Tuesday, May 24, 2016

Roamar 1 | ரோமர் 1 | Romans 1


இயேசுகிறிஸ்துவின்  ஊழியக்காரனும்,  அப்போஸ்தலனாகும்படி  அழைக்கப்பட்டவனும்,  தேவனுடைய  சுவிசேஷத்திற்காகப்  பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய  பவுல்,  (ரோமர்  1:1)

iyeasuki’risthuvin  oozhiyakkaaranum,  appoasthalanaagumpadi  azhaikkappattavanum,  theavanudaiya  suviseashaththi’rkaagap  piriththedukkappattavanumaagiya  pavul,  (roamar  1:1)

ரோமாபுரியிலுள்ள  தேவப்பிரியரும்  பரிசுத்தவான்களாகும்படி  அழைக்கப்பட்டவர்களுமாகிய  அனைவருக்கும்  எழுதுகிறதாவது;  (ரோமர்  1:2)

roamaapuriyilu'l'la  theavappiriyarum  parisuththavaanga'laagumpadi  azhaikkappattavarga'lumaagiya  anaivarukkum  ezhuthugi’rathaavathu;  (roamar  1:2)

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  (ரோமர்  1:3)

nammudaiya  pithaavaagiya  theavanaalum  karththaraagiya  iyeasuki’risthuvinaalum  ungga'lukkuk  kirubaiyum  samaathaanamum  u'ndaavathaaga.  (roamar  1:3)

இயேசுகிறிஸ்துவைக்குறித்துத்  தேவன்  தம்முடைய  தீர்க்கதரிசிகள்  மூலமாய்ப்  பரிசுத்த  வேதாகமங்களில்  முன்னே  தம்முடைய  சுவிசேஷத்தைப்பற்றி  வாக்குத்தத்தம்பண்ணினபடி  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவானவர்,  (ரோமர்  1:4)

iyeasuki’risthuvaikku’riththuth  theavan  thammudaiya  theerkkatharisiga'l  moolamaayp  parisuththa  veathaagamangga'lil  munnea  thammudaiya  suviseashaththaippat’ri  vaakkuththaththampa'n'ninapadi  karththaraagiya  iyeasuki’risthuvaanavar,  (roamar  1:4)

மாம்சத்தின்படி  தாவீதின்  சந்ததியில்  பிறந்தவரும்,  பரிசுத்தமுள்ள  ஆவியின்படி  தேவனுடைய  சுதனென்று  மரித்தோரிலிருந்து  உயிர்த்தெழுந்ததினாலே  பலமாய்  ரூபிக்கப்பட்ட  தேவகுமாரனுமாயிருக்கிறார்.  (ரோமர்  1:5)

maamsaththinpadi  thaaveethin  santhathiyil  pi’ranthavarum,  parisuththamu'l'la  aaviyinpadi  theavanudaiya  suthanen’ru  mariththoarilirunthu  uyirththezhunthathinaalea  balamaay  roobikkappatta  theavakumaaranumaayirukki’raar.  (roamar  1:5)

அவர்  சகல  ஜாதிகளையும்,  அவர்களுக்குள்  இயேசுகிறிஸ்துவினால்  அழைக்கப்பட்டவர்களாகிய  உங்களையும்,  (ரோமர்  1:6)

avar  sagala  jaathiga'laiyum,  avarga'lukku'l  iyeasuki’risthuvinaal  azhaikkappattavarga'laagiya  ungga'laiyum,  (roamar  1:6)

தமது  நாமத்தினிமித்தம்  விசுவாசத்துக்குக்  கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு,  எங்களுக்குக்  கிருபையையும்  அப்போஸ்தல  ஊழியத்தையும்  அருளிச்செய்திருக்கிறார்.  (ரோமர்  1:7)

thamathu  naamaththinimiththam  visuvaasaththukkuk  keezhppadiyappa'n'numporuttu,  engga'lukkuk  kirubaiyaiyum  appoasthala  oozhiyaththaiyum  aru'lichseythirukki’raar.  (roamar  1:7)

உங்கள்  விசுவாசம்  உலகமெங்கும்  பிரசித்தமாகிறபடியினாலே,  முதலாவது  நான்  உங்களெல்லாருக்காகவும்  இயேசுகிறிஸ்து  மூலமாய்  என்  தேவனை  ஸ்தோத்திரிக்கிறேன்.  (ரோமர்  1:8)

ungga'l  visuvaasam  ulagamenggum  pirasiththamaagi’rapadiyinaalea,  muthalaavathu  naan  ungga'lellaarukkaagavum  iyeasuki’risthu  moolamaay  en  theavanai  sthoaththirikki’rean.  (roamar  1:8)

நான்  ஜெபம்பண்ணும்போதெல்லாம்  இடைவிடாமல்  உங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத்  தமது  குமாரனுடைய  சுவிசேஷத்தினாலே  என்  ஆவியோடு  நான்  சேவிக்கிற  தேவன்  எனக்குச்  சாட்சியாயிருக்கிறார்.  (ரோமர்  1:9)

naan  jebampa'n'numpoathellaam  idaividaamal  ungga'lai  ninaiththukko'ndirukki’rathaikku’riththuth  thamathu  kumaaranudaiya  suviseashaththinaalea  en  aaviyoadu  naan  seavikki’ra  theavan  enakkuch  saadchiyaayirukki’raar.  (roamar  1:9)

நீங்கள்  ஸ்திரப்படுவதற்காக  ஆவிக்குரிய  சில  வரங்களை  உங்களுக்குக்  கொடுக்கும்படிக்கும்,  (ரோமர்  1:10)

neengga'l  sthirappaduvatha’rkaaga  aavikkuriya  sila  varangga'lai  ungga'lukkuk  kodukkumpadikkum,  (roamar  1:10)

உங்களிலும்  என்னிலுமுள்ள  விசுவாசத்தினால்  உங்களோடேகூட  நானும்  ஆறுதலடையும்படிக்கும்,  உங்களைக்  காண  வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,  (ரோமர்  1:11)

ungga'lilum  ennilumu'l'la  visuvaasaththinaal  ungga'loadeakooda  naanum  aa’ruthaladaiyumpadikkum,  ungga'laik  kaa'na  vaagnchaiyaayirukki’rapadiyinaalea,  (roamar  1:11)

எவ்விதத்திலாவது  நான்  உங்களிடத்தில்  வருகிறதற்குத்  தேவனுடைய  சித்தத்தினாலே  எனக்கு  நல்ல  பிரயாணம்  சீக்கிரத்தில்  கிடைக்கவேண்டுமென்று  வேண்டிக்கொள்ளுகிறேன்.  (ரோமர்  1:12)

evvithaththilaavathu  naan  ungga'lidaththil  varugi’ratha’rkuth  theavanudaiya  siththaththinaalea  enakku  nalla  pirayaa'nam  seekkiraththil  kidaikkavea'ndumen’ru  vea'ndikko'l'lugi’rean.  (roamar  1:12)

சகோதரரே,  புறஜாதிகளான  மற்றவர்களுக்குள்ளே  நான்  பலனை  அடைந்தது  போல  உங்களுக்குள்ளும்  சில  பலனை  அடையும்படிக்கு,  உங்களிடத்தில்  வர  பலமுறை  யோசனையாயிருந்தேன்,  ஆயினும்  இதுவரைக்கும்  எனக்குத்  தடையுண்டாயிற்று  என்று  நீங்கள்  அறியாதிருக்க  எனக்கு  மனதில்லை.  (ரோமர்  1:13)

sagoathararea,  pu’rajaathiga'laana  mat’ravarga'lukku'l'lea  naan  palanai  adainthathu  poala  ungga'lukku'l'lum  sila  palanai  adaiyumpadikku,  ungga'lidaththil  vara  palamu’rai  yoasanaiyaayirunthean,  aayinum  ithuvaraikkum  enakkuth  thadaiyu'ndaayit’ru  en’ru  neengga'l  a’riyaathirukka  enakku  manathillai.  (roamar  1:13)

கிரேக்கருக்கும்,  மற்ற  அந்நியர்களுக்கும்,  ஞானிகளுக்கும்,  மூடருக்கும்  நான்  கடனாளியாயிருக்கிறேன்.  (ரோமர்  1:14)

kireakkarukkum,  mat’ra  anniyarga'lukkum,  gnaaniga'lukkum,  moodarukkum  naan  kadanaa'liyaayirukki’rean.  (roamar  1:14)

ஆகையால்  ரோமாபுரியிலிருக்கிற  உங்களுக்கும்  என்னால்  இயன்றமட்டும்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்க  விரும்புகிறேன்.  (ரோமர்  1:15)

aagaiyaal  roamaapuriyilirukki’ra  ungga'lukkum  ennaal  iyan’ramattum  suviseashaththaip  pirasanggikka  virumbugi’rean.  (roamar  1:15)

கிறிஸ்துவின்  சுவிசேஷத்தைக்  குறித்து  நான்  வெட்கப்படேன்;  முன்பு  யூதரிலும்  பின்பு  கிரேக்கரிலும்  விசுவாசிக்கிறவனெவனோ  அவனுக்கு  இரட்சிப்பு  உண்டாவதற்கு  அது  தேவபெலனாயிருக்கிறது.  (ரோமர்  1:16)

ki’risthuvin  suviseashaththaik  ku’riththu  naan  vedkappadean;  munbu  yootharilum  pinbu  kireakkarilum  visuvaasikki’ravanevanoa  avanukku  iradchippu  u'ndaavatha’rku  athu  theavabelanaayirukki’rathu.  (roamar  1:16)

விசுவாசத்தினாலே  நீதிமான்  பிழைப்பான்  என்று  எழுதியிருக்கிறபடி,  விசுவாசத்தினால்  உண்டாகும்  தேவநீதி  விசுவாசத்திற்கென்று  அந்தச்  சுவிசேஷத்தினால்  வெளிப்படுத்தப்படுகிறது.  (ரோமர்  1:17)

visuvaasaththinaalea  neethimaan  pizhaippaan  en’ru  ezhuthiyirukki’rapadi,  visuvaasaththinaal  u'ndaagum  theavaneethi  visuvaasaththi’rken’ru  anthach  suviseashaththinaal  ve'lippaduththappadugi’rathu.  (roamar  1:17)

சத்தியத்தை  அநியாயத்தினாலே  அடக்கிவைக்கிற  மனுஷருடைய  எல்லாவித  அவபக்திக்கும்  அநியாயத்துக்கும்  விரோதமாய்,  தேவகோபம்  வானத்திலிருந்து  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  (ரோமர்  1:18)

saththiyaththai  aniyaayaththinaalea  adakkivaikki’ra  manusharudaiya  ellaavitha  avabakthikkum  aniyaayaththukkum  viroathamaay,  theavakoabam  vaanaththilirunthu  ve'lippaduththappattirukki’rathu.  (roamar  1:18)

தேவனைக்குறித்து  அறியப்படுவது  அவர்களுக்குள்ளே  வெளிப்பட்டிருக்கிறது;  தேவனே  அதை  அவர்களுக்கு  வெளிப்படுத்தியிருக்கிறார்.  (ரோமர்  1:19)

theavanaikku’riththu  a’riyappaduvathu  avarga'lukku'l'lea  ve'lippattirukki’rathu;  theavanea  athai  avarga'lukku  ve'lippaduththiyirukki’raar.  (roamar  1:19)

எப்படியென்றால்,  காணப்படாதவைகளாகிய  அவருடைய  நித்திய  வல்லமை  தேவத்துவம்  என்பவைகள்,  உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே,  உலகமுண்டானதுமுதற்கொண்டு,  தெளிவாய்க்  காணப்படும்;  ஆதலால்  அவர்கள்  போக்குச்சொல்ல  இடமில்லை.  (ரோமர்  1:20)

eppadiyen’raal,  kaa'nappadaathavaiga'laagiya  avarudaiya  niththiya  vallamai  theavaththuvam  enbavaiga'l,  u'ndaakkappattirukki’ravaiga'linaalea,  ulagamu'ndaanathumutha’rko'ndu,  the'livaayk  kaa'nappadum;  aathalaal  avarga'l  poakkuchsolla  idamillai.  (roamar  1:20)

அவர்கள்  தேவனை  அறிந்தும்,  அவரைத்  தேவனென்று  மகிமைப்படுத்தாமலும்,  ஸ்தோத்திரியாமலுமிருந்து,  தங்கள்  சிந்தனைகளினாலே  வீணரானார்கள்;  உணர்வில்லாத  அவர்களுடைய  இருதயம்  இருளடைந்தது.  (ரோமர்  1:21)

avarga'l  theavanai  a’rinthum,  avaraith  theavanen’ru  magimaippaduththaamalum,  sthoaththiriyaamalumirunthu,  thangga'l  sinthanaiga'linaalea  vee'naraanaarga'l;  u'narvillaatha  avarga'ludaiya  iruthayam  iru'ladainthathu.  (roamar  1:21)

அவர்கள்  தங்களை  ஞானிகளென்று  சொல்லியும்  பயித்தியக்காரராகி,  (ரோமர்  1:22)

avarga'l  thangga'lai  gnaaniga'len’ru  solliyum  payiththiyakkaararaagi,  (roamar  1:22)

அழிவில்லாத  தேவனுடைய  மகிமையை  அழிவுள்ள  மனுஷர்கள்  பறவைகள்  மிருகங்கள்  ஊரும்  பிராணிகள்  ஆகிய  இவைகளுடைய  ரூபங்களுக்கு  ஒப்பாக  மாற்றினார்கள்.  (ரோமர்  1:23)

azhivillaatha  theavanudaiya  magimaiyai  azhivu'l'la  manusharga'l  pa’ravaiga'l  mirugangga'l  oorum  piraa'niga'l  aagiya  ivaiga'ludaiya  roobangga'lukku  oppaaga  maat’rinaarga'l.  (roamar  1:23)

இதினிமித்தம்  அவர்கள்  தங்கள்  இருதயத்திலுள்ள  இச்சைகளினாலே  ஒருவரோடொருவர்  தங்கள்  சரீரங்களை  அவமானப்படுத்தத்தக்கதாக,  தேவன்  அவர்களை  அசுத்தத்திற்கு  ஒப்புக்கொடுத்தார்.  (ரோமர்  1:24)

ithinimiththam  avarga'l  thangga'l  iruthayaththilu'l'la  ichchaiga'linaalea  oruvaroadoruvar  thangga'l  sareerangga'lai  avamaanappaduththaththakkathaaga,  theavan  avarga'lai  asuththaththi’rku  oppukkoduththaar.  (roamar  1:24)

தேவனுடைய  சத்தியத்தை  அவர்கள்  பொய்யாக  மாற்றி,  சிருஷ்டிகரைத்  தொழுது  சேவியாமல்  சிருஷ்டியைத்  தொழுது  சேவித்தார்கள்,  அவரே  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.  ஆமென்.  (ரோமர்  1:25)

theavanudaiya  saththiyaththai  avarga'l  poyyaaga  maat’ri,  sirushdigaraith  thozhuthu  seaviyaamal  sirushdiyaith  thozhuthu  seaviththaarga'l,  avarea  en’ren’raikkum  sthoaththirikkappattavar.  aamen.  (roamar  1:25)

இதினிமித்தம்  தேவன்  அவர்களை  இழிவான  இச்சைரோகங்களுக்கு  ஒப்புக்கொடுத்தார்;  அந்தப்படியே  அவர்களுடைய  பெண்கள்  சுபாவ  அநுபோகத்தைச்  சுபாவத்துக்கு  விரோதமான  அநுபோகமாக  மாற்றினார்கள்.  (ரோமர்  1:26)

ithinimiththam  theavan  avarga'lai  izhivaana  ichchairoagangga'lukku  oppukkoduththaar;  anthappadiyea  avarga'ludaiya  pe'nga'l  subaava  anuboagaththaich  subaavaththukku  viroathamaana  anuboagamaaga  maat’rinaarga'l.  (roamar  1:26)

அப்படியே  ஆண்களும்  பெண்களைச்  சுபாவப்படி  அநுபவியாமல்,  ஒருவர்மேலொருவர்  விரகதாபத்தினாலே  பொங்கி,  ஆணோடே  ஆண்  அவலட்சணமானதை  நடப்பித்து,  தங்கள்  தப்பிதத்திற்குத்  தகுதியான  பலனைத்  தங்களுக்குள்  அடைந்தார்கள்.  (ரோமர்  1:27)

appadiyea  aa'nga'lum  pe'nga'laich  subaavappadi  anubaviyaamal,  oruvarmealoruvar  viragathaabaththinaalea  ponggi,  aa'noadea  aa'n  avaladcha'namaanathai  nadappiththu,  thangga'l  thappithaththi’rkuth  thaguthiyaana  palanaith  thangga'lukku'l  adainthaarga'l.  (roamar  1:27)

தேவனை  அறியும்  அறிவைப்  பற்றிக்கொண்டிருக்க  அவர்களுக்கு  மனதில்லாதிருந்தபடியால்,  தகாதவைகளைச்  செய்யும்படி,  தேவன்  அவர்களைக்  கேடான  சிந்தைக்கு  ஒப்புக்கொடுத்தார்.  (ரோமர்  1:28)

theavanai  a’riyum  a’rivaip  pat’rikko'ndirukka  avarga'lukku  manathillaathirunthapadiyaal,  thagaathavaiga'laich  seyyumpadi,  theavan  avarga'laik  keadaana  sinthaikku  oppukkoduththaar.  (roamar  1:28)

அவர்கள்  சகலவித  அநியாயத்தினாலும்,  வேசித்தனத்தினாலும்,  துரோகத்தினாலும்,  பொருளாசையினாலும்,  குரோதத்தினாலும்  நிறையப்பட்டு;  பொறாமையினாலும்,  கொலையினாலும்,  வாக்குவாதத்தினாலும்,  வஞ்சகத்தினாலும்,  வன்மத்தினாலும்  நிறைந்தவர்களுமாய்,  (ரோமர்  1:29)

avarga'l  sagalavitha  aniyaayaththinaalum,  veasiththanaththinaalum,  thuroagaththinaalum,  poru'laasaiyinaalum,  kuroathaththinaalum  ni’raiyappattu;  po’raamaiyinaalum,  kolaiyinaalum,  vaakkuvaathaththinaalum,  vagnchagaththinaalum,  vanmaththinaalum  ni’rainthavarga'lumaay,  (roamar  1:29)

புறங்கூறுகிறவர்களுமாய்,  அவதூறுபண்ணுகிறவர்களுமாய்,  தேவபகைஞருமாய்,  துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய்,  அகந்தையுள்ளவர்களுமாய்,  வீம்புக்காரருமாய்,  பொல்லாதவைகளை  யோசித்துப்  பிணைக்கிறவர்களுமாய்,  பெற்றாருக்குக்  கீழ்ப்படியாதவர்களுமாய்,  (ரோமர்  1:30)

pu’rangkoo’rugi’ravarga'lumaay,  avathoo’rupa'n'nugi’ravarga'lumaay,  theavapagaignarumaay,  thuraakiruthampa'n'nugi’ravarga'lumaay,  aganthaiyu'l'lavarga'lumaay,  veembukkaararumaay,  pollaathavaiga'lai  yoasiththup  pi'naikki’ravarga'lumaay,  pet’raarukkuk  keezhppadiyaathavarga'lumaay,  (roamar  1:30)

உணர்வில்லாதவர்களுமாய்,  உடன்படிக்கைகளை  மீறுகிறவர்களுமாய்,  சுபாவ  அன்பில்லாதவர்களுமாய்,  இணங்காதவர்களுமாய்,  இரக்கமில்லாதவர்களுமாய்  இருக்கிறார்கள்.  (ரோமர்  1:31)

u'narvillaathavarga'lumaay,  udanpadikkaiga'lai  mee’rugi’ravarga'lumaay,  subaava  anbillaathavarga'lumaay,  i'nanggaathavarga'lumaay,  irakkamillaathavarga'lumaay  irukki’raarga'l.  (roamar  1:31)

இப்படிப்பட்டவைகளைச்  செய்கிறவர்கள்  மரணத்திற்குப்  பாத்திரராயிருக்கிறார்களென்று  தேவன்  தீர்மானித்த  நீதியான  தீர்ப்பை  அவர்கள்  அறிந்திருந்தும்,  அவைகளைத்  தாங்களே  செய்கிறதுமல்லாமல்,  அவைகளைச்  செய்கிற  மற்றவர்களிடத்தில்  பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.  (ரோமர்  1:32)

ippadippattavaiga'laich  seygi’ravarga'l  mara'naththi’rkup  paaththiraraayirukki’raarga'len’ru  theavan  theermaaniththa  neethiyaana  theerppai  avarga'l  a’rinthirunthum,  avaiga'laith  thaangga'lea  seygi’rathumallaamal,  avaiga'laich  seygi’ra  mat’ravarga'lidaththil  piriyappadugi’ravarga'lumaayirukki’raarga'l.  (roamar  1:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!