Wednesday, May 11, 2016

Yoavaan 6 | யோவான் 6 | John 6

இவைகளுக்குப்பின்பு  இயேசு  திபேரியாக்கடல்  என்னப்பட்ட  கலிலேயாக்  கடலின்  அக்கரைக்குப்  போனார்.  (யோவான்  6:1)

ivaiga'lukkuppinbu  iyeasu  thibeariyaakkadal  ennappatta  kalileayaak  kadalin  akkaraikkup  poanaar.  (yoavaan  6:1)

அவர்  வியாதிக்காரரிடத்தில்  செய்த  அற்புதங்களைத்  திரளான  ஜனங்கள்  கண்டபடியால்  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (யோவான்  6:2)

avar  viyaathikkaararidaththil  seytha  a’rputhangga'laith  thira'laana  janangga'l  ka'ndapadiyaal  avarukkup  pinsen’raarga'l.  (yoavaan  6:2)

இயேசு  மலையின்மேல்  ஏறி,  அங்கே  தம்முடைய  சீஷருடனேகூட  உட்கார்ந்தார்.  (யோவான்  6:3)

iyeasu  malaiyinmeal  ea’ri,  anggea  thammudaiya  seesharudaneakooda  udkaarnthaar.  (yoavaan  6:3)

அப்பொழுது  யூதருடைய  பண்டிகையாகிய  பஸ்கா  சமீபமாயிருந்தது.  (யோவான்  6:4)

appozhuthu  yootharudaiya  pa'ndigaiyaagiya  paskaa  sameebamaayirunthathu.  (yoavaan  6:4)

இயேசு  தம்முடைய  கண்களை  ஏறெடுத்து,  திரளான  ஜனங்கள்  தம்மிடத்தில்  வருகிறதைக்  கண்டு,  பிலிப்புவை  நோக்கி:  இவர்கள்  சாப்பிடத்தக்கதாக  அப்பங்களை  எங்கே  கொள்ளலாம்  என்று  கேட்டார்.  (யோவான்  6:5)

iyeasu  thammudaiya  ka'nga'lai  ea'reduththu,  thira'laana  janangga'l  thammidaththil  varugi’rathaik  ka'ndu,  pilippuvai  noakki:  ivarga'l  saappidaththakkathaaga  appangga'lai  enggea  ko'l'lalaam  en’ru  keattaar.  (yoavaan  6:5)

தாம்  செய்யப்போகிறதை  அறிந்திருந்தும்,  அவனைச்  சோதிக்கும்படி  இப்படிக்  கேட்டார்.  (யோவான்  6:6)

thaam  seyyappoagi’rathai  a’rinthirunthum,  avanaich  soathikkumpadi  ippadik  keattaar.  (yoavaan  6:6)

பிலிப்பு  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  இவர்களில்  ஒவ்வொருவனும்  கொஞ்சங்  கொஞ்சம்  எடுத்துக்கொண்டாலும்,  இருநூறு  பணத்து  அப்பங்களும்  இவர்களுக்குப்  போதாதே  என்றான்.  (யோவான்  6:7)

pilippu  avarukkup  pirathiyuththaramaaga:  ivarga'lil  ovvoruvanum  kognchang  kogncham  eduththukko'ndaalum,  irunoo’ru  pa'naththu  appangga'lum  ivarga'lukkup  poathaathea  en’raan.  (yoavaan  6:7)

அப்பொழுது  அவருடைய  சீஷரிலொருவனும்,  சீமோன்  பேதுருவின்  சகோதரனுமாகிய  அந்திரேயா  அவரை  நோக்கி:  (யோவான்  6:8)

appozhuthu  avarudaiya  seeshariloruvanum,  seemoan  peathuruvin  sagoatharanumaagiya  anthireayaa  avarai  noakki:  (yoavaan  6:8)

இங்கே  ஒரு  பையன்  இருக்கிறான்,  அவன்  கையில்  ஐந்து  வாற்கோதுமை  அப்பங்களும்  இரண்டு  மீன்களும்  உண்டு,  ஆனாலும்  அவைகள்  இத்தனை  ஜனங்களுக்கு  எம்மாத்திரம்  என்றான்.  (யோவான்  6:9)

inggea  oru  paiyan  irukki’raan,  avan  kaiyil  ainthu  vaa’rkoathumai  appangga'lum  ira'ndu  meenga'lum  u'ndu,  aanaalum  avaiga'l  iththanai  janangga'lukku  emmaaththiram  en’raan.  (yoavaan  6:9)

இயேசு:  ஜனங்களை  உட்காரவையுங்கள்  என்றார்.  அந்த  இடம்  மிகுந்த  புல்லுள்ளதாயிருந்தது.  பந்தியிருந்த  புருஷர்கள்  ஏறக்குறைய  ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.  (யோவான்  6:10)

iyeasu:  janangga'lai  udkaaravaiyungga'l  en’raar.  antha  idam  miguntha  pullu'l'lathaayirunthathu.  panthiyiruntha  purusharga'l  ea’rakku’raiya  aiyaayirampearaayirunthaarga'l.  (yoavaan  6:10)

இயேசு  அந்த  அப்பங்களை  எடுத்து,  ஸ்தோத்திரம்பண்ணி,  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  சீஷர்கள்  பந்தியிருந்தவர்களுக்குக்  கொடுத்தார்கள்;  அப்படியே  மீன்களையும்  அவர்  எடுத்து  அவர்களுக்கு  வேண்டியமட்டும்  கொடுத்தார்.  (யோவான்  6:11)

iyeasu  antha  appangga'lai  eduththu,  sthoaththirampa'n'ni,  seesharga'lidaththil  koduththaar;  seesharga'l  panthiyirunthavarga'lukkuk  koduththaarga'l;  appadiyea  meenga'laiyum  avar  eduththu  avarga'lukku  vea'ndiyamattum  koduththaar.  (yoavaan  6:11)

அவர்கள்  திருப்தியடைந்தபின்பு,  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஒன்றும்  சேதமாய்ப்  போகாதபடிக்கு  மீதியான  துணிக்கைகளைச்  சேர்த்துவையுங்கள்  என்றார்.  (யோவான்  6:12)

avarga'l  thirupthiyadainthapinbu,  avar  thammudaiya  seesharga'lai  noakki:  on’rum  seathamaayp  poagaathapadikku  meethiyaana  thu'nikkaiga'laich  searththuvaiyungga'l  en’raar.  (yoavaan  6:12)

அந்தப்படியே  அவர்கள்  சேர்த்து,  வாற்கோதுமை  அப்பங்கள்  ஐந்தில்  அவர்கள்  சாப்பிட்டு  மீதியான  துணிக்கைகளினாலே  பன்னிரண்டு  கூடைகளை  நிரப்பினார்கள்.  (யோவான்  6:13)

anthappadiyea  avarga'l  searththu,  vaa’rkoathumai  appangga'l  ainthil  avarga'l  saappittu  meethiyaana  thu'nikkaiga'linaalea  pannira'ndu  koodaiga'lai  nirappinaarga'l.  (yoavaan  6:13)

இயேசு  செய்த  அற்புதத்தை  அந்த  மனுஷர்  கண்டு:  மெய்யாகவே  இவர்  உலகத்தில்  வருகிறவரான  தீர்க்கதரிசி  என்றார்கள்.  (யோவான்  6:14)

iyeasu  seytha  a’rputhaththai  antha  manushar  ka'ndu:  meyyaagavea  ivar  ulagaththil  varugi’ravaraana  theerkkatharisi  en’raarga'l.  (yoavaan  6:14)

ஆதலால்  அவர்கள்  வந்து,  தம்மை  ராஜாவாக்கும்படிப்  பிடித்துக்கொண்டுபோக  மனதாயிருக்கிறார்களென்று  இயேசு  அறிந்து,  மறுபடியும்  விலகி,  தனியே  மலையின்மேல்  ஏறினார்.  (யோவான்  6:15)

aathalaal  avarga'l  vanthu,  thammai  raajaavaakkumpadip  pidiththukko'ndupoaga  manathaayirukki’raarga'len’ru  iyeasu  a’rinthu,  ma’rupadiyum  vilagi,  thaniyea  malaiyinmeal  ea’rinaar.  (yoavaan  6:15)

சாயங்காலமானபோது  அவருடைய  சீஷர்கள்  கடற்கரைக்குப்  போய்,  (யோவான்  6:16)

saayanggaalamaanapoathu  avarudaiya  seesharga'l  kada’rkaraikkup  poay,  (yoavaan  6:16)

படவில்  ஏறி,  கடலின்  அக்கரையிலுள்ள  கப்பர்நகூமுக்கு  நேராய்ப்போனார்கள்;  அப்பொழுது  இருட்டாயிருந்தது,  இயேசுவும்  அவர்களிடத்தில்  வராதிருந்தார்.  (யோவான்  6:17)

padavil  ea’ri,  kadalin  akkaraiyilu'l'la  kapparnahoomukku  nearaayppoanaarga'l;  appozhuthu  iruttaayirunthathu,  iyeasuvum  avarga'lidaththil  varaathirunthaar.  (yoavaan  6:17)

பெருங்காற்று  அடித்தபடியினாலே  கடல்  கொந்தளித்தது.  (யோவான்  6:18)

perungkaat’ru  adiththapadiyinaalea  kadal  kontha'liththathu.  (yoavaan  6:18)

அவர்கள்  ஏறக்குறைய  மூன்று  நாலு  மைல்தூரம்  தண்டுவலித்துப்  போனபொழுது,  இயேசு  கடலின்மேல்  நடந்து,  படவுக்குச்  சமீபமாய்  வருகிறதைக்  கண்டு  பயந்தார்கள்.  (யோவான்  6:19)

avarga'l  ea’rakku’raiya  moon’ru  naalu  mailthooram  tha'nduvaliththup  poanapozhuthu,  iyeasu  kadalinmeal  nadanthu,  padavukkuch  sameebamaay  varugi’rathaik  ka'ndu  bayanthaarga'l.  (yoavaan  6:19)

அவர்களை  அவர்  நோக்கி:  நான்தான்,  பயப்படாதிருங்கள்  என்றார்.  (யோவான்  6:20)

avarga'lai  avar  noakki:  naanthaan,  bayappadaathirungga'l  en’raar.  (yoavaan  6:20)

அப்பொழுது  அவரைப்  படவில்  ஏற்றிக்கொள்ள  மனதாயிருந்தார்கள்;  உடனே  படவு  அவர்கள்  போகிற  கரையைப்  பிடித்தது.  (யோவான்  6:21)

appozhuthu  avaraip  padavil  eat’rikko'l'la  manathaayirunthaarga'l;  udanea  padavu  avarga'l  poagi’ra  karaiyaip  pidiththathu.  (yoavaan  6:21)

மறுநாளில்  கடலின்  அக்கரையிலே  நின்ற  ஜனங்கள்  அவருடைய  சீஷர்  ஏறின  அந்த  ஒரே  படவுதவிர  அங்கே  வேறொரு  படவும்  இருந்ததில்லையென்றும்,  இயேசு  தம்முடைய  சீஷருடனேகூடப்  படவில்  ஏறாமல்  அவருடைய  சீஷர்மாத்திரம்  போனார்களென்றும்  அறிந்தார்கள்.  (யோவான்  6:22)

ma’runaa'lil  kadalin  akkaraiyilea  nin’ra  janangga'l  avarudaiya  seeshar  ea’rina  antha  orea  padavuthavira  anggea  vea’roru  padavum  irunthathillaiyen’rum,  iyeasu  thammudaiya  seesharudaneakoodap  padavil  ea’raamal  avarudaiya  seesharmaaththiram  poanaarga'len’rum  a’rinthaarga'l.  (yoavaan  6:22)

கர்த்தர்  ஸ்தோத்திரஞ்செய்தபின்பு  அவர்கள்  அப்பம்  சாப்பிட்ட  இடத்துக்குச்  சமீபமாய்த்  திபேரியாவிலிருந்து  வேறே  படவுகள்  வந்தது.  (யோவான்  6:23)

karththar  sthoaththiragnseythapinbu  avarga'l  appam  saappitta  idaththukkuch  sameebamaayth  thibeariyaavilirunthu  vea’rea  padavuga'l  vanthathu.  (yoavaan  6:23)

அப்பொழுது  இயேசுவும்  அவருடைய  சீஷரும்  அங்கே  இல்லாததை  ஜனங்கள்  கண்டு,  உடனே  அந்தப்  படவுகளில்  ஏறி,  இயேசுவைத்  தேடிக்கொண்டு,  கப்பர்நகூமுக்கு  வந்தார்கள்.  (யோவான்  6:24)

appozhuthu  iyeasuvum  avarudaiya  seesharum  anggea  illaathathai  janangga'l  ka'ndu,  udanea  anthap  padavuga'lil  ea’ri,  iyeasuvaith  theadikko'ndu,  kapparnahoomukku  vanthaarga'l.  (yoavaan  6:24)

கடலின்  அக்கரையிலே  அவர்கள்  அவரைக்  கண்டபோது:  ரபீ,  நீர்  எப்பொழுது  இவ்விடம்  வந்தீர்  என்று  கேட்டார்கள்.  (யோவான்  6:25)

kadalin  akkaraiyilea  avarga'l  avaraik  ka'ndapoathu:  rabee,  neer  eppozhuthu  ivvidam  vantheer  en’ru  keattaarga'l.  (yoavaan  6:25)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  அற்புதங்களைக்  கண்டதினால்  அல்ல,  நீங்கள்  அப்பம்  புசித்துத்  திருப்தியானதினாலேயே  என்னைத்  தேடுகிறீர்கள்  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  6:26)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  neengga'l  a’rputhangga'laik  ka'ndathinaal  alla,  neengga'l  appam  pusiththuth  thirupthiyaanathinaaleayea  ennaith  theadugi’reerga'l  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  6:26)

அழிந்துபோகிற  போஜனத்திற்காக  அல்ல,  நித்தியஜீவன்வரைக்கும்  நிலைநிற்கிற  போஜனத்திற்காகவே  கிரியை  நடப்பியுங்கள்;  அதை  மனுஷகுமாரன்  உங்களுக்குக்  கொடுப்பார்;  அவரைப்  பிதாவாகிய  தேவன்  முத்திரித்திருக்கிறார்  என்றார்.  (யோவான்  6:27)

azhinthupoagi’ra  poajanaththi’rkaaga  alla,  niththiyajeevanvaraikkum  nilaini’rki’ra  poajanaththi’rkaagavea  kiriyai  nadappiyungga'l;  athai  manushakumaaran  ungga'lukkuk  koduppaar;  avaraip  pithaavaagiya  theavan  muththiriththirukki’raar  en’raar.  (yoavaan  6:27)

அப்பொழுது  அவர்கள்  அவரை  நோக்கி:  தேவனுக்கேற்ற  கிரியைகளை  நடப்பிக்கும்படி  நாங்கள்  என்ன  செய்யவேண்டும்  என்றார்கள்.  (யோவான்  6:28)

appozhuthu  avarga'l  avarai  noakki:  theavanukkeat’ra  kiriyaiga'lai  nadappikkumpadi  naangga'l  enna  seyyavea'ndum  en’raarga'l.  (yoavaan  6:28)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  அவர்  அனுப்பினவரை  நீங்கள்  விசுவாசிப்பதே  தேவனுக்கேற்ற  கிரியையாயிருக்கிறது  என்றார்.  (யோவான்  6:29)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  avar  anuppinavarai  neengga'l  visuvaasippathea  theavanukkeat’ra  kiriyaiyaayirukki’rathu  en’raar.  (yoavaan  6:29)

அதற்கு  அவர்கள்:  அப்படியானால்  உம்மை  விசுவாசிக்கும்படிக்கு  நாங்கள்  காணத்தக்கதாக  நீர்  என்ன  அடையாளத்தைக்  காண்பிக்கிறீர்?  என்னத்தை  நடப்பிக்கிறீர்?  (யோவான்  6:30)

atha’rku  avarga'l:  appadiyaanaal  ummai  visuvaasikkumpadikku  naangga'l  kaa'naththakkathaaga  neer  enna  adaiyaa'laththaik  kaa'nbikki’reer?  ennaththai  nadappikki’reer?  (yoavaan  6:30)

வானத்திலிருந்து  அவர்களுக்கு  அப்பத்தைப்  புசிக்கக்கொடுத்தார்  என்று  எழுதியிருக்கிறபடி,  நம்முடைய  பிதாக்கள்  வனாந்தரத்தில்  மன்னாவைப்  புசித்தார்களே  என்றார்கள்.  (யோவான்  6:31)

vaanaththilirunthu  avarga'lukku  appaththaip  pusikkakkoduththaar  en’ru  ezhuthiyirukki’rapadi,  nammudaiya  pithaakka'l  vanaantharaththil  mannaavaip  pusiththaarga'lea  en’raarga'l.  (yoavaan  6:31)

இயேசு  அவர்களை  நோக்கி:  வானத்திலிருந்து  வந்த  அப்பத்தை  மோசே  உங்களுக்குக்  கொடுக்கவில்லை;  என்  பிதாவோ  வானத்திலிருந்து  வந்த  மெய்யான  அப்பத்தை  உங்களுக்குக்  கொடுக்கிறார்  என்று,  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  6:32)

iyeasu  avarga'lai  noakki:  vaanaththilirunthu  vantha  appaththai  moasea  ungga'lukkuk  kodukkavillai;  en  pithaavoa  vaanaththilirunthu  vantha  meyyaana  appaththai  ungga'lukkuk  kodukki’raar  en’ru,  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  6:32)

வானத்திலிருந்திறங்கி,  உலகத்துக்கு  ஜீவனைக்  கொடுக்கிற  அப்பமே  தேவன்  அருளிய  அப்பம்  என்றார்.  (யோவான்  6:33)

vaanaththilirunthi’ranggi,  ulagaththukku  jeevanaik  kodukki’ra  appamea  theavan  aru'liya  appam  en’raar.  (yoavaan  6:33)

அப்பொழுது  அவர்கள்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இந்த  அப்பத்தை  எப்பொழுதும்  எங்களுக்குத்  தரவேண்டும்  என்றார்கள்.  (யோவான்  6:34)

appozhuthu  avarga'l  avarai  noakki:  aa'ndavarea,  intha  appaththai  eppozhuthum  engga'lukkuth  tharavea'ndum  en’raarga'l.  (yoavaan  6:34)

இயேசு  அவர்களை  நோக்கி:  ஜீவ  அப்பம்  நானே,  என்னிடத்தில்  வருகிறவன்  ஒருக்காலும்  பசியடையான்,  என்னிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவன்  ஒருக்காலும்  தாகமடையான்.  (யோவான்  6:35)

iyeasu  avarga'lai  noakki:  jeeva  appam  naanea,  ennidaththil  varugi’ravan  orukkaalum  pasiyadaiyaan,  ennidaththil  visuvaasamaayirukki’ravan  orukkaalum  thaagamadaiyaan.  (yoavaan  6:35)

நீங்கள்  என்னைக்  கண்டிருந்தும்  விசுவாசியாமலிருக்கிறீர்கள்  என்று  உங்களுக்குச்  சொன்னேன்.  (யோவான்  6:36)

neengga'l  ennaik  ka'ndirunthum  visuvaasiyaamalirukki’reerga'l  en’ru  ungga'lukkuch  sonnean.  (yoavaan  6:36)

பிதாவானவர்  எனக்குக்  கொடுக்கிற  யாவும்  என்னிடத்தில்  வரும்;  என்னிடத்தில்  வருகிறவனை  நான்  புறம்பே  தள்ளுவதில்லை.  (யோவான்  6:37)

pithaavaanavar  enakkuk  kodukki’ra  yaavum  ennidaththil  varum;  ennidaththil  varugi’ravanai  naan  pu’rambea  tha'l'luvathillai.  (yoavaan  6:37)

என்  சித்தத்தின்படியல்ல,  என்னை  அனுப்பினவருடைய  சித்தத்தின்படி  செய்யவே  நான்  வானத்திலிருந்திறங்கி  வந்தேன்.  (யோவான்  6:38)

en  siththaththinpadiyalla,  ennai  anuppinavarudaiya  siththaththinpadi  seyyavea  naan  vaanaththilirunthi’ranggi  vanthean.  (yoavaan  6:38)

அவர்  எனக்குத்  தந்தவைகளில்  ஒன்றையும்  நான்  இழந்துபோகாமல்,  கடைசி  நாளில்  அவைகளை  எழுப்புவதே  என்னை  அனுப்பின  பிதாவின்  சித்தமாயிருக்கிறது.  (யோவான்  6:39)

avar  enakkuth  thanthavaiga'lil  on’raiyum  naan  izhanthupoagaamal,  kadaisi  naa'lil  avaiga'lai  ezhuppuvathea  ennai  anuppina  pithaavin  siththamaayirukki’rathu.  (yoavaan  6:39)

குமாரனைக்  கண்டு,  அவரிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவன்  எவனோ,  அவன்  நித்தியஜீவனை  அடைவதும்,  நான்  அவனைக்  கடைசிநாளில்  எழுப்புவதும்,  என்னை  அனுப்பினவருடைய  சித்தமாயிருக்கிறது  என்றார்.  (யோவான்  6:40)

kumaaranaik  ka'ndu,  avaridaththil  visuvaasamaayirukki’ravan  evanoa,  avan  niththiyajeevanai  adaivathum,  naan  avanaik  kadaisinaa'lil  ezhuppuvathum,  ennai  anuppinavarudaiya  siththamaayirukki’rathu  en’raar.  (yoavaan  6:40)

நான்  வானத்திலிருந்து  வந்த  அப்பம்  என்று  அவர்  சொன்னதினிமித்தம்  யூதர்கள்  அவரைக்குறித்து  முறுமுறுத்து:  (யோவான்  6:41)

naan  vaanaththilirunthu  vantha  appam  en’ru  avar  sonnathinimiththam  yootharga'l  avaraikku’riththu  mu’rumu’ruththu:  (yoavaan  6:41)

இவன்  யோசேப்பின்  குமாரனாகிய  இயேசு  அல்லவா,  இவனுடைய  தகப்பனையும்  தாயையும்  அறிந்திருக்கிறோமே;  அப்படியிருக்க,  நான்  வானத்திலிருந்திறங்கி  வந்தேன்  என்று  இவன்  எப்படிச்  சொல்லுகிறான்  என்றார்கள்.  (யோவான்  6:42)

ivan  yoaseappin  kumaaranaagiya  iyeasu  allavaa,  ivanudaiya  thagappanaiyum  thaayaiyum  a’rinthirukki’roamea;  appadiyirukka,  naan  vaanaththilirunthi’ranggi  vanthean  en’ru  ivan  eppadich  sollugi’raan  en’raarga'l.  (yoavaan  6:42)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  உங்களுக்குள்ளே  முறுமுறுக்கவேண்டாம்.  (யோவான்  6:43)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  ungga'lukku'l'lea  mu’rumu’rukkavea'ndaam.  (yoavaan  6:43)

என்னை  அனுப்பின  பிதா  ஒருவனை  இழுத்துக்கொள்ளாவிட்டால்  அவன்  என்னிடத்தில்  வரமாட்டான்;  கடைசிநாளில்  நான்  அவனை  எழுப்புவேன்.  (யோவான்  6:44)

ennai  anuppina  pithaa  oruvanai  izhuththukko'l'laavittaal  avan  ennidaththil  varamaattaan;  kadaisinaa'lil  naan  avanai  ezhuppuvean.  (yoavaan  6:44)

எல்லாரும்  தேவனாலே  போதிக்கப்பட்டிருப்பார்கள்  என்று  தீர்க்கதரிசிகளின்  ஆகமத்தில்  எழுதியிருக்கிறதே;  ஆகையால்  பிதாவினிடத்தில்  கேட்டுக்  கற்றுக்கொள்ளுகிறவன்  எவனும்  என்னிடத்தில்  வருகிறான்.  (யோவான்  6:45)

ellaarum  theavanaalea  poathikkappattiruppaarga'l  en’ru  theerkkatharisiga'lin  aagamaththil  ezhuthiyirukki’rathea;  aagaiyaal  pithaavinidaththil  keattuk  kat’rukko'l'lugi’ravan  evanum  ennidaththil  varugi’raan.  (yoavaan  6:45)

தேவனிடத்தினின்று  வந்தவரே  தவிர  வேறொருவரும்  பிதாவைக்  கண்டதில்லை,  இவரே  பிதாவைக்  கண்டவர்.  (யோவான்  6:46)

theavanidaththinin’ru  vanthavarea  thavira  vea’roruvarum  pithaavaik  ka'ndathillai,  ivarea  pithaavaik  ka'ndavar.  (yoavaan  6:46)

என்னிடத்தில்  விசுவாசமாயிருக்கிறவனுக்கு  நித்தியஜீவன்  உண்டென்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  6:47)

ennidaththil  visuvaasamaayirukki’ravanukku  niththiyajeevan  u'nden’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  6:47)

ஜீவ  அப்பம்  நானே.  (யோவான்  6:48)

jeeva  appam  naanea.  (yoavaan  6:48)

உங்கள்  பிதாக்கள்  வனாந்தரத்திலே  மன்னாவைப்  புசித்திருந்தும்  மரித்தார்கள்.  (யோவான்  6:49)

ungga'l  pithaakka'l  vanaantharaththilea  mannaavaip  pusiththirunthum  mariththaarga'l.  (yoavaan  6:49)

இதிலே  புசிக்கிறவன்  மரியாமலிருக்கும்படி  வானத்திலிருந்திறங்கின  அப்பம்  இதுவே.  (யோவான்  6:50)

ithilea  pusikki’ravan  mariyaamalirukkumpadi  vaanaththilirunthi’ranggina  appam  ithuvea.  (yoavaan  6:50)

நானே  வானத்திலிருந்திறங்கின  ஜீவ  அப்பம்;  இந்த  அப்பத்தைப்  புசிக்கிறவன்  என்றென்றைக்கும்  பிழைப்பான்;  நான்  கொடுக்கும்  அப்பம்  உலகத்தின்  ஜீவனுக்காக  நான்  கொடுக்கும்  என்  மாம்சமே  என்றார்.  (யோவான்  6:51)

naanea  vaanaththilirunthi’ranggina  jeeva  appam;  intha  appaththaip  pusikki’ravan  en’ren’raikkum  pizhaippaan;  naan  kodukkum  appam  ulagaththin  jeevanukkaaga  naan  kodukkum  en  maamsamea  en’raar.  (yoavaan  6:51)

அப்பொழுது  யூதர்கள்:  இவன்  தன்னுடைய  மாம்சத்தை  எப்படி  நமக்குப்  புசிக்கக்  கொடுப்பான்  என்று  தங்களுக்குள்ளே  வாக்குவாதம்பண்ணினார்கள்.  (யோவான்  6:52)

appozhuthu  yootharga'l:  ivan  thannudaiya  maamsaththai  eppadi  namakkup  pusikkak  koduppaan  en’ru  thangga'lukku'l'lea  vaakkuvaathampa'n'ninaarga'l.  (yoavaan  6:52)

அதற்கு  இயேசு  அவர்களை  நோக்கி:  நீங்கள்  மனுஷகுமாரனுடைய  மாம்சத்தைப்  புசியாமலும்,  அவருடைய  இரத்தத்தைப்  பானம்பண்ணாமலும்  இருந்தால்  உங்களுக்குள்ளே  ஜீவனில்லை  என்று  மெய்யாகவே  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (யோவான்  6:53)

atha’rku  iyeasu  avarga'lai  noakki:  neengga'l  manushakumaaranudaiya  maamsaththaip  pusiyaamalum,  avarudaiya  iraththaththaip  baanampa'n'naamalum  irunthaal  ungga'lukku'l'lea  jeevanillai  en’ru  meyyaagavea  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (yoavaan  6:53)

என்  மாம்சத்தைப்  புசித்து,  என்  இரத்தத்தைப்  பானம்பண்ணுகிறவனுக்கு  நித்தியஜீவன்  உண்டு;  நான்  அவனைக்  கடைசிநாளில்  எழுப்புவேன்.  (யோவான்  6:54)

en  maamsaththaip  pusiththu,  en  iraththaththaip  baanampa'n'nugi’ravanukku  niththiyajeevan  u'ndu;  naan  avanaik  kadaisinaa'lil  ezhuppuvean.  (yoavaan  6:54)

என்  மாம்சம்  மெய்யான  போஜனமாயிருக்கிறது,  என்  இரத்தம்  மெய்யான  பானமாயிருக்கிறது.  (யோவான்  6:55)

en  maamsam  meyyaana  poajanamaayirukki’rathu,  en  iraththam  meyyaana  baanamaayirukki’rathu.  (yoavaan  6:55)

என்  மாம்சத்தைப்  புசித்து,  என்  இரத்தத்தைப்  பானம்பண்ணுகிறவன்  என்னிலே  நிலைத்திருக்கிறான்,  நானும்  அவனிலே  நிலைத்திருக்கிறேன்.  (யோவான்  6:56)

en  maamsaththaip  pusiththu,  en  iraththaththaip  baanampa'n'nugi’ravan  ennilea  nilaiththirukki’raan,  naanum  avanilea  nilaiththirukki’rean.  (yoavaan  6:56)

ஜீவனுள்ள  பிதா  என்னை  அனுப்பினதுபோலவும்,  நான்  பிதாவினால்  பிழைத்திருக்கிறதுபோலவும்,  என்னைப்  புசிக்கிறவனும்  என்னாலே  பிழைப்பான்.  (யோவான்  6:57)

jeevanu'l'la  pithaa  ennai  anuppinathupoalavum,  naan  pithaavinaal  pizhaiththirukki’rathupoalavum,  ennaip  pusikki’ravanum  ennaalea  pizhaippaan.  (yoavaan  6:57)

வானத்திலிருந்திறங்கின  அப்பம்  இதுவே;  இது  உங்கள்  பிதாக்கள்  புசித்த  மன்னாவைப்போலல்ல,  அவர்கள்  மரித்தார்களே;  இந்த  அப்பத்தைப்  புசிக்கிறவனோ  என்றென்றைக்கும்  பிழைப்பான்  என்றார்.  (யோவான்  6:58)

vaanaththilirunthi’ranggina  appam  ithuvea;  ithu  ungga'l  pithaakka'l  pusiththa  mannaavaippoalalla,  avarga'l  mariththaarga'lea;  intha  appaththaip  pusikki’ravanoa  en’ren’raikkum  pizhaippaan  en’raar.  (yoavaan  6:58)

கப்பர்நகூமிலுள்ள  ஜெபஆலயத்திலே  அவர்  உபதேசிக்கையில்  இவைகளைச்  சொன்னார்.  (யோவான்  6:59)

kapparnahoomilu'l'la  jebaaalayaththilea  avar  ubatheasikkaiyil  ivaiga'laich  sonnaar.  (yoavaan  6:59)

அவருடைய  சீஷரில்  அநேகர்  இவைகளைக்  கேட்டபொழுது,  இது  கடினமான  உபதேசம்,  யார்  இதைக்  கேட்பார்கள்  என்றார்கள்.  (யோவான்  6:60)

avarudaiya  seesharil  aneagar  ivaiga'laik  keattapozhuthu,  ithu  kadinamaana  ubatheasam,  yaar  ithaik  keadpaarga'l  en’raarga'l.  (yoavaan  6:60)

சீஷர்கள்  அதைக்குறித்து  முறுமுறுக்கிறார்களென்று  இயேசு  தமக்குள்ளே  அறிந்து,  அவர்களை  நோக்கி:  இது  உங்களுக்கு  இடறலாயிருக்கிறதோ?  (யோவான்  6:61)

seesharga'l  athaikku’riththu  mu’rumu’rukki’raarga'len’ru  iyeasu  thamakku'l'lea  a’rinthu,  avarga'lai  noakki:  ithu  ungga'lukku  ida’ralaayirukki’rathoa?  (yoavaan  6:61)

மனுஷகுமாரன்  தாம்  முன்னிருந்த  இடத்திற்கு  ஏறிப்போகிறதை  நீங்கள்  காண்பீர்களானால்  எப்படியிருக்கும்?  (யோவான்  6:62)

manushakumaaran  thaam  munniruntha  idaththi’rku  ea’rippoagi’rathai  neengga'l  kaa'nbeerga'laanaal  eppadiyirukkum?  (yoavaan  6:62)

ஆவியே  உயிர்ப்பிக்கிறது,  மாம்சமானது  ஒன்றுக்கும்  உதவாது;  நான்  உங்களுக்குச்  சொல்லுகிற  வசனங்கள்  ஆவியாயும்  ஜீவனாயும்  இருக்கிறது.  (யோவான்  6:63)

aaviyea  uyirppikki’rathu,  maamsamaanathu  on’rukkum  uthavaathu;  naan  ungga'lukkuch  sollugi’ra  vasanangga'l  aaviyaayum  jeevanaayum  irukki’rathu.  (yoavaan  6:63)

ஆகிலும்  உங்களில்  விசுவாசியாதவர்கள்  சிலர்  உண்டு  என்றார்;  விசுவாசியாதவர்கள்  இன்னாரென்றும்,  தம்மைக்  காட்டிக்கொடுப்பவன்  இன்னானென்றும்  ஆதிமுதலாக  இயேசு  அறிந்திருந்தபடியால்,  அவர்  பின்னும்:  (யோவான்  6:64)

aagilum  ungga'lil  visuvaasiyaathavarga'l  silar  u'ndu  en’raar;  visuvaasiyaathavarga'l  innaaren’rum,  thammaik  kaattikkoduppavan  innaanen’rum  aathimuthalaaga  iyeasu  a’rinthirunthapadiyaal,  avar  pinnum:  (yoavaan  6:64)

ஒருவன்  என்  பிதாவின்  அருளைப்  பெறாவிட்டால்  என்னிடத்திற்கு  வரமாட்டான்  என்று  இதினிமித்தமே  உங்களுக்குச்  சொன்னேன்  என்றார்.  (யோவான்  6:65)

oruvan  en  pithaavin  aru'laip  pe’raavittaal  ennidaththi’rku  varamaattaan  en’ru  ithinimiththamea  ungga'lukkuch  sonnean  en’raar.  (yoavaan  6:65)

அதுமுதல்  அவருடைய  சீஷரில்  அநேகர்  அவருடனேகூட  நடவாமல்  பின்வாங்கிப்போனார்கள்.  (யோவான்  6:66)

athumuthal  avarudaiya  seesharil  aneagar  avarudaneakooda  nadavaamal  pinvaanggippoanaarga'l.  (yoavaan  6:66)

அப்பொழுது  இயேசு  பன்னிருவரையும்  நோக்கி:  நீங்களும்  போய்விட  மனதாயிருக்கிறீர்களோ  என்றார்.  (யோவான்  6:67)

appozhuthu  iyeasu  panniruvaraiyum  noakki:  neengga'lum  poayvida  manathaayirukki’reerga'loa  en’raar.  (yoavaan  6:67)

சீமோன்  பேதுரு  அவருக்குப்  பிரதியுத்தரமாக:  ஆண்டவரே,  யாரிடத்தில்  போவோம்,  நித்தியஜீவ  வசனங்கள்  உம்மிடத்தில்  உண்டே.  (யோவான்  6:68)

seemoan  peathuru  avarukkup  pirathiyuththaramaaga:  aa'ndavarea,  yaaridaththil  poavoam,  niththiyajeeva  vasanangga'l  ummidaththil  u'ndea.  (yoavaan  6:68)

நீர்  ஜீவனுள்ள  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து  என்று  நாங்கள்  விசுவாசித்தும்  அறிந்தும்  இருக்கிறோம்  என்றான்.  (யோவான்  6:69)

neer  jeevanu'l'la  theavanudaiya  kumaaranaagiya  ki’risthu  en’ru  naangga'l  visuvaasiththum  a’rinthum  irukki’roam  en’raan.  (yoavaan  6:69)

இயேசு  அவர்களை  நோக்கி:  பன்னிருவராகிய  உங்களை  நான்  தெரிந்துகொள்ளவில்லையா?  உங்களுக்குள்ளும்  ஒருவன்  பிசாசாயிருக்கிறான்  என்றார்.  (யோவான்  6:70)

iyeasu  avarga'lai  noakki:  panniruvaraagiya  ungga'lai  naan  therinthuko'l'lavillaiyaa?  ungga'lukku'l'lum  oruvan  pisaasaayirukki’raan  en’raar.  (yoavaan  6:70)

சீமோனின்  குமாரனாகிய  யூதாஸ்காரியோத்து  பன்னிருவரிலொருவனாயிருந்தும்,  தம்மைக்  காட்டிக்கொடுக்கப்  போகிறவனாயிருந்தபடியினால்  அவனைக்குறித்து  இப்படிச்  சொன்னார்.  (யோவான்  6:71)

seemoanin  kumaaranaagiya  yoothaaskaariyoaththu  panniruvariloruvanaayirunthum,  thammaik  kaattikkodukkap  poagi’ravanaayirunthapadiyinaal  avanaikku’riththu  ippadich  sonnaar.  (yoavaan  6:71)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!