கானான்
தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர்
சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய
எலெயாசாரும், நூனின் குமாரனாகிய
யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய
கோத்திரப் பிதாக்களின் தலைவரும்,
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, (யோசுவா
14:1)
kaanaan theasaththilea israveal puththirar suthanthariththukko'nda theasangga'lai aasaariyanaagiya eleyaasaarum, noonin
kumaaranaagiya yoasuvaavum israveal
puththirarudaiya koaththirap pithaakka'lin
thalaivarum, karththar moaseayaikko'ndu katta'laiyittapadi seettuppoattu, (yoasuvaa
14:1)
ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப்
பங்கிட்டார்கள். (யோசுவா 14:2)
onbatharaik koaththirangga'lukkum
suthantharamaagap panggittaarga'l. (yoasuvaa
14:2)
மற்ற
இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே
சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள்
நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை. (யோசுவா
14:3)
mat’ra
ira'ndaraik koaththirangga'lukkum moasea yoarthaanukku appu’raththilea
suthantharam koduththirunthaan; leaviyarukkumaaththiram avarga'l naduvea suthantharam kodukkavillai. (yoasuvaa
14:3)
மனாசே
எப்பிராயீம் என்னும் யோசேப்பின்
புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால்
அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே
பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய
ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக
வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள். (யோசுவா
14:4)
manaasea
eppiraayeem ennum yoaseappin puththirar
ira'ndu koaththirangga'laanaarga'l; aathalaal
avarga'l
leaviyarukkuth theasaththilea panggukodaamal, kudiyirukkumpadi patta'nangga'laiyum, avarga'ludaiya aadumaaduga'l muthalaana
soththukkaaga ve'linilangga'laiyumaaththiram
avarga'lukkuk koduththaarga'l. (yoasuvaa
14:4)
கர்த்தர் மோசேக்குக்
கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர்
செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள். (யோசுவா
14:5)
karththar moaseakkuk katta'laiyittapadi israveal
puththirar seythu,
theasaththaip panggittaarga'l. (yoasuvaa 14:5)
அப்பொழுது யூதாவின்
புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்;
கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய
காலேப் அவனை நோக்கி:
காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய
மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். (யோசுவா
14:6)
appozhuthu yoothaavin puththirar
kilgaalilea yoasuvaavinidaththil vanthaarga'l; keanaasiyanaana eppunneayin
kumaaranaagiya kaaleab avanai
noakki: kaatheasbarneyaavilea karththar ennaikku’riththum ummaikku’riththum theavanudaiya
manushanaagiya moaseayoadea sonna vaarththaiyai
neer a’riveer. (yoasuvaa
14:6)
தேசத்தை வேவுபார்க்கக்
கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு
நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு
மறுசெய்தி கொண்டுவந்தேன். (யோசுவா
14:7)
theasaththai veavupaarkkak
karththarin thaasanaagiya moasea ennaik
kaatheasbarneyaavilirunthu anuppugi’rapoathu, enakku
naa’rpathu vayathaayirunthathu; en iruthayaththilu'l'lapadiyea avarukku
ma’ruseythi ko'nduvanthean. (yoasuvaa
14:7)
ஆனாலும் என்னோடேகூட
வந்த என் சகோதரர்
ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய
கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். (யோசுவா
14:8)
aanaalum ennoadeakooda vantha
en sagoatharar janaththin
iruthayaththaik karaiyappa'n'ninaarga'l; naanoa en theavanaagiya karththarai uththamamaayp
pinpat’rinean. (yoasuvaa
14:8)
அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை
உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த
தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும்
சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி
ஆணையிட்டார். (யோசுவா 14:9)
annaa'lilea moasea: nee en theavanaagiya karththarai uththamamaayp
pinpat’rinapadiyinaal, un kaal mithiththa
theasam
unakkum un pi'l'laiga'lukkum en’raikkum suthantharamaayirukkakkadavathu en’ru solli aa'naiyittaar. (yoasuvaa
14:9)
இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே
என்னை உயிரோடே காத்தார்;
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர்
அந்த வார்த்தையை மோசேயோடே
சொல்லி இப்போது நாற்பத்தைந்து
வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து
வயதுள்ளவன். (யோசுவா 14:10)
ippoathum, ithoa, karththar sonnapadiyea ennai uyiroadea kaaththaar;
isravealar vanaantharaththil sagncharikkaiyil, karththar antha vaarththaiyai moaseayoadea solli ippoathu
naa’rpaththainthu varushamaayit’ru; ithoa,
in’ru
naan e'nbaththainthu vayathu'l'lavan. (yoasuvaa
14:10)
மோசே
என்னை அனுப்புகிற நாளில்,
எனக்கு இருந்த அந்தப்
பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு
இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும்
வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு
இருந்த பெலன் இப்போதும்
எனக்கு இருக்கிறது. (யோசுவா
14:11)
moasea
ennai anuppugi’ra naa'lil, enakku
iruntha anthap belan innaa'lvaraikkum enakku
irukki’rathu; yuththaththi’rkup poakkum
varaththumaayirukki’ratha’rku appoathu enakku
iruntha belan ippoathum
enakku irukki’rathu. (yoasuvaa 14:11)
ஆகையால் கர்த்தர்
அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்
தாரும்; அங்கே ஏனாக்கியரும்,
அரணிப்பான பெரிய பட்டணங்களும்
உண்டென்று நீர் அந்நாளிலே
கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர்
சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.
(யோசுவா 14:12)
aagaiyaal karththar
annaa'lilea sonna
intha malainaattai enakkuth thaarum;
anggea
eanaakkiyarum, ara'nippaana periya
patta'nangga'lum u'nden’ru neer annaa'lilea kea'lvippatteerea; karththar
ennoadiruppaaraanaal, karththar sonnapadi, avarga'laith thuraththividuvean en’raan. (yoasuvaa
14:12)
அப்பொழுது யோசுவா:
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை
ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச்
சுதந்தரமாகக் கொடுத்தான். (யோசுவா
14:13)
appozhuthu yoasuvaa: eppunneayin kumaaranaagiya kaaleabai aaseervathiththu, ebiroanai avanukkuch suthantharamaagak koduththaan. (yoasuvaa
14:13)
ஆதலால்
கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய
காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி,
எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று. (யோசுவா
14:14)
aathalaal keanaasiyanaana eppunneayin kumaaranaagiya kaaleab isravealin
theavanaagiya karththarai
uththamamaayp pinpat’rinapadiyinaal,
innaa'lmattum irukki’rapadi, ebiroan avanukkuch suthantharamaayit’ru. (yoasuvaa 14:14)
முன்னே
எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம்
ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது. (யோசுவா
14:15)
munnea ebiroanukkuk keeriyaatharbaa en’ru pearirunthathu; arbaa enbavan eanaakkiyarukku'l'lea periya
manushanaayirunthaan; yuththam oaynthathinaal theasam amaithalaayirunthathu. (yoasuvaa
14:15)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!