யோசுவா வயதுசென்று
முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது. (யோசுவா
13:1)
yoasuvaa vayathusen’ru muthirnthavanaanapoathu, karththar
avanai noakki: nee vayathusen’ravanum muthirnthavanumaanaay; suthanthariththukko'l'lavea'ndiya theasam innum mahaa visthaaramaayirukki’rathu. (yoasuvaa 13:1)
மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு
எதிரான சீகோர் ஆறுதுவக்கிக்
கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும்
வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின்
எல்லா எல்லைகளும், கெசூரிம்
முழுவதும், (யோசுவா 13:2)
meethiyaayirukki’ra theasam evaiyenil, egipthukku ethiraana seegoar
aa’ruthuvakkik kaanaaniyaraich
searnthathaaga e'n'nappadum vadakkeayirukki’ra ekroanin
ellaimattumu'l'la pelistharin
ellaa ellaiga'lum, kesoorim muzhuvathum, (yoasuvaa
13:2)
காசா, அஸ்தோத்,
அஸ்கலோன், காத், எக்ரோன்
என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய
ஐந்து அதிபதிகளின் நாடும்,
ஆவியரின் நாடும், (யோசுவா
13:3)
kaasaa, asthoath, askaloan,
kaath, ekroan engi’ra patta'nangga'lilirukki’ra pelistharudaiya ainthu
athibathiga'lin naadum,
aaviyarin naadum, (yoasuvaa
13:3)
தெற்கே துவக்கி
ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற
கானானியரின் சகல தேசமும்,
சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,
(யோசுவா 13:4)
the’rkea thuvakki aappekmattum emoariyar
ellaivaraikkum irukki’ra kaanaaniyarin
sagala theasamum, seethoaniyarukkaduththa meyaaraa
naadum, (yoasuvaa 13:4)
கிப்லியரின் நாடும்,
சூரியோதயப் புறத்தில் எர்மோன்
மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத்
முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன்
முழுவதும், (யோசுவா 13:5)
kibliyarin naadum,
sooriyoathayap pu’raththil ermoan
malaiyadivaaraththil irukki’ra baagaalkaath mutha’rko'ndu aamaaththukku'l piraveasikkumattumu'l'la leebanoan muzhuvathum, (yoasuvaa
13:5)
லீபனோன் துவக்கி
மிஸ்ரபோத்மாயீம்மட்டும் மலைகளில் குடியிருக்கிற
யாவருடைய நாடும், சீதோனியருடைய
எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல்
புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்;
நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச்
சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப்
பங்கிடவேண்டும். (யோசுவா 13:6)
leebanoan thuvakki misrapoathmaayeemmattum malaiga'lil kudiyirukki’ra yaavarudaiya
naadum, seethoaniyarudaiya ellaa naadumthaanea. naan avarga'lai israveal puththirarukku munbaagath thuraththuvean; naan unakkuk katta'laiyittapadiyea, nee isravealukkuch
suthantharamaagach seettuga'laimaaththiram poattuth theasaththaip panggidavea'ndum. (yoasuvaa
13:6)
ஆதலால் இந்தத்
தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின்
பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு
என்றார். (யோசுவா 13:7)
aathalaal inthath
theasaththai onbathu koaththirangga'lukkum, manaaseayin paathikkoaththiraththukkum suthantharamaagap panggidu en’raar. (yoasuvaa 13:7)
மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும்
காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை
அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய
மோசே யோர்தானுக்கு அப்புறத்தில்
கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
(யோசுவா 13:8)
manaaseayin paathikkoaththiraththaarum roobaniyarum kaaththiyarum
thangga'l suthantharaththai adainthu
theernthathu; athaik karththarin
thaasanaagiya moasea yoarthaanukku
appu’raththil kizhakkea
avarga'lukkuk koduththaan.
(yoasuvaa 13:8)
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும்,
நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும்
துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின்
சமனான பூமி யாவையும்,
(யோசுவா 13:9)
arnoan aat’rangkaraiyilirukki’ra aaroavearum, nathiyin
maththiyilirukki’ra patta'namum thuvakkith
theeboanmattumirukki’ra methebaavin samanaana boomi yaavaiyum,
(yoasuvaa 13:9)
எஸ்போனிலிருந்து அம்மோன்
புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய
சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும், (யோசுவா
13:10)
esboanilirunthu ammoan puththirarin
ellaimattum aa'nda
emoariyarin raajaavaagiya seegoanukkuriya sagala patta'nangga'laiyum, (yoasuvaa 13:10)
கீலேயாத்தையும், கெசூரியர்
மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும்,
எர்மோன் மலை முழுவதையும்,
(யோசுவா 13:11)
keeleayaaththaiyum, kesooriyar maakaaththiyarudaiya ellaiyilu'l'la naattaiyum, ermoan
malai muzhuvathaiyum, (yoasuvaa
13:11)
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும்
ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின
இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின்
ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான்
முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
(யோசுவா 13:12)
astharoaththilum ethreayilum
aa'ndu, moasea mu’riya adiththuth thuraththina
iraadchatharil meethiyaayiruntha baasaanin raajaavaagiya oakukkuch salkaamattumiruntha baasaan muzhuvathaiyum avarga'lukkuk koduththaan.
(yoasuvaa 13:12)
இஸ்ரவேல் புத்திரரோ
கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும்
மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின்
நடுவே குடியிருக்கிறார்கள். (யோசுவா
13:13)
israveal puththiraroa
kesooriyaraiyum maakaaththiyaraiyum thuraththividavillai, kesooriyarum maakaaththiyarum innaa'lvaraikkum isravealin
naduvea kudiyirukki’raarga'l. (yoasuvaa
13:13)
லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச்
சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே
அவர்களுடைய சுதந்தரம். (யோசுவா
13:14)
leaviyarin koaththiraththukkumaaththiram avan suthantharam kodukkavillai; isravealin
theavanaagiya karththar
avarga'lukkuch
sonnapadiyea, avarudaiya
thaganabaliga'lea avarga'ludaiya suthantharam. (yoasuvaa
13:14)
மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய
வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.
(யோசுவா 13:15)
moasea rooban puththirarin koaththiraththukku avarga'ludaiya vamsangga'lukkuththakkathaagach
suthantharam koduththaan.
(yoasuvaa 13:15)
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும்,
ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம்
தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி
முழுவதும், (யோசுவா 13:16)
arnoan aat’rangkaraiyilirukki’ra aaroavearum, aat’rin maththiyilirukki’ra patta'nam thodanggi methebaavaraikkummu'l'la
samaboomi muzhuvathum, (yoasuvaa
13:16)
சமபூமியிலிருக்கிற எஸ்போனும்,
அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன்,
பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன், (யோசுவா
13:17)
samaboomiyilirukki’ra esboanum, athin ellaap
patta'nangga'lumaagiya theeboan, baamoathbaagaal, bethbaagaalmeyoan, (yoasuvaa 13:17)
யாகசா, கெதெமோத்,
மேபாகாத், (யோசுவா 13:18)
yaagasaa, kethemoath, meapaagaath, (yoasuvaa
13:18)
கீரியாத்தாயீம், சிப்மா,
பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
(யோசுவா 13:19)
keeriyaaththaayeem, sibmaa, pa'l'laththaakkin malaiyilu'l'la sereathsagaar, (yoasuvaa
13:19)
பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத்
முதலான (யோசுவா 13:20)
bethpeayoar, asthoathpiskaa, bethyesimoath muthalaana (yoasuvaa
13:20)
சமபூமியிலுள்ள எல்லாப்
பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த
சீகோன் என்னும் எமோரியருடைய
ராஜாவின் ராஜ்யம் முழுவதும்
அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச்
சீகோனையும், தேசத்திலே குடியிருந்து
சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின்
பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். (யோசுவா
13:21)
samaboomiyilu'l'la ellaap
patta'nangga'lum, esboanil aa'ndiruntha seegoan
ennum emoariyarudaiya raajaavin
raajyam muzhuvathum avarga'l ellaikku'l'laayit’ru; anthach seegoanaiyum, theasaththilea kudiyirunthu seegoanin athibathiyaayiruntha eavi, rekkeam,
soor, oor, reabaa ennum meethiyaanin
pirabukka'laiyum moasea vettippoattaan. (yoasuvaa 13:21)
இஸ்ரவேல் புத்திரர்
வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின்
குமாரனாகிய பாலாம் என்னும்
குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். (யோசுவா
13:22)
israveal puththirar
vettina
mat’ravarga'loadungkooda, beayoarin kumaaranaagiya baalaam ennum ku’risollugi’ravanaiyum pattayaththinaal vettippoattaarga'l. (yoasuvaa
13:22)
அப்படியே யோர்தானும்
அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின்
எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும்
இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள்
வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.
(யோசுவா 13:23)
appadiyea yoarthaanum
atha’rkaduththathum rooban puththirarin
ellaiyaayit’ru; inthap
patta'nangga'lum ivaiga'lin kiraamangga'lum rooban puththirarukku, avarga'l vamsangga'linpadi vantha
suthantharam. (yoasuvaa
13:23)
காத் புத்திரரின்
கோத்திரத்துக்கு மோசே அவர்கள்
வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
(யோசுவா 13:24)
kaath puththirarin
koaththiraththukku moasea avarga'l vamsangga'lukkuththakkathaagak koduththathu ennavenil:
(yoasuvaa 13:24)
யாசேரும், கீலேயாத்தின்
சகல பட்டணங்களும், ரபாவுக்கு
எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன்
புத்திரரின் பாதித் தேசமும்,
(யோசுவா 13:25)
yaasearum, keeleayaaththin
sagala patta'nangga'lum, rabaavukku ethirea irukki’ra aaroavearmattumu'l'la ammoan
puththirarin paathith theasamum, (yoasuvaa
13:25)
எஸ்போன் துவக்கி
ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம்வரைக்கும் இருக்கிறதும்,
மகனாயீம் துவக்கித் தெபீரின்
எல்லைமட்டும் இருக்கிறதும், (யோசுவா
13:26)
esboan thuvakki raamaath
mispeamattum beththoneemvaraikkum irukki’rathum, maganaayeem thuvakkith
thebeerin
ellaimattum irukki’rathum, (yoasuvaa
13:26)
எஸ்போனின் ராஜாவாகிய
சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்
பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும்,
பெத்நிம்ராவும், சுக்கோத்தும், சாப்போனும்,
யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே
யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத்
கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும்,
அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. (யோசுவா
13:27)
esboanin raajaavaagiya seegoanudaiya raajyaththin
mat’rap
panggaagiya pa'l'laththaakkilirukki’ra beththaaraamum,
bethnimraavum, sukkoaththum, saappoanum, yoarthaanmattum irukki’rathum, kizhakkea
yoarthaanin karaiyoaramaayk kinnareath
kadalin kadaiyaantharamattum irukki’rathum, avarga'l ellaikku'l'laayit’ru. (yoasuvaa 13:27)
இந்தப் பட்டணங்களும்
இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய
வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.
(யோசுவா 13:28)
inthap patta'nangga'lum ivaiga'lin kiraamangga'lum kaath puththirarukku, avarga'ludaiya vamsangga'linpadi vantha
suthantharam. (yoasuvaa
13:28)
மனாசே புத்திரரின்
பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான்.
(யோசுவா 13:29)
manaasea puththirarin paathik
koaththiraththukkum moasea avarga'l vamsaththukkuththakkathaagak koduththaan.
(yoasuvaa 13:29)
மகனாயீம் துவக்கி,
பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான்
முழுவதும், பாசானிலுள்ள யாவீரின்
சகல ஊர்களுமான அறுபது
பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. (யோசுவா
13:30)
maganaayeem thuvakki, baasaanin raajaavaagiya oakin muzhu raajyamaayirukki’ra baasaan muzhuvathum,
baasaanilu'l'la yaaveerin sagala
oorga'lumaana a’rubathu patta'nangga'l avarga'l ellaikku'l'laayit’ru. (yoasuvaa 13:30)
பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே
அஸ்தரோத், எத்ரேயி என்னும்
ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின்
குமாரனாகிய மாகீரின் புத்திரர்
பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
(யோசுவா 13:31)
paathik keeleayaaththaiyum, baasaanilea astharoath,
ethreayi ennum oaku raajyaththin patta'nangga'laiyum, manaaseayin kumaaranaagiya maakeerin puththirar
paathipearukku avarga'ludaiya vamsangga'linpadiyea koduththaan.
(yoasuvaa 13:31)
மோசே கிழக்கே
எரிகோவின் அருகே யோர்தானுக்கு
அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக்
கொடுத்தவைகள் இவைகளே. (யோசுவா
13:32)
moasea kizhakkea erigoavin arugea yoarthaanukku
akkaraiyilirukki’ra moavaabin samanaana ve'liga'lil suthantharamaagak koduththavaiga'l ivaiga'lea. (yoasuvaa 13:32)
லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச்
சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய
சுதந்தரம். (யோசுவா 13:33)
leavi koaththiraththi’rku moasea suthantharam kodukkavillai, isravealin
theavanaagiya karththar
avarga'lukkuch
solliyirukki’rapadi, avarea avarga'ludaiya
suthantharam. (yoasuvaa
13:33)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!