கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு
ஐயோ! நீ கொள்ளையிட்டு
முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு
உனக்குத் துரோகம்பண்ணுவார்கள். (ஏசாயா
33:1)
ko'l'laiyidappadaathirunthum, ko'l'laiyidugi’ravanum, thuroagampa'n'naathirukki’ravarga'lukkuth thuroagampa'n'nugi’ravanumaagiya unakku
aiyoa! nee ko'l'laiyittu mudinthapinbu ko'l'laiyidappaduvaay; nee thuroagampa'n'nith theernthapinbu unakkuth thuroagampa'n'nuvaarga'l. (easaayaa 33:1)
கர்த்தாவே, எங்களுக்கு
இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர்
காலையில் அவர்கள் புயமும்,
இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். (ஏசாயா
33:2)
karththaavea, engga'lukku iranggum, umakkuk
kaaththirukki’roam; theavareer
kaalaiyil avarga'l puyamum, ikkattukkaalaththil engga'l iradchippumaayirum. (easaayaa
33:2)
அமளியின் சத்தத்தினாலே
ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள்
சிதறடிக்கப்படுவார்கள். (ஏசாயா 33:3)
ama'liyin saththaththinaalea janangga'l alainthoadi,
neer ezhunthirukkumpoathu jaathiga'l sitha’radikkappaduvaarga'l. (easaayaa
33:3)
வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள்
கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத்
திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல்
குதித்துத் திரிவார்கள். (ஏசாயா
33:4)
vettukki'liga'l searkki’rathupoala ungga'l ko'l'lai searkkappadum; vettukki'liga'l kuthiththuth thirigi’rathupoala manushar
athinmeal kuthiththuth thirivaarga'l. (easaayaa
33:4)
கர்த்தர் உயர்ந்தவர்,
அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும்
நிரப்புகிறார். (ஏசாயா 33:5)
karththar uyarnthavar,
avar unnathaththil vaasamaayirukki’raar; avar seeyoanai niyaayaththinaalum neethiyinaalum nirappugi’raar. (easaayaa
33:5)
பூரணரட்சிப்பும் ஞானமும்
அறிவும் உன் காலங்களுடைய
உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே
அதின் பொக்கிஷம். (ஏசாயா
33:6)
poora'naradchippum gnaanamum a’rivum un kaalangga'ludaiya u’ruthiyaayirukkum;
karththarukkup bayappaduthalea
athin pokkisham. (easaayaa
33:6)
இதோ, அவர்களுடைய
பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து
ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
(ஏசாயா 33:7)
ithoa, avarga'ludaiya baraakkiramasaaliga'l ve'liyilea
ala’rugi’raarga'l;
samaathaanaththu sthaanaabathiga'l manangkasanthu azhugi’raarga'l. (easaayaa
33:7)
பாதைகள் பாழாயின;
வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை
மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை
எண்ணாதேபோகிறான். (ஏசாயா 33:8)
paathaiga'l paazhaayina; vazhippoakkar
illai; udanpadikkaiyai mee’rugi’raan; nagarangga'lai igazhchchipa'n'nugi’raan; manushanai e'n'naatheapoagi’raan. (easaayaa
33:8)
தேசம் துக்கித்து
விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி
வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது;
பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. (ஏசாயா
33:9)
theasam thukkiththu vidaayththirukki’rathu; leebanoan vedki vaadugi’rathu; saaroan
vanaantharaththukku oppaagi’rathu; baasaanum karmealum paazhaakkappadugi’rathu. (easaayaa
33:9)
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது
உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஏசாயா 33:10)
ippozhuthu ezhuntharu'luvean, ippozhuthu
uyaruvean, ippozhuthu meanmaippaduvean en’ru karththar sollugi’raar. (easaayaa
33:10)
பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப்
பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள்
சுவாசமே உங்களைப் பட்சிக்கும்.
(ஏசாயா 33:11)
patharaik karppanthariththuth thaa'ladiyaip
pe’ruveerga'l; akkiniyaippoal ungga'l suvaasamea ungga'laip padchikkum. (easaayaa 33:11)
ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட
முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள். (ஏசாயா
33:12)
janangga'l su'n'naambaippoala neet’rappaduvaarga'l; vettappatta mudchediga'laippoalath theeyil erikkappaduvaarga'l. (easaayaa
33:12)
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்;
சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை
அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். (ஏசாயா
33:13)
thooraththilu'l'lavarga'lea, naan seygi’rathaik kea'lungga'l; sameebaththilirukki’ravarga'lea, en baraakkiramaththai
a’rinthuko'l'lungga'l engi’raar. (easaayaa
33:13)
சீயோனிலுள்ள பாவிகள்
திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம்
பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு
முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜுவாலைக்கு முன்பாக
நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள். (ஏசாயா
33:14)
seeyoanilu'l'la paaviga'l thigaikki’raarga'l; maayakkaararai nadukkam
pidikki’rathu; padchikkum akkinikku
munbaaga
nammil thariththiruppavan yaar? niththiyajuvaalaikku munbaaga nammil
thaabarippavan yaar engi’raarga'l. (easaayaa
33:14)
நீதியாய் நடந்து,
செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண்
செய்வதால் வரும் ஆதாயத்தை
வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக்
கேளாதபடிக்குத் தன் செவியை
அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, (ஏசாயா
33:15)
neethiyaay nadanthu, semmaiyaanavaiga'laip peasi, idukka'n seyvathaal varum aathaayaththai ve’ruththu, parithaanangga'lai vaanggaathapadikkuth than kaiga'lai utha’ri, iraththagnsinthuvatha’rkaana yoasanaiga'laik kea'laathapadikkuth than seviyai
adaiththu, pollaappaik kaa'naathapadikkuth than ka'nga'lai moodugi’ravanevanoa,
(easaayaa 33:15)
அவன் உயர்ந்த
இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின்
அரண்கள் அவனுடைய உயர்ந்த
அடைக்கலமாகும்; அவன் அப்பம்
அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு
நிச்சயமாய்க் கிடைக்கும். (ஏசாயா
33:16)
avan uyarntha
idangga'lil vaasampa'n'nuvaan; kanmalaiga'lin ara'nga'l avanudaiya
uyarntha adaikkalamaagum; avan appam avanukkuk kodukkappadum; avan tha'n'neer avanukku
nichchayamaayk kidaikkum.
(easaayaa 33:16)
உன் கண்கள்
ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும்,
தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
(ஏசாயா 33:17)
un ka'nga'l raajaavai
magimai
porunthinavaraagak kaa'num,
thooraththilu'l'la theasaththaiyum paarkkum. (easaayaa
33:17)
உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்;
கணக்கன் எங்கே? தண்டல்காரன்
எங்கே? கோபுரங்களை எண்ணினவன்
எங்கே? (ஏசாயா 33:18)
un manam bayanggaraththai ninaivukoorum; ka'nakkan
enggea?
tha'ndalkaaran enggea? koapurangga'lai e'n'ninavan enggea? (easaayaa
33:18)
உனக்கு விளங்காத
பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான
பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய்.
(ஏசாயா 33:19)
unakku vi'langgaatha baashaiyaiyum, a’ritha’rkariya oruvithamaana peachchaiyumudaiya anthak
kuroora janangga'lai ini nee kaa'naay. (easaayaa
33:19)
நம்முடைய பண்டிகைகள்
ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை
நோக்கிப்பார்; உன் கண்கள்
எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும்,
பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்;
இனி அதின் முளைகள்
என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும்
அறுந்து போவதுமில்லை. (ஏசாயா
33:20)
nammudaiya pa'ndigaiga'l aasarikkappadum nagaramaagiya seeyoanai noakkippaar;
un ka'nga'l erusaleamai amarikkaiyaana thaabaramaagavum, peyarkkappadaatha koodaaramaagavum kaa'num;
ini athin mu'laiga'l en’raikkum pidunggappaduvathumillai, athin kayi’ruga'lil on’rum a’runthu poavathumillai. (easaayaa
33:20)
மகிமையுள்ள கர்த்தர்
அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும்
ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற
படவு அங்கே ஓடுவதும்
இல்லை; பெரிய கப்பல்
அங்கே கடந்துவருவதும் இல்லை.
(ஏசாயா 33:21)
magimaiyu'l'la karththar anggea namakku
mahaa
visaalamaana nathiga'lum aa’ruga'lumu'l'la sthalampoaliruppaar; valikki’ra padavu
anggea
oaduvathum illai; periya
kappal anggea kadanthuvaruvathum illai.
(easaayaa 33:21)
கர்த்தர் நம்முடைய
நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய
நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய
ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். (ஏசாயா
33:22)
karththar nammudaiya
niyaayaathibathi, karththar
nammudaiya niyaayappiramaa'nigar, karththar nammudaiya
raajaa, avar nammai
iradchippaar. (easaayaa
33:22)
உன் கயிறுகள்
தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும், பாயை விரிக்கவுங் கூடாமற்போம்;
அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும்
கொள்ளையாடுவார்கள். (ஏசாயா 33:23)
un kayi’ruga'l tha'larnthupoam; paaymaraththaik kettippaduththavum, paayai
virikkavung koodaama’rpoam; appozhuthu thira'laana
ko'l'laipporu'l panggidappadum; sappaa'niga'lum ko'l'laiyaaduvaarga'l. (easaayaa
33:23)
வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை;
அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின்
அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். (ஏசாயா
33:24)
viyaathippattirukki’rean en’ru nagaravaasiga'l solvathillai; athil vaasamaayirukki’ra janaththin
akkiramam mannikkappattirukkum. (easaayaa 33:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!