பின்பு
கர்த்தர் ஆரோனை நோக்கி:
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும்
பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச்
சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட
உன் குமாரரும் உங்கள்
ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச்
சுமக்கவேண்டும். (எண்ணாகமம் 18:1)
pinbu karththar aaroanai
noakki: neeyum unnoadeakooda
un kumaararum un thagappan vamsaththaarum parisuththa sthalaththaippat’riya akkiramaththaich sumakkavea'ndum; neeyum
unnoadeakooda un kumaararum
ungga'l
aasaariya
oozhiyaththaippat’riya akkiramaththaich
sumakkavea'ndum. (e’n’naagamam
18:1)
உன் தகப்பனாகிய லேவியின்
கோத்திரத்தாரான உன் சகோதரரையும்
உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே
சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும்
உன் குமாரருமோ சாட்சியின்
கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள். (எண்ணாகமம்
18:2)
un thagappanaagiya leaviyin koaththiraththaaraana un sagoathararaiyum unnoadea
koodiyirukkavum unnidaththilea seavikkavum avarga'laich searththukko'l; neeyum
un kumaararumoa saadchiyin koodaaraththukkumun oozhiyam seyyakkadaveerga'l. (e’n’naagamam
18:2)
அவர்கள்
உன் காவலையும் கூடாரம்
அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும்
அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு,
அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின்
பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
(எண்ணாகமம் 18:3)
avarga'l un kaavalaiyum
koodaaram anaiththin kaavalaiyum
kaakkakkadavarga'l; aagilum avarga'lum neengga'lum saagaathapadikku, avarga'l parisuththa sthalaththin
pa'nimuttuga'la'ndaiyilum balipeedaththa'ndaiyilum
searaamal, (e’n’naagamam
18:3)
உன்னோடே
கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப்
பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக்
கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன்
ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
(எண்ணாகமம் 18:4)
unnoadea koodikko'ndu,
koodaaraththukkaduththa ellaap pa'nividaiyaiyum seyya,
aasarippuk koodaaraththin kaavalaik
kaakkakkadavarga'l; anniyan
oruvanum ungga'lidaththil searakkoodaathu. (e’n’naagamam
18:4)
இஸ்ரவேல்
புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம்
வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த
ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின்
காவலையும் காக்கக்கடவீர்கள். (எண்ணாகமம்
18:5)
israveal puththirarmeal inik kadungkoabam varaathapadikku, neengga'l parisuththa sthalaththin
kaavalaiyum balipeedaththin
kaavalaiyum kaakkakkadaveerga'l. (e’n’naagamam 18:5)
ஆசரிப்புக்
கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய,
கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள்
சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து,
உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன்.
(எண்ணாகமம் 18:6)
aasarippuk koodaaraththin pa'nividaiyaich
seyya, karththarukkuk kodukkappatta ungga'l sagoathararaagiya leaviyarai naan israveal puththirarilirunthu piriththu,
ungga'lukkuth thaththamaagak koduththean.
(e’n’naagamam 18:6)
ஆகையால்
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு
உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள்
ஆசாரிய ஊழியத்தைக் காத்துச்
சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய
ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக
அருளினேன்; அதைச் செய்யும்படி
சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.
(எண்ணாகமம் 18:7)
aagaiyaal neeyum unnoadeakooda
un kumaararum balipeedaththukkum thiraikku
udpu’raththukkum aduththa
ellaavat’raiyum seyyumporuttu, ungga'l aasaariya oozhiyaththaik kaaththuch seavikkakkadaveerga'l; ungga'l aasaariya oozhiyaththai ungga'lukku thaththamaaga aru'linean;
athaich seyyumpadi searugi’ra anniyan
kolaiseyyappadakkadavan en’raar. (e’n’naagamam
18:7)
பின்னும்
கர்த்தர் ஆரோனை நோக்கி:
இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு
ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக்
காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக்
கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை
உனக்கும் உன் குமாரருக்கும்
நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
(எண்ணாகமம் 18:8)
pinnum karththar
aaroanai noakki: israveal
puththirar parisuththappaduththugi’ravaiga'lilellaam enakku ea’reduththup padaikkappadum padaippuga'laik kaaththukko'ndirukki’reerga'lea, avaiga'lai unakkuk koduththean;
abisheagaththinimiththam avaiga'lai unakkum
un kumaararukkum niththiya
katta'laiyaagak koduththean.
(e’n’naagamam 18:8)
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு
உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில்,
அவர்கள் எனக்குப் படைக்கும்
எல்லாப் படைப்பும், எல்லாப்
போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக்
குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும். (எண்ணாகமம்
18:9)
mahaa parisuththamaanavaiga'lilea, akkinikku
udpaduththappadaamal unnudaiyathaayiruppathu evaiyenil,
avarga'l
enakkup padaikkum ellaap
padaippum, ellaap poajanabaliyum, ellaap
paavanivaara'nabaliyum, ellaak
kut’ranivaara'nabaliyum, unakkum
un kumaararukkum parisuththamaayirukkum. (e’n’naagamam
18:9)
பரிசுத்த
ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள்
யாவரும் அவைகளைப் புசிக்கலாம்;
அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. (எண்ணாகமம்
18:10)
parisuththa sthalaththilea avaiga'laip pusikkavea'ndum; aa'nmakka'l
yaavarum avaiga'laip pusikkalaam; avaiga'l unakkup parisuththamaayiruppathaaga. (e’n’naagamam 18:10)
இஸ்ரவேல்
புத்திரர் ஏறெடுத்துப் படைக்கிறதும்
அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக்
காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை
உனக்கும் உன் குமாரருக்கும்
உன் குமாரத்திகளுக்கும் நித்திய
நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும்
அவைகளைப் புசிக்கலாம். (எண்ணாகமம்
18:11)
israveal puththirar
ea’reduththup padaikki’rathum asaivaattugi’rathumaana
avarga'ludaiya ellaak
kaa'nikkaiga'lin padaippum
unnudaiyavaiga'laayirukkum; avaiga'lai unakkum
un kumaararukkum un kumaaraththiga'lukkum niththiya niyamamaagak koduththean;
un veettilea
suththamaanavarga'l ellaarum avaiga'laip pusikkalaam. (e’n’naagamam
18:11)
அவர்கள்
கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய
முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும்,
உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும்
உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
(எண்ணாகமம் 18:12)
avarga'l karththarukkuk kodukkum
avarga'ludaiya mutha’rpalanga'laagiya uchchithamaana e'n'neyaiyum,
uchchithamaana thiraadcharasaththaiyum, thaaniyaththaiyum unakku
uriyathaagak koduththean.
(e’n’naagamam 18:12)
தங்கள்
தேசத்தில் முதற்பழுத்த பலனில்
அவர்கள் கர்த்தருக்குக் கொண்டுவருவதெல்லாம் உனக்கு
உரியதாகும்; உன் வீட்டிலே
சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப்
புசிக்கலாம். (எண்ணாகமம் 18:13)
thangga'l theasaththil mutha’rpazhuththa palanil avarga'l karththarukkuk ko'nduvaruvathellaam unakku
uriyathaagum; un veettilea suththamaayiruppavarga'l yaavarum avaiga'laip pusikkalaam. (e’n’naagamam
18:13)
இஸ்ரவேலிலே
சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு
உரியதாயிருக்கும். (எண்ணாகமம் 18:14)
isravealilea
saabaththeedaaga nearnthuko'l'lappattathellaam unakku uriyathaayirukkum. (e’n’naagamam
18:14)
மனிதரிலும்
மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும்
சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும்
யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும்
மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய்
மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின்
தலையீற்றையும் மீட்கவேண்டும். (எண்ணாகமம்
18:15)
manitharilum mirugangga'lilum avarga'l karththarukkuch seluththum samastha piraa'niga'lukku'l'lea karppanthi’ranthu pi’rakkum yaavum
unakku uriyathaayirukkum; aanaalum
manitharin mutha’rpeat’rai agaththiyamaay meedkavea'ndum; theettaana mirugajeevanin thalaiyeet’raiyum meedkavea'ndum. (e’n’naagamam
18:15)
மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின்
சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே
அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது
கேரா. (எண்ணாகமம் 18:16)
meedkavea'ndiyavaiga'l oru maathaththi’rku mea’rpattathaanaal, un mathippukku
isaiya
parisuththa sthalaththin seakkal
ka'nakkinpadi ainthu seakkal pa'naththaalea avaiga'lai meedkavea'ndum; oru seakkal
irubathu
kearaa. (e’n’naagamam 18:16)
மாட்டின்
தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும்,
வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள்
பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப்
பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின்
கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும். (எண்ணாகமம்
18:17)
maattin thalaiyeet’rum, semma’riyaattin thalaiyeet’rum, ve'l'laattin thalaiyeet’rumoa meedkappadavea'ndaam; avaiga'l parisuththamaanavaiga'l; avaiga'lin iraththaththaip balipeedaththinmeal the'liththu,
avaiga'lin kozhuppaik
karththarukkuch sugantha vaasanaiyaana thaganamaagath thaganikkavea'ndum.
(e’n’naagamam 18:17)
அசைவாட்டும்
மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின்
மாம்சமும் உன்னுடையதாகும். (எண்ணாகமம்
18:18)
asaivaattum maarkka'ndaththaippoalum valathu
munnanthodaiyaippoalum avaiga'lin maamsamum unnudaiyathaagum. (e’n’naagamam 18:18)
இஸ்ரவேல்
புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப்
படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும்
உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய
கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய
சந்நிதியில் இது உனக்கும்
உன் சந்ததிக்கும் என்றைக்கும்
செல்லும் மாறாத உடன்படிக்கை
என்றார். (எண்ணாகமம் 18:19)
israveal puththirar
karththarukku ea’reduththup padaikki’ra parisuththa padaippuga'laiyellaam unakkum un kumaararukkum un kumaaraththiga'lukkum niththiya katta'laiyaagak koduththean; karththarudaiya sannithiyil ithu unakkum un santhathikkum en’raikkum sellum maa’raatha udanpadikkai
en’raar.
(e’n’naagamam 18:19)
பின்னும்
கர்த்தர் ஆரோனை நோக்கி:
அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள்
நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்;
இஸ்ரவேல் புத்திரர் நடுவில்
நானே உன் பங்கும்
உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.
(எண்ணாகமம் 18:20)
pinnum karththar
aaroanai noakki: avarga'ludaiya theasaththil nee on’raiyum suthanthariththukko'l'lavea'ndaam, avarga'l naduvea
unakkup panggu u'ndaayirukkavum vea'ndaam;
israveal puththirar naduvil
naanea un panggum un suthantharamumaay irukki’rean. (e’n’naagamam
18:20)
இதோ, லேவியின் புத்திரர்
ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச்
செய்கிற அவர்களுடைய வேலைக்காக,
இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை
அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
(எண்ணாகமம் 18:21)
ithoa, leaviyin
puththirar aasarippuk koodaaraththin pa'nividaiyaich
seygi’ra avarga'ludaiya vealaikkaaga, isravealarukku'l'lavai ellaavat’rilum thasamapaagaththai avarga'lukkuch suthantharamaagak koduththean. (e’n’naagamam
18:21)
இஸ்ரவேல்
புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு,
இனி ஆசரிப்புக் கூடாரத்தைக்
கிட்டாதிருக்கக்கடவர்கள். (எண்ணாகமம் 18:22)
israveal puththirar
kut’ragnsumanthu
saagaathapadikku, ini aasarippuk koodaaraththaik kittaathirukkakkadavarga'l. (e’n’naagamam 18:22)
லேவியர்மாத்திரம் ஆசரிப்புக்
கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள்
தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்;
இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம்
இல்லை என்பது உங்கள்
தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும். (எண்ணாகமம்
18:23)
leaviyarmaaththiram aasarippuk koodaaraththukkaduththa vealaiga'laich seyyavea'ndum; avarga'l thangga'l akkiramaththaich
sumappaarga'l; israveal puththirar
naduvea avarga'lukkuch suthantharam illai enbathu ungga'l thalaimu’raithoa’rum niththiya
katta'laiyaayirukkum. (e’n’naagamam
18:23)
இஸ்ரவேல்
புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப்
படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை
லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்;
ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின்
நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச்
சொன்னேன் என்றார். (எண்ணாகமம்
18:24)
israveal puththirar
karththarukku ea’reduththup padaikkum padaippaagiya thasamapaagaththai leaviyarukkuch suthantharamaagak koduththean;
aagaiyaal
israveal puththirarin naduvea
avarga'lukkuch
suthantharamillaiyen’ru avarga'lukkuch sonnean en’raar. (e’n’naagamam
18:24)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 18:25)
pinnum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 18:25)
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
இஸ்ரவேல் புத்திரர் கையில்
வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச்
சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை
நீங்கள் அவர்கள் கையில்
வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில்
ஒரு பங்கைக் கர்த்தருக்கு
ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச்
செலுத்தவேண்டும். (எண்ணாகமம் 18:26)
nee leaviyaroadea sollavea'ndiyathu ennaven’raal: israveal
puththirar kaiyil vaanggikko'l'lumpadi naan ungga'lukkuch suthantharamaagak koduththa thasamapaagaththai neengga'l avarga'l kaiyil vaanggumpoathu, thasamapaagaththil paththil oru panggaik karththarukku ea’reduththup padaikkum
padaippaagach seluththavea'ndum. (e’n’naagamam
18:26)
நீங்கள்
ஏறெடுத்துப் படைக்கும் இந்தப்
படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின்
இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
(எண்ணாகமம் 18:27)
neengga'l ea’reduththup padaikkum inthap
padaippu ka'laththin thaaniyaththaippoalum, aalaiyin
irasaththaippoalum ungga'lukku e'n'nappadum.
(e’n’naagamam 18:27)
இப்படியே
நீங்கள் இஸ்ரவேல் புத்திரர்
கையில் வாங்கும் தசமபாகமாகிய
உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும்
கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப்
படைத்து, அந்தப் படைப்பை
ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும். (எண்ணாகமம்
18:28)
ippadiyea neengga'l israveal
puththirar kaiyil vaanggum thasamapaagamaagiya ungga'l pangguga'lilellaam neengga'lum karththarukku
en’ru
oru padaippai ea’reduththup padaiththu,
anthap padaippai aasaariyanaagiya aaroanukkuk kodukkavea'ndum. (e’n’naagamam
18:28)
உங்களுக்குக்
கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான
பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு
ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச்
செலுத்தவேண்டும். (எண்ணாகமம் 18:29)
ungga'lukkuk kodukkappadugi’ra ovvoru kaa'nikkaiyilumu'l'la uchchithamaana parisuththa panggaiyellaam karththarukku
ea’reduththup padaikkum
padaippaagach seluththavea'ndum. (e’n’naagamam
18:29)
ஆதலால்
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
அதில் உச்சிதமானதை நீங்கள்
ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும்
ஆலையின் வரத்திலும் இருந்து
எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு
எண்ணப்படும். (எண்ணாகமம் 18:30)
aathalaal nee avarga'loadea sollavea'ndiyathu ennaven’raal: athil uchchithamaanathai
neengga'l
ea’reduththup padaikkumpoathu, athu ka'laththin varaththilum
aalaiyin varaththilum irunthu
eduththuch seluththugi’rathupoala leaviyarukku
e'n'nappadum. (e’n’naagamam 18:30)
அதை நீங்களும் உங்கள்
குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்;
அது நீங்கள் ஆசரிப்புக்
கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு
ஈடான உங்கள் சம்பளம்.
(எண்ணாகமம் 18:31)
athai neengga'lum ungga'l kudumbaththaarum evvidaththilum pusikkalaam; athu neengga'l aasarippuk koodaaraththilea
seyyum pa'nividaikku
eedaana ungga'l samba'lam. (e’n’naagamam
18:31)
இப்படி
அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப்
படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம்
பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள்
சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின்
பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 18:32)
ippadi athil uchchithamaanathai
ea’reduththup padaiththeerga'laanaal, neengga'l athinimiththam paavam sumakkamaatteerga'l; neengga'l saagaathirukkumpadikku, israveal
puththirarin parisuththamaanavaiga'laith theettuppaduththalaagaathu en’ru sol
en’raar.
(e’n’naagamam 18:32)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!