Friday, May 13, 2016

Yoavaan 16 | யோவான் 16 | John 16

நீங்கள்  இடறலடையாதபடிக்கு  இவைகளை  உங்களுக்குச்  சொன்னேன்.  (யோவான்  16:1)

neengga'l  ida’raladaiyaathapadikku  ivaiga'lai  ungga'lukkuch  sonnean.  (yoavaan  16:1)

அவர்கள்  உங்களை  ஜெபஆலயங்களுக்குப்  புறம்பாக்குவார்கள்;  மேலும்  உங்களைக்  கொலைசெய்கிறவன்  தான்  தேவனுக்குத்  தொண்டுசெய்கிறவனென்று  நினைக்குங்  காலம்  வரும்.  (யோவான்  16:2)

avarga'l  ungga'lai  jebaaalayangga'lukkup  pu’rambaakkuvaarga'l;  mealum  ungga'laik  kolaiseygi’ravan  thaan  theavanukkuth  tho'nduseygi’ravanen’ru  ninaikkung  kaalam  varum.  (yoavaan  16:2)

அவர்கள்  பிதாவையும்  என்னையும்  அறியாதபடியினால்  இவைகளை  உங்களுக்குச்  செய்வார்கள்.  (யோவான்  16:3)

avarga'l  pithaavaiyum  ennaiyum  a’riyaathapadiyinaal  ivaiga'lai  ungga'lukkuch  seyvaarga'l.  (yoavaan  16:3)

அந்தக்  காலம்  வரும்போது  நான்  இவைகளை  உங்களுக்குச்  சொன்னேனென்று  நீங்கள்  நினைக்கும்படி  இவைகளை  உங்களுக்குச்  சொல்லியிருக்கிறேன்;  நான்  உங்களுடனேகூட  இருந்தபடியினால்  ஆரம்பத்திலே  இவைகளை  உங்களுக்குச்  சொல்லவில்லை.  (யோவான்  16:4)

anthak  kaalam  varumpoathu  naan  ivaiga'lai  ungga'lukkuch  sonneanen’ru  neengga'l  ninaikkumpadi  ivaiga'lai  ungga'lukkuch  solliyirukki’rean;  naan  ungga'ludaneakooda  irunthapadiyinaal  aarambaththilea  ivaiga'lai  ungga'lukkuch  sollavillai.  (yoavaan  16:4)

இப்பொழுது  நான்  என்னை  அனுப்பினவரிடத்திற்குப்  போகிறேன்;  எங்கே  போகிறீரென்று  உங்களில்  ஒருவனும்  என்னைக்  கேட்கவில்லை.  (யோவான்  16:5)

ippozhuthu  naan  ennai  anuppinavaridaththi’rkup  poagi’rean;  enggea  poagi’reeren’ru  ungga'lil  oruvanum  ennaik  keadkavillai.  (yoavaan  16:5)

ஆனாலும்  நான்  இவைகளை  உங்களுக்குச்  சொன்னதினால்  உங்கள்  இருதயம்  துக்கத்தால்  நிறைந்திருக்கிறது.  (யோவான்  16:6)

aanaalum  naan  ivaiga'lai  ungga'lukkuch  sonnathinaal  ungga'l  iruthayam  thukkaththaal  ni’rainthirukki’rathu.  (yoavaan  16:6)

நான்  உங்களுக்கு  உண்மையைச்  சொல்லுகிறேன்;  நான்  போகிறது  உங்களுக்குப்  பிரயோஜனமாயிருக்கும்;  நான்  போகாதிருந்தால்,  தேற்றரவாளன்  உங்களிடத்தில்  வரார்;  நான்  போவேனேயாகில்  அவரை  உங்களிடத்திற்கு  அனுப்புவேன்.  (யோவான்  16:7)

naan  ungga'lukku  u'nmaiyaich  sollugi’rean;  naan  poagi’rathu  ungga'lukkup  pirayoajanamaayirukkum;  naan  poagaathirunthaal,  theat’raravaa'lan  ungga'lidaththil  varaar;  naan  poaveaneayaagil  avarai  ungga'lidaththi’rku  anuppuvean.  (yoavaan  16:7)

அவர்  வந்து,  பாவத்தைக்குறித்தும்,  நீதியைக்குறித்தும்,  நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,  உலகத்தைக்  கண்டித்து  உணர்த்துவார்.  (யோவான்  16:8)

avar  vanthu,  paavaththaikku’riththum,  neethiyaikku’riththum,  niyaayaththeerppaikku’riththum,  ulagaththaik  ka'ndiththu  u'narththuvaar.  (yoavaan  16:8)

அவர்கள்  என்னை  விசுவாசியாதபடியினாலே  பாவத்தைக்குறித்தும்,  (யோவான்  16:9)

avarga'l  ennai  visuvaasiyaathapadiyinaalea  paavaththaikku’riththum,  (yoavaan  16:9)

நீங்கள்  இனி  என்னைக்  காணாதபடிக்கு  நான்  என்  பிதாவினிடத்திற்குப்  போகிறபடியினாலே  நீதியைக்குறித்தும்,  (யோவான்  16:10)

neengga'l  ini  ennaik  kaa'naathapadikku  naan  en  pithaavinidaththi’rkup  poagi’rapadiyinaalea  neethiyaikku’riththum,  (yoavaan  16:10)

இந்த  உலகத்தின்  அதிபதி  நியாயந்தீர்க்கப்பட்டதினாலே  நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,  கண்டித்து  உணர்த்துவார்.  (யோவான்  16:11)

intha  ulagaththin  athibathi  niyaayantheerkkappattathinaalea  niyaayaththeerppaikku’riththum,  ka'ndiththu  u'narththuvaar.  (yoavaan  16:11)

இன்னும்  அநேகங்காரியங்களை  நான்  உங்களுக்குச்  சொல்லவேண்டியதாயிருக்கிறது,  அவைகளை  நீங்கள்  இப்பொழுது  தாங்கமாட்டீர்கள்.  (யோவான்  16:12)

innum  aneagangkaariyangga'lai  naan  ungga'lukkuch  sollavea'ndiyathaayirukki’rathu,  avaiga'lai  neengga'l  ippozhuthu  thaanggamaatteerga'l.  (yoavaan  16:12)

சத்திய  ஆவியாகிய  அவர்  வரும்போது,  சகல  சத்தியத்திற்குள்ளும்  உங்களை  நடத்துவார்;  அவர்  தம்முடைய  சுயமாய்ப்  பேசாமல்,  தாம்  கேள்விப்பட்டவைகள்  யாவையுஞ்சொல்லி,  வரப்போகிற  காரியங்களை  உங்களுக்கு  அறிவிப்பார்.  (யோவான்  16:13)

saththiya  aaviyaagiya  avar  varumpoathu,  sagala  saththiyaththi’rku'l'lum  ungga'lai  nadaththuvaar;  avar  thammudaiya  suyamaayp  peasaamal,  thaam  kea'lvippattavaiga'l  yaavaiyugnsolli,  varappoagi’ra  kaariyangga'lai  ungga'lukku  a’rivippaar.  (yoavaan  16:13)

அவர்  என்னுடையதில்  எடுத்து  உங்களுக்கு  அறிவிப்பதினால்  என்னை  மகிமைப்படுத்துவார்.  (யோவான்  16:14)

avar  ennudaiyathil  eduththu  ungga'lukku  a’rivippathinaal  ennai  magimaippaduththuvaar.  (yoavaan  16:14)

பிதாவினுடையவைகள்  யாவும்  என்னுடையவைகள்;  அதினாலே  அவர்  என்னுடையதில்  எடுத்து  உங்களுக்கு  அறிவிப்பார்  என்றேன்.  (யோவான்  16:15)

pithaavinudaiyavaiga'l  yaavum  ennudaiyavaiga'l;  athinaalea  avar  ennudaiyathil  eduththu  ungga'lukku  a’rivippaar  en’rean.  (yoavaan  16:15)

நான்  பிதாவினிடத்திற்குப்  போகிறபடியினால்  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காணாதிருப்பீர்கள்,  மறுபடியும்  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காண்பீர்கள்  என்றார்.  (யோவான்  16:16)

naan  pithaavinidaththi’rkup  poagi’rapadiyinaal  kognchakkaalaththilea  ennaik  kaa'naathiruppeerga'l,  ma’rupadiyum  kognchakkaalaththilea  ennaik  kaa'nbeerga'l  en’raar.  (yoavaan  16:16)

அப்பொழுது  அவருடைய  சீஷரில்  சிலர்:  நான்  பிதாவினிடத்திற்குப்  போகிறபடியினால்,  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காணாதிருப்பீர்கள்  என்றும்,  மறுபடியும்  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காண்பீர்கள்  என்றும்  அவர்  நம்முடனே  சொல்லுகிறதின்  கருத்தென்ன  என்று  தங்களுக்குள்ளே  பேசிக்கொண்டதுமன்றி:  (யோவான்  16:17)

appozhuthu  avarudaiya  seesharil  silar:  naan  pithaavinidaththi’rkup  poagi’rapadiyinaal,  kognchakkaalaththilea  ennaik  kaa'naathiruppeerga'l  en’rum,  ma’rupadiyum  kognchakkaalaththilea  ennaik  kaa'nbeerga'l  en’rum  avar  nammudanea  sollugi’rathin  karuththenna  en’ru  thangga'lukku'l'lea  peasikko'ndathuman’ri:  (yoavaan  16:17)

கொஞ்சக்காலம்  என்கிறாரே,  இதென்ன?  அவர்  சொல்லுகிறது  இன்னதென்று  நமக்கு  விளங்கவில்லையே  என்றார்கள்.  (யோவான்  16:18)

kognchakkaalam  engi’raarea,  ithenna?  avar  sollugi’rathu  innathen’ru  namakku  vi'langgavillaiyea  en’raarga'l.  (yoavaan  16:18)

அதைக்குறித்துத்  தம்மிடத்தில்  கேட்கும்படி  அவர்கள்  விரும்புகிறதை  இயேசு  அறிந்து,  அவர்களை  நோக்கி:  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காணாதிருப்பீர்கள்,  மறுபடியும்  கொஞ்சக்காலத்திலே  என்னைக்  காண்பீர்கள்  என்று  நான்  சொன்னதைக்குறித்து  நீங்கள்  உங்களுக்குள்ளே  விசாரிக்கிறீர்களோ?  (யோவான்  16:19)

athaikku’riththuth  thammidaththil  keadkumpadi  avarga'l  virumbugi’rathai  iyeasu  a’rinthu,  avarga'lai  noakki:  kognchakkaalaththilea  ennaik  kaa'naathiruppeerga'l,  ma’rupadiyum  kognchakkaalaththilea  ennaik  kaa'nbeerga'l  en’ru  naan  sonnathaikku’riththu  neengga'l  ungga'lukku'l'lea  visaarikki’reerga'loa?  (yoavaan  16:19)

மெய்யாகவே  மெய்யாகவே  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  நீங்கள்  அழுது  புலம்புவீர்கள்,  உலகமோ  சந்தோஷப்படும்;  நீங்கள்  துக்கப்படுவீர்கள்,  ஆனாலும்  உங்கள்  துக்கம்  சந்தோஷமாக  மாறும்.  (யோவான்  16:20)

meyyaagavea  meyyaagavea  naan  ungga'lukkuch  sollugi’rean:  neengga'l  azhuthu  pulambuveerga'l,  ulagamoa  santhoashappadum;  neengga'l  thukkappaduveerga'l,  aanaalum  ungga'l  thukkam  santhoashamaaga  maa’rum.  (yoavaan  16:20)

ஸ்திரீயானவளுக்குப்  பிரசவகாலம்  வந்திருக்கும்போது  அவள்  துக்கமடைகிறாள்;  பிள்ளைபெற்றவுடனே  ஒரு  மனுஷன்  உலகத்தில்  பிறந்தானென்கிற  சந்தோஷத்தினால்  அப்புறம்  உபத்திரவத்தை  நினையாள்.  (யோவான்  16:21)

sthireeyaanava'lukkup  pirasavakaalam  vanthirukkumpoathu  ava'l  thukkamadaigi’raa'l;  pi'l'laipet’ravudanea  oru  manushan  ulagaththil  pi’ranthaanengi’ra  santhoashaththinaal  appu’ram  ubaththiravaththai  ninaiyaa'l.  (yoavaan  16:21)

அதுபோல  நீங்களும்  இப்பொழுது  துக்கமடைந்திருக்கிறீர்கள்.  நான்  மறுபடியும்  உங்களைக்  காண்பேன்,  அப்பொழுது  உங்கள்  இருதயம்  சந்தோஷப்படும்,  உங்கள்  சந்தோஷத்தை  ஒருவனும்  உங்களிடத்திலிருந்து  எடுத்துப்போடமாட்டான்.  (யோவான்  16:22)

athupoala  neengga'lum  ippozhuthu  thukkamadainthirukki’reerga'l.  naan  ma’rupadiyum  ungga'laik  kaa'nbean,  appozhuthu  ungga'l  iruthayam  santhoashappadum,  ungga'l  santhoashaththai  oruvanum  ungga'lidaththilirunthu  eduththuppoadamaattaan.  (yoavaan  16:22)

அந்த  நாளிலே  நீங்கள்  என்னிடத்தில்  ஒன்றுங்  கேட்கமாட்டீர்கள்.  மெய்யாகவே  மெய்யாகவே  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்,  நீங்கள்  என்  நாமத்தினாலே  பிதாவினிடத்தில்  கேட்டுக்  கொள்வதெதுவோ  அதை  அவர்  உங்களுக்குத்  தருவார்.  (யோவான்  16:23)

antha  naa'lilea  neengga'l  ennidaththil  on’rung  keadkamaatteerga'l.  meyyaagavea  meyyaagavea  naan  ungga'lukkuch  sollugi’rean,  neengga'l  en  naamaththinaalea  pithaavinidaththil  keattuk  ko'lvathethuvoa  athai  avar  ungga'lukkuth  tharuvaar.  (yoavaan  16:23)

இதுவரைக்கும்  நீங்கள்  என்  நாமத்தினாலே  ஒன்றும்  கேட்கவில்லை;  கேளுங்கள்,  அப்பொழுது  உங்கள்  சந்தோஷம்  நிறைவாயிருக்கும்படி  பெற்றுக்  கொள்வீர்கள்.  (யோவான்  16:24)

ithuvaraikkum  neengga'l  en  naamaththinaalea  on’rum  keadkavillai;  kea'lungga'l,  appozhuthu  ungga'l  santhoasham  ni’raivaayirukkumpadi  pet’ruk  ko'lveerga'l.  (yoavaan  16:24)

இவைகளை  நான்  உவமைகளாய்  உங்களுடனே  பேசுகிறேன்;  காலம்  வரும்,  அப்பொழுது  நான்  உவமைகளாய்  உங்களுடனே  பேசாமல்,  பிதாவைக்குறித்து  வெளிப்படையாக  உங்களுக்கு  அறிவிப்பேன்.  (யோவான்  16:25)

ivaiga'lai  naan  uvamaiga'laay  ungga'ludanea  peasugi’rean;  kaalam  varum,  appozhuthu  naan  uvamaiga'laay  ungga'ludanea  peasaamal,  pithaavaikku’riththu  ve'lippadaiyaaga  ungga'lukku  a’rivippean.  (yoavaan  16:25)

அந்த  நாளில்  நீங்கள்  என்  நாமத்தினாலே  வேண்டிக்  கொள்வீர்கள்.  உங்களுக்காகப்  பிதாவை  நான்  கேட்டுக்  கொள்வேனென்று  உங்களுக்குச்  சொல்லவேண்டியதில்லை.  (யோவான்  16:26)

antha  naa'lil  neengga'l  en  naamaththinaalea  vea'ndik  ko'lveerga'l.  ungga'lukkaagap  pithaavai  naan  keattuk  ko'lveanen’ru  ungga'lukkuch  sollavea'ndiyathillai.  (yoavaan  16:26)

நீங்கள்  என்னைச்  சிநேகித்து,  நான்  தேவனிடத்திலிருந்து  புறப்பட்டுவந்தேனென்று  விசுவாசிக்கிறபடியினால்  பிதாதாமே  உங்களைச்  சிநேகிக்கிறார்.  (யோவான்  16:27)

neengga'l  ennaich  sineagiththu,  naan  theavanidaththilirunthu  pu’rappattuvantheanen’ru  visuvaasikki’rapadiyinaal  pithaathaamea  ungga'laich  sineagikki’raar.  (yoavaan  16:27)

நான்  பிதாவினிடத்திலிருந்து  புறப்பட்டு  உலகத்திலே  வந்தேன்;  மறுபடியும்  உலகத்தைவிட்டுப்  பிதாவினிடத்திற்குப்  போகிறேன்  என்றார்.  (யோவான்  16:28)

naan  pithaavinidaththilirunthu  pu’rappattu  ulagaththilea  vanthean;  ma’rupadiyum  ulagaththaivittup  pithaavinidaththi’rkup  poagi’rean  en’raar.  (yoavaan  16:28)

அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  இதோ,  இப்பொழுது  நீர்  உவமையாய்ப்  பேசாமல்,  வெளிப்படையாய்ப்  பேசுகிறீர்.  (யோவான்  16:29)

avarudaiya  seesharga'l  avarai  noakki:  ithoa,  ippozhuthu  neer  uvamaiyaayp  peasaamal,  ve'lippadaiyaayp  peasugi’reer.  (yoavaan  16:29)

நீர்  எல்லாவற்றையும்  அறிந்திருக்கிறீர்  என்றும்,  ஒருவன்  உம்மை  வினாவ  வேண்டுவதில்லையென்றும்,  இப்பொழுது  அறிந்திருக்கிறோம்;  இதினாலே  நீர்  தேவனிடத்திலிருந்து  வந்தீரென்று  விசுவாசிக்கிறோம்  என்றார்கள்.  (யோவான்  16:30)

neer  ellaavat’raiyum  a’rinthirukki’reer  en’rum,  oruvan  ummai  vinaava  vea'nduvathillaiyen’rum,  ippozhuthu  a’rinthirukki’roam;  ithinaalea  neer  theavanidaththilirunthu  vantheeren’ru  visuvaasikki’roam  en’raarga'l.  (yoavaan  16:30)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  இப்பொழுது  நீங்கள்  விசுவாசிக்கிறீர்கள்.  (யோவான்  16:31)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  ippozhuthu  neengga'l  visuvaasikki’reerga'l.  (yoavaan  16:31)

இதோ,  நீங்கள்  சிதறுண்டு,  அவனவன்  தன்  தன்  இடத்துக்குப்  போய்,  என்னைத்  தனியே  விட்டுவிடுங்காலம்  வரும்;  அது  இப்பொழுது  வந்திருக்கிறது;  ஆனாலும்  நான்  தனித்திரேன்,  பிதா  என்னுடனேகூட  இருக்கிறார்.  (யோவான்  16:32)

ithoa,  neengga'l  sitha’ru'ndu,  avanavan  than  than  idaththukkup  poay,  ennaith  thaniyea  vittuvidungkaalam  varum;  athu  ippozhuthu  vanthirukki’rathu;  aanaalum  naan  thaniththirean,  pithaa  ennudaneakooda  irukki’raar.  (yoavaan  16:32)

என்னிடத்தில்  உங்களுக்குச்  சமாதானம்  உண்டாயிருக்கும்பொருட்டு  இவைகளை  உங்களுக்குச்  சொன்னேன்.  உலகத்தில்  உங்களுக்கு  உபத்திரவம்  உண்டு,  ஆனாலும்  திடன்கொள்ளுங்கள்;  நான்  உலகத்தை  ஜெயித்தேன்  என்றார்.  (யோவான்  16:33)

ennidaththil  ungga'lukkuch  samaathaanam  u'ndaayirukkumporuttu  ivaiga'lai  ungga'lukkuch  sonnean.  ulagaththil  ungga'lukku  ubaththiravam  u'ndu,  aanaalum  thidanko'l'lungga'l;  naan  ulagaththai  jeyiththean  en’raar.  (yoavaan  16:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!