என் ஆத்துமா
ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு
எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
(யோபு 10:1)
en aaththumaa
jeevanai aroasikki’rathu, naan en thuyaraththukku enakku'l'lea
idangkoduththu, en manachsagnchalaththinaalea
peasuvean. (yoabu
10:1)
நான் தேவனை நோக்கி: என்னைக்
குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே
வழக்காடுகிறீர், அதை எனக்குத்
தெரியப்படுத்தும் என்பேன். (யோபு 10:2)
naan theavanai
noakki: ennaik kut’ravaa'liyen’ru theerkkaathirum; neer ethinimiththam ennoadea
vazhakkaadugi’reer, athai enakkuth theriyappaduththum enbean. (yoabu
10:2)
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய
கைகளின் கிரியையை வெறுத்து,
துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப்
பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? (யோபு 10:3)
neer ennai odukki, ummudaiya
kaiga'lin
kiriyaiyai ve’ruththu, thunmaarkkarin yoasanaiyaik kirubaiyaayp paarkki’rathu umakku
nan’raayirukkumoa? (yoabu
10:3)
மாம்சக் கண்கள்
உமக்கு உண்டோ? மனுஷன்
பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? (யோபு 10:4)
maamsak ka'nga'l umakku u'ndoa?
manushan paarkki’rapiragaaramaayp paarkki’reeroa? (yoabu
10:4)
நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து
விசாரிக்கிறதற்கு, (யோபு 10:5)
neer en akkiramaththaik ki'ndikki'lappi, en paavaththai aaraaynthu
visaarikki’ratha’rku, (yoabu 10:5)
உம்முடைய நாட்கள்
ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய
வருஷங்கள் ஒரு புருஷனுடைய
ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ? (யோபு 10:6)
ummudaiya naadka'l
oru manushanudaiya naadka'laippoalavum, ummudaiya
varushangga'l oru purushanudaiya jeevakaalaththaippoalavum irukki’rathoa? (yoabu
10:6)
நான் துன்மார்க்கன்
அல்ல என்பது உமக்குத்
தெரியும்; உம்முடைய கைக்கு
என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
(யோபு 10:7)
naan thunmaarkkan
alla enbathu umakkuth
theriyum; ummudaiya kaikku
ennaith thappuvikki’ravan illai. (yoabu
10:7)
உம்முடைய கரங்கள்
என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப்
படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர். (யோபு 10:8)
ummudaiya karangga'l ennaiyum
enakkuriya ellaavat’raiyum uruvaakkip padaiththirunthum, ennai nirmoolamaakkugi’reer. (yoabu 10:8)
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும்
நினைத்தருளும். (யோபு 10:9)
ka'lima'npoala ennai uruvaakkineer enbathaiyum, ennaith
thirumbath thoo'laagappoagappa'n'nuveer enbathaiyum ninaiththaru'lum. (yoabu
10:9)
நீர் என்னைப்
பால்போல் வார்த்து, தயிர்போல்
உறையப்பண்ணினீர் அல்லவோ? (யோபு 10:10)
neer ennaip
paalpoal vaarththu, thayirpoal
u’raiyappa'n'nineer allavoa?
(yoabu 10:10)
தோலையும் சதையையும்
எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும்
என்னை இசைத்தீர். (யோபு 10:11)
thoalaiyum sathaiyaiyum enakkuth
thariththu, elumbuga'laalum narambuga'laalum ennai isaiththeer. (yoabu
10:11)
எனக்கு ஜீவனைத்
தந்ததும் அல்லாமல், தயவையும்
எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய
பராமரிப்பு என் ஆவியைக்
காப்பாற்றினது. (யோபு 10:12)
enakku jeevanaith
thanthathum allaamal, thayavaiyum
enakkup paaraattineer; ummudaiya paraamarippu
en aaviyaik kaappaat’rinathu. (yoabu
10:12)
இவைகள் உம்முடைய
உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது
என்று அறிவேன். (யோபு 10:13)
ivaiga'l ummudaiya u'l'laththil
ma’rainthirunthaalum, ithu umakku'l irukki’rathu en’ru a’rivean. (yoabu
10:13)
நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில்
விசாரித்து, என் அக்கிரமத்தை
என்மேல் சுமத்தாமல் விடீர்.
(யோபு 10:14)
naan paavagnseythaal, athai neer ennidaththil
visaariththu, en akkiramaththai enmeal sumaththaamal videer.
(yoabu 10:14)
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு
ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால்
நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. (யோபு 10:15)
naan thunmaarkkanaayirunthaal enakku
aiyoa! naan neethimaanaayirunthaalum en thalaiyai naan edukkamaattean; avamaanaththaal nirappappattean; neer en
si’rumaiyaip paarththaru'lum, athu athigarikki’rathu. (yoabu
10:15)
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு
விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர். (யோபு 10:16)
singgaththaippoala ennai veattaiyaadi, enakku viroathamaay
umathu athisaya vallamaiyai vi'langgappa'n'nugi’reer. (yoabu 10:16)
நீர் உம்முடைய
சாட்சிகளை எனக்கு விரோதமாய்
இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய
கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம்
அதிகரிக்கிறது. (யோபு 10:17)
neer ummudaiya saadchiga'lai enakku
viroathamaay irattikkappa'n'nugi’reer; enmeal
ummudaiya koabaththai athigarikkappa'n'nugi’reer; poaraattaththinmeal poaraattam athigarikki’rathu. (yoabu 10:17)
நீர் என்னைக்
கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும்
என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
(யோபு 10:18)
neer ennaik
karppaththilirunthu pu’rappadappa'n'ninathu
enna? oru ka'n'num
ennaik kaa'naathapadi, naan appozhuthea jeeviththuppoanaal nalamaamea.
(yoabu 10:18)
நான் ஒருக்காலும்
இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன். (யோபு 10:19)
naan orukkaalum
illaathathu poalirunthu, karppaththilirunthu pireathakkuzhikkuk ko'ndupoagappattiruppean. (yoabu 10:19)
என் நாட்கள்
கொஞ்சமல்லவோ? (யோபு 10:20)
en naadka'l
kognchamallavoa? (yoabu
10:20)
காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட
தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத
மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும்
இருளாகும் தேசமுமாகிய, போனால்
திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே, (யோபு 10:21)
kaariru'lum mara'naanthagaaramumaana iru'nda
theasamum, iru'lsoozhntha ozhunggillaatha mara'naanthagaaramu'l'la theasamum, o'liyum
iru'laagum theasamumaagiya, poanaal thirumbivaraatha theasaththukku, naan poagumunnea, (yoabu 10:21)
நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்
என்றான். (யோபு 10:22)
naan sat’ru i'laippaa’rumpadi neer ennaivittu oaynthirum en’raan. (yoabu
10:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!