சீனாய்
மலையில் கர்த்தர் மோசேயோடே
பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய
வம்சவரலாறாவது: (எண்ணாகமம் 3:1)
seenaay malaiyil
karththar moaseayoadea peasina naa'lilea, aaroan
moasea
enbavarga'ludaiya vamsavaralaa’raavathu: (e’n’naagamam 3:1)
ஆரோனுடைய
குமாரர், முதல் பிறந்தவனாகிய
நாதாப், அபியூ, எலெயாசார்,
இத்தாமார் என்பவர்களே. (எண்ணாகமம்
3:2)
aaroanudaiya kumaarar,
muthal pi’ranthavanaagiya naathaab, abiyoo, eleyaasaar, iththaamaar enbavarga'lea. (e’n’naagamam 3:2)
ஆசாரிய
ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான
ஆரோனுடைய குமாரரின் நாமங்கள்
இவைகளே. (எண்ணாகமம் 3:3)
aasaariya oozhiyamseygi’ratha’rku avanaal pirathishdai seyyappattu abisheagampet’ra aasaariyaraana aaroanudaiya
kumaararin naamangga'l ivaiga'lea. (e’n’naagamam 3:3)
நாதாபும்
அபியூவும் சீனாய் வனாந்தரத்தில்
அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய
சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய
சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப்
பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும்
இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய
ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய
ஊழியம் செய்தார்கள். (எண்ணாகமம்
3:4)
naathaabum abiyoovum seenaay
vanaantharaththil anniya akkiniyaik
karththarudaiya sannithiyil ko'nduvanthapoathu, karththarudaiya sannithiyil mariththuppoanaarga'l; avarga'lukkup pi'l'laiga'l illai;
eleyaasaarum iththaamaarumea thangga'l thagappanaagiya aaroanukku munbaaga aasaariya oozhiyam seythaarga'l. (e’n’naagamam
3:4)
கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
3:5)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 3:5)
நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து,
அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப்
பணிவிடை செய்யும்படி அவர்களை
நிறுத்து. (எண்ணாகமம் 3:6)
nee leavikoaththiraththaaraich searththu, avarga'l aasaariyanaagiya aaroanukkup pa'nividai seyyumpadi avarga'lai ni’ruththu. (e’n’naagamam
3:6)
அவர்கள்
ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக
அவனுடைய காவலையும் எல்லாச்
சபையின் காவலையும் காத்து,
வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச்
செய்யக்கடவர்கள். (எண்ணாகமம் 3:7)
avarga'l aasarippuk koodaaraththukku munbaaga avanudaiya
kaavalaiyum ellaach sabaiyin kaavalaiyum
kaaththu, vaasasthalaththin pa'nividai vealaiga'laich seyyakkadavarga'l. (e’n’naagamam
3:7)
அவர்கள்
ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு
முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின்
காவலையும் காத்து, வாசஸ்தலத்தின்
பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள். (எண்ணாகமம்
3:8)
avarga'l aasarippuk koodaaraththin thattumuttu muthalaanavaiga'laiyum, israveal puththirarin
kaavalaiyum kaaththu, vaasasthalaththin pa'nividaiga'laich seyyakkadavarga'l. (e’n’naagamam
3:8)
ஆகையால்
லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல்
புத்திரரில் இவர்கள் முற்றிலும்
அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். (எண்ணாகமம்
3:9)
aagaiyaal leaviyarai aaroanidaththilum avan kumaararidaththilum oppukkoduppaayaaga; israveal
puththiraril ivarga'l mut’rilum avanukku oppukkodukkappattirukki’raarga'l. (e’n’naagamam
3:9)
ஆரோனையும்
அவன் குமாரரையுமோ, தங்கள்
ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக
நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச்
செய்யும்படி சேருகிற அந்நியன்
கொலைசெய்யப்படக்கடவன் என்றார். (எண்ணாகமம்
3:10)
aaroanaiyum avan kumaararaiyumoa, thangga'l aasaariya oozhiyaththaich
seyvatha’rkaaga niyamikkakkadavaay, antha oozhiyaththaich seyyumpadi searugi’ra anniyan
kolaiseyyappadakkadavan en’raar. (e’n’naagamam
3:10)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 3:11)
pinnum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 3:11)
இஸ்ரவேல்
புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற
முதற்பேறான யாவுக்கும் பதிலாக,
நான் லேவியரை இஸ்ரவேல்
புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள்
என்னுடையவர்களாயிருக்கிறார்கள். (எண்ணாகமம் 3:12)
israveal puththiraril
karppanthi’ranthu pi’rakki’ra mutha’rpea’raana yaavukkum
bathilaaga, naan leaviyarai israveal
puththirarilirunthu eduththukko'ndean; avarga'l ennudaiyavarga'laayirukki’raarga'l. (e’n’naagamam
3:12)
முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை;
நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான
யாவையும் சங்கரித்த நாளில்,
இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான
யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள்
என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர்
என்றார். (எண்ணாகமம் 3:13)
mutha’rpea’raanavaiyellaam ennudaiyavai;
naan egipthutheasaththil mutha’rpea’raana yaavaiyum sanggariththa naa'lil,
isravealil manitharmuthal mirugajeevanmattumu'l'la mutha’rpea’raana yaavaiyum
enakken’ru parisuththappaduththinathinaalea, avaiga'l ennudaiyavaiga'laayirukkum; naan karththar en’raar. (e’n’naagamam
3:13)
பின்னும்
கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
3:14)
pinnum karththar seenaay
vanaantharaththil moaseayai noakki: (e’n’naagamam
3:14)
லேவிபுத்திரரை
அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக;
அவர்களில் ஒரு மாதம்முதல்
அதற்கு மேற்பட்ட வயதுள்ள
ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.
(எண்ணாகமம் 3:15)
leavipuththirarai avarga'l pithaakka'lin
vamsangga'linpadiyea e'n'nuvaayaaga; avarga'lil oru maathammuthal atha’rku mea’rpatta vayathu'l'la aa'npi'l'laiga'laiyellaam e'n'nuvaayaaga en’raar. (e’n’naagamam
3:15)
அப்பொழுது
கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்டபிரகாரம் அவர்களை
எண்ணினான். (எண்ணாகமம் 3:16)
appozhuthu karththarudaiya vaakkinpadi,
moasea
thanakkuk ka’rpikkappattapiragaaram avarga'lai e'n'ninaan. (e’n’naagamam
3:16)
லேவியின்
குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன்,
கோகாத், மெராரி என்பவர்கள்.
(எண்ணாகமம் 3:17)
leaviyin kumaarar
thangga'l
naamangga'linpadiyea, kersoan, koagaath, meraari
enbavarga'l. (e’n’naagamam
3:17)
தங்கள்
வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின்
நாமங்கள், லிப்னீ, சீமேயி
என்பவைகள். (எண்ணாகமம் 3:18)
thangga'l vamsaththinpadiyea
kersoanudaiya kumaararin
naamangga'l, libnee, seemeayi enbavaiga'l. (e’n’naagamam 3:18)
தங்கள்
வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர்,
அம்ராம், இத்சேயார், எப்ரோன்,
ஊசியேல் என்பவர்கள். (எண்ணாகமம்
3:19)
thangga'l vamsangga'linpadiyea koagaaththudaiya kumaarar,
amraam, ithseayaar, ebroan, oosiyeal enbavarga'l. (e’n’naagamam
3:19)
தங்கள்
வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர்,
மகேலி, மூசி என்பவர்கள்;
இவர்களே லேவியருடைய பிதாக்களின்
வம்சத்தார். (எண்ணாகமம் 3:20)
thangga'l vamsangga'linpadiyea meraariyinudaiya kumaarar,
mageali,
moosi
enbavarga'l; ivarga'lea leaviyarudaiya pithaakka'lin
vamsaththaar. (e’n’naagamam
3:20)
கெர்சோனின்
வழியாய் லிப்னீயரின் வம்சமும்
சீமேயியர் வம்சமும் தோன்றின;
இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
(எண்ணாகமம் 3:21)
kersoanin vazhiyaay libneeyarin vamsamum seemeayiyar vamsamum thoan’rina; ivaiga'lea kersoaniyarin vamsangga'l. (e’n’naagamam 3:21)
அவர்களில்
ஒரு மாதம்முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து
ஐந்நூறுபேராயிருந்தார்கள். (எண்ணாகமம் 3:22)
avarga'lil oru maathammuthal
atha’rku
mea’rpatta vayathu'l'la
aa'npi'l'laiga'lellaam e'n'nappattapoathu, e'n'nappattavarga'l eazhaayiraththu ainnoo’rupearaayirunthaarga'l. (e’n’naagamam 3:22)
கெர்சோனியரின்
வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில்
மேற்கே பாளயமிறங்கவேண்டும். (எண்ணாகமம்
3:23)
kersoaniyarin vamsangga'l vaasasthalaththin pinpu’raththil mea’rkea paa'layami’ranggavea'ndum. (e’n’naagamam 3:23)
கெர்சோனியருடைய தகப்பன்
வம்சத்துக்குத் தலைவன் லாயேலின்
குமாரனாகிய எலியாசாப் என்பவன்.
(எண்ணாகமம் 3:24)
kersoaniyarudaiya thagappan vamsaththukkuth thalaivan laayealin
kumaaranaagiya eliyaasaap enbavan. (e’n’naagamam
3:24)
ஆசரிப்புக்
கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின்
காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும்,
அதின் மூடியும், ஆசரிப்புக்
கூடாரவாசல் மறைவும், (எண்ணாகமம்
3:25)
aasarippuk koodaaraththilea kersoan puththirarin
kaavalaavathu: vaasasthalamum, koodaaramum, athin moodiyum, aasarippuk koodaaravaasal ma’raivum, (e’n’naagamam
3:25)
வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும்
இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல்
மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
(எண்ணாகமம் 3:26)
vaasasthalaththa'ndaiyilum balipeedaththa'ndaiyilum
sut’rilum irukki’ra piraagaaraththin thongguthiraiga'lum, piraagaaravaasal mooduthiraiyum, avaiga'lin vealaiga'lukkellaam uriya avaiga'lin kayi’ruga'lumea. (e’n’naagamam 3:26)
கோகாத்தின்
வழியாய் அம்ராமியரின் வம்சமும்
இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின்
வம்சமும் ஊசியேலரின் வம்சமும்
தோன்றின; இவைகளே கோகாத்தியரின்
வம்சங்கள். (எண்ணாகமம் 3:27)
koagaaththin vazhiyaay amraamiyarin
vamsamum
ithseayaarin vamsamum ebroaniyarin vamsamum oosiyealarin vamsamum thoan’rina; ivaiga'lea koagaaththiyarin vamsangga'l. (e’n’naagamam 3:27)
ஒரு மாதம்முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த
ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து
அறுநூறுபேராயிருந்தார்கள். (எண்ணாகமம் 3:28)
oru maathammuthal
atha’rku
mea’rpatta vayathu'l'la
aa'npi'l'laiga'lellaam e'n'nappattapoathu, parisuththa sthalaththukkuriyavaiga'laik kaappavarga'l, e'n'naayiraththu a’runoo’rupearaayirunthaarga'l. (e’n’naagamam
3:28)
கோகாத்
புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின்
தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும். (எண்ணாகமம்
3:29)
koagaath puththirarin vamsangga'l vaasasthalaththin thenpu’ramaana pakkaththilea paa'layami’ranggavea'ndum. (e’n’naagamam 3:29)
அவர்களின்
தலைவன், ஊசியேலின் குமாரனாகிய
எல்சாபான். (எண்ணாகமம் 3:30)
avarga'lin thalaivan, oosiyealin kumaaranaagiya elsaapaan. (e’n’naagamam
3:30)
அவர்களுடைய
காவலாவது: பெட்டியும், மேஜையும்,
குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற
பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய
எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
(எண்ணாகமம் 3:31)
avarga'ludaiya kaavalaavathu: pettiyum, meajaiyum,
kuththuvi'lakkum, peedangga'lum, aaraathanaikkeat’ra parisuththa sthalaththin pa'nimuttuga'lum, thongguthiraiyum, athinudaiya
ellaa vealaiga'lukkum eat’ravaiga'lumea. (e’n’naagamam
3:31)
ஆசாரியனாகிய
ஆரோனின் குமாரன் எலெயாசார்
என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப்
பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும். (எண்ணாகமம்
3:32)
aasaariyanaagiya aaroanin
kumaaran eleyaasaar enbavan leaviyarudaiya thalaivarga'lukkuth thalaivanaayp
parisuththa sthalaththaik
kaavalkaakki’ravarga'lukku visaarippukkaaranaayirukkavea'ndum. (e’n’naagamam
3:32)
மெராரியின்
வழியாய் மகேலியரின் வம்சமும்
மூசியரின் வம்சமும் தோன்றின;
இவைகளே மெராரியின் வம்சங்கள்.
(எண்ணாகமம் 3:33)
meraariyin vazhiyaay
magealiyarin vamsamum moosiyarin vamsamum thoan’rina; ivaiga'lea meraariyin
vamsangga'l. (e’n’naagamam
3:33)
அவர்களில்
ஒரு மாதம்முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து
இருநூறுபேராயிருந்தார்கள். (எண்ணாகமம் 3:34)
avarga'lil oru maathammuthal
atha’rku
mea’rpatta vayathu'l'la
aa'npi'l'laiga'lellaam e'n'nappattapoathu, e'n'nappattavarga'l aa’raayiraththu irunoo’rupearaayirunthaarga'l. (e’n’naagamam
3:34)
அபியாயேலின்
குமாரனாகிய சூரியேல் என்பவன்
அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள்
வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில்
பாளயமிறங்கவேண்டும். (எண்ணாகமம் 3:35)
abiyaayealin kumaaranaagiya sooriyeal enbavan avarga'lukkuth thalaivanaayirunthaan; ivarga'l vaasasthalaththin vadapu’ramaana pakkaththil
paa'layami’ranggavea'ndum. (e’n’naagamam
3:35)
அவர்களுடைய
காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின்
பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும்,
பாதங்களும், அதினுடைய எல்லாப்
பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும்,
(எண்ணாகமம் 3:36)
avarga'ludaiya kaaval visaarippaavathu: vaasasthalaththin palagaiga'lum, thaazhppaa'lga'lum, thoo'nga'lum, paathangga'lum, athinudaiya
ellaap pa'nimuttuga'lum, atha’rkaduththavaiga'l anaiththum,
(e’n’naagamam 3:36)
சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும்,
அவைகளின் பாதங்களும், முளைகளும்,
கயிறுகளுமே. (எண்ணாகமம் 3:37)
sut’ruppiraagaaraththin thoo'nga'lum, avaiga'lin paathangga'lum, mu'laiga'lum, kayi’ruga'lumea. (e’n’naagamam 3:37)
ஆசரிப்புக்
கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக,
சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும்
ஆரோனும் அவன் குமாரரும்
கூடாரங்களைப் போட்டு இறங்கி,
இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப்
பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக்
காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில்
சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன். (எண்ணாகமம்
3:38)
aasarippuk koodaaramaagiya vaasasthalaththukku
munbaaga, sooriyan uthikkum
keezhppu’raththilea moaseayum aaroanum
avan kumaararum koodaarangga'laip poattu i’ranggi, israveal puththirarin
kaavalukkup bathilaagap parisuththa sthalaththaik
kaaval kaakkavea'ndum. vaasasthalaththil
searugi’ra anniyan kolaiseyyappadakkadavan. (e’n’naagamam
3:38)
மோசேயும்
ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி,
லேவியரில் ஒரு மாதம்முதல்
அதற்கு மேற்பட்ட வயதுள்ள
ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்;
அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள். (எண்ணாகமம்
3:39)
moaseayum aaroanum, karththarudaiya vaakkinpadi,
leaviyaril oru maathammuthal
atha’rku
mea’rpatta vayathu'l'la
aa'npi'l'laiga'laiyellaam avarga'ludaiya vamsangga'linpadiyea e'n'ninaarga'l; avarga'l irubaththeeraayirampearaayirunthaarga'l. (e’n’naagamam 3:39)
அதன்பின்பு
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரில்
ஒரு மாதம்முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான
ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள்
நாமங்களைத் தொகையேற்றி, (எண்ணாகமம்
3:40)
athanpinbu karththar moaseayai noakki:
nee israveal puththiraril
oru maathammuthal atha’rku mea’rpatta vayathu'l'la mutha’rpea’raana aa'npi'l'laiga'laiyellaam e'n'ni, avarga'l naamangga'laith thogaiyeat’ri, (e’n’naagamam 3:40)
இஸ்ரவேல்
புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும்
பதிலாக லேவியரையும், இஸ்ரவேல்
புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான
யாவுக்கும் பதிலாக லேவியரின்
மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு;
நான் கர்த்தர் என்றார்.
(எண்ணாகமம் 3:41)
israveal puththirarilu'l'la mutha’rpea’raana yaavukkum bathilaaga leaviyaraiyum, israveal
puththirarin mirugajeevanga'lilu'l'la thalaiyeet’raana yaavukkum
bathilaaga leaviyarin
mirugajeevanga'laiyum enakken’ru piriththedu;
naan karththar en’raar. (e’n’naagamam
3:41)
அப்பொழுது
மோசே, கர்த்தர் தனக்குக்
கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான
யாவரையும் எண்ணினான். (எண்ணாகமம்
3:42)
appozhuthu moasea, karththar
thanakkuk katta'laiyittapadiyea, israveal
puththirarilu'l'la mutha’rpea’raana yaavaraiyum
e'n'ninaan. (e’n’naagamam 3:42)
ஒரு மாதம்முதல் அதற்கு
மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான
ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று
எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள். (எண்ணாகமம் 3:43)
oru maathammuthal
atha’rku
mea’rpatta vayathu'l'la
mutha’rpea’raana aa'npi'l'laiga'lellaarum pearpearaaga e'n'nappattapoathu, irubaththeeraayiraththu irunoot’ru ezhubaththumoon’rupearaayirunthaarga'l. (e’n’naagamam
3:43)
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 3:44)
appozhuthu karththar
moaseayai
noakki: (e’n’naagamam 3:44)
நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான
யாவருக்கும் பதிலாக லேவியரையும்,
அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப் பதிலாக
லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு;
லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர். (எண்ணாகமம்
3:45)
nee israveal
puththirarilu'l'la mutha’rpea’raana yaavarukkum
bathilaaga leaviyaraiyum, avarga'ludaiya mirugajeevanga'lukkup bathilaaga leaviyarin
mirugajeevanga'laiyum piriththedu;
leaviyar ennudaiyavarga'laayiruppaarga'l; naan karththar. (e’n’naagamam
3:45)
இஸ்ரவேல்
புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின்
தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று
எழுபத்துமூன்றுபேரிடத்திலும், (எண்ணாகமம் 3:46)
israveal puththirarudaiya mutha’rpea’ruga'lil leaviyarin thogaikku athigamaayirunthu, meedkappadavea'ndiya irunoot’ru ezhubaththumoon’rupearidaththilum,
(e’n’naagamam 3:46)
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப்
பரிசுத்த சேக்கல் கணக்கின்படி
வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது
இருபது கேரா. (எண்ணாகமம்
3:47)
nee thalaikku
ainthu seakkal
veethamaagap parisuththa seakkal ka'nakkinpadi
vaangguvaayaaga; anthach seakkalaanathu irubathu kearaa.
(e’n’naagamam 3:47)
லேவியருடைய
தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும்
திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக
என்றார். (எண்ணாகமம் 3:48)
leaviyarudaiya thogaikku athigamaanavarga'l meedkappadum thiraviyaththai aaroanukkum
avan kumaararukkum koduppaayaaga en’raar. (e’n’naagamam
3:48)
அப்படியே
லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு
அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல்
புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில், (எண்ணாகமம்
3:49)
appadiyea leaviyaraal
meedkappattavarga'lin thogaikku athigamaayirunthu, innum meedkappadavea'ndiyavarga'lukku eedaaga moasea israveal puththirarudaiya mutha’rpea’raanavarga'lidaththil, (e’n’naagamam
3:49)
ஆயிரத்து
முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய
திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச்
சேக்கல் கணக்கின்படி வாங்கி,
(எண்ணாகமம் 3:50)
aayiraththu munnoot’ru a’rubaththainthu
seakkalaagiya thiraviyaththai, parisuththa sthalaththuch seakkal ka'nakkinpadi
vaanggi,
(e’n’naagamam 3:50)
கர்த்தருடைய
வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை
ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர்
தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.
(எண்ணாகமம் 3:51)
karththarudaiya vaakkinpadiyea meedkappattavarga'lin kirayaththai aaroanukkum
avan kumaararukkum, karththar
thanakkuk katta'laiyittapadiyea koduththaan.
(e’n’naagamam 3:51)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!