இப்போதும் யாக்கோபே,
உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே,
உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர்
சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்
பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். (ஏசாயா
43:1)
ippoathum yaakkoabea, unnaich sirushdiththavarum, isravealea,
unnai uruvaakkinavarumaagiya karththar sollugi’rathaavathu:
bayappadaathea; unnai meettukko'ndean; unnaip pearsolli azhaiththean;
nee ennudaiyavan. (easaayaa
43:1)
நீ தண்ணீர்களைக்
கடக்கும்போது நான் உன்னோடு
இருப்பேன்; நீ ஆறுகளைக்
கடக்கும்போது அவைகள் உன்மேல்
புரளுவதில்லை; நீ அக்கினியில்
நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை
உன்பேரில் பற்றாது. (ஏசாயா
43:2)
nee tha'n'neerga'laik kadakkumpoathu naan unnoadu iruppean;
nee aa’ruga'laik kadakkumpoathu avaiga'l unmeal
pura'luvathillai; nee akkiniyil
nadakkumpoathu veagaathiruppaay; akkinijuvaalai unpearil
pat’raathu. (easaayaa
43:2)
நான் இஸ்ரவேலின்
பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்;
உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும்,
உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும்
கொடுத்தேன். (ஏசாயா 43:3)
naan isravealin
parisuththarum, un iradchagarumaayirukki’ra un theavanaagiya karththar; unnai meedkumporu'laaga egipthaiyum, unakku eedaaga eththiyoappiyaavaiyum seabaavaiyum koduththean.
(easaayaa 43:3)
நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்;
நானும் உன்னைச் சிநேகித்தேன்,
ஆதலால் உனக்குப் பதிலாக
மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு
ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.
(ஏசாயா 43:4)
nee en paarvaikku arumaiyaanapadiyinaal kanampet’raay; naanum
unnaich sineagiththean, aathalaal
unakkup bathilaaga manusharga'laiyum, un jeevanukku
eedaaga
janangga'laiyum koduppean.
(easaayaa 43:4)
பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்;
நான் உன் சந்ததியைக்
கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து
கூட்டிச்சேர்ப்பேன். (ஏசாயா 43:5)
bayappadaathea, naan unnoadea
irukki’rean; naan un
santhathiyaik kizhakkilirunthu varappa'n'ni,
unnai mea’rkilum irunthu
koottichsearppean. (easaayaa
43:5)
நான் வடக்கை
நோக்கி: கொடு என்றும்,
தெற்கை நோக்கி: வைத்திராதே
என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின்
கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், (ஏசாயா
43:6)
naan vadakkai
noakki: kodu en’rum, the’rkai noakki:
vaiththiraathea en’rum solli,
thooraththilirunthu en kumaararaiyum, boomiyin kadaiyaantharaththilirunthu en kumaaraththiga'laiyum, (easaayaa 43:6)
நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து
உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும்
கொண்டுவா என்பேன். (ஏசாயா
43:7)
naan en magimaikken’ru sirushdiththu uruvaakkip
padaiththu, en naamantharikkappatta yaavaraiyum
ko'nduvaa enbean. (easaayaa 43:7)
கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும்,
காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு
வரப்பண்ணுங்கள். (ஏசாயா 43:8)
ka'nga'lirunthum kurudaraayirukki’ra janaththaiyum, kaathuga'lirunthum
sevidaraayirukki’ravarga'laiyum pu’rappattu varappa'n'nungga'l. (easaayaa 43:8)
சகல ஜாதிகளும்
ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்;
இதை அறிவித்து, முந்தி
சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று
சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள்
சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.
(ஏசாயா 43:9)
sagala jaathiga'lum eagamaaych searnthuko'ndu,
sagala janangga'lum koodivarattum; ithai a’riviththu, munthi
sambavippavaiga'lai namakkuth
therivikki’ravan yaar? keattu meyyen’ru sollakkoodumpadikku, avarga'l thangga'l saadchiga'laik ko'nduvanthu yathaarththavaanga'laay vi'langgattum. (easaayaa
43:9)
நானே அவரென்று
நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும்
நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச்
சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர்
சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட
தேவன் இல்லை; எனக்குப்பின்
இருப்பதும் இல்லை. (ஏசாயா
43:10)
naanea avaren’ru neengga'l u'narnthu,
ennai a’rinthu visuvaasikkumpadikku, neengga'lum naan therinthuko'nda en thaasanum enakkuch saadchiga'laayirukki’reerga'l en’ru karththar sollugi’raar; enakkumun
ea’rpatta theavan
illai; enakkuppin iruppathum
illai. (easaayaa 43:10)
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல்
ரட்சகர் இல்லை. (ஏசாயா
43:11)
naan, naanea
karththar; ennaiyallaamal radchagar illai.
(easaayaa 43:11)
நானே அறிவித்து,
இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில்
இப்படிச் செய்யத்தக்க அந்நிய
தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு
நீங்கள் எனக்குச் சாட்சிகள்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஏசாயா 43:12)
naanea a’riviththu, iradchiththu, vi'langgappa'n'ninean; ungga'lil ippadich seyyaththakka anniya
theavan illai; naanea
theavan enbatha’rku neengga'l enakkuch saadchiga'l en’ru karththar sollugi’raar. (easaayaa 43:12)
நாள் உண்டாகாததற்கு
முன்னும் நானே இருக்கிறேன்;
என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை;
நான் செய்கிறதைத் தடுப்பவன்
யார்? (ஏசாயா 43:13)
naa'l u'ndaagaathatha’rku munnum naanea
irukki’rean; en kaikkuth thappuvikkaththakkavan illai;
naan seygi’rathaith thaduppavan yaar? (easaayaa 43:13)
நான் உங்களுக்காக
அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர்
படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு
அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும்
இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர்
சொல்லுகிறார். (ஏசாயா 43:14)
naan ungga'lukkaaga ara'nga'lellaam idinthuvizhavum, kaltheayar
padavuga'lilirunthu ala’ravum seyyaththakkavarga'laip baabiloanukku anuppineanen’ru, ungga'l meedparum isravealin
parisuththarumaagiya karththar sollugi’raar. (easaayaa
43:14)
நானே உங்கள்
பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின்
சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர்.
(ஏசாயா 43:15)
naanea ungga'l parisuththaraagiya karththarum, isravealin sirushdigarum, ungga'l raajaavumaanavar. (easaayaa
43:15)
சமுத்திரத்திலே வழியையும்
வலிய தண்ணீர்களிலே பாதையையும்
உண்டாக்கி, (ஏசாயா 43:16)
samuththiraththilea
vazhiyaiyum valiya tha'n'neerga'lilea paathaiyaiyum
u'ndaakki, (easaayaa 43:16)
இரதங்களையும் குதிரைகளையும்
இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள்
எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்து
கிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள்
அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: (ஏசாயா
43:17)
irathangga'laiyum kuthiraiga'laiyum iraa'nuvangga'laiyum baraakkiramasaaliga'laiyum pu’rappadappa'n'ni,
avaiga'l
ezhunthiraathapadikku orumiththu vizhunthu
kidakkavum, oru thiri a'naigi’rathupoal avaiga'l a'nainthupoagavumpa'n'nugi’ra karththar sollugi’rathaavathu: (easaayaa
43:17)
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். (ஏசாயா
43:18)
munthinavaiga'lai ninaikkavea'ndaam; poorvamaanavaiga'laich sinthikkavea'ndaam. (easaayaa
43:18)
இதோ, நான் புதிய காரியத்தைச்
செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள்
அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும்,
அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசாயா
43:19)
ithoa, naan puthiya kaariyaththaich
seygi’rean; ippozhuthea athu thoan’rum; neengga'l athai a’riyeerga'laa? naan vanaantharaththilea vazhiyaiyum,
avaantharave'liyilea aa’ruga'laiyum u'ndaakkuvean. (easaayaa
43:19)
நான் தெரிந்துகொண்ட
என் ஜனத்தின் தாகத்துக்கு
வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும்
உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான்
குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
(ஏசாயா 43:20)
naan therinthuko'nda en janaththin thaagaththukku vanaantharaththilea tha'n'neerga'laiyum avaantharave'liyilea aa’ruga'laiyum u'ndaakkuvathinaal, kaattumirugangga'lum, valusarppangga'lum, koattaan kugnchuga'lum ennaik kanampa'n'num. (easaayaa
43:20)
இந்த ஜனத்தை
எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள்
என் துதியைச் சொல்லிவருவார்கள். (ஏசாயா
43:21)
intha janaththai
enakken’ru ea’rpaduththinean; ivarga'l en thuthiyaich sollivaruvaarga'l. (easaayaa
43:21)
ஆனாலும் யாக்கோபே,
நீ என்னை நோக்கிக்
கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய். (ஏசாயா
43:22)
aanaalum yaakkoabea, nee ennai noakkik
kooppidavillai; isravealea, nee ennaikku’riththu managnsaliththuppoanaay.
(easaayaa 43:22)
உன் ஆடுகளைத்
தகனபலிகளாக நீ எனக்குச்
செலுத்தவில்லை; உன் பலிகளாலே
நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச்
செலுத்தும்படி நான் உன்னைச்
சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன்.
(ஏசாயா 43:23)
un aaduga'laith thaganabaliga'laaga nee enakkuch seluththavillai; un baliga'laalea nee ennaik kanampa'n'navumillai; kaa'nikkaiga'laich seluththumpadi naan unnaich sanggadappaduththaamalum, thoobangkaattumpadi unnai varuththappaduththaamalum irunthean.
(easaayaa 43:23)
நீ எனக்குப்
பணங்களால் சுகந்தபட்டையைக் கொள்ளாமலும்,
உன் பலிகளின் நிணத்தினால்
என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச்
சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். (ஏசாயா
43:24)
nee enakkup
pa'nangga'laal suganthapattaiyaik ko'l'laamalum, un baliga'lin ni'naththinaal ennaith
thirupthiyaakkaamalum, un paavangga'linaal ennaich sanggadappaduththi,
un akkiramangga'linaal ennai varuththappaduththinaay. (easaayaa
43:24)
நான், நானே உன் மீறுதல்களை
என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும்
இருப்பேன். (ஏசாயா 43:25)
naan, naanea
un mee’ruthalga'lai en nimiththamaagavea kulaiththuppoadugi’rean; un paavangga'lai ninaiyaamalum iruppean.
(easaayaa 43:25)
நாம் ஒருவரோடொருவர்
வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு;
நீ நீதிமானாக விளங்கும்படி
உன் காரியத்தைச் சொல். (ஏசாயா 43:26)
naam oruvaroadoruvar vazhakkaadumpadi enakku
ninaippoottu; nee neethimaanaaga vi'langgumpadi un kaariyaththaich
sol. (easaayaa
43:26)
உன் ஆதிதகப்பன்
பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று
பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த்
துரோகம்பண்ணினார்கள். (ஏசாயா 43:27)
un aathithagappan paavagnseythaan; unakku
munnin’ru
peasugi’ravarga'lum enakku
viroathamaayth thuroagampa'n'ninaarga'l. (easaayaa
43:27)
ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின்
தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச்
சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும்
ஒப்புக்கொடுப்பேன். (ஏசாயா 43:28)
aagaiyaal, naan parisuththa sthalaththin
thalaivarga'laip parisuththakkulaichchalaakki, yaakkoabaich saabaththukkum, isravealai
ninthanaikkum oppukkoduppean. (easaayaa
43:28)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!