உங்கள் இருதயம்
கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான்
14:1)
ungga'l iruthayam kalanggaathiruppathaaga; theavanidaththil visuvaasamaayirungga'l, ennidaththilum visuvaasamaayirungga'l. (yoavaan
14:1)
என் பிதாவின்
வீட்டில் அநேக வாசஸ்தலங்கள்
உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்போகிறேன். (யோவான் 14:2)
en pithaavin
veettil
aneaga
vaasasthalangga'l u'ndu;
appadiyillaathirunthaal, naan ungga'lukkuch solliyiruppean;
oru sthalaththai ungga'lukkaaga aayaththampa'n'nappoagi’rean. (yoavaan 14:2)
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை
ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற
இடத்திலே நீங்களும் இருக்கும்படி,
நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில்
சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:3)
naan poay ungga'lukkaaga sthalaththai
aayaththampa'n'ninapinbu, naan irukki’ra idaththilea neengga'lum irukkumpadi,
naan ma’rupadiyum vanthu
ungga'lai
ennidaththil searththukko'l'luvean.
(yoavaan 14:3)
நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும்
அறிந்திருக்கிறீர்கள் என்றார். (யோவான்
14:4)
naan poagi’ra idaththai
a’rinthirukki’reerga'l, vazhiyaiyum a’rinthirukki’reerga'l en’raar. (yoavaan
14:4)
தோமா அவரை நோக்கி: ஆண்டவரே,
நீர் போகிற இடத்தை
அறியோமே, வழியை நாங்கள்
எப்படி அறிவோம் என்றான்.
(யோவான் 14:5)
thoamaa avarai
noakki: aa'ndavarea, neer poagi’ra idaththai a’riyoamea, vazhiyai
naangga'l
eppadi a’rivoam en’raan. (yoavaan
14:5)
அதற்கு இயேசு:
நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும்
பிதாவினிடத்தில் வரான். (யோவான்
14:6)
atha’rku iyeasu: naanea vazhiyum
saththiyamum jeevanumaayirukki’rean; ennaaleayallaamal oruvanum
pithaavinidaththil varaan. (yoavaan
14:6)
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல்
நீங்கள் அவரை அறிந்தும்
அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
(யோவான் 14:7)
ennai a’rintheerga'laanaal en pithaavaiyum
a’rinthiruppeerga'l; ithumuthal
neengga'l
avarai a’rinthum avaraik
ka'ndum irukki’reerga'l en’raar. (yoavaan
14:7)
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே,
பிதாவை எங்களுக்குக் காண்பியும்,
அது எங்களுக்குப் போதும்
என்றான். (யோவான் 14:8)
pilippu avarai
noakki: aa'ndavarea, pithaavai
engga'lukkuk kaa'nbiyum, athu engga'lukkup poathum en’raan. (yoavaan
14:8)
அதற்கு இயேசு:
பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும்
நீ என்னை அறியவில்லையா?
என்னைக் கண்டவன் பிதாவைக்
கண்டான்; அப்படியிருக்க, பிதாவை
எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச்
சொல்லுகிறாய்? (யோவான் 14:9)
atha’rku iyeasu: pilippuvea, ivva'lavukaalam naan ungga'ludaneakooda
irunthum nee ennai a’riyavillaiyaa?
ennaik ka'ndavan pithaavaik
ka'ndaan; appadiyirukka, pithaavai
engga'lukkuk kaa'nbiyum en’ru nee eppadich sollugi’raay? (yoavaan
14:9)
நான் பிதாவிலும்,
பிதா என்னிலும் இருக்கிறதை
நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற
வசனங்களை என் சுயமாய்ச்
சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே
இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். (யோவான்
14:10)
naan pithaavilum,
pithaa ennilum irukki’rathai nee visuvaasikki’rathillaiyaa? naan ungga'ludanea sollugi’ra vasanangga'lai en suyamaaych sollavillai; ennidaththil
vaasamaayirukki’ra pithaavaanavarea inthak
kiriyaiga'laich seythuvarugi’raar. (yoavaan 14:10)
நான் பிதாவிலும்
பிதா என்னிலும் இருக்கிறதை
நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான்
14:11)
naan pithaavilum
pithaa ennilum irukki’rathai nambungga'l; appadiyillaavittaalum en kiriyaiga'linimiththamaavathu ennai nambungga'l. (yoavaan
14:11)
மெய்யாகவே மெய்யாகவே
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;
நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத்
தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
(யோவான் 14:12)
meyyaagavea meyyaagavea naan ungga'lukkuch sollugi’rean; naan en pithaavinidaththi’rkup poagi’rapadiyinaal, ennai visuvaasikki’ravan naan seygi’ra kiriyaiga'laith thaanum seyvaan, ivaiga'laippaarkkilum periya
kiriyaiga'laiyum seyvaan. (yoavaan
14:12)
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில்
பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். (யோவான்
14:13)
neengga'l en naamaththinaalea ethaik
keadpeerga'loa, kumaaranil
pithaa magimaippadumpadiyaaga, athaich seyvean. (yoavaan 14:13)
என் நாமத்தினாலே
நீங்கள் எதைக் கேட்டாலும்
அதை நான் செய்வேன்.
(யோவான் 14:14)
en naamaththinaalea neengga'l ethaik
keattaalum athai naan seyvean. (yoavaan
14:14)
நீங்கள் என்னிடத்தில்
அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக்
கைக்கொள்ளுங்கள். (யோவான் 14:15)
neengga'l ennidaththil anbaayirunthaal en ka’rpanaiga'laik kaikko'l'lungga'l. (yoavaan
14:15)
நான் பிதாவை
வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட
இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய
வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
(யோவான் 14:16)
naan pithaavai
vea'ndikko'l'luvean, appozhuthu en’ren’raikkum ungga'ludaneakooda
irukkumpadikkuch saththiya aaviyaagiya vea’roru theat’raravaa'lanai avar ungga'lukkuth thantharu'luvaar. (yoavaan
14:16)
உலகம் அந்தச்
சத்திய ஆவியானவரைக் காணாமலும்
அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப்
பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே
வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்,
நீங்கள் அவரை அறிவீர்கள்.
(யோவான் 14:17)
ulagam anthach saththiya aaviyaanavaraik kaa'naamalum
a’riyaamalum irukki’rapadiyaal avaraip
pet’rukko'l'lamaattaathu; avar ungga'ludanea vaasampa'n'ni ungga'lukku'l'lea iruppathaal, neengga'l avarai
a’riveerga'l. (yoavaan
14:17)
நான் உங்களைத்
திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில்
வருவேன். (யோவான் 14:18)
naan ungga'laith thikkat’ravarga'laaga videan,
ungga'lidaththil varuvean.
(yoavaan 14:18)
இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது,
நீங்களோ என்னைக் காண்பீர்கள்;
நான் பிழைக்கிறபடியினால் நீங்களும்
பிழைப்பீர்கள். (யோவான் 14:19)
innum kognchakkaalaththilea ulagam ennaik
kaa'naathu, neengga'loa ennaik kaa'nbeerga'l; naan pizhaikki’rapadiyinaal neengga'lum pizhaippeerga'l. (yoavaan
14:19)
நான் என் பிதாவிலும், நீங்கள்
என்னிலும், நான் உங்களிலும்
இருக்கிறதை அந்நாளிலே நீங்கள்
அறிவீர்கள். (யோவான் 14:20)
naan en pithaavilum, neengga'l ennilum,
naan ungga'lilum irukki’rathai annaa'lilea
neengga'l
a’riveerga'l. (yoavaan
14:20)
என் கற்பனைகளைப்
பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில்
அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும்
அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு
என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
(யோவான் 14:21)
en ka’rpanaiga'laip pet’rukko'ndu avaiga'laik kaikko'l'lugi’ravanea ennidaththil anbaayirukki’raan, ennidaththil anbaayirukki’ravan en pithaavukku
anbaayiruppaan; naanum
avanil anbaayirunthu, avanukku
ennai ve'lippaduththuvean en’raar. (yoavaan
14:21)
ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே,
நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு
உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன
என்றான். (யோவான் 14:22)
skaariyoaththallaatha yoothaa
enbavan
avarai noakki: aa'ndavarea,
neer ulagaththukku ummai ve'lippaduththaamal engga'lukku ummai ve'lippaduththappoagi’ra kaara'namenna en’raan. (yoavaan
14:22)
இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில்
அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில்
என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள்
அவனிடத்தில் வந்து அவனோடே
வாசம்பண்ணுவோம். (யோவான் 14:23)
iyeasu avanukkup pirathiyuththaramaaga: oruvan
ennil anbaayirunthaal, avan en vasanaththaik kaikko'l'luvaan, avanil
en pithaa anbaayiruppaar; naangga'l avanidaththil
vanthu avanoadea vaasampa'n'nuvoam. (yoavaan
14:23)
என்னில் அன்பாயிராதவன்
என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள்
கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. (யோவான்
14:24)
ennil anbaayiraathavan en vasanangga'laik kaikko'l'lamaattaan. neengga'l keadki’ra vasanam ennudaiyathaayiraamal ennai anuppina pithaavinudaiyathaayirukki’rathu. (yoavaan 14:24)
நான் உங்களுடனே
தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச்
சொன்னேன். (யோவான் 14:25)
naan ungga'ludanea thanggiyirukkaiyil ivaiga'lai ungga'lukkuch sonnean. (yoavaan 14:25)
என் நாமத்தினாலே
பிதா அனுப்பப்போகிற பரிசுத்த
ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப்
போதித்து, நான் உங்களுக்குச்
சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு
நினைப்பூட்டுவார். (யோவான் 14:26)
en naamaththinaalea pithaa
anuppappoagi’ra parisuththa aaviyaagiya theat’raravaa'lanea ellaavat’raiyum ungga'lukkup poathiththu,
naan ungga'lukkuch sonna ellaavat’raiyum ungga'lukku ninaippoottuvaar. (yoavaan 14:26)
சமாதானத்தை உங்களுக்கு
வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே
உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள்
இருதயம் கலங்காமலும் பயப்படாமலும்
இருப்பதாக. (யோவான் 14:27)
samaathaanaththai
ungga'lukku vaiththuppoagi’rean, ennudaiya
samaathaanaththaiyea ungga'lukkuk kodukki’rean; ulagam kodukki’rapiragaaram naan ungga'lukkuk kodukki’rathillai. ungga'l iruthayam
kalanggaamalum bayappadaamalum iruppathaaga. (yoavaan
14:27)
நான் போவேன்
என்றும், திரும்பி உங்களிடத்தில்
வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக்
கேட்டீர்களே. நீங்கள் என்னில்
அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று
நான் சொன்னதைக் குறித்துச்
சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும்
பெரியவராயிருக்கிறார். (யோவான் 14:28)
naan poavean
en’rum,
thirumbi
ungga'lidaththil varuvean
en’rum
naan ungga'ludanea sonnathaik keatteerga'lea. neengga'l ennil anbu'l'lavarga'laayirunthaal
pithaavinidaththi’rkup poagi’reanen’ru naan sonnathaik ku’riththuch santhoashappaduveerga'l, eanenil
en pithaa ennilum
periyavaraayirukki’raar. (yoavaan
14:28)
இது நடக்கும்போது
நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
(யோவான் 14:29)
ithu nadakkumpoathu neengga'l visuvaasikkumpadiyaaga, nadappatha’rkumunnamea ithai ungga'lukkuch sonnean. (yoavaan
14:29)
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப்
பேசுவதில்லை. இந்த உலகத்தின்
அதிபதி வருகிறான், அவனுக்கு
என்னிடத்தில் ஒன்றுமில்லை. (யோவான்
14:30)
ini naan ungga'ludanea athigamaayp peasuvathillai. intha ulagaththin athibathi varugi’raan, avanukku
ennidaththil on’rumillai. (yoavaan 14:30)
நான் பிதாவில்
அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன்
என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி
நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம்
வாருங்கள் என்றார். (யோவான்
14:31)
naan pithaavil
anbaayirukki’rean en’rum, pithaa
enakkuk katta'laiyittapadiyea seygi’rean en’rum, ulagam a’riyumpadikku ippadi nadakkum.
ezhunthirungga'l, ivvidamvittup poavoam
vaarungga'l en’raar. (yoavaan
14:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!