Sunday, November 06, 2016

E'n'naagamam 8 | எண்ணாகமம் 8 | Numbers 8

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  8:1)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  8:1)

நீ  ஆரோனோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீ  விளக்குகளை  ஏற்றும்போது  ஏழு  விளக்குகளும்  விளக்குத்தண்டிற்கு  நேரே  எரியவேண்டும்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  8:2)

nee  aaroanoadea  sollavea'ndiyathu  ennaven’raal:  nee  vi'lakkuga'lai  eat’rumpoathu  eazhu  vi'lakkuga'lum  vi'lakkuththa'ndi’rku  nearea  eriyavea'ndum  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  8:2)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபிரகாரம்  ஆரோன்  செய்து,  விளக்குத்தண்டிற்கு  நேரே  ஒழுங்காக  அதின்  விளக்குகளை  ஏற்றினான்.  (எண்ணாகமம்  8:3)

karththar  moaseakkuk  katta'laiyittapiragaaram  aaroan  seythu,  vi'lakkuththa'ndi’rku  nearea  ozhunggaaga  athin  vi'lakkuga'lai  eat’rinaan.  (e’n’naagamam  8:3)

இந்தக்  குத்துவிளக்கு,  அதின்  பாதமுதல்  பூக்கள்வரைக்கும்  பொன்னினால்  அடிப்புவேலையாய்ச்  செய்யப்பட்டிருந்தது;  கர்த்தர்  மோசேக்குக்  காண்பித்த  மாதிரியின்படியே  அவன்  குத்துவிளக்கை  உண்டாக்கினான்.  (எண்ணாகமம்  8:4)

inthak  kuththuvi'lakku,  athin  paathamuthal  pookka'lvaraikkum  ponninaal  adippuvealaiyaaych  seyyappattirunthathu;  karththar  moaseakkuk  kaa'nbiththa  maathiriyinpadiyea  avan  kuththuvi'lakkai  u'ndaakkinaan.  (e’n’naagamam  8:4)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  8:5)

pinnum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  8:5)

நீ  இஸ்ரவேல்  சந்ததியாரினின்று  லேவியரைப்  பிரித்தெடுத்து,  அவர்களைச்  சுத்திகரிப்பாயாக.  (எண்ணாகமம்  8:6)

nee  israveal  santhathiyaarinin’ru  leaviyaraip  piriththeduththu,  avarga'laich  suththigarippaayaaga.  (e’n’naagamam  8:6)

அவர்களைச்  சுத்திகரிக்கும்படி  அவர்களுக்குச்  செய்யவேண்டியதாவது:  அவர்கள்மேல்  சுத்திகரிக்கும்  ஜலத்தைத்  தெளிப்பாயாக;  பின்பு  அவர்கள்  சர்வாங்க  சவரம்பண்ணி,  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தங்களைச்  சுத்திகரிக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  8:7)

avarga'laich  suththigarikkumpadi  avarga'lukkuch  seyyavea'ndiyathaavathu:  avarga'lmeal  suththigarikkum  jalaththaith  the'lippaayaaga;  pinbu  avarga'l  sarvaangga  savarampa'n'ni,  thangga'l  vasthirangga'laith  thoayththu,  thangga'laich  suththigarikkakkadavarga'l.  (e’n’naagamam  8:7)

அப்பொழுது  ஒரு  காளையையும்,  அதற்கேற்ற  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவாகிய  போஜனபலியையும்  கொண்டுவரக்கடவர்கள்;  பாவநிவாரணபலியாக  வேறொரு  காளையையும்  நீ  வாங்கி,  (எண்ணாகமம்  8:8)

appozhuthu  oru  kaa'laiyaiyum,  atha’rkeat’ra  e'n'neyilea  pisaintha  melliya  maavaagiya  poajanabaliyaiyum  ko'nduvarakkadavarga'l;  paavanivaara'nabaliyaaga  vea’roru  kaa'laiyaiyum  nee  vaanggi,  (e’n’naagamam  8:8)

லேவியரை  ஆசரிப்புக்  கூடாரத்துக்குமுன்  வரச்செய்து,  இஸ்ரவேல்  புத்திரரின்  சபையார்  எல்லாரையும்  கூடிவரப்பண்ணுவாயாக.  (எண்ணாகமம்  8:9)

leaviyarai  aasarippuk  koodaaraththukkumun  varachseythu,  israveal  puththirarin  sabaiyaar  ellaaraiyum  koodivarappa'n'nuvaayaaga.  (e’n’naagamam  8:9)

நீ  லேவியரைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  வரப்பண்ணினபோது,  இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  கைகளை  லேவியர்மேல்  வைக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  8:10)

nee  leaviyaraik  karththarudaiya  sannithiyil  varappa'n'ninapoathu,  israveal  puththirar  thangga'l  kaiga'lai  leaviyarmeal  vaikkakkadavarga'l.  (e’n’naagamam  8:10)

லேவியர்  கர்த்தருக்குரிய  பணிவிடை  செய்யும்பொருட்டு,  ஆரோன்  அவர்களை  இஸ்ரவேல்  புத்திரரின்  காணிக்கையாகக்  கர்த்தருக்கு  முன்பாக  அசைவாட்டப்படும்  காணிக்கையாய்  நிறுத்தக்கடவன்.  (எண்ணாகமம்  8:11)

leaviyar  karththarukkuriya  pa'nividai  seyyumporuttu,  aaroan  avarga'lai  israveal  puththirarin  kaa'nikkaiyaagak  karththarukku  munbaaga  asaivaattappadum  kaa'nikkaiyaay  ni’ruththakkadavan.  (e’n’naagamam  8:11)

அதன்பின்  லேவியர்  தங்கள்  கைகளைக்  காளைகளுடைய  தலையின்மேல்  வைப்பார்களாக;  பின்பு  நீ  லேவியருக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்பொருட்டு,  கர்த்தருக்கு  அவைகளில்  ஒன்றைப்  பாவநிவாரணபலியாகவும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்தி,  (எண்ணாகமம்  8:12)

athanpin  leaviyar  thangga'l  kaiga'laik  kaa'laiga'ludaiya  thalaiyinmeal  vaippaarga'laaga;  pinbu  nee  leaviyarukkaagap  paavanivirththi  seyyumporuttu,  karththarukku  avaiga'lil  on’raip  paavanivaara'nabaliyaagavum,  mat’ron’raich  sarvaangga  thaganabaliyaagavum  seluththi,  (e’n’naagamam  8:12)

லேவியரை  ஆரோனுக்கும்  அவன்  குமாரனுக்கும்  முன்பாக  நிறுத்தி,  அவர்களைக்  கர்த்தருக்கு  அசைவாட்டப்படும்  காணிக்கையாக்கி,  (எண்ணாகமம்  8:13)

leaviyarai  aaroanukkum  avan  kumaaranukkum  munbaaga  ni’ruththi,  avarga'laik  karththarukku  asaivaattappadum  kaa'nikkaiyaakki,  (e’n’naagamam  8:13)

இப்படி  நீ  லேவியரை  இஸ்ரவேல்  புத்திரரிலிருந்து  பிரித்தெடுக்கக்கடவாய்;  லேவியர்  என்னுடையவர்களாயிருப்பார்கள்.  (எண்ணாகமம்  8:14)

ippadi  nee  leaviyarai  israveal  puththirarilirunthu  piriththedukkakkadavaay;  leaviyar  ennudaiyavarga'laayiruppaarga'l.  (e’n’naagamam  8:14)

இப்படி  அவர்களைச்  சுத்திகரித்து,  அவர்களை  அசைவாட்டும்  காணிக்கையாக்கக்கடவாய்;  அதன்பின்பு  லேவியர்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  பணிவிடை  செய்யப்  பிரவேசிக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  8:15)

ippadi  avarga'laich  suththigariththu,  avarga'lai  asaivaattum  kaa'nikkaiyaakkakkadavaay;  athanpinbu  leaviyar  aasarippuk  koodaaraththil  pa'nividai  seyyap  piraveasikkakkadavarga'l.  (e’n’naagamam  8:15)

இஸ்ரவேல்  புத்திரரிலிருந்து  அவர்கள்  எனக்கு  முற்றிலும்  கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்;  இஸ்ரவேல்  புத்திரர்  எல்லாரிலும்  கர்ப்பந்திறந்து  பிறக்கிற  சகல  முதற்பேறுக்கும்  பதிலாக  அவர்களை  எனக்கு  எடுத்துக்கொண்டேன்.  (எண்ணாகமம்  8:16)

israveal  puththirarilirunthu  avarga'l  enakku  mut’rilum  kodukkappattirukki’raarga'l;  israveal  puththirar  ellaarilum  karppanthi’ranthu  pi’rakki’ra  sagala  mutha’rpea’rukkum  bathilaaga  avarga'lai  enakku  eduththukko'ndean.  (e’n’naagamam  8:16)

இஸ்ரவேல்  புத்திரரில்  மனிதரிலும்  மிருகஜீவன்களிலும்  முதற்பேறானதெல்லாம்  என்னுடையது;  நான்  எகிப்துதேசத்திலே  முதற்பேறான  யாவையும்  சங்கரித்த  நாளிலே  அவைகளை  எனக்கென்று  பரிசுத்தப்படுத்தி,  (எண்ணாகமம்  8:17)

israveal  puththiraril  manitharilum  mirugajeevanga'lilum  mutha’rpea’raanathellaam  ennudaiyathu;  naan  egipthutheasaththilea  mutha’rpea’raana  yaavaiyum  sanggariththa  naa'lilea  avaiga'lai  enakken’ru  parisuththappaduththi,  (e’n’naagamam  8:17)

பின்பு  லேவியரை  இஸ்ரவேல்  புத்திரரிலுள்ள  முதற்பேறு  சகலத்திற்கும்  பதிலாக  எடுத்துக்கொண்டு,  (எண்ணாகமம்  8:18)

pinbu  leaviyarai  israveal  puththirarilu'l'la  mutha’rpea’ru  sagalaththi’rkum  bathilaaga  eduththukko'ndu,  (e’n’naagamam  8:18)

லேவியர்  இஸ்ரவேல்  புத்திரருடைய  பணிவிடையை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  செய்யும்படிக்கும்,  இஸ்ரவேல்  புத்திரருக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்படிக்கும்,  இஸ்ரவேல்  புத்திரர்  தாங்களே  பரிசுத்த  ஸ்தலத்தில்  சேருகிறதினால்  இஸ்ரவேல்  புத்திரரில்  வாதையுண்டாகாதபடிக்கும்,  லேவியரை  அவர்களிலிருந்து  எடுத்து,  ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  தத்தமாகக்  கொடுத்தேன்  என்றார்.  (எண்ணாகமம்  8:19)

leaviyar  israveal  puththirarudaiya  pa'nividaiyai  aasarippuk  koodaaraththil  seyyumpadikkum,  israveal  puththirarukkaagap  paavanivirththi  seyyumpadikkum,  israveal  puththirar  thaangga'lea  parisuththa  sthalaththil  searugi’rathinaal  israveal  puththiraril  vaathaiyu'ndaagaathapadikkum,  leaviyarai  avarga'lilirunthu  eduththu,  aaroanukkum  avan  kumaararukkum  thaththamaagak  koduththean  en’raar.  (e’n’naagamam  8:19)

அப்பொழுது  மோசேயும்  ஆரோனும்  இஸ்ரவேல்  புத்திரரின்  சபையார்  யாவரும்  கர்த்தர்  லேவியரைக்குறித்து  மோசேக்குக்  கட்டளையிட்டபடியெல்லாம்  லேவியருக்குச்  செய்தார்கள்.  (எண்ணாகமம்  8:20)

appozhuthu  moaseayum  aaroanum  israveal  puththirarin  sabaiyaar  yaavarum  karththar  leaviyaraikku’riththu  moaseakkuk  katta'laiyittapadiyellaam  leaviyarukkuch  seythaarga'l.  (e’n’naagamam  8:20)

லேவியர்  சுத்திகரிக்கப்பட்டு,  தங்கள்  வஸ்திரங்களைத்  தோய்த்தார்கள்;  பின்பு  ஆரோன்  அவர்களைக்  கர்த்தருக்கு  முன்பாக  அசைவாட்டும்  காணிக்கையாக  நிறுத்தி,  அவர்களைச்  சுத்திகரிக்க  அவர்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்தான்.  (எண்ணாகமம்  8:21)

leaviyar  suththigarikkappattu,  thangga'l  vasthirangga'laith  thoayththaarga'l;  pinbu  aaroan  avarga'laik  karththarukku  munbaaga  asaivaattum  kaa'nikkaiyaaga  ni’ruththi,  avarga'laich  suththigarikka  avarga'lukkaagap  paavanivirththi  seythaan.  (e’n’naagamam  8:21)

அதற்குப்பின்பு  லேவியர்  ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  முன்பாக  ஆசரிப்புக்  கூடாரத்தில்  தங்கள்  பணிவிடையைச்  செய்யும்படி  பிரவேசித்தார்கள்;  கர்த்தர்  லேவியரைக்குறித்து  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  அவர்களுக்குச்  செய்தார்கள்.  (எண்ணாகமம்  8:22)

atha’rkuppinbu  leaviyar  aaroanukkum  avan  kumaararukkum  munbaaga  aasarippuk  koodaaraththil  thangga'l  pa'nividaiyaich  seyyumpadi  piraveasiththaarga'l;  karththar  leaviyaraikku’riththu  moaseakkuk  katta'laiyittapadiyea  avarga'lukkuch  seythaarga'l.  (e’n’naagamam  8:22)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  8:23)

pinnum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  8:23)

லேவியருக்குரிய  கட்டளை  என்னவென்றால்:  இருபத்தைந்து  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  வயதுள்ள  யாவரும்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்யும்  சேனையிலே  சேவிக்க  வரவேண்டும்.  (எண்ணாகமம்  8:24)

leaviyarukkuriya  katta'lai  ennaven’raal:  irubaththainthu  vayathumuthal  atha’rku  mea’rpatta  vayathu'l'la  yaavarum  aasarippuk  koodaaraththin  pa'nividaiyaich  seyyum  seanaiyilea  seavikka  varavea'ndum.  (e’n’naagamam  8:24)

ஐம்பது  வயதுக்கு  மேற்பட்டவர்கள்  வேலைசெய்யாமல்  திருப்பணி  சேனையை  விட்டு,  (எண்ணாகமம்  8:25)

aimbathu  vayathukku  mea’rpattavarga'l  vealaiseyyaamal  thiruppa'ni  seanaiyai  vittu,  (e’n’naagamam  8:25)

ஆசரிப்புக்  கூடாரத்தின்  காவலைக்  காக்கிறதற்குத்  தங்கள்  சகோதரரோடேகூட  ஊழியஞ்செய்வதேயன்றி,  வேறொரு  சேவகமும்  செய்யவேண்டியதில்லை;  இப்படி  லேவியர்  செய்யவேண்டிய  வேலைகளைக்குறித்துத்  திட்டம்பண்ணக்கடவாய்  என்றார்.  (எண்ணாகமம்  8:26)

aasarippuk  koodaaraththin  kaavalaik  kaakki’ratha’rkuth  thangga'l  sagoathararoadeakooda  oozhiyagnseyvatheayan’ri,  vea’roru  seavagamum  seyyavea'ndiyathillai;  ippadi  leaviyar  seyyavea'ndiya  vealaiga'laikku’riththuth  thittampa'n'nakkadavaay  en’raar.  (e’n’naagamam  8:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!