Tuesday, May 24, 2016

Roamar 6 | ரோமர் 6 | Romans 6


ஆகையால்  என்னசொல்லுவோம்?  கிருபை  பெருகும்படிக்குப்  பாவத்திலே  நிலைநிற்கலாம்  என்று  சொல்லுவோமா?  கூடாதே.  (ரோமர்  6:1)

aagaiyaal  ennasolluvoam?  kirubai  perugumpadikkup  paavaththilea  nilaini’rkalaam  en’ru  solluvoamaa?  koodaathea.  (roamar  6:1)

பாவத்துக்கு  மரித்த  நாம்  இனி  அதிலே  எப்படிப்  பிழைப்போம்?  (ரோமர்  6:2)

paavaththukku  mariththa  naam  ini  athilea  eppadip  pizhaippoam?  (roamar  6:2)

கிறிஸ்து  இயேசுவுக்குள்ளாக  ஞானஸ்நானம்  பெற்ற  நாமனைவரும்  அவருடைய  மரணத்துக்குள்ளாக  ஞானஸ்நானம்  பெற்றதை  அறியாமலிருக்கிறீர்களா?  (ரோமர்  6:3)

ki’risthu  iyeasuvukku'l'laaga  gnaanasnaanam  pet’ra  naamanaivarum  avarudaiya  mara'naththukku'l'laaga  gnaanasnaanam  pet’rathai  a’riyaamalirukki’reerga'laa?  (roamar  6:3)

மேலும்  பிதாவின்  மகிமையினாலே  கிறிஸ்து  மரித்தோரிலிருந்து  எழுப்பப்பட்டதுபோல,  நாமும்  புதிதான  ஜீவனுள்ளவர்களாய்  நடந்துகொள்ளும்படிக்கு,  அவருடைய  மரணத்திற்குள்ளாக்கும்  ஞானஸ்நானத்தினாலே  கிறிஸ்துவுடனேகூட  அடக்கம்பண்ணப்பட்டோம்.  (ரோமர்  6:4)

mealum  pithaavin  magimaiyinaalea  ki’risthu  mariththoarilirunthu  ezhuppappattathupoala,  naamum  puthithaana  jeevanu'l'lavarga'laay  nadanthuko'l'lumpadikku,  avarudaiya  mara'naththi’rku'l'laakkum  gnaanasnaanaththinaalea  ki’risthuvudaneakooda  adakkampa'n'nappattoam.  (roamar  6:4)

ஆதலால்  அவருடைய  மரணத்தின்  சாயலில்  நாம்  இணைக்கப்பட்டவர்களானால்,  அவர்  உயிர்த்தெழுதலின்  சாயலிலும்  இணைக்கப்பட்டிருப்போம்.  (ரோமர்  6:5)

aathalaal  avarudaiya  mara'naththin  saayalil  naam  i'naikkappattavarga'laanaal,  avar  uyirththezhuthalin  saayalilum  i'naikkappattiruppoam.  (roamar  6:5)

நாம்  இனிப்  பாவத்துக்கு  ஊழியஞ்  செய்யாதபடிக்கு,  பாவசரீரம்  ஒழிந்துபோகும்பொருட்டாக,  நம்முடைய  பழைய  மனுஷன்  அவரோடேகூடச்  சிலுவையில்  அறையப்பட்டதென்று  அறிந்திருக்கிறோம்.  (ரோமர்  6:6)

naam  inip  paavaththukku  oozhiyagn  seyyaathapadikku,  paavasareeram  ozhinthupoagumporuttaaga,  nammudaiya  pazhaiya  manushan  avaroadeakoodach  siluvaiyil  a’raiyappattathen’ru  a’rinthirukki’roam.  (roamar  6:6)

மரித்தவன்  பாவத்துக்கு  நீங்கி  விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.  (ரோமர்  6:7)

mariththavan  paavaththukku  neenggi  viduthalaiyaakkappattirukki’raanea.  (roamar  6:7)

ஆகையால்  கிறிஸ்துவுடனேகூட  நாம்  மரித்தோமானால்,  அவருடனேகூடப்  பிழைத்தும்  இருப்போம்  என்று  நம்புகிறோம்.  (ரோமர்  6:8)

aagaiyaal  ki’risthuvudaneakooda  naam  mariththoamaanaal,  avarudaneakoodap  pizhaiththum  iruppoam  en’ru  nambugi’roam.  (roamar  6:8)

மரித்தோரிலிருந்து  எழுந்த  கிறிஸ்து  இனி  மரிப்பதில்லையென்று  அறிந்திருக்கிறோம்;  மரணம்  இனி  அவரை  ஆண்டுகொள்வதில்லை.  (ரோமர்  6:9)

mariththoarilirunthu  ezhuntha  ki’risthu  ini  marippathillaiyen’ru  a’rinthirukki’roam;  mara'nam  ini  avarai  aa'nduko'lvathillai.  (roamar  6:9)

அவர்  மரித்தது,  பாவத்திற்கென்று  ஒரேதரம்  மரித்தார்;  அவர்  பிழைத்திருக்கிறது,  தேவனுக்கென்று  பிழைத்திருக்கிறார்.  (ரோமர்  6:10)

avar  mariththathu,  paavaththi’rken’ru  oreatharam  mariththaar;  avar  pizhaiththirukki’rathu,  theavanukken’ru  pizhaiththirukki’raar.  (roamar  6:10)

அப்படியே  நீங்களும்,  உங்களைப்  பாவத்திற்கு  மரித்தவர்களாகவும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவுக்குள்  தேவனுக்கென்று  பிழைத்திருக்கிறவர்களாகவும்  எண்ணிக்கொள்ளுங்கள்.  (ரோமர்  6:11)

appadiyea  neengga'lum,  ungga'laip  paavaththi’rku  mariththavarga'laagavum,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvukku'l  theavanukken’ru  pizhaiththirukki’ravarga'laagavum  e'n'nikko'l'lungga'l.  (roamar  6:11)

ஆகையால்,  நீங்கள்  சரீர  இச்சைகளின்படி  பாவத்திற்குக்  கீழ்ப்படியத்தக்கதாக,  சாவுக்கேதுவான  உங்கள்  சரீரத்தில்  பாவம்  ஆளாதிருப்பதாக.  (ரோமர்  6:12)

aagaiyaal,  neengga'l  sareera  ichchaiga'linpadi  paavaththi’rkuk  keezhppadiyaththakkathaaga,  saavukkeathuvaana  ungga'l  sareeraththil  paavam  aa'laathiruppathaaga.  (roamar  6:12)

நீங்கள்  உங்கள்  அவயவங்களை  அநீதியின்  ஆயுதங்களாகப்  பாவத்திற்கு  ஒப்புக்கொடாமல்,  உங்களை  மரித்தோரிலிருந்து  பிழைத்திருக்கிறவர்களாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்து,  உங்கள்  அவயவங்களை  நீதிக்குரிய  ஆயுதங்களாகத்  தேவனுக்கு  ஒப்புக்கொடுங்கள்.  (ரோமர்  6:13)

neengga'l  ungga'l  avayavangga'lai  aneethiyin  aayuthangga'laagap  paavaththi’rku  oppukkodaamal,  ungga'lai  mariththoarilirunthu  pizhaiththirukki’ravarga'laagath  theavanukku  oppukkoduththu,  ungga'l  avayavangga'lai  neethikkuriya  aayuthangga'laagath  theavanukku  oppukkodungga'l.  (roamar  6:13)

நீங்கள்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டிராமல்  கிருபைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறபடியால்,  பாவம்  உங்களை  மேற்கொள்ளமாட்டாது.  (ரோமர்  6:14)

neengga'l  niyaayappiramaa'naththi’rkuk  keezhppattiraamal  kirubaikkuk  keezhppattirukki’rapadiyaal,  paavam  ungga'lai  mea’rko'l'lamaattaathu.  (roamar  6:14)

இதினால்  என்ன?  நாம்  நியாயப்பிரமாணத்திற்குக்  கீழ்ப்பட்டிராமல்  கிருபைக்குக்  கீழ்ப்பட்டிருக்கிறபடியால்,  பாவஞ்செய்யலாமா?  கூடாதே.  (ரோமர்  6:15)

ithinaal  enna?  naam  niyaayappiramaa'naththi’rkuk  keezhppattiraamal  kirubaikkuk  keezhppattirukki’rapadiyaal,  paavagnseyyalaamaa?  koodaathea.  (roamar  6:15)

மரணத்துக்கேதுவான  பாவத்துக்கானாலும்,  நீதிக்கேதுவான  கீழ்ப்படிதலுக்கானாலும்,  எதற்குக்  கீழ்ப்படியும்படி  உங்களை  அடிமைகளாக  ஒப்புக்கொடுக்கிறீர்களோ,  அதற்கே  கீழ்ப்படிகிற  அடிமைகளாயிருக்கிறீர்களென்று  அறியீர்களா?  (ரோமர்  6:16)

mara'naththukkeathuvaana  paavaththukkaanaalum,  neethikkeathuvaana  keezhppadithalukkaanaalum,  etha’rkuk  keezhppadiyumpadi  ungga'lai  adimaiga'laaga  oppukkodukki’reerga'loa,  atha’rkea  keezhppadigi’ra  adimaiga'laayirukki’reerga'len’ru  a’riyeerga'laa?  (roamar  6:16)

முன்னே  நீங்கள்  பாவத்திற்கு  அடிமைகளாயிருந்தும்,  இப்பொழுது  உங்களுக்கு  ஒப்புவிக்கப்பட்ட  உபதேச  சட்டத்திற்கு  நீங்கள்  மனப்பூர்வமாய்க்  கீழ்ப்படிந்ததினாலே  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  (ரோமர்  6:17)

munnea  neengga'l  paavaththi’rku  adimaiga'laayirunthum,  ippozhuthu  ungga'lukku  oppuvikkappatta  ubatheasa  sattaththi’rku  neengga'l  manappoorvamaayk  keezhppadinthathinaalea  theavanukku  sthoaththiram.  (roamar  6:17)

பாவத்தினின்று  நீங்கள்  விடுதலையாக்கப்பட்டு,  நீதிக்கு  அடிமைகளானீர்கள்.  (ரோமர்  6:18)

paavaththinin’ru  neengga'l  viduthalaiyaakkappattu,  neethikku  adimaiga'laaneerga'l.  (roamar  6:18)

உங்கள்  மாம்ச  பலவீனத்தினிமித்தம்  மனுஷர்  பேசுகிறபிரகாரமாய்ப்  பேசுகிறேன்.  அக்கிரமத்தை  நடப்பிக்கும்படி  முன்னே  நீங்கள்  உங்கள்  அவயவங்களை  அசுத்தத்திற்கும்  அக்கிரமத்திற்கும்  அடிமைகளாக  ஒப்புக்கொடுத்ததுபோல,  இப்பொழுது  பரிசுத்தமானதை  நடப்பிக்கும்படி  உங்கள்  அவயவங்களை  நீதிக்கு  அடிமைகளாக  ஒப்புக்கொடுங்கள்.  (ரோமர்  6:19)

ungga'l  maamsa  balaveenaththinimiththam  manushar  peasugi’rapiragaaramaayp  peasugi’rean.  akkiramaththai  nadappikkumpadi  munnea  neengga'l  ungga'l  avayavangga'lai  asuththaththi’rkum  akkiramaththi’rkum  adimaiga'laaga  oppukkoduththathupoala,  ippozhuthu  parisuththamaanathai  nadappikkumpadi  ungga'l  avayavangga'lai  neethikku  adimaiga'laaga  oppukkodungga'l.  (roamar  6:19)

பாவத்திற்கு  நீங்கள்  அடிமைகளாயிருந்த  காலத்தில்  நீதிக்கு  நீங்கினவர்களாயிருந்தீர்கள்.  (ரோமர்  6:20)

paavaththi’rku  neengga'l  adimaiga'laayiruntha  kaalaththil  neethikku  neengginavarga'laayiruntheerga'l.  (roamar  6:20)

இப்பொழுது  உங்களுக்கு  வெட்கமாகத்  தோன்றுகிற  காரியங்களினாலே  அக்காலத்தில்  உங்களுக்கு  என்ன  பலன்  கிடைத்தது?  அவைகளின்  முடிவு  மரணமே.  (ரோமர்  6:21)

ippozhuthu  ungga'lukku  vedkamaagath  thoan’rugi’ra  kaariyangga'linaalea  akkaalaththil  ungga'lukku  enna  palan  kidaiththathu?  avaiga'lin  mudivu  mara'namea.  (roamar  6:21)

இப்பொழுது  நீங்கள்  பாவத்தினின்று  விடுதலையாக்கப்பட்டு,  தேவனுக்கு  அடிமைகளானதினால்,  பரிசுத்தமாகுதல்  உங்களுக்குக்  கிடைக்கும்  பலன்,  முடிவோ  நித்தியஜீவன்.  (ரோமர்  6:22)

ippozhuthu  neengga'l  paavaththinin’ru  viduthalaiyaakkappattu,  theavanukku  adimaiga'laanathinaal,  parisuththamaaguthal  ungga'lukkuk  kidaikkum  palan,  mudivoa  niththiyajeevan.  (roamar  6:22)

பாவத்தின்  சம்பளம்  மரணம்;  தேவனுடைய  கிருபைவரமோ  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினால்  உண்டான  நித்தியஜீவன்.  (ரோமர்  6:23)

paavaththin  samba'lam  mara'nam;  theavanudaiya  kirubaivaramoa  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinaal  u'ndaana  niththiyajeevan.  (roamar  6:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!