எனக்கு
மிகுந்த துக்கமும் இடைவிடாத
மனவேதனையும் உண்டாயிருக்கிறது; (ரோமர்
9:1)
enakku miguntha thukkamum idaividaatha
manaveathanaiyum u'ndaayirukki’rathu; (roamar 9:1)
நான் சொல்லுகிறது பொய்யல்ல,
கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்
என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச்
சாட்சியாயிருக்கிறது. (ரோமர் 9:2)
naan sollugi’rathu poyyalla, ki’risthuvukku'l u'nmaiyaich sollugi’rean en’ru parisuththaaavikku'l en manachsaadchiyum enakkuch saadchiyaayirukki’rathu. (roamar
9:2)
மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக
நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று
விரும்புவேனே. (ரோமர் 9:3)
maamsaththinpadi en inaththaaraagiya en sagoathararukkup bathilaaga naanea ki’risthuvaivittuch sabikkappattavanaaga vea'ndumen’ru virumbuveanea.
(roamar 9:3)
அவர்கள்
இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும்,
உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; (ரோமர்
9:4)
avarga'l isravealarea;
puththirasuvigaaramum,
magimaiyum, udanpadikkaiga'lum, niyaayappiramaa'namum, theavaaraathanaiyum, vaakkuththaththangga'lum avarga'ludaiyavaiga'lea; (roamar 9:4)
பிதாக்கள்
அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும்
அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
(ரோமர் 9:5)
pithaakka'l avarga'ludaiyavarga'lea; maamsaththinpadi
ki’risthuvum avarga'lil pi’ranthaarea,
ivar en’ren’raikkum sthoaththirikkappatta sarvaththi’rkum mealaana theavan.
aamen. (roamar 9:5)
தேவவசனம்
அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால்,
இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும்
இஸ்ரவேலரல்லவே. (ரோமர் 9:6)
theavavasanam avamaayp
poayit’ren’ru sollakkoodaathu; eanen’raal, israveal vamsaththaar ellaarum isravealarallavea. (roamar
9:6)
அவர்கள்
ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும்
பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்
என்று சொல்லியிருக்கிறதே. (ரோமர்
9:7)
avarga'l aabirahaamin santhathiyaaraanaalum ellaarum pi'l'laiga'lallavea; eesaakkinidaththil
un santhathi vi'langgum en’ru solliyirukki’rathea. (roamar 9:7)
அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய
பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச்
சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். (ரோமர்
9:8)
atheppadiyen’raal, maamsaththinpadi
pi'l'laiga'laanavarga'l theavanudaiya pi'l'laiga'lalla, vaakkuththaththaththinpadi pi'l'laiga'laanavarga'lea anthach santhathi en’re'n'nappadugi’raarga'l. (roamar
9:8)
அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த
காலத்திலே வருவேன், அப்பொழுது
சாராள் ஒரு குமாரனைப்
பெறுவாள் என்பதே. (ரோமர்
9:9)
antha vaakkuththaththamaana vaarththaiyaavathu: ku’riththa kaalaththilea varuvean,
appozhuthu saaraa'l oru kumaaranaip
pe’ruvaa'l enbathea. (roamar 9:9)
இதுவுமல்லாமல், நம்முடைய
பிதாவாகிய ஈசாக்கு என்னும்
ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, (ரோமர்
9:10)
ithuvumallaamal, nammudaiya pithaavaagiya eesaakku ennum oruvanaalea
rebekkaa'l karppavathiyaanapoathu, (roamar
9:10)
பிள்ளைகள்
இன்னும் பிறவாமலும், நல்வினை
தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய
தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம்
கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே
நிலைநிற்கும்படிக்கு, (ரோமர் 9:11)
pi'l'laiga'l innum pi’ravaamalum,
nalvinai theevinai on’rum seyyaamalumirukkaiyil,
theavanudaiya therinthuko'l'luthalinpadiyirukki’ra avarudaiya theermaanam
kiriyaiga'linaalea nilaini’rkaamal azhaikki’ravaraalea
nilaini’rkumpadikku, (roamar
9:11)
மூத்தவன்
இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. (ரோமர்
9:12)
mooththavan i'laiyavanukku oozhiyagnseyvaan en’ru ava'ludanea sollappattathu. (roamar
9:12)
அப்படியே,
யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும்
எழுதியிருக்கிறது. (ரோமர் 9:13)
appadiyea, yaakkoabaich sineagiththu, easaavai ve’ruththean
en’rum ezhuthiyirukki’rathu. (roamar 9:13)
ஆகையால்
நாம் என்ன சொல்லுவோம்?
தேவனிடத்திலே அநீதி உண்டென்று
சொல்லலாமா? சொல்லக்கூடாதே. (ரோமர்
9:14)
aagaiyaal naam enna solluvoam? theavanidaththilea aneethi
u'nden’ru sollalaamaa? sollakkoodaathea. (roamar
9:14)
அவர் மோசேயை நோக்கி:
எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல்
இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல்
உருக்கமாயிருப்பேன் என்றார். (ரோமர்
9:15)
avar moaseayai noakki: evanmeal
irakkamaayirukkach siththamaayiruppeanoa avanmeal irakkamaayiruppean, evanmeal
urukkamaayirukkach siththamaayiruppeanoa avanmeal urukkamaayiruppean en’raar. (roamar 9:15)
ஆகையால்
விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும்
அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
(ரோமர் 9:16)
aagaiyaal virumbugi’ravanaalum alla, oadugi’ravanaalum alla, iranggugi’ra theavanaaleayaam. (roamar
9:16)
மேலும்
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில்
காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும்
பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக
வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ரோமர்
9:17)
mealum ennudaiya vallamaiyai
unnidaththil kaa'nbikkumpadiyaagavum, ennudaiya naamam
boomiyil enggum pirasthaabamaagumpadiyaagavum, unnai nilaini’ruththinean
en’ru paarvoanudanea sonnathaaga veathaththil
solliyirukki’rathu. (roamar 9:17)
ஆதலால்
எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல்
இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக்
கடினப்படுத்துகிறார். (ரோமர் 9:18)
aathalaal evanmeal irakkamaayirukkach siththamaayirukki’raaroa avanmeal irakkamaayirukki’raar, evanaik kadinappaduththach siththamaayirukki’raaroa avanaik kadinappaduththugi’raar. (roamar 9:18)
இப்படியானால்,
அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே
சொல்லுவாய். (ரோமர் 9:19)
ippadiyaanaal, avar innum ean kut’rampidikki’raar? avar siththaththi’rku ethirththuni’rpavan yaar? en’ru ennudanea solluvaay. (roamar 9:19)
அப்படியானால்,
மனுஷனே, தேவனோடு எதிர்த்துத்
தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி:
நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
(ரோமர் 9:20)
appadiyaanaal, manushanea, theavanoadu
ethirththuth tharkkikki’ra nee yaar? uruvaakkappatta vasthu uruvaakkinavanai noakki:
nee ennai ean ippadi u'ndaakkinaayen’ru sollalaamaa?
(roamar 9:20)
மிதியிட்ட
ஒரே களிமண்ணினாலே குயவன்
ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான
காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல்
அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
(ரோமர் 9:21)
mithiyitta orea ka'lima'n'ninaalea kuyavan
oru paaththiraththaik kanamaana
kaariyaththukkum, oru paaththiraththaik kanaveenamaana kaariyaththukkum pa'n'nugi’ratha’rku ma'n'ninmeal
avanukku athigaaram illaiyoa? (roamar
9:21)
தேவன் தமது கோபத்தைக்
காண்பிக்கவும், தமது வல்லமையைத்
தெரிவிக்கவும், (ரோமர் 9:22)
theavan thamathu koabaththaik kaa'nbikkavum,
thamathu vallamaiyaith therivikkavum, (roamar
9:22)
தாம் மகிமைக்காக எத்தனமாக்கின
கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின்
ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்,
அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப்
பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
(ரோமர் 9:23)
thaam magimaikkaaga eththanamaakkina kirubaapaaththirangga'lmeal thammudaiya
magimaiyin aisuvariyaththaith theriyappaduththavum siththamaay, azhivukku eththanamaakkappatta koabaakkinaip
paaththirangga'lmeal migavum neediya saanthaththoadea po’rumaiyaayirunthaaraanaal unakkenna?
(roamar 9:23)
அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. (ரோமர்
9:24)
avar yootharilirunthumaaththiramalla, pu’rajaathiga'lilumirunthu nammai
azhaiththirukki’raarea. (roamar
9:24)
அந்தப்படி:
எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய
ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும்
சொல்லி அழைப்பேன். (ரோமர்
9:25)
anthappadi: enakku janangga'lallaathavarga'lai ennudaiya
janangga'l en’rum, sineagikkappadaathirunthava'laich sineagikkappattava'l en’rum solli azhaippean. (roamar
9:25)
நீங்கள்
என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச்
சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள்
ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்
என்னப்படுவார்கள் என்று ஓசியாவின்
தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. (ரோமர்
9:26)
neengga'l ennudaiya
janangga'lallaven’ru avarga'lukkuch sollappatta idaththilea
avarga'l jeevanu'l'la
theavanudaiya pi'l'laiga'l ennappaduvaarga'l en’ru oasiyaavin
theerkkatharisanaththil solliyirukki’rathu. (roamar
9:26)
அல்லாமலும்
இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம்
சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம்
இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; (ரோமர்
9:27)
allaamalum israveal puththirarudaiya ilakkam
samuththiraththin ma'nalaththanaiyaayirunthaalum, meethiyaayiruppavarga'l maaththiram iradchikkappaduvaarga'l en’rum; (roamar 9:27)
அவர் நீதியோடே சீக்கிரமாய்த்
தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர்
பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை
நிறைவேற்றி முடிப்பார் என்றும்
ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
(ரோமர் 9:28)
avar neethiyoadea seekkiramaayth thammudaiya kaariyaththai
ni’raiveat’ruvaar; karththar boomiyilea seekkiramaagavea kaariyaththai ni’raiveat’ri mudippaar
en’rum easaayaa isravealaraikku’riththuch sollugi’raan. (roamar
9:28)
அல்லாமலும்
ஏசாயா முன்னே சொன்னபடி:
சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே
ஒரு சந்ததியை மீதியாக
வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு
ஒத்திருப்போம். (ரோமர் 9:29)
allaamalum easaayaa munnea sonnapadi: seanaiga'lin karththar namakku'l'lea
oru santhathiyai
meethiyaaga vaikkaathirunthaaraanaal naam soathoamaippoalaagi komoaraavukku oththiruppoam. (roamar
9:29)
இப்படியிருக்க
நாம் என்னசொல்லுவோம்? நீதியைத்
தேடாத புறஜாதியார் நீதியை
அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
(ரோமர் 9:30)
ippadiyirukka naam ennasolluvoam? neethiyaith theadaatha
pu’rajaathiyaar neethiyai
adainthaarga'l; athu visuvaasaththinaalaagum neethiyea.
(roamar 9:30)
நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
(ரோமர் 9:31)
neethippiramaa'naththaith
theadina isravealaroa neethippiramaa'naththai adaiyavillai.
(roamar 9:31)
என்னத்தினாலென்றால், அவர்கள்
விசுவாசத்தினாலே அதைத் தேடாமல்,
நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால்
அதை அடையவில்லை; இடறுதற்கான
கல்லில் இடறினார்கள். (ரோமர்
9:32)
ennaththinaalen’raal, avarga'l visuvaasaththinaalea athaith theadaamal,
niyaayappiramaa'naththin kiriyaiga'linaalea
theadinapadiyaal athai adaiyavillai;
ida’rutha’rkaana kallil ida’rinaarga'l. (roamar
9:32)
இதோ, இடறுதற்கான கல்லையும்,
தவறுதற்கான கன்மலையையும், சீயோனில்
வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. (ரோமர்
9:33)
ithoa, ida’rutha’rkaana kallaiyum, thava’rutha’rkaana kanmalaiyaiyum, seeyoanil vaikki’rean; avaridaththil visuvaasamaayiruppavan evanoa
avan vedkappaduvathillai en’ru ezhuthiyirukki’rapadiyaayit’ru. (roamar 9:33)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!