அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார்
பிரதியுத்தரமாக: (யோபு 11:1)
appozhuthu naagamaaththiyanaagiya soappaar pirathiyuththaramaaga: (yoabu
11:1)
ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு
சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய்
விளங்குவானோ? (யோபு 11:2)
earaa'lamaana vaarththaiga'lukku uththaravu sollavea'ndaamoa? vaaychsaalagan neethimaanaay vi'langguvaanoa? (yoabu
11:2)
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர்
மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும்
உம்மை வெட்கப்படுத்த வேண்டாமோ?
(யோபு 11:3)
ummudaiya veembuvaarththaiga'lukku manushar mavunamaayiruppaarga'loa? neer pariyaasampa'n'numpoathu,
oruvarum ummai vedkappaduththa vea'ndaamoa?
(yoabu 11:3)
என் சொல் சுத்தம் என்றும்,
நான் தேவரீருடைய பார்வைக்குத்
துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். (யோபு 11:4)
en sol suththam en’rum, naan theavareerudaiya paarvaikkuth
thuppuravaanavan en’rum neer sollugi’reer. (yoabu 11:4)
ஆனாலும் தேவன் பேசி, உமக்கு
விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத்
திறந்து, (யோபு 11:5)
aanaalum theavan
peasi,
umakku viroathamaayth thammudaiya
uthaduga'laith thi’ranthu, (yoabu
11:5)
உமக்கு ஞானத்தின்
இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி
பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால்
உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். (யோபு 11:6)
umakku gnaanaththin
iragasiyangga'lai ve'lippaduththinaal nalamaayirukkum; u'l'lapadi
paarththaal, athu irattippu'l'lathaayirukki’rathu; aagaiyaal ummudaiya akkiramaththi’rkeat’rapadi theavan ummaith
tha'ndikkavillaiyen’ru a’rinthuko'l'lum. (yoabu
11:6)
தேவனுடைய அந்தரங்க
ஞானத்தை நீர் ஆராய்ந்து,
சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? (யோபு 11:7)
theavanudaiya antharangga gnaanaththai
neer aaraaynthu, sarvavallavarudaiya
sampoora'naththai neer a’riyakkoodumoa?
(yoabu 11:7)
அது வானபரியந்தம்
உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது,
நீர் அறியக்கூடியது என்ன? (யோபு 11:8)
athu vaanapariyantham uyarnthathu;
ummaal enna aagum? athu paathaa'laththilum aazhamaanathu, neer a’riyakkoodiyathu
enna? (yoabu 11:8)
அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும்,
சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. (யோபு 11:9)
athin a'lavu
boomiyaippaarkkilum nee'lamum, samuththiraththaippaarkkilum agalamumaayirukki’rathu. (yoabu 11:9)
அவர் பிடித்தாலும்,
அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து
நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்? (யோபு 11:10)
avar pidiththaalum, avar adaiththaalum, avar niyaayaththil ko'nduvanthu
ni’ruththinaalum, avaraith
thadaipa'n'nugi’ravan yaar? (yoabu 11:10)
மனுஷருடைய மாயத்தை
அவர் அறிவார்; அக்கிரமத்தை
அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? (யோபு 11:11)
manusharudaiya maayaththai
avar a’rivaar; akkiramaththai avar ka'ndum, athaik
kavaniyaathiruppaaroa? (yoabu 11:11)
புத்தியில்லாத மனுஷன்
காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான். (யோபு 11:12)
buththiyillaatha manushan kaattukkazhuthaikkuttikku oppaagap pi’ranthirunthaalum,
perunegnchu'l'lavanaayirukki’raan. (yoabu 11:12)
நீர் உம்முடைய
இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய
கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். (யோபு 11:13)
neer ummudaiya
iruthayaththai aayaththappaduththi, ummudaiya
kaiga'lai
avarukku nearaaga viriththaal nalamaayirukkum. (yoabu
11:13)
உம்முடைய கையிலே
அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு,
அநியாயம் உம்முடைய கூடாரங்களில்
வாசமாயிருக்கவொட்டாதிரும். (யோபு 11:14)
ummudaiya kaiyilea
akkiramam irunthaal, athaith
thooraththil agat’rivittu, aniyaayam
ummudaiya koodaarangga'lil vaasamaayirukkavottaathirum. (yoabu
11:14)
அப்பொழுது உம்முடைய
முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து,
பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். (யோபு 11:15)
appozhuthu ummudaiya
mugaththai maasillaamal ea’reduththu, bayappadaamal thidanko'ndiruppeer. (yoabu
11:15)
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து,
கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். (யோபு 11:16)
appozhuthu neer varuththaththai ma’ranthu, kadanthupoana
tha'n'neeraippoala athai ninaippeer.
(yoabu 11:16)
அப்பொழுது உம்முடைய
ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். (யோபு 11:17)
appozhuthu ummudaiya
aayusukaalam pattappagalaippaarkkilum
piragaasamaayirukkum; iru'l adaintha neer vidiya’rkaalaththaippoaliruppeer. (yoabu
11:17)
நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி
ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர். (யோபு 11:18)
nambikkai u'ndaayirukki’rathinaal thidanaayiruppeer; thoa'ndi
aaraaynthu sugamaayp paduththukko'lveer. (yoabu
11:18)
பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை
செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி
விண்ணப்பம்பண்ணுவார்கள். (யோபு 11:19)
bayappaduththuvaarillaamal niththirai seyveer; aneagar umathu
mugaththai noakki
vi'n'nappampa'n'nuvaarga'l. (yoabu
11:19)
துன்மார்க்கருடைய கண்கள்
பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம்
அவர்களை விட்டொழிந்து, அவர்கள்
நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல்
அழிந்துபோகும் என்றான். (யோபு 11:20)
thunmaarkkarudaiya ka'nga'l pooththuppoay, avarga'l adaikkalam
avarga'lai vittozhinthu, avarga'l nambikkai saagi’ravan suvaasampoal azhinthupoagum en’raan. (yoabu 11:20)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!