பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும்
அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. (கலாத்தியர்
4:1)
pinnum naan sollugi’rathennavenil, suthantharavaa'liyaanavan ellaavat’ri’rkum ejamaanaayirunthum, avan si’rupi'l'laiyaayirukkungkaalama'lavum, avanukkum
adimaiyaanavanukkum viththiyaasamillai. (kalaaththiyar 4:1)
தகப்பன் குறித்த
காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு
விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். (கலாத்தியர்
4:2)
thagappan ku’riththa kaalamvaraikkum avan kaariyakkaararukkum veettu visaara'naikkaararukkum keezhppattirukki’raan. (kalaaththiyar 4:2)
அப்படியே நாமும்
சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின்
வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். (கலாத்தியர்
4:3)
appadiyea naamum
si’rupi'l'laiga'laayiruntha kaalaththil
ivvulagaththin vazhipaaduga'lukku adimaippattavarga'laayirunthoam.
(kalaaththiyar 4:3)
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, (கலாத்தியர்
4:4)
naam puththirasuvigaaraththaiyadaiyumpadi niyaayappiramaa'naththi’rkuk keezhppattavarga'lai meettukko'l'laththakkathaaga, (kalaaththiyar 4:4)
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய
குமாரனைத் தேவன் அனுப்பினார்.
(கலாத்தியர் 4:5)
kaalam ni’raivea’rinapoathu, sthireeyinidaththi’r pi’ranthavarum niyaayappiramaa'naththi’rkuk keezhaanavarumaagiya thammudaiya kumaaranaith
theavan anuppinaar. (kalaaththiyar 4:5)
மேலும் நீங்கள்
புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே!
என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய
ஆவியை உங்கள் இருதயங்களில்
அனுப்பினார். (கலாத்தியர் 4:6)
mealum neengga'l puththiraraayirukki’rapadiyinaal, appaa,
pithaavea! en’ru kooppidaththakkathaagath theavan thamathu
kumaaranudaiya aaviyai ungga'l iruthayangga'lil anuppinaar.
(kalaaththiyar 4:6)
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய
சுதந்தரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:7)
aagaiyaal ini nee adimaiyaayiraamal puththiranaayirukki’raay; nee puththiraneayaanaal, ki’risthumoolamaayth theavanudaiya
suthantharanaayumirukki’raay. (kalaaththiyar 4:7)
நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். (கலாத்தியர்
4:8)
neengga'l theavanai a’riyaamalirunthapoathu, subaavaththinpadi theavarga'lallaathavarga'lukku adimaiga'laayiruntheerga'l. (kalaaththiyar 4:8)
இப்பொழுதோ நீங்கள்
தேவனை அறிந்திருக்க, அல்லது
தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும்
வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள்
மறுபடியும் திரும்பி, மறுபடியும்
அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? (கலாத்தியர்
4:9)
ippozhuthoa neengga'l theavanai
a’rinthirukka, allathu
theavanaalea a’riyappattirukka, belanat’rathum ve’rumaiyaanathumaana
avvazhipaaduga'lukku neengga'l ma’rupadiyum thirumbi, ma’rupadiyum avaiga'lukku adimaippadumpadi virumbugi’ratheppadi? (kalaaththiyar 4:9)
நாட்களையும், மாதங்களையும்,
காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. (கலாத்தியர்
4:10)
naadka'laiyum, maathangga'laiyum, kaalangga'laiyum, varushangga'laiyum paarkki’reerga'lea. (kalaaththiyar 4:10)
நான் உங்களுக்காகப்
பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். (கலாத்தியர்
4:11)
naan ungga'lukkaagap pirayaasappattathu vee'naayppoayit’roa en’ru ungga'laikku’riththup bayanthirukki’rean. (kalaaththiyar 4:11)
சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு
நீங்கள் அநியாயம் ஒன்றும்
செய்யவில்லை. (கலாத்தியர் 4:12)
sagoathararea, ennaippoalaagungga'l en’ru ungga'lai vea'ndikko'l'lugi’rean; naan ungga'laippoalumaaneanea.
enakku neengga'l aniyaayam on’rum seyyavillai. (kalaaththiyar 4:12)
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு
முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப்
பிரசங்கித்தேன். (கலாத்தியர் 4:13)
ungga'lukkuth therinthirukki’rapadi, naan sareera balaveenaththoadu muthalaantharam ungga'lukkuch suviseashaththaip pirasanggiththean. (kalaaththiyar 4:13)
அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை
நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும்,
தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள். (கலாத்தியர்
4:14)
appadiyirunthum, en sareeraththil u'ndaayirukki’ra soathanaiyai neengga'l asattaipa'n'naamalum,
aroasiyaamalum, theavathoothanaippoalavum, ki’risthu iyeasuvaippoalavum, ennai eat’rukko'ndeerga'l. (kalaaththiyar 4:14)
அப்பொழுது நீங்கள்
கொண்டிருந்த ஆனந்த பாக்கியம்
எங்கே? உங்கள் கண்களைப்
பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும்
செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச்
சாட்சியாயிருக்கிறேன். (கலாத்தியர் 4:15)
appozhuthu neengga'l ko'ndiruntha
aanantha baakkiyam enggea? ungga'l ka'nga'laip pidunggi enakkuk
kodukkakkoodumaanaal, appadiyum seythiruppeerga'l en’ru ungga'lukkuch saadchiyaayirukki’rean. (kalaaththiyar 4:15)
நான் உங்களுக்குச்
சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச்
சத்துருவானேனோ? (கலாத்தியர் 4:16)
naan ungga'lukkuch saththiyaththaich sonnathinaalea ungga'lukkuch saththuruvaaneanoa?
(kalaaththiyar 4:16)
அவர்கள் உங்களை
நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும்
நல்மனதோடே அப்படிச் செய்யாமல்,
நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப்
புறம்பாக்க விரும்புகிறார்கள். (கலாத்தியர்
4:17)
avarga'l ungga'lai naadi vairaakkiyam
paaraattugi’raarga'l; aagilum nalmanathoadea appadich seyyaamal, neengga'l avarga'lai naadi vairaakkiyam paaraattumporuttu ungga'laip pu’rambaakka virumbugi’raarga'l. (kalaaththiyar 4:17)
நல்விஷயத்தில் வைராக்கியம்
பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில்
இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். (கலாத்தியர்
4:18)
nalvishayaththil vairaakkiyam
paaraattuvathu nallathuthaan; athai naan ungga'lidaththil irukkumpozhuthumaaththiramalla, eppozhuthum
paaraattavea'ndum. (kalaaththiyar 4:18)
என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து
உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக
மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; (கலாத்தியர்
4:19)
en si’rupi'l'laiga'lea, ki’risthu ungga'lidaththil uruvaaguma'lavum ungga'lukkaaga ma’rupadiyum karppaveathanaippadugi’rean; (kalaaththiyar 4:19)
உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில்
வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன். (கலாத்தியர்
4:20)
ungga'laikku’riththu naan santheagappadugi’rapadiyaal, naan ippozhuthu
ungga'lidaththil vanthirunthu,
vea’ruvagaiyaagap peasa virumbugi’rean. (kalaaththiyar 4:20)
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற
நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக்
கேட்கவில்லையா? இதை எனக்குச்
சொல்லுங்கள். (கலாத்தியர் 4:21)
niyaayappiramaa'naththi’rkuk keezhppattirukka virumbugi’ra neengga'l niyaayappiramaa'nam sollugi’rathaik keadkavillaiyaa? ithai enakkuch sollungga'l. (kalaaththiyar 4:21)
ஆபிரகாமுக்கு இரண்டு
குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன்
அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன்
சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். (கலாத்தியர்
4:22)
aabirahaamukku ira'ndu
kumaarar irunthaarga'l en’ru ezhuthiyirukki’rathu; oruvan adimaiyaanava'lidaththil pi’ranthavan, oruvan
suyaatheenamu'l'lava'lidaththil pi’ranthavan. (kalaaththiyar 4:22)
அடிமையானவளிடத்தில் பிறந்தவன்
மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்
வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். (கலாத்தியர்
4:23)
adimaiyaanava'lidaththil pi’ranthavan maamsaththinpadi pi’ranthaan, suyaatheenamu'l'lava'lidaththil pi’ranthavan vaakkuththaththaththinpadi pi’ranthaan. (kalaaththiyar 4:23)
இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு
ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு,
அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே.
(கலாத்தியர் 4:24)
ivaiga'l gnaana arththamu'l'lavaiga'l; antha sthireega'l ira'ndu ea’rpaaduga'laam; on’ru seenaaymalaiyilu'ndaana ea’rpaadu, athu adimaiththanaththi’rku'l'laagap pi'l'laipe’rugi’rathu, athu aagaar enbava'lthaanea. (kalaaththiyar 4:24)
ஆகார் என்பது
அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. (கலாத்தியர்
4:25)
aagaar enbathu arabitheasaththilu'l'la seenaaymalai; antha aagaar ippozhuthirukki’ra erusaleamukkuch sari; iva'l than pi'l'laiga'loadeakooda adimaippattirukki’raa'lea. (kalaaththiyar 4:25)
மேலான எருசலேமோ
சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
(கலாத்தியர் 4:26)
mealaana erusaleamoa suyaatheenamu'l'lava'l, ava'lea
nammellaarukkum thaayaanava'l. (kalaaththiyar 4:26)
அந்தப்படி பிள்ளைபெறாத
மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய்
எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. (கலாத்தியர்
4:27)
anthappadi pi'l'laipe’raatha maladiyea,
magizhnthiru; karppaveathanaippadaathava'lea, ka'lippaay
ezhumbi
aarppari; purushanu'l'lava'laippaarkkilum anaatha
sthireekkea athiga pi'l'laiga'lu'ndu en’ru ezhuthiyirukki’rathu. (kalaaththiyar 4:27)
சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். (கலாத்தியர்
4:28)
sagoathararea, naam eesaakkaippoala vaakkuththaththaththup pi'l'laiga'laayirukki’roam. (kalaaththiyar 4:28)
ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன்
ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது
துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. (கலாத்தியர்
4:29)
aagilum maamsaththinpadi pi’ranthavan aaviyinpadi pi’ranthavanai appozhuthu
thunbappaduththinathupoala, ippozhuthum
nadanthuvarugi’rathu. (kalaaththiyar 4:29)
அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது:
அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே
சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய
மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.
(கலாத்தியர் 4:30)
athaikku’riththu veatham enna sollugi’rathu: adimaiyaanava'lin magan suyaatheenamu'l'lava'ludaiya kumaaranoadea
suthantharavaa'liyaayiruppathillai; aagaiyaal adimaiyaanava'laiyum, ava'ludaiya
maganaiyum pu’rambea tha'l'lu en’ru sollugi’rathu. (kalaaththiyar 4:30)
இப்படியிருக்க, சகோதரரே,
நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம். (கலாத்தியர்
4:31)
ippadiyirukka, sagoathararea, naam adimaiyaanava'lukkup pi'l'laiga'laayiraamal, suyaatheenamu'l'lava'lukkea pi'l'laiga'laayirukki’roam. (kalaaththiyar 4:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!