பஸ்கா பண்டிகைக்கு
முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான
தம்முடைய வேளை வந்ததென்று
அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். (யோவான்
13:1)
paskaa pa'ndigaikku munnea,
iyeasu
ivvulagaththaivittup pithaavinidaththi’rkup poagumpadiyaana thammudaiya
vea'lai vanthathen’ru a’rinthu, thaam ivvulagaththilirukki’ra thammudaiyavarga'lidaththil anbuvaiththapadiyea,
mudivupariyanthamum avarga'lidaththil anbuvaiththaar. (yoavaan 13:1)
சீமோனின் குமாரனாகிய
யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன்
அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள்
போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்; (யோவான்
13:2)
seemoanin kumaaranaagiya yoothaaskaariyoaththu avaraik
kaattikkodukkumpadi pisaasaanavan avan iruthayaththaith thoo'ndinapinbu, avarga'l poajanam
pa'n'nikko'ndirukkaiyil; (yoavaan 13:2)
தம்முடைய கையில்
பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும்,
தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; (யோவான்
13:3)
thammudaiya kaiyil
pithaa ellaavat’raiyum oppukkoduththaarenbathaiyum, thaam theavanidaththilirunthu vanthathaiyum, theavanidaththi’rkup poagi’rathaiyum iyeasu a’rinthu; (yoavaan
13:3)
போஜனத்தை விட்டெழுந்து,
வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து,
அரையிலே கட்டிக்கொண்டு, (யோவான்
13:4)
poajanaththai vittezhunthu, vasthirangga'laik kazhat’rivaiththu, oru seelaiyai eduththu, araiyilea
kattikko'ndu, (yoavaan
13:4)
பின்பு பாத்திரத்தில்
தண்ணீர் வார்த்து, சீஷருடைய
கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால்
துடைக்கவும் தொடங்கினார். (யோவான்
13:5)
pinbu paaththiraththil tha'n'neer
vaarththu, seesharudaiya kaalga'laik kazhuvavum, thaam kattikko'ndiruntha
seelaiyinaal thudaikkavum
thodangginaar. (yoavaan
13:5)
அவர் சீமோன்
பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி:
ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா
என்றான். (யோவான் 13:6)
avar seemoan peathuruvinidaththil vanthapoathu,
avan avarai noakki:
aa'ndavarea, neer en kaalga'laik kazhuvalaamaa en’raan. (yoavaan
13:6)
இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் செய்கிறது
இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல்
அறிவாய் என்றார். (யோவான்
13:7)
iyeasu avanukkup pirathiyuththaramaaga: naan seygi’rathu innathen’ru ippozhuthu
nee a’riyaay, inimeal
a’rivaay
en’raar.
(yoavaan 13:7)
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது
என்றான். இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் உன்னைக்
கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப்
பங்கில்லை என்றார். (யோவான்
13:8)
peathuru avarai
noakki: neer orukkaalum
en kaalga'laik kazhuvappadaathu en’raan. iyeasu avanukkup
pirathiyuththaramaaga: naan unnaik kazhuvaavittaal ennidaththil
unakkup panggillai en’raar. (yoavaan 13:8)
அதற்குச் சீமோன்
பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும்
என்றான். (யோவான் 13:9)
atha’rkuch seemoan peathuru:
aa'ndavarea, en kaalga'laimaaththiramalla, en kaiga'laiyum en thalaiyaiyumkoodak kazhuvavea'ndum en’raan. (yoavaan
13:9)
இயேசு அவனை நோக்கி: முழுகினவன்
தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி
அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும்
சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும்
அல்ல என்றார். (யோவான்
13:10)
iyeasu avanai noakki:
muzhuginavan than kaalga'laimaaththiram
kazhuvavea'ndiyathaayirukkum, mat’rappadi avan muzhuvathum
suththamaayirukki’raan; neengga'lum suththamaayirukki’reerga'l; aagilum ellaarum
alla en’raar. (yoavaan
13:10)
தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். (யோவான்
13:11)
thammaik kaattikkodukki’ravanai avar a’rinthirunthapadiyinaal neengga'lellaarum suththamu'l'lavarga'l alla en’raar. (yoavaan
13:11)
அவர்களுடைய கால்களை
அவர் கழுவினபின்பு, தம்முடைய
வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப
உட்கார்ந்து, அவர்களை நோக்கி:
நான் உங்களுக்குச் செய்ததை
அறிந்திருக்கிறீர்களா? (யோவான் 13:12)
avarga'ludaiya kaalga'lai avar kazhuvinapinbu, thammudaiya
vasthirangga'laith thariththukko'ndu, thirumba udkaarnthu,
avarga'lai noakki:
naan ungga'lukkuch seythathai a’rinthirukki’reerga'laa? (yoavaan 13:12)
நீங்கள் என்னைப்
போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள்
சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். (யோவான்
13:13)
neengga'l ennaip poathagaren’rum, aa'ndavaren’rum sollugi’reerga'l, neengga'l sollugi’rathu sariyea, naan avarthaan. (yoavaan
13:13)
ஆண்டவரும் போதகருமாகிய
நானே உங்கள் கால்களைக்
கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய
கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். (யோவான்
13:14)
aa'ndavarum poathagarumaagiya naanea ungga'l kaalga'laik kazhuvinathu'ndaanaal, neengga'lum oruvarudaiya
kaalga'lai oruvar
kazhuvakkadaveerga'l. (yoavaan
13:14)
நான் உங்களுக்குச்
செய்ததுபோல நீங்களும் செய்யும்படி
உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
(யோவான் 13:15)
naan ungga'lukkuch seythathupoala neengga'lum seyyumpadi ungga'lukku maathiriyaik kaa'nbiththean. (yoavaan
13:15)
மெய்யாகவே மெய்யாகவே
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,
ஊழியக்காரன் தன் எஜமானிலும்
பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
(யோவான் 13:16)
meyyaagavea meyyaagavea naan ungga'lukkuch sollugi’rean, oozhiyakkaaran than ejamaanilum periyavanalla, anuppappattavan thannai
anuppinavarilum periyavanalla. (yoavaan
13:16)
நீங்கள் இவைகளை
அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். (யோவான்
13:17)
neengga'l ivaiga'lai a’rinthirukki’rapadiyinaal, ivaiga'laich seyveerga'laanaal, baakkiyavaanga'laayiruppeerga'l. (yoavaan
13:17)
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்;
ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே
அப்பம் புசிக்கிறவன் என்மேல்
தன் குதிகாலைத் தூக்கினான்.
(யோவான் 13:18)
ungga'lellaaraiyungku’riththu naan peasavillai, naan therinthuko'ndavarga'lai a’rivean; aagilum veathavaakkiyam ni’raivea’raththakkathaaga, ennudanea
appam pusikki’ravan enmeal than kuthikaalaith thookkinaan.
(yoavaan 13:18)
அது நடக்கும்போது
நானே அவரென்று நீங்கள்
விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே
அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 13:19)
athu nadakkumpoathu naanea
avaren’ru
neengga'l
visuvaasikkumporuttu, ippozhuthu athu nadappatha’rku munnamea athai ungga'lukkuch sollugi’rean. (yoavaan 13:19)
நான் அனுப்புகிறவனை
ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று,
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். (யோவான்
13:20)
naan anuppugi’ravanai eat’rukko'l'lugi’ravan ennai eat’rukko'l'lugi’raan, ennai eat’rukko'l'lugi’ravan ennai anuppinavarai
eat’rukko'l'lugi’raan en’ru, meyyaagavea meyyaagavea ungga'lukkuch sollugi’rean en’raar. (yoavaan
13:20)
இயேசு இவைகளைச்
சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி:
உங்களில் ஒருவன் என்னைக்
காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்று சாட்சியாகச் சொன்னார்.
(யோவான் 13:21)
iyeasu ivaiga'laich sonnapinbu, aaviyilea kalanggi: ungga'lil oruvan
ennaik kaattikkoduppaan en’ru, meyyaagavea meyyaagavea ungga'lukkuch sollugi’rean en’ru saadchiyaagach sonnaar. (yoavaan 13:21)
அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ
என்று சீஷர்கள் ஐயப்பட்டு,
ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். (யோவான்
13:22)
appozhuthu yaaraikku’riththup peasugi’raaroa en’ru seesharga'l aiyappattu, oruvaraiyoruvar noakkippaarththaarga'l. (yoavaan
13:22)
அந்தச் சமயத்தில்
அவருடைய சீஷரில் இயேசுவுக்கு
அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின்
மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். (யோவான்
13:23)
anthach samayaththil avarudaiya seesharil iyeasuvukku anbaanavanaayiruntha oruvan
iyeasuvin
maarbilea
saaynthuko'ndirunthaan. (yoavaan
13:23)
யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு
அவனுக்குச் சைகைகாட்டினான். (யோவான்
13:24)
yaaraikku’riththuch sollugi’raaren’ru visaarikkumpadi seemoanpeathuru avanukkuch saigaikaattinaan. (yoavaan 13:24)
அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே
சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
(யோவான் 13:25)
appozhuthu avan iyeasuvin maarbilea saaynthuko'ndu:
aa'ndavarea, avan yaar en’raan. (yoavaan 13:25)
இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத்
தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ,
அவன்தான் என்று சொல்லி,
துணிக்கையைத் தோய்த்து, சீமோன்
குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
(யோவான் 13:26)
iyeasu pirathiyuththaramaaga: naan inthath
thu'nikkaiyaith thoayththu evanukkuk
koduppeanoa, avanthaan en’ru solli, thu'nikkaiyaith thoayththu,
seemoan
kumaaranaagiya yoothaaskaariyoaththukkuk koduththaar.
(yoavaan 13:26)
அந்தத் துணிக்கையை
அவன் வாங்கினபின்பு, சாத்தான்
அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது
இயேசு அவனை நோக்கி:
நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச்
செய் என்றார். (யோவான்
13:27)
anthath thu'nikkaiyai
avan vaangginapinbu, saaththaan avanukku'l
pugunthaan. appozhuthu
iyeasu
avanai noakki: nee seygi’rathaich seekkiramaaych sey en’raar. (yoavaan
13:27)
அவர் இப்படி
அவனுடனே சொன்னதின் கருத்தைப்
பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.
(யோவான் 13:28)
avar ippadi
avanudanea sonnathin karuththaip panthiyirunthavarga'lil oruvanum
a’riyavillai. (yoavaan
13:28)
யூதாஸ் பணப்பையை
வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்
தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும்
கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே
சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். (யோவான்
13:29)
yoothaas pa'nappaiyai
vaiththuk ko'ndirunthapadiyinaal, avan poay, pa'ndigaikkuth theavaiyaanavaiga'laik ko'l'lumpadikkaavathu, thariththirarukku eathaagilum kodukkumpadikkaavathu, iyeasu avanudanea
solliyiruppaar en’ru silar ninaiththaarga'l. (yoavaan
13:29)
அவன் அந்தத்
துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது
இராக்காலமாயிருந்தது. (யோவான் 13:30)
avan anthath
thu'nikkaiyai vaangginavudanea pu’rappattuppoanaan; appozhuthu
iraakkaalamaayirunthathu. (yoavaan 13:30)
அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு:
இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும்
அவரில் மகிமைப்படுகிறார். (யோவான்
13:31)
avan pu’rappattuppoanapinbu iyeasu: ippozhuthu
manushakumaaran magimaippadugi’raar, theavanum
avaril magimaippadugi’raar. (yoavaan 13:31)
தேவன் அவரில்
மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத்
தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய்
அவரை மகிமைப்படுத்துவார். (யோவான்
13:32)
theavan avaril
magimaippattirunthaal, theavan
avaraith thammil magimaippaduththuvaar, seekkiramaay avarai
magimaippaduththuvaar. (yoavaan
13:32)
பிள்ளைகளே, இன்னும்
கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட
இருப்பேன்; நீங்கள் என்னைத்
தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு
நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல
இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
(யோவான் 13:33)
pi'l'laiga'lea, innum kognchakkaalam naan ungga'ludaneakooda
iruppean; neengga'l ennaith theaduveerga'l; aanaalum
naan poagi’ra idaththukku
neengga'l
varakkoodaathen’ru naan yootharoadea sonnathupoala ippozhuthu
ungga'loadum sollugi’rean. (yoavaan 13:33)
நீங்கள் ஒருவரிலொருவர்
அன்பாயிருங்கள்; நான் உங்களில்
அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர்
அன்பாயிருங்கள் என்கிற புதிதான
கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
(யோவான் 13:34)
neengga'l oruvariloruvar anbaayirungga'l; naan ungga'lil anbaayirunthathupoala neengga'lum oruvariloruvar anbaayirungga'l engi’ra puthithaana katta'laiyai ungga'lukkuk kodukki’rean. (yoavaan
13:34)
நீங்கள் ஒருவரிலொருவர்
அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள்
என்னுடைய சீஷர்களென்று எல்லாரும்
அறிந்துகொள்வார்கள் என்றார். (யோவான்
13:35)
neengga'l oruvariloruvar anbu'l'lavarga'laayirunthaal,
athinaal neengga'l ennudaiya seesharga'len’ru ellaarum
a’rinthuko'lvaarga'l en’raar. (yoavaan
13:35)
சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே,
நீர் எங்கே போகிறீர்
என்றான். இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது
நீ என் பின்னே
வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்
என்றார். (யோவான் 13:36)
seemoanpeathuru avarai noakki:
aa'ndavarea, neer enggea poagi’reer en’raan. iyeasu avanukkup
pirathiyuththaramaaga: naan poagi’ra idaththukku ippozhuthu
nee en pinnea
varakkoodaathu, pi’rpaadu en pinnea
varuvaay en’raar. (yoavaan 13:36)
பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே,
நான் இப்பொழுது உமக்குப்
பின்னே ஏன் வரக்கூடாது?
உமக்காக என் ஜீவனையும்
கொடுப்பேன் என்றான். (யோவான்
13:37)
peathuru avarai
noakki: aa'ndavarea, naan ippozhuthu umakkup
pinnea ean varakkoodaathu? umakkaaga en jeevanaiyum koduppean
en’raan.
(yoavaan 13:37)
இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ?
சேவல் கூவுகிறதற்கு முன்னே
நீ என்னை மூன்றுதரம்
மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே
உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(யோவான் 13:38)
iyeasu avanukkup pirathiyuththaramaaga: enakkaaga un jeevanaik koduppaayoa?
seaval
koovugi’ratha’rku munnea
nee ennai moon’rutharam ma’ruthalippaayen’ru, meyyaagavea meyyaagavea unakkuch sollugi’rean en’raar. (yoavaan
13:38)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!