Tuesday, May 24, 2016

Roamar 7 | ரோமர் 7 | Romans 7

நியாயப்பிரமாணத்தை  அறிந்திருக்கிறவர்களுடனே  பேசுகிறேன்.  சகோதரரே,  ஒரு  மனுஷன்  உயிரோடிருக்குமளவும்  நியாயப்பிரமாணம்  அவனை  ஆளுகிறதென்று  அறியாமலிருக்கிறீர்களா?  (ரோமர்  7:1)

niyaayappiramaa'naththai  a’rinthirukki’ravarga'ludanea  peasugi’rean.  sagoathararea,  oru  manushan  uyiroadirukkuma'lavum  niyaayappiramaa'nam  avanai  aa'lugi’rathen’ru  a’riyaamalirukki’reerga'laa?  (roamar  7:1)

அதெப்படியென்றால்,  புருஷனையுடைய  ஸ்திரீ  தன்  புருஷன்  உயிரோடிருக்குமளவும்  நியாயப்பிரமாணத்தின்படியே  அவனுடைய  நிபந்தனைக்கு  உட்பட்டிருக்கிறாள்;  புருஷன்  மரித்த  பின்பு  புருஷனைப்பற்றிய  பிரமாணத்தினின்று  விடுதலையாயிருக்கிறாள்.  (ரோமர்  7:2)

atheppadiyen’raal,  purushanaiyudaiya  sthiree  than  purushan  uyiroadirukkuma'lavum  niyaayappiramaa'naththinpadiyea  avanudaiya  nibanthanaikku  udpattirukki’raa'l;  purushan  mariththa  pinbu  purushanaippat’riya  piramaa'naththinin’ru  viduthalaiyaayirukki’raa'l.  (roamar  7:2)

ஆகையால்,  புருஷன்  உயிரோடிருக்கையில்  அவள்  வேறொரு  புருஷனை  விவாகம்பண்ணினால்  விபசாரியென்னப்படுவாள்;  புருஷன்  மரித்தபின்பு  அவள்  அந்தப்  பிரமாணத்தினின்று  விடுதலையானபடியால்,  வேறொரு  புருஷனை  விவாகம்பண்ணினாலும்  விபசாரியல்ல.  (ரோமர்  7:3)

aagaiyaal,  purushan  uyiroadirukkaiyil  ava'l  vea’roru  purushanai  vivaagampa'n'ninaal  vibasaariyennappaduvaa'l;  purushan  mariththapinbu  ava'l  anthap  piramaa'naththinin’ru  viduthalaiyaanapadiyaal,  vea’roru  purushanai  vivaagampa'n'ninaalum  vibasaariyalla.  (roamar  7:3)

அப்படிப்போல,  என்  சகோதரரே,  நீங்கள்  மரித்தோரிலிருந்து  எழுந்த  கிறிஸ்து  என்னும்  வேறொருவருடையவர்களாகி,  தேவனுக்கென்று  கனிகொடுக்கும்படி  கிறிஸ்துவின்  சரீரத்தினாலே  நியாயப்பிரமாணத்துக்கு  மரித்தவர்களானீர்கள்.  (ரோமர்  7:4)

appadippoala,  en  sagoathararea,  neengga'l  mariththoarilirunthu  ezhuntha  ki’risthu  ennum  vea’roruvarudaiyavarga'laagi,  theavanukken’ru  kanikodukkumpadi  ki’risthuvin  sareeraththinaalea  niyaayappiramaa'naththukku  mariththavarga'laaneerga'l.  (roamar  7:4)

நாம்  மாம்சத்திற்கு  உட்பட்டிருந்த  காலத்தில்  நியாயப்பிரமாணத்தினாலே  தோன்றிய  பாவ  இச்சைகள்  மரணத்திற்கு  ஏதுவான  கனிகளைக்  கொடுக்கத்தக்கதாக  நம்முடைய  அவயவங்களிலே  பெலன்செய்தது.  (ரோமர்  7:5)

naam  maamsaththi’rku  udpattiruntha  kaalaththil  niyaayappiramaa'naththinaalea  thoan’riya  paava  ichchaiga'l  mara'naththi’rku  eathuvaana  kaniga'laik  kodukkaththakkathaaga  nammudaiya  avayavangga'lilea  belanseythathu.  (roamar  7:5)

இப்பொழுதோ  நாம்  பழமையான  எழுத்தின்படியல்ல,  புதுமையான  ஆவியின்படி  ஊழியஞ்செய்யத்தக்கதாக,  நம்மைக்  கட்டியிருந்த  நியாயப்பிரமாணத்துக்கு  நாம்  மரித்தவர்களாகி,  அதினின்று  விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.  (ரோமர்  7:6)

ippozhuthoa  naam  pazhamaiyaana  ezhuththinpadiyalla,  puthumaiyaana  aaviyinpadi  oozhiyagnseyyaththakkathaaga,  nammaik  kattiyiruntha  niyaayappiramaa'naththukku  naam  mariththavarga'laagi,  athinin’ru  viduthalaiyaakkappattirukki’roam.  (roamar  7:6)

ஆகையால்  என்ன  சொல்லுவோம்?  நியாயப்பிரமாணம்  பாவமோ?  அல்லவே.  பாவம்  இன்னதென்று  நியாயப்பிரமாணத்தினால்  நான்  அறிந்தேனேயன்றி  மற்றப்படி  அறியவில்லை;  இச்சியாதிருப்பாயாக  என்று  நியாயப்பிரமாணம்  சொல்லாதிருந்தால்,  இச்சை  பாவம்  என்று  நான்  அறியாமலிருப்பேனே.  (ரோமர்  7:7)

aagaiyaal  enna  solluvoam?  niyaayappiramaa'nam  paavamoa?  allavea.  paavam  innathen’ru  niyaayappiramaa'naththinaal  naan  a’rintheaneayan’ri  mat’rappadi  a’riyavillai;  ichchiyaathiruppaayaaga  en’ru  niyaayappiramaa'nam  sollaathirunthaal,  ichchai  paavam  en’ru  naan  a’riyaamaliruppeanea.  (roamar  7:7)

பாவமானது  கற்பனையினாலே  சமயம்  பெற்றுச்  சகலவித  இச்சைகளையும்  என்னில்  நடப்பித்தது.  நியாயப்பிரமாணம்  இல்லாவிட்டால்  பாவம்  செத்ததாயிருக்குமே.  (ரோமர்  7:8)

paavamaanathu  ka’rpanaiyinaalea  samayam  pet’ruch  sagalavitha  ichchaiga'laiyum  ennil  nadappiththathu.  niyaayappiramaa'nam  illaavittaal  paavam  seththathaayirukkumea.  (roamar  7:8)

முன்னே  நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது  நான்  ஜீவனுள்ளவனாயிருந்தேன்;  கற்பனை  வந்தபோது  பாவம்  உயிர்கொண்டது,  நான்  மரித்தவனானேன்.  (ரோமர்  7:9)

munnea  niyaayappiramaa'namillaathavanaayirunthapoathu  naan  jeevanu'l'lavanaayirunthean;  ka’rpanai  vanthapoathu  paavam  uyirko'ndathu,  naan  mariththavanaanean.  (roamar  7:9)

இப்படியிருக்க,  ஜீவனுக்கேதுவான  கற்பனையே  எனக்கு  மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.  (ரோமர்  7:10)

ippadiyirukka,  jeevanukkeathuvaana  ka’rpanaiyea  enakku  mara'naththukkeathuvaayirukkakka'ndean.  (roamar  7:10)

பாவமானது  கற்பனையினாலே  சமயம்பெற்று,  என்னை  வஞ்சித்து,  அதினாலே  என்னைக்  கொன்றது.  (ரோமர்  7:11)

paavamaanathu  ka’rpanaiyinaalea  samayampet’ru,  ennai  vagnchiththu,  athinaalea  ennaik  kon’rathu.  (roamar  7:11)

ஆகையால்  நியாயப்பிரமாணம்  பரிசுத்தமுள்ளதுதான்,  கற்பனையும்  பரிசுத்தமாயும்  நீதியாயும்  நன்மையாயும்  இருக்கிறது.  (ரோமர்  7:12)

aagaiyaal  niyaayappiramaa'nam  parisuththamu'l'lathuthaan,  ka’rpanaiyum  parisuththamaayum  neethiyaayum  nanmaiyaayum  irukki’rathu.  (roamar  7:12)

இப்படியிருக்க,  நன்மையானது  எனக்கு  மரணமாயிற்றோ?  அப்படியல்ல;  பாவமே  எனக்கு  மரணமாயிற்று;  பாவம்  கற்பனையினாலே  மிகுந்த  பாவமுள்ளதாகும்படிக்கும்,  அது  நன்மையானதைக்  கொண்டு  எனக்கு  மரணத்தை  உண்டாக்கினதினாலே,  பாவமாகவே  விளங்கும்படிக்கும்  அப்படியாயிற்று.  (ரோமர்  7:13)

ippadiyirukka,  nanmaiyaanathu  enakku  mara'namaayit’roa?  appadiyalla;  paavamea  enakku  mara'namaayit’ru;  paavam  ka’rpanaiyinaalea  miguntha  paavamu'l'lathaagumpadikkum,  athu  nanmaiyaanathaik  ko'ndu  enakku  mara'naththai  u'ndaakkinathinaalea,  paavamaagavea  vi'langgumpadikkum  appadiyaayit’ru.  (roamar  7:13)

மேலும்,  நமக்குத்  தெரிந்திருக்கிறபடி,  நியாயப்பிரமாணம்  ஆவிக்குரியதாயிருக்கிறது,  நானோ  பாவத்துக்குக்  கீழாக  விற்கப்பட்டு,  மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.  (ரோமர்  7:14)

mealum,  namakkuth  therinthirukki’rapadi,  niyaayappiramaa'nam  aavikkuriyathaayirukki’rathu,  naanoa  paavaththukkuk  keezhaaga  vi’rkappattu,  maamsaththukkuriyavanaayirukki’rean.  (roamar  7:14)

எப்படியெனில்,  நான்  செய்கிறது  எனக்கே  சம்மதியில்லை;  நான்  விரும்புகிறதைச்  செய்யாமல்,  நான்  வெறுக்கிறதையே  செய்கிறேன்.  (ரோமர்  7:15)

eppadiyenil,  naan  seygi’rathu  enakkea  sammathiyillai;  naan  virumbugi’rathaich  seyyaamal,  naan  ve’rukki’rathaiyea  seygi’rean.  (roamar  7:15)

இப்படி  நான்  விரும்பாததைச்  செய்கிறவனாயிருக்க,  நியாயப்பிரமாணம்  நல்லதென்று  ஒத்துக்கொள்ளுகிறேனே.  (ரோமர்  7:16)

ippadi  naan  virumbaathathaich  seygi’ravanaayirukka,  niyaayappiramaa'nam  nallathen’ru  oththukko'l'lugi’reanea.  (roamar  7:16)

ஆதலால்  நான்  அல்ல,  எனக்குள்  வாசமாயிருக்கிற  பாவமே  அப்படிச்  செய்கிறது.  (ரோமர்  7:17)

aathalaal  naan  alla,  enakku'l  vaasamaayirukki’ra  paavamea  appadich  seygi’rathu.  (roamar  7:17)

அதெப்படியெனில்,  என்னிடத்தில்,  அதாவது,  என்  மாம்சத்தில்,  நன்மை  வாசமாயிருக்கிறதில்லையென்று  நான்  அறிந்திருக்கிறேன்;  நன்மைசெய்ய  வேண்டுமென்கிற  விருப்பம்  என்னிடத்திலிருக்கிறது,  நன்மைசெய்வதோ  என்னிடத்திலில்லை.  (ரோமர்  7:18)

atheppadiyenil,  ennidaththil,  athaavathu,  en  maamsaththil,  nanmai  vaasamaayirukki’rathillaiyen’ru  naan  a’rinthirukki’rean;  nanmaiseyya  vea'ndumengi’ra  viruppam  ennidaththilirukki’rathu,  nanmaiseyvathoa  ennidaththilillai.  (roamar  7:18)

ஆதலால்  நான்  விரும்புகிற  நன்மையைச்  செய்யாமல்,  விரும்பாத  தீமையையே  செய்கிறேன்.  (ரோமர்  7:19)

aathalaal  naan  virumbugi’ra  nanmaiyaich  seyyaamal,  virumbaatha  theemaiyaiyea  seygi’rean.  (roamar  7:19)

அந்தப்படி  நான்  விரும்பாததை  நான்  செய்தால்,  நான்  அல்ல,  எனக்குள்ளே  வாசமாயிருக்கிற  பாவமே  அப்படிச்  செய்கிறது.  (ரோமர்  7:20)

anthappadi  naan  virumbaathathai  naan  seythaal,  naan  alla,  enakku'l'lea  vaasamaayirukki’ra  paavamea  appadich  seygi’rathu.  (roamar  7:20)

ஆனபடியால்  நன்மைசெய்ய  விரும்புகிற  என்னிடத்தில்  தீமையுண்டென்கிற  ஒரு  பிரமாணத்தைக்  காண்கிறேன்.  (ரோமர்  7:21)

aanapadiyaal  nanmaiseyya  virumbugi’ra  ennidaththil  theemaiyu'ndengi’ra  oru  piramaa'naththaik  kaa'ngi’rean.  (roamar  7:21)

உள்ளான  மனுஷனுக்கேற்றபடி  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தின்மேல்  பிரியமாயிருக்கிறேன்.  (ரோமர்  7:22)

u'l'laana  manushanukkeat’rapadi  theavanudaiya  niyaayappiramaa'naththinmeal  piriyamaayirukki’rean.  (roamar  7:22)

ஆகிலும்  என்  மனதின்  பிரமாணத்துக்கு  விரோதமாய்ப்  போராடுகிற  வேறொரு  பிரமாணத்தை  என்  அவயவங்களில்  இருக்கக்  காண்கிறேன்;  அது  என்  அவயவங்களில்  உண்டாயிருக்கிற  பாவப்பிரமாணத்துக்கு  என்னைச்  சிறையாக்கிக்  கொள்ளுகிறது.  (ரோமர்  7:23)

aagilum  en  manathin  piramaa'naththukku  viroathamaayp  poaraadugi’ra  vea’roru  piramaa'naththai  en  avayavangga'lil  irukkak  kaa'ngi’rean;  athu  en  avayavangga'lil  u'ndaayirukki’ra  paavappiramaa'naththukku  ennaich  si’raiyaakkik  ko'l'lugi’rathu.  (roamar  7:23)

நிர்ப்பந்தமான  மனுஷன்  நான்!  இந்த  மரணசரீரத்தினின்று  யார்  என்னை  விடுதலையாக்குவார்?  (ரோமர்  7:24)

nirppanthamaana  manushan  naan!  intha  mara'nasareeraththinin’ru  yaar  ennai  viduthalaiyaakkuvaar?  (roamar  7:24)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்த்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  ஆதலால்  நானே  என்  மனதினாலே  தேவனுடைய  நியாயப்பிரமாணத்துக்கும்,  மாம்சத்தினாலேயோ  பாவப்பிரமாணத்துக்கும்  ஊழியஞ்செய்கிறேன்.  (ரோமர்  7:25)

nammudaiya  karththaraagiya  iyeasuki’risthumoolamaayth  theavanai  sthoaththirikki’rean.  aathalaal  naanea  en  manathinaalea  theavanudaiya  niyaayappiramaa'naththukkum,  maamsaththinaaleayoa  paavappiramaa'naththukkum  oozhiyagnseygi’rean.  (roamar  7:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!