மோசே இஸ்ரவேல்
புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை
நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது
என்னவென்றால்: (எண்ணாகமம் 30:1)
moasea israveal
puththirarudaiya koaththirangga'lin thalaivarai noakki:
karththar katta'laiyiduvathu
ennaven’raal: (e’n’naagamam
30:1)
ஒருவன் கர்த்தருக்கு
யாதொரு பொருத்தனை பண்ணினாலும்,
அல்லது யாதொரு காரியத்தைச்
செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட
வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். (எண்ணாகமம்
30:2)
oruvan karththarukku yaathoru
poruththanai pa'n'ninaalum, allathu
yaathoru kaariyaththaich seyyumpadi aa'naiyittuth than aaththumaavai nibanthanaikkudpaduththikko'ndaalum, avan solthava’raamal than vaayilirunthu pu’rappatta vaakkinpadiyellaam
seyyakkadavan. (e’n’naagamam
30:2)
தன் தகப்பன்
வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை
தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு
காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால், (எண்ணாகமம்
30:3)
than thagappan veettilirukki’ra oru pe'npi'l'lai than si’ruvayathilea karththarukkup poruththanaipa'n'ni yaathoru
kaariyaththaich seyyumpadi than aaththumaavai nibanthanaikkudpaduththikko'ndaal, (e’n’naagamam
30:3)
அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய
தகப்பன் கேட்டும் அவளுக்கு
ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப்
பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும்
நிறைவேறவேண்டும். (எண்ணாகமம் 30:4)
ava'l seytha
poruththanaiyaiyum, ava'l pa'n'nikko'nda nibanthanaiyaiyum ava'ludaiya
thagappan
keattum
ava'lukku on’rum sollaathiruppaanaanaal, ava'l seytha
ellaap poruththanaiga'lum ava'l than aaththumaavai nibanthanaikkudpaduththikko'nda nibanthanaiyum ni’raivea’ravea'ndum. (e’n’naagamam 30:4)
அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய
தகப்பன் கேட்கிற நாளில்
அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய
தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர்
அதை அவளுக்கு மன்னிப்பார்.
(எண்ணாகமம் 30:5)
ava'l seytha
poruththanaiga'laiyum, ava'l seyyumpadi than aaththumaavai nibanthanaikkudpaduththina nibanthanaiyaiyum ava'ludaiya
thagappan
keadki’ra
naa'lil avan vea'ndaam
en’ru
thaduththaal, athu ni’raivea’ravea'ndiyathillai;
ava'ludaiya thagappan vea'ndaam en’ru thaduththapadiyaal, karththar
athai ava'lukku mannippaar.
(e’n’naagamam 30:5)
அவள் பொருத்தனை
பண்ணும்போதும், தன் உதடுகளைத்
திறந்து தன் ஆத்துமாவை
நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும்,
அவளுக்குப் புருஷன் இருந்தால்,
(எண்ணாகமம் 30:6)
ava'l poruththanai pa'n'numpoathum, than uthaduga'laith thi’ranthu than aaththumaavai
nibanthanaikkudpaduththikko'l'lumpoathum, ava'lukkup
purushan irunthaal, (e’n’naagamam
30:6)
அப்பொழுது அவளுடைய
புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில்
அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய
பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும்
நிறைவேறவேண்டும். (எண்ணாகமம் 30:7)
appozhuthu ava'ludaiya purushan
athaik keattirunthum, athaik kea'lvippadugi’ra naa'lil
ava'lukku on’rum sollaathirunthaal, ava'ludaiya
poruththanaiga'lum ava'l than aaththumaavai
nibanthanaikkudpaduththina nibanthanaiyum ni’raivea’ravea'ndum. (e’n’naagamam 30:7)
அவளுடைய புருஷன்
அதைக் கேட்கிற நாளில்
அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும்
அவள் தன் ஆத்துமாவை
நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி
செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர்
அதை அவளுக்கு மன்னிப்பார்.
(எண்ணாகமம் 30:8)
ava'ludaiya purushan athaik
keadki’ra
naa'lil avan vea'ndaam
en’ru
thaduththu, ava'l seytha poruththanaiyum ava'l than aaththumaavai
nibanthanaikkudpaduththikko'nda nibanthanaiyum
sellaathapadi
seythaaneayaanaal, appozhuthu
karththar athai ava'lukku
mannippaar. (e’n’naagamam 30:8)
ஒரு விதவையாவது,
தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது
தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும். (எண்ணாகமம்
30:9)
oru vithavaiyaavathu, tha'l'lappattuppoana oru sthireeyaavathu than aaththumaavai entha nibanthanaikkudpaduththikko'l'lugi’raa'loa antha nibanthanai ni’raivea’ravea'ndum. (e’n’naagamam
30:9)
அவள் தன் புருஷனுடைய வீட்டில்
யாதொரு பொருத்தனை பண்ணினாலும்,
அல்லது யாதொரு காரியத்தைச்
செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், (எண்ணாகமம்
30:10)
ava'l than purushanudaiya veettil yaathoru
poruththanai pa'n'ninaalum, allathu
yaathoru kaariyaththaich seyyumpadi aa'naiyittuth than aaththumaavai nibanthanaikkudpaduththikko'ndaalum, (e’n’naagamam
30:10)
அவளுடைய புருஷன்
அதைக் கேட்டும் அவளுக்கு
அதை வேண்டாமென்று தடுக்காமல்
மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை
நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும்
நிறைவேறவேண்டும். (எண்ணாகமம் 30:11)
ava'ludaiya purushan athaik
keattum
ava'lukku athai vea'ndaamen’ru thadukkaamal
mavunamaayirunthaal, ava'l seytha ellaap
poruththanaiga'lum, ava'l than aaththumaavai
nibanthanaikkudpaduththina ellaa nibanthanaiga'lum ni’raivea’ravea'ndum. (e’n’naagamam 30:11)
அவளுடைய புருஷன்
அவைகளைக் கேட்ட நாளில்
அவைகளைச் செல்லாதபடி பண்ணினால்,
அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய
புருஷன் அவைகளைச் செல்லாதபடி
பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார்.
(எண்ணாகமம் 30:12)
ava'ludaiya purushan avaiga'laik keatta naa'lil
avaiga'laich
sellaathapadi pa'n'ninaal,
appozhuthu ava'l seytha poruththanaiga'lum, ava'l than aaththumaavaiyudpaduththina nibanthanaiyaikku’riththu ava'l vaayilirunthu
pu’rappattathon’rum ni’raivea’ravea'ndiyathillai; ava'ludaiya
purushan avaiga'laich sellaathapadi pa'n'ninathinaalea karththar
athai ava'lukku mannippaar.
(e’n’naagamam 30:12)
எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத்
தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய
புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி
பண்ணவும் கூடும். (எண்ணாகமம்
30:13)
enthap poruththanaiyaiyum, aaththumaavaith thaazhmaippaduththumpadi seyyappatta entha aa'naiyaiyum,
ava'ludaiya purushan sthirappaduththavungkoodum, sellaathapadi pa'n'navum
koodum. (e’n’naagamam 30:13)
அவளுடைய புருஷன்
ஒருநாளும் அவளுக்கு ஒன்றும்
சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய
எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய
எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு
ஒன்றும் சொல்லாமற் போனதினால்,
அவைகளை ஸ்திரப்படுத்துகிறான். (எண்ணாகமம்
30:14)
ava'ludaiya purushan orunaa'lum
ava'lukku on’rum sollaathirunthaanaagil, avan ava'ludaiya
ellaap poruththanaiga'laiyum, ava'lpearilirukki’ra ava'ludaiya ellaa nibanthanaiga'laiyum sthirappaduththugi’raan; avan athaik keatta naa'lilea
ava'lukku on’rum sollaama’r poanathinaal,
avaiga'lai sthirappaduththugi’raan. (e’n’naagamam
30:14)
அவன் அவைகளைக்
கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால்,
அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார்.
(எண்ணாகமம் 30:15)
avan avaiga'laik keattapinbu sellaathapadi pa'n'ninaal,
ava'ludaiya akkiramaththai avan sumappaan en’raar. (e’n’naagamam
30:15)
புருஷனையும் ஸ்திரீயையும்,
தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில்
சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து,
கர்த்தர் மோசேக்கு விதித்த
கட்டளைகள் இவைகளே. (எண்ணாகமம்
30:16)
purushanaiyum
sthireeyaiyum, thagappanaiyum thagappanudaiya veettil si’ruvayathil irukki’ra avan kumaaraththiyaiyum ku’riththu, karththar
moaseakku
vithiththa katta'laiga'l ivaiga'lea. (e’n’naagamam
30:16)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!