இதோ, ஒரு ராஜா நீதியாக
அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத்
துரைத்தனம்பண்ணுவார்கள். (ஏசாயா 32:1)
ithoa, oru raajaa neethiyaaga arasaa'luvaar; pirabukka'lum niyaayamaagath thuraiththanampa'n'nuvaarga'l. (easaayaa 32:1)
அவர் காற்றுக்கு
ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த
பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்
இருப்பார். (ஏசாயா 32:2)
avar kaat’rukku othukkaagavum, peruve'l'laththukkup pugalidamaagavum, va’ra'nda nilaththukku neerkkaalga'laagavum, vidaayththa boomikkup perungkanmalaiyin nizhalaagavum iruppaar.
(easaayaa 32:2)
அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள்
மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள்
கவனித்தே இருக்கும். (ஏசாயா
32:3)
appozhuthu kaa'ngi’ravarga'lin ka'nga'l manggalaayiraathu; keadki’ravarga'lin seviga'l kavaniththea irukkum.
(easaayaa 32:3)
பதற்றமுள்ளவர்களின் இருதயம்
அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப்
பேசும். (ஏசாயா 32:4)
pathat’ramu'l'lavarga'lin iruthayam
a’rivai
u'narnthuko'l'lum, thet’ruvaayarudaiya
naavu thadaiyin’rith the'livaayp peasum. (easaayaa
32:4)
மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன்
என்று சொல்லப்படுவதுமில்லை. (ஏசாயா
32:5)
moodan ini thayaa'lan en’ru mathikkappadaan; loabi ini uthaaran en’ru sollappaduvathumillai. (easaayaa
32:5)
ஏனென்றால் மூடன்,
மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை
நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி,
கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம்
பேசி, பசியுள்ள ஆத்துமாவை
வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான். (ஏசாயா
32:6)
eanen’raal moodan, moodaththanaththaip peasugi’raan; avan iruthayam aniyaayaththai nadappikkum;
avan maayampa'n'ni, karththarukku
viroathamaay vibareetham peasi, pasiyu'l'la aaththumaavai ve’rumaiyaaga vaiththu, thaagamu'l'lavanukkuth thaagantheerkkaathirukki’raan. (easaayaa 32:6)
லோபியின் எத்தனங்களும்
பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப்
பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக்
கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
(ஏசாயா 32:7)
loabiyin eththanangga'lum pollaathavaiga'l; eazhaiga'l niyaayamaayp peasumpoathu, avan ka'l'lavaarththaiga'laalea e'liyavarga'laik kedukkumpadi theevinaiga'lai yoasikki’raan. (easaayaa 32:7)
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை
யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும்
இருக்கிறான். (ஏசாயா 32:8)
thayaa'laku'namu'l'lavan thayaa'lamaanavaiga'lai yoasikki’raan, thayaa'lamaanavaiga'lilea nilaiththum irukki’raan. (easaayaa
32:8)
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே,
எழுந்திருந்து என் வார்த்தைகளைக்
கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே,
என் வசனத்துக்குச் செவிகொடுங்கள். (ஏசாயா
32:9)
sugajeeviga'laagiya sthireega'lea, ezhunthirunthu en vaarththaiga'laik kea'lungga'l; nirvisaaramaana kumaaraththiga'lea, en vasanaththukkuch sevikodungga'l. (easaayaa
32:9)
நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன்
அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.
(ஏசாயா 32:10)
nirvisaariga'lea, oru varushamum
sila naadka'lumaayth thaththa'lippeerga'l; thiraadchappalan at’ruppoam; a’ruppukkaalam varaathu.
(easaayaa 32:10)
சுகஜீவிகளே, நடுங்குங்கள்;
நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில்
இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள். (ஏசாயா
32:11)
sugajeeviga'lea, nadunggungga'l; nirvisaariga'lea, thaththa'liyungga'l; udaiyai
urinthu ka'lainthupoattu, araiyil irattaik kattikko'l'lungga'l. (easaayaa 32:11)
செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும்
திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப்
புலம்புவார்கள். (ஏசாயா 32:12)
sezhippaana vayalga'linimiththamum
kanitharum thiraadchach sediga'linimiththamum maaradiththup
pulambuvaarga'l. (easaayaa
32:12)
என் ஜனத்தினுடைய
நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள
சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும்
நெரிஞ்சிலும் முளைக்கும். (ஏசாயா
32:13)
en janaththinudaiya nilaththilum,
ka'likoornthiruntha nagaraththilu'l'la santhoasham ni’raintha ellaa veeduga'lilum, mudchediyum nerignchilum mu'laikkum. (easaayaa
32:13)
அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும்
துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும்,
அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும்
இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
(ஏசாயா 32:14)
aramanai paazhaaga vidappadum,
janam ni’raintha nagaram ve’rumaiyaagum, meadum thurukkamum
en’raikkum kebiga'laagum, avaiga'l kaattukkazhuthaiga'l ka'likkum
idamaayum manthaiga'lukku meaychchalidamaayum
irukkum. (easaayaa 32:14)
உன்னதத்திலிருந்து நம்மேல்
ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே
இருக்கும்; அப்பொழுது வனாந்தரம்
செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான
வயல்வெளி காடாக எண்ணப்படும்.
(ஏசாயா 32:15)
unnathaththilirunthu nammeal
aavi oot’rappadumattum appadiyea irukkum;
appozhuthu vanaantharam sezhippaana vayalve'liyaagum;
sezhippaana vayalve'li
kaadaaga
e'n'nappadum. (easaayaa 32:15)
வனாந்தரத்திலே நியாயம்
வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே
நீதி தங்கித்தரிக்கும். (ஏசாயா
32:16)
vanaantharaththilea niyaayam
vaasamaayirukkum, sezhippaana vayalve'liyilea neethi
thanggiththarikkum. (easaayaa
32:16)
நீதியின் கிரியை
சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும்
சுகமுமாம். (ஏசாயா 32:17)
neethiyin kiriyai samaathaanamum, neethiyin
palan en’rumu'l'la amarikkaiyum sugamumaam. (easaayaa
32:17)
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான
வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும்
இடங்களிலும் குடியிருக்கும். (ஏசாயா
32:18)
en janam samaathaana thaabarangga'lilum, nilaiyaana vaasasthalangga'lilum, amaithiyaayth thanggum idangga'lilum kudiyirukkum.
(easaayaa 32:18)
ஆனாலும் காடு அழிய கல்மழை
பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த்
தாழ்ந்துபோம். (ஏசாயா 32:19)
aanaalum kaadu azhiya kalmazhai
peyyum, antha nagaram mahaa thaazhvaayth
thaazhnthupoam. (easaayaa 32:19)
மாடுகளையும் கழுதைகளையும்
நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய
இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற
நீங்கள் பாக்கியவான்கள். (ஏசாயா
32:20)
maaduga'laiyum kazhuthaiga'laiyum nadaththikko'ndupoay, neerva'lam
porunthiya idangga'lilellaam vithai vithaikki’ra neengga'l baakkiyavaanga'l. (easaayaa 32:20)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!