என் மகனே, நீ உன் செவியை
ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு
அமையப்பண்ணும்பொருட்டு, (நீதிமொழிகள் 2:1)
en maganea, nee un seviyai gnaanaththi’rkuch saayththu, un iruthayaththaip buththikku amaiyappa'n'numporuttu, (neethimozhiga’l 2:1)
நீ என் வார்த்தைகளை
ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை
உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, (நீதிமொழிகள்
2:2)
nee en vaarththaiga'lai eat’rukko'ndu,
en katta'laiga'lai unnidaththil paththirappaduththi, (neethimozhiga’l 2:2)
ஞானத்தை
வா என்று கூப்பிட்டு,
புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
(நீதிமொழிகள் 2:3)
gnaanaththai vaa en’ru kooppittu, buththiyaich saththamittu azhaiththu,
(neethimozhiga’l 2:3)
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல்
தேடுவாயாகில், (நீதிமொழிகள் 2:4)
athai ve'l'liyaippoal naadi,
puthaiyalga'laith theadugi’rathupoal theaduvaayaagil, (neethimozhiga’l 2:4)
அப்பொழுது
கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று
நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக்
கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:5)
appozhuthu karththarukkup bayappaduthal innathen’ru nee u'narnthu,
theavanai a’riyum a’rivaik ka'ndadaivaay. (neethimozhiga’l 2:5)
கர்த்தர்
ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும்
புத்தியும் வரும். (நீதிமொழிகள்
2:6)
karththar gnaanaththaith tharugi’raar; avar vaayinin’ru a’rivum buththiyum
varum. (neethimozhiga’l 2:6)
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை
வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். (நீதிமொழிகள்
2:7)
avar neethimaanga'lukken’ru meygngnaanaththai vaiththuvaiththirukki’raar; uththamamaay nadakki’ravarga'lukku avar keadagamaayirukki’raar. (neethimozhiga’l 2:7)
அவர் நியாயத்தின் நெறிகளைத்
தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக்
காப்பாற்றுகிறார். (நீதிமொழிகள் 2:8)
avar niyaayaththin ne’riga'laith tha’rkaaththu,
thammudaiya parisuththavaanga'lin paathaiyaik kaappaat’rugi’raar. (neethimozhiga’l 2:8)
அப்பொழுது
நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். (நீதிமொழிகள்
2:9)
appozhuthu neethiyaiyum, niyaayaththaiyum, nithaanaththaiyum, sagala nalvazhiga'laiyum
a’rinthuko'l'luvaay. (neethimozhiga’l 2:9)
ஞானம் உன் இருதயத்தில்
பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, (நீதிமொழிகள்
2:10)
gnaanam un iruthayaththil piraveasiththu, a’rivu un aaththumaavukku inbamaayirukkumpoathu, (neethimozhiga’l 2:10)
நல்யோசனை
உன்னைக் காப்பாற்றும், புத்தி
உன்னைப் பாதுகாக்கும். (நீதிமொழிகள்
2:11)
nalyoasanai unnaik
kaappaat’rum, buththi unnaip paathukaakkum. (neethimozhiga’l 2:11)
அதினால்
நீ துன்மார்க்கனுடைய வழிக்கும்,
மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,
(நீதிமொழிகள் 2:12)
athinaal nee thunmaarkkanudaiya vazhikkum,
maa’rupaadu peasugi’ra manushanukkum, (neethimozhiga’l 2:12)
அந்தகார
வழிகளில் நடக்க நீதிநெறிகளை
விட்டு, (நீதிமொழிகள் 2:13)
anthagaara vazhiga'lil nadakka neethine’riga'lai vittu, (neethimozhiga’l 2:13)
தீமைசெய்ய
மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில்
களிகூருகிறவர்களுக்கும், (நீதிமொழிகள் 2:14)
theemaiseyya magizhnthu, thunmaarkkarudaiya maa’rupaaduga'lil ka'likoorugi’ravarga'lukkum, (neethimozhiga’l 2:14)
மாறுபாடான
பாதைகளிலும் கோணலான வழிகளிலும்
நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். (நீதிமொழிகள்
2:15)
maa’rupaadaana paathaiga'lilum koa'nalaana vazhiga'lilum nadakki’ravarga'lukkum nee thappuvikkappaduvaay. (neethimozhiga’l 2:15)
தன் இளவயதின் நாயகனை
விட்டு, தன் தேவனுடைய
உடன்படிக்கையை மறந்து, (நீதிமொழிகள்
2:16)
than i'lavayathin naayaganai vittu, than theavanudaiya
udanpadikkaiyai ma’ranthu, (neethimozhiga’l 2:16)
இச்சகமான
வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய
பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். (நீதிமொழிகள்
2:17)
ichchagamaana vaarththaiga'laippeasum anniya
pe'n'naagiya parasthireekkum thappuvikkappaduvaay. (neethimozhiga’l 2:17)
அவளுடைய
வீடு மரணத்துக்கும், அவளுடைய
பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
(நீதிமொழிகள் 2:18)
ava'ludaiya veedu mara'naththukkum, ava'ludaiya
paathaiga'l mariththoaridaththi’rkum saaygi’rathu. (neethimozhiga’l 2:18)
அவளிடத்தில்
போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில்
வந்து சேருகிறதுமில்லை. (நீதிமொழிகள்
2:19)
ava'lidaththil poagi’ravarga'lil oruvarum thirumbugi’rathillai, jeevapaathaiga'lil vanthu searugi’rathumillai. (neethimozhiga’l 2:19)
ஆதலால்
நீ நல்லவர்களின் வழியிலே
நடந்து, நீதிமான்களின் பாதைகளைக்
காத்துக்கொள்வாயாக. (நீதிமொழிகள் 2:20)
aathalaal nee nallavarga'lin vazhiyilea nadanthu,
neethimaanga'lin paathaiga'laik kaaththukko'lvaayaaga. (neethimozhiga’l 2:20)
செவ்வையானவர்கள் பூமியிலே
வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். (நீதிமொழிகள்
2:21)
sevvaiyaanavarga'l boomiyilea
vaasampa'n'nuvaarga'l; uththamarga'l athilea thanggiyiruppaarga'l. (neethimozhiga’l 2:21)
துன்மார்க்கரோ
பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள்
அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள். (நீதிமொழிகள்
2:22)
thunmaarkkaroa boomiyilirunthu
a’ruppu'ndupoavaarga'l; thuroagiga'l athil iraathapadikku nirmoolamaavaarga'l. (neethimozhiga’l 2:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!