீங்கள் போய், தேசத்திலே
சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை
எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது
இங்கே சீலோவிலே கர்த்தருடைய
சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். (யோசுவா
18:8)
appozhuthu antha manushar ezhunthu
pu’rappattuppoanaarga'l; theasaththaikku’riththu vivaram
ezhuthappoagi’ravarga'lai yoasuvaa noakki: neengga'l poay, theasaththilea sut’riththirinthu, athin vivaraththai ezhuthi,
ennidaththil thirumbivaarungga'l; appozhuthu
inggea seeloavilea karththarudaiya sannithiyil ungga'lukkaagach seettuppoaduvean en’ru sonnaan. (yoasuvaa
18:8)
அந்த மனுஷர்
போய், தேசம் எங்கும்
அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில்
இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
(யோசுவா 18:9)
antha manushar
poay, theasam enggum anthanthap patta'nangga'linpadiyea eazhu panggaaga oru pusthagaththil ezhuthikko'ndu,
seeloavil irukki’ra paa'layaththilea yoasuvaavinidaththil vanthaarga'l. (yoasuvaa
18:9)
அப்பொழுது யோசுவா
அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய
சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை
அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
(யோசுவா 18:10)
appozhuthu yoasuvaa avarga'lukkaagach seeloavilea karththarudaiya sannithiyil seettuppoattu, anggea israveal
puththirarukkuth theasaththai avarga'l pangguveethappadi panggittaan. (yoasuvaa 18:10)
பென்யமீன் புத்திரருக்கு
அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய
கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது;
அவர்கள் பங்கு வீதத்தின்
எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்புப்
புத்திரருக்கும் நடுவே இருந்தது.
(யோசுவா 18:11)
benyameen puththirarukku avarga'ludaiya vamsangga'linpadiyea avarga'ludaiya koaththiraththukkuch seettu
vizhunthathu; avarga'l panggu veethaththin ellaiyaanathu
yoothaa puththirarukkum yoaseappup puththirarukkum naduvea
irunthathu. (yoasuvaa 18:11)
அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து,
எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று,
அப்புறம் மேற்கே மலையில்
ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில்
போய் முடியும். (யோசுவா
18:12)
avarga'ludaiya vada ellai,
yoarthaanilirunthu vanthu, erigoavukku vadapakkamaaych
sen’ru, appu’ram mea’rkea malaiyil ea’ri, beththaavean vanaantharaththil poay mudiyum. (yoasuvaa
18:12)
அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய
லூசுக்கு வந்து, லூசுக்குத்
தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான
பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே
இறங்கும். (யோசுவா 18:13)
anggeayirunthu antha ellai,
beththealaagiya loosukku vanthu,
loosukkuth thenpakkamaayp poay, atharoathathaarukkuth thaazhvaana
beththoroanukkuth the’rkeayirukki’ra malaiyarugea i’ranggum. (yoasuvaa
18:13)
அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப்
பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக
இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப்
போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட
யூதா புத்திரரின் பட்டணமாகிய
கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
(யோசுவா 18:14)
anggeayirunthu ellai mea’rku moolaikkup
beththoroanukku ethirea
the’rkaaga irukki’ra malaikkuth
thenpu’ramaayp poayth
thirumbi,
keeriyaathbaagaal ennappatta yoothaa
puththirarin patta'namaagiya keeriyaathyeyaareem arugea poay mudiyum; ithu mea’rku ellai. (yoasuvaa
18:14)
தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து
எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
(யோசுவா 18:15)
then ellai keeriyaathyeyaareemin mudivilirukki’rathu; anggeayirunthu ellai mea’rkea poay, nepthoavaavin
neeroot’ri’rkuch
sen’ru, (yoasuvaa 18:15)
அங்கேயிருந்து இராட்சதரின்
பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய
குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான
மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம்
தெற்கே எபூசியருக்குப் பக்கமான
இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து
என்ரோகேலுக்கும் இறங்கிவந்து, (யோசுவா
18:16)
anggeayirunthu iraadchatharin pa'l'laththaakkil vadakkeayirukki’ra innoamudaiya
kumaararin pa'l'laththaakkukku ethiraana
malaiyadivaaraththi’rku i’ranggi, appu’ram the’rkea eboosiyarukkup pakkamaana innoamin
pa'l'laththaakkukkum, anggeayirunthu enroakealukkum i’ranggivanthu, (yoasuvaa 18:16)
வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து
அதும்மீம் மேட்டுக்கு எதிரான
கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின்
கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து, (யோசுவா
18:17)
vadakkea poay, enseameasukkum, anggeayirunthu athummeem
meattukku
ethiraana keliloaththi’rkum, anggeayirunthu rooban kumaaranaagiya boaganin kallinidaththi’rkum i’ranggivanthu, (yoasuvaa
18:17)
அராபாவுக்கு எதிரான
வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு
இறங்கும். (யோசுவா 18:18)
araabaavukku ethiraana vadapakkamaayp poay, araabaavukku i’ranggum. (yoasuvaa
18:18)
அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப்
போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான
உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோம்;
இது தென் எல்லை.
(யோசுவா 18:19)
appu’ram antha ellai,
bethoaklaavukku vadapakkamaayp poay, yoarthaanin mugaththuvaaraththi’rkuth the’rkaana uppukkadalin vadamunaiyilea mudinthupoam;
ithu then ellai.
(yoasuvaa 18:19)
கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு
அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும்
இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.
(யோசுவா 18:20)
kizhakkuppu’raththin ellai yoarthaanea;
ithu benyameen puththirarukku avarga'ludaiya vamsangga'linpadi sut’rilum irukki’ra ellaiga'lukku'l'laana
suthantharam. (yoasuvaa
18:20)
பென்யமீன் புத்திரரின்
கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற
பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா,
கேசீஸ் பள்ளத்தாக்கு, (யோசுவா
18:21)
benyameen puththirarin koaththiraththi’rku avarga'ludaiya vamsangga'linpadi irukki’ra patta'nangga'laavana: erigoa, bethoaklaa, keasees pa'l'laththaakku, (yoasuvaa
18:21)
பெத்அரபா, செமராயிம்,
பெத்தேல், (யோசுவா 18:22)
betharabaa, semaraayim, beththeal, (yoasuvaa
18:22)
ஆவீம், பாரா, ஓப்ரா, (யோசுவா
18:23)
aaveem, paaraa,
oapraa, (yoasuvaa 18:23)
கேப்பார்அமோனாய், ஒப்னி,
காபா என்னும் பன்னிரண்டு
பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
(யோசுவா 18:24)
keappaaramoanaay, opni, kaabaa ennum pannira'ndu
patta'nangga'lum avaiga'lin kiraamangga'lumea. (yoasuvaa
18:24)
கிபியோன், ராமா, பேரோத், (யோசுவா
18:25)
kibiyoan, raamaa, bearoath, (yoasuvaa
18:25)
மிஸ்பே, கெப்பிரா,
மோத்சா, (யோசுவா 18:26)
mispea, keppiraa,
moathsaa,
(yoasuvaa 18:26)
ரெக்கேம், இர்பெயேல்,
தாராலா, (யோசுவா 18:27)
rekkeam, irpeyeal,
thaaraalaa, (yoasuvaa 18:27)
சேலா, ஏலேப்,
எருசலேமாகிய எபூசி, கீபெயாத்,
கீரேயாத் என்னும் பதினான்கு
பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே;
பென்யமீன் புத்திரருக்கு அவர்கள்
வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம்
இதுவே. (யோசுவா 18:28)
sealaa, ealeap, erusaleamaagiya eboosi, keebeyaath, keereayaath ennum pathinaangu patta'nangga'lum avaiga'lin kiraamangga'lumea; benyameen puththirarukku avarga'l vamsangga'linpadi irukki’ra suthantharam ithuvea.
(yoasuvaa 18:28)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!