இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும்
இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை
வெளிப்படுத்துவார். (ஏசாயா 42:1)
ithoa, naan aatharikki’ra en thaasan, naan therinthuko'ndavarum, en aaththumaavukkup piriyamaanavarum ivarea;
en aaviyai avarmeal
amarappa'n'ninean; avar pu’rajaathiga'lukku niyaayaththai ve'lippaduththuvaar. (easaayaa
42:1)
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய
சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். (ஏசாயா
42:2)
avar kookkuralidavumaattaar, thammudaiya saththaththai uyarththavum
athai veethiyilea keadkappa'n'navumaattaar. (easaayaa
42:2)
அவர் நெரிந்தநாணலை
முறியாமலும், மங்கியெரிகிற திரியை
அணையாமலும், நியாயத்தை உண்மையாக
வெளிப்படுத்துவார். (ஏசாயா 42:3)
avar nerinthanaa'nalai mu’riyaamalum, manggiyerigi’ra thiriyai a'naiyaamalum, niyaayaththai
u'nmaiyaaga ve'lippaduththuvaar. (easaayaa
42:3)
அவர் நியாயத்தைப்
பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய
வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். (ஏசாயா
42:4)
avar niyaayaththaip boomiyilea nilaippaduththumattum i'lakkarippathumillai, patha’ruvathumillai; avarudaiya
veathaththukkuth theevuga'l kaaththirukkum. (easaayaa
42:4)
வானங்களைச் சிருஷ்டித்து,
அவைகளை விரித்து, பூமியையும்,
அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும்,
அதில் இருக்கிற ஜனத்துக்குச்
சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும்
கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: (ஏசாயா
42:5)
vaanangga'laich sirushdiththu, avaiga'lai viriththu,
boomiyaiyum, athilea
u’rpaththiyaagi’ravaiga'laiyum parappinavarum, athil irukki’ra janaththukkuch suvaasaththaiyum, athil nadamaadugi’ravarga'lukku aaviyaiyum
kodukki’ravarumaana karththaraagiya theavan sollugi’rathaavathu: (easaayaa
42:5)
நீர் குருடருடைய
கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில்
இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், (ஏசாயா
42:6)
neer kurudarudaiya
ka'nga'laith thi’rakkavum, kattu'ndavarga'laik kaavalilirunthum, iru'lil
irukki’ravarga'laich si’raichsaalaiyilirunthum viduvikkavum, (easaayaa
42:6)
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய
கையைப் பிடித்து, உம்மைத்
தற்காத்து, உம்மை ஜனத்திற்கு
உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும்
வைக்கிறேன். (ஏசாயா 42:7)
karththaraagiya naan neethiyinpadi
ummai azhaiththu, ummudaiya
kaiyaip pidiththu, ummaith
tha’rkaaththu, ummai janaththi’rku udanpadikkaiyaagavum, jaathiga'lukku o'liyaagavum vaikki’rean. (easaayaa 42:7)
நான் கர்த்தர்,
இது என் நாமம்;
என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
(ஏசாயா 42:8)
naan karththar,
ithu en naamam;
en magimaiyai vea’roruvanukkum, en thuthiyai vikkiragangga'lukkum kodean. (easaayaa
42:8)
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள்
தோன்றாததற்கு முன்னே, அவைகளை
உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஏசாயா
42:9)
poorvakaalaththil therivikkappattavaiga'l, ithoa, ni’raivea’ralaayina; puthiyavaiga'laiyum naanea a’rivikki’rean; avaiga'l thoan’raathatha’rku munnea,
avaiga'lai ungga'lukkuch sollugi’rean. (easaayaa
42:9)
சமுத்திரத்தில் யாத்திரை
பண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே,
அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய
துதியைப் பாடுங்கள். (ஏசாயா
42:10)
samuththiraththil
yaaththirai pa'n'nugi’ravarga'lea, athilu'l'lavaiga'lea, theevuga'lea, avaiga'lin kudiga'lea, karththarukkup puthuppaattaip paadungga'l; boomiyin kadaiyaantharaththilirunthu avarudaiya
thuthiyaip paadungga'l. (easaayaa 42:10)
வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர்
குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே
குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின்
கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. (ஏசாயா
42:11)
vanaantharamum, athin oorga'lum, keathaariyar kudiyirukki’ra kiraamangga'lum uraththa saththamidakkadavathu; kanmalaiga'lilea kudiyirukki’ravarga'l kembeeriththu, parvathangga'lin kodumudiyilirunthu aarpparippaarga'laaga. (easaayaa 42:11)
கர்த்தருக்கு மகிமையைச்
செலுத்தி, அவர் துதியைத்
தீவுகளில் அறிவிப்பார்களாக. (ஏசாயா
42:12)
karththarukku magimaiyaich seluththi, avar thuthiyaith theevuga'lil a’rivippaarga'laaga. (easaayaa
42:12)
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு,
யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக்
கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை
மேற்கொள்ளுவார். (ஏசாயா 42:13)
karththar baraakkiramasaaliyaippoal pu’rappattu, yuththaveeranaippoal vairaakkiyamoo'ndu, muzhanggik kerchchiththu, thammudaiya saththurukka'lai mea’rko'l'luvaar. (easaayaa
42:13)
நான் வெகுகாலம்
மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே
அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை
பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப்
பாழாக்கி விழுங்குவேன். (ஏசாயா
42:14)
naan vegukaalam mavunamaayirunthean; summaayirunthu enakku'l'lea
adakkikko'ndirunthean; ippozhuthu pi'l'lai
pe’rugi’rava'laippoalach saththamittu, avarga'laip paazhaakki
vizhungguvean. (easaayaa
42:14)
நான் மலைகளையும்
குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள
பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத்
திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். (ஏசாயா
42:15)
naan malaiga'laiyum kun’ruga'laiyum paazhaakki,
avaiga'lilu'l'la poo'nduga'laiyellaam vaadappa'n'ni, aa’ruga'laith thittuga'laakki, eariga'lai vat’rippoagappa'n'nuvean.
(easaayaa 42:15)
குருடரை அவர்கள்
அறியாத வழியிலே நடத்தி,
அவர்களுக்குத் தெரியாத பாதைகளில்
அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு
முன்பாக இருளை வெளிச்சமும்,
கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக்
காரியங்களை நான் அவர்களுக்குச்
செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். (ஏசாயா
42:16)
kurudarai avarga'l a’riyaatha vazhiyilea
nadaththi, avarga'lukkuth theriyaatha paathaiga'lil avarga'lai azhaiththukko'nduvanthu, avarga'lukku munbaaga iru'lai
ve'lichchamum, koa'nalaich sevvaiyumaakkuvean; inthak
kaariyangga'lai naan avarga'lukkuch seythu, avarga'laik kaividaathiruppean. (easaayaa
42:16)
சித்திரவேலையான விக்கிரகங்களை
நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை
நோக்கி: நீங்கள் எங்கள்
தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து
மிகவும் வெட்கப்படுவார்கள். (ஏசாயா
42:17)
siththiravealaiyaana
vikkiragangga'lai nambi, vaarppikkappatta
suroobangga'lai noakki:
neengga'l
engga'l
theavarga'l en’ru sollugi’ravarga'l pinnidainthu
migavum
vedkappaduvaarga'l. (easaayaa
42:17)
செவிடரே, கேளுங்கள்;
குருடரே, நீங்கள் காணும்படி
நோக்கிப்பாருங்கள். (ஏசாயா 42:18)
sevidarea, kea'lungga'l; kurudarea, neengga'l kaa'numpadi
noakkippaarungga'l. (easaayaa
42:18)
என் தாசனையல்லாமல்
குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல்
செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன்
யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன்
யார்? (ஏசாயா 42:19)
en thaasanaiyallaamal kurudan
yaar? naan anuppiya
thoothanaiyallaamal sevidan
yaar? uththamanaiyallaamal kurudan
yaar? karththarudaiya oozhiyakkaaranaiyallaamal anthagan yaar? (easaayaa 42:19)
நீ அநேக காரியங்களைக் கண்டும்
கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத்
திறந்தாலும் கேளாதே போகிறான்.
(ஏசாயா 42:20)
nee aneaga kaariyangga'laik ka'ndum
kavaniyaathirukki’raay; avanukkuch seviga'laith thi’ranthaalum kea'laathea poagi’raan. (easaayaa
42:20)
கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல்
பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். (ஏசாயா
42:21)
karththar thamathu
neethiyinimiththam avanmeal piriyam
vaiththirunthaar; avar veathaththai
mukkiyappaduththi athai magimaiyu'l'lathaakkuvaar. (easaayaa
42:21)
இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள்
அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு,
காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார்
இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு
என்பார் இல்லாமல் சூறையாவார்கள். (ஏசாயா
42:22)
intha janamoa
ko'l'laiyidappattum, soo’raiyaadappattum irukki’raarga'l; avarga'l anaivarum
kebiga'lilea agappattu, kaavala’raiga'lilea adaikkappattirukki’raarga'l; thappuvippaar illaamal
ko'l'laiyaagi, vittuvidu enbaar illaamal soo’raiyaavaarga'l. (easaayaa
42:22)
உங்களில் இதற்குச்
செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக்
கேட்கிறவன் யார்? (ஏசாயா
42:23)
ungga'lil itha’rkuch sevikoduththup pinvarugi’rathaik kavaniththuk
keadki’ravan yaar? (easaayaa 42:23)
யாக்கோபைச் சூறையிட்டு
இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து
விரோதித்த கர்த்தர் அல்லவோ?
அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய
வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.
(ஏசாயா 42:24)
yaakkoabaich soo’raiyittu isravealaik
ko'l'laikkaararukku oppukkodukki’ravar yaar? avarga'l paavagnseythu viroathiththa
karththar allavoa? avarudaiya
vazhiga'lil nadakka
manathaayiraamalum, avarudaiya veathaththukkuch
sevikodaamalum poanaarga'lea. (easaayaa
42:24)
இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின்
உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும்
வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும்,
அதை மனதிலே வைக்காதேபோனார்கள். (ஏசாயா
42:25)
ivarga'lmeal avar thamathu
koabaththin ukkiraththaiyum, yuththaththin
valimaiyaiyum varappa'n'ni, avarga'laichsoozha akkinijuvaalaiga'laik ko'luththiyirunthum u'naraathirunthaarga'l; athu avarga'laith thagiththum, athai manathilea
vaikkaatheapoanaarga'l. (easaayaa
42:25)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!