கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
6:1)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 6:1)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும்
ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம்
பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய
ஒரு விசேஷித்த பொருத்தனையைப்
பண்ணினால், (எண்ணாகமம் 6:2)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: purushanaagilum sthireeyaagilum karththarukken’ru viratham
pa'n'nikko'ndavarga'laayirukkumpadi nasareaya virathamaagiya oru viseashiththa poruththanaiyaip pa'n'ninaal,
(e’n’naagamam 6:2)
அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும்
மற்ற மதுபானத்தின் காடியையும்,
திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான
பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச
வற்றல்களையாவது புசியாமலும், (எண்ணாகமம்
6:3)
appadippattavan thiraadcharasaththaiyum mathubaanaththaiyum vilakkakkadavan; avan thiraadcharasaththin kaadiyaiyum
mat’ra
mathubaanaththin kaadiyaiyum,
thiraadcharasaththinaal
seytha evvithamaana
baanaththaiyum kudiyaamalum,
thiraadchappazhangga'laiyaavathu thiraadcha vat’ralga'laiyaavathu pusiyaamalum, (e’n’naagamam
6:3)
தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம்
திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட
யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன். (எண்ணாகமம்
6:4)
thaan nasareayanaayirukkum naa'lellaam
thiraadchachsedi vithaimuthal
thoalvaraiyilu'l'lavaiga'linaal seyyappatta yaathon’raiyum pusiyaamalum irukkakkadavan. (e’n’naagamam
6:4)
அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம்
சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது;
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். (எண்ணாகமம்
6:5)
avan nasareaya virathangkaakkum naa'lellaam savaragan kaththi
avan thalaiyinmeal padalaagaathu; avan karththarukken’ru virathangkaakkum kaalam
ni’raivea’ruma'lavum parisuththamaayirunthu, than thalaimayirai va'laravidakkadavan. (e’n’naagamam
6:5)
அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம்
யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.
(எண்ணாகமம் 6:6)
avan karththarukken’ru virathangkaakkum naa'lellaam
yaathoru pireathaththa'ndaiyil poagakkoodaathu. (e’n’naagamam
6:6)
அவன் தன் தேவனுக்கென்று
செய்த நசரேய விரதம்
அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த
தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத்
தீட்டுப்படுத்தலாகாது. (எண்ணாகமம் 6:7)
avan than theavanukken’ru seytha
nasareaya
viratham avan thalaimeal
irukki’rapadiyaal, mara'namadaintha than thagappanaalaagilum thaayinaalaagilum
sagoatharanaalaagilum sagoathariyinaalaagilum thannaith theettuppaduththalaagaathu. (e’n’naagamam 6:7)
அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம்
கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான். (எண்ணாகமம்
6:8)
avan nasareayanaayirukkum naa'lellaam
karththarukkup parisuththamaayiruppaan.
(e’n’naagamam 6:8)
அவனண்டையிலே
ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய
தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய
ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு, (எண்ணாகமம்
6:9)
avana'ndaiyilea oruvan saduthiyil mara'namadainthathinaal, nasareaya virathamu'l'la avanudaiya
thalai theettuppattatheayaagil, avan than suththigarippin naa'laagiya eazhaam
naa'lil than thalaimayiraich
siraiththukko'ndu, (e’n’naagamam
6:9)
எட்டாம்
நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு
புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில்
ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன். (எண்ணாகமம்
6:10)
ettaam naa'lil ira'ndu
kaattuppu’raakka'laiyaavathu ira'ndu
pu’raakkugnchuga'laiyaavathu aasarippuk koodaaravaasalil aasaariyanidaththil ko'nduvarakkadavan. (e’n’naagamam
6:10)
அப்பொழுது
ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச்
சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,
பிணத்தினால் அவனுக்கு உண்டான
தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில்
பரிசுத்தப்படுத்துவானாக. (எண்ணாகமம் 6:11)
appozhuthu aasaariyan on’raip paavanivaara'nabaliyaagavum, mat’ron’raich sarvaangga thaganabaliyaagavum seluththi, pi'naththinaal avanukku
u'ndaana theettai nivirththiseythu, avan thalaiyai
annaa'lil parisuththappaduththuvaanaaga. (e’n’naagamam
6:11)
அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து,
ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய
நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.
(எண்ணாகமம் 6:12)
avan thirumbavum than virathanaadka'laik karththarukken’ru kaaththu,
oru varushaththu aattukkuttiyaik kut’ranivaara'nabaliyaagak ko'nduvarakkadavan; avanudaiya
nasareaya
viratham theettuppattathinaal sen’ra naadka'l viruthaavaagum. (e’n’naagamam
6:12)
நசரேயனுக்குரிய பிரமாணமாவது:
அவன் விரதங்காக்கும் நாட்கள்
நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே
வந்து, (எண்ணாகமம் 6:13)
nasareayanukkuriya
piramaa'namaavathu: avan virathangkaakkum naadka'l
ni’raivea’rina an’rea, avan aasarippuk koodaaravaasalilea vanthu, (e’n’naagamam
6:13)
சர்வாங்க
தகனபலியாக ஒரு வருஷத்து
பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற
ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக
பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், (எண்ணாகமம்
6:14)
sarvaangga thaganabaliyaaga oru varushaththu
pazhuthat’ra oru aattukkuttiyaiyum, paavanivaara'nabaliyaaga oru varushaththu
pazhuthat’ra oru pe'n'naattukkuttiyaiyum, samaathaanabaliyaaga pazhuthat’ra oru aattukkadaavaiyum,
(e’n’naagamam 6:14)
ஒரு கூடையில் எண்ணெயிலே
பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய
மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய்
தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும்,
அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும்
கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச்
செலுத்தக்கடவன். (எண்ணாகமம் 6:15)
oru koodaiyil
e'n'neyilea pisaintha pu'lippillaatha melliya
maavinaal seytha
athirasangga'laiyum, e'n'ney
thadavappatta pu'lippillaatha adaiga'laiyum, avaiga'lukku aduththa
poajanabaliyaiyum, baanabaliga'laiyum karththarukkuth than kaa'nikkaiyaagach seluththakkadavan. (e’n’naagamam
6:15)
அவைகளை
ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில்
கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண
பலியையும் அவனுடைய சர்வாங்க
தகனபலியையும் செலுத்தி, (எண்ணாகமம்
6:16)
avaiga'lai aasaariyan karththarudaiya
sannithiyil ko'nduvanthu,
avanudaiya paavanivaara'na baliyaiyum avanudaiya sarvaangga thaganabaliyaiyum seluththi, (e’n’naagamam
6:16)
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத
அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான
பலியாகச் செலுத்தி, அவனுடைய
போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
(எண்ணாகமம் 6:17)
aattukkadaavaik koodaiyilirukkum pu'lippillaatha appangga'loadungkoodak karththarukkuch
samaathaana baliyaagach seluththi, avanudaiya
poajanabaliyaiyum baanabaliyaiyum padaippaanaaga. (e’n’naagamam 6:17)
அப்பொழுது
நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே,
பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து,
பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து,
சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில்
போடக்கடவன். (எண்ணாகமம் 6:18)
appozhuthu nasareayan aasarippuk koodaaravaasalilea, poruththanai seyyappatta than thalaiyaich siraiththu, poruththanai seyyappatta than thalaimayirai eduththu, samaathaanabaliyinkeezh erigi’ra akkiniyil
poadakkadavan. (e’n’naagamam 6:18)
நசரேயன்
பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன்
ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில்
இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத
ஒரு அடையையும் எடுத்து,
அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,
(எண்ணாகமம் 6:19)
nasareayan poruththanai
seyyappatta than thalaimayiraich
siraiththukko'ndapinbu, aasaariyan aattukkadaavinudaiya
veavikkappatta oru munnanthodaiyaiyum, koodaiyil
irukki’ravaiga'lilea pu'lippillaatha oru athirasaththaiyum pu'lippillaatha oru adaiyaiyum eduththu,
avanudaiya u'l'langkaiga'lil vaiththu, (e’n’naagamam
6:19)
அவைகளைக்
கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப்
படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச்
சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு
நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.
(எண்ணாகமம் 6:20)
avaiga'laik karththarudaiya
sannithiyil asaivaattakkadavan; athu asaivaattappatta maarkka'ndaththoadum, ea’reduththup padaikkappatta munnanthodaiyoadum, aasaariyanaich searum;
athu parisuththamaanathu. pinbu nasareayan thiraadcharasam kudikkalaam. (e’n’naagamam
6:20)
பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு
உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும்
காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம்
இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து
தீரவேண்டும் என்று சொல் என்றார். (எண்ணாகமம்
6:21)
poruththanaipa'n'nina nasareayanukkum, avan than kaikku
uthavugi’rathaiyallaamal, than nasareaya virathaththinimiththam karththarukkuch
seluththum kaa'nikkaikkum aduththa
piramaa'nam ithuvea. avan seytha
poruththanaiyinpadiyea than poruththanaiyin piramaa'naththukkea’rka
seythu theeravea'ndum en’ru sol en’raar. (e’n’naagamam
6:21)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 6:22)
pinnum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 6:22)
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை
ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச்
சொல்லவேண்டியதாவது: (எண்ணாகமம் 6:23)
nee aaroanoadum
avan kumaararoadum sollavea'ndiyathu ennaven’raal: neengga'l israveal
puththirarai aaseervathikkumpoathu,
avarga'laip paarththuch sollavea'ndiyathaavathu: (e’n’naagamam
6:23)
கர்த்தர்
உன்னை ஆசீர்வதித்து, உன்னைக்
காக்கக்கடவர். (எண்ணாகமம் 6:24)
karththar unnai aaseervathiththu,
unnaik kaakkakkadavar. (e’n’naagamam
6:24)
கர்த்தர்
தம்முடைய முகத்தை உன்மேல்
பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். (எண்ணாகமம்
6:25)
karththar thammudaiya
mugaththai unmeal
piragaasikkappa'n'ni, unmeal
kirubaiyaayirukkakkadavar. (e’n’naagamam
6:25)
கர்த்தர்
தம்முடைய முகத்தை உன்மேல்
பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம்
கட்டளையிடக்கடவர் என்பதே. (எண்ணாகமம்
6:26)
karththar thammudaiya
mugaththai unmeal
pirasannamaakki, unakkuch samaathaanam katta'laiyidakkadavar enbathea. (e’n’naagamam
6:26)
இவ்விதமாய்
அவர்கள் என் நாமத்தை
இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது
நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 6:27)
ivvithamaay avarga'l en naamaththai israveal
puththirarmeal koo’rakkadavarga'l; appozhuthu
naan avarga'lai aaseervathippean en’ru sol en’raar. (e’n’naagamam
6:27)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!