Wednesday, June 22, 2016

Neethimozhiga'l 3 | நீதிமொழிகள் 3 | Proverbs 3

என்  மகனே,  என்  போதகத்தை  மறவாதே;  உன்  இருதயம்  என்  கட்டளைகளைக்  காக்கக்கடவது.  (நீதிமொழிகள்  3:1)

en  maganea,  en  poathagaththai  ma’ravaathea;  un  iruthayam  en  katta'laiga'laik  kaakkakkadavathu.  (neethimozhiga’l  3:1)

அவைகள்  உனக்கு  நீடித்த  நாட்களையும்,  தீர்க்காயுசையும்,  சமாதானத்தையும்  பெருகப்பண்ணும்.  (நீதிமொழிகள்  3:2)

avaiga'l  unakku  neediththa  naadka'laiyum,  theerkkaayusaiyum,  samaathaanaththaiyum  perugappa'n'num.  (neethimozhiga’l  3:2)

கிருபையும்  சத்தியமும்  உன்னைவிட்டு  விலகாதிருப்பதாக;  நீ  அவைகளை  உன்  கழுத்திலே  பூண்டு,  அவைகளை  உன்  இருதயமாகிய  பலகையில்  எழுதிக்கொள்.  (நீதிமொழிகள்  3:3)

kirubaiyum  saththiyamum  unnaivittu  vilagaathiruppathaaga;  nee  avaiga'lai  un  kazhuththilea  poo'ndu,  avaiga'lai  un  iruthayamaagiya  palagaiyil  ezhuthikko'l.  (neethimozhiga’l  3:3)

அதினால்  தேவனுடைய  பார்வையிலும்  மனுஷருடைய  பார்வையிலும்  தயையும்  நற்புத்தியும்  பெறுவாய்.  (நீதிமொழிகள்  3:4)

athinaal  theavanudaiya  paarvaiyilum  manusharudaiya  paarvaiyilum  thayaiyum  na’rbuththiyum  pe’ruvaay.  (neethimozhiga’l  3:4)

உன்  சுயபுத்தியின்மேல்  சாயாமல்,  உன்  முழு  இருதயத்தோடும்  கர்த்தரில்  நம்பிக்கையாயிருந்து,  (நீதிமொழிகள்  3:5)

un  suyabuththiyinmeal  saayaamal,  un  muzhu  iruthayaththoadum  karththaril  nambikkaiyaayirunthu,  (neethimozhiga’l  3:5)

உன்  வழிகளிலெல்லாம்  அவரை  நினைத்துக்கொள்;  அப்பொழுது  அவர்  உன்  பாதைகளைச்  செவ்வைப்படுத்துவார்.  (நீதிமொழிகள்  3:6)

un  vazhiga'lilellaam  avarai  ninaiththukko'l;  appozhuthu  avar  un  paathaiga'laich  sevvaippaduththuvaar.  (neethimozhiga’l  3:6)

நீ  உன்னை  ஞானியென்று  எண்ணாதே;  கர்த்தருக்குப்  பயந்து,  தீமையை  விட்டு  விலகு.  (நீதிமொழிகள்  3:7)

nee  unnai  gnaaniyen’ru  e'n'naathea;  karththarukkup  bayanthu,  theemaiyai  vittu  vilagu.  (neethimozhiga’l  3:7)

அது  உன்  நாபிக்கு  ஆரோக்கியமும்,  உன்  எலும்புகளுக்கு  ஊனுமாகும்.  (நீதிமொழிகள்  3:8)

athu  un  naabikku  aaroakkiyamum,  un  elumbuga'lukku  oonumaagum.  (neethimozhiga’l  3:8)

உன்  பொருளாலும்,  உன்  எல்லா  விளைவின்  முதற்பலனாலும்  கர்த்தரைக்  கனம்பண்ணு.  (நீதிமொழிகள்  3:9)

un  poru'laalum,  un  ellaa  vi'laivin  mutha’rpalanaalum  karththaraik  kanampa'n'nu.  (neethimozhiga’l  3:9)

அப்பொழுது  உன்  களஞ்சியங்கள்  பூரணமாய்  நிரம்பும்;  உன்  ஆலைகளில்  திராட்சரசம்  புரண்டோடும்.  (நீதிமொழிகள்  3:10)

appozhuthu  un  ka'lagnchiyangga'l  poora'namaay  nirambum;  un  aalaiga'lil  thiraadcharasam  pura'ndoadum.  (neethimozhiga’l  3:10)

என்  மகனே,  நீ  கர்த்தருடைய  சிட்சையை  அற்பமாக  எண்ணாதே,  அவர்  கடிந்துகொள்ளும்போது  சோர்ந்துபோகாதே.  (நீதிமொழிகள்  3:11)

en  maganea,  nee  karththarudaiya  sidchaiyai  a’rpamaaga  e'n'naathea,  avar  kadinthuko'l'lumpoathu  soarnthupoagaathea.  (neethimozhiga’l  3:11)

தகப்பன்  தான்  நேசிக்கிற  புத்திரனைச்  சிட்சிக்கிறதுபோல,  கர்த்தரும்  எவனிடத்தில்  அன்புகூருகிறாரோ  அவனைச்  சிட்சிக்கிறார்.  (நீதிமொழிகள்  3:12)

thagappan  thaan  neasikki’ra  puththiranaich  sidchikki’rathupoala,  karththarum  evanidaththil  anbukoorugi’raaroa  avanaich  sidchikki’raar.  (neethimozhiga’l  3:12)

ஞானத்தைக்  கண்டடைகிற  மனுஷனும்,  புத்தியைச்  சம்பாதிக்கிற  மனுஷனும்  பாக்கியவான்கள்.  (நீதிமொழிகள்  3:13)

gnaanaththaik  ka'ndadaigi’ra  manushanum,  buththiyaich  sambaathikki’ra  manushanum  baakkiyavaanga'l.  (neethimozhiga’l  3:13)

அதின்  வர்த்தகம்  வெள்ளி  வர்த்தகத்திலும்,  அதின்  ஆதாயம்  பசும்பொன்னிலும்  உத்தமமானது.  (நீதிமொழிகள்  3:14)

athin  varththagam  ve'l'li  varththagaththilum,  athin  aathaayam  pasumponnilum  uththamamaanathu.  (neethimozhiga’l  3:14)

முத்துக்களைப்பார்க்கிலும்  அது  விலையேறப்பெற்றது;  நீ  இச்சிக்கத்தக்கதொன்றும்  அதற்கு  நிகரல்ல.  (நீதிமொழிகள்  3:15)

muththukka'laippaarkkilum  athu  vilaiyea’rappet’rathu;  nee  ichchikkaththakkathon’rum  atha’rku  nigaralla.  (neethimozhiga’l  3:15)

அதின்  வலதுகையில்  தீர்க்காயுசும்,  அதின்  இடதுகையில்  செல்வமும்  கனமும்  இருக்கிறது.  (நீதிமொழிகள்  3:16)

athin  valathukaiyil  theerkkaayusum,  athin  idathukaiyil  selvamum  kanamum  irukki’rathu.  (neethimozhiga’l  3:16)

அதின்  வழிகள்  இனிதான  வழிகள்,  அதின்  பாதைகளெல்லாம்  சமாதானம்.  (நீதிமொழிகள்  3:17)

athin  vazhiga'l  inithaana  vazhiga'l,  athin  paathaiga'lellaam  samaathaanam.  (neethimozhiga’l  3:17)

அது  தன்னை  அடைந்தவர்களுக்கு  ஜீவவிருட்சம்,  அதைப்  பற்றிக்கொள்ளுகிற  எவனும்  பாக்கியவான்.  (நீதிமொழிகள்  3:18)

athu  thannai  adainthavarga'lukku  jeevavirudcham,  athaip  pat’rikko'l'lugi’ra  evanum  baakkiyavaan.  (neethimozhiga’l  3:18)

கர்த்தர்  ஞானத்தினாலே  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  புத்தியினாலே  வானங்களை  ஸ்தாபித்தார்.  (நீதிமொழிகள்  3:19)

karththar  gnaanaththinaalea  boomiyai  asthibaarappaduththi,  buththiyinaalea  vaanangga'lai  sthaabiththaar.  (neethimozhiga’l  3:19)

அவருடைய  ஞானத்தினாலே  ஆழங்கள்  பிரிந்தது,  ஆகாயமும்  பனியைப்  பெய்கிறது.  (நீதிமொழிகள்  3:20)

avarudaiya  gnaanaththinaalea  aazhangga'l  pirinthathu,  aagaayamum  paniyaip  peygi’rathu.  (neethimozhiga’l  3:20)

என்  மகனே,  இவைகள்  உன்  கண்களை  விட்டுப்  பிரியாதிருப்பதாக;  மெய்ஞ்ஞானத்தையும்  நல்லாலோசனையையும்  காத்துக்கொள்.  (நீதிமொழிகள்  3:21)

en  maganea,  ivaiga'l  un  ka'nga'lai  vittup  piriyaathiruppathaaga;  meygngnaanaththaiyum  nallaaloasanaiyaiyum  kaaththukko'l.  (neethimozhiga’l  3:21)

அவைகள்  உன்  ஆத்துமாவுக்கு  ஜீவனும்,  உன்  கழுத்துக்கு  அலங்காரமுமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  3:22)

avaiga'l  un  aaththumaavukku  jeevanum,  un  kazhuththukku  alanggaaramumaayirukkum.  (neethimozhiga’l  3:22)

அப்பொழுது  நீ  பயமின்றி  உன்  வழியில்  நடப்பாய்,  உன்  கால்  இடறாது.  (நீதிமொழிகள்  3:23)

appozhuthu  nee  bayamin’ri  un  vazhiyil  nadappaay,  un  kaal  ida’raathu.  (neethimozhiga’l  3:23)

நீ  படுக்கும்போது  பயப்படாதிருப்பாய்;  நீ  படுத்துக்கொள்ளும்போது  உன்  நித்திரை  இன்பமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  3:24)

nee  padukkumpoathu  bayappadaathiruppaay;  nee  paduththukko'l'lumpoathu  un  niththirai  inbamaayirukkum.  (neethimozhiga’l  3:24)

சடிதியான  திகிலும்,  துஷ்டர்களின்  பாழ்க்கடிப்பும்  வரும்போது  நீ  அஞ்சவேண்டாம்.  (நீதிமொழிகள்  3:25)

sadithiyaana  thigilum,  thushdarga'lin  paazhkkadippum  varumpoathu  nee  agnchavea'ndaam.  (neethimozhiga’l  3:25)

கர்த்தர்  உன்  நம்பிக்கையாயிருந்து,  உன்  கால்  சிக்கிக்கொள்ளாதபடி  காப்பார்.  (நீதிமொழிகள்  3:26)

karththar  un  nambikkaiyaayirunthu,  un  kaal  sikkikko'l'laathapadi  kaappaar.  (neethimozhiga’l  3:26)

நன்மைசெய்யும்படி  உனக்குத்  திராணியிருக்கும்போது,  அதைச்  செய்யத்தக்கவர்களுக்குச்  செய்யாமல்  இராதே.  (நீதிமொழிகள்  3:27)

nanmaiseyyumpadi  unakkuth  thiraa'niyirukkumpoathu,  athaich  seyyaththakkavarga'lukkuch  seyyaamal  iraathea.  (neethimozhiga’l  3:27)

உன்னிடத்தில்  பொருள்  இருக்கையில்  உன்  அயலானை  நோக்கி:  நீ  போய்த்  திரும்பவா,  நாளைக்குத்  தருவேன்  என்று  சொல்லாதே.  (நீதிமொழிகள்  3:28)

unnidaththil  poru'l  irukkaiyil  un  ayalaanai  noakki:  nee  poayth  thirumbavaa,  naa'laikkuth  tharuvean  en’ru  sollaathea.  (neethimozhiga’l  3:28)

அச்சமின்றி  உன்னிடத்தில்  வாசம்பண்ணுகிற  உன்  அயலானுக்கு  விரோதமாக  தீங்கு  நினையாதே.  (நீதிமொழிகள்  3:29)

achchamin’ri  unnidaththil  vaasampa'n'nugi’ra  un  ayalaanukku  viroathamaaga  theenggu  ninaiyaathea.  (neethimozhiga’l  3:29)

ஒருவன்  உனக்குத்  தீங்குசெய்யாதிருக்க,  காரணமின்றி  அவனோடே  வழக்காடாதே.  (நீதிமொழிகள்  3:30)

oruvan  unakkuth  theengguseyyaathirukka,  kaara'namin’ri  avanoadea  vazhakkaadaathea.  (neethimozhiga’l  3:30)

கொடுமையுள்ளவன்மேல்  பொறாமை  கொள்ளாதே;  அவனுடைய  வழிகளில்  ஒன்றையும்  தெரிந்துகொள்ளாதே.  (நீதிமொழிகள்  3:31)

kodumaiyu'l'lavanmeal  po’raamai  ko'l'laathea;  avanudaiya  vazhiga'lil  on’raiyum  therinthuko'l'laathea.  (neethimozhiga’l  3:31)

மாறுபாடுள்ளவன்  கர்த்தருக்கு  அருவருப்பானவன்;  நீதிமான்களோடே  அவருடைய  இரகசியம்  இருக்கிறது.  (நீதிமொழிகள்  3:32)

maa’rupaadu'l'lavan  karththarukku  aruvaruppaanavan;  neethimaanga'loadea  avarudaiya  iragasiyam  irukki’rathu.  (neethimozhiga’l  3:32)

துன்மார்க்கனுடைய  வீட்டில்  கர்த்தரின்  சாபம்  இருக்கிறது,  நீதிமான்களுடைய  வாசஸ்தலத்தையோ  அவர்  ஆசீர்வதிக்கிறார்.  (நீதிமொழிகள்  3:33)

thunmaarkkanudaiya  veettil  karththarin  saabam  irukki’rathu,  neethimaanga'ludaiya  vaasasthalaththaiyoa  avar  aaseervathikki’raar.  (neethimozhiga’l  3:33)

இகழ்வோரை  அவர்  இகழுகிறார்;  தாழ்மையுள்ளவர்களுக்கோ  கிருபையளிக்கிறார்.  (நீதிமொழிகள்  3:34)

igazhvoarai  avar  igazhugi’raar;  thaazhmaiyu'l'lavarga'lukkoa  kirubaiya'likki’raar.  (neethimozhiga’l  3:34)

ஞானவான்கள்  கனத்தைச்  சுதந்தரிப்பார்கள்;  மதிகேடரோ  கனவீனத்தை  அடைவார்கள்.  (நீதிமொழிகள்  3:35)

gnaanavaanga'l  kanaththaich  suthantharippaarga'l;  mathikeadaroa  kanaveenaththai  adaivaarga'l.  (neethimozhiga’l  3:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!