மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற
பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: (3யோவான்
1:1)
mooppanaagiya naan saththiyaththinpadi
neasikki’ra piriyamaana
kaayuvukku ezhuthugi’rathaavathu:
(3yoavaan 1:1)
பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். (3யோவான்
1:2)
piriyamaanavanea, un aaththumaa
vaazhgi’rathupoala nee ellaavat’rilum vaazhnthu sugamaayirukkumpadi vea'ndugi’rean. (3yoavaan
1:2)
சகோதரர் வந்து நீ சத்தியத்தில்
நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய
உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது
மிகவும் சந்தோஷப்பட்டேன். (3யோவான்
1:3)
sagoatharar vanthu nee saththiyaththil
nadanthuko'l'lugi’raay en’ru unnudaiya
u'nmaiyaikku’riththuch saadchi koduththapoathu migavum santhoashappattean. (3yoavaan 1:3)
என்
பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள்
என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான
சந்தோஷம் எனக்கு இல்லை.
(3யோவான் 1:4)
en pi'l'laiga'l saththiyaththilea
nadakki’raarga'l en’ru naan kea'lvippadugi’ra santhoashaththilum
athigamaana santhoasham enakku
illai. (3yoavaan 1:4)
பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற
யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.
(3யோவான் 1:5)
piriyamaanavanea, nee sagoathararukkum anniyarukkum
seygi’ra yaavat’raiyum u'nmaiyaaych seygi’raay. (3yoavaan 1:5)
அவர்கள் உன்னுடைய
அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி
சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப்
பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். (3யோவான்
1:6)
avarga'l
unnudaiya anbaik ku’riththuch sabaikkumunbaagach saadchi sonnaarga'l; theavanukku munbaagap paaththiramaanapadi avarga'lai nee vazhivittanuppinaal nalamaayirukkum. (3yoavaan
1:6)
ஏனெனில் அவர்கள்
புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல்
அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். (3யோவான்
1:7)
eanenil avarga'l pu’rajaathiyaaridaththil
on’rum
vaanggaamal avarudaiya
naamaththinimiththam pu’rappattuppoanaarga'l. (3yoavaan 1:7)
ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம். (3யோவான்
1:8)
aagaiyaal naam saththiyaththi’rku udanvealaiyaadka'laayirukkumpadi appadippattavarga'laich searththukko'l'lak kadanaa'liga'laayirukki’roam. (3yoavaan 1:8)
நான்
சபைக்கு எழுதினேன்; ஆனாலும்
அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற
தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. (3யோவான்
1:9)
naan sabaikku ezhuthinean;
aanaalum avarga'lil muthanmaiyaayirukka virumbugi’ra thiyoaththireappu engga'lai eat’rukko'l'lavillai. (3yoavaan
1:9)
ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப்
பொல்லாத வார்த்தைகளை அலப்பி,
செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல்,
தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள
மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப்
புறம்பே தள்ளுகிறான். (3யோவான்
1:10)
aanapadiyaal, naan vanthaal,
avan engga'lukku viroathamaayp
pollaatha vaarththaiga'lai alappi, seythuvarugi’ra kiriyaiga'lai ninaiththukko'lvean. avan ippadich seythuvaruvathum
poathaamal, thaan sagoathararai eat’rukko'l'laamalirukki’rathuman’ri, eat’rukko'l'la manathaayirukki’ravarga'laiyum thadaiseythu, sabaikkup pu’rambea tha'l'lugi’raan. (3yoavaan
1:10)
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல்,
நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால்
உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக்
காணவில்லை. (3யோவான் 1:11)
piriyamaanavanea, nee theemaiyaanathaip pinpat’raamal, nanmaiyaanathaip pinpat’ru, nanmaiseygi’ravan theavanaal u'ndaayirukki’raan; theemaiseygi’ravan theavanaik kaa'navillai.
(3yoavaan 1:11)
தேமேத்திரியு எல்லாராலும்
நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும்
சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி
மெய்யென்று அறிவீர்கள். (3யோவான்
1:12)
theameaththiriyu ellaaraalum na’rsaadchipet’rathumallaamal, saththiyaththaalum na’rsaadchipet’ravan; naangga'lum saadchikodukki’roam, engga'l saadchi meyyen’ru a’riveerga'l. (3yoavaan
1:12)
எழுதவேண்டிய காரியங்கள்
அநேகமுண்டு; ஆனால் மையினாலும்
இறகினாலும் எழுத எனக்கு
மனதில்லை. (3யோவான் 1:13)
ezhuthavea'ndiya kaariyangga'l aneagamu'ndu; aanaal maiyinaalum
i’raginaalum ezhutha
enakku manathillai. (3yoavaan
1:13)
சீக்கிரமாய் உன்னைக்
காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது
முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்குச்
சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர்
உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப்
பேர்பேராக வாழ்த்துவாயாக. (3யோவான்
1:14)
seekkiramaay unnaik kaa'nalaamen’ru nambiyirukki’rean, appozhuthu mugamugamaayp peasikko'l'luvoam.
unakkuch
samaathaanam u'ndaavathaaga. sineagithar unakku vaazhththuthal sollugi’raarga'l. sineagitharaip pearpearaaga vaazhththuvaayaaga. (3yoavaan 1:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!