கர்த்தர்
மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
(எண்ணாகமம் 2:1)
karththar moaseayaiyum aaroanaiyum
noakki: (e’n’naagamam 2:1)
இஸ்ரவேல்
புத்திரர் அவரவர் தங்கள்
தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்
விருதாகிய தங்கள் தங்கள்
கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப்
போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு
எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். (எண்ணாகமம்
2:2)
israveal puththirar
avaravar thangga'l thangga'l pithaakka'ludaiya vamsaththin viruthaagiya thangga'l thangga'l kodiya'ndaiyilea thangga'l koodaarangga'laip poattu, aasarippuk koodaaraththi’rku ethiraagach sut’rilum paa'layami’ranggakkadavarga'l. (e’n’naagamam
2:2)
யூதாவின்
பாளயத்துக் கொடியையுடைய சேனைகள்
சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின்
குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:3)
yoothaavin paa'layaththuk kodiyaiyudaiya seanaiga'l
sooriyan uthikkum
keezhppu’raththilea paa'layami’ranggavea'ndum; amminathaabin kumaaranaagiya nagasoan yoothaa santhathikkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:3)
எண்ணப்பட்ட
அவனுடைய சேனை எழுபத்து
நாலாயிரத்து அறுநூறுபேர். (எண்ணாகமம்
2:4)
e'n'nappatta avanudaiya seanai ezhubaththu naalaayiraththu a’runoo’rupear. (e’n’naagamam 2:4)
அவன் அருகே இசக்கார்
கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின்
குமாரன் நெதனெயேல் இசக்கார்
சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:5)
avan arugea isakkaar koaththiraththaar paa'layami’ranggavea'ndum; soovaarin kumaaran
nethaneyeal isakkaar santhathikkuch
seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:5)
எண்ணப்பட்ட
அவனுடைய சேனை ஐம்பத்து
நாலாயிரத்து நானூறுபேர். (எண்ணாகமம்
2:6)
e'n'nappatta avanudaiya seanai aimbaththu naalaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
2:6)
அவன் அருகே செபுலோன்
கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின்
குமாரனாகிய எலியாப் செபுலோன்
சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:7)
avan arugea sebuloan koaththiraththaar paa'layami’ranggavea'ndum; ealoanin kumaaranaagiya eliyaab sebuloan santhathikkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:7)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
(எண்ணாகமம் 2:8)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l aimbaththeazhaayiraththu
naanoo’rupear. (e’n’naagamam
2:8)
எண்ணப்பட்ட
யூதாவின் பாளயத்தார் எல்லாரும்
தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து
எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்;
இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள். (எண்ணாகமம்
2:9)
e'n'nappatta yoothaavin paa'layaththaar ellaarum
thangga'l seanaiga'linpadiyea iladchaththu e'nbaththu aa’raayiraththu naanoo’rupear; ivarga'l pirayaa'naththilea mutha’rpaa'layamaayp poagakkadavarga'l. (e’n’naagamam 2:9)
ரூபனுடைய
பாளயத்துக் கொடியையுடைய சேனைகள்
தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின்
குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:10)
roobanudaiya paa'layaththuk kodiyaiyudaiya seanaiga'l thenpu’raththil paa'layami’ranggavea'ndum; seatheayoorin kumaaranaagiya elisoor rooban santhathiyaarukkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:10)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 2:11)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l naa’rpaththaa’raayiraththu ainnoo’rupear. (e’n’naagamam
2:11)
அவன் அருகே சிமியோன்
கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின்
குமாரனாகிய செலூமியேல் சிமியோன்
சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:12)
avan arugea simiyoan koaththiraththaar paa'layami’ranggavea'ndum; soorishathaayin kumaaranaagiya
seloomiyeal
simiyoan santhathiyaarukkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:12)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.
(எண்ணாகமம் 2:13)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l aimbaththonbathinaayiraththu munnoo’rupear. (e’n’naagamam
2:13)
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின்
குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:14)
avan arugea kaath koaththiraththaar paa'layami’ranggavea'ndum; theaguvealin kumaaranaagiya eliyaasaap kaath santhathiyaarukkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:14)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று
ஐம்பதுபேர். (எண்ணாகமம் 2:15)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l naa’rpaththaiyaayiraththu
a’runoot’ru aimbathupear. (e’n’naagamam
2:15)
எண்ணப்பட்ட
ரூபனின் பாளயத்தார் எல்லாரும்
தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து
ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று
ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில்
இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். (எண்ணாகமம்
2:16)
e'n'nappatta roobanin paa'layaththaar ellaarum
thangga'l seanaiga'linpadiyea iladchaththu aimbaththu oaraayiraththu naanoot’ru aimbathupear; ivarga'l pirayaa'naththil ira'ndaam
paa'layamaayp poagakkadavarga'l. (e’n’naagamam
2:16)
பின்பு
ஆசரிப்புக் கூடாரம் லேவியரின்
சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்;
எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே
அவரவர் தங்கள் வரிசையிலே
தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப்
போகக்கடவர்கள். (எண்ணாகமம் 2:17)
pinbu aasarippuk koodaaram leaviyarin seanaiyoadea paa'layangga'lin naduvea
pirayaa'nappattup poagavea'ndum; eppadip
paa'layami’ranggugi’raarga'loa, appadiyea avaravar
thangga'l
varisaiyilea thangga'l kodiga'loadea pirayaa'namaayp poagakkadavarga'l. (e’n’naagamam 2:17)
எப்பிராயீமுடைய பாளயத்துக்
கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில்
இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய
எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச்
சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம் 2:18)
eppiraayeemudaiya paa'layaththuk kodiyaiyudaiya seanaiga'l mealpu’raththil i’ranggavea'ndum; ammiyoothin kumaaranaagiya elishaamaa
eppiraayeemin santhathikkuch
seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:18)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 2:19)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l naa’rpathinaayiraththu
ainnoo’rupear. (e’n’naagamam
2:19)
அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின்
குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:20)
avan arugea manaasea koaththiraththaar paa'layami’ranggavea'ndum; pethaasoorin kumaaranaagiya kamaaliyeal manaasea santhathikkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:20)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
(எண்ணாகமம் 2:21)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l muppaththeeraayiraththu irunoo’rupear. (e’n’naagamam
2:21)
அவன் அருகே பென்யமீன்
கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின்
குமாரனாகிய அபீதான் பென்யமீன்
சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:22)
avan arugea benyameen koaththiraththaar paa'layami’ranggavea'ndum; keetheyoanin kumaaranaagiya abeethaan benyameen santhathikkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:22)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
(எண்ணாகமம் 2:23)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l muppaththaiyaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
2:23)
எண்ணப்பட்ட
எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும்
தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து
எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள்
பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப்
போகக்கடவர்கள். (எண்ணாகமம் 2:24)
e'n'nappatta eppiraayeemin paa'layaththaar ellaarum
thangga'l seanaiga'linpadiyea iladchaththu e'n'naayiraththu noo’rupear; ivarga'l pirayaa'naththil moon’raam paa'layamaayp
poagakkadavarga'l. (e’n’naagamam
2:24)
தாணுடைய
பாளயத்துக் கொடியையுடைய சேனைகள்
வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின்
குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:25)
thaa'nudaiya paa'layaththuk kodiyaiyudaiya seanaiga'l vadapu’raththil i’ranggavea'ndum; ammishathaayin kumaaranaagiya agiyeasear thaa'n vamsaththi’rkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:25)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
(எண்ணாகமம் 2:26)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l a’rubaththeeraayiraththu ezhunoo’rupear. (e’n’naagamam
2:26)
அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின்
குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:27)
avan arugea aasear koaththiraththaar paa'layami’ranggavea'ndum; oakiraanin kumaaranaagiya paagiyeal aasear santhathikkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:27)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
(எண்ணாகமம் 2:28)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l naa’rpaththoaraayiraththu
ainnoo’rupear. (e’n’naagamam
2:28)
அவன் அருகே நப்தலி
கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின்
குமாரனாகிய அகீரா நப்தலி
சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். (எண்ணாகமம்
2:29)
avan arugea napthali
koaththiraththaar paa'layami’ranggavea'ndum; eanaanin
kumaaranaagiya ageeraa napthali santhathiyaarukkuch seanaabathiyaayirukkakkadavan. (e’n’naagamam
2:29)
அவனுடைய
சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து
மூவாயிரத்து நானூறுபேர். (எண்ணாகமம்
2:30)
avanudaiya
seanaiyil e'n'nappattavarga'l aimbaththu moovaayiraththu naanoo’rupear. (e’n’naagamam
2:30)
எண்ணப்பட்ட
தாணின் பாளயத்தார் எல்லாரும்
இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்;
இவர்கள் தங்கள் கொடிகளோடே
பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள். (எண்ணாகமம்
2:31)
e'n'nappatta thaa'nin paa'layaththaar ellaarum
iladchaththu aimbaththeazhaayiraththu a’runoo’rupear; ivarga'l thangga'l kodiga'loadea pinpaa'layamaayp poagakkadavarga'l. (e’n’naagamam 2:31)
இவர்களே
தங்கள் தங்கள் பிதாக்களின்
வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில்
எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள்
தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும்
ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று
ஐம்பது பேராயிருந்தார்கள். (எண்ணாகமம்
2:32)
ivarga'lea thangga'l thangga'l pithaakka'lin vamsaththinpadi israveal
puththiraril e'n'nappattavarga'l. paa'layangga'lilea thangga'l thangga'l seanaiga'linpadiyea e'n'nappattavarga'l ellaarum
aa’ruladchaththu moovaayiraththu ainnoot’ru aimbathu pearaayirunthaarga'l. (e’n’naagamam
2:32)
லேவியரோ,
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல்
புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை. (எண்ணாகமம்
2:33)
leaviyaroa, karththar
moaseakkuk katta'laiyittapadi, israveal puththirarukku'l'lea e'n'nappadavillai. (e’n’naagamam
2:33)
கர்த்தர்
மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல்
புத்திரர் செய்து, தங்கள்
தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி,
தங்கள் தங்கள் பிதாக்களுடைய
வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள். (எண்ணாகமம்
2:34)
karththar moaseakkuk katta'laiyittapadiyellaam israveal puththirar seythu,
thangga'l
thangga'l
kodiga'linkeezh paa'layami’ranggi, thangga'l thangga'l pithaakka'ludaiya vamsangga'linpadiyea pirayaa'nappattuppoanaarga'l. (e’n’naagamam
2:34)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!