Tuesday, May 24, 2016

Roamar 14 | ரோமர் 14 | Romans 14

விசுவாசத்தில்  பலவீனமுள்ளவனைச்  சேர்த்துக்கொள்ளுங்கள்;  ஆனாலும்  அவனுடைய  மன  ஐயங்களைக்  குற்றமாய்  நிர்ணயிக்காமலிருங்கள்.  (ரோமர்  14:1)

visuvaasaththil  balaveenamu'l'lavanaich  searththukko'l'lungga'l;  aanaalum  avanudaiya  mana  aiyangga'laik  kut’ramaay  nir'nayikkaamalirungga'l.  (roamar  14:1)

ஒருவன்  எந்தப்  பதார்த்தத்தையும்  புசிக்கலாமென்று  நம்புகிறான்;  பலவீனனோ  மரக்கறிகளைமாத்திரம்  புசிக்கிறான்.  (ரோமர்  14:2)

oruvan  enthap  pathaarththaththaiyum  pusikkalaamen’ru  nambugi’raan;  balaveenanoa  marakka’riga'laimaaththiram  pusikki’raan.  (roamar  14:2)

புசிக்கிறவன்  புசியாதிருக்கிறவனை  அற்பமாயெண்ணாதிருப்பானாக;  புசியாதிருக்கிறவனும்  புசிக்கிறவனைக்  குற்றவாளியாகத்  தீர்க்காதிருப்பானாக;  தேவன்  அவனை  ஏற்றுக்கொண்டாரே.  (ரோமர்  14:3)

pusikki’ravan  pusiyaathirukki’ravanai  a’rpamaaye'n'naathiruppaanaaga;  pusiyaathirukki’ravanum  pusikki’ravanaik  kut’ravaa'liyaagath  theerkkaathiruppaanaaga;  theavan  avanai  eat’rukko'ndaarea.  (roamar  14:3)

மற்றொருவனுடைய  வேலைக்காரனைக்  குற்றவாளியாகத்  தீர்க்கிறதற்கு  நீ  யார்?  அவன்  நின்றாலும்  விழுந்தாலும்  அவனுடைய  எஜமானுக்கே  அவன்  உத்தரவாதி;  அவன்  நிலைநிறுத்தப்படுவான்;  தேவன்  அவனை  நிலைநிறுத்த  வல்லவராயிருக்கிறாரே.  (ரோமர்  14:4)

mat’roruvanudaiya  vealaikkaaranaik  kut’ravaa'liyaagath  theerkki’ratha’rku  nee  yaar?  avan  nin’raalum  vizhunthaalum  avanudaiya  ejamaanukkea  avan  uththaravaathi;  avan  nilaini’ruththappaduvaan;  theavan  avanai  nilaini’ruththa  vallavaraayirukki’raarea.  (roamar  14:4)

அன்றியும்,  ஒருவன்  ஒருநாளை  மற்றொரு  நாளிலும்  விசேஷமாக  எண்ணுகிறான்;  வேறொருவன்  எல்லா  நாட்களையும்  சரியாக  எண்ணுகிறான்;  அவனவன்  தன்தன்  மனதிலே  முழு  நிச்சயத்தை  உடையவனாயிருக்கக்கடவன்.  (ரோமர்  14:5)

an’riyum,  oruvan  orunaa'lai  mat’roru  naa'lilum  viseashamaaga  e'n'nugi’raan;  vea’roruvan  ellaa  naadka'laiyum  sariyaaga  e'n'nugi’raan;  avanavan  thanthan  manathilea  muzhu  nichchayaththai  udaiyavanaayirukkakkadavan.  (roamar  14:5)

நாட்களை  விசேஷித்துக்கொள்ளுகிறவன்  கர்த்தருக்கென்று  விசேஷித்துக்  கொள்ளுகிறான்;  நாட்களை  விசேஷித்துக்  கொள்ளாதவனும்  கர்த்தருக்கென்று  விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.  புசிக்கிறவன்  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால்,  கர்த்தருக்கென்று  புசிக்கிறான்;  புசியாதிருக்கிறவனும்  கர்த்தருக்கென்று  புசியாதிருந்து,  தேவனுக்கு  ஸ்தோத்திரஞ்  செலுத்துகிறான்.  (ரோமர்  14:6)

naadka'lai  viseashiththukko'l'lugi’ravan  karththarukken’ru  viseashiththuk  ko'l'lugi’raan;  naadka'lai  viseashiththuk  ko'l'laathavanum  karththarukken’ru  viseashiththukko'l'laathirukki’raan.  pusikki’ravan  theavanukku  sthoaththiragnseluththugi’rapadiyaal,  karththarukken’ru  pusikki’raan;  pusiyaathirukki’ravanum  karththarukken’ru  pusiyaathirunthu,  theavanukku  sthoaththiragn  seluththugi’raan.  (roamar  14:6)

நம்மில்  ஒருவனும்  தனக்கென்று  பிழைக்கிறதுமில்லை,  ஒருவனும்  தனக்கென்று  மரிக்கிறதுமில்லை.  (ரோமர்  14:7)

nammil  oruvanum  thanakken’ru  pizhaikki’rathumillai,  oruvanum  thanakken’ru  marikki’rathumillai.  (roamar  14:7)

நாம்  பிழைத்தாலும்  கர்த்தருக்கென்று  பிழைக்கிறோம்,  நாம்  மரித்தாலும்  கர்த்தருக்கென்று  மரிக்கிறோம்;  ஆகையால்  பிழைத்தாலும்  மரித்தாலும்  நாம்  கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.  (ரோமர்  14:8)

naam  pizhaiththaalum  karththarukken’ru  pizhaikki’roam,  naam  mariththaalum  karththarukken’ru  marikki’roam;  aagaiyaal  pizhaiththaalum  mariththaalum  naam  karththarudaiyavarga'laayirukki’roam.  (roamar  14:8)

கிறிஸ்துவும்  மரித்தோர்மேலும்  ஜீவனுள்ளோர்மேலும்  ஆண்டவராயிருக்கும்பொருட்டு,  மரித்தும்  எழுந்தும்  பிழைத்துமிருக்கிறார்.  (ரோமர்  14:9)

ki’risthuvum  mariththoarmealum  jeevanu'l'loarmealum  aa'ndavaraayirukkumporuttu,  mariththum  ezhunthum  pizhaiththumirukki’raar.  (roamar  14:9)

இப்படியிருக்க,  நீ  உன்  சகோதரனைக்  குற்றவாளியென்று  தீர்க்கிறதென்ன?  நீ  உன்  சகோதரனை  அற்பமாய்  எண்ணுகிறதென்ன?  நாமெல்லாரும்  கிறிஸ்துவினுடைய  நியாயாசனத்திற்கு  முன்பாக  நிற்போமே.  (ரோமர்  14:10)

ippadiyirukka,  nee  un  sagoatharanaik  kut’ravaa'liyen’ru  theerkki’rathenna?  nee  un  sagoatharanai  a’rpamaay  e'n'nugi’rathenna?  naamellaarum  ki’risthuvinudaiya  niyaayaasanaththi’rku  munbaaga  ni’rpoamea.  (roamar  14:10)

அந்தப்படி:  முழங்கால்  யாவும்  எனக்கு  முன்பாக  முடங்கும்,  நாவு  யாவும்  தேவனை  அறிக்கைபண்ணும்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  உரைக்கிறேன்  என்பதாய்க்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  எழுதியிருக்கிறது.  (ரோமர்  14:11)

anthappadi:  muzhangkaal  yaavum  enakku  munbaaga  mudanggum,  naavu  yaavum  theavanai  a’rikkaipa'n'num  en’ru  en  jeevanaikko'ndu  uraikki’rean  enbathaayk  karththar  sollugi’raar  en’ru  ezhuthiyirukki’rathu.  (roamar  14:11)

ஆதலால்  நம்மில்  ஒவ்வொருவனும்  தன்னைக்குறித்துத்  தேவனுக்குக்  கணக்கொப்புவிப்பான்.  (ரோமர்  14:12)

aathalaal  nammil  ovvoruvanum  thannaikku’riththuth  theavanukkuk  ka'nakkoppuvippaan.  (roamar  14:12)

இப்படியிருக்க,  நாம்  இனிமேல்  ஒருவரையொருவர்  குற்றவாளிகளென்று  தீர்க்காதிருப்போமாக.  ஒருவனும்  தன்  சகோதரனுக்கு  முன்பாகத்  தடுக்கலையும்  இடறலையும்  போடலாகாதென்றே  தீர்மானித்துக்கொள்ளுங்கள்.  (ரோமர்  14:13)

ippadiyirukka,  naam  inimeal  oruvaraiyoruvar  kut’ravaa'liga'len’ru  theerkkaathiruppoamaaga.  oruvanum  than  sagoatharanukku  munbaagath  thadukkalaiyum  ida’ralaiyum  poadalaagaathen’rea  theermaaniththukko'l'lungga'l.  (roamar  14:13)

ஒரு  பொருளும்  தன்னிலே  தீட்டுள்ளதல்லவென்று  கர்த்தராகிய  இயேசுவுக்குள்  அறிந்து  நிச்சயித்திருக்கிறேன்;  ஒருபொருளைத்  தீட்டுள்ளதென்று  எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ  அவனுக்கு  அது  தீட்டுள்ளதாயிருக்கும்.  (ரோமர்  14:14)

oru  poru'lum  thannilea  theettu'l'lathallaven’ru  karththaraagiya  iyeasuvukku'l  a’rinthu  nichchayiththirukki’rean;  oruporu'laith  theettu'l'lathen’ru  e'n'nikko'l'lugi’ravanevanoa  avanukku  athu  theettu'l'lathaayirukkum.  (roamar  14:14)

போஜனத்தினாலே  உன்  சகோதரனுக்கு  விசனமுண்டாக்கினால்,  நீ  அன்பாய்  நடக்கிறவனல்ல;  அவனை  உன்  போஜனத்தினாலே  கெடுக்காதே,  கிறிஸ்து  அவனுக்காக  மரித்தாரே.  (ரோமர்  14:15)

poajanaththinaalea  un  sagoatharanukku  visanamu'ndaakkinaal,  nee  anbaay  nadakki’ravanalla;  avanai  un  poajanaththinaalea  kedukkaathea,  ki’risthu  avanukkaaga  mariththaarea.  (roamar  14:15)

உங்கள்  நன்மை  தூஷிக்கப்பட  இடங்கொடாதிருங்கள்.  (ரோமர்  14:16)

ungga'l  nanmai  thooshikkappada  idangkodaathirungga'l.  (roamar  14:16)

தேவனுடைய  ராஜ்யம்  புசிப்பும்  குடிப்புமல்ல,  அது  நீதியும்  சமாதானமும்  பரிசுத்த  ஆவியினாலுண்டாகும்  சந்தோஷமுமாயிருக்கிறது.  (ரோமர்  14:17)

theavanudaiya  raajyam  pusippum  kudippumalla,  athu  neethiyum  samaathaanamum  parisuththa  aaviyinaalu'ndaagum  santhoashamumaayirukki’rathu.  (roamar  14:17)

இவைகளிலே  கிறிஸ்துவுக்கு  ஊழியஞ்செய்கிறவன்  தேவனுக்குப்  பிரியனும்  மனுஷரால்  அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.  (ரோமர்  14:18)

ivaiga'lilea  ki’risthuvukku  oozhiyagnseygi’ravan  theavanukkup  piriyanum  manusharaal  anggigarikkappattavanumaayirukki’raan.  (roamar  14:18)

ஆனபடியால்  சமாதானத்துக்கடுத்தவைகளையும்,  அந்நியோந்நிய  பக்திவிருத்தி  உண்டாக்கத்தக்கவைகளையும்  நாடக்கடவோம்.  (ரோமர்  14:19)

aanapadiyaal  samaathaanaththukkaduththavaiga'laiyum,  anniyoanniya  bakthiviruththi  u'ndaakkaththakkavaiga'laiyum  naadakkadavoam.  (roamar  14:19)

போஜனத்தினிமித்தம்  தேவனுடைய  கிரியையை  அழித்துப்போடாதே.  எந்தப்  பதார்த்தமும்  சுத்தமுள்ளதுதான்;  ஆனாலும்  இடறலுண்டாகப்  புசிக்கிறவனுக்கு  அது  தீமையாயிருக்கும்.  (ரோமர்  14:20)

poajanaththinimiththam  theavanudaiya  kiriyaiyai  azhiththuppoadaathea.  enthap  pathaarththamum  suththamu'l'lathuthaan;  aanaalum  ida’ralu'ndaagap  pusikki’ravanukku  athu  theemaiyaayirukkum.  (roamar  14:20)

மாம்சம்  புசிக்கிறதும்,  மதுபானம்  பண்ணுகிறதும்,  மற்றெதையாகிலும்  செய்கிறதும்,  உன்  சகோதரன்  இடறுகிறதற்காவது,  தவறுகிறதற்காவது  பலவீனப்படுகிறதற்காவது  ஏதுவாயிருந்தால்,  அவைகளில்  ஒன்றையும்  செய்யாமலிருப்பதே  நன்மையாயிருக்கும்.  (ரோமர்  14:21)

maamsam  pusikki’rathum,  mathubaanam  pa'n'nugi’rathum,  mat’rethaiyaagilum  seygi’rathum,  un  sagoatharan  ida’rugi’ratha’rkaavathu,  thava’rugi’ratha’rkaavathu  balaveenappadugi’ratha’rkaavathu  eathuvaayirunthaal,  avaiga'lil  on’raiyum  seyyaamaliruppathea  nanmaiyaayirukkum.  (roamar  14:21)

உனக்கு  விசுவாசமிருந்தால்  அது  தேவனுக்குமுன்பாக  உன்மட்டும்  இருக்கட்டும்.  நல்லதென்று  நிச்சயித்த  காரியத்தில்  தன்னைக்  குற்றவாளியாக்காதவன்  பாக்கியவான்.  (ரோமர்  14:22)

unakku  visuvaasamirunthaal  athu  theavanukkumunbaaga  unmattum  irukkattum.  nallathen’ru  nichchayiththa  kaariyaththil  thannaik  kut’ravaa'liyaakkaathavan  baakkiyavaan.  (roamar  14:22)

ஒருவன்  சமுசயப்படுகிறவனாய்ப்  புசித்தால்,  அவன்  விசுவாசமில்லாமல்  புசிக்கிறபடியினால்,  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுகிறான்.  விசுவாசத்தினாலே  வராத  யாவும்  பாவமே.  (ரோமர்  14:23)

oruvan  samusayappadugi’ravanaayp  pusiththaal,  avan  visuvaasamillaamal  pusikki’rapadiyinaal,  aakkinaikku'l'laagath  theerkkappadugi’raan.  visuvaasaththinaalea  varaatha  yaavum  paavamea.  (roamar  14:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!