Monday, November 07, 2016

E'n'naagamam 19 | எண்ணாகமம் 19 | Numbers 19

கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (எண்ணாகமம்  19:1)

karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (e’n’naagamam  19:1)

கர்த்தர்  கற்பித்த  நியமப்பிரமாணமாவது:  பழுதற்றதும்  ஊனமில்லாததும்  நுகத்தடிக்கு  உட்படாததுமாகிய  சிவப்பான  ஒரு  கிடாரியை  உன்னிடத்தில்  கொண்டுவரும்படி  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொல்லுங்கள்.  (எண்ணாகமம்  19:2)

karththar  ka’rpiththa  niyamappiramaa'namaavathu:  pazhuthat’rathum  oonamillaathathum  nugaththadikku  udpadaathathumaagiya  sivappaana  oru  kidaariyai  unnidaththil  ko'nduvarumpadi  israveal  puththirarukkuch  sollungga'l.  (e’n’naagamam  19:2)

அதை  எலெயாசார்  என்னும்  ஆசாரியனிடத்தில்  ஒப்புக்கொடுங்கள்;  அவன்  அதைப்  பாளயத்துக்கு  வெளியே  கொண்டுபோகக்கடவன்;  அங்கே  அது  அவனுக்கு  முன்பாகக்  கொல்லப்படக்கடவது.  (எண்ணாகமம்  19:3)

athai  eleyaasaar  ennum  aasaariyanidaththil  oppukkodungga'l;  avan  athaip  paa'layaththukku  ve'liyea  ko'ndupoagakkadavan;  anggea  athu  avanukku  munbaagak  kollappadakkadavathu.  (e’n’naagamam  19:3)

அப்பொழுது  ஆசாரியனாகிய  எலெயாசார்  தன்  விரலினால்  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  எதிராக  ஏழுதரம்  தெளிக்கக்கடவன்.  (எண்ணாகமம்  19:4)

appozhuthu  aasaariyanaagiya  eleyaasaar  than  viralinaal  athin  iraththaththil  kogncham  eduththu,  aasarippuk  koodaaraththukku  ethiraaga  eazhutharam  the'likkakkadavan.  (e’n’naagamam  19:4)

பின்பு  கிடாரியை  அவன்  கண்களுக்கு  முன்பாக  ஒருவன்  சுட்டெரிக்கவேண்டும்;  அதின்  தோலும்  அதின்  மாம்சமும்  அதின்  இரத்தமும்  அதின்  சாணியும்  சுட்டெரிக்கப்படவேண்டும்.  (எண்ணாகமம்  19:5)

pinbu  kidaariyai  avan  ka'nga'lukku  munbaaga  oruvan  sutterikkavea'ndum;  athin  thoalum  athin  maamsamum  athin  iraththamum  athin  saa'niyum  sutterikkappadavea'ndum.  (e’n’naagamam  19:5)

அப்பொழுது  ஆசாரியன்  கேதுருக்  கட்டையையும்  ஈசோப்பையும்  சிவப்பு  நூலையும்  எடுத்து,  கிடாரி  எரிக்கப்படுகிற  நெருப்பின்  நடுவிலே  போடக்கடவன்.  (எண்ணாகமம்  19:6)

appozhuthu  aasaariyan  keathuruk  kattaiyaiyum  eesoappaiyum  sivappu  noolaiyum  eduththu,  kidaari  erikkappadugi’ra  neruppin  naduvilea  poadakkadavan.  (e’n’naagamam  19:6)

பின்பு  ஆசாரியன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  அதின்பின்பு  பாளயத்தில்  பிரவேசிக்கக்கடவன்;  ஆசாரியன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (எண்ணாகமம்  19:7)

pinbu  aasaariyan  than  vasthirangga'laith  thoayththu,  jalaththilea  snaanampa'n'ni,  athinpinbu  paa'layaththil  piraveasikkakkadavan;  aasaariyan  saayanggaalamattum  theettuppattiruppaan.  (e’n’naagamam  19:7)

அதைச்  சுட்டெரித்தவனும்  தன்  வஸ்திரங்களை  ஜலத்தில்  தோய்த்து,  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (எண்ணாகமம்  19:8)

athaich  sutteriththavanum  than  vasthirangga'lai  jalaththil  thoayththu,  jalaththilea  snaanampa'n'ni,  saayanggaalamattum  theettuppattiruppaan.  (e’n’naagamam  19:8)

சுத்தமாயிருக்கிற  ஒருவன்  அந்தக்  கிடாரியின்  சாம்பலை  வாரிக்கொண்டு,  பாளயத்திற்குப்  புறம்பே  சுத்தமான  ஒரு  இடத்திலே  கொட்டிவைக்கக்கடவன்;  அது  இஸ்ரவேல்  புத்திரரின்  சபைக்காகத்  தீட்டுக்கழிக்கும்  ஜலத்துக்கென்று  காத்து  வைக்கப்படவேண்டும்;  அது  பாவத்தைப்  பரிகரிக்கும்.  (எண்ணாகமம்  19:9)

suththamaayirukki’ra  oruvan  anthak  kidaariyin  saambalai  vaarikko'ndu,  paa'layaththi’rkup  pu’rambea  suththamaana  oru  idaththilea  kottivaikkakkadavan;  athu  israveal  puththirarin  sabaikkaagath  theettukkazhikkum  jalaththukken’ru  kaaththu  vaikkappadavea'ndum;  athu  paavaththaip  parigarikkum.  (e’n’naagamam  19:9)

கிடாரியின்  சாம்பலை  வாரினவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  இது  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  அவர்கள்  நடுவிலே  தங்குகிற  அந்நியனுக்கும்  நித்திய  கட்டளையாயிருப்பதாக.  (எண்ணாகமம்  19:10)

kidaariyin  saambalai  vaarinavan  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  avan  saayanggaalamattum  theettuppattiruppaan;  ithu  israveal  puththirarukkum  avarga'l  naduvilea  thanggugi’ra  anniyanukkum  niththiya  katta'laiyaayiruppathaaga.  (e’n’naagamam  19:10)

செத்துப்போனவனுடைய  பிரேதத்தைத்  தொட்டவன்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பான்.  (எண்ணாகமம்  19:11)

seththuppoanavanudaiya  pireathaththaith  thottavan  eazhunaa'l  theettuppattiruppaan.  (e’n’naagamam  19:11)

அவன்  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தீட்டுக்கழிக்கும்  ஜலத்தினால்  தன்னைச்  சுத்திகரிக்கக்கடவன்;  அப்பொழுது  சுத்தமாவான்;  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தன்னைச்  சுத்திகரிக்காமலிருப்பானாகில்  சுத்தமாகான்.  (எண்ணாகமம்  19:12)

avan  moon’raam  naa'lilum  eazhaam  naa'lilum  theettukkazhikkum  jalaththinaal  thannaich  suththigarikkakkadavan;  appozhuthu  suththamaavaan;  moon’raam  naa'lilum  eazhaam  naa'lilum  thannaich  suththigarikkaamaliruppaanaagil  suththamaagaan.  (e’n’naagamam  19:12)

செத்தவனுடைய  பிரேதத்தைத்  தொட்டும்,  தன்னைச்  சுத்திகரித்துக்கொள்ளாதவன்  கர்த்தரின்  வாசஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்துகிறான்;  அந்த  ஆத்துமா  இஸ்ரவேலில்  இராமல்  அறுப்புண்டுபோவான்;  தீட்டுக்கழிக்கும்  ஜலம்  அவன்மேல்  தெளிக்கப்படாததினால்,  அவன்  தீட்டுப்பட்டிருப்பான்;  அவன்  தீட்டு  இன்னும்  அவன்மேல்  இருக்கும்.  (எண்ணாகமம்  19:13)

seththavanudaiya  pireathaththaith  thottum,  thannaich  suththigariththukko'l'laathavan  karththarin  vaasasthalaththaith  theettuppaduththugi’raan;  antha  aaththumaa  isravealil  iraamal  a’ruppu'ndupoavaan;  theettukkazhikkum  jalam  avanmeal  the'likkappadaathathinaal,  avan  theettuppattiruppaan;  avan  theettu  innum  avanmeal  irukkum.  (e’n’naagamam  19:13)

கூடாரத்தில்  ஒரு  மனிதன்  செத்தால்,  அதற்கடுத்த  நியமமாவது:  அந்தக்  கூடாரத்தில்  பிரவேசிக்கிற  யாவரும்  கூடாரத்தில்  இருக்கிற  யாவரும்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பார்கள்.  (எண்ணாகமம்  19:14)

koodaaraththil  oru  manithan  seththaal,  atha’rkaduththa  niyamamaavathu:  anthak  koodaaraththil  piraveasikki’ra  yaavarum  koodaaraththil  irukki’ra  yaavarum  eazhunaa'l  theettuppattiruppaarga'l.  (e’n’naagamam  19:14)

மூடிக்  கட்டப்படாமல்  திறந்திருக்கும்  பாத்திரங்கள்  எல்லாம்  தீட்டுப்பட்டிருக்கும்.  (எண்ணாகமம்  19:15)

moodik  kattappadaamal  thi’ranthirukkum  paaththirangga'l  ellaam  theettuppattirukkum.  (e’n’naagamam  19:15)

வெளியிலே  பட்டயத்தால்  வெட்டுண்டவனையாவது,  செத்தவனையாவது,  மனித  எலும்பையாவது,  பிரேதக்குழியையாவது,  தொட்டவன்  எவனும்  ஏழுநாள்  தீட்டுப்பட்டிருப்பான்.  (எண்ணாகமம்  19:16)

ve'liyilea  pattayaththaal  vettu'ndavanaiyaavathu,  seththavanaiyaavathu,  manitha  elumbaiyaavathu,  pireathakkuzhiyaiyaavathu,  thottavan  evanum  eazhunaa'l  theettuppattiruppaan.  (e’n’naagamam  19:16)

ஆகையால்  தீட்டுப்பட்டவனுக்காக,  பாவத்தைப்  பரிகரிக்கும்  கிடாரியின்  சாம்பலிலே  கொஞ்சம்  எடுத்து,  ஒரு  பாத்திரத்தில்  போட்டு,  அதின்மேல்  ஊற்று  ஜலம்  வார்க்கவேண்டும்.  (எண்ணாகமம்  19:17)

aagaiyaal  theettuppattavanukkaaga,  paavaththaip  parigarikkum  kidaariyin  saambalilea  kogncham  eduththu,  oru  paaththiraththil  poattu,  athinmeal  oot’ru  jalam  vaarkkavea'ndum.  (e’n’naagamam  19:17)

சுத்தமான  ஒருவன்  ஈசோப்பை  எடுத்து,  அந்த  ஜலத்திலே  தோய்த்து,  கூடாரத்தின்மேலும்  அதிலுள்ள  சகல  பணிமுட்டுகளின்மேலும்  அங்கேயிருக்கிற  ஜனங்களின்மேலும்  தெளிக்கிறதுமல்லாமல்,  எலும்பையாகிலும்  வெட்டுண்டவனையாகிலும்  செத்தவனையாகிலும்  பிரேதக்குழியையாகிலும்  தொட்டவன்மேலும்  தெளிக்கக்கடவன்.  (எண்ணாகமம்  19:18)

suththamaana  oruvan  eesoappai  eduththu,  antha  jalaththilea  thoayththu,  koodaaraththinmealum  athilu'l'la  sagala  pa'nimuttuga'linmealum  anggeayirukki’ra  janangga'linmealum  the'likki’rathumallaamal,  elumbaiyaagilum  vettu'ndavanaiyaagilum  seththavanaiyaagilum  pireathakkuzhiyaiyaagilum  thottavanmealum  the'likkakkadavan.  (e’n’naagamam  19:18)

சுத்தமாயிருக்கிறவன்  தீட்டுப்பட்டவன்மேல்  மூன்றாம்  நாளிலும்  ஏழாம்  நாளிலும்  தெளிக்கவேண்டும்;  ஏழாம்  நாளில்  இவன்  தன்னைச்  சுத்திகரித்து,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணி,  சாயங்காலத்திலே  சுத்தமாயிருப்பான்.  (எண்ணாகமம்  19:19)

suththamaayirukki’ravan  theettuppattavanmeal  moon’raam  naa'lilum  eazhaam  naa'lilum  the'likkavea'ndum;  eazhaam  naa'lil  ivan  thannaich  suththigariththu,  than  vasthirangga'laith  thoayththu,  jalaththil  snaanampa'n'ni,  saayanggaalaththilea  suththamaayiruppaan.  (e’n’naagamam  19:19)

தீட்டுப்பட்டிருக்கிறவன்  தன்னைச்  சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால்,  அவன்  சபையில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்;  அவன்  கர்த்தரின்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தினான்;  தீட்டுக்கழிக்கும்  ஜலம்  அவன்மேல்  தெளிக்கப்படாததினால்  அவன்  தீட்டுப்பட்டிருக்கிறான்.  (எண்ணாகமம்  19:20)

theettuppattirukki’ravan  thannaich  suththigariththukko'l'laathirunthaal,  avan  sabaiyil  iraathapadikku  a’ruppu'ndupoavaan;  avan  karththarin  parisuththa  sthalaththaith  theettuppaduththinaan;  theettukkazhikkum  jalam  avanmeal  the'likkappadaathathinaal  avan  theettuppattirukki’raan.  (e’n’naagamam  19:20)

தீட்டுக்கழிக்கும்  ஜலத்தைத்  தெளிக்கிறவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  தீட்டுக்கழிக்கும்  ஜலத்தைத்  தொட்டவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (எண்ணாகமம்  19:21)

theettukkazhikkum  jalaththaith  the'likki’ravanum  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  theettukkazhikkum  jalaththaith  thottavanum  saayanggaalamattum  theettuppattiruppaan.  (e’n’naagamam  19:21)

தீட்டுப்பட்டிருக்கிறவன்  தொடுகிறவைகளெல்லாம்  தீட்டுப்படும்,  அவைகளைத்  தொடுகிறவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  இது  உங்களுக்கு  நித்திய  கட்டளையாயிருக்கும்  என்றார்.  (எண்ணாகமம்  19:22)

theettuppattirukki’ravan  thodugi’ravaiga'lellaam  theettuppadum,  avaiga'laith  thodugi’ravanum  saayanggaalamattum  theettuppattiruppaan;  ithu  ungga'lukku  niththiya  katta'laiyaayirukkum  en’raar.  (e’n’naagamam  19:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!