Tuesday, May 24, 2016

Roamar 5 | ரோமர் 5 | Romans 5

இவ்விதமாக,  நாம்  விசுவாசத்தினாலே  நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்  தேவனிடத்தில்  சமாதானம்  பெற்றிருக்கிறோம்.  (ரோமர்  5:1)

ivvithamaaga,  naam  visuvaasaththinaalea  neethimaanga'laakkappattirukki’rapadiyaal,  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthumoolamaay  theavanidaththil  samaathaanam  pet’rirukki’roam.  (roamar  5:1)

அவர்மூலமாய்  நாம்  இந்தக்  கிருபையில்  பிரவேசிக்கும்  சிலாக்கியத்தை  விசுவாசத்தினால்  பெற்று  நிலைகொண்டிருந்து,  தேவமகிமையை  அடைவோமென்கிற  நம்பிக்கையினாலே  மேன்மைபாராட்டுகிறோம்.  (ரோமர்  5:2)

avarmoolamaay  naam  inthak  kirubaiyil  piraveasikkum  silaakkiyaththai  visuvaasaththinaal  pet’ru  nilaiko'ndirunthu,  theavamagimaiyai  adaivoamengi’ra  nambikkaiyinaalea  meanmaipaaraattugi’roam.  (roamar  5:2)

அதுமாத்திரமல்ல,  உபத்திரவம்  பொறுமையையும்,  பொறுமை  பரீட்சையையும்,  பரீட்சை  நம்பிக்கையையும்  உண்டாக்குகிறதென்று  நாங்கள்  அறிந்து,  (ரோமர்  5:3)

athumaaththiramalla,  ubaththiravam  po’rumaiyaiyum,  po’rumai  pareedchaiyaiyum,  pareedchai  nambikkaiyaiyum  u'ndaakkugi’rathen’ru  naangga'l  a’rinthu,  (roamar  5:3)

உபத்திரவங்களிலேயும்  மேன்மைபாராட்டுகிறோம்.  (ரோமர்  5:4)

ubaththiravangga'lileayum  meanmaipaaraattugi’roam.  (roamar  5:4)

மேலும்  நமக்கு  அருளப்பட்ட  பரிசுத்தஆவியினாலே  தேவ  அன்பு  நம்முடைய  இருதயங்களில்  ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,  அந்த  நம்பிக்கை  நம்மை  வெட்கப்படுத்தாது.  (ரோமர்  5:5)

mealum  namakku  aru'lappatta  parisuththaaaviyinaalea  theava  anbu  nammudaiya  iruthayangga'lil  oot’rappattirukki’rapadiyaal,  antha  nambikkai  nammai  vedkappaduththaathu.  (roamar  5:5)

அன்றியும்  நாம்  பெலனற்றவர்களாயிருக்கும்போதே,  குறித்த  காலத்தில்  கிறிஸ்து  அக்கிரமக்காரருக்காக  மரித்தார்.  (ரோமர்  5:6)

an’riyum  naam  belanat’ravarga'laayirukkumpoathea,  ku’riththa  kaalaththil  ki’risthu  akkiramakkaararukkaaga  mariththaar.  (roamar  5:6)

நீதிமானுக்காக  ஒருவன்  மரிக்கிறது  அரிது;  நல்லவனுக்காக  ஒருவேளை  ஒருவன்  மரிக்கத்  துணிவான்.  (ரோமர்  5:7)

neethimaanukkaaga  oruvan  marikki’rathu  arithu;  nallavanukkaaga  oruvea'lai  oruvan  marikkath  thu'nivaan.  (roamar  5:7)

நாம்  பாவிகளாயிருக்கையில்  கிறிஸ்து  நமக்காக  மரித்ததினாலே,  தேவன்  நம்மேல்  வைத்த  தமது  அன்பை  விளங்கப்பண்ணுகிறார்.  (ரோமர்  5:8)

naam  paaviga'laayirukkaiyil  ki’risthu  namakkaaga  mariththathinaalea,  theavan  nammeal  vaiththa  thamathu  anbai  vi'langgappa'n'nugi’raar.  (roamar  5:8)

இப்படி  நாம்  அவருடைய  இரத்தத்தினாலே  நீதிமான்களாக்கப்பட்டிருக்க,  கோபாக்கினைக்கு  நீங்கலாக  அவராலே  நாம்  இரட்சிக்கப்படுவது  அதிக  நிச்சயமாமே.  (ரோமர்  5:9)

ippadi  naam  avarudaiya  iraththaththinaalea  neethimaanga'laakkappattirukka,  koabaakkinaikku  neenggalaaga  avaraalea  naam  iradchikkappaduvathu  athiga  nichchayamaamea.  (roamar  5:9)

நாம்  தேவனுக்குச்  சத்துருக்களாயிருக்கையில்,  அவருடைய  குமாரனின்  மரணத்தினாலே  அவருடனே  ஒப்புரவாக்கப்பட்டோமானால்,  ஒப்புரவாக்கப்பட்டபின்  நாம்  அவருடைய  ஜீவனாலே  இரட்சிக்கப்படுவது  அதிக  நிச்சயமாமே.  (ரோமர்  5:10)

naam  theavanukkuch  saththurukka'laayirukkaiyil,  avarudaiya  kumaaranin  mara'naththinaalea  avarudanea  oppuravaakkappattoamaanaal,  oppuravaakkappattapin  naam  avarudaiya  jeevanaalea  iradchikkappaduvathu  athiga  nichchayamaamea.  (roamar  5:10)

அதுவுமல்லாமல்,  இப்பொழுது  ஒப்புரவாகுதலை  நமக்குக்  கிடைக்கப்பண்ணின  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துமூலமாய்  நாம்  தேவனைப்பற்றியும்  மேன்மைபாராட்டுகிறோம்.  (ரோமர்  5:11)

athuvumallaamal,  ippozhuthu  oppuravaaguthalai  namakkuk  kidaikkappa'n'nina  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthumoolamaay  naam  theavanaippat’riyum  meanmaipaaraattugi’roam.  (roamar  5:11)

இப்படியாக,  ஒரே  மனுஷனாலே  பாவமும்  பாவத்தினாலே  மரணமும்  உலகத்திலே  பிரவேசித்ததுபோலவும்,  எல்லா  மனுஷரும்  பாவஞ்செய்தபடியால்,  மரணம்  எல்லாருக்கும்  வந்ததுபோலவும்  இதுவுமாயிற்று.  (ரோமர்  5:12)

ippadiyaaga,  orea  manushanaalea  paavamum  paavaththinaalea  mara'namum  ulagaththilea  piraveasiththathupoalavum,  ellaa  manusharum  paavagnseythapadiyaal,  mara'nam  ellaarukkum  vanthathupoalavum  ithuvumaayit’ru.  (roamar  5:12)

நியாயப்பிரமாணம்  கொடுக்கப்படுவதற்கு  முன்னும்  பாவம்  உலகத்திலிருந்தது;  நியாயப்பிரமாணம்  இல்லாதிருந்தால்  பாவம்  எண்ணப்படமாட்டாது.  (ரோமர்  5:13)

niyaayappiramaa'nam  kodukkappaduvatha’rku  munnum  paavam  ulagaththilirunthathu;  niyaayappiramaa'nam  illaathirunthaal  paavam  e'n'nappadamaattaathu.  (roamar  5:13)

அப்படியிருந்தும்,  மரணமானது  ஆதாம்முதல்  மோசேவரைக்கும்,  ஆதாமின்  மீறுதலுக்கொப்பாய்ப்  பாவஞ்செய்யாதவர்களையும்  ஆண்டுகொண்டது;  அந்த  ஆதாம்  பின்பு  வந்தவருக்கு  முன்னடையாளமானவன்.  (ரோமர்  5:14)

appadiyirunthum,  mara'namaanathu  aathaammuthal  moaseavaraikkum,  aathaamin  mee’ruthalukkoppaayp  paavagnseyyaathavarga'laiyum  aa'nduko'ndathu;  antha  aathaam  pinbu  vanthavarukku  munnadaiyaa'lamaanavan.  (roamar  5:14)

ஆனாலும்  மீறுதலின்  பலன்  கிருபை  வரத்தின்  பலனுக்கு  ஒப்பானதல்ல.  எப்படியெனில்,  ஒருவனுடைய  மீறுதலினாலே  அநேகர்  மரித்திருக்க,  தேவனுடைய  கிருபையும்  இயேசுகிறிஸ்து  என்னும்  ஒரே  மனுஷனுடைய  கிருபையினாலே  வரும்  ஈவும்  அநேகர்மேல்  அதிகமாய்ப்  பெருகியிருக்கிறது.  (ரோமர்  5:15)

aanaalum  mee’ruthalin  palan  kirubai  varaththin  palanukku  oppaanathalla.  eppadiyenil,  oruvanudaiya  mee’ruthalinaalea  aneagar  mariththirukka,  theavanudaiya  kirubaiyum  iyeasuki’risthu  ennum  orea  manushanudaiya  kirubaiyinaalea  varum  eevum  aneagarmeal  athigamaayp  perugiyirukki’rathu.  (roamar  5:15)

மேலும்  ஒருவன்  பாவஞ்செய்ததினால்  உண்டான  தீர்ப்பு  தேவன்  அருளும்  ஈவுக்கு  ஒப்பானதல்ல;  அந்தத்  தீர்ப்பு  ஒரே  குற்றத்தினிமித்தம்  ஆக்கினைக்கு  ஏதுவாயிருந்தது;  கிருபைவரமோ  அநேக  குற்றங்களை  நீக்கி  நீதிவிளங்கும்  தீர்ப்புக்கு  ஏதுவாயிருக்கிறது.  (ரோமர்  5:16)

mealum  oruvan  paavagnseythathinaal  u'ndaana  theerppu  theavan  aru'lum  eevukku  oppaanathalla;  anthath  theerppu  orea  kut’raththinimiththam  aakkinaikku  eathuvaayirunthathu;  kirubaivaramoa  aneaga  kut’rangga'lai  neekki  neethivi'langgum  theerppukku  eathuvaayirukki’rathu.  (roamar  5:16)

அல்லாமலும்,  ஒருவனுடைய  மீறுதலினாலே,  அந்த  ஒருவன்மூலமாய்,  மரணம்  ஆண்டுகொண்டிருக்க,  கிருபையின்  பரிபூரணத்தையும்  நீதியாகிய  ஈவின்  பரிபூரணத்தையும்  பெறுகிறவர்கள்  இயேசுகிறிஸ்து  என்னும்  ஒருவராலே  ஜீவனை  அடைந்து  ஆளுவார்களென்பது  அதிக  நிச்சயமாமே.  (ரோமர்  5:17)

allaamalum,  oruvanudaiya  mee’ruthalinaalea,  antha  oruvanmoolamaay,  mara'nam  aa'nduko'ndirukka,  kirubaiyin  paripoora'naththaiyum  neethiyaagiya  eevin  paripoora'naththaiyum  pe’rugi’ravarga'l  iyeasuki’risthu  ennum  oruvaraalea  jeevanai  adainthu  aa'luvaarga'lenbathu  athiga  nichchayamaamea.  (roamar  5:17)

ஆகையால்  ஒரே  மீறுதலினாலே  எல்லா  மனுஷருக்கும்  ஆக்கினைக்கு  ஏதுவான  தீர்ப்பு  உண்டானதுபோல,  ஒரே  நீதியினாலே  எல்லா  மனுஷருக்கும்  ஜீவனை  அளிக்கும்  நீதிக்கு  ஏதுவான  தீர்ப்பு  உண்டாயிற்று.  (ரோமர்  5:18)

aagaiyaal  orea  mee’ruthalinaalea  ellaa  manusharukkum  aakkinaikku  eathuvaana  theerppu  u'ndaanathupoala,  orea  neethiyinaalea  ellaa  manusharukkum  jeevanai  a'likkum  neethikku  eathuvaana  theerppu  u'ndaayit’ru.  (roamar  5:18)

அன்றியும்  ஒரே  மனுஷனுடைய  கீழ்ப்படியாமையினாலே  அநேகர்  பாவிகளாக்கப்பட்டதுபோல,  ஒருவருடைய  கீழ்ப்படிதலினாலே  அநேகர்  நீதிமான்களாக்கப்படுவார்கள்.  (ரோமர்  5:19)

an’riyum  orea  manushanudaiya  keezhppadiyaamaiyinaalea  aneagar  paaviga'laakkappattathupoala,  oruvarudaiya  keezhppadithalinaalea  aneagar  neethimaanga'laakkappaduvaarga'l.  (roamar  5:19)

மேலும்,  மீறுதல்  பெருகும்படிக்கு  நியாயப்பிரமாணம்  வந்தது;  அப்படியிருந்தும்,  பாவம்  பெருகின  இடத்தில்  கிருபை  அதிகமாய்ப்  பெருகிற்று.  (ரோமர்  5:20)

mealum,  mee’ruthal  perugumpadikku  niyaayappiramaa'nam  vanthathu;  appadiyirunthum,  paavam  perugina  idaththil  kirubai  athigamaayp  perugit’ru.  (roamar  5:20)

ஆதலால்  பாவம்  மரணத்துக்கு  ஏதுவாக  ஆண்டுகொண்டதுபோல,  கிருபையானது  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்  மூலமாய்  நீதியினாலே  நித்தியஜீவனுக்கு  ஏதுவாக  ஆண்டுகொண்டது.  (ரோமர்  5:21)

aathalaal  paavam  mara'naththukku  eathuvaaga  aa'nduko'ndathupoala,  kirubaiyaanathu  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvin  moolamaay  neethiyinaalea  niththiyajeevanukku  eathuvaaga  aa'nduko'ndathu.  (roamar  5:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!