அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை
உயிர்ப்பித்தார். (எபேசியர் 2:1)
akkiramangga'linaalum paavangga'linaalum mariththavarga'laayiruntha ungga'lai uyirppiththaar. (ebeasiyar
2:1)
அவைகளில் நீங்கள்
முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது
கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப்
பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். (எபேசியர்
2:2)
avaiga'lil neengga'l mu’rkaalaththilea
ivvulaga
vazhakkaththi’rkeat’rapadiyaagavum, keezhppadiyaamaiyin pi'l'laiga'lidaththil ippozhuthu
kiriyaiseygi’ra aagaayaththu athigaarap pirabuvaagiya aavikkeat’rapadiyaagavum nadanthuko'ndeerga'l. (ebeasiyar
2:2)
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும்
முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து,
நமது மாம்சமும் மனசும்
விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே
மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். (எபேசியர்
2:3)
avarga'lukku'l'lea naamellaarum mu’rkaalaththilea namathu
maamsa
ichchaiyinpadiyea nadanthu,
namathu maamsamum manasum virumbinavaiga'laich seythu, subaavaththinaalea
mat’ravarga'laippoalak koabaakkinaiyin pi'l'laiga'laayirunthoam. (ebeasiyar
2:3)
தேவனோ இரக்கத்தில்
ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த
தம்முடைய மிகுந்த அன்பினாலே,
(எபேசியர் 2:4)
theavanoa irakkaththil
aisuvariyamu'l'lavaraay nammil
anbukoorntha thammudaiya
miguntha
anbinaalea, (ebeasiyar
2:4)
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக்
கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே
இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசியர் 2:5)
akkiramangga'lil mariththavarga'laayiruntha nammaik ki’risthuvudaneakooda uyirppiththaar; kirubaiyinaalea iradchikkappatteerga'l. (ebeasiyar
2:5)
கிறிஸ்து இயேசுவுக்குள்
அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய
கிருபையின் மகா மேன்மையான
ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (எபேசியர்
2:6)
ki’risthu iyeasuvukku'l avar nammidaththil
vaiththa thayavinaalea, thammudaiya
kirubaiyin mahaa meanmaiyaana
aisuvariyaththai varungkaalangga'lil vi'langgachseyvatha’rkaaga, (ebeasiyar
2:6)
கிறிஸ்து இயேசுவுக்குள்
நம்மை அவரோடேகூட எழுப்பி,
உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும்
செய்தார். (எபேசியர் 2:7)
ki’risthu iyeasuvukku'l nammai avaroadeakooda ezhuppi,
unnathangga'lilea avaroadeakooda udkaaravum
seythaar.
(ebeasiyar 2:7)
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல,
இது தேவனுடைய ஈவு; (எபேசியர் 2:8)
kirubaiyinaalea visuvaasaththaikko'ndu iradchikkappatteerga'l; ithu ungga'laal u'ndaanathalla, ithu theavanudaiya eevu; (ebeasiyar 2:8)
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;
(எபேசியர் 2:9)
oruvarum perumaipaaraattaathapadikku ithu kiriyaiga'linaal u'ndaanathalla; (ebeasiyar
2:9)
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு
நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்
சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில்
நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை
ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2:10)
eanenil, na’rkiriyaiga'laich seygi’ratha’rku naam ki’risthu iyeasuvukku'l sirushdikkappattu, theavanudaiya
seygaiyaayirukki’roam; avaiga'lil naam nadakkumpadi
avar munnathaaga avaiga'lai aayaththampa'n'niyirukki’raar. (ebeasiyar 2:10)
ஆனபடியினால் முன்னே
மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில்
கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,
(எபேசியர் 2:11)
aanapadiyinaal munnea
maamsaththinpadi pu’rajaathiyaaraayirunthu, maamsaththil kaiyinaalea
seyyappadugi’ra viruththaseathanamudaiyavarga'laal viruththaseathanamillaathavarga'lennappatta neengga'l, (ebeasiyar 2:11)
அக்காலத்திலே கிறிஸ்துவைச்
சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும்,
நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். (எபேசியர்
2:12)
akkaalaththilea ki’risthuvaich searaathavarga'lum, isravealudaiya kaa'niyaadchikkup pu’rambaanavarga'lum, vaakkuththaththaththin udanpadikkaiga'lukku anniyarum,
nambikkaiyillaathavarga'lum, ivvulagaththil theavanat’ravarga'lumaayiruntheerga'len’ru ninaiththukko'l'lungga'l. (ebeasiyar
2:12)
முன்னே தூரமாயிருந்த
நீங்கள் இப்பொழுது கிறிஸ்து
இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
சமீபமானீர்கள். (எபேசியர் 2:13)
munnea thooramaayiruntha neengga'l ippozhuthu
ki’risthu
iyeasuvukku'l ki’risthuvin iraththaththinaalea sameebamaaneerga'l. (ebeasiyar
2:13)
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான
காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி,
பகையாக நின்ற பிரிவினையாகிய
நடுச்சுவரைத் தகர்த்து, (எபேசியர்
2:14)
eppadiyenil, avarea
nammudaiya samaathaana kaara'naraagi, iruthi’raththaaraiyum
on’raakki, pagaiyaaga nin’ra pirivinaiyaagiya naduchsuvaraith thagarththu, (ebeasiyar 2:14)
சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய
மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக
ஒரே புதிய மனுஷனாகச்
சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, (எபேசியர்
2:15)
sattathittangga'laagiya niyaayappiramaa'naththaith thammudaiya
maamsaththinaalea ozhiththu,
iruthi’raththaaraiyum thamakku'l'laaga orea puthiya manushanaagach sirushdiththu, ippadich samaathaanampa'n'ni, (ebeasiyar
2:15)
பகையைச் சிலுவையினால்
கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு
ஒப்புரவாக்கினார். (எபேசியர் 2:16)
pagaiyaich siluvaiyinaal kon’ru, athinaalea
iruthi’raththaaraiyum orea sareeramaagath theavanukku
oppuravaakkinaar. (ebeasiyar 2:16)
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த
உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச்
சுவிசேஷமாக அறிவித்தார். (எபேசியர்
2:17)
allaamalum avar vanthu, thooramaayiruntha ungga'lukkum, sameebamaayiruntha avarga'lukkum, samaathaanaththaich suviseashamaaga a’riviththaar. (ebeasiyar
2:17)
அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும்
சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபேசியர்
2:18)
anthappadiyea naam iruthi’raththaarum orea aaviyinaalea
pithaavinidaththil searum silaakkiyaththai
avarmoolamaayp pet’rirukki’roam. (ebeasiyar
2:18)
ஆகையால், நீங்கள்
இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய
வீட்டாருமாயிருந்து, (எபேசியர் 2:19)
aagaiyaal, neengga'l ini anniyarum
paratheasiga'lumaayiraamal, parisuththavaanga'loadea orea nagaraththaarum theavanudaiya
veettaarumaayirunthu, (ebeasiyar
2:19)
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய
அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு
இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; (எபேசியர்
2:20)
appoasthalar theerkkatharisiga'l enbavarga'ludaiya asthibaaraththinmeal
kattappattavarga'lumaayirukki’reerga'l; atha’rku iyeasuki’risthu thaamea
moolaikkallaayirukki’raar; (ebeasiyar
2:20)
அவர்மேல் மாளிகை
முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த
ஆலயமாக எழும்புகிறது; (எபேசியர்
2:21)
avarmeal maa'ligai muzhuvathum
isaivaay
i'naikkappattu, karththarukku'l parisuththa aalayamaaga ezhumbugi’rathu; (ebeasiyar
2:21)
அவர்மேல் நீங்களும்
ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக்
கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள். (எபேசியர் 2:22)
avarmeal neengga'lum aaviyinaalea
theavanudaiya vaasasthalamaagak koottikkattappattuvarugi’reerga'l. (ebeasiyar
2:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!