கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
5:1)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 5:1)
குஷ்டரோகிகள்
யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும்,
சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும்
பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல்
புத்திரருக்குக் கட்டளையிடு. (எண்ணாகமம்
5:2)
kushdaroagiga'l yaavaraiyum, piramiyamu'l'lavarga'l yaavaraiyum, savaththinaal theettuppattavarga'l yaavaraiyum
paa'layaththilirunthu vilakkivida israveal
puththirarukkuk katta'laiyidu. (e’n’naagamam 5:2)
ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள்
விலக்கி, நான் வாசம்பண்ணுகிற
தங்கள் பாளயங்களை அவர்கள்
தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப்
பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார்.
(எண்ணாகமம் 5:3)
aa'npi'l'laiyaanaalum pe'npi'l'laiyaanaalum appadippattavarga'lai neengga'l vilakki, naan vaasampa'n'nugi’ra thangga'l paa'layangga'lai avarga'l theettuppaduththaathapadikku, neengga'l avarga'laip paa'layaththi’rkup pu’rambaakkividakkadaveerga'l en’raar. (e’n’naagamam
5:3)
கர்த்தர்
மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல்
புத்திரர் செய்து, அவர்களைப்
பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள். (எண்ணாகமம்
5:4)
karththar moaseakkuch sonnapadiyea, israveal
puththirar seythu,
avarga'laip paa'layaththi’rkup pu’rambaakkivittaarga'l. (e’n’naagamam 5:4)
மேலும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 5:5)
mealum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 5:5)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய
கட்டளையை மீறி மனிதர்
செய்யும் பாவங்களில் யாதொரு
பாவத்தைச் செய்து குற்றவாளியானால், (எண்ணாகமம்
5:6)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: oru purushanaanaalum sthireeyaanaalum, karththarudaiya katta'laiyai mee’ri manithar seyyum
paavangga'lil yaathoru
paavaththaich seythu
kut’ravaa'liyaanaal, (e’n’naagamam
5:6)
அவர்கள்
தாங்கள் செய்த பாவத்தை
அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின்
முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். (எண்ணாகமம்
5:7)
avarga'l thaangga'l seytha
paavaththai a’rikkaiyidakkadavarga'l; appadippattavan thaan seytha
kut’raththinimiththam abaraathaththin muthaloadea
ainthil oru panggai athigamaaykkootti, thaan kut’ragnseythavanukkuch seluththakkadavan. (e’n’naagamam
5:7)
அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான்
ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது
அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி
ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு
அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும்.
(எண்ணாகமம் 5:8)
athaik keattu vaanggugi’ratha’rku inaththaan oruvanum
illaathirunthaal, appozhuthu avanukkaagap paavanivirththi seyyumpadi aattukkadaa seluththappaduvathumallaamal, karththarukku
antha abaraatham
seluththappattu, athu aasaariyanaich searavea'ndum. (e’n’naagamam
5:8)
இஸ்ரவேல்
புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி
ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப்
பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும். (எண்ணாகமம்
5:9)
israveal puththirar
ea’reduththup padaikkumpadi
aasaariyanidaththil ko'nduvarugi’ra ellaap
parisuththamaana padaippum
avanudaiyathaayirukkum. (e’n’naagamam 5:9)
ஒவ்வொருவரும்
படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள்
அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது
எதுவும் அவனுக்கே உரியது
என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 5:10)
ovvoruvarum padaikkum
parisuththamaana vasthukka'l
avanudaiyathaayirukkum; oruvan aasaariyanukkuk kodukki’rathu ethuvum
avanukkea uriyathu en’ru sol en’raar. (e’n’naagamam
5:10)
கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
5:11)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 5:11)
நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஒருவனுடைய மனைவி பிறர்முகம்
பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி,
(எண்ணாகமம் 5:12)
nee israveal
puththirarukkuch sollavea'ndiyathu ennaven’raal: oruvanudaiya
manaivi pi’rarmugam paarththu,
purushanukkuth thuroagampa'n'ni, (e’n’naagamam 5:12)
ஒருவனோடே
சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில்
அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய
புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு
வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப்
பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், (எண்ணாகமம்
5:13)
oruvanoadea
samyoagamaaych sayaniththiruntha vishayaththil
ava'l theettuppattava'laayirunthum, ava'ludaiya
purushan ka'nga'lukku athu ma’raikkappattu ve'likku varaamal
irukki’rapoathum, saadchiyillaamalum ava'l kaiyum ka'lavumaagap pidikkappadaamalum irukki’rapoathum, (e’n’naagamam
5:13)
எரிச்சலின்
ஆவி அவன்மேல் வந்து,
அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது
அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின்
ஆவி அவன்மேல் வந்து,
அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், (எண்ணாகமம்
5:14)
erichchalin aavi avanmeal
vanthu, avan thannudaiya
manaivi theettuppaduththappattirukka, theettuppaduththappatta than manaiviyinmeal kuroathangko'ndirunthaalum, allathu
avan manaivi theettuppaduththappadaathirukka, erichchalin aavi avanmeal vanthu,
avan ava'lmeal kuroathangko'ndirunthaalum, (e’n’naagamam
5:14)
அந்தப்
புருஷன் தன் மனைவியை
ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே
பத்தில் ஒரு பங்கைப்
படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும்
அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால்,
அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும்
தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
(எண்ணாகமம் 5:15)
anthap purushan
than manaiviyai aasaariyanidaththil azhaiththukko'nduvanthu, ava'l nimiththam oru eppaa a'lavaana
vaa’rkoathumai maavilea
paththil oru panggaip padaippaagak kodukkakkadavan; athu erichchalin kaa'nikkaiyum akkiramaththai ninaippoottum kaa'nikkaiyumaay iruppathinaal, athinmeal
e'n'ney vaarkkaamalum thoobavarkkam poadaamalum
iruppaanaaga. (e’n’naagamam
5:15)
ஆசாரியன்
அவளைச் சமீபத்தில் அழைத்து,
கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
(எண்ணாகமம் 5:16)
aasaariyan ava'laich sameebaththil azhaiththu,
karththarudaiya sannithiyil ni’ruththi, (e’n’naagamam
5:16)
ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த
ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின்
தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம்
எடுத்து, அந்த ஜலத்திலே
போட்டு, (எண்ணாகமம் 5:17)
oru ma'npaa'ndaththilea parisuththa jalam vaarththu, vaasasthalaththin tharaiyilirukkum puzhuthiyilea
kogncham
eduththu, antha jalaththilea
poattu,
(e’n’naagamam 5:17)
ஸ்திரீயைக்
கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
அவள் முக்காட்டை நீக்கி,
எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை
அவள் உள்ளங்கையிலே வைப்பானாக;
சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில்
இருக்கவேண்டும். (எண்ணாகமம் 5:18)
sthireeyaik karththarudaiya sannithiyil ni’ruththi, ava'l mukkaattai neekki, erichchalin kaa'nikkaiyaagiya ninaippoottuthalin kaa'nikkaiyai
ava'l u'l'langkaiyilea vaippaanaaga; saabakaara'namaana kasappaana jalam aasaariyan kaiyil irukkavea'ndum. (e’n’naagamam
5:18)
பின்பு
ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும்
உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம்
பாராமலும் இருந்தால், சாபகாரணமான
இந்தக் கசப்பான ஜலத்தின்
தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய். (எண்ணாகமம்
5:19)
pinbu aasaariyan ava'lai aa'naiyiduviththu: oruvanum
unnoadea sayaniyaamalum, un purushanukku udpattirukki’ra nee theettuppadaththakkathaayp pi’rarmugam paaraamalum irunthaal, saabakaara'namaana inthak
kasappaana jalaththin
thoashaththukku neenggalaayiruppaay.
(e’n’naagamam 5:19)
உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து,
உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே
சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால், (எண்ணாகமம்
5:20)
un purushanukku
udpattirukki’ra nee pi’rarmugam paarththu,
un purushanoadeayan’ri anniyanoadea
samyoagamaay sayaniththuth theettuppattiruppaayaanaal,
(e’n’naagamam 5:20)
கர்த்தர்
உன் இடுப்பு சூம்பவும்,
உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும்
ஆணையிடுங் குறியுமாக வைப்பாராக.
(எண்ணாகமம் 5:21)
karththar un iduppu
soombavum, un vayi’ru veenggavumpa'n'ni, unnai un janangga'lukku'l'lea
saabamum aa'naiyidung
ku’riyumaaga vaippaaraaga. (e’n’naagamam
5:21)
சாபகாரணமான
இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும்
இடுப்பு சூம்பவும் பண்ணும்படி,
உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற
சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக.
அதற்கு அந்த ஸ்திரீ:
ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள். (எண்ணாகமம்
5:22)
saabakaara'namaana intha jalam un vayi’ru veenggavum iduppu soombavum pa'n'numpadi, un kudalukku'l piraveasikkakkadavathu engi’ra saabavaarththaiyaalea sthireeyai
aa'naiyiduviththuch solvaanaaga. atha’rku antha sthiree:
aamen, aamen, en’ru sollakkadava'l. (e’n’naagamam
5:22)
பின்பு
ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி,
அவைகளைக் கசப்பான ஜலத்தினால்
கழுவிப்போட்டு, (எண்ணாகமம் 5:23)
pinbu aasaariyan inthach saabavaarththaiga'lai oru seettil
ezhuthi, avaiga'laik kasappaana jalaththinaal kazhuvippoattu, (e’n’naagamam
5:23)
சாபகாரணமான
அந்தக் கசப்பான ஜலத்தை
அவள் குடிக்கும்படி பண்ணுவான்;
அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள்
இறங்கிக் கசப்பாகும். (எண்ணாகமம்
5:24)
saabakaara'namaana anthak
kasappaana jalaththai
ava'l kudikkumpadi pa'n'nuvaan;
appozhuthu saabakaara'namaana antha jalam ava'lukku'l
i’ranggik kasappaagum. (e’n’naagamam 5:24)
பின்பு
ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை
அந்த ஸ்திரீயின் கையிலிருந்து
வாங்கி, அதைக் கர்த்தருடைய
சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல்
செலுத்தி, (எண்ணாகமம் 5:25)
pinbu aasaariyan erichchalin kaa'nikkaiyai antha sthireeyin kaiyilirunthu
vaanggi,
athaik karththarudaiya sannithiyil asaivaatti, peedaththinmeal
seluththi, (e’n’naagamam
5:25)
ஞாபகக்குறியாக
அதிலே ஒரு கைப்பிடி
நிறைய எடுத்து, பீடத்தின்மேல்
தகனித்து, பின்பு ஸ்திரீக்கு
அந்த ஜலத்தைக் குடிக்கும்படி
கொடுக்கக்கடவன். (எண்ணாகமம் 5:26)
gnaabagakku’riyaaga athilea oru kaippidi ni’raiya eduththu,
peedaththinmeal thaganiththu, pinbu sthireekku antha jalaththaik kudikkumpadi
kodukkakkadavan. (e’n’naagamam 5:26)
அந்த ஜலத்தைக் குடிக்கச்
செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான
அந்த ஜலம் அவளுக்குள்
பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறுவீங்கி, அவள் இடுப்பு சூம்பும்;
இப்படியே அந்த ஸ்திரீ
தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக
இருப்பாள். (எண்ணாகமம் 5:27)
antha jalaththaik
kudikkach seythapinbu
sambavippathaavathu:
ava'l theettuppattu, than purushanukkuth thuroagampa'n'niyirunthaal,
saabakaara'namaana antha jalam ava'lukku'l
piraveasiththuk kasappu'ndaanathinaal, ava'l vayi’ruveenggi, ava'l iduppu
soombum; ippadiyea antha sthiree than janangga'lukku'l'lea saabamaaga iruppaa'l.
(e’n’naagamam 5:27)
அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி,
கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.
(எண்ணாகமம் 5:28)
antha sthiree
theettuppadaamal suththamaayirunthaal, ava'l atha’rku neenggalaagi, karppantharikkaththakkava'laayiruppaa'l. (e’n’naagamam
5:28)
ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய
புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான
எரிச்சலுக்கும், (எண்ணாகமம் 5:29)
oru sthiree
than purushanoadeayan’ri anniya purushanoadea searnthu theettuppattathinaal u'ndaana erichchalukkum, (e’n’naagamam
5:29)
புருஷன்மேல்
எரிச்சலின் ஆவி வருகிறதினால்,
அவன் தன் மனைவியின்மேல்
அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த
பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில்
தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன்
இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச்
செய்யக்கடவன். (எண்ணாகமம் 5:30)
purushanmeal erichchalin aavi varugi’rathinaal, avan than manaiviyinmeal adaintha samusayaththukkum aduththa
piramaa'nam ithuvea. avan karththarudaiya
sannithiyil than manaiviyai ni’ruththuvaanaaga; aasaariyan inthap piramaa'naththinpadiyellaam ava'lukkuch seyyakkadavan. (e’n’naagamam
5:30)
புருஷனானவன்
அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட
ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச்
சுமப்பாள் என்று சொல் என்றார். (எண்ணாகமம்
5:31)
purushanaanavan akkiramaththi’rku neenggalaayiruppaan; appadippatta sthireeyoa,
than akkiramaththaich sumappaa'l en’ru sol en’raar. (e’n’naagamam
5:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!