சகோதரரே, ஒருவன்
யாதொரு குற்றத்தில் அகப்பட்டால்,
ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள
ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும்
சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. (கலாத்தியர்
6:1)
sagoathararea, oruvan yaathoru
kut’raththil agappattaal, aavikkuriyavarga'laagiya neengga'l saanthamu'l'la aaviyoadea
appadippattavanaich seerporunthappa'n'nungga'l; neeyum soathikkappadaathapadikku unnaikku’riththu echcharikkaiyaayiru. (kalaaththiyar 6:1)
ஒருவர் பாரத்தை
ஒருவர் சுமந்து, இப்படியே
கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். (கலாத்தியர்
6:2)
oruvar baaraththai oruvar
sumanthu,
ippadiyea ki’risthuvinudaiya
piramaa'naththai ni’raiveat’rungga'l. (kalaaththiyar 6:2)
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று
எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். (கலாத்தியர்
6:3)
oruvan, thaan on’rumillaathirunthum,
thannai oru porutten’ru e'n'ninaal, thannaiththaanea vagnchikki’ravanaavaan. (kalaaththiyar 6:3)
அவனவன் தன்தன்
சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது
மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே
பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு
இடமுண்டாகும். (கலாத்தியர் 6:4)
avanavan thanthan
suyakiriyaiyaich soathiththuppaarkkakkadavan; appozhuthu
mat’ravanaip paarkkumpoathalla, thannaiyea
paarkkumpoathu meanmaipaaraatta avanukku idamu'ndaagum. (kalaaththiyar 6:4)
அவனவன் தன்தன்
பாரத்தைச் சுமப்பானே. (கலாத்தியர்
6:5)
avanavan thanthan
baaraththaich sumappaanea. (kalaaththiyar 6:5)
மேலும், திருவசனத்தில்
உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன். (கலாத்தியர்
6:6)
mealum, thiruvasanaththil ubatheasikkappadugi’ravan ubatheasikki’ravanukkuch sagala nanmaiga'lilum pagirnthukodukkakkadavan. (kalaaththiyar 6:6)
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன்
எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலாத்தியர்
6:7)
moasampoagaathirungga'l, theavan thammaip
pariyaasampa'n'navottaar; manushan ethai vithaikki’raanoa athaiyea a’ruppaan. (kalaaththiyar 6:7)
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன்
மாம்சத்தினால் அழிவை அறுப்பான்;
ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே
நித்தியஜீவனை அறுப்பான். (கலாத்தியர்
6:8)
than maamsaththi’rken’ru vithaikki’ravan maamsaththinaal azhivai
a’ruppaan; aavikken’ru vithaikki’ravan aaviyinaalea
niththiyajeevanai a’ruppaan. (kalaaththiyar 6:8)
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;
நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில்
அறுப்போம். (கலாத்தியர் 6:9)
nanmaiseygi’rathil soarnthupoagaamal iruppoamaaga; naam tha'larnthupoagaathirunthaal eat’rakaalaththil a’ruppoam. (kalaaththiyar 6:9)
ஆகையால் நமக்குக்
கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும்,
விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். (கலாத்தியர்
6:10)
aagaiyaal namakkuk kidaikkum
samayaththi’rkuththakkathaaga, yaavarukkum, viseashamaaga visuvaasa kudumbaththaarga'lukkum, nanmaiseyyakkadavoam.
(kalaaththiyar 6:10)
என் கையெழுத்தாய்
எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.
(கலாத்தியர் 6:11)
en kaiyezhuththaay evva'lavu
ezhuthineanen’ru paarungga'l. (kalaaththiyar 6:11)
மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்
காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ,
அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை
விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். (கலாத்தியர்
6:12)
maamsaththinpadi nalveashamaayk kaa'nappada
virumbugi’ravarga'l evarga'loa, avarga'l thaangga'l ki’risthuvinudaiya siluvaiyinimiththam thunbappadaathapadikkea ungga'lai viruththaseathanam pa'n'nikko'l'lak kattaayampa'n'nugi’raarga'l. (kalaaththiyar 6:12)
விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும்
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள்
உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள்
விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று
விரும்புகிறார்கள். (கலாத்தியர் 6:13)
viruththaseathanam adainthirukki’ra avarga'lum niyaayappiramaa'naththaik kaikko'l'laamalirukki’raarga'l; appadiyirunthum, avarga'l ungga'l maamsaththaikku’riththu meanmaipaaraattumpadikku neengga'l viruththaseathanampa'n'nikko'l'lavea'ndumen’ru virumbugi’raarga'l. (kalaaththiyar 6:13)
நானோ நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்
குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால்
உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும்
உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். (கலாத்தியர்
6:14)
naanoa nammudaiya
karththaraagiya iyeasuki’risthuvin siluvaiyaik ku’riththeayallaamal
vea’ron’raiyungku’riththu meanmaipaaraattaathiruppeanaaga; avaraal
ulagam
enakkuch
siluvaiyila’raiyu'ndirukki’rathu, naanum ulagaththi’rkuch siluvaiyila’raiyu'ndirukki’rean. (kalaaththiyar 6:14)
கிறிஸ்து இயேசுவுக்குள்
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை;
புது சிருஷ்டியே காரியம்.
(கலாத்தியர் 6:15)
ki’risthu iyeasuvukku'l viruththaseathanamum on’rumillai, viruththaseathanamillaamaiyum
on’rumillai; puthu sirushdiyea kaariyam. (kalaaththiyar 6:15)
இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ,
அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும்
இரக்கமும் உண்டாயிருப்பதாக. (கலாத்தியர்
6:16)
inthap piramaa'naththinpadi nadanthuvarugi’ravarga'l evarga'loa, avarga'lukkum, theavanudaiya isravealarukkum, samaathaanamum irakkamum
u'ndaayiruppathaaga. (kalaaththiyar 6:16)
இனிமேல் ஒருவனும்
எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய
இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே
தரித்துக்கொண்டிருக்கிறேன். (கலாத்தியர் 6:17)
inimeal oruvanum
enakku varuththam u'ndaakkaathiruppaanaaga; karththaraagiya iyeasuvinudaiya achchadaiyaa'langga'lai naan en sareeraththilea thariththukko'ndirukki’rean. (kalaaththiyar 6:17)
சகோதரரே, நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை
உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக.
ஆமென். (கலாத்தியர் 6:18)
sagoathararea, nammudaiya karththaraagiya iyeasuki’risthuvin kirubai ungga'l aaviyudaneakooda iruppathaaga. aamen.
(kalaaththiyar 6:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!