Sunday, November 06, 2016

E'n'naagamam 4 | எண்ணாகமம் 4 | Numbers 4

கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (எண்ணாகமம்  4:1)

karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (e’n’naagamam  4:1)

லேவியின்  புத்திரருக்குள்ளே  இருக்கிற  கோகாத்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களில்,  (எண்ணாகமம்  4:2)

leaviyin  puththirarukku'l'lea  irukki’ra  koagaath  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lil,  (e’n’naagamam  4:2)

ஆசரிப்புக்  கூடாரத்திலே  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க  முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணி,  தொகையிடுவாயாக.  (எண்ணாகமம்  4:3)

aasarippuk  koodaaraththilea  vealaiseyyum  seanaikku  udpadaththakka  muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'la  ellaaraiyum  e'n'ni,  thogaiyiduvaayaaga.  (e’n’naagamam  4:3)

ஆசரிப்புக்  கூடாரத்திலே  கோகாத்  புத்திரரின்  பணிவிடை  மகா  பரிசுத்தமானவைகளுக்குரியது.  (எண்ணாகமம்  4:4)

aasarippuk  koodaaraththilea  koagaath  puththirarin  pa'nividai  mahaa  parisuththamaanavaiga'lukkuriyathu.  (e’n’naagamam  4:4)

பாளயம்  புறப்படும்போது,  ஆரோனும்  அவன்  குமாரரும்  வந்து,  மறைவின்  திரைச்சீலையை  இறக்கி,  அதினாலே  சாட்சியின்  பெட்டியை  மூடி,  (எண்ணாகமம்  4:5)

paa'layam  pu’rappadumpoathu,  aaroanum  avan  kumaararum  vanthu,  ma’raivin  thiraichseelaiyai  i’rakki,  athinaalea  saadchiyin  pettiyai  moodi,  (e’n’naagamam  4:5)

அதின்மேல்  தகசுத்தோல்  மூடியைப்போட்டு,  அதின்மேல்  முற்றிலும்  நீலமான  துப்பட்டியை  விரித்து,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  (எண்ணாகமம்  4:6)

athinmeal  thagasuththoal  moodiyaippoattu,  athinmeal  mut’rilum  neelamaana  thuppattiyai  viriththu,  athin  tha'nduga'laip  paaychchi,  (e’n’naagamam  4:6)

சமுகத்தப்ப  மேஜையின்மேல்  நீலத்  துப்பட்டியை  விரித்து,  தட்டுகளையும்  தூபக்கரண்டிகளையும்  கிண்ணங்களையும்  மூடுகிற  தட்டுகளையும்  அதின்மேல்  வைப்பார்களாக;  நித்திய  அப்பமும்  அதின்மேல்  இருக்கக்கடவது.  (எண்ணாகமம்  4:7)

samugaththappa  meajaiyinmeal  neelath  thuppattiyai  viriththu,  thattuga'laiyum  thoobakkara'ndiga'laiyum  ki'n'nangga'laiyum  moodugi’ra  thattuga'laiyum  athinmeal  vaippaarga'laaga;  niththiya  appamum  athinmeal  irukkakkadavathu.  (e’n’naagamam  4:7)

அவைகளின்மேல்  அவர்கள்  சிவப்புத்  துப்பட்டியை  விரித்து,  அதைத்  தகசுத்தோல்  மூடியால்  மூடி,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  (எண்ணாகமம்  4:8)

avaiga'linmeal  avarga'l  sivapputh  thuppattiyai  viriththu,  athaith  thagasuththoal  moodiyaal  moodi,  athin  tha'nduga'laip  paaychchi,  (e’n’naagamam  4:8)

இளநீலத்  துப்பட்டியை  எடுத்து,  குத்துவிளக்குத்தண்டையும்,  அதின்  அகல்களையும்,  அதின்  கத்தரிகளையும்,  சாம்பல்  பாத்திரங்களையும்,  அதற்குரிய  எண்ணெய்ப்  பாத்திரங்களையும்  மூடி,  (எண்ணாகமம்  4:9)

i'laneelath  thuppattiyai  eduththu,  kuththuvi'lakkuththa'ndaiyum,  athin  agalga'laiyum,  athin  kaththariga'laiyum,  saambal  paaththirangga'laiyum,  atha’rkuriya  e'n'neyp  paaththirangga'laiyum  moodi,  (e’n’naagamam  4:9)

அதையும்  அதற்கடுத்த  தட்டுமுட்டுகள்  யாவையும்  தகசுத்தோல்  மூடிக்குள்ளே  போட்டு,  அதை  ஒரு  தண்டிலே  கட்டி,  (எண்ணாகமம்  4:10)

athaiyum  atha’rkaduththa  thattumuttuga'l  yaavaiyum  thagasuththoal  moodikku'l'lea  poattu,  athai  oru  tha'ndilea  katti,  (e’n’naagamam  4:10)

பொற்பீடத்தின்மேல்  இளநீலத்  துப்பட்டியை  விரித்து,  அதைத்  தகசுத்தோல்  மூடியால்  மூடி,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சி,  (எண்ணாகமம்  4:11)

po’rpeedaththinmeal  i'laneelath  thuppattiyai  viriththu,  athaith  thagasuththoal  moodiyaal  moodi,  athin  tha'nduga'laip  paaychchi,  (e’n’naagamam  4:11)

பரிசுத்த  ஸ்தலத்தில்  வழங்கும்  ஆராதனைக்கேற்ற  சகல  தட்டுமுட்டுகளையும்  எடுத்து,  இளநீலத்  துப்பட்டியிலே  போட்டு,  தகசுத்தோல்  மூடியினால்  மூடி,  தண்டின்மேல்  கட்டி,  (எண்ணாகமம்  4:12)

parisuththa  sthalaththil  vazhanggum  aaraathanaikkeat’ra  sagala  thattumuttuga'laiyum  eduththu,  i'laneelath  thuppattiyilea  poattu,  thagasuththoal  moodiyinaal  moodi,  tha'ndinmeal  katti,  (e’n’naagamam  4:12)

பலிபீடத்தைச்  சாம்பலற  விளக்கி,  அதின்மேல்  இரத்தாம்பரத்  துப்பட்டியை  விரித்து,  (எண்ணாகமம்  4:13)

balipeedaththaich  saambala’ra  vi'lakki,  athinmeal  iraththaambarath  thuppattiyai  viriththu,  (e’n’naagamam  4:13)

அதின்மேல்  ஆராதனைக்கேற்ற  சகல  பணிமுட்டுகளாகிய  கலசங்களையும்,  முள்  துறடுகளையும்,  சாம்பல்  எடுக்கும்  கரண்டிகளையும்,  கலசங்களையும்,  பலிபீடத்திற்கடுத்த  எல்லாப்  பாத்திரங்களையும்,  அதின்மேல்  வைத்து,  அதின்மேல்  தகசுத்தோல்  மூடியை  விரித்து,  அதின்  தண்டுகளைப்  பாய்ச்சக்கடவர்கள்.  (எண்ணாகமம்  4:14)

athinmeal  aaraathanaikkeat’ra  sagala  pa'nimuttuga'laagiya  kalasangga'laiyum,  mu'l  thu’raduga'laiyum,  saambal  edukkum  kara'ndiga'laiyum,  kalasangga'laiyum,  balipeedaththi’rkaduththa  ellaap  paaththirangga'laiyum,  athinmeal  vaiththu,  athinmeal  thagasuththoal  moodiyai  viriththu,  athin  tha'nduga'laip  paaychchakkadavarga'l.  (e’n’naagamam  4:14)

பாளயம்  புறப்படும்போது,  ஆரோனும்  அவன்  குமாரரும்  பரிசுத்த  ஸ்தலத்தையும்  அதினுடைய  சகல  பணிமுட்டுகளையும்  மூடித்  தீர்ந்தபின்பு,  கோகாத்  புத்திரர்  அதை  எடுத்துக்கொண்டுபோகிறதற்கு  வரக்கடவர்கள்;  அவர்கள்  சாகாதபடிக்குப்  பரிசுத்தமானதைத்  தொடாதிருக்கக்கடவர்கள்;  ஆசரிப்புக்  கூடாரத்திலே  கோகாத்  புத்திரர்  சுமக்கும்  சுமை  இதுவே.  (எண்ணாகமம்  4:15)

paa'layam  pu’rappadumpoathu,  aaroanum  avan  kumaararum  parisuththa  sthalaththaiyum  athinudaiya  sagala  pa'nimuttuga'laiyum  moodith  theernthapinbu,  koagaath  puththirar  athai  eduththukko'ndupoagi’ratha’rku  varakkadavarga'l;  avarga'l  saagaathapadikkup  parisuththamaanathaith  thodaathirukkakkadavarga'l;  aasarippuk  koodaaraththilea  koagaath  puththirar  sumakkum  sumai  ithuvea.  (e’n’naagamam  4:15)

ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரன்  எலெயாசார்,  விளக்குக்கு  எண்ணெயையும்,  சுகந்த  தூபவர்க்கத்தையும்,  தினந்தோறும்  இடும்  போஜனபலியையும்,  அபிஷேக  தைலத்தையும்,  வாசஸ்தலம்  முழுவதையும்,  அதிலுள்ள  யாவையும்,  பரிசுத்த  ஸ்தலத்தையும்  அதின்  பணிமுட்டுகளையும்,  விசாரிக்கக்கடவன்  என்றார்.  (எண்ணாகமம்  4:16)

aasaariyanaagiya  aaroanin  kumaaran  eleyaasaar,  vi'lakkukku  e'n'neyaiyum,  sugantha  thoobavarkkaththaiyum,  thinanthoa’rum  idum  poajanabaliyaiyum,  abisheaga  thailaththaiyum,  vaasasthalam  muzhuvathaiyum,  athilu'l'la  yaavaiyum,  parisuththa  sthalaththaiyum  athin  pa'nimuttuga'laiyum,  visaarikkakkadavan  en’raar.  (e’n’naagamam  4:16)

கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (எண்ணாகமம்  4:17)

karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (e’n’naagamam  4:17)

லேவியருக்குள்ளே  கோகாத்  வம்சமாகிய  கோத்திரத்தார்  அழிந்துபோகாதபடி  பாருங்கள்.  (எண்ணாகமம்  4:18)

leaviyarukku'l'lea  koagaath  vamsamaagiya  koaththiraththaar  azhinthupoagaathapadi  paarungga'l.  (e’n’naagamam  4:18)

அவர்கள்  மகா  பரிசுத்தமானவைகளைக்  கிட்டுகையில்,  சாகாமல்  உயிரோடிருக்கும்படிக்கு,  நீங்கள்  அவர்களுக்காகச்  செய்யவேண்டியதாவது:  (எண்ணாகமம்  4:19)

avarga'l  mahaa  parisuththamaanavaiga'laik  kittugaiyil,  saagaamal  uyiroadirukkumpadikku,  neengga'l  avarga'lukkaagach  seyyavea'ndiyathaavathu:  (e’n’naagamam  4:19)

ஆரோனும்  அவன்  குமாரரும்  வந்து,  அவர்களில்  அவனவனை  அவனவன்  செய்யும்  வேலைக்கும்  அவனவன்  சுமக்கும்  சுமைக்கும்  நியமிக்கக்கடவர்கள்;  அவர்களோ  சாகாதபடிக்குப்  பரிசுத்தமானவைகள்  மூடப்படும்போது  பார்க்கிறதற்கு  உட்பிரவேசியாமல்  இருப்பார்களாக  என்றார்.  (எண்ணாகமம்  4:20)

aaroanum  avan  kumaararum  vanthu,  avarga'lil  avanavanai  avanavan  seyyum  vealaikkum  avanavan  sumakkum  sumaikkum  niyamikkakkadavarga'l;  avarga'loa  saagaathapadikkup  parisuththamaanavaiga'l  moodappadumpoathu  paarkki’ratha’rku  udpiraveasiyaamal  iruppaarga'laaga  en’raar.  (e’n’naagamam  4:20)

பின்னும்,  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  4:21)

pinnum,  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  4:21)

கெர்சோன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  (எண்ணாகமம்  4:22)

kersoan  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lilum  aasarippuk  koodaaraththilea  pa'nividai  vealaiseyyum  seanaikku  udpadaththakka,  (e’n’naagamam  4:22)

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணி,  தொகை  ஏற்றுவாயாக.  (எண்ணாகமம்  4:23)

muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'la  ellaaraiyum  e'n'ni,  thogai  eat’ruvaayaaga.  (e’n’naagamam  4:23)

பணிவிடை  செய்கிறதிலும்  சுமக்கிறதிலும்  கெர்சோன்  வம்சத்தாரின்  வேலையாவது:  (எண்ணாகமம்  4:24)

pa'nividai  seygi’rathilum  sumakki’rathilum  kersoan  vamsaththaarin  vealaiyaavathu:  (e’n’naagamam  4:24)

அவர்கள்  வாசஸ்தலத்துக்கும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  உரிய  தொங்குதிரையையும்,  மூடியையும்,  அவைகளின்மேல்  இருக்கிற  தகசுத்தோல்  மூடியையும்,  ஆசரிப்புக்  கூடாரவாசல்  மறைவையும்,  (எண்ணாகமம்  4:25)

avarga'l  vaasasthalaththukkum  aasarippuk  koodaaraththukkum  uriya  thongguthiraiyaiyum,  moodiyaiyum,  avaiga'linmeal  irukki’ra  thagasuththoal  moodiyaiyum,  aasarippuk  koodaaravaasal  ma’raivaiyum,  (e’n’naagamam  4:25)

பிராகாரத்தின்  தொங்குதிரைகளையும்,  வாசஸ்தலத்தண்டையிலும்  பலிபீடத்தண்டையிலும்  சுற்றிலும்  இருக்கிற  பிராகாரத்தினுடைய  வாசல்  தொங்குதிரையையும்,  அவைகளின்  கயிறுகளையும்,  அவைகளின்  வேலைக்கடுத்த  கருவிகள்  யாவையும்  சுமந்து,  அவைகளுக்காகச்  செய்யவேண்டிய  யாவையும்  செய்யக்கடவர்கள்.  (எண்ணாகமம்  4:26)

piraagaaraththin  thongguthiraiga'laiyum,  vaasasthalaththa'ndaiyilum  balipeedaththa'ndaiyilum  sut’rilum  irukki’ra  piraagaaraththinudaiya  vaasal  thongguthiraiyaiyum,  avaiga'lin  kayi’ruga'laiyum,  avaiga'lin  vealaikkaduththa  karuviga'l  yaavaiyum  sumanthu,  avaiga'lukkaagach  seyyavea'ndiya  yaavaiyum  seyyakkadavarga'l.  (e’n’naagamam  4:26)

கெர்சோன்  புத்திரர்  சுமக்கவேண்டிய  சுமைகளும்  செய்யவேண்டிய  பணிவிடைகளாகிய  சகல  வேலைகளும்  ஆரோனும்  அவன்  குமாரரும்  சொல்லுகிறபடியே  செய்யவேண்டும்;  அவர்கள்  சுமக்கவேண்டிய  சகல  சுமைகளையும்  நீங்கள்  நியமித்து,  அவர்களிடத்தில்  ஒப்புவியுங்கள்.  (எண்ணாகமம்  4:27)

kersoan  puththirar  sumakkavea'ndiya  sumaiga'lum  seyyavea'ndiya  pa'nividaiga'laagiya  sagala  vealaiga'lum  aaroanum  avan  kumaararum  sollugi’rapadiyea  seyyavea'ndum;  avarga'l  sumakkavea'ndiya  sagala  sumaiga'laiyum  neengga'l  niyamiththu,  avarga'lidaththil  oppuviyungga'l.  (e’n’naagamam  4:27)

கெர்சோன்  புத்திரரின்  வம்சத்தார்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடை  இதுதான்;  அவர்களை  வேலைகொள்ளும்  விசாரணை,  ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரன்  இத்தாமாருடைய  கைக்குள்  இருக்கவேண்டும்.  (எண்ணாகமம்  4:28)

kersoan  puththirarin  vamsaththaar  aasarippuk  koodaaraththilea  seyyum  pa'nividai  ithuthaan;  avarga'lai  vealaiko'l'lum  visaara'nai,  aasaariyanaagiya  aaroanin  kumaaran  iththaamaarudaiya  kaikku'l  irukkavea'ndum.  (e’n’naagamam  4:28)

மெராரி  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  வேலைசெய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  (எண்ணாகமம்  4:29)

meraari  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lilum  aasarippuk  koodaaraththilea  pa'nividai  vealaiseyyum  seanaikku  udpadaththakka,  (e’n’naagamam  4:29)

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணக்கடவாய்.  (எண்ணாகமம்  4:30)

muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'la  ellaaraiyum  e'n'nakkadavaay.  (e’n’naagamam  4:30)

ஆசரிப்புக்  கூடாரத்தில்  அவர்கள்  செய்யும்  எல்லாப்  பணிவிடைக்கும்  அடுத்த  காவல்  விசாரிப்பாவது:  வாசஸ்தலத்தின்  பலகைகளும்,  தாழ்ப்பாள்களும்,  தூண்களும்,  பாதங்களும்,  (எண்ணாகமம்  4:31)

aasarippuk  koodaaraththil  avarga'l  seyyum  ellaap  pa'nividaikkum  aduththa  kaaval  visaarippaavathu:  vaasasthalaththin  palagaiga'lum,  thaazhppaa'lga'lum,  thoo'nga'lum,  paathangga'lum,  (e’n’naagamam  4:31)

சுற்றிலும்  இருக்கிற  பிராகாரத்தின்  தூண்களும்,  அவைகளின்  பாதங்களும்,  முளைகளும்,  கயிறுகளும்,  அவைகளின்  சகல  கருவிகளும்,  அவற்றிற்கு  அடுத்த  மற்றெல்லா  வேலையும்தானே;  அவர்கள்  சுமந்து  காவல்காக்கும்படி  ஒப்புவிக்கப்படுகிறவைகளைப்  பேர்பேராக  எண்ணக்கடவீர்கள்.  (எண்ணாகமம்  4:32)

sut’rilum  irukki’ra  piraagaaraththin  thoo'nga'lum,  avaiga'lin  paathangga'lum,  mu'laiga'lum,  kayi’ruga'lum,  avaiga'lin  sagala  karuviga'lum,  avat’ri’rku  aduththa  mat’rellaa  vealaiyumthaanea;  avarga'l  sumanthu  kaavalkaakkumpadi  oppuvikkappadugi’ravaiga'laip  pearpearaaga  e'n'nakkadaveerga'l.  (e’n’naagamam  4:32)

ஆசாரியனாகிய  ஆரோனுடைய  குமாரனான  இத்தாமாருடைய  கைக்குள்ளாக  மெராரி  புத்திரரின்  வம்சத்தார்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடைக்கு  அடுத்த  எல்லா  வேலையும்  இதுவே  என்றார்.  (எண்ணாகமம்  4:33)

aasaariyanaagiya  aaroanudaiya  kumaaranaana  iththaamaarudaiya  kaikku'l'laaga  meraari  puththirarin  vamsaththaar  aasarippuk  koodaaraththilea  seyyum  pa'nividaikku  aduththa  ellaa  vealaiyum  ithuvea  en’raar.  (e’n’naagamam  4:33)

அப்படியே  மோசேயும்  ஆரோனும்  சபையின்  பிரபுக்களும்  கோகாத்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களின்படி  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  (எண்ணாகமம்  4:34)

appadiyea  moaseayum  aaroanum  sabaiyin  pirabukka'lum  koagaath  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'linpadi  aasarippuk  koodaaraththilea  pa'nividai  seyyum  seanaikku  udpadaththakka,  (e’n’naagamam  4:34)

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரையும்  எண்ணினார்கள்.  (எண்ணாகமம்  4:35)

muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'la  ellaaraiyum  e'n'ninaarga'l.  (e’n’naagamam  4:35)

அவர்கள்  வம்சங்களில்  எண்ணப்பட்டவர்கள்  இரண்டாயிரத்து  எழுநூற்று  ஐம்பதுபேர்.  (எண்ணாகமம்  4:36)

avarga'l  vamsangga'lil  e'n'nappattavarga'l  ira'ndaayiraththu  ezhunoot’ru  aimbathupear.  (e’n’naagamam  4:36)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே,  மோசேயினாலும்  ஆரோனாலும்  கோகாத்  வம்சத்தாரில்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வேலை  செய்கிறதற்காக  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  (எண்ணாகமம்  4:37)

karththar  moaseakkuk  katta'laiyittapadiyea,  moaseayinaalum  aaroanaalum  koagaath  vamsaththaaril  aasarippuk  koodaaraththil  vealai  seygi’ratha’rkaaga  e'n'nith  thogaiyidappattavarga'l  ellaarum  ivarga'lea.  (e’n’naagamam  4:37)

கெர்சோன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  (எண்ணாகமம்  4:38)

kersoan  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lilum  aasarippuk  koodaaraththilea  pa'nividai  seyyum  seanaikku  udpadaththakka,  (e’n’naagamam  4:38)

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ள  எல்லாரும்  எண்ணப்பட்டார்கள்.  (எண்ணாகமம்  4:39)

muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'la  ellaarum  e'n'nappattaarga'l.  (e’n’naagamam  4:39)

அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அவரவர்  குடும்பத்தின்படிக்கும்,  பிதாக்களுடைய  வம்சத்தின்படிக்கும்  இரண்டாயிரத்து  அறுநூற்று  முப்பதுபேர்.  (எண்ணாகமம்  4:40)

avarga'lil  e'n'nappattavarga'l  avaravar  kudumbaththinpadikkum,  pithaakka'ludaiya  vamsaththinpadikkum  ira'ndaayiraththu  a’runoot’ru  muppathupear.  (e’n’naagamam  4:40)

மோசேயினாலும்  ஆரோனாலும்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  கெர்சோன்  புத்திரரின்  வம்சத்தாரில்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  வேலைசெய்ய  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  (எண்ணாகமம்  4:41)

moaseayinaalum  aaroanaalum  karththar  katta'laiyittapadiyea  kersoan  puththirarin  vamsaththaaril  aasarippuk  koodaaraththil  vealaiseyya  e'n'nith  thogaiyidappattavarga'l  ellaarum  ivarga'lea.  (e’n’naagamam  4:41)

மெராரி  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களிலும்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  பணிவிடை  செய்யும்  சேனைக்கு  உட்படத்தக்க,  (எண்ணாகமம்  4:42)

meraari  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lilum  aasarippuk  koodaaraththilea  pa'nividai  seyyum  seanaikku  udpadaththakka,  (e’n’naagamam  4:42)

முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுள்ளவர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டார்கள்.  (எண்ணாகமம்  4:43)

muppathu  vayathumuthal  aimbathu  vayathu'l'lavarga'l  ellaarum  e'n'nappattaarga'l.  (e’n’naagamam  4:43)

அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  தங்கள்  குடும்பங்களின்படியே  மூவாயிரத்து  இருநூறுபேர்.  (எண்ணாகமம்  4:44)

avarga'lil  e'n'nappattavarga'l  thangga'l  kudumbangga'linpadiyea  moovaayiraththu  irunoo’rupear.  (e’n’naagamam  4:44)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  மோசேயினாலும்  ஆரோனாலும்  மெராரி  புத்திரரின்  குடும்பத்தாரில்  எண்ணித்  தொகையிடப்பட்டவர்கள்  எல்லாரும்  இவர்களே.  (எண்ணாகமம்  4:45)

karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  moaseayinaalum  aaroanaalum  meraari  puththirarin  kudumbaththaaril  e'n'nith  thogaiyidappattavarga'l  ellaarum  ivarga'lea.  (e’n’naagamam  4:45)

லேவியருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சங்களில்  முப்பது  வயதுமுதல்  ஐம்பது  வயதுவரைக்குமுள்ளவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடை  வேலைக்கும்  சுமையின்  வேலைக்கும்  உட்படத்தக்கவர்களும்,  (எண்ணாகமம்  4:46)

leaviyarudaiya  pithaakka'lin  veettu  vamsangga'lil  muppathu  vayathumuthal  aimbathu  vayathuvaraikkumu'l'lavarga'l  aasarippuk  koodaaraththilea  seyyum  pa'nividai  vealaikkum  sumaiyin  vealaikkum  udpadaththakkavarga'lum,  (e’n’naagamam  4:46)

மோசேயினாலும்  ஆரோனாலும்  இஸ்ரவேலின்  பிரபுக்களாலும்  எண்ணப்பட்டவர்களும்  ஆகிய  எல்லாரும்,  (எண்ணாகமம்  4:47)

moaseayinaalum  aaroanaalum  isravealin  pirabukka'laalum  e'n'nappattavarga'lum  aagiya  ellaarum,  (e’n’naagamam  4:47)

எண்ணாயிரத்து  ஐந்நூற்று  எண்பதுபேராயிருந்தார்கள்.  (எண்ணாகமம்  4:48)

e'n'naayiraththu  ainnoot’ru  e'nbathupearaayirunthaarga'l.  (e’n’naagamam  4:48)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே,  அவர்கள்  தங்கள்  தங்கள்  பணிவிடைக்கென்றும்  தங்கள்  தங்கள்  சுமைக்கென்றும்  மோசேயினால்  எண்ணப்பட்டார்கள்;  இவ்விதமாய்,  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  அவர்கள்  அவனால்  எண்ணப்பட்டார்கள்.  (எண்ணாகமம்  4:49)

karththar  moaseakkuk  katta'laiyittapadiyea,  avarga'l  thangga'l  thangga'l  pa'nividaikken’rum  thangga'l  thangga'l  sumaikken’rum  moaseayinaal  e'n'nappattaarga'l;  ivvithamaay,  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  avarga'l  avanaal  e'n'nappattaarga'l.  (e’n’naagamam  4:49)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!