Wednesday, May 11, 2016

Yoavaan 9 | யோவான் 9 | John 9


அவர்  அப்புறம்  போகையில்  பிறவிக்  குருடனாகிய  ஒரு  மனுஷனைக்  கண்டார்.  (யோவான்  9:1)

avar  appu’ram  poagaiyil  pi’ravik  kurudanaagiya  oru  manushanaik  ka'ndaar.  (yoavaan  9:1)

அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  ரபீ,  இவன்  குருடனாய்ப்  பிறந்தது  யார்  செய்த  பாவம்,  இவன்  செய்த  பாவமோ,  இவனைப்  பெற்றவர்கள்  செய்த  பாவமோ  என்று  கேட்டார்கள்.  (யோவான்  9:2)

appozhuthu  avarudaiya  seesharga'l  avarai  noakki:  rabee,  ivan  kurudanaayp  pi’ranthathu  yaar  seytha  paavam,  ivan  seytha  paavamoa,  ivanaip  pet’ravarga'l  seytha  paavamoa  en’ru  keattaarga'l.  (yoavaan  9:2)

இயேசு  பிரதியுத்தரமாக:  அது  இவன்  செய்த  பாவமுமல்ல,  இவனைப்  பெற்றவர்கள்  செய்த  பாவமுமல்ல,  தேவனுடைய  கிரியைகள்  இவனிடத்தில்  வெளிப்படும்பொருட்டு  இப்படிப்  பிறந்தான்.  (யோவான்  9:3)

iyeasu  pirathiyuththaramaaga:  athu  ivan  seytha  paavamumalla,  ivanaip  pet’ravarga'l  seytha  paavamumalla,  theavanudaiya  kiriyaiga'l  ivanidaththil  ve'lippadumporuttu  ippadip  pi’ranthaan.  (yoavaan  9:3)

பகற்காலமிருக்குமட்டும்  நான்  என்னை  அனுப்பினவருடைய  கிரியைகளைச்  செய்யவேண்டும்;  ஒருவனும்  கிரியை  செய்யக்கூடாத  இராக்காலம்  வருகிறது.  (யோவான்  9:4)

paga’rkaalamirukkumattum  naan  ennai  anuppinavarudaiya  kiriyaiga'laich  seyyavea'ndum;  oruvanum  kiriyai  seyyakkoodaatha  iraakkaalam  varugi’rathu.  (yoavaan  9:4)

நான்  உலகத்திலிருக்கையில்  உலகத்திற்கு  ஒளியாயிருக்கிறேன்  என்றார்.  (யோவான்  9:5)

naan  ulagaththilirukkaiyil  ulagaththi’rku  o'liyaayirukki’rean  en’raar.  (yoavaan  9:5)

இவைகளைச்  சொல்லி,  அவர்  தரையிலே  துப்பி,  உமிழ்நீரினால்  சேறுண்டாக்கி,  அந்தச்  சேற்றைக்  குருடனுடைய  கண்களின்மேல்  பூசி:  (யோவான்  9:6)

ivaiga'laich  solli,  avar  tharaiyilea  thuppi,  umizhneerinaal  sea’ru'ndaakki,  anthach  seat’raik  kurudanudaiya  ka'nga'linmeal  poosi:  (yoavaan  9:6)

நீ  போய்,  சீலோவாம்  குளத்திலே  கழுவு  என்றார்.  சீலோவாம்  என்பதற்கு  அனுப்பப்பட்டவன்  என்று  அர்த்தமாம்.  அப்படியே  அவன்  போய்க்  கழுவி,  பார்வையடைந்தவனாய்த்  திரும்பிவந்தான்.  (யோவான்  9:7)

nee  poay,  seeloavaam  ku'laththilea  kazhuvu  en’raar.  seeloavaam  enbatha’rku  anuppappattavan  en’ru  arththamaam.  appadiyea  avan  poayk  kazhuvi,  paarvaiyadainthavanaayth  thirumbivanthaan.  (yoavaan  9:7)

அப்பொழுது  அயலகத்தாரும்,  அவன்  குருடனாயிருக்கையில்  அவனைக்  கண்டிருந்தவர்களும்:  இவன்  உட்கார்ந்து  பிச்சை  கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா  என்றார்கள்.  (யோவான்  9:8)

appozhuthu  ayalagaththaarum,  avan  kurudanaayirukkaiyil  avanaik  ka'ndirunthavarga'lum:  ivan  udkaarnthu  pichchai  keattukko'ndirunthavanallavaa  en’raarga'l.  (yoavaan  9:8)

சிலர்:  அவன்தான்  என்றார்கள்.  வேறுசிலர்:  அவனுடைய  சாயலாயிருக்கிறான்  என்றார்கள்.  அவனோ:  நான்தான்  அவன்  என்றான்.  (யோவான்  9:9)

silar:  avanthaan  en’raarga'l.  vea’rusilar:  avanudaiya  saayalaayirukki’raan  en’raarga'l.  avanoa:  naanthaan  avan  en’raan.  (yoavaan  9:9)

அப்பொழுது  அவர்கள்  அவனை  நோக்கி:  உன்  கண்கள்  எப்படித்  திறக்கப்பட்டது  என்றார்கள்.  (யோவான்  9:10)

appozhuthu  avarga'l  avanai  noakki:  un  ka'nga'l  eppadith  thi’rakkappattathu  en’raarga'l.  (yoavaan  9:10)

அவன்  பிரதியுத்தரமாக:  இயேசு  என்னப்பட்ட  ஒருவர்  சேறுண்டாக்கி,  என்  கண்களின்மேல்  பூசி,  நீ  போய்  சீலோவாம்  குளத்திலே  கழுவு  என்றார்.  அப்படியே  நான்  போய்க்  கழுவி,  பார்வையடைந்தேன்  என்றான்.  (யோவான்  9:11)

avan  pirathiyuththaramaaga:  iyeasu  ennappatta  oruvar  sea’ru'ndaakki,  en  ka'nga'linmeal  poosi,  nee  poay  seeloavaam  ku'laththilea  kazhuvu  en’raar.  appadiyea  naan  poayk  kazhuvi,  paarvaiyadainthean  en’raan.  (yoavaan  9:11)

அப்பொழுது  அவர்கள்:  அவர்  எங்கே  என்றார்கள்.  அவன்:  எனக்குத்  தெரியாது  என்றான்.  (யோவான்  9:12)

appozhuthu  avarga'l:  avar  enggea  en’raarga'l.  avan:  enakkuth  theriyaathu  en’raan.  (yoavaan  9:12)

குருடனாயிருந்த  அவனைப்  பரிசேயரிடத்திற்குக்  கொண்டுபோனார்கள்.  (யோவான்  9:13)

kurudanaayiruntha  avanaip  pariseayaridaththi’rkuk  ko'ndupoanaarga'l.  (yoavaan  9:13)

இயேசு  சேறுண்டாக்கி,  அவன்  கண்களைத்  திறந்த  நாள்  ஓய்வுநாளாயிருந்தது.  (யோவான்  9:14)

iyeasu  sea’ru'ndaakki,  avan  ka'nga'laith  thi’rantha  naa'l  oayvunaa'laayirunthathu.  (yoavaan  9:14)

ஆகையால்  பரிசேயரும்  அவனை  நோக்கி:  நீ  எப்படிப்  பார்வையடைந்தாய்  என்று  மறுபடியும்  கேட்டார்கள்.  அதற்கு  அவன்:  அவர்  என்  கண்களின்மேல்  சேற்றைப்  பூசினார்,  நான்  கழுவினேன்,  காண்கிறேன்  என்றான்.  (யோவான்  9:15)

aagaiyaal  pariseayarum  avanai  noakki:  nee  eppadip  paarvaiyadainthaay  en’ru  ma’rupadiyum  keattaarga'l.  atha’rku  avan:  avar  en  ka'nga'linmeal  seat’raip  poosinaar,  naan  kazhuvinean,  kaa'ngi’rean  en’raan.  (yoavaan  9:15)

அப்பொழுது  பரிசேயரில்  சிலர்:  அந்த  மனுஷன்  ஓய்வுநாளைக்  கைக்கொள்ளாததினால்  அவன்  தேவனிடத்திலிருந்து  வந்தவனல்ல  என்றார்கள்.  வேறுசிலர்:  பாவியாயிருக்கிற  மனுஷன்  இப்படிப்பட்ட  அற்புதங்களை  எப்படிச்  செய்வான்  என்றார்கள்.  இவ்விதமாய்  அவர்களுக்குள்ளே  பிரிவினையுண்டாயிற்று.  (யோவான்  9:16)

appozhuthu  pariseayaril  silar:  antha  manushan  oayvunaa'laik  kaikko'l'laathathinaal  avan  theavanidaththilirunthu  vanthavanalla  en’raarga'l.  vea’rusilar:  paaviyaayirukki’ra  manushan  ippadippatta  a’rputhangga'lai  eppadich  seyvaan  en’raarga'l.  ivvithamaay  avarga'lukku'l'lea  pirivinaiyu'ndaayit’ru.  (yoavaan  9:16)

மறுபடியும்  அவர்கள்  குருடனை  நோக்கி:  உன்  கண்களைத்  திறந்தானே,  அவனைக்குறித்து  நீ  என்ன  சொல்லுகிறாய்  என்றார்கள்.  அதற்கு  அவன்:  அவர்  தீர்க்கதரிசி  என்றான்.  (யோவான்  9:17)

ma’rupadiyum  avarga'l  kurudanai  noakki:  un  ka'nga'laith  thi’ranthaanea,  avanaikku’riththu  nee  enna  sollugi’raay  en’raarga'l.  atha’rku  avan:  avar  theerkkatharisi  en’raan.  (yoavaan  9:17)

அவன்  குருடனாயிருந்து  பார்வையடைந்ததை  யூதர்கள்  நம்பாமல்,  பார்வையடைந்தவனுடைய  தாய்தகப்பன்மாரை  அழைப்பித்து,  (யோவான்  9:18)

avan  kurudanaayirunthu  paarvaiyadainthathai  yootharga'l  nambaamal,  paarvaiyadainthavanudaiya  thaaythagappanmaarai  azhaippiththu,  (yoavaan  9:18)

அவர்களை  நோக்கி:  உங்கள்  குமாரன்  குருடனாய்ப்  பிறந்தான்  என்று  சொல்லுகிறீர்களே,  அவன்  இவன்தானா?  இவனானால்,  இப்பொழுது  இவன்  எப்படிப்  பார்வையடைந்தான்  என்று  கேட்டார்கள்.  (யோவான்  9:19)

avarga'lai  noakki:  ungga'l  kumaaran  kurudanaayp  pi’ranthaan  en’ru  sollugi’reerga'lea,  avan  ivanthaanaa?  ivanaanaal,  ippozhuthu  ivan  eppadip  paarvaiyadainthaan  en’ru  keattaarga'l.  (yoavaan  9:19)

தாய்தகப்பன்மார்  பிரதியுத்தரமாக:  இவன்  எங்கள்  குமாரன்தான்  என்றும்,  குருடனாய்ப்  பிறந்தான்  என்றும்  எங்களுக்குத்  தெரியும்.  (யோவான்  9:20)

thaaythagappanmaar  pirathiyuththaramaaga:  ivan  engga'l  kumaaranthaan  en’rum,  kurudanaayp  pi’ranthaan  en’rum  engga'lukkuth  theriyum.  (yoavaan  9:20)

இப்பொழுது  இவன்  பார்வையடைந்த  வகை  எங்களுக்குத்  தெரியாது;  இவன்  கண்களைத்  திறந்தவன்  இன்னான்  என்பதும்  எங்களுக்குத்  தெரியாது;  இவன்  வயதுள்ளவனாயிருக்கிறான்,  இவனைக்  கேளுங்கள்,  இவனே  சொல்லுவான்  என்றார்கள்.  (யோவான்  9:21)

ippozhuthu  ivan  paarvaiyadaintha  vagai  engga'lukkuth  theriyaathu;  ivan  ka'nga'laith  thi’ranthavan  innaan  enbathum  engga'lukkuth  theriyaathu;  ivan  vayathu'l'lavanaayirukki’raan,  ivanaik  kea'lungga'l,  ivanea  solluvaan  en’raarga'l.  (yoavaan  9:21)

அவனுடைய  தாய்தகப்பன்மார்  யூதர்களுக்குப்  பயந்ததினால்  இப்படிச்  சொன்னார்கள்.  ஏனெனில்  இயேசுவைக்  கிறிஸ்து  என்று  எவனாவது  அறிக்கைபண்ணினால்  அவனை  ஜெபஆலயத்துக்குப்  புறம்பாக்கவேண்டுமென்று  யூதர்கள்  அதற்குமுன்னமே  கட்டுப்பாடு  செய்திருந்தார்கள்.  (யோவான்  9:22)

avanudaiya  thaaythagappanmaar  yootharga'lukkup  bayanthathinaal  ippadich  sonnaarga'l.  eanenil  iyeasuvaik  ki’risthu  en’ru  evanaavathu  a’rikkaipa'n'ninaal  avanai  jebaaalayaththukkup  pu’rambaakkavea'ndumen’ru  yootharga'l  atha’rkumunnamea  kattuppaadu  seythirunthaarga'l.  (yoavaan  9:22)

அதினிமித்தம்:  இவன்  வயதுள்ளவனாயிருக்கிறான்,  இவனையே  கேளுங்கள்  என்று  அவன்  தாய்தகப்பன்மார்  சொன்னார்கள்.  (யோவான்  9:23)

athinimiththam:  ivan  vayathu'l'lavanaayirukki’raan,  ivanaiyea  kea'lungga'l  en’ru  avan  thaaythagappanmaar  sonnaarga'l.  (yoavaan  9:23)

ஆதலால்  அவர்கள்  குருடனாயிருந்த  மனுஷனை  இரண்டாந்தரம்  அழைத்து:  நீ  தேவனை  மகிமைப்படுத்து;  இந்த  மனுஷன்  பாவியென்று  நாங்கள்  அறிந்திருக்கிறோம்  என்றார்கள்.  (யோவான்  9:24)

aathalaal  avarga'l  kurudanaayiruntha  manushanai  ira'ndaantharam  azhaiththu:  nee  theavanai  magimaippaduththu;  intha  manushan  paaviyen’ru  naangga'l  a’rinthirukki’roam  en’raarga'l.  (yoavaan  9:24)

அவன்  பிரதியுத்தரமாக:  அவர்  பாவியென்று  எனக்குத்  தெரியாது;  நான்  குருடனாயிருந்தேன்,  இப்பொழுது  காண்கிறேன்;  இது  ஒன்றுதான்  எனக்குத்  தெரியும்  என்றான்.  (யோவான்  9:25)

avan  pirathiyuththaramaaga:  avar  paaviyen’ru  enakkuth  theriyaathu;  naan  kurudanaayirunthean,  ippozhuthu  kaa'ngi’rean;  ithu  on’ruthaan  enakkuth  theriyum  en’raan.  (yoavaan  9:25)

அவர்கள்  மறுபடியும்  அவனை  நோக்கி:  உனக்கு  என்னசெய்தான்,  உன்  கண்களை  எப்படித்  திறந்தான்  என்றார்கள்.  (யோவான்  9:26)

avarga'l  ma’rupadiyum  avanai  noakki:  unakku  ennaseythaan,  un  ka'nga'lai  eppadith  thi’ranthaan  en’raarga'l.  (yoavaan  9:26)

அவன்  பிரதியுத்தரமாக:  முன்னமே  உங்களுக்குச்  சொன்னேன்,  நீங்கள்  கேளாமற்போனீர்கள்;  மறுபடியும்  கேட்க  வேண்டியதென்ன?  அவருக்குச்  சீஷராக  உங்களுக்கும்  மனதுண்டோ  என்றான்.  (யோவான்  9:27)

avan  pirathiyuththaramaaga:  munnamea  ungga'lukkuch  sonnean,  neengga'l  kea'laama’rpoaneerga'l;  ma’rupadiyum  keadka  vea'ndiyathenna?  avarukkuch  seesharaaga  ungga'lukkum  manathu'ndoa  en’raan.  (yoavaan  9:27)

அப்பொழுது  அவர்கள்  அவனை  வைது:  நீ  அவனுடைய  சீஷன்,  நாங்கள்  மோசேயினுடைய  சீஷர்.  (யோவான்  9:28)

appozhuthu  avarga'l  avanai  vaithu:  nee  avanudaiya  seeshan,  naangga'l  moaseayinudaiya  seeshar.  (yoavaan  9:28)

மோசேயுடனே  தேவன்  பேசினாரென்று  அறிவோம்,  இவன்  எங்கேயிருந்து  வந்தவனென்று  அறியோம்  என்றார்கள்.  (யோவான்  9:29)

moaseayudanea  theavan  peasinaaren’ru  a’rivoam,  ivan  enggeayirunthu  vanthavanen’ru  a’riyoam  en’raarga'l.  (yoavaan  9:29)

அதற்கு  அந்த  மனுஷன்:  அவர்  என்  கண்களைத்  திறந்திருந்தும்,  அவர்  எங்கேயிருந்து  வந்தவரென்று  நீங்கள்  அறியாதிருக்கிறது  ஆச்சரியமான  காரியம்.  (யோவான்  9:30)

atha’rku  antha  manushan:  avar  en  ka'nga'laith  thi’ranthirunthum,  avar  enggeayirunthu  vanthavaren’ru  neengga'l  a’riyaathirukki’rathu  aachchariyamaana  kaariyam.  (yoavaan  9:30)

பாவிகளுக்குத்  தேவன்  செவிகொடுக்கிறதில்லையென்று  அறிந்திருக்கிறோம்;  ஒருவன்  தேவபக்தியுள்ளவனாயிருந்து  அவருக்குச்  சித்தமானதைச்  செய்தால்  அவனுக்குச்  செவிகொடுப்பார்.  (யோவான்  9:31)

paaviga'lukkuth  theavan  sevikodukki’rathillaiyen’ru  a’rinthirukki’roam;  oruvan  theavabakthiyu'l'lavanaayirunthu  avarukkuch  siththamaanathaich  seythaal  avanukkuch  sevikoduppaar.  (yoavaan  9:31)

பிறவிக்குருடனுடைய  கண்களை  ஒருவன்  திறந்தானென்று  உலகமுண்டானதுமுதல்  கேள்விப்பட்டதில்லையே.  (யோவான்  9:32)

pi’ravikkurudanudaiya  ka'nga'lai  oruvan  thi’ranthaanen’ru  ulagamu'ndaanathumuthal  kea'lvippattathillaiyea.  (yoavaan  9:32)

அவர்  தேவனிடத்திலிருந்து  வராதிருந்தால்  ஒன்றும்  செய்யமாட்டாரே  என்றான்.  (யோவான்  9:33)

avar  theavanidaththilirunthu  varaathirunthaal  on’rum  seyyamaattaarea  en’raan.  (yoavaan  9:33)

அவர்கள்  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  முழுவதும்  பாவத்தில்  பிறந்த  நீ  எங்களுக்குப்  போதிக்கிறாயோ  என்று  சொல்லி,  அவனைப்  புறம்பே  தள்ளிவிட்டார்கள்.  (யோவான்  9:34)

avarga'l  avanukkup  pirathiyuththaramaaga:  muzhuvathum  paavaththil  pi’rantha  nee  engga'lukkup  poathikki’raayoa  en’ru  solli,  avanaip  pu’rambea  tha'l'livittaarga'l.  (yoavaan  9:34)

அவனை  அவர்கள்  புறம்பே  தள்ளிவிட்டதை  இயேசு  கேள்விப்பட்டு,  அவனைக்  கண்டபோது:  நீ  தேவனுடைய  குமாரனிடத்தில்  விசுவாசமாயிருக்கிறாயா  என்றார்.  (யோவான்  9:35)

avanai  avarga'l  pu’rambea  tha'l'livittathai  iyeasu  kea'lvippattu,  avanaik  ka'ndapoathu:  nee  theavanudaiya  kumaaranidaththil  visuvaasamaayirukki’raayaa  en’raar.  (yoavaan  9:35)

அதற்கு  அவன்:  ஆண்டவரே,  அவரிடத்தில்  நான்  விசுவாசமாயிருக்கும்படிக்கு  அவர்  யார்  என்றான்.  (யோவான்  9:36)

atha’rku  avan:  aa'ndavarea,  avaridaththil  naan  visuvaasamaayirukkumpadikku  avar  yaar  en’raan.  (yoavaan  9:36)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  அவரைக்  கண்டிருக்கிறாய்,  உன்னுடனே  பேசுகிறவர்  அவர்தான்  என்றார்.  (யோவான்  9:37)

iyeasu  avanai  noakki:  nee  avaraik  ka'ndirukki’raay,  unnudanea  peasugi’ravar  avarthaan  en’raar.  (yoavaan  9:37)

உடனே  அவன்:  ஆண்டவரே,  விசுவாசிக்கிறேன்  என்று  சொல்லி,  அவரைப்  பணிந்துகொண்டான்.  (யோவான்  9:38)

udanea  avan:  aa'ndavarea,  visuvaasikki’rean  en’ru  solli,  avaraip  pa'ninthuko'ndaan.  (yoavaan  9:38)

அப்பொழுது  இயேசு:  காணாதவர்கள்  காணும்படியாகவும்,  காண்கிறவர்கள்  குருடராகும்படியாகவும்  நியாயத்தீர்ப்புக்கு  நான்  இந்த  உலகத்தில்  வந்தேன்  என்றார்.  (யோவான்  9:39)

appozhuthu  iyeasu:  kaa'naathavarga'l  kaa'numpadiyaagavum,  kaa'ngi’ravarga'l  kurudaraagumpadiyaagavum  niyaayaththeerppukku  naan  intha  ulagaththil  vanthean  en’raar.  (yoavaan  9:39)

அவருடனேகூட  இருந்த  பரிசேயரில்  சிலர்  இவைகளைக்  கேட்டபொழுது:  நாங்களும்  குருடரோ  என்றார்கள்.  (யோவான்  9:40)

avarudaneakooda  iruntha  pariseayaril  silar  ivaiga'laik  keattapozhuthu:  naangga'lum  kurudaroa  en’raarga'l.  (yoavaan  9:40)

இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  குருடராயிருந்தால்  உங்களுக்குப்  பாவமிராது;  நீங்கள்  காண்கிறோம்  என்று  சொல்லுகிறபடியினால்  உங்கள்  பாவம்  நிலைநிற்கிறது  என்றார்.  (யோவான்  9:41)

iyeasu  avarga'lai  noakki:  neengga'l  kurudaraayirunthaal  ungga'lukkup  paavamiraathu;  neengga'l  kaa'ngi’roam  en’ru  sollugi’rapadiyinaal  ungga'l  paavam  nilaini’rki’rathu  en’raar.  (yoavaan  9:41)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!