இதினிமித்தம், பவுலாகிய
நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து
இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன். (எபேசியர்
3:1)
ithinimiththam, pavulaagiya naan pu’rajaathiyaaraayirukki’ra ungga'lporuttuk ki’risthu iyeasuvinimiththam kattu'ndavanaayirukki’rean. (ebeasiyar
3:1)
உங்களுக்காக எனக்கு
அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும்
இன்னதென்று கேட்டிருப்பீர்களே; (எபேசியர்
3:2)
ungga'lukkaaga enakku
a'likkappattirukki’ra theyvakirubaikkuriya niyamamum innathen’ru keattiruppeerga'lea; (ebeasiyar 3:2)
அதென்னவெனில் புறஜாதிகள்
சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி
அறிவித்தார். (எபேசியர் 3:3)
athennavenil pu’rajaathiga'l suviseashaththinaalea udan suthanthararumaay,
orea sareeraththi’rku'l'laanavarga'lumaay, ki’risthuvukku'l avar pa'n'nina vaakkuththaththaththukku udanpanggaa'liga'lumaayirukki’raarga'lengi’ra intha iragasiyaththai avar enakku
ve'lippaduththi a’riviththaar. (ebeasiyar 3:3)
இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய்
எழுதியிருக்கிறேன். (எபேசியர் 3:4)
ithaikku’riththu naan munnamea
surukkamaay ezhuthiyirukki’rean. (ebeasiyar
3:4)
அதை நீங்கள்
வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு
உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; (எபேசியர்
3:5)
athai neengga'l vaasikkaiyil ki’risthuvin iragasiyaththaikku’riththu enakku u'ndaayirukki’ra a’rivai a’rinthuko'l'lalaam; (ebeasiyar
3:5)
இந்த இரகசியம்
இப்பொழுது அவருடைய பரிசுத்த
அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. (எபேசியர்
3:6)
intha iragasiyam ippozhuthu
avarudaiya parisuththa appoasthalarukkum theerkkatharisiga'lukkum aaviyaanavaraalea ve'lippaduththappattirukki’rathupoala, mu’rkaalangga'lil manupuththirarukku a’rivikkappadavillai. (ebeasiyar
3:6)
தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு
அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய
கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன். (எபேசியர்
3:7)
theavanudaiya balaththa saththuvaththaal enakku
a'likkappatta varamaagiya avarudaiya
kirubaiyinaalea inthach suviseashaththukku oozhiyakkaaranaanean. (ebeasiyar
3:7)
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய
நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற
ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய்
அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை
எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர்
3:8)
parisuththavaanga'lellaarilum si’riyavanaagiya naan ki’risthuvinudaiya a'lavat’ra aisuvariyaththaip pu’rajaathiga'lidaththil suviseashamaay a’rivikki’ratha’rkaaga inthak kirubai enakku
a'likkappattirukki’rathu. (ebeasiyar 3:8)
தேவன் நம்முடைய
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்
கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, (எபேசியர்
3:9)
theavan nammudaiya
karththaraagiya ki’risthu iyeasuvukku'l ko'ndiruntha
anaathi theermaanaththinpadiyea, (ebeasiyar
3:9)
உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய
அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது
தெரியவரும்பொருட்டாக, (எபேசியர் 3:10)
unnathangga'lilu'l'la thuraiththanangga'lukkum athigaarangga'lukkum avarudaiya
anantha gnaanamaanathu sabaiyinmoolamaay ippozhuthu
theriyavarumporuttaaga, (ebeasiyar
3:10)
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த
தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம்
இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்
கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (எபேசியர்
3:11)
iyeasuki’risthuvaikko'ndu ellaavat’raiyum sirushdiththa theavanukku'l'lea aathikaalangga'l muthal
ma’rainthiruntha iragasiyaththinudaiya aikkiyam
innathen’ru, ellaarukkum
ve'lippadaiyaagak kaa'nbikki’ratha’rku, inthak
kirubai
enakku a'likkappattirukki’rathu. (ebeasiyar
3:11)
அவரைப் பற்றும்
விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத்
தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில்
சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. (எபேசியர்
3:12)
avaraip pat’rum visuvaasaththaal avarukku'l namakkuth
thairiyamum thidanambikkaiyoadea theavanidaththil searum silaakkiyamum u'ndaayirukki’rathu. (ebeasiyar
3:12)
ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள்
சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள்
உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. (எபேசியர்
3:13)
aagaiyaal ungga'lnimiththam naan anubavikki’ra ubaththiravangga'linaal neengga'l soarnthupoagaathirukka vea'ndikko'l'lugi’rean; avaiga'l ungga'lukku magimaiyaayirukki’rathea. (ebeasiyar
3:13)
இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,
(எபேசியர் 3:14)
ithinimiththam naan paraloagaththilum booloagaththilumu'l'la muzhukkudumbaththukkum naamakaara'naraagiya, (ebeasiyar
3:14)
நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை
நோக்கி முழங்கால்படியிட்டு, (எபேசியர்
3:15)
nammudaiya karththaraayirukki’ra iyeasuki’risthuvinudaiya
pithaavai noakki muzhangkaalpadiyittu, (ebeasiyar
3:15)
நீங்கள் அவருடைய
ஆவியினாலே உள்ளான மனுஷனில்
வல்லமையாய்ப் பலப்படவும், (எபேசியர்
3:16)
neengga'l avarudaiya aaviyinaalea
u'l'laana manushanil vallamaiyaayp
balappadavum, (ebeasiyar
3:16)
விசுவாசத்தினாலே கிறிஸ்து
உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள்
அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, (எபேசியர்
3:17)
visuvaasaththinaalea ki’risthu ungga'l iruthayangga'lil vaasamaayirukkavum, neengga'l anbilea vearoon’ri, nilaipet’ravarga'laagi, (ebeasiyar
3:17)
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின்
அகலமும், நீளமும், ஆழமும்,
உயரமும் இன்னதென்று உணர்ந்து;
(எபேசியர் 3:18)
sagala parisuththavaanga'loadungkoodak ki’risthuvinudaiya anbin agalamum, nee'lamum,
aazhamum, uyaramum innathen’ru u'narnthu;
(ebeasiyar 3:18)
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள
வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய
ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம்
பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர்
3:19)
a’rivukkettaatha antha anbai a’rinthuko'l'la vallavarga'laagavum, theavanudaiya
sagala
paripoora'naththaalum ni’raiyappadavum,
avar thamathu magimaiyinudaiya aisuvariyaththinpadiyea, ungga'lukku anukkiragam pa'n'navea'ndumen’ru vea'ndikko'l'lugi’rean. (ebeasiyar
3:19)
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும்
அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற
வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
(எபேசியர் 3:20)
naam vea'ndikko'l'lugi’ratha’rkum ninaikki’ratha’rkum migavum athigamaay namakku'l'lea
kiriyaiseygi’ra vallamaiyinpadiyea, namakkuch seyya vallavaraagiya avarukku,
(ebeasiyar 3:20)
சபையிலே கிறிஸ்து
இயேசுவின் மூலமாய்த் தலைமுறை
தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
(எபேசியர் 3:21)
sabaiyilea ki’risthu iyeasuvin moolamaayth thalaimu’rai thalaimu’raikkum sathaakaalangga'lilum magimai u'ndaavathaaga. aamen. (ebeasiyar
3:21)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!