அவர்கள்
எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம்
வருஷம் முதலாம் மாதத்தில்
கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
9:1)
avarga'l egipthutheasaththilirunthu pu’rappatta ira'ndaam varusham
muthalaam maathaththil karththar seenaay
vanaantharaththil moaseayai noakki: (e’n’naagamam
9:1)
குறித்த
காலத்தில் இஸ்ரவேல் புத்திரர்
பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். (எண்ணாகமம்
9:2)
ku’riththa kaalaththil israveal
puththirar paskaavai aasarikkakkadavarga'l. (e’n’naagamam 9:2)
இந்த மாதம் பதினாலாந்தேதி
அந்திநேரமான வேளையாகிய குறித்த
காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய
எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
(எண்ணாகமம் 9:3)
intha maatham
pathinaalaantheathi anthinearamaana vea'laiyaagiya ku’riththa kaalaththil
athai aasarikkakkadaveerga'l; atha’rkuriya ellaak katta'laiyinpadiyeayum mu’raimaiga'linpadiyeayum
athai aasarikkakkadaveerga'l en’raar. (e’n’naagamam 9:3)
அப்படியே
பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான். (எண்ணாகமம்
9:4)
appadiyea paskaavai
aasarikkumpadi moasea israveal
puththirarukkuk katta'laiyittaan. (e’n’naagamam
9:4)
அதினால்
முதலாம் மாதம் பதினான்காம்
தேதி அந்திநேரமான வேளையில்,
சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை
ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக்
கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர்
செய்தார்கள். (எண்ணாகமம் 9:5)
athinaal muthalaam
maatham pathinaangaam theathi anthinearamaana vea'laiyil, seenaay
vanaantharaththil paskaavai aasariththaarga'l; karththar moaseakkuk katta'laiyittapadiyellaam israveal puththirar seythaarga'l. (e’n’naagamam
9:5)
அந்நாளில்
சிலர் மனித பிரேதத்தினால்
தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள்
அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும்
முன்பாக வந்து: (எண்ணாகமம்
9:6)
annaa'lil
silar manitha
pireathaththinaal theettuppattapadiyinaal paskaavai
aasarikkaththagaathavarga'laayirunthaarga'l; avarga'l annaa'lilea
moaseakkum aaroanukkum
munbaaga
vanthu: (e’n’naagamam 9:6)
நாங்கள்
மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த
காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச்
செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். (எண்ணாகமம்
9:7)
naangga'l manitha pireathaththinaal theettuppattavarga'l; ku’riththa kaalaththil
israveal puththiraroadeakoodak karththarukkuk kaa'nikkaiyaich
seluththaathapadikku, naangga'l vilakkappattirukkavea'ndiyathu enna en’raarga'l. (e’n’naagamam
9:7)
மோசே அவர்களை நோக்கி:
பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது
என்ன என்று கேட்பேன்
என்றான். (எண்ணாகமம் 9:8)
moasea avarga'lai noakki: po’rungga'l; karththar ungga'laikku’riththuk katta'laiyiduvathu
enna en’ru keadpean
en’raan.
(e’n’naagamam 9:8)
கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
9:9)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 9:9)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள்
சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால்
தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை
ஆசரிக்கவேண்டும். (எண்ணாகமம் 9:10)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: ungga'lilaagilum ungga'l santhathiyaarilaagilum oruvan pireathaththinaal theettuppattaalum, pirayaa'namaayth thoorampoayirunthaalum, karththarukkup paskaavai
aasarikkavea'ndum. (e’n’naagamam
9:10)
அவர்கள்
அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான
வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும்
கசப்பான கீரைகளோடும் புசித்து,
(எண்ணாகமம் 9:11)
avarga'l athai ira'ndaam
maatham pathinaalaantheathi anthinearamaana vea'laiyil
aasariththu, athaip
pu'lippillaatha appangga'loadum kasappaana keeraiga'loadum pusiththu, (e’n’naagamam 9:11)
விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக
வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய
சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள். (எண்ணாகமம்
9:12)
vidiya’rkaalammattum athil on’rum meethiyaaga vaikkaamalum, athil oru elumbaiyum mu’rikkaamalum, paskaavinudaiya sagala
mu’raimaiga'linpadiyum athai aasarikkakkadavarga'l. (e’n’naagamam
9:12)
ஒருவன்
சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை
ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா
குறித்த காலத்தில் கர்த்தரின்
பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல்
அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன்
தன் பாவத்தைச் சுமப்பான்.
(எண்ணாகமம் 9:13)
oruvan
suththamu'l'lavanumaayp pirayaa'nam
poagaathavanumaayirunthum, paskaavai
aasarikkaatheapoanaal, antha aaththumaa ku’riththa kaalaththil
karththarin baliyaich seluththaathapadiyinaal than janaththaaril iraamal
a’ruppu'ndupoavaan; antha manithan than paavaththaich sumappaan. (e’n’naagamam
9:13)
ஒரு பரதேசி உங்களிடத்திலே
தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை
ஆசரிக்க வேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின்
கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும்
சுதேசிக்கும் ஒரே கட்டளை
இருக்கவேண்டும் என்று சொல் என்றார். (எண்ணாகமம்
9:14)
oru paratheasi ungga'lidaththilea thanggi, karththarukkup paskaavai
aasarikka
vea'ndumaanaal, avan athaip
paskaavin katta'laippadiyum
athin mu’raimaiyinpadiyum aasarikkakkadavan; paratheasikkum
sutheasikkum orea katta'lai irukkavea'ndum en’ru sol en’raar. (e’n’naagamam
9:14)
வாசஸ்தலம்
ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது
சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை
மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான
ஒரு தோற்றம் உண்டாயிற்று;
அது விடியற்காலமட்டும் இருந்தது.
(எண்ணாகமம் 9:15)
vaasasthalam sthaabanagnseyyappatta naa'lilea, meagamaanathu saadchiyin koodaaramaagiya vaasasthalaththai moodit’ru; saayanggaalamaanapoathu, vaasasthalaththinmeal akkinimayamaana oru thoat’ram u'ndaayit’ru; athu vidiya’rkaalamattum irunthathu. (e’n’naagamam
9:15)
இப்படி
நித்தமும் இருந்தது; பகலில்
மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. (எண்ணாகமம்
9:16)
ippadi niththamum
irunthathu; pagalil meagamum, iravil akkiniththoat’ramum athai moodikko'ndirunthathu. (e’n’naagamam
9:16)
மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல்
புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல்
புத்திரர் பாளயமிறங்குவார்கள். (எண்ணாகமம்
9:17)
meagam koodaaraththilirunthu mealea
ezhumbumpoathu israveal
puththirar pirayaa'nampa'n'nuvaarga'l; meagam thanggumidaththil israveal puththirar
paa'layami’rangguvaarga'l. (e’n’naagamam 9:17)
கர்த்தருடைய
கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர்
பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம்
அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள். (எண்ணாகமம்
9:18)
karththarudaiya katta'laiyinpadiyea israveal
puththirar pirayaa'nappaduvaarga'l; karththarudaiya katta'laiyinpadiyea paa'layami’rangguvaarga'l; meagam vaasasthalaththinmeal thanggiyirukkum naa'lellaam
avarga'l
paa'layaththil thanggiyiruppaarga'l. (e’n’naagamam
9:18)
மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல்
புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின்
காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள். (எண்ணாகமம்
9:19)
meagam nedunaa'l vaasasthalaththinmeal thanggiyirukkumpoathu, israveal
puththirar pirayaa'nappadaamal karththarin
kaavalaik kaaththukko'ndiruppaarga'l. (e’n’naagamam 9:19)
மேகம் சிலநாள் மாத்திரம்
வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய
கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய
கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள். (எண்ணாகமம்
9:20)
meagam silanaa'l maaththiram
vaasasthalaththinmeal thanggiyirukkumpoathu, karththarudaiya katta'laiyinpadiyea paa'layami’ranggiyirunthu, karththarudaiya katta'laiyinpadiyea pirayaa'nappaduvaarga'l. (e’n’naagamam
9:20)
மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து,
விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும்
இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது
பிரயாணப்படுவார்கள். (எண்ணாகமம் 9:21)
meagam saayanggaalanthodanggi vidiya’rkaalamattum irunthu,
vidiya’rkaalaththil uyara ezhumbumpoathu, udanea pirayaa'nappaduvaarga'l; pagalilaagilum iravilaagilum meagam ezhumbumpoathu pirayaa'nappaduvaarga'l. (e’n’naagamam 9:21)
மேகமானது
இரண்டுநாளாவது ஒரு மாதமாவது
ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல்
புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ
பிரயாணப்படுவார்கள். (எண்ணாகமம் 9:22)
meagamaanathu ira'ndunaa'laavathu oru maathamaavathu oru varushamaavathu vaasasthalaththinmeal thanggiyirukkumpoathu, israveal
puththirar pirayaa'nampa'n'naamal paa'layami’ranggiyiruppaarga'l; athu uyara ezhumbumpoathoa pirayaa'nappaduvaarga'l. (e’n’naagamam
9:22)
கர்த்தருடைய
கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய
கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர்
மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய
காவலைக் காத்துக்கொள்வார்கள். (எண்ணாகமம்
9:23)
karththarudaiya katta'laiyinpadiyea paa'layami’rangguvaarga'l; karththarudaiya katta'laiyinpadiyea pirayaa'nampa'n'nuvaarga'l; karththar moaseayaikko'ndu katta'laiyidugi’rapadiyea karththarudaiya kaavalaik
kaaththukko'lvaarga'l. (e’n’naagamam
9:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!