யோசேப்பின் புத்திரருக்கு
விழுந்த சீட்டினால் அகப்பட்ட
பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான
தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின்
மலைகள் மட்டுமுள்ள வனாந்தரவழியாகவும் சென்று,
(யோசுவா 16:1)
yoaseappin puththirarukku vizhuntha seettinaal agappatta pangguveethamaavathu:
erigoavin
arugea
irukki’ra
yoarthaanilirunthu, yoarthaanukkuk kizhakkaana
tha'n'neerukkup poay, erigoa thuvakkip
beththealin malaiga'l mattumu'l'la vanaantharavazhiyaagavum
sen’ru, (yoasuvaa 16:1)
பெத்தேலிலிருந்து லூசுக்குப்
போய், அர்கீயினுடைய எல்லையாகிய
அதரோத்தைக் கடந்து, (யோசுவா
16:2)
beththealilirunthu loosukkup poay, arkeeyinudaiya ellaiyaagiya atharoaththaik kadanthu,
(yoasuvaa 16:2)
மேற்கே
யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான
பெத்தொரோன் காசேர் என்னும்
எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும். (யோசுவா
16:3)
mea’rkea
yapleththiyarin ellaikkum thaazhvaana
beththoroan kaasear ennum ellaiga'lmattum i’ranggi, samuththiramvaraikkum poay mudiyum. (yoasuvaa
16:3)
இதை
யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும்
எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள். (யோசுவா
16:4)
ithai yoaseappin puththiraraagiya manaaseayum eppiraayeemum
suthanthariththaarga'l. (yoasuvaa 16:4)
எப்பிராயீம் புத்திரருக்கு
அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான
சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை,
அதரோத் அதார் துவக்கி,
மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
(யோசுவா 16:5)
eppiraayeem puththirarukku avarga'ludaiya vamsangga'linpadi u'ndaana
suthantharaththinudaiya kizhakku
ellai, atharoath athaar
thuvakki, mealaana beththoroanmattum poagi’rathu. (yoasuvaa 16:5)
மேற்கு
எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச்
சென்று, கிழக்கே தானாத்
சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக்
கடந்து, (யோசுவா 16:6)
mea’rku
ellai mikmeaththaaththi’rku vadakkaagach sen’ru, kizhakkea thaanaath seeloavukkuth thirumbi, athai yanoagaavukkuk kizhakkaagak kadanthu, (yoasuvaa
16:6)
யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நாராத்திற்கும் இறங்கி,
எரிகோவின் அருகே வந்து,
யோர்தானுக்குச் செல்லும். (யோசுவா
16:7)
yanoagaavilirunthu atharoaththi’rkum naaraaththi’rkum i’ranggi, erigoavin arugea vanthu, yoarthaanukkuch
sellum. (yoasuvaa
16:7)
தப்புவாவிலிருந்து மேற்கு
எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்;
இது எப்பிராயீம் புத்திரரின்
கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான
சுதந்தரம். (யோசுவா 16:8)
thappuvaavilirunthu mea’rku ellai, kaanaanathikkup poay, samuththiraththilea mudiyum;
ithu eppiraayeem puththirarin
koaththiraththi’rku avarga'l vamsangga'linpadi u'ndaana
suthantharam. (yoasuvaa
16:8)
பின்னும் எப்பிராயீம்
புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட
பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின்
நடுவே இருக்கிறது. (யோசுவா
16:9)
pinnum eppiraayeem puththirarukkup piraththiyeagamaayk kodukkappatta patta'nangga'lum avaiga'lin kiraamangga'lumellaam manaasea puththirarudaiya
suthantharaththin naduvea
irukki’rathu. (yoasuvaa
16:9)
அவர்கள் காசேரிலே
குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால்
கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி,
எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள். (யோசுவா
16:10)
avarga'l
kaasearilea kudiyiruntha
kaanaaniyaraith thuraththividavillai; aagaiyaal kaanaaniyar,
innaa'lmattum irukki’rapadi, eppiraayeemarukku'l'lea kudiyirunthu,
paguthikattugi’ravarga'laaych seavikki’raarga'l. (yoasuvaa
16:10)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!