Wednesday, May 11, 2016

Yoavaan 8 | யோவான் 8 | John 8


இயேசு  ஒலிவமலைக்குப்  போனார்.  (யோவான்  8:1)

iyeasu  olivamalaikkup  poanaar.  (yoavaan  8:1)

மறுநாள்  காலையிலே  அவர்  திரும்பித்  தேவாலயத்திற்கு  வந்தபோது,  ஜனங்களெல்லாரும்  அவரிடத்தில்  வந்தார்கள்.  அவர்  உட்கார்ந்து  அவர்களுக்கு  உபதேசம்பண்ணினார்.  (யோவான்  8:2)

ma’runaa'l  kaalaiyilea  avar  thirumbith  theavaalayaththi’rku  vanthapoathu,  janangga'lellaarum  avaridaththil  vanthaarga'l.  avar  udkaarnthu  avarga'lukku  ubatheasampa'n'ninaar.  (yoavaan  8:2)

அப்பொழுது  விபசாரத்திலே  கண்டுபிடிக்கப்பட்ட  ஒரு  ஸ்திரீயை  வேதபாரகரும்  பரிசேயரும்  அவரிடத்தில்  கொண்டுவந்து,  அவளை  நடுவே  நிறுத்தி:  (யோவான்  8:3)

appozhuthu  vibasaaraththilea  ka'ndupidikkappatta  oru  sthireeyai  veathapaaragarum  pariseayarum  avaridaththil  ko'nduvanthu,  ava'lai  naduvea  ni’ruththi:  (yoavaan  8:3)

போதகரே,  இந்த  ஸ்திரீ  விபசாரத்தில்  கையும்  மெய்யுமாய்ப்  பிடிக்கப்பட்டாள்.  (யோவான்  8:4)

poathagarea,  intha  sthiree  vibasaaraththil  kaiyum  meyyumaayp  pidikkappattaa'l.  (yoavaan  8:4)

இப்படிப்பட்டவர்களைக்  கல்லெறிந்து  கொல்லவேண்டுமென்று  மோசே  நியாயப்பிரமாணத்தில்  நமக்குக்  கட்டளையிட்டிருக்கிறாரே,  நீர்  என்ன  சொல்லுகிறீர்  என்றார்கள்.  (யோவான்  8:5)

ippadippattavarga'laik  kalle’rinthu  kollavea'ndumen’ru  moasea  niyaayappiramaa'naththil  namakkuk  katta'laiyittirukki’raarea,  neer  enna  sollugi’reer  en’raarga'l.  (yoavaan  8:5)

அவர்மேல்  குற்றஞ்சுமத்துவதற்கான  காரணம்  உண்டாகும்பொருட்டு  அவரைச்  சோதிக்கும்படி  இப்படிச்  சொன்னார்கள்.  இயேசுவோ  குனிந்து,  விரலினால்  தரையிலே  எழுதினார்.  (யோவான்  8:6)

avarmeal  kut’ragnsumaththuvatha’rkaana  kaara'nam  u'ndaagumporuttu  avaraich  soathikkumpadi  ippadich  sonnaarga'l.  iyeasuvoa  kuninthu,  viralinaal  tharaiyilea  ezhuthinaar.  (yoavaan  8:6)

அவர்கள்  ஓயாமல்  அவரைக்  கேட்டுக்கொண்டிருக்கையில்,  அவர்  நிமிர்ந்து  பார்த்து:  உங்களில்  பாவமில்லாதவன்  இவள்மேல்  முதலாவது  கல்லெறியக்கடவன்  என்று  சொல்லி,  (யோவான்  8:7)

avarga'l  oayaamal  avaraik  keattukko'ndirukkaiyil,  avar  nimirnthu  paarththu:  ungga'lil  paavamillaathavan  iva'lmeal  muthalaavathu  kalle’riyakkadavan  en’ru  solli,  (yoavaan  8:7)

அவர்  மறுபடியும்  குனிந்து,  தரையிலே  எழுதினார்.  (யோவான்  8:8)

avar  ma’rupadiyum  kuninthu,  tharaiyilea  ezhuthinaar.  (yoavaan  8:8)

அவர்கள்  அதைக்  கேட்டு,  தங்கள்  மனச்சாட்சியினால்  கடிந்துகொள்ளப்பட்டு,  பெரியோர்முதல்  சிறியோர்வரைக்கும்  ஒவ்வொருவராய்ப்  போய்விட்டார்கள்.  இயேசு  தனித்திருந்தார்,  அந்த  ஸ்திரீ  நடுவே  நின்றாள்.  (யோவான்  8:9)

avarga'l  athaik  keattu,  thangga'l  manachsaadchiyinaal  kadinthuko'l'lappattu,  periyoarmuthal  si’riyoarvaraikkum  ovvoruvaraayp  poayvittaarga'l.  iyeasu  thaniththirunthaar,  antha  sthiree  naduvea  nin’raa'l.  (yoavaan  8:9)

இயேசு  நிமிர்ந்து  அந்த  ஸ்திரீயைத்  தவிர  வேறொருவரையுங்  காணாமல்:  ஸ்திரீயே,  உன்மேல்  குற்றஞ்சாட்டினவர்கள்  எங்கே?  ஒருவனாகிலும்  உன்னை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கவில்லையா  என்றார்.  (யோவான்  8:10)

iyeasu  nimirnthu  antha  sthireeyaith  thavira  vea’roruvaraiyung  kaa'naamal:  sthireeyea,  unmeal  kut’ragnsaattinavarga'l  enggea?  oruvanaagilum  unnai  aakkinaikku'l'laagath  theerkkavillaiyaa  en’raar.  (yoavaan  8:10)

அதற்கு  அவள்:  இல்லை,  ஆண்டவரே,  என்றாள்.  இயேசு  அவளை  நோக்கி:  நானும்  உன்னை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறதில்லை;  நீ  போ,  இனிப்  பாவஞ்செய்யாதே  என்றார்.  (யோவான்  8:11)

atha’rku  ava'l:  illai,  aa'ndavarea,  en’raa'l.  iyeasu  ava'lai  noakki:  naanum  unnai  aakkinaikku'l'laagath  theerkki’rathillai;  nee  poa,  inip  paavagnseyyaathea  en’raar.  (yoavaan  8:11)

மறுபடியும்  இயேசு  ஜனங்களை  நோக்கி:  நான்  உலகத்திற்கு  ஒளியாயிருக்கிறேன்,  என்னைப்  பின்பற்றுகிறவன்  இருளிலே  நடவாமல்  ஜீவஒளியை  அடைந்திருப்பான்  என்றார்.  (யோவான்  8:12)

ma’rupadiyum  iyeasu  janangga'lai  noakki:  naan  ulagaththi’rku  o'liyaayirukki’rean,  ennaip  pinpat’rugi’ravan  iru'lilea  nadavaamal  jeevao'liyai  adainthiruppaan  en’raar.  (yoavaan  8:12)

அப்பொழுது  பரிசேயர்  அவரை  நோக்கி:  உன்னைக்குறித்து  நீயே  சாட்சி  கொடுக்கிறாய்;  உன்னுடைய  சாட்சி  உண்மையானதல்ல  என்றார்கள்.  (யோவான்  8:13)

appozhuthu  pariseayar  avarai  noakki:  unnaikku’riththu  neeyea  saadchi  kodukki’raay;  unnudaiya  saadchi  u'nmaiyaanathalla  en’raarga'l.  (yoavaan  8:13)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  என்னைக்குறித்து  நானே  சாட்சி  கொடுத்தாலும்,  என்  சாட்சி  உண்மையாயிருக்கிறது;  ஏனெனில்  நான்  எங்கேயிருந்து  வந்தேனென்றும்,  எங்கே  போகிறேனென்றும்  அறிந்திருக்கிறேன்;  நீங்களோ  நான்  எங்கேயிருந்து  வருகிறேனென்றும்,  எங்கே  போகிறேனென்றும்  அறியீர்கள்.  (யோவான்  8:14)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  ennaikku’riththu  naanea  saadchi  koduththaalum,  en  saadchi  u'nmaiyaayirukki’rathu;  eanenil  naan  enggeayirunthu  vantheanen’rum,  enggea  poagi’reanen’rum  a’rinthirukki’rean;  neengga'loa  naan  enggeayirunthu  varugi’reanen’rum,  enggea  poagi’reanen’rum  a’riyeerga'l.  (yoavaan  8:14)

நீங்கள்  மாம்சத்துக்கேற்றபடி  நியாயந்தீர்க்கிறீர்கள்,  நான்  ஒருவனையும்  நியாயந்தீர்க்கிறதில்லை;  (யோவான்  8:15)

neengga'l  maamsaththukkeat’rapadi  niyaayantheerkki’reerga'l,  naan  oruvanaiyum  niyaayantheerkki’rathillai;  (yoavaan  8:15)

நான்  நியாயந்தீர்த்தால்,  என்  தீர்ப்பு  சத்தியத்தின்படியிருக்கும்;  ஏனெனில்  நான்  தனித்திருக்கவில்லை,  நானும்  என்னை  அனுப்பின  பிதாவுமாக  இருக்கிறோம்.  (யோவான்  8:16)

naan  niyaayantheerththaal,  en  theerppu  saththiyaththinpadiyirukkum;  eanenil  naan  thaniththirukkavillai,  naanum  ennai  anuppina  pithaavumaaga  irukki’roam.  (yoavaan  8:16)

இரண்டுபேருடைய  சாட்சி  உண்மையென்று  உங்கள்  நியாயப்பிரமாணத்திலும்  எழுதியிருக்கிறதே.  (யோவான்  8:17)

ira'ndupearudaiya  saadchi  u'nmaiyen’ru  ungga'l  niyaayappiramaa'naththilum  ezhuthiyirukki’rathea.  (yoavaan  8:17)

நான்  என்னைக்குறித்துச்  சாட்சி  கொடுக்கிறவனாயிருக்கிறேன்,  என்னை  அனுப்பின  பிதாவும்  என்னைக்குறித்துச்  சாட்சி  கொடுக்கிறார்  என்றார்.  (யோவான்  8:18)

naan  ennaikku’riththuch  saadchi  kodukki’ravanaayirukki’rean,  ennai  anuppina  pithaavum  ennaikku’riththuch  saadchi  kodukki’raar  en’raar.  (yoavaan  8:18)

அப்பொழுது  அவர்கள்:  உம்முடைய  பிதா  எங்கே  என்றார்கள்.  இயேசு  பிரதியுத்தரமாக:  என்னையும்  அறியீர்கள்,  என்  பிதாவையும்  அறியீர்கள்;  நீங்கள்  என்னை  அறிந்தீர்களானால்  என்  பிதாவையும்  அறிவீர்கள்  என்றார்.  (யோவான்  8:19)

appozhuthu  avarga'l:  ummudaiya  pithaa  enggea  en’raarga'l.  iyeasu  pirathiyuththaramaaga:  ennaiyum  a’riyeerga'l,  en  pithaavaiyum  a’riyeerga'l;  neengga'l  ennai  a’rintheerga'laanaal  en  pithaavaiyum  a’riveerga'l  en’raar.  (yoavaan  8:19)

தேவாலயத்திலே  இயேசு  உபதேசம்பண்ணுகிறபோது,  தருமப்பெட்டியிருக்கும்  இடத்தில்  இந்த  வசனங்களைச்  சொன்னார்.  அவருடைய  வேளை  இன்னும்  வராதபடியினால்  ஒருவனும்  அவரைப்  பிடிக்கவில்லை.  (யோவான்  8:20)

theavaalayaththilea  iyeasu  ubatheasampa'n'nugi’rapoathu,  tharumappettiyirukkum  idaththil  intha  vasanangga'laich  sonnaar.  avarudaiya  vea'lai  innum  varaathapadiyinaal  oruvanum  avaraip  pidikkavillai.  (yoavaan  8:20)

இயேசு  மறுபடியும்  அவர்களை  நோக்கி:  நான்  போகிறேன்,  நீங்கள்  என்னைத்  தேடி  உங்கள்  பாவங்களிலே  சாவீர்கள்;  நான்  போகிற  இடத்துக்கு  வர  உங்களால்  கூடாது  என்றார்.  (யோவான்  8:21)

iyeasu  ma’rupadiyum  avarga'lai  noakki:  naan  poagi’rean,  neengga'l  ennaith  theadi  ungga'l  paavangga'lilea  saaveerga'l;  naan  poagi’ra  idaththukku  vara  ungga'laal  koodaathu  en’raar.  (yoavaan  8:21)

அப்பொழுது  யூதர்கள்:  நான்  போகிற  இடத்துக்கு  வர  உங்களால்  கூடாது  என்கிறானே,  தன்னைத்தான்  கொலைசெய்துகொள்வானோ  என்று  பேசிக்கொண்டார்கள்.  (யோவான்  8:22)

appozhuthu  yootharga'l:  naan  poagi’ra  idaththukku  vara  ungga'laal  koodaathu  engi’raanea,  thannaiththaan  kolaiseythuko'lvaanoa  en’ru  peasikko'ndaarga'l.  (yoavaan  8:22)

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  தாழ்விலிருந்துண்டானவர்கள்,  நான்  உயர்விலிருந்துண்டானவன்;  நீங்கள்  இந்த  உலகத்திலிருந்துண்டானவர்கள்,  நான்  இந்த  உலகத்திலிருந்துண்டானவனல்ல.  (யோவான்  8:23)

avar  avarga'lai  noakki:  neengga'l  thaazhvilirunthu'ndaanavarga'l,  naan  uyarvilirunthu'ndaanavan;  neengga'l  intha  ulagaththilirunthu'ndaanavarga'l,  naan  intha  ulagaththilirunthu'ndaanavanalla.  (yoavaan  8:23)

ஆகையால்  நீங்கள்  உங்கள்  பாவங்களில்  சாவீர்கள்  என்று  உங்களுக்குச்  சொன்னேன்;  நானே  அவர்  என்று  நீங்கள்  விசுவாசியாவிட்டால்  உங்கள்  பாவங்களிலே  சாவீர்கள்  என்றார்.  (யோவான்  8:24)

aagaiyaal  neengga'l  ungga'l  paavangga'lil  saaveerga'l  en’ru  ungga'lukkuch  sonnean;  naanea  avar  en’ru  neengga'l  visuvaasiyaavittaal  ungga'l  paavangga'lilea  saaveerga'l  en’raar.  (yoavaan  8:24)

அதற்கு  அவர்கள்:  நீர்  யார்  என்றார்கள்.  இயேசு  அவர்களை  நோக்கி:  நான்  ஆதிமுதலாய்  உங்களுக்குச்  சொல்லியிருக்கிறவர்தான்.  (யோவான்  8:25)

atha’rku  avarga'l:  neer  yaar  en’raarga'l.  iyeasu  avarga'lai  noakki:  naan  aathimuthalaay  ungga'lukkuch  solliyirukki’ravarthaan.  (yoavaan  8:25)

உங்களைக்குறித்துப்  பேசவும்  நியாயந்தீர்க்கவும்  எனக்கு  அநேக  காரியங்களுண்டு.  என்னை  அனுப்பினவர்  சத்தியமுள்ளவர்;  நான்  அவரிடத்தில்  கேட்டவைகளையே  உலகத்துக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (யோவான்  8:26)

ungga'laikku’riththup  peasavum  niyaayantheerkkavum  enakku  aneaga  kaariyangga'lu'ndu.  ennai  anuppinavar  saththiyamu'l'lavar;  naan  avaridaththil  keattavaiga'laiyea  ulagaththukkuch  sollugi’rean  en’raar.  (yoavaan  8:26)

பிதாவைக்குறித்துப்  பேசினாரென்று  அவர்கள்  அறியாதிருந்தார்கள்.  (யோவான்  8:27)

pithaavaikku’riththup  peasinaaren’ru  avarga'l  a’riyaathirunthaarga'l.  (yoavaan  8:27)

ஆதலால்  இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மனுஷகுமாரனை  உயர்த்தின  பின்பு,  நானே  அவரென்றும்,  நான்  என்  சுயமாய்  ஒன்றும்  செய்யாமல்,  என்  பிதா  எனக்குப்  போதித்தபடியே  இவைகளைச்  சொன்னேன்  என்றும்  அறிவீர்கள்.  (யோவான்  8:28)

aathalaal  iyeasu  avarga'lai  noakki:  neengga'l  manushakumaaranai  uyarththina  pinbu,  naanea  avaren’rum,  naan  en  suyamaay  on’rum  seyyaamal,  en  pithaa  enakkup  poathiththapadiyea  ivaiga'laich  sonnean  en’rum  a’riveerga'l.  (yoavaan  8:28)

என்னை  அனுப்பினவர்  என்னுடனேகூட  இருக்கிறார்,  பிதாவுக்குப்  பிரியமானவைகளை  நான்  எப்பொழுதும்  செய்கிறபடியால்  அவர்  என்னைத்  தனியே  இருக்கவிடவில்லை  என்றார்.  (யோவான்  8:29)

ennai  anuppinavar  ennudaneakooda  irukki’raar,  pithaavukkup  piriyamaanavaiga'lai  naan  eppozhuthum  seygi’rapadiyaal  avar  ennaith  thaniyea  irukkavidavillai  en’raar.  (yoavaan  8:29)

இவைகளை  அவர்  சொல்லுகையில்,  அநேகர்  அவரிடத்தில்  விசுவாசம்  வைத்தார்கள்.  (யோவான்  8:30)

ivaiga'lai  avar  sollugaiyil,  aneagar  avaridaththil  visuvaasam  vaiththaarga'l.  (yoavaan  8:30)

இயேசு  தம்மை  விசுவாசித்த  யூதர்களை  நோக்கி:  நீங்கள்  என்  உபதேசத்தில்  நிலைத்திருந்தால்  மெய்யாகவே  என்  சீஷராயிருப்பீர்கள்;  (யோவான்  8:31)

iyeasu  thammai  visuvaasiththa  yootharga'lai  noakki:  neengga'l  en  ubatheasaththil  nilaiththirunthaal  meyyaagavea  en  seesharaayiruppeerga'l;  (yoavaan  8:31)

சத்தியத்தையும்  அறிவீர்கள்,  சத்தியம்  உங்களை  விடுதலையாக்கும்  என்றார்.  (யோவான்  8:32)

saththiyaththaiyum  a’riveerga'l,  saththiyam  ungga'lai  viduthalaiyaakkum  en’raar.  (yoavaan  8:32)

அவர்கள்  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  நாங்கள்  ஆபிரகாமின்  சந்ததியாயிருக்கிறோம்,  நாங்கள்  ஒருக்காலும்  ஒருவனுக்கும்  அடிமைகளாயிருக்கவில்லை;  விடுதலையாவீர்களென்று  நீர்  எப்படிச்  சொல்லுகிறீர்  என்றார்கள்.  (யோவான்  8:33)

avarga'l  avarukkup  pirathiyuththaramaaga:  naangga'l  aabirahaamin  santhathiyaayirukki’roam,  naangga'l  orukkaalum  oruvanukkum  adimaiga'laayirukkavillai;  viduthalaiyaaveerga'len’ru  neer  eppadich  sollugi’reer  en’raarga'l.  (yoavaan  8:33)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  பாவஞ்செய்கிறவன்  எவனும்  பாவத்துக்கு  அடிமையாயிருக்கிறான்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  8:34)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  paavagnseygi’ravan  evanum  paavaththukku  adimaiyaayirukki’raan  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  8:34)

அடிமையானவன்  என்றைக்கும்  வீட்டிலே  நிலைத்திரான்;  குமாரன்  என்றைக்கும்  நிலைத்திருக்கிறார்.  (யோவான்  8:35)

adimaiyaanavan  en’raikkum  veettilea  nilaiththiraan;  kumaaran  en’raikkum  nilaiththirukki’raar.  (yoavaan  8:35)

ஆகையால்  குமாரன்  உங்களை  விடுதலையாக்கினால்  மெய்யாகவே  விடுதலையாவீர்கள்.  (யோவான்  8:36)

aagaiyaal  kumaaran  ungga'lai  viduthalaiyaakkinaal  meyyaagavea  viduthalaiyaaveerga'l.  (yoavaan  8:36)

நீங்கள்  ஆபிரகாமின்  சந்ததியாரென்று  அறிவேன்;  ஆனாலும்  உங்களுக்குள்ளே  என்  உபதேசம்  இடம்பெறாதபடியால்,  என்னைக்  கொலைசெய்யத்  தேடுகிறீர்கள்.  (யோவான்  8:37)

neengga'l  aabirahaamin  santhathiyaaren’ru  a’rivean;  aanaalum  ungga'lukku'l'lea  en  ubatheasam  idampe’raathapadiyaal,  ennaik  kolaiseyyath  theadugi’reerga'l.  (yoavaan  8:37)

நான்  என்  பிதாவினிடத்தில்  கண்டதைச்  சொல்லுகிறேன்,  நீங்களும்  உங்கள்  பிதாவினிடத்தில்  கண்டதைச்  செய்கிறீர்கள்  என்றார்.  (யோவான்  8:38)

naan  en  pithaavinidaththil  ka'ndathaich  sollugi’rean,  neengga'lum  ungga'l  pithaavinidaththil  ka'ndathaich  seygi’reerga'l  en’raar.  (yoavaan  8:38)

அதற்கு  அவர்கள்:  ஆபிரகாமே  எங்கள்  பிதா  என்றார்கள்.  இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  ஆபிரகாமின்  பிள்ளைகளாயிருந்தால்  ஆபிரகாமின்  கிரியைகளைச்  செய்வீர்களே.  (யோவான்  8:39)

atha’rku  avarga'l:  aabirahaamea  engga'l  pithaa  en’raarga'l.  iyeasu  avarga'lai  noakki:  neengga'l  aabirahaamin  pi'l'laiga'laayirunthaal  aabirahaamin  kiriyaiga'laich  seyveerga'lea.  (yoavaan  8:39)

தேவனிடத்தில்  கேட்டிருக்கிற  சத்தியத்தை  உங்களுக்குச்  சொன்ன  மனுஷனாகிய  என்னைக்  கொல்லத்  தேடுகிறீர்கள்,  ஆபிரகாம்  இப்படிச்  செய்யவில்லையே.  (யோவான்  8:40)

theavanidaththil  keattirukki’ra  saththiyaththai  ungga'lukkuch  sonna  manushanaagiya  ennaik  kollath  theadugi’reerga'l,  aabirahaam  ippadich  seyyavillaiyea.  (yoavaan  8:40)

நீங்கள்  உங்கள்  பிதாவின்  கிரியைகளைச்  செய்கிறீர்கள்  என்றார்.  அதற்கு  அவர்கள்:  நாங்கள்  வேசித்தனத்தினால்  பிறந்தவர்களல்ல;  ஒரே  பிதா  எங்களுக்குண்டு,  அவர்  தேவன்  என்றார்கள்.  (யோவான்  8:41)

neengga'l  ungga'l  pithaavin  kiriyaiga'laich  seygi’reerga'l  en’raar.  atha’rku  avarga'l:  naangga'l  veasiththanaththinaal  pi’ranthavarga'lalla;  orea  pithaa  engga'lukku'ndu,  avar  theavan  en’raarga'l.  (yoavaan  8:41)

இயேசு  அவர்களை  நோக்கி:  தேவன்  உங்கள்  பிதாவாயிருந்தால்  என்னிடத்தில்  அன்பாயிருப்பீர்கள்.  ஏனெனில்  நான்  தேவனிடத்திலிருந்து  வந்திருக்கிறேன்;  நான்  சுயமாய்  வரவில்லை,  அவரே  என்னை  அனுப்பினார்.  (யோவான்  8:42)

iyeasu  avarga'lai  noakki:  theavan  ungga'l  pithaavaayirunthaal  ennidaththil  anbaayiruppeerga'l.  eanenil  naan  theavanidaththilirunthu  vanthirukki’rean;  naan  suyamaay  varavillai,  avarea  ennai  anuppinaar.  (yoavaan  8:42)

என்  வசனத்தை  நீங்கள்  ஏன்  அறியாமலிருக்கிறீர்கள்?  என்  உபதேசத்தைக்  கேட்க  மனதில்லாதிருக்கிறதினால்  அல்லவா?  (யோவான்  8:43)

en  vasanaththai  neengga'l  ean  a’riyaamalirukki’reerga'l?  en  ubatheasaththaik  keadka  manathillaathirukki’rathinaal  allavaa?  (yoavaan  8:43)

நீங்கள்  உங்கள்  பிதாவாகிய  பிசாசானவனால்  உண்டானவர்கள்;  உங்கள்  பிதாவினுடைய  இச்சைகளின்படி  செய்ய  மனதாயிருக்கிறீர்கள்;  அவன்  ஆதிமுதற்கொண்டு  மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்;  சத்தியம்  அவனிடத்திலில்லாதபடியால்  அவன்  சத்தியத்திலே  நிலைநிற்கவில்லை;  அவன்  பொய்யனும்  பொய்க்குப்  பிதாவுமாயிருக்கிறபடியால்  அவன்  பொய்பேசும்போது  தன்  சொந்தத்தில்  எடுத்துப்  பேசுகிறான்.  (யோவான்  8:44)

neengga'l  ungga'l  pithaavaagiya  pisaasaanavanaal  u'ndaanavarga'l;  ungga'l  pithaavinudaiya  ichchaiga'linpadi  seyya  manathaayirukki’reerga'l;  avan  aathimutha’rko'ndu  manushakolaipaathaganaayirukki’raan;  saththiyam  avanidaththilillaathapadiyaal  avan  saththiyaththilea  nilaini’rkavillai;  avan  poyyanum  poykkup  pithaavumaayirukki’rapadiyaal  avan  poypeasumpoathu  than  sonthaththil  eduththup  peasugi’raan.  (yoavaan  8:44)

நான்  உங்களுக்குச்  சத்தியத்தைச்  சொல்லுகிறபடியினாலே  நீங்கள்  என்னை  விசுவாசிக்கிறதில்லை.  (யோவான்  8:45)

naan  ungga'lukkuch  saththiyaththaich  sollugi’rapadiyinaalea  neengga'l  ennai  visuvaasikki’rathillai.  (yoavaan  8:45)

என்னிடத்தில்  பாவம்  உண்டென்று  உங்களில்  யார்  என்னைக்  குற்றப்படுத்தக்கூடும்?  நான்  சத்தியத்தைச்  சொல்லியிருக்க,  நீங்கள்  ஏன்  என்னை  விசுவாசிக்கிறதில்லை.  (யோவான்  8:46)

ennidaththil  paavam  u'nden’ru  ungga'lil  yaar  ennaik  kut’rappaduththakkoodum?  naan  saththiyaththaich  solliyirukka,  neengga'l  ean  ennai  visuvaasikki’rathillai.  (yoavaan  8:46)

தேவனால்  உண்டானவன்  தேவனுடைய  வசனங்களுக்குச்  செவிகொடுக்கிறான்;  நீங்கள்  தேவனால்  உண்டாயிராதபடியினால்  செவிகொடாமலிருக்கிறீர்கள்  என்றார்.  (யோவான்  8:47)

theavanaal  u'ndaanavan  theavanudaiya  vasanangga'lukkuch  sevikodukki’raan;  neengga'l  theavanaal  u'ndaayiraathapadiyinaal  sevikodaamalirukki’reerga'l  en’raar.  (yoavaan  8:47)

அப்பொழுது  யூதர்கள்  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  உன்னைச்  சமாரியனென்றும்,  பிசாசுபிடித்தவனென்றும்  நாங்கள்  சொல்லுகிறது  சரிதானே  என்றார்கள்.  (யோவான்  8:48)

appozhuthu  yootharga'l  avarukkup  pirathiyuththaramaaga:  unnaich  samaariyanen’rum,  pisaasupidiththavanen’rum  naangga'l  sollugi’rathu  sarithaanea  en’raarga'l.  (yoavaan  8:48)

அதற்கு  இயேசு:  நான்  பிசாசு  பிடித்தவனல்ல,  நான்  என்  பிதாவைக்  கனம்பண்ணுகிறேன்,  நீங்கள்  என்னைக்  கனவீனம்பண்ணுகிறீர்கள்.  (யோவான்  8:49)

atha’rku  iyeasu:  naan  pisaasu  pidiththavanalla,  naan  en  pithaavaik  kanampa'n'nugi’rean,  neengga'l  ennaik  kanaveenampa'n'nugi’reerga'l.  (yoavaan  8:49)

நான்  எனக்கு  மகிமையைத்  தேடுகிறதில்லை;  அதைத்  தேடி  நியாயந்தீர்க்கிறவர்  ஒருவர்  இருக்கிறார்.  (யோவான்  8:50)

naan  enakku  magimaiyaith  theadugi’rathillai;  athaith  theadi  niyaayantheerkki’ravar  oruvar  irukki’raar.  (yoavaan  8:50)

ஒருவன்  என்  வார்த்தையைக்  கைக்கொண்டால்,  அவன்  என்றென்றைக்கும்  மரணத்தைக்  காண்பதில்லை  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (யோவான்  8:51)

oruvan  en  vaarththaiyaik  kaikko'ndaal,  avan  en’ren’raikkum  mara'naththaik  kaa'nbathillai  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (yoavaan  8:51)

அப்பொழுது  யூதர்கள்  அவரை  நோக்கி:  நீ  பிசாசுபிடித்தவனென்று  இப்பொழுது  அறிந்திருக்கிறோம்;  ஆபிரகாமும்  தீர்க்கதரிசிகளும்  மரித்தார்கள்.  நீயோ:  ஒருவன்  என்  வார்த்தையைக்  கைக்கொண்டால்  என்றென்றைக்கும்  மரணத்தை  ருசிபார்ப்பதில்லை  என்கிறாய்.  (யோவான்  8:52)

appozhuthu  yootharga'l  avarai  noakki:  nee  pisaasupidiththavanen’ru  ippozhuthu  a’rinthirukki’roam;  aabirahaamum  theerkkatharisiga'lum  mariththaarga'l.  neeyoa:  oruvan  en  vaarththaiyaik  kaikko'ndaal  en’ren’raikkum  mara'naththai  rusipaarppathillai  engi’raay.  (yoavaan  8:52)

எங்கள்  பிதாவாகிய  ஆபிரகாமிலும்  நீ  பெரியவனோ?  அவர்  மரித்தார்,  தீர்க்கதரிசிகளும்  மரித்தார்கள்;  உன்னை  நீ  எப்படிப்பட்டவனாக்குகிறாய்  என்றார்கள்.  (யோவான்  8:53)

engga'l  pithaavaagiya  aabirahaamilum  nee  periyavanoa?  avar  mariththaar,  theerkkatharisiga'lum  mariththaarga'l;  unnai  nee  eppadippattavanaakkugi’raay  en’raarga'l.  (yoavaan  8:53)

இயேசு  பிரதியுத்தரமாக:  என்னை  நானே  மகிமைப்படுத்தினால்  அந்த  மகிமை  வீணாயிருக்கும்,  என்  பிதா  என்னை  மகிமைப்படுத்துகிறவர்,  அவரை  உங்கள்  தேவனென்று  நீங்கள்  சொல்லுகிறீர்கள்.  (யோவான்  8:54)

iyeasu  pirathiyuththaramaaga:  ennai  naanea  magimaippaduththinaal  antha  magimai  vee'naayirukkum,  en  pithaa  ennai  magimaippaduththugi’ravar,  avarai  ungga'l  theavanen’ru  neengga'l  sollugi’reerga'l.  (yoavaan  8:54)

ஆயினும்  நீங்கள்  அவரை  அறியவில்லை,  நான்  அவரை  அறிந்திருக்கிறேன்;  அவரை  அறியேன்  என்று  சொல்வேனாகில்  உங்களைப்போல  நானும்  பொய்யனாயிருப்பேன்;  அவரை  நான்  அறிந்து,  அவருடைய  வார்த்தையைக்  கைக்கொண்டிருக்கிறேன்.  (யோவான்  8:55)

aayinum  neengga'l  avarai  a’riyavillai,  naan  avarai  a’rinthirukki’rean;  avarai  a’riyean  en’ru  solveanaagil  ungga'laippoala  naanum  poyyanaayiruppean;  avarai  naan  a’rinthu,  avarudaiya  vaarththaiyaik  kaikko'ndirukki’rean.  (yoavaan  8:55)

உங்கள்  பிதாவாகிய  ஆபிரகாம்  என்னுடைய  நாளைக்  காண  ஆசையாயிருந்தான்;  கண்டு  களிகூர்ந்தான்  என்றார்.  (யோவான்  8:56)

ungga'l  pithaavaagiya  aabirahaam  ennudaiya  naa'laik  kaa'na  aasaiyaayirunthaan;  ka'ndu  ka'likoornthaan  en’raar.  (yoavaan  8:56)

அப்பொழுது  யூதர்கள்  அவரை  நோக்கி:  உனக்கு  இன்னும்  ஐம்பது  வயதாகவில்லையே,  நீ  ஆபிரகாமைக்  கண்டாயோ  என்றார்கள்.  (யோவான்  8:57)

appozhuthu  yootharga'l  avarai  noakki:  unakku  innum  aimbathu  vayathaagavillaiyea,  nee  aabirahaamaik  ka'ndaayoa  en’raarga'l.  (yoavaan  8:57)

அதற்கு  இயேசு:  ஆபிரகாம்  உண்டாகிறதற்கு  முன்னமே  நான்  இருக்கிறேன்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (யோவான்  8:58)

atha’rku  iyeasu:  aabirahaam  u'ndaagi’ratha’rku  munnamea  naan  irukki’rean  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean  en’raar.  (yoavaan  8:58)

அப்பொழுது  அவர்மேல்  எறியும்படி  கல்லுகளை  எடுத்துக்கொண்டார்கள்.  இயேசு  மறைந்து,  அவர்கள்  நடுவே  கடந்து,  தேவாலயத்தை  விட்டுப்போனார்.  (யோவான்  8:59)

appozhuthu  avarmeal  e’riyumpadi  kalluga'lai  eduththukko'ndaarga'l.  iyeasu  ma’rainthu,  avarga'l  naduvea  kadanthu,  theavaalayaththai  vittuppoanaar.  (yoavaan  8:59)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!