கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
10:1)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 10:1)
சபையைக்
கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக
இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச்
செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும். (எண்ணாகமம்
10:2)
sabaiyaik koodivaravazhaippatha’rkum paa'layangga'laip pirayaa'nappaduththuvatha’rkum ubayoagamaaga ira'ndu ve'l'lip
poorigaiga'laich
seythuko'lvaayaaga; avaiga'l orea ve'l'liththagattaal
seyyappadavea'ndum. (e’n’naagamam
10:2)
அவைகளை
ஊதும்போது, சபையார் எல்லாரும்
ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில்
கூடிவரவேண்டும். (எண்ணாகமம் 10:3)
avaiga'lai oothumpoathu,
sabaiyaar ellaarum
aasarippuk koodaaravaasalil unnidaththil
koodivaravea'ndum. (e’n’naagamam 10:3)
ஒன்றைமாத்திரம் ஊதினால்
இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய
பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள். (எண்ணாகமம்
10:4)
on’raimaaththiram
oothinaal isravealil aayiravarga'lukkuth thalaivaraagiya pirabukka'l unnidaththil
koodivarakkadavarga'l. (e’n’naagamam
10:4)
நீங்கள்
அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே
இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது. (எண்ணாகமம்
10:5)
neengga'l avaiga'laip perunthoniyaay muzhakkumpoathu, kizhakkea
i’ranggiyirukki’ra paa'layangga'l pirayaa'nappadakkadavathu. (e’n’naagamam
10:5)
அவைகளை
நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே
இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப்
பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும். (எண்ணாகமம்
10:6)
avaiga'lai neengga'l ira'ndaantharam perunthoniyaay muzhakkumpoathu, the’rkea i’ranggiyirukki’ra paa'layangga'l pirayaa'nappadakkadavathu; avarga'laip pirayaa'nappaduththuvatha’rkup perunthoniyaay muzhakkavea'ndum. (e’n’naagamam
10:6)
சபையைக்
கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம். (எண்ணாகமம்
10:7)
sabaiyaik koottugi’ratha’rku neengga'l oothavea'ndiyatheayan’ri perunthoniyaay muzhakkavea'ndaam. (e’n’naagamam
10:7)
ஆரோனின்
குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை
ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும்
இது உங்களுக்கு நித்திய
கட்டளையாயிருக்கக்கடவது. (எண்ணாகமம் 10:8)
aaroanin kumaararaagiya aasaariyar poorigaiga'lai oothakkadavarga'l; ungga'l thalaimu’raithoa’rum ithu ungga'lukku niththiya
katta'laiyaayirukkakkadavathu. (e’n’naagamam
10:8)
உங்கள்
தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு
விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது,
பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய
சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள்
பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள். (எண்ணாகமம்
10:9)
ungga'l theasaththil ungga'laith thunbappaduththugi’ra saththuruvukku viroathamaaga yuththaththukkup poagumpoathu, poorigaiga'laip perunthoniyaay muzhakkakkadaveerga'l; appozhuthu
ungga'l
theavanaagiya karththarudaiya samugaththilea neengga'l ninaivukoorappattu, ungga'l pagaignarukku neenggalaagi iradchikkappaduveerga'l. (e’n’naagamam
10:9)
உங்கள்
மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள்
பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள்
சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை
ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள்
உங்கள் தேவனுடைய சமுகத்தில்
உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்றார். (எண்ணாகமம்
10:10)
ungga'l magizhchchiyin naa'lilum,
ungga'l
pa'ndigaiga'lilum, maathappi’rappuga'lilum, ungga'l sarvaangga thaganabaliga'lum samaathaanabaliga'lum seluththappadumpoathu poorigaiga'lai oothavea'ndum; appozhuthu
avaiga'l
ungga'l
theavanudaiya samugaththil ungga'lukku gnaabagakku’riyaayirukkum;
naan ungga'l theavanaagiya karththar
en’raar.
(e’n’naagamam 10:10)
இரண்டாம்
வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில்
மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின்
மீதிலிருந்து உயர எழும்பிற்று.
(எண்ணாகமம் 10:11)
ira'ndaam varusham
ira'ndaam maatham irubathaam theathiyil
meagam saadchiyinudaiya vaasasthalaththin meethilirunthu uyara ezhumbit’ru. (e’n’naagamam 10:11)
அப்பொழுது
இஸ்ரவேல் புத்திரர் சீனாய்
வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண
வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில்
தங்கிற்று. (எண்ணாகமம் 10:12)
appozhuthu israveal
puththirar seenaay
vanaantharaththilirunthu thangga'l pirayaa'na varisaiga'laayp pu’rappattaarga'l; meagam paaraan
vanaantharaththil thanggit’ru. (e’n’naagamam 10:12)
இப்படியே
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள். (எண்ணாகமம்
10:13)
ippadiyea karththar
moaseayaikko'ndu katta'laiyittapadi muthal pirayaa'nampa'n'ninaarga'l. (e’n’naagamam 10:13)
யூதா சந்ததியாருடைய பாளயத்தின்
கொடி அவர்கள் சேனைகளோடே
முதல் புறப்பட்டது; அவனுடைய
சேனைக்கு அம்மினதாபின் குமாரன்
நகசோன் தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:14)
yoothaa
santhathiyaarudaiya paa'layaththin kodi avarga'l seanaiga'loadea muthal
pu’rappattathu; avanudaiya seanaikku amminathaabin kumaaran
nagasoan
thalaivanaayirunthaan. (e’n’naagamam 10:14)
இசக்கார்
சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச்
சூவாரின் குமாரன் நெதனெயேல்
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:15)
isakkaar santhathiyaarudaiya koaththiraththin seanaikkuch
soovaarin kumaaran
nethaneyeal thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:15)
செபுலோன்
சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு
ஏலோனின் குமாரன் எலியாப்
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:16)
sebuloan santhathiyaarudaiya koaththiraththin seanaikku ealoanin
kumaaran eliyaab thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:16)
அப்பொழுது
வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும்
மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு
புறப்பட்டார்கள். (எண்ணாகமம் 10:17)
appozhuthu vaasasthalam i’rakki vaikkappattathu; athaik
kersoan
puththirarum meraari puththirarum sumanthuko'ndu pu’rappattaarga'l. (e’n’naagamam
10:17)
அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின்
கொடி அவர்கள் சேனைகளோடே
புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச்
சேதேயூரின் குமாரன் எலிசூர்
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:18)
atha’rkuppinbu rooban santhathiyaarudaiya paa'layaththin kodi avarga'l seanaiga'loadea pu’rappattathu; avanudaiya
seanaikkuch seatheayoorin kumaaran
elisoor
thalaivanaayirunthaan. (e’n’naagamam 10:18)
சிமியோன்
சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச்
சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:19)
simiyoan santhathiyaarudaiya koaththiraththin seanaikkuch
soorishathaayin kumaaran seloomiyeal thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:19)
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின்
சேனைக்குத் தேகுவேலின் குமாரன்
எலியாசாப் தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:20)
kaath
santhathiyaarudaiya koaththiraththin seanaikkuth theaguvealin kumaaran
eliyaasaap thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:20)
கோகாத்தியர்
பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள்
வந்து சேருமுன் மற்றவர்கள்
வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள். (எண்ணாகமம்
10:21)
koagaaththiyar parisuththamaanavaiga'laich sumanthuko'ndu pu’rappattaarga'l; ivarga'l vanthu searumun mat’ravarga'l vaasasthalaththai sthaabanampa'n'nuvaarga'l. (e’n’naagamam
10:21)
அதற்குப்பின்பு, எப்பிராயீம்
சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே
புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு
அம்மியூதின் குமாரன் எலிஷாமா
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:22)
atha’rkuppinbu, eppiraayeem santhathiyaarudaiya paa'layaththin kodi avarga'l seanaiga'loadea pu’rappattathu; avanudaiya
seanaikku ammiyoothin
kumaaran elishaamaa thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:22)
மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின்
சேனைக்குப் பெதாசூரின் குமாரன்
கமாலியேல் தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:23)
manaasea santhathiyaarudaiya koaththiraththin seanaikkup pethaasoorin kumaaran
kamaaliyeal thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:23)
பென்யமீன்
சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக்
கீதெயோனின் குமாரன் அபீதான்
தலைவனாயிருந்தான். (எண்ணாகமம் 10:24)
benyameen santhathiyaarudaiya koaththiraththin seanaikkuk keetheyoanin
kumaaran abeethaan thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:24)
அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின்
கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக
அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது;
அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின்
குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:25)
atha’rkuppinbu, thaa'n santhathiyaarudaiya paa'layaththin kodi sagala
paa'layangga'lukkum pinnaaga avarga'l seanaiga'loadea pu’rappattathu; avanudaiya seanaikku ammishathaayin kumaaran
agiyeasear thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:25)
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின்
சேனைக்கு ஓகிரானின் குமாரன்
பாகியேல் தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:26)
aasear santhathiyaarudaiya koaththiraththin seanaikku oakiraanin kumaaran paagiyeal thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:26)
நப்தலி
சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு
ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான். (எண்ணாகமம்
10:27)
napthali
santhathiyaarudaiya koaththiraththin seanaikku eanaanin
kumaaran ageeraa thalaivanaayirunthaan. (e’n’naagamam
10:27)
இஸ்ரவேல்
புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த்
தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள். (எண்ணாகமம்
10:28)
israveal puththirar
pu’rappattapoathu, ivvithamaayth
thangga'l
thangga'l seanaiga'linpadiyea pirayaa'nampa'n'ninaarga'l. (e’n’naagamam 10:28)
அப்பொழுது
மோசே தன் மாமனாகிய
ரெகுவேல் என்னும் மீதியானனுடைய
குமாரனான ஓபாவை நோக்கி:
உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள்
பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட
வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர்
இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
(எண்ணாகமம் 10:29)
appozhuthu moasea than maamanaagiya reguveal ennum meethiyaananudaiya kumaaranaana
oabaavai
noakki: ungga'lukkuth tharuvean en’ru karththar sonna
sthalaththukku naangga'l pirayaa'nampoagi’roam; neeyum engga'loadeakooda vaa, unakku nanmaiseyvoam; karththar
isravealukku nalla vaakkuththaththam pa'n'niyirukki’raar en’raan. (e’n’naagamam
10:29)
அதற்கு
அவன்: நான் வரக்கூடாது;
என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும்
என்றான். (எண்ணாகமம் 10:30)
atha’rku avan: naan varakkoodaathu; en theasaththukkum en inaththaaridaththukkum poagavea'ndum en’raan. (e’n’naagamam
10:30)
அப்பொழுது
மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்;
வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும்
இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக்
கண்களைப்போல இருப்பாய். (எண்ணாகமம்
10:31)
appozhuthu moasea: nee engga'laivittup poagavea'ndaam; vanaantharaththilea naangga'l paa'layami’ranggum idangga'lai nee a’rinthirukki’rapadiyinaal, engga'lukkuk ka'nga'laippoala iruppaay. (e’n’naagamam
10:31)
நீ எங்களோடேகூட வந்தால்,
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும்
நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம்
என்றான். (எண்ணாகமம் 10:32)
nee engga'loadeakooda vanthaal,
karththar engga'lukkuch seytharu'lum nanmaiyinpadiyea unakkum
nanmaiseyvoam en’raan. (e’n’naagamam
10:32)
அவர்கள்
கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள்
பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள்
பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு
இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக்
காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.
(எண்ணாகமம் 10:33)
avarga'l karththarudaiya parvathaththaivittu, moon’runaa'l pirayaa'nam
poanaarga'l; moon’runaa'l pirayaa'naththilum karththarudaiya udanpadikkaippetti avarga'lukku i'laippaa’rum sthalaththaith theadik
kaattumpadikku avarga'lmun sen’rathu. (e’n’naagamam 10:33)
அவர்கள்
பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய
மேகம் பகலில் அவர்கள்மேல்
தங்கியிருந்தது. (எண்ணாகமம் 10:34)
avarga'l paa'layaththilirunthu pirayaa'nampoagi’rapoathu, karththarudaiya meagam pagalil avarga'lmeal thanggiyirunthathu. (e’n’naagamam
10:34)
பெட்டியானது
புறப்படும்போது, மோசே: கர்த்தாவே,
எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள்
சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு
முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
(எண்ணாகமம் 10:35)
pettiyaanathu pu’rappadumpoathu,
moasea:
karththaavea, ezhuntharu'lum, ummudaiya saththurukka'l sitha’radikkappaduvaarga'laaga; ummaip
pagaikki’ravarga'l umakku munbaaga oadippoavaarga'laaga enbaan. (e’n’naagamam 10:35)
அது தங்கும்போது: கர்த்தாவே,
அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக
என்று சொல்லுவான். (எண்ணாகமம்
10:36)
athu thanggumpoathu: karththaavea,
aneaga
aayiravarga'laagiya isravealaridaththil thirumbuveeraaga en’ru solluvaan. (e’n’naagamam
10:36)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!