சகோதரரே,
இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே
என் இருதயத்தின் விருப்பமும்
நான் தேவனை நோக்கிச்
செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. (ரோமர்
10:1)
sagoathararea, isravealar
iradchikkappadavea'ndum enbathea en iruthayaththin viruppamum
naan theavanai noakkich seyyum vi'n'nappamumaayirukki’rathu. (roamar 10:1)
தேவனைப்பற்றி
அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும்
அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. (ரோமர்
10:2)
theavanaippat’ri avarga'lukku
vairaakkiyamu'nden’ru avarga'laikku’riththuch saadchisollugi’rean; aagilum athu a’rivukkeat’ra vairaakkiyamalla. (roamar
10:2)
எப்படியென்றால், அவர்கள்
தேவநீதியை அறியாமல், தங்கள்
சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக்
கீழ்ப்படியாதிருக்கிறார்கள். (ரோமர் 10:3)
eppadiyen’raal, avarga'l theavaneethiyai a’riyaamal, thangga'l suyaneethiyai
nilaini’ruththath theadugi’rapadiyaal theavaneethikkuk keezhppadiyaathirukki’raarga'l. (roamar 10:3)
விசுவாசிக்கிற
எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து
நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். (ரோமர்
10:4)
visuvaasikki’ra evanukkum neethi
u'ndaagumpadiyaagak ki’risthu niyaayappiramaa'naththin mudivaayirukki’raar. (roamar 10:4)
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச்
செய்கிற மனுஷன் இவைகளால்
பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். (ரோமர்
10:5)
moasea niyaayappiramaa'naththinaalaagum neethiyaikku’riththu:
ivaiga'laich seygi’ra manushan ivaiga'laal pizhaippaan en’ru ezhuthiyirukki’raan. (roamar 10:5)
விசுவாசத்தினாலாகும் நீதியானது:
கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு
ஏறுகிறவன் யார்? (ரோமர்
10:6)
visuvaasaththinaalaagum neethiyaanathu: ki’risthuvai i’ranggivarappa'n'numpadi paraloagaththukku
ea’rugi’ravan yaar? (roamar 10:6)
அல்லது
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு
இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே
சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; (ரோமர்
10:7)
allathu ki’risthuvai
mariththoarilirunthu ea’rivarappa'n'numpadi paathaa'laththukku i’ranggugi’ravan yaar? en’ru un u'l'laththilea sollaathiruppaayaaga en’ru sollugi’rathuman’ri; (roamar 10:7)
இந்த வார்த்தை உனக்குச்
சமீபமாய் உன் வாயிலும்
உன் இருதயத்திலும் இருக்கிறது
என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள்
பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
(ரோமர் 10:8)
intha vaarththai unakkuch sameebamaay un vaayilum un iruthayaththilum irukki’rathu en’rum sollugi’rathu; intha vaarththai
naangga'l pirasanggikki’ra visuvaasaththin vaarththaiyea. (roamar
10:8)
என்னவென்றால்,
கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே
அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். (ரோமர்
10:9)
ennaven’raal, karththaraagiya iyeasuvai nee un vaayinaalea a’rikkaiyittu, theavan
avarai mariththoarilirunthu ezhuppinaaren’ru un iruthayaththilea visuvaasiththaal iradchikkappaduvaay. (roamar 10:9)
நீதியுண்டாக
இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே
அறிக்கைபண்ணப்படும். (ரோமர் 10:10)
neethiyu'ndaaga iruthayaththilea visuvaasikkappadum, iradchippu'ndaaga vaayinaalea
a’rikkaipa'n'nappadum. (roamar
10:10)
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. (ரோமர்
10:11)
avarai visuvaasikki’ravan evanoa
avan vedkappaduvathillaiyen’ru veatham sollugi’rathu. (roamar
10:11)
யூதனென்றும்
கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை;
எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத்
தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். (ரோமர்
10:12)
yoothanen’rum kireakkanen’rum viththiyaasamea illai; ellaarukkung
karththaraanavar thammaith thozhuthuko'l'lugi’ra yaavarukkum aisuvariyasambannaraayirukki’raar. (roamar 10:12)
ஆதலால்
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும்
இரட்சிக்கப்படுவான். (ரோமர் 10:13)
aathalaal karththarudaiya naamaththaith
thozhuthuko'l'lugi’ra evanum
iradchikkappaduvaan. (roamar
10:13)
அவரை விசுவாசியாதவர்கள் எப்படி
அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி
விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால்
எப்படிக் கேள்விப்படுவார்கள்? (ரோமர்
10:14)
avarai visuvaasiyaathavarga'l eppadi
avaraith thozhuthuko'l'luvaarga'l? avaraikku’riththuk
kea'lvippadaathavarga'l eppadi
visuvaasippaarga'l? pirasanggikki’ravan illaavittaal eppadik kea'lvippaduvaarga'l? (roamar 10:14)
அனுப்பப்படாவிட்டால் எப்படிப்
பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய்
அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு
அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. (ரோமர்
10:15)
anuppappadaavittaal eppadip pirasanggippaarga'l? samaathaanaththaikkoo’ri, na’rkaariyangga'laich suviseashamaay a’rivikki’ravarga'ludaiya
paathangga'l evva'lavu
azhagaanavaiga'l en’ru ezhuthiyirukki’rathea. (roamar 10:15)
ஆனாலும்
சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து
ஏசாயா: கர்த்தாவே, எங்கள்
மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
(ரோமர் 10:16)
aanaalum suviseashaththukku ellaarum keezhppadiyavillai. athaikku’riththu easaayaa: karththaavea, engga'l moolamaayk kea'lvippattathai visuvaasiththavan yaar en’ru sollugi’raan. (roamar
10:16)
ஆதலால்
விசுவாசம் கேள்வியினாலே வரும்,
கேள்வி தேவனுடைய வசனத்தினாலே
வரும். (ரோமர் 10:17)
aathalaal visuvaasam kea'lviyinaalea varum,
kea'lvi theavanudaiya vasanaththinaalea varum. (roamar
10:17)
இப்படியிருக்க, அவர்கள்
கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்;
கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம்
பூமியெங்கும் அவைகளின் வசனங்கள்
பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
(ரோமர் 10:18)
ippadiyirukka, avarga'l kea'lvippadavillaiyaa en’ru keadki’rean; kea'lvippattaarga'l; avaiga'lin saththam
boomiyenggum avaiga'lin vasanangga'l poochchakkaraththuk
kadaisivaraikkum sellugi’rathea. (roamar
10:18)
இஸ்ரவேலர்
அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள்.
முதலாவது, மோசே: எனக்கு
ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு
எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே
உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான்.
(ரோமர் 10:19)
isravealar athai a’riyavillaiyaa en’ru keadki’rean, a’rinthaarga'l. muthalaavathu, moasea: enakku janangga'lallaathavarga'laikko'ndu naan ungga'lukku
erichchal u'ndaakkuvean; buththiyeenamu'l'la janangga'laalea
ungga'lukkuk koabamoottuvean en’raan. (roamar 10:19)
அல்லாமலும்
ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே
கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக்
கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
(ரோமர் 10:20)
allaamalum easaayaa: ennaith theadaathavarga'laalea ka'nda’riyappattean, ennai visaariththuk kea'laathavarga'lukku
ve'liyaranggamaanean en’ru thairiyangko'ndu sollugi’raan. (roamar
10:20)
இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப்
பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும்
என் கைகளை நீட்டினேன்
என்று அவன் சொல்லியிருக்கிறான். (ரோமர்
10:21)
isravealaraikku’riththoa: keezhppadiyaathavarga'lum ethirththup peasugi’ravarga'lumaayirukki’ra janangga'lidaththi’rku naa'lmuzhuthum en kaiga'lai neettinean en’ru avan solliyirukki’raan. (roamar
10:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!