யோபு பிரதியுத்தரமாக: (யோபு 12:1)
yoabu pirathiyuththaramaaga: (yoabu 12:1)
ஆம், நீங்களே
ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே
ஞானம் சாகும். (யோபு 12:2)
aam, neengga'lea gnaanamu'l'la
janangga'l; ungga'ludanea gnaanam saagum.
(yoabu 12:2)
உங்களைப்போல எனக்கும்
புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன்
யார்? (யோபு 12:3)
ungga'laippoala enakkum buththiyu'ndu; ungga'lilum naan thaazhnthavan alla; ippadippattavaiga'lai a’riyaathavan yaar? (yoabu 12:3)
என் சிநேகிதரால்
நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு
அருளுவார்; உத்தமனாகிய நீதிமான்
பரியாசம்பண்ணப்படுகிறான். (யோபு 12:4)
en sineagitharaal naan ninthikkappattu, theavanai
noakkip piraarththippean; avar enakku ma’ruuththaravu aru'luvaar;
uththamanaagiya neethimaan
pariyaasampa'n'nappadugi’raan. (yoabu 12:4)
ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில்
இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும். (யோபு 12:5)
aabaththukku'l'laanavan sugamaayirukki’ravanudaiya ninaivil
igazhchchiyadaigi’raan; kaalida’rinavarga'lukku ithu nearidum. (yoabu
12:5)
கள்ளருடைய கூடாரங்களில்
செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள்
கையிலே தேவன் கொண்டுவந்து
கொடுக்கிறார். (யோபு 12:6)
ka'l'larudaiya koodaarangga'lil
selvamu'ndu; theavanaik
koabappaduththugi’ravarga'lukkuch saanggoabaanggamu'ndu; avarga'l kaiyilea
theavan ko'nduvanthu kodukki’raar. (yoabu
12:6)
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார்,
அவைகள் உனக்குப் போதிக்கும்;
ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு
அறிவிக்கும். (யோபு 12:7)
ippoathum nee mirugangga'laik keattuppaar, avaiga'l unakkup
poathikkum; aagaayaththup pa’ravaiga'laik kea'l,
avaiga'l
unakku a’rivikkum. (yoabu
12:7)
அல்லது பூமியை
விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்;
சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு
விவரிக்கும். (யோபு 12:8)
allathu boomiyai visaariththuk kea'l,
athu unakku ubatheasikkum; samuththiraththin machchangga'laik kea'l, avaiga'l unakku
vivarikkum. (yoabu 12:8)
கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று
இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? (யோபு 12:9)
karththarudaiya karam ithaich seythathen’ru ivaiga'lellaavat’rinaalum a’riyaathavan yaar? (yoabu
12:9)
சகல பிராணிகளின்
ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும்
அவர் கையிலிருக்கிறது. (யோபு 12:10)
sagala piraa'niga'lin jeevanum, maamsamaana sagala manusharin
aaviyum avar kaiyilirukki’rathu. (yoabu
12:10)
வாயானது போஜனத்தை
ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச்
சோதித்துப்பார்க்கிறதல்லவா? (யோபு 12:11)
vaayaanathu poajanaththai
rusipaarkki’rathupoala,
seviyaanathu vaarththaiga'laich soathiththuppaarkki’rathallavaa? (yoabu 12:11)
முதியோரிடத்தில் ஞானமும்
வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
(யோபு 12:12)
muthiyoaridaththil gnaanamum
vayathusen’ravarga'lidaththil buththiyum irukkumea. (yoabu
12:12)
அவரிடத்தில் ஞானமும்
வல்லமையும் எத்தனை அதிகமாய்
இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும்
புத்தியும் உண்டு. (யோபு 12:13)
avaridaththil gnaanamum
vallamaiyum eththanai athigamaay irukkum?
avarukkuththaan aaloasanaiyum buththiyum u'ndu. (yoabu
12:13)
இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது;
அவர் மனுஷனை அடைத்தால்
விடுவிக்கமுடியாது. (யோபு 12:14)
ithoa, avar idiththaal kattamudiyaathu; avar manushanai adaiththaal
viduvikkamudiyaathu. (yoabu 12:14)
இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால்
எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால்,
பூமியைக் கீழதுமேலதாக்கும். (யோபு 12:15)
ithoa, avar tha'n'neerga'lai adakkinaal ellaam
ularnthupoam; avar avaiga'lai varavittaal, boomiyaik keezhathumealathaakkum. (yoabu
12:15)
அவரிடத்தில் பெலனும்
ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள். (யோபு 12:16)
avaridaththil belanum gnaanamumu'ndu; moasampoagi’ravanum moasampoakkugi’ravanum, avar kaiyin keezhirukki’raarga'l. (yoabu 12:16)
அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து,
நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார். (யோபு 12:17)
avar aaloasanaikkaararaich si’raipidiththu, niyaayaathibathiga'lai mathimayakkugi’raar. (yoabu 12:17)
அவர் ராஜாக்களுடைய
கட்டுகளை அவிழ்த்து, அவர்கள்
இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார். (யோபு 12:18)
avar raajaakka'ludaiya kattuga'lai avizhththu,
avarga'l
iduppuga'laik kachchaikattugi’raar. (yoabu 12:18)
அவர் மந்திரிகளைச்
சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். (யோபு 12:19)
avar manthiriga'laich si’raipidiththukko'ndupoay, belavaanga'laik kavizhththuppoadugi’raar. (yoabu 12:19)
அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை
விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை
வாங்கிப்போடுகிறார். (யோபு 12:20)
avar nambikkaiyu'l'lavarga'ludaiya vaakkai vilakki,
muthirvayathu'l'lavarga'lin aaloasanaiyai vaanggippoadugi’raar. (yoabu 12:20)
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி
வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத்
தளர்ந்துபோகப்பண்ணுகிறார். (யோபு 12:21)
avar pirabukka'linmeal igazhchchi varappa'n'nugi’raar; balavaanga'lin kachchaiyaith tha'larnthupoagappa'n'nugi’raar. (yoabu 12:21)
அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை
வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். (யோபு 12:22)
avar anthagaaraththilirukki’ra aazhangga'lai ve'liyaranggamaakki, mara'na iru'lai
ve'lichchaththil ko'nduvarugi’raar. (yoabu
12:22)
அவர் ஜாதிகளைப்
பெருகவும் அழியவும் பண்ணுகிறார்;
அவர் ஜாதிகளைப் பரவவும்
குறுகவும் பண்ணுகிறார். (யோபு 12:23)
avar jaathiga'laip perugavum azhiyavum
pa'n'nugi’raar; avar jaathiga'laip paravavum ku’rugavum pa'n'nugi’raar. (yoabu
12:23)
அவர் பூமியிலுள்ள
ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை
அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத
அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார். (யோபு 12:24)
avar boomiyilu'l'la janaththinudaiya athibathiga'lin negnchai agat’rippoattu, avarga'lai vazhiyillaatha antharaththilea alaiyappa'n'nugi’raar. (yoabu
12:24)
அவர்கள் வெளிச்சமற்ற
இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத்
தடுமாறித் திரியப்பண்ணுகிறார். (யோபு 12:25)
avarga'l ve'lichchamat’ra iru'lilea
thadaviththirigi’raarga'l; ve’riththavarga'laippoala avarga'laith thadumaa’rith thiriyappa'n'nugi’raar. (yoabu
12:25)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!